Pages

சங்கு சுட்டாலும்..


”அல்ஹம்துலில்லாஹ், என் பிள்ளைகள் எல்லாரின் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன். நம் வீட்டு விசேஷம் ஒவ்வொன்றிலும் என்னிடம் பிரச்னை செய்தவர்களை இனி பார்த்துக் கொள்கிறேன்!!” என் கடைசி தங்கையின் கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் இப்படிச் சொன்ன என் வாப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.  என் வாப்பாவோடு பழகியிருந்தால் நீங்களும் அப்படித்தான் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்.

நான்கு மகள்கள், மூன்று தங்கைகள்,  வயதான பெற்றோர், மனைவி இவர்களோடு, முதுகுத்தண்டில் மேஜர் ஆபரேஷன்கள் காரணமாக மாதக்கணக்கில் படுக்கையில் இருந்துப் பிழைத்து, பரம்பரை சொத்து என்று எதுவுமில்லாத  ஆனால்  குடும்பப் பொறுப்பு முழுதும் தலையில் ஏற்றுள்ள ஒரு ஆண் என்ன நினைப்பார்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தங்கைகளையும், மகள்களையும் கட்டிக் கொடுத்துக் கடமையைக் கழிக்க வேண்டும் என்றுதானே?

பெண்கல்வி என்பது அர்த்தமில்லாத வார்த்தையாகிவிட்ட இந்நாளில், அரிதாக மிகச்சில இடங்களைத் தவிர, ஆண், பெண் வித்தியாசமில்லாமல் எல்லாருமே படிக்கிறார்கள் இன்று. ஆனால் 1980களில் கிராமங்களில் பெண்கள் படிப்பது என்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம்தான். அதிலும், தன் உடல்நிலையும் சரியில்லாமல், தன் சம்பாத்தியம் மட்டுமே கொண்டு எல்லாரையும்/ எல்லாவற்றையும் நடத்த வேண்டிய சூழலில், தன் இரண்டு தங்கைகளையும், நான்கு மகள்களையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்ததென்பது ஆச்சர்யமென்ன, அதிசயமேதான் அப்போ.

உறவினர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளைத்  தான் தாங்கிக் கொண்டு,  எங்களை அந்த வீச்சுக்கள் எதுவும் அண்டாதவாறு காத்தவர் என் தந்தை. அதே சமயம், “பெண்பிள்ளைகளை நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறேன் பாத்தீங்களா” என்று எந்த பெருமைவார்த்தைகளும் சொல்லியதில்லை ஒருபோதும். அதுவே ஊக்கமாகி,  நாங்கள் ஆறு பேரும் பட்டங்கள் பெற்றோம். எங்கள் ஊரின் மூன்றாவது பெண் பொறியியல் பட்டதாரி எங்கள் குடும்பத்திலிருந்து என்பதிலிருந்தே பெண்கல்வி அந்நாட்களில் எந்த அளவில் இருந்தது என்பது புரியும். ஏன்,  வியாபாரப் பிண்ணனி கொண்ட குடும்பத்தில் வந்ததால், படிப்பதற்கு என் வாப்பாவும் இதே அளவு போராட வேண்டியிருந்தது.  ஸ்காலர்ஷிப் புண்ணியத்தில், என் வாப்பாவும் ஊரின்  முதல் பத்து இஞ்சினியர்களில் ஒருவரானார்.

ஆண் குழந்தைகளும் உடைய என் தந்தையின் நண்பர்களெல்லாம், மகன்களைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்துவிட்டு, மகள்களைப் பள்ளிப் படிப்புகூட முடிக்காமல் திருமணம் செய்து கொடுத்து கடமையை நிறைவேற்றியதாய் நிம்மதிப் பெருமூச்சுவிட, தனியொரு ஆளாய் எல்லா பாரத்தையும் சுமந்து நின்றார் என் வாப்பா.


நான் 12ம் வகுப்பு படிக்கும்போது, தோழிகளோடு அடுத்தது என்ன படிப்பது என்று அரட்டை நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் அப்போதைய கனவான இஞ்சினியர், டாக்டர் படிப்பைச் சொல்லிக்கொண்டிருக்க, நல்லா படிக்கக்கூடிய ஒரு தோழி, ”எங்கம்மாப்பா, நீ சம்பாரிச்சு எங்களுக்காத் தரப்போறே; அதனால வெறும் பி.ஏ. இல்ல பி.எஸ்ஸி. படி போதும்னு சொல்லிட்டாங்க” என்றபோது எனக்கு அவளிடம் ஏற்பட்ட பரிதாபத்தைவிட, என் தந்தையிடம் ஏற்பட்ட ஆச்சர்யம்தான் அதிகம்.


அதுமட்டுமல்ல, ஆண்மக்கள் இல்லை என்பதால், பொம்பளப்புள்ளயள படிக்கவச்சு காசைக் கரியாக்கிட்டு, கடைசி காலத்துல அதுககிட்டத்தான் கையேந்தப் போறார் என்ற எதிர்பார்ப்போடு இருந்த பலரின் எண்ணத்திலும் மண்ணைத் தூவி, இறையருளால், இன்றும் தன்னிறைவோடு வாழுகின்றார். (இதற்கு என் தாயின் சிக்கனமும்கூட காரணம்). ஆண்மக்கள் பெற்றதற்காக பெருமையுற்றவர்கள் பலர் இன்று மகன்கள் அனுப்பும்  பணத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

படித்துமுடித்து என் வாப்பாவோடு அமீரகத்தில் இருந்த போது,  நண்பரொருவர் என்னிடம் காஷ்மீர் பற்றி பேசும்போது, தவறான தகவல்கள் தந்து குற்றம் சாட்ட, என் வாப்பாவிடம் நானும் ஏன் இப்படி என்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். சில மாதங்கள் கழித்து, "Plebiscite" என்ற கவர்ஸ்டோரியுடன் வந்த இந்தியா டுடே பத்திரிகை அந்நண்பரின் விஷமத்தனத்தை விளக்கியது. அன்று என் வாப்பா விளக்கியிருந்தால்கூட ஒருசார்பாகப் பேசுவதாக நினைத்திருப்பேனோ என்னவோ.

நெருங்கிய உறவுகளில் சிலர் அவ்வப்போது ஏதாவது பிரச்னை கிளப்பி, அங்கேயிங்கே சென்று அவதூறு பேசிக்கொண்டு இருந்தாலும் அதைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டார். வாப்பாவிடம் நீங்க ஏன் எதிர்க்காம இருக்கீங்க என்று கேட்டாலும், இதையெல்லாம் கண்டும்காணாம விட்டுர்றதுதான் நல்லது; பெரிசா எடுத்தா நம்ம நிம்மதிதான் கெடும்; அதுதான் அவங்க எதிர்பார்ப்பு என்று சொல்லி, "Ignorance is the best policy" என்று கற்பித்தவர். சிலர்,  சரியாக எங்கள் நால்வரின் திருமணங்களின்போதெல்லாம் பிரச்னையை உண்டாக்கி, வரமாட்டேன் என்று முறைத்துக் கொண்டு நிற்கும்போதெல்லாம், எதுவுமே நடக்காததுபோல, சென்று அழைத்துவிட்டு வருவார். அவர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி வருவார்கள்.

அப்படிப்பட்ட என் வாப்பாவிடமிருந்து அவ்வார்த்தைகள் வந்தபோதுதான் எனக்கு ஆச்சர்யம் வந்தது. சரி, சாது மிரண்டால் கதையாக, என் வாப்பாவும் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். சில நாட்கள்முன், அவ்விதம் பிரச்னை செய்வதையே வழக்கமாகக் கொண்ட ஒருவரின் வீட்டு நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை தம்பதி சமேதராக முன்னின்று நடத்திக் கொடுத்துவிட்டு வந்திருக்காங்க!!  இதைத் தோழியிடம் சொல்லியபோது, “இன்னா செய்தாரை..?” என்றாள்.  நான், “மேன்மக்கள் மேன்மக்களே!!” என்றேன்.


Post Comment

41 comments:

அமுதா கிருஷ்ணா said...

மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவர் உங்கள் வாப்பா.7 பெண்களை பார்த்துக் கொள்வது என்றால் நினைத்தாலே பக் என்று இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரியவங்க பெரியவங்களா நடந்துகொள்வதும்.. அதனை சரியாக நீங்க புரிஞ்சுகிட்டதும் ரெண்டுமே பாராட்டுக்குரியது.
எங்களுக்கு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஹுசைனம்மா..

என் வாழ்க்கையே உனக்கொரு பாடம்ன்னு அப்பா சொல்லாம சொல்றார்.

அமைதிச்சாரல் said...

ரொம்பவே பொறுமைதான் உங்க வாப்பாவுக்கு..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மிக நேர்த்தியாக, அதே நேரத்தில் மிக அடக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.

இது எல்லோர் வீட்டிலும் நடக்கூடிய விஷயமாக இருந்தாலும், கண்டு காணாம இருந்திடனும் என்பது நாம் அவர்களுக்கு கொடுக்கின்ற சாட்டையடி.

குடும்பத்தில் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே நிம்மதியோடு வாந்து விடலாம்.

வாப்பா வாழ்க.

அவர்களுக்கு இறைவன் சீறான் உடல் நலத்தை தந்து இன்னும் நல்ல பல காரியங்கள் செய்து ஈருலகிலும் வெற்றி பெற வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹுஸைனம்மா. வீட்டுக்கு வீடு வாசல்படிபோல், எல்லாவற்றிற்கும் பிரச்சனை பண்ணுபவர்களுக்கு தன் நற்குணத்தால் பாடம் கற்பிக்கும் ஜென்ட்டில்மேன்தான் எங்க வாப்பாவும்! ஆனால் அவர்கள் இப்போ இல்லை :( சொந்தங்கள் முதல் அவர்களிடம் பழக்கமானவர்கள் அத்தனை பேரும் இன்றும் வாய்விட்டு அவர்களைப் புகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் பெற்றோர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு ஹுஸைனம்மா.

அப்புறமா உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.

சுவனப்பிரியன் said...

உங்கள் தகப்பனாரின் பெருந்தன்மை பதிவில் பளிச்சிடுகிறது. சிறந்த குடும்ப பதிவை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

பெரியவங்க பெரியவங்க தான்...ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு....

ராமலக்ஷ்மி said...

ரொம்ப அருமையாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா. மேன்மக்கள் என்றைக்கும் மற்றவருக்கு முன் உதாரணம்.

நானானி said...

Nice sharing. vaappaa is really great! and an exampe for everyone.
you are blessed to have a such person as your 'vaappa'.

my humble salute!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெளிவான சிந்தனையும், அதன் அழகான வெளிபாட்டு முறையும் இருக்கிறது. ஒரு வலைச்சகோதரி இருந்து அறிவுரை கூறுவது பொல இருக்கு. பகிற்வுக்கு நன்றி.

Chitra said...

...... Good role model. அருமையான பதிவு. நல்ல கருத்துடன், அழகாக சொல்லி இருக்கீங்க.

கோமதி அரசு said...

பெரியவர்கள் நல்ல முறையில் வாழ்ந்து காட்டினாலே போதும்.

குழந்தைகளுக்கு தனியாக வாழ்க்கை பாடம் வேண்டாம்.

நல்ல பதிவு ஹீஸைனம்மா.

சிநேகிதி said...

அஸ்ஸலலமு அலைக்கும் உங்கள் வீட்டு கதை தான் எங்கள் வீட்டிலும் நாங்க 4 பொண்ணுங்க...

பொறுப்பான தந்தை உங்கள் வாப்பாவினை பற்றி படிக்கும் பொழுது பெருமையாக இருக்கு ,...

முஹம்மத் ஆஷிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‘எவருக்கு மூன்று பெண்பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பெண்பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்மிதி).

‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

சகோ.ஹுஸைனம்மா,
தகுதிமிக்க தங்கள் தந்தைக்கு மறுமையில் இத்தகைய பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

மனதை தொட்டு சிந்திக்க வைத்த நல்லதொரு பகிர்வு சகோ.

வல்லிசிம்ஹன் said...

மிக அருமையான அப்பா. புத்தியும் , முன்னேற்ற சிந்தனைகளையும் கொண்டவரைத் தந்தையாக அடைந்தது உங்கள் பாக்கியம்.
மிகவும் பெருமையாக இருக்கிறது ஹுசைனம்மா. அவருக்க் என் வணக்கங்கள்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு ஹுஸைனம்மா. மிக அருமையானதொரு பகிர்வு (பாடம்!)

அன்னு said...

மாஷா அல்லாஹ். இறைவன் தங்களின் தந்தையின் குறைகள் அனைத்தையும் மன்னித்து அவரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவருக்கு மறுமையில் சுவர்க்கத்தை தந்தருள்வானாக. உங்க வாப்பாவை போலதேன், எங்க தாதாவும்(தந்தையின் தந்தை), எங்க அப்பாவும். எங்க குடும்ப உறவினர்களிலேயே முதன் முதலில் பட்டம் பெற்ற பெண் நானே. அப்ப யோசிக்கலாம் எந்தளவு நம் மக்களிடம் கல்வியின் தேவையறியாமை இருந்ததுன்னு. ஆனாலும் உங்க வாப்பா, நிறையவே பொறுமையும் பொறுப்பும் நிறைந்தவர்தான். I salute!!!!

:))

S.Menaga said...

எப்பொழுதும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்!!

apsara-illam said...

சலாம் ஹுஸைனம்மா...,தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.
இதை அவசரமாக எழுதுகிறேன்.
பொறுமையாக உங்கள் எழுத்தை படித்து ரசித்து கருத்து தெரிவிக்கின்றேன்.
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

R.Gopi said...

ஆஹா....

ரொம்பவே தன்னம்பிக்கை மிகுந்தவர் உங்கள் வாப்பா என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே...

வாழ்வில் நம் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே நம்மை பல வழிகளில் சாதனை புரிய ஊக்குவிக்கும்.. அந்த வழியில் உங்கள் வாப்பா முடியும் என்று நினைத்ததை முடித்து காட்டியது பாராட்டுக்குறியது...

என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா....

அன்புடன் மலிக்கா said...

தந்தையின் பொருப்பை சரிவர செய்திருக்கிறார்கள்.மாசாஅல்லாஹ்.
எல்லோருகும் வாய்ப்பதில்லை. இதுபோன்ற வாப்பாக்கள் பாக்கியம்.

சந்தோஷமாக இருக்கு ஹுசைனம்மா. அவர்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் நல்லருள்புரிவானாக..

புதுகைத் தென்றல் said...

ரொம்ப அருமையாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா. மேன்மக்கள் என்றைக்கும் மற்றவருக்கு முன் உதாரணம்.//

வழி மொழிகிறேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல விஷயம் ஹூசைனம்மா.. உங்க அப்பா தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திச்சு இருக்காரு..

காஷ்மீர் பத்தி என்ன சொல்லியிருக்கீங்கன்னு புரியல..

சில சமயம் கோபம் வந்தாலும், அதை மறந்துட்டு இப்படி பங்கேற்பது உறவுக்குள்ள நல்லது.. மனசுல வச்சுக்காம போய் வந்திருக்காங்க..

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

பதிவு அருமை!

ஆதி மனிதன் said...

Hats off to your DAD. BTW what is அமீரகம்?

"உழவன்" "Uzhavan" said...

மேன்மக்கள் மேன்மக்கள்தான்..

கோவை2தில்லி said...

மேன்மக்கள் மேன்மக்களே! உங்கள் அப்பா உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நல்ல பகிர்வு.

மனோ சாமிநாதன் said...

உங்கள் தந்தை மேல் பெரு மதிப்பு ஏற்படுகிறது ஹுஸைனம்மா! வெகு சிலருக்குத்தான் இப்படிப்பட்ட தந்தை அமைவார்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர். அதே சமயம், அன்பு மகளால் இப்படி, பலர் முன்னிலையில் உயர்ந்த நிலையில் பாராட்டப்படுவதற்கு அவருக்கும் கொடுத்து வைத்திருக்கிறது! எத்தனை பேருக்கு இப்படி அன்பு மகள்கள் அமைகிறார்கள்?‌

காற்றில் எந்தன் கீதம் said...

my life is my massage அப்பிடின்னு காந்தியடிகள் சொன்னாரு வாழ்த்தும் கட்டினாரு உங்கள் தந்தையும் அப்படியே வாழ்கிறார்... அவர் குழந்தைகளான நீங்களும் அதனால் ஆசிர்வதிக்கபட்டவர்கலகிரீர்கள்.

goma said...

ஒரு லட்சியத்தை ,இலக்காக வைத்து ஓடுபவர்களுக்கு ,மாமலைகூட தூசு..,என்பதை அழகாக உணர்த்தி ,எதற்கு முக்கியத்துவம் தரவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் தந்து, வெற்றி பெற்றிருக்கிறார்,உங்கள் தந்தை.
எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது

நாடோடி said...

//நான், “மேன்மக்கள் மேன்மக்களே!!” //

உண்மைங்க‌...

மாதேவி said...

எல்லோரையும் அநுசரித்துப் போவது உங்கள் வாப்பாவின் பெரும் தன்மை.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

@ஆதி மனிதன், //what is அமீரகம்?//

அது வேற ஒன்னும் இல்லைங்க, UAE என்றழைக்கப்படும் United Arab Emirates ஐ தான் அமீரகம், அதாவது ஐக்கிய அரபு அமீரகம் என்று தமிழில் சொல்லுவார்கள். நமதூரில் துபை என்று மட்டும் சொல்லுவதால் பெரும்பாலானோருக்கு uae என்றே தெரிவதில்லை. எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்கும் போது uae என்று எங்கள் ஊரில் சொன்னால் அது எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள், ஆனால் அபுதாபியில் இருந்தாலும் துபையில் இருக்கிறேன் என்று சொன்னால் அவர்களுக்கு புரிந்து விடும்

Vijisveg Kitchen said...

மேன்மக்கள் என்றைக்கும் மற்றவருக்கு முன் உதாரணம்.

உங்களோடு இந்த கதையை படிக்கும்போது உணமையிலேயே எங்க அப்பாவை தான் நான் நினைத்தேன். என்ன நல்ல மனசு அவங்க எல்லாம் தெய்வம். எங்க குடும்பமும் உங்க குடும்பம் போல் தான். 7 பெண்கள். இரண்டு தங்கைகளும் விடோவோட+பசங்களோட வீட்டுக்கு வந்துட்டாங்க. நினைத்து பாருங்க வீட்டு செலவு+துணிமனி+ எல்லா பெண்களையும் கரையேற்றுவது அம்மா எல்லாத்தையும் சாமளிச்சுடுலாம். சொந்த பந்தம் ஊர் மக்களின் முன் கோபம், கேளி பேச்சு இருக்கே எதற்க்கும் என் அப்பா கண்டுக்கவும் மாட்டார் அதே சமயம் எல்லாவற்றையும் நிறை வேற்றினார். இன்றைக்கும் வயதான காலத்தில் வேலைக்கும் சென்று நல்லா இருக்கார்.
நல்ல பதிவு நல்ல வாப்பா.நீடுழி வாழக்க..

Jaleela Kamal said...

அருமையான அமைதியான பொருப்பான தந்தை, இதே தான் என் வாப்பாவும், தம்பிகளை ,படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்து, அக்கா தஙகைள் ,அவர்களின் மகள்கள், பேத்தி வரை கல்யாணத்துக்கு உதவி, எங்க 5 பேரையும் நல்ல முறையும் கரையேற்றினார்.

அப்பாக்கள் என்றுமே கிரேட் தான் ஹுஸைனாம்மா/

ஹுஸைனம்மா said...

அமுதாக்கா
முத்துலெட்சுமிக்கா
அமைதிச்சாரல்க்கா
அபு நிஹான் - துஆக்களுக்கு நன்றி. (அமீரக விளக்கத்திற்கும் :-)) )
அஸ்மாக்கா (மெயில் வரலையே இன்னும்?)
சுவனப்பிரியன்
கீதா ஆச்சல்
ராமலக்‌ஷ்மிக்கா
நானானி மேடம்
மொஃபிகா
சித்ரா
கோமதிக்கா - சரியாச் சொன்னீங்க.
சிநேகிதி
ஆஷிக் பாய் - இன்ஷா அல்லாஹ், நிச்சயம் சுவர்க்கம்தான் என் பெற்றொருக்கு. அத்தனை துன்பங்களைத் தாங்கியிருக்கிறார்கள். துஆ செய்யுங்கள்.

வல்லி மேடம்
நவாஸ் - நல்லாருக்கீங்களா? அபூர்வமாகிட்டீங்க!! :-))
அன்னு - சமீபத்துல படிச்ச நீங்களே, குடும்பத்தில் முதல் பட்டதாரின்னா!! முஸ்லிம்கள் கல்வியின் அவசியத்தை இப்பத்தான் முழுமையாக அறியத்துவங்கியிருக்கிறார்கள்.
மேனகா
அப்ஸரா
கோபி
மலிக்கா
தென்றல்
எல் போர்ட்
கொச்சு ரவி
ஆதிமனிதன்
உழவன்
கோவை2தில்லி
மனோக்கா - பெற்றோர்கள் பெருமைகுரியவர்களாக இருந்தால், பிள்ளைகளால் பெருமைப்படுத்தப்படுவதில் ஆச்சர்யமில்லையே?
காற்றில் எந்தன் கீதம்
கோமாக்கா
நாடோடி
மாதேவி
விஜி - அட, உங்க வீட்டிலயும் 7 பெண்களா? ஆச்சர்யம்!! கிரேட்தான் உங்கப்பா.
ஜலீலாக்கா

எல்லோருக்கும் ரொம்ப நன்றி. மிகவும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு.

உங்கள் அப்பா வளரும் தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார்கள்.

அப்பாவி தங்கமணி said...

சில இடங்களில் என் அப்பாவை பிரதிபலித்ததாலோ என்னமோ இதுல ரெம்ப மூழ்கிட்டேன்... எங்க வீட்டில் பெண் பிள்ளைகள் மட்டும் தான்... அதுவும் ஒரு காரணமோ என்னமோ...

//“இன்னா செய்தாரை..?” // சூப்பர் அக்கா...:)))

உங்களை என் பதிவுல ஒரு சாட்சி சொல்ல கூப்பிட்டு இருக்கேன் ஒரு எட்டு வந்து பாத்துட்டு போங்களேன் அக்கோய்..:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

migavum perumaiyaay irukkiradhu thozhi

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மைதான் ஹுசைனம்மா. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..:)

நட்புடன் ஜமால் said...

no words to express ...