Pages

உன்னைக் காணாத கண்ணும்





கணப்பொழுதேனும் பிரிய மனமின்றி
கைப்பிடித்தே திரிந்தோம்
காணும்போது சிரித்து
காணாதபொழுதும்
கண்டிருந்த கணங்களை
கவனத்தில் கொண்டு நகைத்து, இனி
காணும்பொழுதில் கதைக்கவேண்டியதை
கருத்துருவாக்கி
கண்டதும் கலகலவென
கரைகடந்த வெள்ளமாய்
கலந்து கதைகள் பேசி
களித்திருந்தோமே
கண்பட்டுவிட்டதோ கண்ணே
காணவே கணமில்லாமல் போனதே
களைப்புறாமல் காத்திருப்போம்
கலங்காதிரு என் செல்ல வலைப்பூவே!!






 .
 .
 .

 .
 .
 .
 .
 .
 .
ஹி..ஹி... பெற்றோர் வருகை, தங்கை பிரசவம், வீடு நிறைய ஆட்கள்... என செம பிஸி!! அதைவிட,  மாமனார்-மாமியார் முன்பு மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக”  நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)




Post Comment

20 comments:

அப்பாதுரை said...

அடி சக்கை.. பின்னிட்டீங்க..

திண்டுக்கல் தனபாலன் said...

வருக... வருக...

செல்லத்தை தொடர வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை:)!

காத்திருக்கிறோம். வாங்க.

Kanmani Rajan said...

:) :) :)

தனிமரம் said...

அப்ப இனி வீடு கொண்டாட்டம் தான் நீங்க்ள் விடுமுறைவிட்டாலும் நாங்கள் காத்திருப்போம்.வாங்க மீண்டும்.

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா , கவிதை அருமை.

உற்றம், சுற்றத்தோடு இனிதே நாட்களை கொண்டாடி வாருங்கள்
காத்து இருக்கிறோம்.

ஸ்ரீராம். said...

காத்திருக்கிறோம் நாங்கள்.
கவலையின்றி கடமைகள் முடித்து
காலநேரத்தில்
களிப்புடனே வந்திடுக...!!!

enrenrum16 said...

/ மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக” நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் / உங்களை அழகான கவிதை எழுத வைத்த அந்த “மாப்பிள்ளைக்கு” நன்றி... உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Sangeetha said...

ரொம்ப நாட்கள் எங்களை காக்க வைத்தாலும் அதை கவிதை மூலம் ஈடு செய்து வீட்டிற்கள். காத்து இருக்கிறோம் எல்லாம் முடித்து வாருங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

கடமை முடித்துக்
கடுகி வாருங்கள்
காத்திருக்கிறோம் :-)

மாப்பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைப்பது நம்ம மாமனார்-மாமியாரா இல்லை அவங்க மாமனார்-மாமியாரான்னு ஒரு பட்டிமன்றம் வையுங்க ஹுஸைனம்மா :-))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| கெத்தோடு “மரியாதையாக” நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)||

அப்ப இத்தனை நாள் பட்டது' அந்த அப்பாவிதானா? !?????

கவிதா | Kavitha said...

//மாமனார்-மாமியார் முன்பு மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக” நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)//

:)))

வெங்கட் நாகராஜ் said...

கடமை உணர்ச்சி பொங்கி விட்டது! :)

காத்திருக்கிறோம் நாங்களும்.

பூ விழி said...

உங்க செல்லம் மிக அழக இருக்கு நீங்க உங்க செல்லத்தை கொஞ்சனதும் மிகவும் அழகா இருக்கு
மகளிர் கடல் வழியா நீந்தி வந்துவிடேன்

மனோ சாமிநாதன் said...

கவிதை அருமை!!

வல்லிசிம்ஹன் said...

வலைப்பூவுக்கு விடுமுறை கொடுக்க வைத்த சந்தோஷங்களுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள். அவர்கள் இல்லாமல் நாமா.!!

மாப்பிள்ளை சார் என்சாய் பண்ணட்டும். :)
அம்மா அப்பாவுக்கு என் வணக்கங்கள் ஹுசைனம்மா.

Ranjani Narayanan said...

கொஞ்சம் இடைவெளிக்கு இவ்வளவு அருமையான கவிதையா?
இனிமேல் உங்களைத் தொடர்ந்து வர இருக்கிறேன். அதனால் சீக்கிரம் வருக!

மாதேவி said...

ஆகா! :))

காத்திருக்கின்றோம்.

ADHI VENKAT said...

உற்றார் உறவினருடன் களிப்புற்று மீண்டும் உற்சாகத்தோடு வருக.....:)

இமா க்றிஸ் said...

;))) enjoy. ;)