Pages

டிரங்குப் பொட்டி - 13




 
 
  எங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்!!


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

முந்தைய வாரம் பெருநாளை ஒட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)

ஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா? அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+


ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது. 

இந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு!!) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

http://www.youtube.com/watch?v=zO5eoEzRlOI&feature=related


இந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

ஒருவர்  ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர்  “ஆணழகராக”  (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா? மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது.  ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

பரிணாமவாதிகளுக்கு உதவுமா இச்செய்தி? :-))))
  
 
 

Post Comment

29 comments:

இராகவன் நைஜிரியா said...

// முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!! //

ஓ! இது வரைக்கும் எழுதலையா? அச்சச்சோ... உடனே எழுதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர். //

எது முதல்ல வந்தா என்ன... சிக்கன் பிரியாணி பெஸ்டா... முட்டை பிரியாணி பெஸ்டா... அதுதான் நமக்கு முக்கியம்

Thenammai Lakshmanan said...

போனதும் போகாததுமா ட்ரங்குப் பெட்டியை தட்டிய தங்ஸ் ( தங்கை ) இனமே வாழ்த்துக்கள்..:)) அருமை..

அம்பிகா said...

டிரங்குபெட்டிய தெறந்தாச்சா ஹூஸைனம்மா! குட்.
நல்ல பகிர்வு.

எல் கே said...

பாவம் ரங்கஸ்.. சீக்கிரம் வீட்டில் இணையம் வரட்டும்

அமைதி அப்பா said...

“ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” //

எத்தனை உண்மை!
மிக நல்ல பதிவு.

ஸ்ரீராம். said...

வீடு மாறிட்டீங்களா...வாழ்த்துக்கள். சீக்கிரம் நெட் கனெக்ஷன் கிடைக்கட்டும்...
கோழிதான் முதலிலா...அதான் எனக்குத் தெரியுமே...!...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதான் இங்க எழுதிட்டீங்களே வாசகர் கடிதம்..:)
மிஸ்டர் மணிப்பூருக்கு வாழ்த்துக்கள்.

a said...

//
இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..
//
ஆமங்கோவ்..........

இமா க்றிஸ் said...

;)

பாடல்... ரசித்தேன். ;)))
அவர்களுக்கு அது சுலபமில்லை. பாராட்டத்தான் வேண்டும்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இடுகையைப் படிச்சதும் நாங்களும் ஜென்ம சாபல்யம் அடைஞ்சிட்டோம் :))

பல்லேலக்கா ரஜினி பாட்டுன்னு இல்ல நினைச்சிட்டிருந்தேன்? :))

கட்டப் பஞ்சாயத்து நாட்டாம தீர்ப்பு.. முட்டை வறுவல் பிடிச்சவனுக்கு முட்டை.. சிக்கன் பிரியாணி பிடிச்சவனுக்கு சிக்கன் :))

Chitra said...

கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.


....எவ்வளவு பெரிய நியூஸ்! சாதாரணமாக சொல்லிட்டீங்களே.... எல்லோரும் கரகோஷத்தை எழுப்புங்கள்!

CS. Mohan Kumar said...

ஒரு பக்கம் சிரிக்க வைக்கிறீர்கள். மறு பக்கம் சிந்திக்க வைக்கிறீர்கள். நன்று

Anonymous said...

//முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!!//

ஆஹா. மத்தியகிழக்காசிய ரவுடின்னா சும்மாவா?

ரவுடி மாதிரி நடிக்கும் அப்பாவி,
அனா.
ஆஸ்ரேலிய கிளை தலைவர்.

Riyas said...

//எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு// ஹி..ஹி..

எட்டிசலாத் கொள்ளைக்காரங்ககிட்ட மாட்டிட்டிங்களா.. சந்தோஷம்

Aashiq Ahamed said...

சகோதரி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//பரிணாமவாதிகளுக்கு உதவுமா இச்செய்தி? :-))))//

ஹா ஹா ஹா ஹா ஹா.....நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு!!!!!

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

☀நான் ஆதவன்☀ said...

:)))

நான் மீசை வச்சுக்காததால நீங்க தப்பிச்சீங்க :) அவருக்கு என் சப்போர்ட் எப்பவும் இருக்கும். வெளியில இருந்து ஆதரவு தரேன் :)

மனோ சாமிநாதன் said...

கோழிதான் முதல் என்ற விஷயம் புதிது.

“ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” //
ம‌னித‌னிட‌ம் மின் வேக‌த்தில் எத்த‌னையோ முன்னேற்ற‌ங்க‌ள் ஏற்ப‌ட்டாலும்
ம‌னித‌ நேய‌த்திலும் க‌ருணையிலும் அவ‌ன் எத்த‌னை பின்த‌ங்கியிருக்கிறான் என்ப‌தைத்தான்
இது மீண்டும் நிரூப‌ண‌மாக்குகிற‌து.

ந‌ல்ல‌ ப‌திவு ஹுஸைன‌ம்மா!

சிநேகிதன் அக்பர் said...

டிரேட் மார்க் ஹுஸைனம்மா பதிவு.

R.Gopi said...

ஹூஸைனம்மா...

வழக்கம் போலவே டிரங்கு பொட்டி அசத்துதே....

பல்லேலக்காவ பார்த்தாச்சா.... வெள்ளைக்காரய்ங்க நம்ம பாட்ட (அதுவும் அப்படியே தமிழ்ல) பாடறத பார்க்கறப்போ படு திரில்லிங்கா இருந்தது...

அரபுத்தமிழன் said...

போன ரவுடிப் பதிவுக்கே பேர் வைக்கணும்னு நெனச்சு மற்ந்துட்டேன்,
மறுபடியும் ஞாபகம் காட்டிட்டீங்க 'கம்ப்ளைண்ட் கண்ணம்மா' :)

Geetha6 said...

very nice madam.

அன்புடன் மலிக்கா said...

டிரங்குபெட்டிய தெறந்த ஹூஸைனம்மா வாழ்க..

ரிஷபன் said...

எல்லாமே சுவாரசியம்.

ஹுஸைனம்மா said...

பின்னூட்டம் அளித்த எல்லாருக்கும் நன்றி. ரொம்ப நன்றி.

நைஜீரியா ராகவன் சார் - நலமா? ரொம்ப மாசமா ஆளக் காணோம்?

இன்னிக்கும் ஒரு பதிவு எழுதிடணும்னு நினைச்சேன். உங்க எல்லார் நல்ல நேரம், இன்னும் பிஸியாத்தான் இருக்கேன்!!

இன்ஷா அல்லாஹ், அடுத்த வாரம் சந்திப்போம்.

Anisha Yunus said...

//அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்!!//

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே..அதெல்லாம் ஒன்வே ஹுஸைனம்மா... :))

pudugaithendral said...

முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!!//

நகைச்சுவை அள்ளித் தெளிக்க பதிவு எழுதியிருக்கீங்க. ரசிச்சேன்

கோமதி அரசு said...

டிரங் பெட்டியிலிருந்து நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

பிரதீப்குமார்சிங்கின் வாழ்க்கை ஹெச் ஐ.வி நோயளிகளுக்கு நம்பிக்கை அளிக்கட்டும்.

சமூகம் அவர்களுக்கு ஆதரவு அளிக்கட்டும்.
நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

வருகை புரிந்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் (மீண்டும்) மிக்க நன்றி.