"ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research..." என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!
எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு. இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!
ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா? அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.
உலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே!!
சாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே! (க்ரீன்) டீக்கும் இதேதான்.
முன்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.
முட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க, நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!
இதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும்? ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. “ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்!!
சாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!! அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)
அட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த தகவல்தான்.
அது மட்டுமா? நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள். உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix)
பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.
மேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!
|
Tweet | |||
53 comments:
முடிவாக அழகாக ஆணித்தரமா சொல்லிட்டிங்க.
ஆராய்ச்சிகளை பத்தி ஆராய்ச்சி செஞ்ச ஆராய்ச்சியாளர் ஹுசைனம்மா வாழ்க
பெஇய ஆராய்ச்சியா இருக்கே. அனைத்தும் பயனுள்ள தகவல்கள் ஹுஸைனம்மா. இதை பற்றி ஆராய்ச்சி செய்த உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.
எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை போலும்.
அழகாக ஆராய்ந்து இருக்கிறீர்கள் .
அழகாக ஆராய்ந்து இருக்கிறீர்கள்
அட வித்யாசமாவும் அருமையாவும் பயனுமுள்ள தொகுப்பு ஹுசைனம்மா
இம்புட்டு ஆராய்ச்சி செஞ்சதுக்கு இந்த வருடத்தின் ”சிறந்த வலையுலக ஆராய்ச்சியாளர்னு ”பட்டம் தரலாம்னு நினைக்கிறேன்.
(விஜய்காந்துக்கு அசிஸ்டெண்டா போகும் யோசனை ஏதும் உண்டா!! இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாம்னு) :))
நாங்களும் கேள்வி கேப்போம்ல!!!!
பயனுள்ள பதிவுன்னு சொல்ல மறந்து போச்சு
நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ஆராய்ச்சி பற்றி செமையா ஆராய்ச்சி பண்ணி விளக்கமா சொல்லிட்டீங்க.இப்படிஅறிவுப்பூர்வமான இடுகைகளையும் அடிக்கடி போடுங்க.
நல்ல பதிவு ஹுஸைனம்மா!
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன தான்.
ஆனாலும் இந்த ஆராய்ச்சிகளெல்லாம் மருத்துவர்களாலும் உலக சுகாதாரக் கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு முட்டை வெள்ளை எத்தனைக்கெத்தனை உடம்புக்கு நல்லதோ, அத்தனைக்கெத்தனை முட்டை மஞ்சள் 1000 மடங்கு கொலஸ்ட்ராலை அதிகரிக்கக்கூடியது என்பதில் இன்றைக்கும் இதய மருத்துவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னர் உபயோகிப்பதால் புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக முன்பு ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அதன்பின் ஸ்வீட்னர் உபயோகிப்பதால் புற்று நோய் பாதிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் மறுபடி சொன்னார்கள். ஆனால் இன்னும் இதய மருத்துவர்கள் அவற்றை உபயோகிப்பது நல்லதில்லை என்றுதான் அறிவுரைக்கிறார்கள்.
நல்லதொரு ஆராய்ச்சி.. உங்களின் ஆராயிச்சியின் மூலம் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.. தகவலுக்கு நன்றி
நல்லாவே ஆராய்ச்சி செஞ்சுருக்கீங்க :-)))
முட்டை, சாக்லெட், பொறிச்சது, வறுத்தது எல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்ன விஞ்ஞானி ஹுசைனம்மா வாழ்க :))
//எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!//
கரெக்ட்..! நல்ல தகவல்கள் மிஸஸ் ஹுஸைன்.
நான் ஒரு படம் பாத்தேன்.. அதுல சிகரெட் கம்பெனிக்காரங்களே சிகரெட் உடம்புக்கு கெடுதலான்னு சைடுல ஆராய்ச்சி பண்ணுவாங்கோ.. பல வருஷ ஆராய்ச்சிக்குப் பிறகும் எங்க ஆராய்ச்சில சிகரெட் பிடிக்கறதுக்கும் நுரையீரல் புத்துநோய்க்கும் தொடர்பு இருக்குன்னு தீர்மானமா சொல்ல முடியலை அப்படிம்பாங்க :) ஆராய்ச்சிக்கு யாரு ஸ்பான்சர் பண்ணுறாங்கன்றதும் முக்கியம்.. :)
"எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!"
இது பாயிண்டு.
ஆனா சிலர் இதை ஒத்துக்கமட்டாங்க :)))
Very very nice post Life itself is a R&D.We learn by experience.By the by i walk barefoot mostly.Plz visit my blog for a nice person topic.
\\ஆராய்ச்சிகளை பத்தி ஆராய்ச்சி செஞ்ச ஆராய்ச்சியாளர் ஹுசைனம்மா வாழ்க\\ ரிப்பீட்டு.
கட்டுரையின் கடைசி வரிதான் பஞ்ச்:)
எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு
OB adkirirathukaaga uruvakapattathu ithu. ivanga than niraya per office la ukkanthu blog eluthurankalam.
, “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!
entha oorla irukeenga. ramar oru fraud nu proof pannitangale theriyatha???
ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா?
ennoda friendoda wife cancer lathan iranthitanga. evlavo try panninaga. evalavo selavu panninaaga..mmmm mudiyala....
சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும்
athu kolkal illay. galaxies. oru galaxy laye billions of planets r there.
சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது
unka payyan sonnana itha????
அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர்
cholestral illatha ennai iruka??? enna ennai?
“ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன
unka ooru abudhabi ya mattum vachi sollakoodathu.....apram nan aluthiduven...enka ooru maduraila lam fresh na oru 1 or 2 days than old not 6 months. ok time up bye.
இந்த பதிவு ரொம்ப சீரியஸ் சமாச்சாரம்னு நிறைய பேர் கமெண்ட் போடாம ஒட்டு மட்டும் போட்டுட்டு ஓடிட்டங்கன்னு நான் ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சிருக்கேன் :))
அருமையான ஆராய்ச்சி செய்திக்கட்டுரை.
மூலிகைப் பெட் ரோல் ராமர் ஆராய்ச்சியாளர் அல்ல. மேலும் விபரங்களுக்கு, http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_27.html
/////பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும். /////
எனக்கு அப்படித் தோன்றவில்லை. அப்பெண்டிக்ஸ் பற்றிய நமது புரிதல் மாறுமே தவிர பரிணாமக் கொள்கையின் அடிப்படை மாற வாய்ப்பில்லை. பரிமாணக் கொள்கைக்கு இவ்வளவு சாதாரண ஆதாரங்கள் மட்டுமே அடிப்படை அல்ல. அவ்வவ்போது கண்டெடுக்கபடும் பழங்கால மிருகங்களின் உடல்கள், உடல்கூறுகள் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளன. இது மிக விரிவாக பார்க்க வேண்டிய சப்ஜெக்ட். இது பற்றிய விளக்கங்களூம் விவாதங்களும் காண,
http://rajasankarstamil.blogspot.com/2010/11/blog-post.html
நன்றி!
அடடே! மாஷா அல்லாஹ்! சூப்பர் ஆராய்ச்சிங்கோவ்!\
\ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-verச. \
அடடா.. நீங்க தூங்கும் நேரத்தில் ஏகப்பட்ட பேர் கம்மன்ட் போட நீங்க விழிச்ச பிறகு அப்ரோவ் பண்ணீங்க போல.. நான் தான் ஏமாந்துட்டேன்
ஹுசைனம்மா, உங்களின் விஞ்ஞானி விசுவரூபம் நல்லாயிருக்கு.
R&D டிபார்ட்மென்டில் வேலை செய்யத்தான் எனக்கும் பிடிக்கும். ஆனால்
அதில் வேலை செய்யும் நிறைய பேர் தன்னையே முதலாளியாக நினைத்துக் கொள்கிறார்கள், அல்லது முதலாளி என்று யாரும் கிடையாது என்று தன்னை நம்புபவர்களையும் வழி கெடுப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
மற்றபடி அறிவைத் தேடும் இவர்கள் மாணவ ஞானிகள்தாம் சந்தேகமில்லை :-)
நல்ல பதிவு நன்றி பதிவி :-)
அடடே நீங்க பண்ண ஆராய்ச்சியில் காணாமல் போன சகோதரி நாஸியாவைக் கண்டு பிடித்து விட்டீர்களே :)
சில ஆராய்சிகள் உண்மைகளை சொன்னாலும், பல ஆராய்சிகள் வியாபார நோக்கத்தோடு வெளியிடப்படுகிறது என்பதே உண்மை.
எப்பிடி,இப்படியெல்லாம் யோசிக்கறீங்க ஹுஸைனம்மா???
அசத்தறேள் போங்கோ....
பயனுள்ள பல நல்ல தகவல்களை பகிந்தமைக்கு நன்றி.
நியூட்டனின் மூன்றாவது விதி மாதிரி எல்லா ஆராய்ச்சிக்கும் எதிர் சைட் ஆராய்ச்சியும் இருக்கு. ஆனால் ஆராய்ச்சிக்கே ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டீங்களே...வாழ்க...
நல்ல ஆராய்ச்சி பண்ணிப் பதிவு போட்டிருக்கீங்க. நல்ல தகவல் தொகுப்பு.
பல்வேறு ஆராய்ச்சிகளை அக்கக்காக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டதால்,இன்றுமுதல் "ஆராய்ச்சியாளர் Dr.ஹுஸைனம்மா"என பதிவர்களால் அன்போடு அழைக்கப்படுவீர்கள்....
//நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது//
இது புதுசால இருக்கு....
ஆகா முட்டை மை ஃபேவரேட்..இனி கணக்கிலாம உள்ளதள்ளலாம்..
//பதப்படுத்தப் பட்ட உணவுகள்//
நீங்க சொல்ரது சரிதாங்க்கா,,,இங்க அத கண்கூடா பாக்கலாம்...நோன்பு டைம்ல...கொஞ்சம் கூட ஆப்பிள் ஆரஞ்சு,வாங்கி மிஞ்சிருச்சு...அது கிட்டதட்ட 1 மாசத்துக்கு மேலையும்,அதன் வெளிப்புறத்தோற்றம் கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் அதே ஷைனிங்கோட இருந்துச்சு..ஆச்சர்யம்தா..
ஆனா இதுதா மேட்டரா????
//நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!!//
மீ ட்டூ....ஆனா ஷூ வாங்குனதோட சரி..
//வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ்//
இந்த விஷயம் நா ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கேன்..
நானும் கேம் பிரியன் தான்,,,அதுக்காகவே இதுமாரி மேட்டர் எல்லா தெரிஞ்சு வச்சுக்கிறது...உங்க பையன்மாதிரி....
நம்ம உட உறுப்புகளின் பயன்பற்றியது..புதிது...
நல்ல தீணீ...என் அறிவுக்கு...
அன்புடன்
ரஜின்
இந்த ஆராய்ச்சிகளே இப்படித்தான் ,இன்னிக்கு பென்சிலின் நல்லதுன்னு சொல்வாங்க.அப்புறம் பென்சிலின் போட்டா அலர்ஜிம்பாங்க.
நீங்க செய்திருக்கிற ஆராய்ச்சிதான் பிரமாதம். நல்ல் பதிவு ஹுசைனம்மா.
//பரிமாணக் கொள்கைக்கு இவ்வளவு சாதாரண ஆதாரங்கள் மட்டுமே அடிப்படை அல்ல. அவ்வவ்போது கண்டெடுக்கபடும் பழங்கால மிருகங்களின் உடல்கள், உடல்கூறுகள் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளன. இது மிக விரிவாக பார்க்க வேண்டிய சப்ஜெக்ட்//
second Mr. pannikkutty ramasamy
தமிழ் உதயம் - நன்றி.
எல்.கே. - நன்றி.
அக்பர் - டாக்டர் பட்டமா? அவ்வ்வ்வ்... வேணாம், வேணாம்.. நானும் விஜயும் ஒரே லெவலா என்னா? நன்றி.
கீதா6 - நன்றி.
தேனம்மையக்கா - நன்றி.
தென்றல் - பட்டம் நல்லாருக்கு; ஆனா, ஏன் எம்மேல காண்டு? //விஜய்காந்துக்கு அசிஸ்டெண்டா // அவ்வ்வ்... என்னைப் புயலாக்கிடாதீங்க, சொல்லிட்டேன்!!
ஆமினா - நன்றி.
ஸாதிகாக்கா - “அறிவுபூர்வமான இடுகை” - இதுல உள்குத்து ஏதும் இல்லியே? :-)))
மனோ அக்கா - வாங்க; //இந்த ஆராய்ச்சிகளெல்லாம் மருத்துவர்களாலும் உலக சுகாதாரக் கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்//
நான் சொல்ல மறந்துட்டதை ஞாபகப் படுத்தீட்டீங்க, நன்றிக்கா. ஆனாலும் சாதாரண மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை; வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் சாதாரணத் தகவல்களையே ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்கள் (றேன்).
சிநேகிதி - வாங்க; நன்றி.
அமைதிச்சாரல் - நன்றி.
பிரதாப் - எல்லாத்தையும் ஏறுக்குமாறாவே புரிஞ்சுக்கிறதை விடமாட்டீங்களா? :-)))
டி.வி.ஆர். சார் - நன்றி.
அஸ்மா - வாங்க; நன்றி.
எல் போர்ட் - கரெக்ட்!! முக்கியமான விஷயம் சொல்லிருக்கீங்க - ஸ்பான்ஸர்களைப் பொறுத்துத்தான் ஆராய்ச்சி முடிவும் கூட!!
முகுந்த் அம்மா - வாங்க; இந்தப் பதிவு எழுதும்போது உங்களை நினைச்சுகிட்டேன். நீங்களும் Research fieldலதானே இருக்கிறாதாச் சொன்னீங்க!
டாக்டர் சார் - ஆமா சார், வாழ்க்கையே ஒரு ஆர் & டி தான்!! நன்றி.
கோபி - வாங்க; நன்றி.
காதர் - வாங்க; எல்லா டிபார்ட்மெண்டிலயுமே ஓபி அடிக்கிறவங்க உண்டுதான். கான்ஸர் வந்து பிழைச்சவங்களும் உண்டு; வெறும் சளித்தொல்லையால் இறந்தவங்களும் உண்டு. ஆரம்பக் கட்டத்தில் எதுவுமே குணப்படுத்தக் கூடியவையே!! எண்ணெயில் கொழுப்பு இல்லை என்று எங்கே சொல்லியிருக்கிறேன்?
மோகன்குமார் - வாங்க; நன்றி!! நீங்கதான் தைரியமா கமெண்டுனதா நினைச்சு ஏமாந்தீங்களா!!
இம்புட்டு ஆராய்ச்சி செஞ்சதுக்கு இந்த வருடத்தின் ”சிறந்த வலையுலக ஆராய்ச்சியாளர்னு ”பட்டம் தரலாம்னு நினைக்கிறேன்//
தாரளமாக தரளாம்.
நல்ல ஆராய்ச்சி ஹுசைனம்மா..
//அறிவுபூர்வமான இடுகை” - இதுல உள்குத்து ஏதும் இல்லியே? //ஹுசைனம்மா,மனதார பாராட்டினாலும் இந்த சந்தேகபுத்தி உங்களை விடாது போல் இருக்கு?:-(
அனைத்தும் பயனுள்ள தகவல்கள் ஹுஸைனம்மா.
ஆராய்ச்சிகளை பத்தி அழகாக ஆராய்ச்சி செஞ்சுருக்கீங்க
ஹீஸைனம்மா,அன்றும்,இன்றும் ஆராய்ச்சி அருமை.
எதுவும் அளவுக்கு மீறாமல் இருந்தால் நல்லது தான்.
நல்ல பயனுள்ள தகவல்கள்.
வாழ்த்துக்கள்!
நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை... ஆனாலும் மனசுல ஆழமா பதிஞ்சத மாற்ற கொஞ்சம் தைரியம்+time வேணும்..
அன்பு சகோதரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!//
மிக சரி...அறியாமையில் உழளும் சிலர் அப்படி நினைக்கலாம்.
நல்ல ஒரு கட்டுரைக்கு நன்றிகள்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஹுஸைனம்மா.
ரொம்ப தெளிவான 'நச்' கட்டுரை.
"நான் ஒரு -தேவையற்ற வஸ்து- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம். பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
-----------------------------------
ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.
-----------------------------------
என் வாழ்வில் எனக்கு அது நடந்தது...
அந்த பில்டிங்கில் மொட்டை மாடிக்கு கீழிருந்து டேரக்டாய் வலப்பக்கம் படியும், முதல் மாடிக்கு கீழிருந்து இடப்பக்கம் படியும் வைத்து கட்டி இருந்தார்கள். ஒருமுறை மொட்டைமாடியில் இருந்து ரொம்ப வேகமாய் துள்ளிக்குதித்து இறங்கும்போது, முதல் படி வழுக்கிவிட தடால் என முதல் படியின் விளிம்பில் பின் பகுதி பட விழுந்து உடனே அது சருக்கிவிட அடுத்த முப்பது படிகளின் முகனைகளிலும் அதே பின் பகுதியில் (பட்டக்சின் மேல்பகுதி-முதுகெலும்பின் அடிப்பகுதி) அதே இடத்தில் தட் தட் தட் என தொடர்ந்து அடிபட, எல்லா படிகளிலும் இடிவாங்கியபின்னர் கடைசி படியில் நிலைகுலைந்து விழுந்தவுடன்.. உடனே மயக்கமானேன்.
அதற்குப்பிறகு நண்பர்கள் மருத்தவமனைக்கு தூக்கி சென்று பின் இடுப்பில் எக்ஸ் ரே எடுத்ததில் 'நோ பிராக்ச்சர்'. 'காக்சிஸ் உங்களை காப்பாற்றியது' என்றார் டாக்டர். அல்ஹம்துளில்லாஹ். டாக்டர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. 'அந்த காக்சிஸ் ஒரு ஷாக் அப்சற்பர் போல முப்பது முறை அமுங்கி அமுங்கி எழுந்திருத்து இருக்கிறது. இந்த வலி சரியாக நிறைய மாதம் ஆகும்' என்றார்.
அப்புறம் ஒருவாரம் படுத்த படுக்கை... குப்புற மட்டும்..! உடலை மடிக்காமல் அப்படியே தூக்கி சென்று என்னை காலைக்கடன் முடிக்க வேண்டி டாய்லட்டில் முன்பக்கம் குப்புற படுக்க வைத்து 'முடிந்தது' என்றவுடன் பிரட்டி பின்பக்கம் (எலும்பை அழுத்தாமல் சரியாக பேசினில் பொருந்த) படுக்கவைத்துவிட்டு கதவைமூடி விட 'முடிந்தவுடன்' கைகள் வேலை செய்ததால் டியுப் மூலம் கழுவிக்கொள்வதில் எனக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. அப்புறம் தூக்கி வந்து விடுவர்... என் பெற்றோர்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தேன்.
ஒருவாரம் கழித்து நடக்க முடிந்தது. நானாகவே படுக்க முடிந்தது. எழ வேண்டினால் கம்பம் போல தூக்கி நேராக நிமித்தி விட மட்டும் பெற்றோர் உதவி வேண்டி இருந்தது.
அடுத்த வாரம் கொஞ்சம் வளைந்தேன்.
பேருந்தில் அமர்ந்து செல்ல ஆறுமாதம் ஆனது. அதுவரை சீட் காலி என்றாலும் நிற்க மட்டும்தான் செய்வேன். வகுப்பிலும் பெரும்பாலும் நிற்பேன்.
படிப்படியாக உட்கார்ந்து...மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க ஒருவருடம் ஆனது. சுத்தமாக வலி மறக்க ஒன்றரை வருடம் ஆனது.
இந்நாட்களில் என்னக்காப்பாற்றியதாக சொன்ன அந்த 'காக்ஸிஸ்' பற்றி படித்தேன். அந்த ரஷ்யன் ஆதர், 'அது ஒரு தேவை இல்லாத எலும்பு' என்று எழுதி இருந்தார். சே.. என்று வேறு சில புத்தகங்கள் பார்க்க இந்தியன் ஆதர்களும் அப்படியே எழுதி இருந்தனர்.
புத்தகத்தை எடுத்துக்கொண்டு டாக்டரை சந்தித்தேன். கேட்டேன். 'எழுதியவருக்கு அங்கே அடிபட விழுந்து அனுபமில்லை போல' என்றார். 'அது இல்லையேல் நீங்கள் கோமவில்தான் என்றென்றும் இருந்திருப்பீர்கள்' என்றார்...! ஏனென்றால் ஸ்பைனல் கார்ட், காக்சிசில் கனெக்ட் ஆகலியாம். அதற்கு மேல் உள்ள முதுகுஎலும்புத்துண்டுகளுடன் தான் கனெக்ட் ஆகி உள்ளதாம். ஒருவேளை காக்சிஸ் இல்லை என்றால் முதுகெலும்பில் அடிபட்டு மொத்த நெர்வும் டிஸ்-அர்ர்ரே ஆகி கட்டாகி காலம் முழுதும் கோமாவில்தான் பிறந்த குழந்தை போலகூட அல்லாமல்.. அழாமல், பசி, தொடு உணர்ச்சி இல்லாமல் கிடந்திருப்பேனாம்..!
காக்சிஸ் - சுபஹால்லாஹ்.
இறைவன் படைப்பில் காக்ஸிசும் மனிதனுக்கு ஒரு இன்றியமையாத எலும்புதான்.
இப்போது சொல்லுங்கள் யாராவது காக்சிஸ் பற்றி அல்லது எதைப்பற்றியாவது தேவையற்றது என்று..!
சகோதரர் பன்னிக்குட்டி ராமசாமி மற்றும் கபீஷ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
----------
அவ்வவ்போது கண்டெடுக்கபடும் பழங்கால மிருகங்களின் உடல்கள், உடல்கூறுகள் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளன.
----------
இல்லை சகோதரரே...அவ்வவ்போது கண்டெடுக்கபடும் பழங்கால மிருகங்களின் உடல்கள், உடல்கூறுகள் மிக முக்கியமான ஆதாரங்களாக பரிணாமத்திற்கு எதிராக உள்ளன என்பது தான் உண்மை. தாங்கள் பரிணாம ஆதாரங்களை நன்கு ஆராய்ந்தால் இதை உணரலாம்.
--------
இது மிக விரிவாக பார்க்க வேண்டிய சப்ஜெக்ட்
--------
உண்மைதான். ஆனால் பரிணாமத்தை மிக விரிவாக ஆராயும் எவரும் குழம்பி போய், "இவ்வளவு ஆதாரங்கள் பரிணாமத்திற்கு எதிராக இருக்கும் போது, ஒரு ஆதாரம் கூட பரிணாமம் வரலாற்றில் நடந்ததாக சான்று பகராத போது, எப்படி இன்னும் சிலர் பரிணாமம் உண்மை என்று நம்புகின்றனர்" என்ற முடிவுக்கு தான் வருவர்.
இந்த தளத்தை விவாத காலமாக மாற்ற நான் விரும்பவில்லை.
இது குறித்த என்னுடைய எண்ணங்களை தொடர்ந்து அறிவியல் ஆதாரங்களோடு எழுதி வருகின்றேன். உங்களுக்கு உண்மையை அறிய வேண்டுமென்ற விருப்பம் இருந்தால் கீழே சுட்டவும்...
---எதிர்க்குரல் - Evolution Theory---
பரிணாமம் என்பது அறியலல்லாத ஒரு நம்பிக்கை. ஒரு யூகமாக (Hypothesis) கூட கருத முடியாத ஏமாற்று வித்தை....
தவறாக ஏதும் பேசியிருந்தால் இறைவனுக்காக மன்னிக்கவும்....
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மிக பயனுள்ள பதிவு.
பருப்ப கடைவது போல் ஆராய்ச்சிய ஒரு கடைய் கடைஞ்டீங்கல் போல
ஹூஸைனம்மா...
அட்டகாசமான, மிகவும் விரிவான ஆராய்ச்சி தாங்கோ....
எதுவுமே அளவோடு இருந்துட்டா, பிரச்சனை இல்லையே!!
பி.ஹெச்.டி.எதுவும் பண்றீங்களா? பண்ண போறீங்களா? எதுவா இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்கள்..
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
நல்ல ஆராய்ச்சிங்க. பல பயனுள்ள தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி.
//ஆராய்ச்சிகளை பத்தி ஆராய்ச்சி செஞ்ச ஆராய்ச்சியாளர் ஹுசைனம்மா வாழ்க//
ரிப்பீட்டு
//(விஜய்காந்துக்கு அசிஸ்டெண்டா போகும் யோசனை ஏதும் உண்டா!! இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாம்னு) :))//
அட்ரா சக்கை அட்ரா சக்கை
//அடடே நீங்க பண்ண ஆராய்ச்சியில் காணாமல் போன சகோதரி நாஸியாவைக் கண்டு பிடித்து விட்டீர்களே :)//
சகோ அரபுத் தமிழன் சரியாக சொல்லியிருக்கிறார், சகோ நாஜியா எங்கிருந்தாலும் பதிவுலகத்திற்கு பதிவெழுத வருக, கமெண்டுகள் மட்டும் எழுதி போக வேண்டாம்! - பிரியாணி ஆராய்ச்சி கழகம்.
ரொம்பவும் dry subject ஆக இருந்ததுனால, கமெண்ட மட்டும் ஆராய்ச்சி செஞ்சு கமெண்டு போட்டுவிட்டேன்.
Post a Comment