Pages

ஆப்பமும், பெண்ணெனும் படைப்பும்


எனக்கு கூடப்பொறந்த அண்ணந்தம்பி இல்லைங்கிறதும், பெண்குழந்தை இல்லங்கிறதும் பதிவுலகுக்கு நல்லாவே தெரிஞ்ச விஷயந்தான். எத்தினி தடவ புலம்பிருக்கேன்? யாராலயாவது  மறக்க முடியுமா என்ன?

நாங்க நாலு பேரும் பொண்ணுங்கங்கிறதுனால, வீடு ரொம்ப அமைதியா இருக்கும்னெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அப்பப்ப கொஞ்சம் கலவரம் நடக்கும்னாலும், அது அம்மாவோட ஒரே ஆர்டர்லயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிச்ச மாதிரி அமைதியாகிடும். சொந்தக்காரங்க வீட்டில பையங்க இருக்காங்கன்னாலும், அங்கயும் அதிகம் சேதாரங்கள் இருந்தமாதிரி பாத்த ஞாபகமில்ல. ஏன்னா, அப்பல்லாம் பசங்க என்னிக்கு வீடு தங்கிருக்காங்க, இன்னிக்கு மாதிரி? சாப்பிடவும், தூங்கவும்தானே வீட்டுக்கு வருவாங்க. அதனால, அந்த ஆபத்துகள் அப்ப புரியலை!!

அதனால, முதல் குழந்தை ஆசைப்பட்டபடியே  பையனாப் பிறந்ததும் ரொம்ப சந்தோஷம். எஸ், நான்தான் ஆசைப்பட்டேன். ஏனா? அதான் சொன்னேனே, அதன் விளைவுகள் அப்பத் தெரியாதுன்னு!!

என்னது, பெரிசா பெண்ணுரிமை பேசிட்டு, பையனுக்கு ஆசைப்பட்டேன்னு கேக்கிறீங்களா? ஒரு காரணம், எங்க வீட்டில எல்லாம் பொண்ணுங்கிறதுனால, பையன்னா ஏதோ புண்ணியம் பண்ணவங்களுக்குத்தான் பிறக்கும் அப்படிங்கிற ரேஞ்சில அப்ப சிலர் நெனச்சிகிட்டு இருந்தாங்க. எனக்கும் பையன் பிறந்தா, எனக்கே பிறந்துடுச்சு, அதனால அதுக்குனு புண்ணியமெல்லாம் பண்ணத் தேவையில்லைன்னு புரிஞ்சுக்கலாமே. அதோட, பத்து பட்டுச்சேலை இருந்தாலும், நம்மகிட்ட இல்லாத ஒரு காட்டன் சேலைக்குத்தானே ஆசைப்படுவோம். அதப்போலவும்னு வச்சிக்கோங்களேன்.

சரி, முடிஞ்ச கதையை விடுங்க. முதல் பையனுக்கு ரொம்பவே அதிகமா ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிட்டேன்போல, அதான் ரெண்டாவதும் பையன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா, ரொம்ப பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு பேசினதோட விளைவோ (தண்டனையோ)ன்னு இப்பத் தோணுது. 

ஆனாலும், அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுத்திடுவோமா நாம? பொண்ணு இல்லாத பழியை என்னவர் தலையிலையே தூக்கிப் போட்டுட்டேன்ல!! “எங்க வாப்பா பொறுப்பில ஏழு பொண்ணைக் (3 தங்கைகள் + 4 மகள்கள்) கொடுத்த ஆண்டவன், உங்க பொறுப்பில ஒரு மகளையாவது, ஏன் அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு தங்கச்சியாவது கொடுத்தானா?”னு சொல்லி பேசமுடியாம ஆக்கிட்டோம்ல.  (இருந்தாலும், ரெண்டும் பையனா இருக்கதிலேயும் ஒரு நன்மை இருக்குது. அதை இங்க எழுதிருக்கேன்  பாருங்க)

ஆனா, இந்த பருப்பெல்லாம் பையங்ககிட்ட வேகத்தான் கஷ்டமா இருக்குது.  சின்னவனுக்கு, இப்பத்தான் பள்ளியில், Islamic Studies-ல், Creation of humans சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதைப் பத்தி பேசும்போது, அவன் என்னிடம், “மனுஷன எப்படி படைச்சான்னு உனக்குத் தெரியுமா?”ன்னு கேட்டான். நாமதான் சந்தர்ப்பம் கிடைச்சா விடமாட்டம்ல. உடனே, “ஆம்பளைங்கள களிமண்ணுல இருந்து படைச்சான். ஆனா, பெண்ணை ஒரு உயிருலிருந்து படைச்சான். நீங்கள்லாம் ஆஃப்டர்-ஆல் களிமண்லருந்து வந்தவங்க. ஆனா, நான் ஒரு living beingலருந்து வந்தவ”னு பெருமையாச் சொன்னேன்.

உடனே, பெரியவன் ஓடி வந்து, ”அதென்ன லிவிங்-திங்? ஆம்பளையிலிருந்துதானே பெண்ணைப் படைச்சான்?”

”அதேதான். ஆனா ஏன் ஆண்னு பாக்கிற? அதுவே பெண்ணை முதல்ல படைச்சு, பெண்ணிலிருந்து ஆணைப் படைக்கத் தெரியாதா ஆண்டவனுக்கு? அல்லது, ஆணைப் படைச்ச அதே களிமண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கத் தெரியாதா அவனுக்கு? பெண் பல சிறப்புகள், பெருமைகள் பெற்றவள் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் அவளை ஒரு உயிரிலிருந்து படைச்சான்”.

”இருந்தாலும், ஆண் தானே முதல் படைப்பு?”

சரி, அவன் வழியிலேயே போய்ப் புரியவைப்போம்னு, “டேய், எப்பவுமே முதல்ல செஞ்சு பாக்கிறது ஒரு டிரையல் மாதிரி. இப்ப பேனா எழுதுதான்னு பாக்க நீ முதல்ல எதாவது எழுதிப் பாப்பேல்லியா? ஏன், நான் இப்ப தோசை அல்லது ஆப்பம் சுடுறேன்னா, முதல்ல ஊத்துற ஆப்பம் சரியா வராது. அடுத்ததுதான் சரியா வரும்.  அதுமாதிரி, அதிகப் பொறுப்புள்ள இனமான பெண்ணைப் படைப்பதுக்கு முன்னால, ஆம்பளையைப் படைச்சு டிரையல் பாத்தமாதிரின்னு வையேன்?”

பதிலே வரலை. ஹா, ஹா, நம்மகிட்ட பேசி ஜெயிக்க முடியுமான்னு பெருமையா, “என்னடா, சத்தத்தையே காணோம்?”

”ம்ம்ம்... ஆண்டவனோட படைப்புகளிலேயே அற்புதப்படைப்பு மனித இனம். அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே? அதனாலத்தான் எல்லாம் அறிஞ்ச ஆண்டவன் பெண்ணைக் களிமண்ணுலருந்து படைக்கலை!!”

அவ்வ்வ்வ்... இப்பவும் நானாத்தானா....

 

Post Comment

53 comments:

அமைதிச்சாரல் said...

பல்பு வாங்குறது நமக்கு புதுசா என்ன??.. அப்டிக்கா தூக்கி வெச்சுட்டு அடுத்த பல்பு வாங்குற வேலைய பாருங்க :-)))))))

மோகன் குமார் said...

ரெண்டு லாஜிக்கும் நைஸ்

முஹம்மத் ஆஷிக் said...

////அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே?////

ஹா....ஹா....ஹா.....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
ஹா....ஹா....ஹா.....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
ஹா....ஹா....ஹா.....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
ஹா....ஹா....ஹா.....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....

உங்கள் இருவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

வெறேன்னத்த சொல்ல...!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹாஹா முடியலை ஹுஸைனம்மா..:))

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மாட்டுநீங்க்களா....ஹா ஹ ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மாட்டுநீங்க்களா....ஹா ஹ ஹா ஹா...

எல் கே said...

ஹஹஹா சூப்பர் பல்ப் நல்லவேளை இன்னும் திவ்யா இந்த அளவுக்கு வளரலை

Gopi Ramamoorthy said...

நான் வேணா ஒரு கூடை அனுப்பி வைக்கட்டுமா, வாங்கிய பல்பை எல்லாம் அள்ளி வைக்க:-)

நாஞ்சில் பிரதாப்™ said...

தினமும் சுமாரா எத்தனை பல்புகள் வாங்குவீங்க...?:))

முதல்ல கடவுள் ஆண்களைத்தான் படைச்சாரு. ஆண்கள் இந்த உலகத்துல சந்தோசமா இருந்ததைப்பார்த்து பிடிக்காம பொறாமைப்பட்டு உடனே பெண்களை படைச்சிட்டாரு...அன்னிலேருந்து இன்னிக்கு வரைக்கும் சந்தோசம்னா என்னன்னே எங்களுக்கு தெரியாது..:))

கோமதி அரசு said...

அவ்வ்வ்வ்... இப்பவும் நானாத்தானா.... //

ஹீஸைனம்மா, இப்பவும் இல்லை எப்பவும் நாம்தான்.

தலைப்பு சூப்பர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))

ஸாதிகா said...

ஹே ..ஹே..சிரிச்சு முடியலே ஹுசைனம்மா.இந்தாங்க டிஷ்யூ.

அம்பிகா said...

அட! நீங்களும் என்னைப்போல் ரெண்டு பையன்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிற வங்க தானா? குட்.. ஹா..ஹா..ஹா..

அமுதா said...

:-))))

Vijisveg Kitchen said...

ஹுஸைன்மா. எப்படி இருக்கிங்க. நீண்ட நாளாச்சு ப்ளாக் பக்கம் வந்து.வந்து இங்கு படித்தால் ரொம்ப நல்ல் ஒரு பதிவு. நல்லா படித்து சிரிப்பும் தாங்க முடியல்லை.இந்த காலத்து பசங்ககிட்டே பேசும் போதும் கேள்வி கேட்பதற்க்கு பதில் சொல்வதற்க்கஉள் அப்ப அப்பா..

அன்னு said...

என்ன ஹுஸைனம்மா இதுக்கெல்லாம் கலங்கிட்டு... தாய்கள்ன்னாலே தியாகிகள்தானே.. இந்த மாதிரி சத்திய சோதனை எல்லாம் தாங்கினாத்தேன் நாளைக்கு பாடபுத்தகத்துல நம்ம பேரு வரும், பசங்க படிப்பாங்க.. யூ சீ..

ஹெ ஹெ ஹெ ... ஆனாலும் பசங்ககிட்ட எப்படி தெளிவா இருக்கணும்னு நான் உங்க போஸ்ட்டு படிச்சே தெரிஞ்சுக்கறேன்... ஹெ ஹெ வருமுன் காக்க...
:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படி ஹுசைனம்மா எப்படி ? இப்படில்லாம்..

அதும் உங்க கணவருக்கும் அப்பாவுக்கும் செய்த கம்பேரிசன் சே.. சான்ஸே இல்ல.. அவரோட அந்த நிலைமைய நினைச்சுப்பார்த்தேன்..:)

ஸாதிகா said...

//பையன்னா ஏதோ புண்ணியம் பண்ணவங்களுக்குத்தான் பிறக்கும் அப்படிங்கிற ரேஞ்சில அப்ப சிலர் நெனச்சிகிட்டு இருந்தாங்க. எனக்கும் பையன் பிறந்தா, எனக்கே பிறந்துடுச்சு//ஆஹா..என்னே தன்னடக்கம்.அதான் எல்லோரும் உங்களை புரட்சி பெண்மணி என்று சொல்லுகின்றார்களோ?

enrenrum16 said...

/பெரிசா பெண்ணுரிமை பேசிட்டு, பையனுக்கு ஆசைப்பட்டேன்னு கேக்கிறீங்களா
ரொம்ப பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு பேசினதோட விளைவோ (தண்டனையோ)ன்னு இப்பத் தோணுது/ ஹுஸைனம்மா... பெண்ணுரிமை பேசுவதற்கும் பெண் குழந்தைக்கு ஏங்குவதற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் ஒரு பெண்குழந்தைக்கு பெண்ணின் உரிமைகளையும் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதை விட இரு ஆண் குழந்தைகளுக்கு அவற்றைப் புரிய வைப்பதில்தான் சவாலிருக்கிறது. அதனாலோ என்னவோ உங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் :).. இறைவனுக்கு தெரியாதா யாருக்கு எதைக் கொடுக்கணும்னு?;)

/ஆண்டவனோட படைப்புகளிலேயே அற்புதப்படைப்பு மனித இனம். அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே?/ ... இப்பவும் நீங்களாவேதான் ;) ..ஹி..ஹி..ஹி..ஹா..ஹா..சூப்பர்...

எம் அப்துல் காதர் said...

// பல்பு வாங்குறது நமக்கு புதுசா என்ன??.. அப்டிக்கா தூக்கி வெச்சுட்டு அடுத்த பல்பு வாங்குற வேலைய பாருங்க :-))))))) //

இங்கே அதையே நானும் ரிபீட்டிக்கிறேன். சரி..சரி.. கண்ணா தொடச்சுக்கிட்டு, இதுமாதிரி சிரிக்கிற சிந்திக்கிற பதிவா அடுத்தது ஒன்னு சீக்கிரம் ஹுசைனம்மா ரெடி பண்ணுங்க!!

சிநேகிதன் அக்பர் said...

சரியான காமெடி. அருமையா எழுதியிருக்கிங்க :)

கோவை2தில்லி said...

ஹா…ஹா……ஹா…… ………….

நாஸியா said...

அட்றா சக்க அட்றா சக்க!!!

அப்படியே விசிலடிக்கனும் போல இருக்குங்கோவ்

ஸ்ரீராம். said...

ஹா..ஹா...நல்லா ஒரு இடைவெளி கொடுத்து அடிச்சாரு பாருங்க உங்க மகன்...சூப்பரு. தாய் எட்டடி...குட்டி பதினாறடி!

GEETHA ACHAL said...

என்ன ஹுஸைனம்மா...இப்படி ஆயிடுச்சு...பராவயில்லை...இது எல்லாம் நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி தானே..

குட்டி மகன் ரொம்ப புத்திசாலியாக இருக்கானே...அப்பா மாதிரி போல....சும்மா சொன்னேன்...

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல்க்கா - அதானே, தினந்தினம் புதுசுபுதுசா, தினுசுதினுசா கிடைக்கிற ஒரே விஷயம் அதுதானே? :-)))

மோகன்குமார் - வக்கீல் ஒரு சார்பா பேசாம, ரெண்டு லாஜிக்கும் நல்லாருக்குன்னா நீதிபதி குழம்பிடுவார்!!

ஆஷிக் - நன்றிங்க. வ அலைக்கும் ஸலாம்.

ஹுஸைனம்மா said...

தேனக்கா - கேக்கிற உங்களுக்கே முடியலைன்னா, நான்..?

நாஞ்சில் மனோ - நன்றி.

எல்.கே. - நன்றி. திவ்யா வளரும்போது இதுபோல கதைகளும் வரும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

கோபி - க்ர்ர்ர்ர்ர், கூடையா? லொள்ஸ்!!

ஹுஸைனம்மா said...

பிரதாப் - அதெல்லாம் எண்ணிகிட்டு இருக்குறதில்லை.
//பெண்களை படைச்சிட்டாரு...அன்னிலேருந்து இன்னிக்கு வரைக்கும் சந்தோசம்னா என்னன்னே எங்களுக்கு தெரியாது// கல்யாணம் ஆகுறதுக்கு மின்னயே இப்படி புலம்புனா எப்படி?

கோமதிக்கா - வாங்கக்கா. அதேதான், கேட்டுகேட்டுல்ல வாங்கிக்கிறோம் பல்பை!!

எல் போர்ட் - நோ கமெண்ட்ஸ்? ;-))

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - இலவச டிஷ்யூ கொடுக்கிற அளவு உற்சாகம்!! ஹூம்.. அப்புறம்க்கா புரட்சித்தலைவிங்கிற பட்டத்துக்கும், தன்னடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லியே? ;-)))

அம்பிகா - ஆமாக்கா, சங்கத்தலைவியே இப்படி மெம்பர்ஸைப் பாத்துச் சிரிக்கலாமா? :-))))

அமுதா - நன்றி.

ஹுஸைனம்மா said...

விஜி - நல்லாருக்கென்ப்பா. நீங்க நலமா? ரொம்ப பிஸியா? சிரிச்சதுல சந்தோஷம் விஜி.

அன்னு - ஹூம்.. எங்களுக்கெல்லாம் இப்படி பாடம் எடுக்க ஆளில்லையே.. கேட்டா எங்க மாமியார், எம்புள்ளைங்க சொக்கத் தங்கம்னு புளகாங்கிதப்படுவாங்க. ஹூக்கும், அப்ப இந்தப் பயலுக பண்ற அலப்பரையெல்லாம் எங்கிருந்து வருதாம்னு கேக்கத்தான் முடியல. :-))))

முத்தக்கா - அவரை இன்னும் என்னென்னல்லாம் சொல்வேன் தெரியுமா? அதுக்கு இதெல்லாம் ஜுஜுபி!! நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - //இரு ஆண் குழந்தைகளுக்கு அவற்றைப் புரிய வைப்பதில்தான் சவாலிருக்கிறது// நிச்சயமா, இறைவனுக்கு நன்றியே!!
ஆனாலும், கணவர்ங்கிற ஆணைச் சமாளிக்கீறத விட பெருங்கஷ்டம் பையங்களைச் சமாளிக்கிறது, முக்கியமா பேச்சுல. அதான், அப்பப்போ அப்படியொரு நினைப்பு!! :-)))

காதர் - இதுல சிரிச்சீங்க சரி, சிந்திச்சீங்க? நெசமா? என்ன சிந்தனைன்னு சொல்லுங்களேன் கொஞ்சம்? ;-))))

ஹுஸைனம்மா said...

அக்பர் - வாங்க நன்றி.

கோவை2தில்லி - நன்றிங்க.

நாஸியா - இருக்கும் இருக்கும்... எனக்கும் விஸிலடிக்கிற காலம் வரும்.. !! :-)))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - அடே, எட்டு-பதினாறு லாஜி நல்லாருக்கே!! நான் எப்பவுமே “Like father, Like son"னுதான் சொல்வேன். நன்றி.

கீதா - பயப்படாதீங்க, எம்பசங்க ரெண்டுமே அப்பாவைப் போலத்தான் - லொள்ளுல!! :-)))) அதனால அப்படிச் சொன்னா எனக்குச் சந்தோஷந்தான்.

நட்புடன் ஜமால் said...

பத்து பட்டுச்சேலை இருந்தாலும், நம்மகிட்ட இல்லாத ஒரு காட்டன் சேலைக்குத்தானே ஆசைப்படுவோம் ]]


we are cotton sariees grrrrrrrrr

அன்னு said...

//கேட்டா எங்க மாமியார், எம்புள்ளைங்க சொக்கத் தங்கம்னு புளகாங்கிதப்படுவாங்க. ஹூக்கும், அப்ப இந்தப் பயலுக பண்ற அலப்பரையெல்லாம் எங்கிருந்து வருதாம்னு கேக்கத்தான் முடியல. :-))))//

இதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கறதா ஹுஸைனம்மா... சட்டியில இருந்தாத்தானே அகப்பைல வரும்... அது ஒரு சட்டியில இல்லைன்னா இன்னொரு சட்டிதானே காரணம்.. ஹெ ஹெ ஹெ... ஒத்துக்க மாட்டீங்களே... :))

ஜெய்லானி said...

நினைக்க நினைக்க சிரிப்பா வந்துகிட்டே இருக்கு :-)))))))))))))))))))

இளம் தூயவன் said...

எல்லார் வீட்டுலேயும் இதே நிலை தானா? ஆஹா ஆஹா நான் மட்டும் தான் என்று நினைத்தேன்,அப்பாடா எனக்கு கொஞ்சம் ஆறுதல் .

மனோ சாமிநாதன் said...

எப்போதும்போல் மிக சரளமான நகைச்சுவை கலந்த அருமையான எழுத்து ஹுஸைனம்மா! தலைப்பு அதையும்விட பிரமாதம்! உங்களுக்கென்று இப்படியெல்லாம் தலைப்பு வருவதற்கு ஒரு தனியான பாராட்டுப்பதிவே எழுதலாம்!!

அமுதா கிருஷ்ணா said...

பல்புகள் நல்லது

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல பதிவு

எனக்கும் இரண்டு பசங்க அதுல இளையவன் பெரிய வால்

இந்த பதிவை படிக்கும்போது அவன் நினைவுக்கு வருகிறான்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
நாங்கூட,எங்க நம்ம சாதிக்கார பசங்க(ஆம்புள பசங்கள சொன்னேன்),விட்டுடுவானுகளோன்னு நெனச்சேன்..

//அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே?//
எம்மா..எத்ததண்டி பல்பு...ரெண்டு கையும் பத்திருக்காதே,எப்டி பேலன்ஸ் பண்ணினீங்க சகோ...

சரி அம்மாவாச்சேன்னு பசங்க ஸைலண்ட் ஆனா..நீங்க
/என்னடா, சத்தத்தையே காணோம்?”/
ன்னு உசுப்பி உட்ருக்கீங்க...

ஆம்புள புள்ளைங்க முன்னாடியே,நீங்கள்ளாம் ட்ரைலர்,அப்டீ இப்டீன்னு சொன்னா...

அதா பசங்க லைட்டா கொந்தளிச்சுட்டானுக...

ஆனா வாரம் ஒரு பல்ப்,சும்மா பளீச் பளீச்சுன்னு வாங்கிர்ரீங்க போங்க..

அல்லாஹ் எல்லா நலனையும் வழத்தையும்,தங்கள் அனைவர் மீதும் பொழிய போதுமானவன்...

அன்புடன்
ரஜின்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஹா ஹா
நன்றாக இருக்கு.

புதுகைத் தென்றல் said...

பதிவைப் படிச்சு சிரிச்சுகிட்டே பின்னூட்டம் போட வந்தா முதல் பின்னூட்டமா அமைதிச்சாரலோட பின்னூட்டத்தைப் பாத்து மேலும் சிரிச்சு சிரிப்பு அடக்க முடியலை. :)))

பல்பு வாங்குறது நமக்கு புதுசா என்ன??.. அப்டிக்கா தூக்கி வெச்சுட்டு அடுத்த பல்பு வாங்குற வேலைய பாருங்க :-)))))))

அன்புடன் மலிக்கா said...

//என்ன ஹுஸைனம்மா இதுக்கெல்லாம் கலங்கிட்டு... தாய்கள்ன்னாலே தியாகிகள்தானே.. இந்த மாதிரி சத்திய சோதனை எல்லாம் தாங்கினாத்தேன் நாளைக்கு பாடபுத்தகத்துல நம்ம பேரு வரும், பசங்க படிப்பாங்க.. யூ சீ..//

என்னா ஒரு எதிர்பார்ப்பு. சரி சரி நாமளும் அப்படிதான்..

Avargal Unmaigal said...

நல்ல சிரிக்கி வைக்கிறீங்க.. உங்களுக்கு "வலைத்தள மனோரம்மா" என்ற பட்டத்தை வழங்குகிறேன்

ஹுஸைனம்மா said...

ஜமால் - கரெக்டாப் பாயிண்டப் புடிச்சிட்டீங்களே, அதேதான் - காட்டன் சேலைகள்!! ;-)))))))

ஜெய்லானி - சிரிங்க, சிரிங்க, சிரிச்சுகிட்டே இருங்க!!

தூயவன் - உங்க நிலைமை என்ன நிலைமை? சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம். :-)))

ஹுஸைனம்மா said...

மனோக்கா - வாங்க, நலமா? பாராட்டுக்கு நன்றிக்கா. மிக்க மகிழ்ச்சி.

அமுதா - பல்புகள் நல்லதுதான் - ஆனா யாருக்கு? :-)))

ஹைதர் அலி - வ அலைக்கும் ஸலாம். இங்கயும் சின்னவந்தான் பெரிய வால்.

ஹுஸைனம்மா said...

ரஜின் தம்பி - ஸலாம். கைகொள்ளாத அளவு பல்புதான் - பாத்தமாதிரியே சொல்றீங்க? கொடுத்தது உங்க இனம்தானே, அதான் இவ்வளவு சந்தோஷம். பூனைக்கும் காலம் வரும்!! :-))) துஆவுக்கு நன்றி; ஆமீன்.

டாக்டர் சார் - வாங்க சார். நலமா?

புதுகைத் தென்றல் - ஹி.. ஹி.. ஸேம் பிளட் போல நீங்களும் சாரலக்கா போல!!

ஹுஸைனம்மா said...

மலிக்கா - அங்கிட்டும் அப்பிடித்தானா? சரி சரி நமக்குள்ள இருக்கட்டும். :-)))

அவர்கள்-உண்மைகள் - ஐ, நான் மனோரமாவா? ரொம்பப் பாந்தமான நடிகை. எல்லாருக்கும் பிடிச்ச நடிகை. ஆமா, அவங்க வயசைவச்சு என்னை அப்படிச் சொல்லலியே? :-)))) ரொம்ப நன்றி!!

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா:))))))))))))))0
கடவுளே எனக்குச் சிரித்து முடிக்க முடியவில்லை. முதல் ஆப்பம் ,தோசை சூப்பர். எல்லாவீட்லயும் இந்தக் கதையா.
இருந்தாலும் உங்க பசங்க சூப்பர் டூப்பர் புத்திசாலிங்க. அம்மாவை கார்னர் செய்து மடக்கிட்டாங்களே:)))
ஹா ஹா ஹா.

முகுந்த் அம்மா said...

//”ம்ம்ம்... ஆண்டவனோட படைப்புகளிலேயே அற்புதப்படைப்பு மனித இனம். அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே? அதனாலத்தான் எல்லாம் அறிஞ்ச ஆண்டவன் பெண்ணைக் களிமண்ணுலருந்து படைக்கலை!!”//

அய்யோடா சாமி, இதெல்லாம் படிச்சப்புறம், ஒரு பக்கம், இப்ப இருக்க பசங்க எப்படி பேசுராங்க பாருன்னு நினைக்க தோனுது, அதே சமயம் இன்னும் என்ன என்ன கேள்வி இப்படி வர போகுதோ.. அப்படின்னு மனசுல லெட்டா ஒரு கிலியும் வருதுல்லா..


ரொம்ப

இராஜராஜேஸ்வரி said...

பிரகாசமாக எரியும் பல்புகள் வாழ்க!

ரிஷபன் said...

அதிகப் பொறுப்புள்ள இனமான பெண்ணைப் படைப்பதுக்கு முன்னால, ஆம்பளையைப் படைச்சு டிரையல் பாத்தமாதிரின்னு வையேன்?”
இப்படி கூட யோசிக்க முடியுமா..
நான் சொல்றேன் .. சபாஷ்