இந்தத் தொடரின் இரண்டாவது பதிவுக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டவுட்டு: சூப்பர் ஸ்டார் பெரிசா? பவர் ஸ்டார் பெரிசா? ஏன்னா, சூரிய ஒளி சக்தியை “பவர் ஸ்டார்”னுதான் சொல்லிருக்கணும்னு நிறைய ரசிகக் கண்மணிகள் நினைக்கலாம். அதிக முதலீடு, எதிர்பார்த்த பயன்கள், ஆனா அப்பப்போ காணாமப் போறது - இதையெல்லாம் வச்சுப் பாக்கும்போது, சூரிய ஒளியை சூப்பர் ஸ்டார்னு சொன்னது சரிதானே? “பவர் ஸ்டார்” பட்டம் யாருக்குன்னு பதிவுல பார்ப்போம்.
சூரிய மின்சாரத்தை வழக்கமான முறையில் தகடுகள்(பேனல்கள்) வைத்து உற்பத்தி செய்வதில் பேட்டரி, இன்வர்ட்டர் தேவைப்படுவது ஒருமுக்கியக் குறைபாடு. மேலும், சூரிய ஒளி தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை என்பதும், விலையுயர்ந்த சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் இயற்கைக் கனிமப்பொருளான ”பாலி சிலிக்கான்” தட்டுப்பாடும் மற்ற காரணங்கள். இவற்றைத் தவிர்க்க, மற்றுமொரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டர்பைன் சுத்துது!! |
அணையிலிருந்து வேகமாக விழும் நீரைப் பயன்படுத்தினால், அது நீரேற்று மின் நிலையம் (Hydro electricity); நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அதைக் கொண்டு சுழல வைத்தால் அனல் மின் நிலையம்.(Thermal power plant). அணை நீர், நிலக்கரி ரெண்டுமே தட்டுப்பாடுள்ளவை. இங்கேதான் சூரிய ஒளி பயன்படுகிறது.
அந்தக் காலத்தில் வாலுப் பசங்க, கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய சக்தியை ஓரிடத்தில் குவித்து, அந்த வெப்பத்தைக் கொண்டு சிறு காகிதத்தையோ அல்லது எறும்பையோ எரிப்பாங்க பார்த்திருக்கீங்களா? அதே முறையில், நீரை ஆவியாக்கினால்...? அந்த நீராவியால் டர்பைனைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரித்தால், அதுவும் “சூரிய ஒளி மின்சாரம்”தான்!! "Concentrated Solar Power" என்று பெயர்.
இந்த CSP முறை, வழக்கமான சோலார் பேனல் முறையை விடவும் எளிதானது மட்டுமல்ல, செலவும் குறைந்தது. இதற்கு விலையுயர்ந்த சோலார் பேனல்கள் தேவையில்லை; ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய சாதாரண கண்ணாடி போதும். இன்வர்ட்டர், பேட்டரிகளும் தேவையில்லை. சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், அதனால் பெறப்பட்ட வெப்பத்தைச் சேமித்து வைத்தால், (heat transfer) தொடர் மின்சார உற்பத்தி கிடைக்க வாய்ப்புண்டு.
CSPயைப் புரிந்துகொள்ள இந்த சுவாரசியமான வீடியோவைப் பாருங்க.
பாலைவனங்கள் நிறைந்த வளைகுடா நாடுகள் இந்த வகை மின்சார உற்பத்திக்கு ஏற்றவை என்பதால், இவற்றின்மீது வணிக நிறுவனங்களுக்கு ஒரு கண்!! பெட்ரோல் காலியானால் என்ன, இருக்கவே இருக்கு சூரியன். :-))
இந்த CSP power plant நம்ம ஊருக்கும் ஏற்றதாகவே தெரிகிறது. கோடை காலங்களில் அணைமட்டம் குறையும்போது, இந்த முறை கைகொடுக்குமே. மேலும், மின்சார உற்பத்தி என்றில்லாது, Heat transfer எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கேயும் CSP பயன்படுத்தலாம்.
அடுத்ததா, Geothermal power எனப்படும் புவி அனல் சக்தி. தகிக்கும் குழம்புகள் கொட்டும் எரிமலைகள், கொதிநீர் ஊற்றுகள் ஆகியவற்றிற்கு பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் மிக மிக அதிக வெப்பம்தான் காரணம் என்று எல்லாருக்குமே தெரியும்.
இந்த அடிப்படைதான் புவி அனல் சக்திக்கும். மின்சாரம் தயாரிக்கத் தேவையான நீராவியை உருவாக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தியதுபோல, இங்கு புவியின் அனல் சக்தி பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக வருவது, bio-mass எனப்படும் சேகரிக்கப்பட்ட (bio-degradable) மக்கக்கூடிய குப்பையிலிருந்து மின்சாரம், எரிபொருள், உரம் ஆகியவை தயாரிப்பதும் பெரிய அளவிலான தொழிலாக உலகம் முழுதும் உருவாக்கம் பெற்று வருகிறது.
வீடுகள், உணவகங்களிலிருந்து கிடைக்கும் மக்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து, அதை பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்க (fermentation) வைத்து, எரிபொருளாக இயற்கை எரிவாய் (bio-gas) தயாரிக்கப்படுகிறது. இது வாகனங்கள் ஓட்டவும், மின்சாரம் தயாரிக்க, ஆலைகளில் எர்பொருளாக என்று பலவிதங்களில் பயன்படுத்தப்படகிறது. மீந்துபோகும் திடப்பொருள், உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் பல நன்மைகள் உண்டு. குப்பைகளை காலிநிலத்தில் போட்டு நிறைப்பதால் (land filling) வரும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, நாற்றம், நோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடு போன்றவைகளுக்கு முடிவு வருகிறது. மேலும், இதன்மூலம் இயற்கை உரம் கிடைப்பதால், ரசாயன் உரத்தால் வரும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. இயற்கை எரிபொருளான பயோ-கேஸ் பயன்படுத்தும்போது நச்சு வாயுக்கள் வெளிப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் கேடில்லை. எல்லாவற்றையும்விட, செலவு மிகக் குறைந்த திட்டம்.
இது நம் நாட்டில் கிராமங்களில், மிகச்சிறிய அளவில் சிற்சில வீடுகளில் பயன்படுத்தப்படும் முறைதான். பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால், குப்பைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.
ஆக, குறைந்த முதலீட்டில் கூடுதல் பயன்கள் என்கிற வகையில் பயோ-கேஸ்தான் சக்தி-உலகின் ஒரு நட்சத்திரமாக, “பவர் ஸ்டார்” பட்டம் பெறத் தகுதியானது. இப்போ தலைப்புக்கு தொடர்பு வந்துடுச்சா?
அடுத்த பதிவில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போம். (கண்டிப்பா அத்தோடு முடிச்சுக்குவேன்னு உறுதிமொழி வழங்குகிறேன் - இன்ஷா அல்லாஹ்)இதன்மூலம் பல நன்மைகள் உண்டு. குப்பைகளை காலிநிலத்தில் போட்டு நிறைப்பதால் (land filling) வரும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, நாற்றம், நோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடு போன்றவைகளுக்கு முடிவு வருகிறது. மேலும், இதன்மூலம் இயற்கை உரம் கிடைப்பதால், ரசாயன் உரத்தால் வரும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. இயற்கை எரிபொருளான பயோ-கேஸ் பயன்படுத்தும்போது நச்சு வாயுக்கள் வெளிப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் கேடில்லை. எல்லாவற்றையும்விட, செலவு மிகக் குறைந்த திட்டம்.
இது நம் நாட்டில் கிராமங்களில், மிகச்சிறிய அளவில் சிற்சில வீடுகளில் பயன்படுத்தப்படும் முறைதான். பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால், குப்பைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.
ஆக, குறைந்த முதலீட்டில் கூடுதல் பயன்கள் என்கிற வகையில் பயோ-கேஸ்தான் சக்தி-உலகின் ஒரு நட்சத்திரமாக, “பவர் ஸ்டார்” பட்டம் பெறத் தகுதியானது. இப்போ தலைப்புக்கு தொடர்பு வந்துடுச்சா?
|
Tweet | |||
15 comments:
சூரிய ஒளியில் மின்சாரம் பற்றியும் புவி அனல் சக்தி பற்றியும் சுவாரசியமான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
(பதிவின் முதல் பத்தியிலும்,கடைசி சில பத்திகளிலும் எழுத்துக்கள் தெளிவாக இல்லை ஹுஸைனம்மா, கருத்துப்பெட்டிக்கு அருகில் உள்ள show/hide original post லிருந்து படித்தேன்.இங்கு தெளிவாக உள்ளது.)
ராம்விக்கா, கருத்துக்கு நன்றி.
நான் இந்தப் பதிவை ஃபயர்ஃபாக்ஸ் பிரவுஸரில் பார்த்த பொழுது சரியாகவே இருக்கிறது. ஆனால், க்ரோம் ப்ரவுஸரில் பார்த்தால், நீங்க சொன்ன மாதிரி இருக்கு. ஏன்னு தெரியலையே. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
இனி யாருக்காவது அப்படித் தெரிஞ்சா, ஃபயர்ஃபாக்ஸில்பாருங்க.
ஹுஸைனம்மா...
அற்புதமான அறிவியல் பதிவு.. எழிமையா விளக்கி இருக்கீங்க...உங்களுக்கு மின்சாரம் எடுக்கும் விஷயத்தில் நல்ல நாலெட்ஜ் இருக்கு.. குட்..
//கண்டிப்பா அத்தோடு முடிச்சுக்குவேன்னு உறுதிமொழி வழங்குகிறேன் - இன்ஷா அல்லாஹ் // இத்தோட முடிச்சிக்க டிரை பண்ணுங்களேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல பகிர்வு. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
எனக்கும் எழுத்துகள் ஒழுங்காகவே தெரியலை.
பவர் ஸ்டார் :)
நல்ல பகிர்வு.
புதிய பயனுள்ள தகவல்கள் நன்றி.
ஹுஸைனம்மா ,நல்ல பய்னுள்ள பதிவு.
(பதிவின் முதல் பத்தியிலும்,கடைசி சில பத்திகளிலும் எழுத்துக்கள் தெளிவாக இல்லை ஹுஸைனம்மா, கருத்துப்பெட்டிக்கு அருகில் உள்ள show/hide original post லிருந்து படித்தேன்.இங்கு தெளிவாக உள்ளது.)//
ரமாரவி சொல்வது போல் தான் எனக்கும் இருக்கிறது.
கிடைத்த இடத்தில், கிடைத்த இடைவெளியில் பதிவு படிக்கலாம்னா ரொம்ப டெக்னிகலா இருக்கும் போலேருக்கே!
//ரொம்ப டெக்னிகலா இருக்கும் போலேருக்கே!//
அவ்வ்வ்... ஸ்ரீராம் சார்!! நீங்களே இப்படிச் சொன்னா எப்படி??!! படங்கள்தான் பார்க்க கொஞ்சம் அப்படியிப்பிடி இருக்கும். வாசிச்சுப் பாருங்க, நல்லாப் புரியும். :-)))
சிராஜ் - //.உங்களுக்கு மின்சாரம் எடுக்கும் விஷயத்தில் நல்ல நாலெட்ஜ் இருக்கு.. குட்..//
ஒரு ஜாயிண்ட் வென்ச்சர் போட்டுருவோமா? நீங்க இன்வெஸ்ட்மண்ட் மட்டும், நான் வொர்க்கிங் பார்ட்னர்... எப்படி? :-)))))
கோவை2தில்லி - நன்றிங்க. எழுத்துகள் ஃபயர்ஃபாக்ஸில் நல்லாத் தெரியுது. அதில பாருங்க.
மாதேவி -நன்றிங்க.
டி.என்.முரளிதரன் - நன்றிங்க.
இதற்கு அடுத்ததாக வருவது, bio-mass எனப்படும் சேகரிக்கப்பட்ட (bio-degradable) மக்கக்கூடிய குப்பையிலிருந்து மின்சாரம், எரிபொருள், உரம் ஆகியவை தயாரிப்பதும் பெரிய அளவிலான தொழிலாக உலகம் முழுதும் உருவாக்கம் பெற்று வருகிறது.
Hello நீங்க இருக்க வேண்டிய இடமே வேற. பார்த்துங்க தலை சிறந்த விஞ்ஞானி என்று கடத்திட போறாங்க. Superb
எனக்கு வீட்டுல கரண்ட் இல்லாதத பற்றி யோசிக்கவே நேரம் இல்லை நீங்க vision of எலெக்ட்ரிசிட்டி எல்லாம் எழுதறிங்க? ஆமா நீங்க சயின்ஸ் டீச்சர்ரா?
முதல்முறைப் படித்தபோது நண்பரின் நண்பரின் (!) லேப்டாப்! இப்போது நிதானமாகப் படித்தேன். வீடுகள், உணவகங்களில் கிடைக்கும் மக்கக் கூடிய பொருள்கள் வைத்து எரிபொருள் தயாரிக்கும் முறை பற்றி இன்று கூடப் படித்துச் சேமித்து வைத்துள்ளேன்... பாசிட்டிவ் செய்தியாக!
போன பதிவில் பயோமாஸ் ரின்யூவபிள் எனர்ஜி இல்லையா என்று சிலர் கேட்டிருந்தார்கள். இதோ.
பயோமாசினினால் நன்மை என்று நிறைய அடுக்கினாலும், அது ஆல்டனேட் எனர்ஜி. க்ரீன் எனர்ஜி அல்ல. ரின்யூவபிளும் அல்ல.
பாம் மரங்களின் கழிவுகளை நீர்நிலைகளில் சேர்க்காமல் பயோமாஸிற்கு பயன்படுத்துவது மேல் என்று இந்தோனேசியாவும் மலேஷியாவும் பயோமாஸை ப்ரொமோட் செய்கிறார்கள். க்ரூவல் ஆயில் என்று ஒரு ஈ புத்தகம் ஆன்லைனில் கிடக்கிறது. படித்துப்பாருங்கள்.
மரங்களை வெட்டி, நூற்றுக்கணக்கான கிலோமீற்றருக்கு ஷிப் பண்ணி, எரிஞ்சுட்டு, திருப்ப மரங்களை நடுவதற்கு பெயர் காபன் நியூட்ரல் இல்லை என்று ஆக்டிவிஸ்ட் கூறி இருக்கிறார்.
Massachusetts Environmental Energy Alliance மரங்களை எனர்ஜிக்குன்னு எரிப்பது coal ஐ எரிக்கும் போது வெளியேறும் காபனின் 1.5 மடங்கு காபனையும், natural gas ஐ எரிக்கும் போது வெளியேறும் காபனின் 3 முதல் 4 மடங்கு காபனையும் வெளியேற்றும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
சோலார், காற்றாழை போன்றவறிற்கு சப்ளை தேவையில்லை. ஆனால், பயோமாஸ் ஜெனரேசனுக்கு தொடர்ந்து சப்ளை கொடுக்க வேணும். பயோமாசின் போது வெளியேறும் சாம்பலை முறைப்படி டிஸ்போஸ் பண்ண வேண்டும். அதை விட பயோமாஸில் இருந்து எனர்ஜி எடுப்பது கம்பஷன் என்கிற முறை என்பதால் நிறைய சேப்டி ப்ரிகோஷன்ஸ் எடுக்க வேணும். கூலிங்கிற்கு நிறைய தண்ணீர் வேண்டும். நியூக்கிளியர் எனர்ஜிக்கு பளான்டுக்கும் கூலிங்கிற்கு நிறைய தண்ணீர் வேண்டும்.
ஆட்லனேட் எனர்ஜி, க்ரீன் எனர்ஜி, ரின்யூவபிள் எனர்ஜி, சஸ்டேய்னபிள் எனர்ஜின்னு அழகழகான வார்த்தைகளைக் கூறி பலரும் நம்மளை ஏமாத்தறாங்க.
ரின்யூவபிள் எனர்ஜின்னா, எனர்ஜி சோர்சஸ் குறையக் கூடாது (டிப்ளீட் செய்யக்கூடாது) என்று சிலரும், திருப்ப ரிப்ளனிஷ் ஆகற எனர்ஜி சோர்சஸாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுவார்கள். குறையாதது காற்றும் சூரிய ஒளியும். ரிப்ளனிஷ் ஆக்ககூடியவையாக மரங்களைச் சொல்லலாம்.
நாட்சுரல் காடுகளை அழித்துவிட்டு அதில் மரங்களை நடுவதில் என்ன பயன். நீர் மற்றும் கடலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பதையும் ரின்யூவபிள் என்ர்ஜியின்னுள் அடக்கலாம். ஆனால் நீருடன் மக்கானிக்கல் ஆப்ஜெக்ட்ஸ் வேலை செய்யும் போது வேர் அன்ட் டேர் இல்லாத உலோகங்களைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மெயின்டெனென்ஸ் / ஆப்பரேஷனல் செலவு இருக்கும்.
ஓரளவுக்கு (பாக்கப் பாட்டரி இல்லாமல் இருந்தால்) பிரச்சினை இல்லாதது காற்றாழையும் சோலாருமே. அதிலும் காற்றாழை ரொம்ப பெட்டர். மலை, பாவிக்காத வெளி என்று பல இடங்களில் வைக்கலாம். ஜியோதேர்மலும் ரினியூவபிள் எனர்ஜி சார்ஸ். ஆனால் அரிதான எனர்ஜி சார்ஸ்.
அப்புறம், ஜீரோ ஃபிகர் மாதிரி ஜீரோ காபன் என்கிற கான்செப்ட்டும் இப்ப பழக்கத்தில் இருக்கு. இதில் என்ன வேடிக்கை என்றால், ஜீரோ காபன் எனர்ஜியில் பயோமார்ஸையும் சேர்த்து பலர் குழப்பி வைக்கிறார்கள். ஜீரோ காபன் எனர்ஜின்னா, அந்த கம்யூனிட்டி சைட்டிலேயே எனர்ஜி ப்ரொடக்சன் இருந்து காபன் ஜனரேஷனை ஆப்செட் பண்ண வேணும். பயோமாஸுக்கு மில் எஃப்ளூவெடை பாம் எஸ்ரேட்டில இருந்து ப்ளான்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ண வேண்டும். அதுக்கு எவ்வளவு உழைப்பு, எனர்ஜி, பணம் விரையமாகும். பயோமாஸ் ப்ளான்டை மக்கள் இருக்கும் இடத்தில் வைக்க முடியாது. நகரத்தின் எல்லையிலும் வைக்க முடியாது. ஆனால் காற்றாழைகளையும் சோலாரையும் நகர எல்லையில் வைக்கலாம். அழகாகவும் இருக்கும். இப்ப நிறைய பாட்டனில் சோலார் பானல் வந்திருக்கு. காற்றாழைகளும் கூட நிறைய பாட்டனில் வந்திருக்கு. சில காற்றாழைகள் எல்லாம் 7.5 மெகாவாட் அளவில் கூட வந்திருக்கின்றன.
முடிஞ்சளவு தமிழ் படுத்தி இருக்கேன்.
மிக அருமையான பகிர்வு.
முதல் பத்தி கடைசி பத்தி சரியான பாண்டில் இல்லை, மறுபடி எடுத்து மாற்றி போடுங்கள்
Post a Comment