வாழ்க்கையில நாம நெறய கொள்கை, வைராக்கியம் வச்சிருப்போம் - இதச் செய்யணும், அதச் செய்யவேக் கூடாது, இப்படித்தான் வாழணும்னு என்னவெல்லாமோ. ஆனா, எல்லாருக்கும் எல்லாமே நிறைவேறுவது இல்லை அல்லது விரும்பாததைச் செய்யாமல் இருக்க முடிவதில்லை. பல காரணங்கள்.
உதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை!!) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல!! அப்புறமென்ன கொள்கை காத்துலதான்...
என்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா? எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்!!
அதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.
ஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க??!!
நான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு.
சரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே?
(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க? ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது!!)
வேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...
ஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal"!! இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.
நல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம!! :-(((
தனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக்தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!!
குழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”!!
பேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்”!! ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்!!
இப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு? ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும்!! சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி!! ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...
இன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல்.
என்னடா, முதல்லயே “final product"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா? கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)
தேவையானவை: (இரண்டு பேருக்கு)
* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு
* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)
தேங்காய்ப் பால் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
வெங்காயம் - 1
* இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பெரிய பல்
பச்சை மிளகாய் -4
* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன்
(பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு)
கேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)
மல்லி இலை
தாளிக்க:
* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
இதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும் போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா? ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி!! :-))
ராஜ்மா வேக வைத்தல்:உதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை!!) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல!! அப்புறமென்ன கொள்கை காத்துலதான்...
என்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா? எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்!!
அதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.
ஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க??!!
நான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு. சரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே?
(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க? ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது!!)
வேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...
ஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal"!! இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.
நல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம!! :-(((
தனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக்தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!!
குழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”!!
பேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்”!! ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்!!
இப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு? ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும்!! சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி!! ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...
இன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல்.
என்னடா, முதல்லயே “final product"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா? கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)
தேவையானவை: (இரண்டு பேருக்கு)
* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு
* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)
தேங்காய்ப் பால் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
வெங்காயம் - 1
* இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பெரிய பல்
பச்சை மிளகாய் -4
* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன்
(பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு)
கேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)
மல்லி இலை
தாளிக்க:
* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
இதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும் போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா? ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி!! :-))
|
|
ராஜ்மா பீன்ஸை ஒரு ஆறு மணிநேரம் ஊறப் போட்டுக்கோங்க. ஊறிய தண்ணீரை வடிகட்டிடுங்க. எப்பவுமே பயறு வகைகளை ஊறப்போட்டத் தண்ணீரை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. வாயுத் தொல்லை வரும். பயறு, பருப்பு வகைகளை வேக வைக்கும்போது உப்பு போடாமல் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். பிறகு குக்கரில் பயறு மூழ்குமளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிய தீயில் வைத்து, 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்தத் தண்ணீரைப் பத்திரமாக வச்சுக்கோங்க. தேவைப்படும்.
இல்லைங்க, பயறு ஊறப்போட மறந்துட்டேன் அல்லது அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு சொல்றவங்க, பீன்ஸோடு ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கலாம். இதில், வேக வைத்தத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.
இதுக்கும் சோம்பப்படுறவங்க, ரெடிமேட் டின்களில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அதிலுள்ள தண்ணீரும் வேண்டாம்.
அரிசியை அளந்து பாத்துட்டு, கழுவி ஊறப்போடுங்க. பச்சரிசிக்குப் பதிலா, புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம். அப்படின்னா, அரிசியை அரைமணி நேரமாவது கண்டிப்பா ஊறப்போடணும். அரிசி வேகவைக்க (மொத்த) தண்ணீரும், மூணரை மடங்கு வேணும்.
மற்ற எல்லாம் வெட்டி ரெடியா வச்சுக்கோங்க. பாத்திரத்தை அடுப்பில் வச்சு, எண்ணெய் ஊற்றி, ஏலம், கிராம்பு, பட்டை, சீரகத்தைப் போடுங்க. ஒரு அரை நிமிஷம் ஆனதும், வெட்டி வச்சிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணாப் பாத்திரத்தில் போடுங்க. என்னது? ஒன் பை ஒன்னா? அதெல்லாம் டைம் வேஸ்ட்!! நாம செய்றது “பேச்சிலர் குக்கிங்”, ஞாபகம் இருக்கட்டும். ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே சின்ன தீயில் வதங்கட்டும்.
அதுக்குள்ளே தேங்காய்ப் பால் ரெடி பண்ணுங்க. தேங்காயிலிருந்து ஃப்ரெஷ்ஷாப் பால் எடுத்தாலும் சரி, ரெடிமேட் தேங்காய்ப் பொடியைக் கலக்கினாலும் சரி. தேங்காய்ப் பால், பயறு வேக வைத்த தண்ணீர், அரிசி ஊற வச்ச தண்ணி எல்லாம் சேர்த்து அரிசி அளந்த அதே கப்பினால் அளந்து பாருங்க. அரிசிக்கு இருமடங்கு வரணும். இல்லைன்னா தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைங்க.
இப்ப வடிகட்டிய அரிசி மற்றும் வெந்த பீன்ஸை வெங்காயக் கலவையோடு சேர்த்து ஒரு நிமிஷம்போல வதக்குங்க. இப்ப கொதிக்கிற தண்ணியை இதில ஊத்துங்க. உப்பு போட மறக்க வேண்டாம். ஒரு கொதி கொதிச்சதும் தீயை குறைச்சு வச்சு, மூடி போட்டு ஒரு இருபது நிமிஷம் வைங்க. அப்புறமென்ன, “சாப்பாடு ரெடி”ன்னு போர்டு வச்சிரலாம்!!
எழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??
|
|
Tweet | |||