இந்தத் தொடரின் இரண்டாவது பதிவுக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டவுட்டு: சூப்பர் ஸ்டார் பெரிசா? பவர் ஸ்டார் பெரிசா? ஏன்னா, சூரிய ஒளி சக்தியை “பவர் ஸ்டார்”னுதான் சொல்லிருக்கணும்னு நிறைய ரசிகக் கண்மணிகள் நினைக்கலாம். அதிக முதலீடு, எதிர்பார்த்த பயன்கள், ஆனா அப்பப்போ காணாமப் போறது - இதையெல்லாம் வச்சுப் பாக்கும்போது, சூரிய ஒளியை சூப்பர் ஸ்டார்னு சொன்னது சரிதானே? “பவர் ஸ்டார்” பட்டம் யாருக்குன்னு பதிவுல பார்ப்போம்.
சூரிய மின்சாரத்தை வழக்கமான முறையில் தகடுகள்(பேனல்கள்) வைத்து உற்பத்தி செய்வதில் பேட்டரி, இன்வர்ட்டர் தேவைப்படுவது ஒருமுக்கியக் குறைபாடு. மேலும், சூரிய ஒளி தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை என்பதும், விலையுயர்ந்த சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் இயற்கைக் கனிமப்பொருளான ”பாலி சிலிக்கான்” தட்டுப்பாடும் மற்ற காரணங்கள். இவற்றைத் தவிர்க்க, மற்றுமொரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![]() |
| டர்பைன் சுத்துது!! |
அணையிலிருந்து வேகமாக விழும் நீரைப் பயன்படுத்தினால், அது நீரேற்று மின் நிலையம் (Hydro electricity); நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அதைக் கொண்டு சுழல வைத்தால் அனல் மின் நிலையம்.(Thermal power plant). அணை நீர், நிலக்கரி ரெண்டுமே தட்டுப்பாடுள்ளவை. இங்கேதான் சூரிய ஒளி பயன்படுகிறது.
அந்தக் காலத்தில் வாலுப் பசங்க, கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய சக்தியை ஓரிடத்தில் குவித்து, அந்த வெப்பத்தைக் கொண்டு சிறு காகிதத்தையோ அல்லது எறும்பையோ எரிப்பாங்க பார்த்திருக்கீங்களா? அதே முறையில், நீரை ஆவியாக்கினால்...? அந்த நீராவியால் டர்பைனைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரித்தால், அதுவும் “சூரிய ஒளி மின்சாரம்”தான்!! "Concentrated Solar Power" என்று பெயர்.
இந்த CSP முறை, வழக்கமான சோலார் பேனல் முறையை விடவும் எளிதானது மட்டுமல்ல, செலவும் குறைந்தது. இதற்கு விலையுயர்ந்த சோலார் பேனல்கள் தேவையில்லை; ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய சாதாரண கண்ணாடி போதும். இன்வர்ட்டர், பேட்டரிகளும் தேவையில்லை. சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், அதனால் பெறப்பட்ட வெப்பத்தைச் சேமித்து வைத்தால், (heat transfer) தொடர் மின்சார உற்பத்தி கிடைக்க வாய்ப்புண்டு.
CSPயைப் புரிந்துகொள்ள இந்த சுவாரசியமான வீடியோவைப் பாருங்க.
பாலைவனங்கள் நிறைந்த வளைகுடா நாடுகள் இந்த வகை மின்சார உற்பத்திக்கு ஏற்றவை என்பதால், இவற்றின்மீது வணிக நிறுவனங்களுக்கு ஒரு கண்!! பெட்ரோல் காலியானால் என்ன, இருக்கவே இருக்கு சூரியன். :-))
இந்த CSP power plant நம்ம ஊருக்கும் ஏற்றதாகவே தெரிகிறது. கோடை காலங்களில் அணைமட்டம் குறையும்போது, இந்த முறை கைகொடுக்குமே. மேலும், மின்சார உற்பத்தி என்றில்லாது, Heat transfer எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கேயும் CSP பயன்படுத்தலாம்.
அடுத்ததா, Geothermal power எனப்படும் புவி அனல் சக்தி. தகிக்கும் குழம்புகள் கொட்டும் எரிமலைகள், கொதிநீர் ஊற்றுகள் ஆகியவற்றிற்கு பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் மிக மிக அதிக வெப்பம்தான் காரணம் என்று எல்லாருக்குமே தெரியும்.
![]() |
|
இந்த அடிப்படைதான் புவி அனல் சக்திக்கும். மின்சாரம் தயாரிக்கத் தேவையான நீராவியை உருவாக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தியதுபோல, இங்கு புவியின் அனல் சக்தி பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக வருவது, bio-mass எனப்படும் சேகரிக்கப்பட்ட (bio-degradable) மக்கக்கூடிய குப்பையிலிருந்து மின்சாரம், எரிபொருள், உரம் ஆகியவை தயாரிப்பதும் பெரிய அளவிலான தொழிலாக உலகம் முழுதும் உருவாக்கம் பெற்று வருகிறது.
வீடுகள், உணவகங்களிலிருந்து கிடைக்கும் மக்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து, அதை பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்க (fermentation) வைத்து, எரிபொருளாக இயற்கை எரிவாய் (bio-gas) தயாரிக்கப்படுகிறது. இது வாகனங்கள் ஓட்டவும், மின்சாரம் தயாரிக்க, ஆலைகளில் எர்பொருளாக என்று பலவிதங்களில் பயன்படுத்தப்படகிறது. மீந்துபோகும் திடப்பொருள், உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் பல நன்மைகள் உண்டு. குப்பைகளை காலிநிலத்தில் போட்டு நிறைப்பதால் (land filling) வரும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, நாற்றம், நோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடு போன்றவைகளுக்கு முடிவு வருகிறது. மேலும், இதன்மூலம் இயற்கை உரம் கிடைப்பதால், ரசாயன் உரத்தால் வரும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. இயற்கை எரிபொருளான பயோ-கேஸ் பயன்படுத்தும்போது நச்சு வாயுக்கள் வெளிப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் கேடில்லை. எல்லாவற்றையும்விட, செலவு மிகக் குறைந்த திட்டம்.
இது நம் நாட்டில் கிராமங்களில், மிகச்சிறிய அளவில் சிற்சில வீடுகளில் பயன்படுத்தப்படும் முறைதான். பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால், குப்பைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.
ஆக, குறைந்த முதலீட்டில் கூடுதல் பயன்கள் என்கிற வகையில் பயோ-கேஸ்தான் சக்தி-உலகின் ஒரு நட்சத்திரமாக, “பவர் ஸ்டார்” பட்டம் பெறத் தகுதியானது. இப்போ தலைப்புக்கு தொடர்பு வந்துடுச்சா?
அடுத்த பதிவில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போம். (கண்டிப்பா அத்தோடு முடிச்சுக்குவேன்னு உறுதிமொழி வழங்குகிறேன் - இன்ஷா அல்லாஹ்)இதன்மூலம் பல நன்மைகள் உண்டு. குப்பைகளை காலிநிலத்தில் போட்டு நிறைப்பதால் (land filling) வரும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, நாற்றம், நோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடு போன்றவைகளுக்கு முடிவு வருகிறது. மேலும், இதன்மூலம் இயற்கை உரம் கிடைப்பதால், ரசாயன் உரத்தால் வரும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. இயற்கை எரிபொருளான பயோ-கேஸ் பயன்படுத்தும்போது நச்சு வாயுக்கள் வெளிப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் கேடில்லை. எல்லாவற்றையும்விட, செலவு மிகக் குறைந்த திட்டம்.
இது நம் நாட்டில் கிராமங்களில், மிகச்சிறிய அளவில் சிற்சில வீடுகளில் பயன்படுத்தப்படும் முறைதான். பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால், குப்பைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.
ஆக, குறைந்த முதலீட்டில் கூடுதல் பயன்கள் என்கிற வகையில் பயோ-கேஸ்தான் சக்தி-உலகின் ஒரு நட்சத்திரமாக, “பவர் ஸ்டார்” பட்டம் பெறத் தகுதியானது. இப்போ தலைப்புக்கு தொடர்பு வந்துடுச்சா?
|
|
Tweet | |||






