“என்னது, இப்பவா?”
“என்ன சொல்றே நீ? யோசிச்சுதான் பேசுறியா?”
“பிள்ளைக? பாவம் அதுக!!”
“நல்லா யோசிச்சுக்கம்மா. நல்ல விஷயம்தான் சொல்றே. ஆனாலும் இப்பவான்னுதான் வருத்தமா இருக்கு”
“ஏய், அறிவிருக்காடி உனக்கு? நீயெல்லாம் ஒரு அம்மாவா?” - இது தோழி.
”இப்ப என்ன அவசரம்? எப்பவும்போல ஜூலை, ஆகஸ்ட்னு பாக்கலாம்ல?”
இதெல்லாம் இந்தியாவில் உள்ள உறவுகள், நட்புகளிடமிருந்து கிடைத்த கமெண்ட்ஸ். அப்படி நான் என்ன சொல்லிட்டேன் இப்ப? ”இன்ஷா அல்லாஹ் மார்ச்சில் இந்தியா வரலாம் என நினைக்கிறோம்” - என்றதற்கான பதில்கள்தான்!! அவ்வ்வ்..... எல்லாம் இந்த கரெண்ட் கட் படுத்தும் பாடு!!
என்னாதிது, ஆளாளுக்கு இப்பிடி திகிலைக் கிளப்புறாய்ங்களேன்னு யோசிச்சுகிட்டே, துபாயில் இருக்கும் நண்பர் ஒருவரை, ஆலோசனை கேட்கலாம் என அழைத்தேன். அவர் வருடாவருடம் மார்ச், ஏப்ரலில்தான் இந்தியா செல்வார். அவர் அனுபவத்தைக் கொண்டு டிப்ஸ் கேட்கலாம் என்று நினைத்து அழைத்தேன். அவரிடம் ஊருக்கு எப்பண்ணே போறீங்க என்றதுதான் தாமதம். புலம்பித் தள்ளிட்டார், இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன்? போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார்.
அவருக்கென்ன, சொல்லிட்டு டுபாய் வந்துட்டார். அவர் பேச்சைக் கேட்டு ஓட்டு போட்டவங்கள்லாம் பயங்கரக் கடுப்பாகி, அவர் எப்ப ஊருக்கு வருவார்னு காத்துகிட்டிருக்காங்களாம்!! அவரோட வீட்டம்மாகிட்ட ஒரே விசாரிப்பாம் எல்லாரும்!! அவரு ஊருக்கு வரட்டும் இருக்குன்னு, ஊர்க்காரவுங்க மட்டுமில்ல, வீட்டம்மாவும் திட்டுறாங்களாம்!!
”கவலைப்படாதீய, என்னா இப்ப அடுத்தாக்ல சங்கரங்கோயில் தேர்தல், அப்புறமேட்டு இன்னொரு எங்கவுண்டர் அப்படி இப்படினு எதாவது நடக்கும். அதுல மக்கசனம் இதெல்லாம் மறந்துருவாங்க. நீங்க ஜூலையில ஊருக்குப் போய்ட்டு வாங்க” டிப்ஸ் கேக்கலாம்னு போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்ன செய்ய!! அந்த அளவுக்கு கரெண்ட் கட் ப்ராப்ளம், பிரபலமா இருக்கு.
அப்பத்தான் நான் போன வருஷம் கரண்ட் கட் குறித்து என் பதிவுகளில் எழுதுனது ஞாபகம் வந்தது!! (#பதிவருங்கோ!!)
தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ? (டிரங்குப் பொட்டி - 16)
ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க? (டிரங்குப் பொட்டி - 15)
போன வருஷம் மாதிரியே இப்பவும் பவர் கட்; போன வருஷம் மாதிரியே இப்பவும் மழை, புயலால் இழப்புகள், சாலை பள்ளங்கள்; போன வருஷம் மாதிரியே சாலை விபத்துகள்; போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எல்லாத்துக்கும் முந்தைய அரசுதான் காரணம்னு பழி சொல்றது...
மின் உற்பத்தியை அதிகரிக்கத்தான் உடனே முயற்சிகள் செய்யலை. அட்லீஸ்ட் இப்பவாவது முழிச்சுகிட்டு, transmission loss-ஐ தடுக்க வழிமுறைகள், மின்திருட்டைத் தடுக்க நடவடிக்கை, இலவச மின்சாரத்தை முறைப்படுத்துதல் - இப்படியான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஏதோ கொஞ்சநஞ்ச மின்சார விரயத்தையாவது தடுக்கலாம். யார் செய்ய...
(”தடையில்லா மின்சாரம் சாத்தியமே” என்ற பதிவில் சொல்லிருக்க ’ரேஷன்’ வழிமுறைகளும் சாத்தியமானதாகவும், பலன்தரக்கூடியவையாகவும் இருக்குது. கட்டாயம் படிங்க!!)
என் பதிவில் இருந்து ஒரு டிப்ஸையும் தருகிறேன். ஏதோ என்னாலானது...
ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது.(டிரங்குப் பொட்டி-17)
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பதிவர் ரஜின் கொடுத்த ஐடியா இது: இரவில் தண்ணி பாட்டில் கீழ எல்.இ.டி. லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்... கரண்ட் போனா தேவை ஒரு பாட்டில் தண்ணி, ஒரு லைட்..அவ்ளோதான்...ரூம் ப்ரைட்..
வழக்கம்போல தமிழக மக்கள் எதையும் தாங்கும் இரும்பு மனது உள்ளவர்கள்னு நிரூபிச்சுகிட்டிருக்காங்க. பெரிசா ஒண்ணும் ரியாக்ஷன் இல்லை. ஏன்னா, ஆலைகளும் மின் ‘விடுமுறை’க்கேற்ற மாதிரி, தம் விடுமுறை தினங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வீடுகளிலும், அதைக் கணக்குபண்ணி மின்சாரம் இருக்கிற நேரங்களில் வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எதிர்பாராத சமயங்களில் ஏற்படும் மின்வெட்டு மட்டுமே திணறடிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது மின்வெட்டினால் என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.
மின்வெட்டு... இல்லையில்லை.. மின்’விடுமுறை’ தரப்படுவது எதற்காக? போதிய மின்சாரம் இல்லை, இருப்பதைச் சிக்கனமாக்ப் பயன்படுத்தவென்றுதான். ஆனால், இங்கே அநேகமாக எல்லா வேலைகளையும் மின்சாரம் இருக்கும்போது திட்டமிட்டு முடித்துக் கொள்கிறோம். மின்சாரம் இல்லாததால் நிற்பது டிவியும், ஏஸியும் மட்டுமே. மீதி அத்தியாவசியங்களுக்கான மின்சாரம் இன்வெர்ட்டரில் சேமிக்கப்பட்டுவிடுகிறது. அப்புறம் என்னத்த சிக்கனம்?
அப்பத்தான் நான் போன வருஷம் கரண்ட் கட் குறித்து என் பதிவுகளில் எழுதுனது ஞாபகம் வந்தது!! (#பதிவருங்கோ!!)
தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ? (டிரங்குப் பொட்டி - 16)
ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க? (டிரங்குப் பொட்டி - 15)
போன வருஷம் மாதிரியே இப்பவும் பவர் கட்; போன வருஷம் மாதிரியே இப்பவும் மழை, புயலால் இழப்புகள், சாலை பள்ளங்கள்; போன வருஷம் மாதிரியே சாலை விபத்துகள்; போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எல்லாத்துக்கும் முந்தைய அரசுதான் காரணம்னு பழி சொல்றது...
மின் உற்பத்தியை அதிகரிக்கத்தான் உடனே முயற்சிகள் செய்யலை. அட்லீஸ்ட் இப்பவாவது முழிச்சுகிட்டு, transmission loss-ஐ தடுக்க வழிமுறைகள், மின்திருட்டைத் தடுக்க நடவடிக்கை, இலவச மின்சாரத்தை முறைப்படுத்துதல் - இப்படியான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஏதோ கொஞ்சநஞ்ச மின்சார விரயத்தையாவது தடுக்கலாம். யார் செய்ய...
(”தடையில்லா மின்சாரம் சாத்தியமே” என்ற பதிவில் சொல்லிருக்க ’ரேஷன்’ வழிமுறைகளும் சாத்தியமானதாகவும், பலன்தரக்கூடியவையாகவும் இருக்குது. கட்டாயம் படிங்க!!)
என் பதிவில் இருந்து ஒரு டிப்ஸையும் தருகிறேன். ஏதோ என்னாலானது...
ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது.(டிரங்குப் பொட்டி-17)
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பதிவர் ரஜின் கொடுத்த ஐடியா இது: இரவில் தண்ணி பாட்டில் கீழ எல்.இ.டி. லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்... கரண்ட் போனா தேவை ஒரு பாட்டில் தண்ணி, ஒரு லைட்..அவ்ளோதான்...ரூம் ப்ரைட்..
வழக்கம்போல தமிழக மக்கள் எதையும் தாங்கும் இரும்பு மனது உள்ளவர்கள்னு நிரூபிச்சுகிட்டிருக்காங்க. பெரிசா ஒண்ணும் ரியாக்ஷன் இல்லை. ஏன்னா, ஆலைகளும் மின் ‘விடுமுறை’க்கேற்ற மாதிரி, தம் விடுமுறை தினங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வீடுகளிலும், அதைக் கணக்குபண்ணி மின்சாரம் இருக்கிற நேரங்களில் வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எதிர்பாராத சமயங்களில் ஏற்படும் மின்வெட்டு மட்டுமே திணறடிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது மின்வெட்டினால் என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.
![]() |
| hyderabaddaily.com |
நண்பர் ஒருவர் வீட்டில், மின்சாதனம் பழுதுபார்க்க எலெக்ட்ரீஷியன் ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்தா, இந்தான்னு இழுத்து ஒரு சுபயோக நேரத்தில் வந்தும்விட்டார். வந்த நேரம் பவர்கட் ஆகிவிட, ”நீங்க கூப்புடலயின்னா வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பேன். இப்ப இங்க வந்ததால அதுபோச்சி. அதனால, என் ஒரு நாள் கூலியைத் தந்துடணும்’னு சொல்லி வாங்கிட்டேப் போய்ட்டார்!! நண்பர் பணம் போனதுபற்றிகூடக் கவலைப்படவில்லை; ‘இனி அடுத்தாக்ல ஆளு எப்ப கையில கிடைப்பானோ’ன்னுதான் கவலைப்படுகிறார்!!
மின்வெட்டால் பாதிக்கப்படுவது சிறு தொழில் செய்பவர்கள்தான். வெளிநாடுகளில் யாரேனும் வேலை பார்க்க வர நினைத்தால், ‘என்ன வளம் இல்லை நம் நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’, ’அங்க உழைக்கிறதை இங்க உழைக்கக் கூடாதாய்யா?’ என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். அதை நம்பி லோன் வாங்கி, மீதிக்கு தாலிமுதற்கொண்டு அடகுவைத்து தொழில் தொடங்கினால், இப்படி ‘பவர்’கட் செய்து, அவர்களின் வாழ்வை கட் செய்துவிடுகிறார்கள். இந்தப் பணத்தைவச்சு ஒரு ’விஸா’வாவது வாங்கியிருக்கலாமே என்றுதான் தோணும் அவர்களுக்கு!!
சிறுதொழிலையும் ஏதாவது ஃபாரின் கம்பெனி கொல்லாபரேஷனில் ஜாயிண்ட் வென்ச்சர் வச்சு துவங்கினா ‘தடையில்லா மின்சாரம்’ கிடைக்குமோ?
மின்வெட்டால் வாழ்வு திருடர்களுக்குத்தான்!! சொல்லிவச்சு கரெண்ட் போவதால், அவர்களுக்கும் இன்ன நேரம் இன்ன இடம் என்று பக்காவா ப்ப்ப்ளான் பண்ணி திருட வசதியாருக்கு!! காற்றுக்காக ஜன்னலைத் திறந்துவைத்துக் கூடத் தூங்க முடியவில்லை மக்கள். திருடிவிட்டு உயிரோடு விட்டுட்டால் பரவாயில்லை. நகைக்காகக் கொலையும்ல பெருகிப்போச்சு - ஒரு பவுன் இருபத்தியையாயிரமாமே!!
இதுல ஒருசில திருட்டுச் சம்பவங்களில் வடநாட்டவர் ஈடுபட்டதால், தமிழர்களை வேலையில் வைக்காமல், இவர்களை வைத்தால் இப்படித்தான்; ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’ தமிழகத்திலும் பரவிவருகிறது. அய்யா, தமிழர்கள் வேலை செய்வார்களாயிருந்தால் இவர்களின் வருகைக்கு அவசியம் என்ன? ஆமாம், பீஹாரிலும் ஒரிசாவிலும் இங்கே இருக்கிற மாதிரி இலவசங்கள் கிடையாதே!!
ஜூவியில் வாசித்தேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளரிடம் கரண்ட்கட் பற்றிப் புகார் செய்த வயதானவரிடம், தொணடர் ஒருவர் “வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.இப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்!!

|
|
Tweet | |||