Pages

நான் சமையல் குறிப்பு எழுதினால்...

(தலைப்பைக் கண்டு டெரராகிவிட வேண்டாம். நான் பதிவுலகத்துக்கு வரும்போதே செய்த சத்தியங்களில் ஒன்று, சமையல் குறிப்பு எழுதமாட்டேங்கிறதும்!!)

என்னவரின் நெருங்கிய நண்பர் ஒருவர்.  மனைவி, ஒரு வயசுக் குழந்தையோடு அபுதாபியில் எங்கள் வீட்டருகில் வசித்து வந்தார். வார விடுமுறை நாளான ஒரு வெள்ளிக்கிழமை மதிய ஜும் ஆ தொழுததும் வீட்டுக்குப் போகாமல் நேரே எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒருமணிநேரம்போல பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். சாப்பிடச் சொல்லியும் சாப்பிடவில்லை. (ஹலோ, என் சமையலுக்கு  பயந்தெல்லாம் இல்லை). இது அன்றுமட்டுமில்லாமல், வாராவாரம் வெள்ளிதோறும் அப்படியே தொடர்ந்தது.

எங்களுக்கோ ஒரே புதிராக இருந்தது. நேரே வீட்டுக்கும் போகாமல், எவ்வளவு வற்புறுத்தினாலும் இங்கேயும் சாப்பிடாமல், அதுவும் எல்லா வெள்ளியும் இப்படி சும்மா வந்துட்டுப்  போறாரேன்னு. என்ன காரணம்னு கேட்டாலும் சும்மா பேசிட்டுப் போலாம்னுதாங்க வர்றேன்னு சொன்னார். இப்படியே சிலபல வாரங்கள் போச்சு. நான் அவரிடம் ஒருநாள் நீங்க நேரத்தோட வீட்டுக்குப் போனா உங்களைச் சமைக்க விட்டுடுவாங்கன்னுதானே இங்க வர்றீங்கன்னு கிண்டல் பண்ணேன். அவ்வளவுதான் பொங்கி எழுந்துட்டார்!!

“அட, சமைக்கச் சொன்னாகூடப் பரவால்லைங்க. நல்ல சாப்பாடு சாப்பிடலாமேன்னு செஞ்சுடுவேன். நான் வீட்டுக்குப் போற நேரம், சமையலை முடிச்சிட்டு, கரெக்டா பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கிற டைம். நான் போனவுடனே, பையன் சாப்பிடணும்; அவனுக்கு வெளாட்டு காமிங்கன்னு என்னை சர்க்கஸ் பஃபூன் ரேஞ்சுக்கு ஆக்கிடறாங்க.  ஆடுறா ராமான்னு குச்சி எடுக்காத குறைதான்”னு புலம்பித் தள்ளிட்டார் போங்க!!

இந்தக் கதை எதுக்குன்னா: “ரொம்ப நாளா  உன் பிளாக்ல ஆப்பம் பதிவே இருக்குது. வேற எழுதலையா?”ன்னு கேட்டுகிட்டிருந்தார் ரங்க்ஸ். ரெண்டுமூணு தரம் கேட்டதும் “அதுவா, எழுதுற மாதிரி வீட்டுல நீங்க எந்த ‘பஞ்ச் டயலாக்’கும் சொல்லலியே, அதான்”னு சும்மா அடிச்சுவிட்டேன். உடனே மேலே சொன்ன மாதிரியே புலம்ப ஆரம்பிச்சுட்டார்.  உடனே “அட, என்னங்க நீங்க, நான் பிளாக் எழுதுறதுக்கு ஆதாரசுருதியே நீங்கதான்னு மறைமுகமாச் சொன்னா, புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே?”னு ஐஸ் வச்சேன். (வேற வழி?)

நம்பிட்டார். (அவருக்கும் வே.வ?)  “சரி, சரி, என்னவானாலும் சமையல் குறிப்பு மட்டும் எழுதிடாதே”ன்னதும், பெரியவன் “ஏன் வாப்பா?”ன்னான். “உங்கம்மா சமையல் குறிப்பு எழுதினா எப்படிருக்கும்னு சொல்லவா?”

”முதலில்  தேவையான பொருட்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு, வீட்டில் இல்லாதவற்றை ரங்கமணியை அனுப்பி உடனே வாங்கிவரப் பணிக்கவும். பின்னர், அதில் உள்ள வெங்காயம், காய்கறிகளை சுத்தம் செய்து, வெட்டும் பொறுப்பை ரங்கமணியிடம் கொடு்க்கவும். மல்லி, புதினா, கருவேப்பிலையை பிள்ளைகளிடம் கொடுத்துச் சுத்தம் செய்யச் சொல்லவும். மட்டன், சிக்கன் போன்றவை இருந்தால் அதைக் கொழுப்பு நீக்கிச் சுத்தம்செய்கிறேன் பேர்வழி என்று விலைவாசியை நினைக்காமல் ஒரு கிலோ மட்டனை அரைகிலோவாக்கி, ரங்கமணியின் பி.பி.யை எகிற வைக்கவும்.

பின்னர், அடுப்பில் எல்லாவற்றையும் ஒரு குத்துமதிப்பாகக் போட்டு வைத்துவிட்டு, உப்பு, காரம், புளியை ரங்கமணியிடம் சரிபார்க்கச் சொல்லவும். இதுமிக முக்கியம்; அப்போத்தான் "end product" எப்படியிருந்தாலும் ரங்கமணியின்மீது “நீங்கதானே காரம் சரியாருக்கான்னு பாத்தீங்க; அப்பவே சொல்லிருக்கலாம்ல?”னு பழிபோட முடியும்.

பிறகு, அது வேகும்நேரத்தில் அஞ்சாறு பிளாக் பார்த்து, பின்னூட்டங்கள் இடவும். இடையிடையே ரங்கமணியிடம் அடுப்பிலுள்ளதைக் கிண்டிவிடச் சொல்ல மறக்கவேண்டாம். (இதுவும் ப.போ. உதவும்).

எல்லாம் முடிந்த பிறகு, சமையல் மேடை, அடுப்பு மற்றும் பாத்திரங்களை ரங்கமணி மற்றும் பிள்ளைகளின் உதவியோடு கழுவவும் (அதாவது மேற்பார்வை செய்யவும்).”

கேட்டுக்கொண்டிருந்தவன், “எல்லாம் சரி. ஆனா முக்கியமான ஒண்ணை மறந்துட்டீங்களே?”ன்னான். என்னவாம்? “என்ன ஐட்டம் செய்யறதுன்னே சொல்லலியே?”

” அதானா? முதலில் லேப்டாப்பைத் திறந்து,  நீங்கள் செய்ய விரும்பும் உணவு பதார்த்தத்தின் பெயரை கூகிளில் டைப் செய்யவும். வரும் பக்கங்களில் கலர்ப் படங்களோடு அழகாக இருக்கும் ஒன்றைத் தேர்ந்துகொள்ளவும். அவ்வளவுதான்!”

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த நான் கொதிச்சு, பொங்கியெழுந்து “என் சமையலையா கிண்டல் பண்றீங்க? இனி நான் சமைக்கவே மாட்டேன்”னு வேலைநிறுத்தம் செஞ்சுருப்பேன்னுதானே நினைக்கிறீங்க? நோ, நோ. நான் சொன்னது என்னன்னா, “ இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான்.   வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!”


 

Post Comment

46 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மிகப்பயனுள்ள குறிப்பு ஹுசைனம்மா.. இந்த குறிப்பிற்காக உதவிய உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. ஏன்னா வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற இந்த நிலையை உணர்த்தியதற்கு.. :))

படிக்கப்போறவங்களை மனசுல வச்சி எழுதப்படும் எந்தப்பதிவும் தன் உயர்ந்த தரத்தை இழப்பதில்லை.:)

ஹுஸைனம்மா said...

முத்தக்கா, பின் நவீன/ இலக்கிய பாணியில பின்னூட்டம் எழுதிருக்கீங்கபோல? எனக்கு இன்னும் குழப்பமாவே இருக்கு, பாராட்டுறீங்களா இல்லை... :-))))))

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹுஸைனம்மா! 'காமெடி சமையல் குறிப்பு' தந்து நல்லா சிரிக்க வச்சதுக்கு நன்றிகள்! உங்களுக்கல்ல, உங்க ரங்க்ஸுக்கு :)) //இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான்// அப்போ.. இத்தனை நாளா...??!!!

தமிழ்வாசி - Prakash said...

நச்சுன்னு ஒரு பதிவு.. அருமை

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

Gopi Ramamoorthy said...

மிக அருமையான சமையல் குறிப்பு. குறிப்பாக அந்தப் படங்கள் எல்லாம் மிக அருமை. இவ்வளவு சமைக்கவும், சமையல் செய்யும்போதே அதைப் படமெடுத்துப் போடும் சம்யோஜிதமும், அதைப் பதிவிலேற்றும் பொறுமையும் யாருக்கு வரும்?

இது முன்னவீனதுவப் பின்னூட்டம்:-)

ராமலக்ஷ்மி said...

நான் சமையலில் புலி இல்லை. அதற்காகப் பூனையும் இல்லை. உங்களைப் போன்றதொரு சபதத்துடன் நுழைந்து, பிறகு தினமணி தீபாவளி மலருக்காக தளர்த்திக் கொண்டேன். அட்டகாசமான குறிப்பை வழங்கியிருக்கிறீர்கள்! வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் இல்லைங்க:))!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சமையல் குறிப்பு!

வித்யா said...

ப.போ டிப்ஸ் அருமை. முயற்சித்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

பதிவு மதியான சாப்பாட்டுக்கும் இரவு உணவுக்கும் நடுவில் ஸ்நேக்ஸ் சாப்பிட்டாற்போல இருந்தது.

மோகன் குமார் said...

சமையல் நடுவிலே பின்னூட்டம் போடற மாதிரி சொன்னது நைஸ். ஆனாலும் நீங்க அவங்களுக்கு இப்படி ஒரு பணிஸ்மென்ட் தந்திருக்க வேணாம்

நட்புடன் ஜமால் said...

எம்பூட்டு நல்லவருங்க அவரு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமையான சமையல் குறிப்பு.

ஸாதிகா said...

ஹ்ம்ம்ம்..என்னத்தை சொல்ல...

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

அமைதிச்சாரல் said...

அருமையான சமையல்குறிப்பு ஹுஸைனம்மா;-)

ஹேமா said...

ஹுசைனா...அட...இப்பிடியெல்லாம் உதவியோட சமைக்கிறீங்களே.நான் பாவம் !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கே இப்புடி சமைக்கறது? :))

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்றி.. நிறைய பேரு இத விரும்புவாங்க பாருங்க.. :)

angelin said...

"வரும்போதே செய்த சத்தியங்களில் ஒன்று, சமையல் குறிப்பு எழுதமாட்டேங்கிறதும்!"
same pinch

எல் கே said...

என் தங்கமணி எவ்வளவோ பரவாயில்லை. இந்த மாதிரி என்னை பண்றது இல்லை # நிம்மதி பெருமூச்சு

Avargal Unmaigal said...

///வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!” ////

எனக்கு ஒரு குருவி வந்து சொன்னது ஹாஸ்பிட்டல் விஸிட் ஆரம்பிச்சாசுன்னு? அது உண்மைதானா மேடம்?????

பதிவு மிகவும் அருமை

R. பெஞ்சமின் பொன்னையா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படிக்கு தராசு

இராஜராஜேஸ்வரி said...

பின்பற்ற வேண்டிய அருமையான ச்மையலைத்தவிர மற்ற குறிப்புகள்.
பாராட்டுக்கள்.

கோவை2தில்லி said...

சமையல்குறிப்பு நல்லாயிருக்கே!

Jaleela Kamal said...

இது வரை சமையல் வேளை ஏவினதே இல்லை

ஒரு டென்ஷனான தமாச சொல்லி தான் ஆகனும் ஹுசைனாம்மா

இப்ப தேர்வுக்கு விழுந்து விழுந்து ப்படிபப்தால் மாலை டீ பிஸ்கேட் பையனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு கிளம்புவதே சரிஅய இருக்கு மதிய்ம்

கெட்டிலில் போட சொல்லி தரேன் நீயேபோட்டுக்க்கோன்னே
சரி ஆபிஸ் போனதும் போன் பண்ண சொன்னேன் போட்டு குடித்துட்டு ரொம்ப சூப்பரா டீ போட்டுட்டேன்வாஙக் உங்களுகும் போட்டு தரேன்

நானும் அப்பாடா இனி அவசரத்து டீ கவலை இல்லைன்னு போய்
போனதும் ரூமில் மற்ற துணி மடிக்கும் வேலை, அவன் டீ போட்டு தரவா, சரி கொடு,போய் போட்டுட்டு வந்துட்டான், பாதியில ஆற்டும் சீக்கிறம் போய் குடிங்க்,
அப்பரம் போறேனே
இப்ப போய் பாருஙக் அது எப்படி இருக்குன்னு

சரி போய் பார்த்தா, என்னன்னு சொல்வது

கெட்டில் சூடானதும் அதில் அப்படியே ரெயின் போ மில்க ஊற்றி , அதிலேயே சர்க்கரை,அதிலேஎயே ஒரு பேகையும் போட்டு ,ம்ம் பீபீ ரொம்ப வே ஏறிடுச்சு,
அப்பரம் என்ன நடந்து இருக்கும்..
என்ன மடா குடிகாரின்னு நினைச்சிட்டான் போல.

vanathy said...

ஊர் கூடி தேர் இழுப்பது போல எல்லோரும் சேர்ந்து சமைக்கிறீங்க. வெரி குட்.

அம்பிகா said...

\\ஹுஸைனம்மா said...
முத்தக்கா, பின் நவீன/ இலக்கிய பாணியில பின்னூட்டம் எழுதிருக்கீங்கபோல? எனக்கு இன்னும் குழப்பமாவே இருக்கு, பாராட்டுறீங்களா இல்லை... :-))))))\\
அதானே!
ஹூஸைனம்மா, உங்கள் சமையல்குறிப்பு ஏ.ஒன். நானும் ட்ரை பண்ணிப் பாத்துட்டு, எப்படியிருந்தது னு சொல்றேன்.( வீட்ல நெட், ப்லாக் எல்லாம் இருந்தால்.)

கோமதி அரசு said...

//நீங்கதானே காரம் சரியாருக்கான்னு பாத்தீங்க; அப்பவே சொல்லிருக்கலாம்ல?”னு பழிபோட முடியும்.//

நல்லா இருக்கு இது.


சமையல் குறிப்பு நல்லா இருக்கு.

Chitra said...

”முதலில் தேவையான பொருட்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு, வீட்டில் இல்லாதவற்றை ரங்கமணியை அனுப்பி உடனே வாங்கிவரப் பணிக்கவும். பின்னர், அதில் உள்ள வெங்காயம், காய்கறிகளை சுத்தம் செய்து, வெட்டும் பொறுப்பை ரங்கமணியிடம் கொடு்க்கவும். மல்லி, புதினா, கருவேப்பிலையை பிள்ளைகளிடம் கொடுத்துச் சுத்தம் செய்யச் சொல்லவும். மட்டன், சிக்கன் போன்றவை இருந்தால் அதைக் கொழுப்பு நீக்கிச் சுத்தம்செய்கிறேன் பேர்வழி என்று விலைவாசியை நினைக்காமல் ஒரு கிலோ மட்டனை அரைகிலோவாக்கி, ரங்கமணியின் பி.பி.யை எகிற வைக்கவும்.


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சிரிச்சு மாளலை! hilarious post!

Geetha6 said...

பாவமாக இருக்கு ங்க உங்க வீட்ல உள்ளவர்களை நினைச்சு !!
ஹாப்பி உமென்ஸ் டே .

எம் அப்துல் காதர் said...

//“இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான். வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!” //

அவ்வ்வ்வ்..இப்படியெல்லாம் கூட திடீர்னு முடிவை மாத்திக்கிவீங்களா?? ஹுசைனம்மா,, வீட்ல யாரும் அழ ஆரம்பிக்கலையே??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னுடைய கமெண்ட் பாராட்டுத்தான் . பாராட்டுத்தான் பாராட்டுமட்டும் தான்..:)
ஒரு சமையல் குறிப்பின் வெற்றி அத உடனே செய்துபாக்கனும்ன்னு தூண்டுவது தானே..

enrenrum16 said...

உங்க ட்ரீட்மென்ட் நல்லாருக்கு..இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க...;)

பாரத்... பாரதி... said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

அன்னு said...

பாஸ் எப்ப பதிவுலகத்துக்கு வர்றாரு? லைவ் தங்கமணி ரங்கமணி ஷோ பாக்கலாமேன்னுதேன் கேக்கறேன்.. ஹெ ஹெ ஹெ...

ஆனாலும் ஹுஸைனம்மா, உங்க பாடு பாவம்தேன், உங்க தரப்புல பேச யாருமே இல்லியா?? :))))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல நகைச்சுவைக் குறிப்பு.

புதுகைத் தென்றல் said...

சைலண்ட்டா ஹஸ்பண்டாலஜி பேராசிரியை ஆகிகிட்டே வர்றீங்க.

பாராட்டுக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//. இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான் வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!” //

இவ்வளவு பெரிய தண்டனையா? :-)

மாதேவி said...

ஹய்...)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஒட்டுமொத்த தங்கமணிகளின் தலைவி சகோதரி ஹுஸைனம்மாவை பாராட்டுகிறேன்.

அப்புறம் அந்த சமையல் குறிப்பு சூப்பர். என்ன ஒரு பெரிய விஷயம்னா நீங்க சொன்ன சமையல் குறிப்பு எல்லா சமையலுக்கும் பொருந்தும்.

எந்த சமையல் கொம்பனாலையும் இப்படி(?) ஒரு சமையல் குறிப்ப சொல்ல் முடியாதுன்னா பாத்துக்கங்களேன்.

ரிஷபன் said...

கோவத்துல கூட உங்க நகைச்சுவை போகலியே.. ஆஹா..

ஜிஜி said...

ரொம்ப நல்ல சமையல்குறிப்புங்க. கண்டிப்பா செஞ்சு பார்க்கணும்

ஹுஸைனம்மா said...

என் முதல் (& கடைசி) சமையல் குறிப்பைப் படித்து, பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. முத்தக்கா, இதை வழிமொழிந்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்!!

புதுகைத் தென்றல் - ஹஸ்பெண்டாலஜி ப்ரொஃபசர்!! சகவாச தோஷமா இருக்குமோ? ;-)))))))

அஸ்மாக்கா - சில ரகசியங்கள் ரகசியங்களாவே இருக்கதுதான் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது!! :-))))

அப்பாவி தங்கமணி said...

//அட, என்னங்க நீங்க, நான் பிளாக் எழுதுறதுக்கு ஆதாரசுருதியே நீங்கதான்னு மறைமுகமாச் சொன்னா, புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே?”னு ஐஸ் வச்சேன். (வேற வழி?)//
நம்மள நம்பறதுக்கு ஆள் இருக்கற வரை நம்ம வண்டி இப்படியே ஓடும்...சூப்பர்...:))))

//வீட்டில் இல்லாதவற்றை ரங்கமணியை அனுப்பி உடனே வாங்கிவரப் பணிக்கவும்//
அட அட...என்ன ஒரு புரிதல்...என்ன ஒரு புரிதல்...:)))

//ரங்கமணியின் பி.பி.யை எகிற வைக்கவும்//
செம....சிரிச்சு சிரிச்சு....ஹா ஹா ஹா...:))

//அப்போத்தான் "end product" எப்படியிருந்தாலும் ரங்கமணியின்மீது “நீங்கதானே காரம் சரியாருக்கான்னு பாத்தீங்க; அப்பவே சொல்லிருக்கலாம்ல?”னு பழிபோட முடியும்//
ஆஹா...அப்படியே எங்க வீட்டு காட்சிய படம் புடிச்சு காட்டின மாதிரி இருக்கே...ஹா ஹா ஹா...:))

//இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான். வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்//
அண்ணா மற்றும் பிள்ளைகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..:))
(அட...இப்படி கூட பழி வாங்கலாமா? சூப்பர் டிப்ஸ் அக்கா...நோடேட்....:)))

நானானி said...

your comedy recipe super!!
allowing the whole family into the kitchen as helpers, the area become 'kanthrakolam!!'

enjoyed the scene!!!

Anonymous said...

//“ இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான். வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!” //

கண்ணில தண்ணி வரும் வரை சிரிச்சேன்.

Kanmani Rajan said...

:) நல்லா நகைச்சுவையா எழுதறிங்க :) இனி அடிக்கடி உங்க தளம் வருவேன், மனசார சிரிக்க! :) :)