Pages

திறந்த வீடு




தலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை!! :-))

அப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான்!! தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி!! அதான் உடனே நம்ம  டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.

சரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ்!! (தமிழ்ல தலைப்பு வச்சா,  ஏதோ ஃப்ரீயாமே!! நான் தமிழேண்டா!!) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்!! :-(

teachers.saschina.org

என் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம்? பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள்  ஒதுக்கி, மாணவர்களின்  வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.

இம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்(!!) வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.

பிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள்! ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என்  அனுபவங்கள்!!

அன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு!! என் பிள்ளைங்க அப்படி!!

“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான்!! இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்!!

ஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை!) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.

அதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில  ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம்!! அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு!!”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல? வழிஞ்சுவச்சேன்!!

அதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து  ”சொல்லிடவா?” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே?”ன்னு நான் கத்தாத குறைதான்!! மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.

இப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல? நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்!! ;-)))

சின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல  டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா!! சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு!! அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்!! அப்பவே!!

நினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active!! but good in studies, so ok!!" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய?

ஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க? ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்!!

என் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.

சரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே? வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்!!

 
  

Post Comment

52 comments:

எல் கே said...

//இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே? வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்!!///

பொண்ணுங்கதான் அப்பா மாதிரி. பசங்க அம்மா மாதிரி

எல் கே said...

ரெண்டும் ரெட்டை வாலுங்களா??

ஸாதிகா said...

முதல் ரெண்டு பாராவும் செம மொக்கை.கழுத்து அறுபட்டுப்போச்சு:-)

ஹுஸைனம்மா said...

//ஸாதிகா said...
..செம மொக்கை.கழுத்து அறுபட்டுப்போச்சு//

சக்ஸஸ்!! சக்ஸஸ்!! வெற்றி!! வெற்றி!! :-))))))))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//“போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்!! அப்பவே!!//

He is like his father.

//“Too much talkative and too much active!! but good in studies, so ok!!" //

may be he is gud in studies like his father.

//“என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான்.//

awesome, brilliant like his father.

ஸாதிகா said...

இங்கே ஓப்பன் டே என்று சொல்லுவார்கள்.எனது உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள் ஹுசைனம்மா.ஓப்பன் டே அன்று என் பையன் டீச்சர் முன்னே செய்த காமெடியும்,குறும்பையும் கண்டு ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போய் விட்டேன்.டீச்சரும் சிரித்து மகிழுகின்றார்."ரெண்டு போடு போடுவதை விட்டுட்டு இப்படி என்கரேஜ் பண்றீங்களே என்று ஆதங்கத்துடன் வினவினால் "இப்படித்தான் விட்டுபிடிக்கவேண்டும்.இல்லேன்னா நம்மளையே நிர்வாகம் கேள்வி கேட்டுடுவாங்க.கவர்ன்மெண்ட் ரூல்ஸ் அப்ப்டி இருக்கு"என்கிறார்.என்னத்தை சொல்ல...?

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

ஏன்ப்பா ஹுசைனம்மா,என் கழுத்து அறுபடுறதில் உள்ள சந்தோஷத்தை பாருங்களே.ஏன் இந்த கொல வெறி..?அவ்வ்வ்வ்வ்...

ஸாதிகா said...

//பொண்ணுங்கதான் அப்பா மாதிரி. பசங்க அம்மா மாதிரி//ஹ்ம்ம்ம்ம்...காலர் வச்ச சுடி போட்டு இருந்தால் காலரை தூக்கிவிட்டுக்குங்க.

Ahamed irshad said...

:)

மாதேவி said...

:))

அன்புடன் அருணா said...

ம்ம்ம் திறந்த வீட்டுலே அப்பப்போ டீச்சருங்களுக்கெல்லாம் கதிகலங்கும்....ஏன்னா நிறைய பேரன்ட்ஸ் டீச்சர்களைப் பற்றி மேலிடத்தில் மாட்டி விடுவதும் அன்னிக்குத்தான்!!

ஹுஸைனம்மா said...

வாங்க எல்.கே. நீங்க சொன்னது செல்லாது, செல்லாது.. பசங்க அம்மா மாதிரிலாம் இல்லை; அப்பா மாதிரிதான். ஆனா, அம்மாவைப் பிடிக்கும்.

ஹுஸைனம்மா said...

வாக்க ஸாதிகாக்கா. என் பதிவு மொக்கைன்னு நீங்க நிரூபிச்சுட்டீங்க, அதான், சக்ஸஸ்னு சந்தொஷப்பட்டேன்.

//"ரெண்டு போடு போடுவதை விட்டுட்டு இப்படி என்கரேஜ் பண்றீங்களே என்று ஆதங்கத்துடன் வினவினால் //

ஆமாக்கா, டீச்சர்ஸ் ரொம்ப விட்டுப் பிடிக்கிறாங்க இப்பல்லாம். காலம் அப்படியிருக்கு.

ஒருமுறை டீச்சரிடம், என் பெரியவன் கணக்கு, அறிவியல்ல நல்ல மார்க் எடுக்கிறான். ஆனா, ஆங்கிலம், சோஷியல் சயின்ஸில் எப்பவும் குறையுதேன்னு கேட்டப்ப, கண்டிப்பார்னு நினைச்சா, அவன் முன்னாடி வச்சே, “அப்படின்னா மக்-அப் பண்ணாம எழுதுறான்னு புரிஞ்சுக்கோங்க”ன்றார். அவ்வளவுதான், அவனைக் கையில பிடிக்க முடியல இப்பல்லாம்.

ஹுஸைனம்மா said...

அபு நிஹான் - வாங்க.

//brilliant like his father.//

இருந்துட்டுப் போட்டும். ஆனா, சேட்டையும் வாயும் கூட அப்பா மாதிரியேதான்!!

ஹுஸைனம்மா said...

அருணா டீச்சர் - வாங்க. ஆமாங்க, சிலர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா பேசிகிட்டிருப்பாங்க. டீச்சரைப் பாத்தா பாவமாருக்கும்.

போன மாசம்கூட சின்னவன் சொன்னான், அவன் கிளாஸ்ல உள்ள ஒரு பொண்ணோட அம்மா டயரில ஒரு பக்கத்துக்கு ஏதோ எழுதிக் கொடுத்ததைப் பாத்து டீச்சருக்கு கண்ணெல்லாம் நிறைஞ்சிடுச்சாம். இப்ப அந்தப் பொண்ணை வேற செக்‌ஷனுக்கு மாத்திட்டாங்களாம்.

ஆனா சில டீச்சர்ஸ் ரொம்ப லெதார்ஜிக்கா இருப்பாங்க. அப்படி நம்ம பிள்ளைகளுக்கு அமைஞ்சிட்டா கஷ்டம்தான்.

கருத்துக்கு நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//“Too much talkative and too much active!! but good in studies, so ok!!"

முதல் பாதி அம்மா மாதிரி, ரெண்டாவது பாதி அப்பா மாதிரி போல :)) சம உரிமை :))

எந்தம்பியும் இப்பிடித்தான் இருந்தான் ஹூசைனம்மா.. பசங்க கொஞ்சம் விளையாட்டாத் தான் இருப்பாங்க போல..

Prathap Kumar S. said...

//தலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி//

ஸாரி... கனவுல கூட நினைக்கமாட்டோம்....உங்களுக்கு இப்படி வேற நினைப்பு இருக்காக்கும்...

Prathap Kumar S. said...

பொதுவா பசங்கதான் பொண்ணுங்களை விட ப்ரில்லியண்ட்ஸ்...ஆனா இநத பொண்ணுங்கத்தான பொறாமைல பசங்களை வேணும்னே டிஸ்டர்ப் பண்ணிவிட்ருதுங்க... இந்த உண்மை உங்க பையன் விசயத்துல ப்ருவ் ஆயிடுச்சு...:))

ஆனா உங்க பையன் இவ்ளோ சீக்கிரம் டிஸ்டர்ப் ஆயிடுவாருன்னு நினைக்கலை... u must proud of him :))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//முதல் பாதி அம்மா மாதிரி, ரெண்டாவது பாதி அப்பா மாதிரி போல :)) சம உரிமை :))//

ரிப்பீட்டு

Chitra said...

வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லைன்னு சொல்லுங்க! கலக்கல் பதிவுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹ்ஹா.. செம ஜாலியா எழுதி இருக்கீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹ்ஹா.. செம ஜாலியா எழுதி இருக்கீங்க..

அரபுத்தமிழன் said...

//தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே//
சேச்சே அப்படியிருக்காதே, சேர்ந்து வந்தாதானே இப்படியிருப்பாக :)

//ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா//
தாய் மட்டும்தானே ஈன முடியும். என் நோற்றான் கொல்'லுவதுதான் தந்தை.

//நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்//
ஹூக்கும், எடுக்கிறவங்களாயிருக்கும் :)

Rithu`s Dad said...

//“Too much talkative and too much active!! but good in studies, so ok!!" //

இப்படி இல்லாம இருந்தா தான் கவலைப்படனும் ஹுஸைனம்மா..

பசங்க தானே பாருங்க சூப்பர வருவாங்க..

Jaleela Kamal said...

ம்ம்ம் ஓப்்ன் ஹவுஸ் நாலே கல்யான வீடு மாதிரி தான்..
சில பேர் மணிகன்னா அரைச்ச மாவையே திருப்பி ்ிரு்்பு அரைப்பா்்க ,
பின்னாடி இத்த கும்பல் இருக்கேன்னு கவலையே ப்்்் மட்டாங்கள்.

மனோ சாமிநாதன் said...

மிகவும் சுவாரஸ்யமான பதிவு மீண்டும் உங்களின் சரளமான நடையில்!
எப்போதும் பிள்ளைகளுக்காக டீச்சரைப்போய்ப் பார்க்கப்போகும்போது நமக்குத்தான் பதட்டமிருக்கும். அதை அப்படியே அழகாக எழுதியிருக்கிறீர்கள் !
ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம் ஹுஸைனம்மா! 'மொக்கை' என்பதற்கு சரியான அர்த்தம் என்ன?

Anisha Yunus said...

//என் பையனை அவங்க டீச்சர் கையில ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம்!! அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு!!”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம்.//
அது வெளயாட்டு வயசு!!

//அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. //
ஹெ ஹெ அது வாலிப வயசு..!!

//இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு!!//
இது இள வயசு....!!

//...அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்!!//
ஹெ ஹெ...இதெல்லாம் நாளைக்கு சவுதி ஹிஸ்டரி புக்ஸ்ல வரும், பிள்ளைங்க படிப்பாங்க....அங்... பள்ளிக்கூடம் போகற குழந்தைகள்ன்னாலே தியாகிகள்தானே....

:)) ஹி ஹி...முறைக்காதீங்க ஹுஸைனம்மா... எங்க வீட்டுல இன்னும் இதெல்லாம் அனுபவிக்கலை...ஹ.. எங்கம்மா அப்பா முழிச்ச முழியெல்லாம் நாங்களும் முழிக்காமலா போகப் போறோம்.. :))

வல்லிசிம்ஹன் said...

ஓப்பன் ஹவுசையும் அருமையா அனுபவிக்க வச்சிட்டீங்க ஹுசைனம்மா.. சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்கிறது:)

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான வால்களா இருப்பாங்க போல...!

போளூர் தயாநிதி said...

thaththuvangal palavitham
polurdhayanithi

kavisiva said...

ரெட்டை வாலுங்களா?! :-). பசங்கன்னா அப்படித்தான் இருக்கணும். சும்மா உட்கார்த்தி வச்ச இடத்துல தேமேன்னு இருந்தா சுவாரசியமா இருக்குமா என்ன :-).

புள்ளைங்க வாயடிக்கறதுல அம்மா மாதிரி. படிப்புல அப்பா மாதிரி :))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

புள்ளைங்க வாயடிக்கறதுல அம்மா மாதிரி. படிப்புல அப்பா மாதிரி :))

:)

இதை நான் வழிமொழிகிறேன்

☀நான் ஆதவன்☀ said...

//ஹுஸைனம்மா said...

//ஸாதிகா said...
..செம மொக்கை.கழுத்து அறுபட்டுப்போச்சு//

சக்ஸஸ்!! சக்ஸஸ்!! வெற்றி!! வெற்றி!! :-))))))))
//

:)))))))

R. Gopi said...

விழுந்து விழுந்து சிரிச்சதுல அபார்ட்மென்ட் டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு போச்சு. உங்களால செலவு இப்போ:)))))))

அப்புறம் இந்தப் பதிவு மொக்கைன்னு யாரும் சொல்ல முடியாது. இதை நான் சீரியஸா சொல்றேனாக்கும்.

Thenammai Lakshmanan said...

பொடின்னா பொடி செம்ம பொடி.. ஹுசைனம்மா.. இப்படி காரசாரமா ஒரு பதிவு படிச்சதேயில்ல.. என்னா காரம்.. என்னா கிண்டல்.. கொஞம் மூக்குப் பொடி வேற தூக்கல்.. பாராட்டா., கிண்டலான்னு தெரியாம உங்க ரங்க்ஸ் போல நானும் ஞே..

ராமலக்ஷ்மி said...

பள்ளிக்குப் பள்ளி திறந்த வீட்டுக் காட்சிகள் இப்படியாகதான் இருக்கின்றன. கண் முன் கொண்டு வந்து விட்டுள்ளீர்கள்!

பசங்க.. , விடுங்க:)
வளர்ந்தா பொறுப்பு வந்துடும்!

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - வாங்கப்பா. எனக்கு இந்த விஷயத்துல ஒரு உரிமையும் வேண்டவே வேண்டாம்!! All credit to his father alone. ;-)))

பிரதாப் - //கனவுல கூட நினைக்கமாட்டோம்// அதானே, பாம்பின்கால் பாம்பறியும்!! :-))

அபு நிஹான் - வாங்க; வீட்டுல கைகட்டி தலையாட்டுகிற பழக்கத்துல, இங்கயும் நிறைய ரிப்பீட்டுகளைப் போட்டுருக்கீங்க போல!! :-))))

ஹுஸைனம்மா said...

சித்ரா - என்னது கலகலப்பா? கைகலப்புக்குப் பஞ்சமில்லன்னு வேணா சொல்லலாம்!! :-))

முத்து அக்கா - ஜாலியா? உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி, வெளியில சக்கரவர்த்தி கதைதான்!! :-)))

அரபுத்தமிழன் - சேந்து வரும்போது பவ்யமாயிருந்தா அதுக்குத் தனியாவுல்ல ஒரு பாட்டு கேக்க வேண்டியிருக்கும்!!
ஒழுங்கா நீங்களே சம உரிமை கொடுத்துட்டா, நாங்க ஏன் எடுக்கிறோம்??

ஹுஸைனம்மா said...

ரீத்து அப்பா - நன்றிங்க வாழ்த்துக்கு.

ஜலீலாக்கா - வாங்கக்கா. ஆமா, ரொம்ப சீரியஸா சிலபேர் பேசிகிட்டிருப்பாங்க.

அன்னு - வாங்க. யானைக்கொரு காலம்னா, பூனைக்கொரு காலம் வராமலாப் போயிடும்!! அப்பப் பாத்துக்கறேன் உங்களை!! ;-)))))

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - வாங்கக்கா. மொக்கைன்னா, அது வந்து... சும்மா நேரம் போகலைன்னா யார்கிட்டயாவது உக்காந்து வெட்டியாப் பேசிப் பொழுதைப் போக்குவோம்லியா, அதப் போலன்னு சொல்லலாம்.

(கொஞ்ச நாள் முன்னாடி இன்னொரு மூத்தப் பெண் பதிவரும் என்னிடம் ‘கவுஜை’, ‘அவ்வ்வ்வ்’ போன்ற பதிவுலகக் கலைச்சொற்களுக்குப் பொருள் கேட்டார்!! அது ஏன் என்னைப் பாத்து...) ;-))))))))

ஹுஸைனம்மா said...

வல்லிம்மா - வாங்க. நன்றி.

ஸ்ரீராம் சார் - ஆமாங்க. நன்றி.

கவிசிவா - வாங்கப்பா. என் புள்ளைங்க அப்பா மாதிரிதான்னு நீங்களும்தானே முன்னாடி சொன்னீங்க? அதென்ன அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு? ;-)))

ஹுஸைனம்மா said...

ஆதவா - வாங்க.

தேனக்கா - வாங்க. ரங்ஸுக்கு இது பாராட்டில்லன்னு நிச்சயமாத் தெரியும். என்னிக்கு அந்தத் தப்பெல்லாம் செஞ்சிருக்கேன் நான்? ;-))))

ராமலக்‌ஷ்மிக்கா - வாங்க. ஆமாக்கா, பல வீடுகளிலும் நடக்கிறதுதான். ஆனாலும், இந்தப் பெண் குழந்தைங்க வச்சிருக்கவங்க, பாராட்டுகளை மட்டுமே வாங்கிகிட்டு வாய் கொள்ளாப் பாராட்டோட போறதைப் பாத்தா.. கொஞ்சமாப் பொறாமை.. ;-))))

மனோ சாமிநாதன் said...

பிரியாமானவர்களிடம்தானே கேட்கத்தோணும் ஹுஸைனம்மா? அதோடு, தற்போது சர வெடி வெடிக்கும் எழுத்துத்திறமையுள்ள‌ உங்களிடம் கேட்காமல் யாரிடம் போய் கேட்பது?

R. Gopi said...

என்னுடைய பின்னூட்டம் எங்கே?

ஹுஸைனம்மா said...

Gopi, Sorry. Donno how it was missed. Now published. Thanks!!

அம்பிகா said...

ரெண்டு பையன்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல.
இதை போல எனக்கும் நிறைய அனுபவங்கள் உண்டு.
இப்படி ஜாலியா எடுத்துகிட்டா பிரச்சனையே இல்லை. ( வேற என்ன செய்ய முடியும்) வளர்ந்த பின் அவர்களின் டார்கெட் நாமாகத்தான் இருப்போம்.
நல்ல ரசனையான அனுபவ பகிர்வு.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்க. //வளர்ந்த பின் அவர்களின் டார்கெட் நாமாகத்தான் இருப்போம். //

அவ்வ்வ்.. பயங்காட்டுறீங்களே!! :-)))

ஜெயந்தி said...

தாயப்போல பிள்ள, நூலப்போல சேல.

ஜெய்லானி said...

//கொஞ்ச நாள் முன்னாடி இன்னொரு மூத்தப் பெண் பதிவரும் என்னிடம் ‘கவுஜை’, ‘அவ்வ்வ்வ்’ போன்ற பதிவுலகக் கலைச்சொற்களுக்குப் பொருள் கேட்டார்!! அது ஏன் என்னைப் பாத்து...) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!! :-))

நானானி said...

//என் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.//

இம்மாதிரி ஆசிரியர்கள் எல்லா குழந்தைகளுக்கும் அமைந்தால்....ஆஹா! பிள்ளைகள் பிற்காலத்தில் பல திறமைகளோடு வெளிவருவார்கள்.

நல்லா ரசிச்சு சிரிச்சு படிச்சேன்!
அதென்ன கடைசி பாராவில் ஒரு மிரட்டல்?

ஹுஸைனம்மா said...

ஜெயந்திக்கா - இல்லவே இல்லை. "like father, like son"தான் கரெக்ட்!!

ஜெய்லானி - உங்ககிட்டயும் கேட்டாங்களா? :-))

நானானி மேடம் - வாங்க. //கடைசி பாரா மிரட்டல்// - ஹி.. ஹி.. வீட்டில அப்பவி சவுண்ட் விட்டே பழகிப் போச்சா, அதான் பதிவுலயும்.. :-)))