Pages

நானும் கண்காட்சிக்கு போனேன்!




எல்லாரும்  குற்றால சீஸன் மாதிரி வருஷா வருஷம் வரும் புத்தகக் காட்சிக்குப் போய் பதிவு எழுதிகிட்டிருக்கீற சீஸன் இது!! அதெல்லாம் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட, எங்கூட்டுக்கார் பர்ஸ் தப்புச்சுன்னு “நிம்மதிப் பெருமூச்சு” விட... பொறுக்குமா நமக்கு!! உடனே “எட்றா வண்டியை”ன்னு  நாங்களும் இங்கே வருஷா வருஷம் வரும் ஒரு “கண்காட்சி”க்குப் போனோம்!! ஆனாலும் வருத்தம் என்னன்னா, இந்தக் கண்காட்சியில நாம எதுவும் வாங்க முடியாது. ரேட் அப்படி.  ஸோ, ஒன்லி “புத்தி கொள்முதல்”!! 


அபுதாபியில் வருடா வருடம் நடந்து வரும்  World Future Energy Summit (உலக எதிர்கால சக்தி உச்சி மாநாடு) - இதனைச் சார்ந்து நடந்து வரும் கண்காட்சிக்குத்தான் சென்றோம். கடந்த ரெண்டு வருஷமா அதைப் பத்திப் பதிவுகள் எழுதி இருக்கிறதால், மீண்டும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  ”சர்வதேச புதுப்பிக்கக்கூடிய சக்தி நிறுவனம்” என்ற IRENAவின்  தலைமை அலுவலகம் தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்த வருஷம் கூடுதல் சிறப்பு.  அமீரகத்தின் தொடர்ந்த பசுமைச் சூழல் நடவடிக்கைகளே இதற்கான காரணம் என்றும் சொல்லலாம்.

கண்காட்சியில், சூரிய சக்தி, காற்றாலை, எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய வழக்கமானவற்றோடு புவி அனல் சக்தி (geo-thermal energy), உயிரி-எரிபொருள் (bio-fuel), நீர் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு போன்றவை குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன இம்முறை.


அவைகளைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், இந்த வருஷம் “ஷேக் ஸாயத் எதிர்கால சக்தி பரிசு” யாருக்குக் கிடச்சுதுன்னு பார்க்கலாம். வருடா வருடம், இதற்கான பிரிவுகளை  அதிகப்படுத்திகிட்டே போறாங்க. இந்த வருடம் உயர்நிலைப் பள்ளிகளையும் இந்தப் பரிசுக்கு சேர்த்திருப்பதிலிருந்து, இளைய சமுதாயத்திற்குத்தான் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை என்பதை வலியுறுத்துறாங்க!!

பிரிவு 1 - பெரிய நிறுவனம் (Large corporation) பிரிவில் பரிசு பெற்றது        Siemens   நிறுவனம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டுத் திறமைகள் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மத்திய கிழக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைந்து வளர்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களுக்காக.

பிரிவு 2 -சிறு நிறுவனங்கள் (SME) பிரிவில்   d.light design   என்கிற நிறுவனம்.  மின்சார வசதியற்ற அல்லது குறைவான நாடுகளின் மக்களுக்கு சூரிய ஒளி விளக்குகளை வாங்கக்கூடிய விலையில் வழங்கியமைக்காக.

பிரிவு 3 -அரசு-சாரா லாப நோக்கற்ற நிறுவனம் (NGO) பிரிவில்  CERES   என்கிற அமெரிக்க நிறுவனம்.
 “செரஸ்”, வணிக நிறுவனங்களை சுற்றுச்சூழல் நோக்கிலான பொறுப்புடன் நடந்துகொள்ள வைக்கத் தூண்டியது. வணிக நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பேணுதலை அளவிடுவதற்காக, GRI reporting (Global Reporting Initiative) முறையை அறிமுகம் செய்தது.

பிரிவு 4 -தனிநபர் ஆயுட்கால சாதனை - பேராசிரியர் ஜோஸ் கோல்டம்பெர்க், பிரேசில்.
 இயற்பியலாளர். பிரேசிலில் கல்வி அமைச்சராகவும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பல்வேறு பதவிகளில் பிரேசிலிலும், சர்வதேச அகாடமிகளிலும்  இருந்தவர். அணுவியல், சுற்றுச்சூழல், சக்தி ஆகிய தளங்களில் புத்தகங்கள் பல எழுதியவர்.

பிரிவு 5 -பள்ளிகள்: 
உலக முழுதுமுள்ள பள்ளிகளை, அமெரிக்கப் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பள்ளிக்கு அவற்றின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பரிசு வழங்கியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு பள்ளிக்கும் பரிசு ஒரு லட்சம் டாலர்!!

ஆசியப் பகுதியில், அபுதாபியில் உள்ள, பங்களாதேஷ் நாட்டுப் பள்ளிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. தமது பள்ளியின் “கார்பன் தடத்தைக்” (carbon footing) குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டமைக்காக இந்த விருது.

ஆசியப் பிரிவில், இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த “கல்கேரி சங்கீத் வித்யாலயா” என்கிற பள்ளி இறுதிச் சுற்று வரை முன்னேறி வந்தது என்பது ஆச்சரியத் தகவல்!! 


தமிழகத்திலும் இதுபோன்ற பள்ளிகள் உங்களுக்குத் தெரிந்தால் விண்ணப்பிக்கச் சொல்லலாம். பார்க்க:  http://www.zayedfutureenergyprize.com

னி மெயின் மேட்டருக்கு வருவோம். சோலார் பவர்தான் இப்போதைக்கு "renewable energy" ஏரியாவில் “சூப்பர் ஸ்டார்”!! 

ஸோலார் செல்

சோலார் பேனலின், முக்கிய குறைபாடுகளில் ஒன்று, நிறுவுவதற்கு அதிக இடம் (ground space) தேவைப்படுவது.  இதைக் கருத்தில் கொண்டு  அறிமுகப்படுத்தப்பட்டவைதான், மேலே படத்தில் பார்க்கும் வகை சோலார் பேனல். இதில் குமிழ் போலத் தெரிபவை ஒவ்வொன்றும், உள்ளே வரும் ஒளியலைகளை வெளியேற விடாத “total internal reflection lens". ஒவ்வொன்றின் அடியிலும், 1100 மடங்கு வரை வீரியம் கூடிய சிறு சிப் அளவிலான ”சோலார் செல்” ஒன்று உள்ளது!!


சோலார் பவர் என்றால், சோலார் பேனலோடு, பேட்டரி, இன்வர்ட்டர் ஆகியவையும் ஞாபகம் வரும். சூரிய சக்தியைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் வகையில் நல்லது என்றாலும், அதன் பின்விளைவுகளான பேட்டரி & இன்வெர்ட்டர்களை என்னச் செய்வது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அவற்றை முழுமையாக மறுசுழற்சி செய்வதென்பது முடியாதது. அதிலும் ஐந்தாறு வருடங்களுக்கொரு முறை இவற்றை மாற்ற வேண்டும்.  ஆக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மறுபடி கேள்விக்குள்ளாகிறது!!

தனிநபர் உபயோகத்திற்கே, இத்தனைப் பிரச்னைகள் என்றால், பெரிய அளவில் “சோலார் பார்க்”குகள் வைத்து, மின்சாரம் தயாரித்தால்...?? இதற்கு தீர்வு - மாற்று என்ன?

அடுத்த பதிவில்.... !!


Post Comment

25 comments:

ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு.

உங்கள் சென்ற பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட முயன்று முயன்று தோற்றேன். ஏனோ கிளிக் செய்யவே முடியவில்லை.

ஹுஸைனம்மா said...

//உங்கள் சென்ற பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட முயன்று முயன்று தோற்றேன். ஏனோ கிளிக் செய்யவே முடியவில்லை. //

அப்படியா.. ஏன்னு தெரியலியே.. ஆனால், எனக்கும் வேறு சிலரின் பதிவுகளைத் திறக்கமுடியாமலிருந்தது.

Admin said...

நல்ல பதிவு...

சமீரா said...

இந்த கண்காட்சி பற்றிய தகவல்கள் என்னக்கு முற்றிலும் புதிது!!
அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க..

கோமதி அரசு said...

நல்ல பதிவு.
அடுத்தபதிவுக்கு காத்து இருக்கிறேன்.

ஸாதிகா said...

ிது வரை அறிந்திராத கண்காட்சி.அரியத்தந்தமைக்கு நன்றி.//இதற்கு தீர்வு - மாற்று என்ன?// அறிய வெகு ஆவல்.

வல்லிசிம்ஹன் said...

சோலார் சாக்தி கொஞ்சம் விலை குறைந்தால் இங்க கூடப் போட ஆசை.
அசை போட வைத்துவிட்டது உங்கள் பதிவு. அடுத்த பதிவுக்கு வெயிட்டுங்கு.

சிராஜ் said...

//ஸோ, ஒன்லி “புத்தி கொள்முதல்”!!//

கொள்முதல் நல்லபடி இருந்துச்சா?? இல்ல வழக்கம் போல???... ஹி..ஹி..ஹி

நிலாமகள் said...

மின் தடைக்கு ஒரு மாற்று கிடைத்ததென மகிழ்ந்தால் ... அதிலுமொரு 'ஆனால்'?!

மன்சி (Munsi) said...

சோலார் பனலின் efficiency ரொம்பவே குறைவு. காற்றாலையுடையதும் கூட. ஆனாலும், காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு சோலாரை விட நல்லது. புது புது டெக்னிக்கை கண்டுபிடிப்பதை விட, சில கடுமையான சட்டங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். பாடசாலை , அலுவலகம் போகும் நேரங்களில் கண்டிப்பாக தனிப்பட்ட வாகனங்களைப் பாவிக்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிக்கப் பண்ணும் பேரூந்துக்களை அறிமுகப்படுத்தலாம். பேரூந்தில் கண்டிப்பாக நின்று போகக் கூடாது. காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் மக்கள் பேருந்துக்களை உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள். போக்குவரத்தும் இலகுவாகும்.

குறிப்பிட்ட அளவை விட மின்சாரம் பாவித்தால் மின்சாரத்தை கட் பண்ணிவிட வேண்டும். எனக்குத் தெரிந்த நடுத்தர பணக்காரர்கள் வீட்டில் கூட மனிதர்கள் இல்லை என்றாலும் ஏர்கொன் ஓடிக்கொண்டு இருக்கும். வீட்டினுள் போகும் போது குளிர்மையாக இருக்க வேண்டும் என்பார்கள். சிலருக்கு ஏர்கொன்னை போட்டுக்கொண்டு தடித்த கம்பளியால் மூடிக் கொண்டு படுக்க வேண்டும். சுவட்டர் / ஜாக்கெட் போட்டு, கம்பளியால் மூடிக்கொண்டு படுப்பதற்கு, ஏர்க்கோன் போடாமல் படுக்கலாமே. எனது நண்பர்கள் வட்டாரத்தில் கூட இப்படியான முட்டாள்கள் இருக்கிறார்கள். மின்கட்டணம் இந்திய பணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கூட வரும்.

புகை கக்கும் வாகனங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் பறிமுதல் செய்ய வேண்டும்.

விலை அதிகம் என்றாலும் சென்சரில் இயங்கும் மின்னியக்கி படிகளை வைப்பது நல்லது. அதுவே ஓடிக்கொண்டிருப்பதால் வீண் செலவு.

விசாலமான தரமான நடை பாதையும் சைக்கிள் ஓட்டும் பாதையும் அவசியம். பகல் நேரத்தில் எந்தக் காரணம் கொண்டும் கனரக வாகனங்கள் சிட்டிக்குள் வரக்கூடாது. பேரூந்து மட்டுமே பீக் அவரில் ரோட்டில் போக வேண்டும். (மஸ்டார் சிட்டியில் சொந்த வாகனத்திற்கு வரும் தடை மாதிரி தடை வர வேண்டும்)

இவற்றை நாங்கள் செய்வதாலேயே பாதிக்கு மேல் காபனை குறைக்கலாம்.

Biogas biomass போன்றவை renewable எனர்ஜி இல்லை என்பதையும் மக்களும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வுங்க. உங்க பதிவின் மூலம் நாங்களும் பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

pudugaithendral said...

நல்ல பகிர்வு ஹுசைனம்மா,

கொழும்பு போனப்ப எல்லார் வீட்டுக்கூரையில் கறுப்பா ஒரு சிலிண்டர் இருக்கும் என்னான்னு தெரியாது. அப்புறம் தான் தெரிந்தது சோலார் வாட்டர் ஹீட்டர். பயந்தது போல இல்லாம குளிர்காலத்திலயும் சுடுதண்ணி கிடைச்சதை இப்ப நினைச்சு பாக்கறேன்.

நீங்க சொல்லியிருக்கிற சுற்றுசூழல் பாதிப்பு பத்தி இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். தீர்வு ஏதாவது இருக்கும். இல்லாட்டி அங்க எல்லா இடத்துலயும் எப்படி உபயோகிப்பாங்க. தவிர இப்ப தமிழ்நாட்டுலயும் சோலார் பவர் பத்திதான் விளம்பரங்கள் வருது.

தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல்கள்.

//பெரிய அளவில் “சோலார் பார்க்”குகள் வைத்து, மின்சாரம் தயாரித்தால்...?? இதற்கு தீர்வு - மாற்று என்ன?

அடுத்த பதிவில்.... !! //

தீர்வு, மாற்று பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

enrenrum16 said...

//எல்லாரும் குற்றால சீஸன் மாதிரி வருஷா வருஷம் வரும் புத்தகக் காட்சிக்குப் போய் பதிவு எழுதிகிட்டிருக்கீற சீஸன் இது!! // ஆமா.... கொஞ்சம் நிறையவே கடுப்பாத்தான் இருக்கு.....

/உடனே “எட்றா வண்டியை”ன்னு நாங்களும் இங்கே வருஷா வருஷம் வரும் ஒரு “கண்காட்சி”க்குப் போனோம்!! // வேணும்னு கேட்டா வாங்கித்தரப்போறாங்க... அதுக்கு ஏன் மரியாதையில்லாம பேசறீங்க....பாவம்!

/பங்களாதேஷ் நாட்டுப் பள்ளிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. / எத்தனையோ பணம்பறிக்கும் பள்ளிகளிருக்க, இப்பள்ளி முதலிடம் வந்தது பாராட்டிற்குரியது.

/Biogas biomass போன்றவை renewable எனர்ஜி இல்லை// இல்லையாஆஆ???

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றிங்க.

அப்துல் பாஸித் - நன்றி.

சமீரா - ஆர்வமா வாசிச்சதுக்கு நன்றிப்பா. அடுத்த பதிவை ஒரு வழியா எழுதிட்டேன்.

கோமதிக்கா - நன்றிக்கா. அடுத்த பதிவு இன்னிக்கு ரிலீஸாகிடுச்சு!!

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - உங்க ஆவலைத் தீர்க்க பதிவை எழுதிட்டேன், பாருங்கக்கா.

வல்லிமா - ஆமாம், ஆர்வமிருந்தாலும், அதன் விலைதான் எல்லாரையும் மிரள வைக்கிறது.

சிராஜ் - /கொள்முதல் நல்லபடி இருந்துச்சா?? இல்ல வழக்கம் போல??//
வழக்கம்போல நல்லாவே இருந்துது. ஹி..ஹி.. (க்ர்ர்ர்ர்ர்...)

ஹுஸைனம்மா said...

நிலாமகள் - //அதிலுமொரு 'ஆனால்'?!//
ஆமாப்பா, எல்லாத்திலயும் நல்லது கெட்டது கலந்தே இருக்கில்லியா, அதனாலத்தான் “ஆனால்”!!

கோவை2தில்லி - நல்லாருக்காங்க பதிவு? டெக்னிக்கல் விஷயங்கள் எழுதினா வாசிப்பாங்களோன்னு தயக்கமா இருந்துது.

ஹுஸைனம்மா said...

மன்சி - நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிங்க.
//புது புது டெக்னிக்கை கண்டுபிடிப்பதை விட, சில கடுமையான சட்டங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். //
ரொம்பச் சரிங்க. இதைப் பின்பற்றினாலே, மின் உற்பத்தியில் சுலபமாக தன்னிறைவு அடைந்துவிடலாம்.

//மின்கட்டணம் இந்திய பணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கூட வரும். //
எனக்குத் தெரிஞ்சும் நிறைய பேர் இப்படி இருக்காங்க. நாம ஏதாவது சொன்னா, நம்பளைத்தான் ஏளனமாப் பாப்பாங்க.

//Biogas biomass போன்றவை renewable எனர்ஜி இல்லை//
புதிய தகவல். நான் பார்த்தவரையில் இதையும் renewable என்றே குறிப்பிடுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Renewable_energy#Biomass
http://www.biogas-renewable-energy.info/

சூரிய ஒளி, காற்று போல இயற்கையான உற்பத்தி இல்லை என்பதால் இதை “புதுப்பிக்கக்கூடிய சக்தி” வரிசையில் சேர்க்க முடியாதென்கிறீர்களோ? இருக்கலாம்.

எனினும், மனிதர்கள் உள்ளவரை குப்பை என்பது இருந்து கொண்டேதானே இருக்கும். அந்த வகையில் இதுவும். :-)))

ஹுஸைனம்மா said...

தென்றல் - //இப்ப தமிழ்நாட்டுலயும் சோலார் பவர் பத்திதான் விளம்பரங்கள் வருது.//
உலகத்தில் மற்ற நாடுகள், வழக்கமான சோலார் பேனலின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டு, அதை நிவர்த்தி செய்ய அடுத்த முறையை நாடுகிறார்கள். நாம இப்பத்தான் முதல் முறையையே பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கிறோம்!! :-((

ராம்விக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - //அதுக்கு ஏன் மரியாதையில்லாம பேசறீங்க....பாவம்!//
ம்க்கும்.. பேசிட்டாலும்.. எல்லாம் இங்க சொல்லிப் பாத்துக்கிறதுதான். :-((

///Biogas biomass போன்றவை renewable எனர்ஜி இல்லை// இல்லையாஆஆ??? //

அதை ஏன் இவ்வளவு அதிர்ச்சியா கேக்குறீங்க? அப்படிச் சொல்லி பிஸினஸ் பிராஜக்ட் எதும் அக்ரிமெண்ட் போட்டுட்டீங்களா?:-))))

மேலே விளக்கம் இருக்கு, பாத்துக்கோங்க.

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமையான பதிவு

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமையான பதிவு

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமையான பதிவு

மாதேவி said...

நல்ல பகிர்வு.

Kanchana Radhakrishnan said...

நல்லதொரு பகிர்வு.