Pages

அம்மாவும், மனைவியும்




 
  
போன பதிவுல சொன்ன மாதிரி, எங்க வீட்டுல ரொம்பவே சிம்பிளான சாப்பாட்டு முறைதான். அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்; மற்ற நாட்களில் சுத்த சைவம்தான். எங்க ஊர்ல முட்டையும் சைவம்தான் என்று அறிந்து கொள்ளவும். ஏன்னா,  முட்டையெல்லாம்  ‘ஏழைகளின் அசைவம்’!!

ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.

இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல!!

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே,  காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.

ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.

மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?

அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும்.  இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு  தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!

இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.

இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?

இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!

அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.  ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு?”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே?”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க.  கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ? புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!
 
   

Post Comment

56 comments:

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு. ரங்க்ஸுக்கு வெறும் சூப் மட்டும் போதும்?

வல்லிசிம்ஹன் said...

அருமையான அம்மா கற்றுத்தந்த சிக்கனம் பிற்காலத்தில் சேமிக்க உதவி. சிக்கனத்திலிருந்து பெருந்தனத்துக்கு மாறுவது சுலபம் பா. அதை உங்கள் அம்மாவீட்டில் அழகாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அருமையாக எழுதி இருக்க்கிறீர்கள். ஹுசைனம்மா.

வெங்கட் நாகராஜ் said...

அம்மா, பாட்டி, போன்ற பெரியவங்க சாப்பாடு போட்டு சாப்பிடணுங்க, “இன்னும் சாப்பிடுன்னு பரிவா சொல்லி போடுவதே, வயிறு நிரம்பினமாதிரி இருக்கும்!. நல்லா எழுதி இருக்கீங்க.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா ஒண்ணுமில்லை ஹுசனம்மா.. உருண்டு பெரண்டு சிரிச்சேன்..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடிச்சான்பாருங்க பையன்..:))

Avargal Unmaigal said...

அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்

இரண்டும் மூணும் ஐந்து அப்ப ஐந்து நாள் அசைவம் மீதி இரண்டு நாள்தான் சைவமா? என் கணக்கு சரிதானே? நான் கணக்குல கொஞ்சம் வீக்

தூயவனின் அடிமை said...

திருநெல்வேலி முதல் நாகர்கோயில் வரை , சகோதரி படிக்க சுவராசியமா இருந்தது.அந்த திருநெல்வேலி அல்வா பற்றி கொஞ்சம் சொல்ல கூடாதா? .

Chitra said...

இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?


......அதை விட சீக்கிரமாகவே வந்துரும். சமர்த்து பொண்ணுங்க!

Chitra said...

ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே?


.......ஹா,ஹா,ஹா,ஹா...... copyright வாங்கி வச்சுடுங்க. கலக்கல் statement !

அம்பிகா said...

\\ப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?\\
அதானே!
கலகல பதிவு. சிரிச்சுகிட்டே படிச்சேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கலகலப்பா இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஹூசைனம்மா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன். ///

சேம் பிளட்.

நானானி said...

ஹூஸைன்னம்மா,

கிட்டத்தட்ட என் கதைதானா...உங்க கதையும்?

எங்கள் வீட்டில் மிதமான காரம். போன இடத்தில் கண்களில் நீர் வடியும் காரம். ஆரம்பத்தில் சொல்லமுடியாமல் திண்டாடி, பின் போனாப் போகுதுன்னு எனக்கு மட்டும் தொட்டுக்க பருப்பும் மிதமான காரமும் கிடைத்தது.


// சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு,//

படிச்சதும் சிரிச்சேன். எப்போ சோதனை கன்னுக்குட்டி ஆவார்?

நிலாமதி said...

நகை ச்சுவை அனுபவ பகிர்வு ........... அழகாயிருக்கு . எல்லார் வீட்டிலையும் இந்த சாப்பாட்டு பிரசினை தானா?

Unknown said...

//வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்!// :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹூசைனம்மா.. நீங்க நல்ல அம்மா.. ரொம்போவே நல்ல மனைவி :)) (சொன்னத அப்படியே வீட்டுல சொல்லிடுங்க :) )

ஹேமா said...

பாவம்பா உங்க பெருச்சாளி.சரியா சாப்பாடு குடுங்க.பாவம்ல !

உண்மையில் ரசிச்சேன் சகோதரி.சின்ன விஷயத்தைக்கூட என்னால் இப்படி நகைச்சுவையாக எழுதமுடியவில்லையேன்னு பொறாமையாவுமிருக்கு.

R. Gopi said...

\\அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது\\

வன்மையாகக் கண்டிக்கிறேன்:)

உங்க ரங்க்ஸ் பாவம். உங்க சமையல் சாப்பிட்டும் வெயிட் போட்டாரா? ஏதவாது நம்புற மாதிரி சொல்லுங்க.

செமை கிண்டல், காமெடி, நக்கல் எல்லாம் இயல்பா வருது உங்களுக்கு. எந்த ஊர் நீங்க? தின்னவேலியா, மருதையா, கும்பகோணமா:)

GEETHA ACHAL said...

ஆஹா...எப்படி தான் உங்க மாமியார் வீட்டில் விதவிதமாக சமைக்கின்றாங்களே( உங்க வீட்டிக்கு எங்களை கூப்பிடமாட்டிங்களா...(சாரி...உங்க மாமியார் வீட்டுக்கு).....ரொம்பவும் பொறுமை தேவை...நம்பல்லாம் நிறைய அவங்களிடம் கற்று கொள்ளவேண்டியது தான்...
சூபப்ர்ப் பதிவு...

தெய்வசுகந்தி said...

ha haha!!

Vidhya Chandrasekaran said...

ஹா ஹா.

இந்த க.மு க.பி சமையல் பெரிய கொடுமை. எங்கப்பாவுக்கு சுகர் இருந்ததால வீட்ல டயட் சமையல் தான். எங்க மாமியார் வீட்ல நேரெதிர். பொரியலுக்கு அரை மூடி தேங்காய் போடுவாங்க:(

இருங்க நானும் என் பங்குக்கு கொசுவத்தி சுத்தறேன்.

CS. Mohan Kumar said...

நகைச்சுவை + இயல்பு = இந்த பதிவு

தராசு said...

//அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது.//

இந்த பெண்ணாதிக்கத்தை ரங்கமணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ரங்ஸ் எல்லாம் அலை கடலென ஆர்த்தெழுந்து வாரீர். போருக்கு அழைத்திருக்கிறார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

சோதனை பெருச்சாளி கலக்கல்..
எல்லா அம்மாக்களும் அப்படி தான் உண்மை.நல்ல பதிவு

சிநேகிதன் அக்பர் said...

//நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!!//

//முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், //

இப்படித்தான் எல்லோரும் நினைக்கிறீங்களா :)

பையன் பஞ்ச் சூப்பர்.

சிநேகிதன் அக்பர் said...

சொல்ல மறந்துட்டேன்...

உங்களுக்கு நகைச்சுவை எழுத்து கைகூடி வருது.

எம் அப்துல் காதர் said...

//இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம். //

ம்ம்ம் நம்பிட்டோம்!!

//புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு//

நீங்க எம்புட்டு நல்லவங்க?? :))

//ரங்ஸை சோதனை எலியா வச்சு//

அவ்வ்வ்வவ்....!!!

//ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார்//

:))

// “அதான் மூணு தோசை வச்சேனே?”ன்னு//

எங்க உம்மலாம் நான் அஞ்சு தோசை சாப்பிட்டு விட்டு, வயிறு நெறஞ்சு போச்சுன்னு சொன்னாலும், "எங்க ரெண்டு தோசை தானே சாப்பிட்டேம்பாங்க!!" (வாழ்க அம்மா'ஸ்)

----------------------

// இந்த பெண்ணாதிக்கத்தை ரங்கமணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ரங்ஸ் எல்லாம் அலை கடலென ஆர்த்தெழுந்து வாரீர். போருக்கு அழைத்திருக்கிறார்கள்.//

ம்ம்ம்.. வகையா மாட்டி உட்டுடாதீங்க boss. திரும்ப வீட்டுக்கு வரணும்ல :)))

Ahamed irshad said...

சிரிப்பான‌ ப‌திவுங்க‌ ஹீசைன‌ம்மா..Nice Sharing..

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் க்ளைமேக்ஸ் :)))



இப்படிக்கு
பின்னால உபயோகப்படும்னு இப்பவே தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு எலி :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சமையல்ல கலக்கறீங்க போங்க..

சோதனை பெருச்சாளி :)))))))))))))

ஹுஸைனம்மா said...

ஹை அமித்து அம்மா, வந்துட்டீங்களா? நலம்தானே எல்லாரும்?

ADHI VENKAT said...

நல்ல கலக்கலான பகிர்வு.

vanathy said...

//ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். //
haha... super. I think you are really a great chef.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பெரும்பாலான வீட்டுல இது தான் நடக்குதா..

இப்படிக்கு..

எலியாக இருந்து பெருச்சாளியாக மாறி வருபவன்.

மனோ சாமிநாதன் said...

"இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார்."
என்ன அருமையான விமர்சனம் உங்களைப்பற்றி! விட்டால் உங்கள் வீட்டுக்காரர் உங்களை விடவும் அருமையாக எழுதுவார் போலிருக்கிறது! என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!!
அருமையான நக்கல், நகைச்சுவை கலந்த பதிவு!
அதுசரி, இந்த 'பாலாடை', 'ஓட்டப்பம்' இதற்கெல்லாம் சமையல் குறிப்பு கொடுக்கக்கூடாதா?

மாதேவி said...

ஹா...ஹா.....

"வள்ளியூர் வரை வந்தாச்சு" வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு :))

கோமதி அரசு said...

அம்மாவும்,மனைவியும் என்ற பதிவின் தலைப்பும்,நீங்கள் நகைச்சுவை கமழ எழுதியவிதமும் அருமை.

உங்கள் மகனின் பேச்சு அதைவிட அருமை.

ஹுஸைனம்மா said...

கந்தசாமி சார் - வாங்க. சூப் கொடுக்கிறதும் நல்ல ஐடியாதான். செய்றேன் சார்.

வல்லிம்மா - வாங்க. ஆமா, கிராமத்து சிக்கனத்திலிருந்து பட்டணத்து தாராளமயத்தைக் கண்டு கொஞ்சம் பயமும் வந்துது அப்போ. இப்போ என் மாமியார்கிட்ட “சிக்கனமான மருமக”ன்னு பேர் வாங்கிட்டேனே!! :-))

வெங்கட் நாகராஜ் சார் - வாங்க. ஆமா சார், எத்தனை வயதிலும் பாட்டியோ, அம்மாவோ பரிமாற சாப்பிடுவது ஒரு சுகமே. நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

தேனக்கா - வாங்க; என்ன செய்ய, இப்படியே சிரிச்சுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கு!!

முத்தக்கா - ஆமாக்கா, பையன் அப்பப்ப அப்பாவையே மிஞ்சிடுவான் பஞ்ச் டயலாக்ல!!

அவர்கள் உண்மைகள் - வாங்க; ரெண்டும் மூணும் ஆறுங்க!! கணக்கு பண்றதுல கரெக்டா இருக்கணும்!! :-)))

இளம் தூயவன் - வாங்க. அல்வா கொடுக்கத்தான் தெரியும் எனக்கு!! நன்றி.

சித்ரா - வாங்கப்பா. அதெல்லாம் ஓரளவு நாகர்கோவில் டேஸ்டுக்கு வந்தாச்சு; ஆனாலும் ஆம்பளைங்களுக்கு அம்மா சமையல்தானே பெஸ்ட்? அதனால ஒத்துக்க கஷ்டமாருக்கு. காப்பி ரைட் ஐடியா நல்லாருக்கே!! நன்றி.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்கப்பா. நன்றி!!

ஸ்டார்ஜன் - வாங்க. நம்ம திருநெல்வேலி பக்கம் எல்லாருமே சாப்பாட்டு விஷயத்துல சிம்பிள்தான் போல!! நன்றி.

நானானி மேடம் - வாங்க. காரம் - அய்யோ அதச் சொல்ல் மறந்திட்டேனே!! மூணுவேளையும் ஆனந்தக் கண்ணீர்தான் போங்க!! நன்றி.

நிலாமதி - வாங்க. அங்கயும் இந்தக் கதைதான் போல!! நன்றி.

சுல்தான் பாய் - வாங்க; நன்றி!

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - வாங்கப்பா. அவங்களுக்கே தெரியும் நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்னு!! :-)))

ஹேமா - வாங்க. எனக்கு உங்களைப் போல கவிதயா எழுதமுடியலையேன்னு பொறாமை!! நன்றி.

கோபி
- வாங்க. ஆமா, மிஞ்சினது மீதியெல்லாம் வேஸ்ட் பண்ணப் பிடிக்காது எனக்கு. அதைச் சாப்பிட்டா குண்டாத்தானே ஆகணும்? அப்படித்தான் ஆனார்!! :-))) தின்னவேலிங்க எனக்கு.

அப்புறம் வன்மையா கண்டிக்கிறீங்களாக்கும்? வீட்டில மூணு பசங்களோட ஒத்தையா நின்னு போராடிகிட்டிருக்க எனக்குத்தானே தெரியும் அந்தக் கஷ்டம்!! :-)))

கீதா ஆச்சல் - நீங்கள்லாம் சமையல் கில்லாடிகள். அதனால நான் உங்களை என் மாமியார் வீட்டுக்குத்தான் அழைப்பேன், கவலைப் படாதீங்க!!

ஹுஸைனம்மா said...

தெயவசுகந்தி - வாங்க. நன்றி.

வித்யா - வாங்க. எல்லாருக்குமே க.மு/க.பி. சமையல் கதை இருக்கும்போல!! நீங்களும் எழுதுங்க.

மோகன்குமார் - வாங்க, நன்றி.

தராசு - அதானே, பசங்க அராஜகத்தைப் பத்தி எழுதுனவுடனே வந்து அட்டெண்டென்ஸ் கொடுத்திட்டீங்க பாருங்க!! நானும் போராட ரெடி!! வீட்டில மூணு பேர சமாளிக்கீற எனக்குல்ல கஷ்டம் தெரியும்!!

அமுதாக்கா - வாங்க; நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அக்பர் - வாங்க. ஹி..ஹி.. உங்க வீட்டிலயும் அப்படித்தான் சொன்னாங்களா? ரொம்ப நன்றி.

அப்துல் காதர் - வாங்க. ஹி.. ஹி.. உங்க தாராளமான பாராட்டுகள் எனக்கு ரொம்ப சந்தோஷம் தருது. ரொம்ப நன்றி!!
//வகையா மாட்டி உட்டுடாதீங்க boss. திரும்ப வீட்டுக்கு வரணும்ல// அந்த பயம்....

இர்ஷாத் - வாங்க; நன்றி.

ஆதவன் - வாங்க. இப்ப ஹோட்டல் எலி, எதிர்காலத்துல வீட்டு எலி?

அமித்தம்மா - வாங்க. சமையல் பதிவுகள்ல கலக்கிறேன்னு சொல்லுங்க. சமையல்னாலே எனக்கு வயித்தக் கலக்கும்!! :-)))

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - வாங்க; நன்றி.

வானதி - வாங்கப்பா; இல்லப்பா, செஃப்லாம் இல்லை. ஏதோ வயித்துப்பாட்டுக்கு செஞ்சுக்குவேன், அவ்வளவுதான்!! நன்றி.

செந்திவேலன் - வாங்க. அங்கயும் ஸேம் பிளட்தானா? ஏதோ, எங்க கஷ்டம் புரிஞ்சாச் சரி!! நன்றி.

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - வாங்கக்கா. எப்பவும் என்னை மட்டும்தான் பாராட்டுவீங்க, இப்ப என்னவரையுமா? நல்லவேளை அவருக்குத் தமிழ் பேச/வாசிக்க மட்டுமே தெரியும் என்பதால், என் பதிவின் வாசகர்களைத் தட்டிக் கொண்டு போகும் வாய்ப்பு இல்லை!!

சமையல் குறிப்பா, நானா? இல்லைக்கா, வீட்டுக்கு வாங்கக்கா, செஞ்சுவேணா காட்டுறேன் (பயப்பட வேண்டாம்).

மாதேவி - வாங்கப்பா, நன்றி.

தென்றல் - ரொம்ப சந்தோஷம் நீங்க ரசிச்சதுக்கு!!

enrenrum16 said...

உங்க சமையல் வள்ளியூர் வரை வந்துடுச்சுன்னு உங்க ரங்க்ஸ் சொன்னாலே உங்க சமையல் நாகர்கோவில் தாண்டி கேரளா போயிடுச்சுன்னு அர்த்தம்...எந்த ரங்க்ஸ்தான் தங்க்ஸோட சமையலை முழுசா பாராட்டியிருக்காங்க?...

அம்மா சமையல் vs மாமியார் சமையல்...நல்ல காமடியான கம்பேரிசன்.

ஆமினா said...

////ரங்ஸை சோதனை எலியா வச்சு////
அடப்பாவமே.....

சுவையான அனுபவம் சூப்பர்.....

kadaroli said...

etho unka veetukarar paavam appaviya irukarundrathunala eli peruchalinellam solreenka... neenka enna aishwarya rai, simran mathiri olliya irukeenkalo????

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - வாங்க. நீங்க சொல்றதும் கரெக்ட்தான். யார்தான் பெண்டாட்டி சமையலை முழுசாப் பாராட்டிருக்காங்க? உங்க கருத்து கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்குப்பா. நன்றி.

ஆமினா - வாங்க. நன்றி.

காதர் - என் வீட்டுக்காரர் அப்பாவின்னு நீங்க அப்பாவியா நம்பிகிட்டுருக்கீங்க!! எந்த நடிகையும் என் ரேஞ்சுக்கு வரமாட்டாங்க.

Mohamed G said...

arumaiyaana pakirvu nalla thairiyasaali ninghal,valthukkal.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?//
மருமக வர்றதுக்குள்ள வந்துட்டீங்கன்னா சரி தான்... இதுக்கு தான் நான் எந்த ஊர் ஸ்டைல்ம் காட்டுறதில்ல...என் ஸ்டைல் தனி ஸ்டைல்னு ஹா ஹா ஹா...

//இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?” //
ஹா ஹா ஹா.. புலி குட்டிய வளக்கறீங்க போல இருக்கே அக்கா... சூப்பர் ... ஹா ஹா ஹா... ஆனா engineer அண்ணா பாவம்தான்... ஹா ஹா

Sangeetha said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க உங்கள் மகனின் வார்த்தைகள் அருமை
அள்ளி போடும் வயதில் மகனாக இருக்கிறார்கள் அவர்களும் வஞ்சனை இல்லாமல்
போடுகிறார்கள். ஆனால் நம்மிடம் வரும் போது டயட் ஏஜ் வந்து விடுகிறது, நாம் பொல்லாதவள்
ஆக தெரிகிறோம்

Sangeetha said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க உங்கள் மகனின் வார்த்தைகள் அருமை
அள்ளி போடும் வயதில் மகனாக இருக்கிறார்கள் அவர்களும் வஞ்சனை இல்லாமல்
போடுகிறார்கள். ஆனால் நம்மிடம் வரும் போது டயட் ஏஜ் வந்து விடுகிறது, நாம் பொல்லாதவள்
ஆக தெரிகிறோம்

Sangeetha said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க உங்கள் மகனின் வார்த்தைகள் அருமை
அள்ளி போடும் வயதில் மகனாக இருக்கிறார்கள் அவர்களும் வஞ்சனை இல்லாமல்
போடுகிறார்கள். ஆனால் நம்மிடம் வரும் போது டயட் ஏஜ் வந்து விடுகிறது, நாம் பொல்லாதவள்
ஆக தெரிகிறோம்

Geetha said...

ஆஹா ரொம்ப இயல்பா நகைச்சுவையோட சூப்பர் பதிவு வாழ்த்துகள்