Pages

புலம்பிக்கவாவது செய்றேன்

தேர்தல் ஜுரம் பத்திகிச்சு!! இருபெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து நம் கண்ணில் ரத்தம் வராத குறைதான்!! போட்டி போட்டுகிட்டு இலவசங்களை அறிவிச்சிருக்காங்க.  அதுசரி, அவங்க காசா என்ன கொள்ளை போகுது? இதை, “ஊரான் வீட்டு நெய்யே, எம்பொண்டாட்டி கையே”ன்னு சொல்லவா, இல்லை “கடைத் தேங்காய வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது”ன்னு சொல்லவா?

ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, “இது விதிமுறைகளை மீறுவதாகாது”ன்னு ரூல்ஸ் பேசுறாங்க.

எது எதுக்கோ பொதுநல கேஸ் போடுற புண்ணியவான்கள் இதுக்காக ஒரு கேஸ் போடக்கூடாதா? (நீ போட்டா என்னன்னு கேட்டுடாதீங்க).

அநேகமா எல்லாப் பதிவர்களுமே இதைக் கண்டித்துத்தான் பதிவு எழுதிருக்காங்க. பதிவர்கள் ஒன்றுசேர்ந்தாவது எதாவது செய்ய முடியுமா?

போன தேர்தல்ல, தி.மு.க. இலவசங்களை அறிவிச்சப்போ, அ.தி.மு.க. அதை எதிர்த்து, “இலவசங்களைத் தந்து ஏழை மக்களின் தன்மானத்தைத் தகர்க்க முனைகிறது தி.மு.க.”ன்னு கோஷம் எழுப்பும்னு நம்ப்ப்ப்பி இருந்தா, அம்மாவும் இலவசங்களை அள்ளித் தெளிச்சாங்க!! இப்ப இலவசங்களால குளிப்பாட்டவே செய்றாங்க ரெண்டு பேரும்!! கேள்வி கேட்க ஆளில்லாமப் போச்சு.

இதுல அங்கங்க சில நாடுகள்ல ஜனநாயகம் வேணும்னு புரட்சி பண்றாங்களாம். அவங்ககிட்ட நம்ம நாட்டு பணநாயகம் பத்தி யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறதைக் கெடுத்துக்க வேணாம்னு சொல்லுங்கப்பா!!

 

Post Comment

38 comments:

மோகன் குமார் said...

ரொம்ப சின்ன புலம்பலா இருக்கே :))

Chitra said...

அநேகமா எல்லாப் பதிவர்களுமே இதைக் கண்டித்துத்தான் பதிவு எழுதிருக்காங்க. பதிவர்கள் ஒன்றுசேர்ந்தாவது எதாவது செய்ய முடியுமா?


......கண்டித்து எழுதுகிற பதிவர்களின் எண்ணிக்கையில், எத்தனை பேர்கள் இந்த தேர்தலில் வோட்டு போட்டு தங்கள் நிலையை வெளிப்படுத்த முடியும்? (பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருப்பதால் சொல்கிறேன்).....ஆனால், இலவசங்களை நம்பி வோட்டு போடும் மக்களின் எண்ணிக்கையை பாருங்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு வருவது தான் முக்கியம். அது வரை, இப்படி கூத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். :-(

Gopi Ramamoorthy said...

\\எது எதுக்கோ பொதுநல கேஸ் போடுற புண்ணியவான்கள் இதுக்காக ஒரு கேஸ் போடக்கூடாதா? (நீ போட்டா என்னன்னு கேட்டுடாதீங்க).\\

http://www.goo​gle.co.in/#q=DMK%2C%​20PMK%20poll%20promi​ses%20are%20bribe%3A​%20Chennai%20advocat​e%20files%20complain​t&hl=en&biw=1280&bih​=709&prmd=ivnsu&um=1​&ie=UTF-8&sa=N&tab=n​w&fp=bf44e86cd8f82e7​9

ஸாதிகா said...

//ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, “இது விதிமுறைகளை மீறுவதாகாது”ன்னு ரூல்ஸ் பேசுறாங்க./ கரெக்டா சொல்லிட்டீங்க ஹுசைனம்மா.இந்த இலவசத்தை நம்பி இளித்துக்கொண்டு ஓட்டுப்போடும் மக்களை சொல்லணும்.இலவச டீவி ஒன்று விறபனைக்கு நானூறு ரூபாய்க்கு வாங்க்வதற்கு நாதி இல்லாமல் விற்பனைக்காக கூவிக்கொண்டு இருப்பதை பார்த்தும் கூட இந்த இலவச அறிவிப்புகள் வெளியாவதை நினைத்தால் வயிறு எரிகின்றது.

Gopi Ramamoorthy said...

முதலில் கொடுத்த லிங்க் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை

http://mangalorean.com/news.php?newstype=local&newsid=228904

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒருவகையில் அவங்களும் இலவசம் சொன்னதும் சரிதான். அதுக்காக ஓட்டு போடறதா இருந்தா மக்களை குழப்பலாமே..:)ஊழலில் ஊரை அடிச்சு உலையில் போடுவதில் ஒத்துமை மாதிரி இதுலயும் இருந்துட்டுபோட்டுமேன்னு..

சரி இலவசத்தை அன்னிக்கே வித்து அடுத்த வாரத்தில் காலி செய்துடுவாங்க.. அனுபவிப்பதுன்னு பார்த்தா நடுத்தர மக்களா இருக்கலாம்..ரெண்டு ரெண்டு வீட்டுக்கு வச்சிட்டு..:(

பயங்கரமா புலம்ப வருது..

தமிழ் உதயம் said...

நல்லா விஷயத்துக்காக நல்லா புலம்பி இருக்கீங்க. நல்ல பதிவு.

kavisiva said...

//ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது.//

இதையெல்லாம் இலவசமா கொடுத்துட்டா அரசியல்வியாதிகளின் பினாமிகளான கல்வித் தந்தைகள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருமானம் என்னாகறது!

தன் வீட்டு ஆண்கள் டாஸ்மாக்கில் இழக்கும் பணமும் மக்களின் வரிப்பணமும்ததன் தான் டிவியாகவும் இலவசங்களாகவும் அவங்க வீட்டுகு வருதுன்னு என்னிக்கு மக்கள் புரிஞ்சுக்கறாங்களோ அன்னிக்குத்தான் இப்படி இலவசங்கள் என்னும் பொறி வைத்து ஓட்டு வேட்டை நடத்துவதை இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிங்க விடுவானுங்க. அது வரைக்கும் பொறிக்குள் மாட்டிய எலியின் நிலைமைதான் அப்பாவி பொது ஜனங்களுக்கு :(.

அரசியல்பதிவு போடக்கூடாதுனு ஜெய்லானி மிரட்டியதுல என் ஆதங்கத்தை எப்படி கொட்டறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன். நன்றி ஹுசைனம்மா! உங்க புண்ணியத்துல கொஞ்சமாவது கொட்டி ஆசுவாசப் படுத்திக்கிட்டேன் :).

ஜெய்லானி said...

தமிழனை இன்னும் பிச்சைகாரனாய் மாத்த இதை விட வேர என்ன இருக்கு ..!! வயலில் வேலை செய்ய (விவசாயம் செய்ய )ஆளே இல்லை. இதுல கேபிள் ஃபிரீயா தரப் போறாங்களாம் .

இது எங்கே போய் முடியுமுன்னு தெரியலை

கடைசி பாரா யோசிக்க வேண்டிய முக்கியமான ஒன்னு :-))

அமுதா கிருஷ்ணா said...

நானும் இந்த புலம்பலில் பெரிய அளவில் பங்கு கொள்கிறேன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

யார் சொல்றது..( பயம்).. யார்கிட்ட சொல்றது ...?? ஹுஸைனம்மா..:))

ஹைதர் அலி said...

//ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது.//

சரியாக சொன்னீர்கள்
பல பள்ளிகூடங்கள் இடிந்து கிடக்கின்றன பல பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் எரும மாடு கட்டி கேடக்குது

மருத்துவமனைகளில் அடிப்படை வசதி இல்லை அங்கே உயிரோட போகிற நோயாளிக்கு இலவசமா போஸ்ட் மர்டம் பன்னுறாய்ங்கே

இதையேல்லாம் சரி செய்யுறத விட்டுப்புட்டு கொடுக்கிறாய்ங்களாம் இலவசம்

ஸ்ரீராம். said...

இந்த மகானுபவன்கள் எதை இலவசமாகக் கொடுக்கணுமோ அதைக் கொடுக்க மாட்டார்கள். அதுலதான காசு நிறைய வரும்? கல்வி மட்டும் இலவசமாகத் தந்தால் போதுமே...எங்கள் ப்ளாக் பதிவு பார்த்தீர்களா...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

போட்டாச்சு போட்டாச்சு, வழக்கு போட்டாச்சு, ஆனால் அதிலையும் தேர்தல்ஆணையம் தலையிட முடியாதுன்னு தான் சொல்ல போறாங்க, தெரிந்த விஷயம் தானே.

டிவி கொடுத்ததற்கே, கொத்தனார், சித்தாள் எல்லாம் வாரம் ஒரு நாள் லேவு எடுத்துக் கொண்டு வேலைக்கு வராமல் தங்களுடைய ஒரு நாள் சம்பளம் போணாலும் பரவாயில்லைங்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க, அப்புறம் இடையிலேயே லீவு போடுறாங்க, கேட்டா அதான் ஒரு ரூபாய் அரிசி கிடைக்குதுல்ல ன்னு சலிச்சிக்குறாங்க, இதனால ஜனங்களோட வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கான்னு பார்த்தா கண்டிப்பா நம்மளால பாசிட்டிவ்வான பதில சொல்ல முடியல. அதிமுக ஆதரிக்கிறேன்னு சொன்ன சீமானும் இதை எதிர்த்து வாய் திறக்கவேயில்லையே, ஏன்

DrPKandaswamyPhD said...

இந்த மாதிரி அரசியல் கலாசாரத்தை எப்படி மாற்றுவது என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது.

நாஞ்சில் பிரதாப்™ said...

எல்லாரும் இப்படி புலம்புறாங்க.... ஆனா கொடுத்தா வாங்கி வச்சுக்குறாங்க உங்களைச் சொல்லலை பொதுவாச் சொன்னேன்..:))

டிராபிக் ராமசாமி இலவசங்களை எதிர்த்து கேஸ் போட்டிருக்கார். தமிழ்நாட்டுல ஒரு மானஸ்தனாச்சும் இருக்காரே....:))

Mohamed G said...

இது அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை, என்பதை மக்கள் உணர வேண்டும்.சொந்த பணம் என்றால் இப்படி இலவச அறிக்கைகள் வருமா? நீங்கள் சொன்ன பழமொழியின் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது போல் தோன்றுகிறது. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...

malar said...

இலவச அறிக்கையில் எதாவது ஒரு கட்சி invetor ரும் அறிவித்தால் மக்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களிப்பார்கள்…….

அமைதி அப்பா said...

ஒண்ணுமே புரியல...
எத வாங்கறது எத விடுறது?!
இப்படித்தான் இங்கே எலோரும் புலம்புறாங்க.

M. Farooq said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
எல்லா மனிதர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக!
எல்லா பதிவர்களுக்கும் பின்நூட்டவதிகளுக்கும் அவர்கள் மனக்குமுறலை கொட்டி தீர்க்க இது ஒரு வழி! நாம் அனைவரும் ஒரு சகிப்புத்தன்மையை வரவழைத்து கொண்டு வாழ்கிறோம். ஒருவன் ஒரு தப்பை தட்டிக்கேட்டால் அதனால் அக்கம் பாக்கம் உள்ளவர்களுக்கு சிறிது சிரமம் ஏற்பட்டால் உடனே அவர்கள் சபிப்பது தப்பை தட்டிக் கேட்டவனைதான், இவன்தான் நாட்டை திருத்த வந்துருக்கான், கிறுக்கன், உலகம் தெரியாதவன் இன்னும் எண்ணற்ற நல்ல வார்த்தைகளால் நமது பெருவாளர் பொதுசனம் சலிப்பதை பார்க்கிறோம். அவ்வளவு ஏன் நமது வாழ்க்கையில் எத்தனை தவறை நாம் ஒவ்வொருவரும் தட்டிக்கேட்டுள்ளோம்? நாம் எல்லோரும் அவர்கள் கண்முன் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்டாலே இது போல் கள்ளப்பெர்வழிகள் நம்மை ஆளும் பேர்வழிகளாக மாறுவதை தடுக்க முடியும். என்று நமது மக்கள் பொய்முகத்தை வெண்திரையில் கண்டு அதுதான் அவர்களின் உண்மை முகம் என்று நம்பாமல் வெண்திரைக்கு வெளியே வந்து வேட்பாளரின் கடந்த கால செயல்பாட்டை வைத்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அந்த நாள் விரைவில் வர பிரார்த்திப்போம்.

நட்புடன் ஜமால் said...

what to say ...

malar said...

ப.ஜ.க. ரேசன் கடைகள் மூலம் s napkin இலவசமாக கொடுக்குதாம்..

அமைதிச்சாரல் said...

இலவச லிஸ்ட் எங்கே போயி நிக்கப்போவுதுன்னே தெரியலை :-(

ஹுஸைனம்மா said...

மோகன் - கொஞ்சம் பிஸி, அதான் சின்னப் பதிவு. மனசு பொறுக்கல, அதான் புலம்பிட்டேன்.

சித்ரா - உண்மைதான், பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருக்கோம். எனினும் உள்ளூரில் இருப்பவர்களின் எண்ணமும் இதுவே. ஆனால், வறுமையில் உழலுபவர்களின் நிலைதான் பரிதாபம், அவர்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல், அவர்களின் நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வரை அவர்களாலும் மாற முடியாது.

கோபி - அந்த லிங்க் பார்த்தேன். இப்போ டிராஃபிக் ராமசாமியும் கேஸ் போட்டிருக்காரே. பாப்போம், என்ன ஆகுதுன்னு.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - பாவம், அவங்க என்ன செய்வாங்க, உழைக்க வழியில்லைன்னா, கிடைக்கிறதைக் கொண்டாவ்து வாழ்வோம்னு நினைப்பாங்கதானே.

முத்துலெட்சுமிக்கா - ஆமாக்கா, ரொம்பவே புலம்ப வருது.

தமிழ் உதயம் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கவிசிவா - வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்ல என்றுதான் புரியவில்லை.

ஜெய்லானி - வேலைக்கு ஆள் கிடைப்பதும் பிரச்னை என்றாலும், இதனால் மீதமாகும் பணம் டாஸ்மாக்குக்குத்தானே போகுது?

அமுதாக்கா - விட்டா, ஒப்பாரி பாடல்களே எழுத ஆரம்பிச்சிடுவேன் போல!!

ஹுஸைனம்மா said...

தேனக்கா - பத்திரிகை துறைல இருக்க நீங்களே பயம்னு சொல்லலாமாக்கா? (ஏன் சொல்லமாட்டே, ஆட்டோ தேடி வர்ற தூரத்தில இல்லைங்கிற தைரியம்னு சொல்றீங்களா? :-))) )

ஹைதர் - ஆமாங்க, உயிரோட இருக்க உதவி செய்யாம, இலவசமா போஸ்ட்மார்ட்டம் செய்வாங்க.

ஸ்ரீராம் - இப்பத்தான் உங்க பதிவும் பார்த்தேன். என்ன செய்ய, எங்கப் பாத்தாலும் புலம்பலாத்தான் இருக்கு.

ஹுஸைனம்மா said...

அபுநிஹான் - சீமானை விடுங்க, உழைக்கும் வர்க்கத்தினரான கம்யூனிஸ்டுகளே மௌனமா இருக்காங்க!!

கந்தசாமி சார் - உங்க கிராமப் பக்கங்களில் சாமான்ய மக்களின் எண்ணங்கள் என்னவாய் இருக்குன்னு ஒரு பதிவு போடுங்களேன் சார்.

பிரதாப் - ஊர்ல இருக்கிற எங்க பெரும்பான்மையான உறவினர்களும் (எனக்குத் தெரிந்து) இலவச டிவி வாங்கவில்லை. ஆனால், ரேஷனில் கிடைக்கும் பல உணவுப்பொருட்களை வாங்குகின்றனர்.

ஹுஸைனம்மா said...

முஹம்மது ஜி - நன்றிங்க.

மலர் அக்கா - ரொம்ப ந்நாளா ஆளைக் காணோம்? நலம்தானே? உங்க ஐடியா (இன்வெர்ட்டர்) நல்லாருக்கே!! :-)))

அமைதி அப்பா - எதை விடன்னு யோசிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு பாருங்க.

ஹுஸைனம்மா said...

ஃபாரூக் - நல்ல கருத்துகள் சொல்லிருக்கீங்க. சொன்னமாதிரி, எல்லாருக்குமே ஒரு சகிப்புத் தனமை வந்துடுச்சு, வேற வழி?

ஜமால் - அதான் புலமபிட்டேன்.

அமைதிச் சாரல் - ஆமாக்கா.

இராஜராஜேஸ்வரி said...

இதுல அங்கங்க சில நாடுகள்ல ஜனநாயகம் வேணும்னு புரட்சி பண்றாங்களாம். அவங்ககிட்ட நம்ம நாட்டு பணநாயகம் பத்தி யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறதைக் கெடுத்துக்க வேணாம்னு சொல்லுங்கப்பா!!
soolanum.

ரிஷபன் said...

டிவி வாங்க ஓடின மக்கள்.. அது கிடைக்கலன்ன உடனே சத்தம் போட்டவங்க...
இவங்கள நம்பியா இலவசம் பத்தி சொல்றது. மக்களை சுத்தமா மாத்திட்டாங்க.. எதுவும் தராத கட்சியை அலட்சியமாதான் பார்க்கறாங்க..இப்ப!
இது சரின்னு சொல்ல வரல.. நிலைமையை சொன்னேன்..

அன்புடன் மலிக்கா said...

//ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, “இது விதிமுறைகளை மீறுவதாகாது”ன்னு ரூல்ஸ் பேசுறாங்க./

அதானே அதையும் தந்துட்டா எவ்ளோ நல்லாயிருக்கும். தரவேண்டியத தாங்கப்பா அப்படின்னும் ஒரு பெட்டிஷன் போடுவோமா..ஹுசைனம்மா...

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

நானும் உங்க பக்கம் தான் ....

அப்பாவி தங்கமணி said...

போங்க அக்கா... என்ன புலம்பினாலும் ஒண்ணும் மாறப்போறதில்ல... இந்த விசியத்துல பேனா எனும் ஆயுதம் கூட ஒண்ணும் செய்யரதுகில்ல... நாலே நாளுல எல்லாரும் மறந்து போயிடறாங்க நல்லது என்றாலும் கெட்டது என்றாலும்...அதை அரசியல்வாதிகள் நல்லாவே யூஸ் பண்ணிக்கறாங்க... :(((

சுவனப்பிரியன் said...

//இதுல அங்கங்க சில நாடுகள்ல ஜனநாயகம் வேணும்னு புரட்சி பண்றாங்களாம். அவங்ககிட்ட நம்ம நாட்டு பணநாயகம் பத்தி யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறதைக் கெடுத்துக்க வேணாம்னு சொல்லுங்கப்பா!!//

நல்ல விஷயத்துக்காக நல்லா புலம்பி இருக்கீங்க. நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

இராஜராஜேஸ்வரி - நன்றி.

ரிஷபன் - உண்மைதான், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை அந்த அளவு மோசமாக ஆக்கிவச்சிருக்காங்க அரசியல்வாதிகள்!!

மலிக்கா - உங்களுக்குத் தெரியுமே, எங்க பெட்டிஷன் கொடுத்தா கரெக்டா செஞ்சுத் தருவாங்கன்னு. சொல்லுங்க, கொடுத்துடுவோம் பெட்டிஷன். :-)))

ஹுஸைனம்மா said...

மைதிலி- அட, காணாமப் போனவங்கள்லாம் எலெக்‌ஷன் நியூஸுன்னதும் வந்துட்டாங்களே!! வாங்கப்பா, நலமா? நன்றி, என் பக்கம் இருப்பதற்கு.

அப். தங்ஸ் - ஒண்ணும் நடக்காதுதான்; அட்லீஸ்ட் புலம்பியாவது ஆத்திக்கலாமேன்னுதான்!!

சுவனப்பிரியன் - வாங்க; நன்றி.