Pages

சைவப் புலிகள்





ம்.. எங்க விட்டேன்?

புதுசா வந்த அக்பர் அலியும் பார்ட்-டைம்னாலும், நாங்க ”மகளிர் அணி”ங்கிறதாலயும், அவர் எங்க டிபார்மெண்ட்களில் இல்லாததாலயும் எங்கள்ல யாரும் அவரைக் கண்டுக்கலை. ஆனா, அவரும் ரோஸியைப் போல பி.ஹெச்.டி. பண்ண ஆரம்பிச்சிருக்காருங்கிறது அப்புறமாத் தெரிஞ்சதும், அந்த வகையில் ரோஸியும் அவரும் அடிக்கடி அதுகுறிச்சுப் பேசிக்கிடுவாங்க. அப்படியே ஆரம்பிச்சு, யெஸ், கொஞ்ச நாளில் பத்திகிச்சு. காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னாலும், இது முஸ்லிம்-கிறிஸ்டியன் காதல்ங்கிறதால ஆச்சர்யம். ரோஸியிடம் இருவரின் வீட்டிலும் சம்மதிப்பார்களா என்று கேட்டோம். இருவரின் வீட்டிலும் சம்மதிப்பது மிகக் கஷ்டம், ஆனாலும் வேறு வழியில்லை என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லைன்னாலும், சம்பாதிக்கிறவங்க, ஓரளவு வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சவங்க, இவ்வளவு உறுதியாயிருக்காங்கன்னா, நல்லாருந்தாச் சரிதான்னு நினைச்சுகிட்டேன்.

படிச்சிட்டிருந்த ஸ்டூடண்ட்ஸ் மத்தியிலயும், ரஷீதா-ரஞ்சித், சித்தீக்-காயத்ரினு இன்னும் ரெண்டு புரட்சிக்காதல் ஜோடிகளும் இருந்தாங்க. பம்பாய் படம் வந்த காலம் அது. மொபைல்கள் இருந்திருந்தா, ‘அந்த அரபிக் கடலோரம்’தான் எல்லாரோட காலர் டியூனா இருந்திருக்கும். இதுல ரஷீதாவும், சித்தீக்கும் எனக்கு ஏற்கனவே பழக்கம்கிறதால, அவங்ககிட்டயும் அதத்தான் கேட்டேன், “வீட்டில ஒத்துப்பாங்களா?”. ம்ஹூம், சான்ஸே இல்லையாம். ஓடிப்போறதுதான் வழியாம். எல்லாரும் கேட்கிற அதே கேள்வியை நானும் கேட்டேன், “பெத்தவங்களுக்கே துரோகம் செய்ய நினைக்கலாமா?”ன்னு. ம்ஹூம், தெய்வீகக் காதலாம், மதங்களைக் கடந்த காதலாம், புண்ணாக்காம், புடலங்காயாம். இதில ரஷீதாவுக்கு எம்மேல பயங்கரக் கோவம், “உங்களுக்கெல்லாம் காதல்னா என்னான்னு தெரியுமா? காதலிக்காத நீங்கள்லாம் இதப்பத்திப் பேசுறதே தப்பு. உங்க வேலையை மட்டும் பாருங்க.”ன்னு எனக்கே அட்வைஸ்.

அதே சமயத்துலதான் நம்ம ரோஸி சொன்னாங்க, அக்பர் அலிக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். வழக்கம்போல, அம்மா தற்கொலை மிரட்டல் etc. etc. காரணமா கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதாப் போச்சாம்; ஆனாலும் ரோஸியை மறக்க மாட்டாப்லயாம்; கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கல்யாணத்துலருந்து வெளியே வந்து ரோஸியோடக் கல்யாணமாம். உருகி உருகிச் சொன்னாங்க ரோஸி. “படிக்காத மேதைகளைப் போல படிச்ச அடிமுட்டாளும் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்”னு சொன்னேன். “இல்லப்பா, இது பேருக்குத்தான் கல்யாணம். வேற ஒண்ணுமேயில்லை தெரியுமா?”ன்னாங்க. நான் அப்பச் சொன்ன பதில இங்க எழுதமுடியாது.

இதற்கிடையில், என்னுடன் வேலைபார்த்த சங்கரி தன்னுடன் படித்த செல்வத்தை மணப்பதற்கே (வேறு ஜாதி) பெரும் போராட்டம் நடத்தி, பெற்றோர் சம்மதத்தோடு மணந்தாள். ஜானகியோ, தன் தங்கைகளின் திருமணம் முடிந்தபின், தான் விரும்பிய இலங்கைத் தமிழரை மணந்தாள். அக்பர் அலியின் கல்யாணத்துக்குப் பிறகும், ரோஸியுடனான காதல் தனி ட்ராக்கில் தொடர்ந்தது. எங்களின் அறிவுரைகள் ரோஸியின் அறிவுக்குப் புரிந்தாலும், ’மனது’ ஏற்கவில்லை.

ஒரு வருஷம் போல கழிஞ்சு, எங்க வீட்டுக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்த அக்பர் அலியின் மாமியாராம்!! அவன் மனைவிக்கு எங்க ஊர்தானாம். நானும் அதே காலேஜிலதான் வேலைபாக்கிறேன்னு தெரிஞ்சு வந்திருக்காங்க. ஒரு குழந்தை இருக்காம் - அடப்பாவி!!! கல்யாணமான ஆரம்பத்துலயெல்லாம் நல்லாத்தான் இருந்தானாம், இப்பல்லாம்தான் மனைவிகிட்ட சரியாப் பேசறதில்லையாம். எவளோ மருமகனை கையிலப் போட்டுகிட்டாளாமேன்னு பதறிப்போயி வந்து விசாரிக்க வந்திருக்காங்க. நான், ரோஸியிடம் அவன் ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என கதைவிட்டு ஏமாத்திக் கொண்டிருப்பதையும், ரோஸி மீது (முழுத்)தவறில்லையென்பதையும் விளக்கி அனுப்பினேன். பின்னர் ரோஸியிடம் அவன் குழந்தையும், குடித்தனமுமாய் சுகவாழ்வு வாழ்வதைச் சொன்னதும் பயங்கர அதிர்ச்சி ரோஸிக்கு.

விடுமுறையில் ஊருக்குச் சென்ற ரோஸியின் வீட்டில் முழுவிவரம் தெரிந்ததால், ஹவுஸ் அரெஸ்ட். அதேபோலத்தான் ரஷீதா, காயத்ரி வீட்டிலும். பையன்கள் வீட்டில் பிரச்னைகள் இருந்தாலும், சுதந்திரமாகவே வலம்வந்தார்கள். பெண்களோ, காவலோடு வந்து பரீட்சை மட்டும் எழுதிவிட்டுப் போனார்கள். எனக்குத் தெரிந்து இந்த மூன்று காதலுமே நிறைவேறியதாய்த் தெரியவில்லை.

கல்லூரிப் பருவம் என்பது, விடலை விளையாட்டுப் பருவம் போலல்லாது, கொஞ்சமாவது வாழ்வின் எதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கும் வயது. அப்பா, அம்மாவின் அருமைகள், குடும்பச் சூழ்நிலைகள் புரிந்து, காதல் செய்வது சரிவருமா, வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்பது கண்டிப்பாகத் தெரியும் வயது. அதைவிட, தன் நிலையைப் பெற்றோருக்கு உணர்த்தி, அதைப் புரிந்துகொள்ள வைக்கும் பக்குவம், ஏற்றுக்கொள்ளவைக்கும் திறன், ஏற்றுக்கொள்ளும்வரை மாறாமல் உறுதியாக இருக்கும் திடம் இருக்கிறதா என்று தன்னைப்பற்றிக்கூடவாத் தெரியாமல் இருக்கும்? இதில் ஆண்களைவிட பெண்கள் பொறுப்புமிக்கவர்களாகவே இருக்கக் காண்கிறேன். ஆனால், சில விதிவிலக்குகளும் உண்டு என்று அறிந்துகொண்டேன், மேற்சொன்ன அனுபவங்களிலிருந்து.

மேற்கூறியவர்களில், ஒரு பெண்ணின் மண வாழ்வு, முந்தையக் காதல் காரணமாகவே ரணப்பட்டுப் போனதாகவும் அறிந்தேன். அந்த ரணம் அவளை மட்டுமா பாதித்திருக்கும்? பெற்றவர்களையும் சேர்த்தல்லவா? பிற்காலங்களில் அப்பெண்கள் நிச்சயம் தம் தவறையெண்ணி மிக வருந்தியிருப்பார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ஆண்கள்? கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்கமாட்டார்கள். ஒருவேளை காதலர் தினங்களில் இவற்றை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். தம் மனைவியரிடமே.

இவ்வகையான தவறுகளில் இருபாலருமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடிவில் அதிக பாதிப்பென்பது பெண்களுக்கே என்பது உலக வாழ்வில் மாறாத நியதியாகிப் போனது. அதில் நியாயமில்லையென்றாலும், ஆண்கள் விரிக்கும் வலையைக் கண்டு அதில் வீழாமல் எச்சரிக்கையாகத் தாண்டிப் போகும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. எவ்வயதினரானாலும்.

புலிகள் ஒருபோதும் சைவமாவதில்லை என்பது புள்ளிமான்களுக்குத் தெரியும், காட்டில்.


Post Comment

41 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஹுசைனம்மா,
இன்டர்வெல்லுக்கு பிறகு இந்த பதிவு இப்படி ட்ராஜடியா போகும் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை. இந்த இரண்டாம் பகுதி மிக அருமை.

ம்ம்ம்...

எனக்கு பள்ளி காலங்களிலேயே நல்ல வாழ்வியல் புத்தகங்கள் படிக்க கிடைக்கப்பற்று, வாழ்வின் எதார்த்தங்களை நன்கு புரிய வைத்து என்னை செம்மையாக்கியது.

இறைவனுக்கு நன்றி.

குறிப்பு: புலிவேட்டை ஆடும் அசைவ மான்களும் உண்டாமே...! (நான் படித்த புத்தகங்களில்)

Anonymous said...

கல்லூரி காதல்ல நிறையவுக்கு பேர் காதல் இல்லைக்கோவ். வயசுக் கோளாறு. இதைப் பத்தி கருத்து சொல்லும் வயசு கூட இல்லை (குழந்தை ஹி ஹி) என்றாலும் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்..

இது சரிவருமா வரதா என்று யோசிக்க முதல் டமார் என்று காதல் வரும்னு சீனியர்ஸ் சொல்லுவாங்க. எப்படி வந்தாலும் சரி, வீட்டை விட்டு ஓடிப்போவதில் எனக்கும் உடன்பாடில்லை. வீட்டில் தற்கொலை திரட் வந்தால், சரி வா நானும் உன்னுடன் சாகிறேன் அம்மா என்று ஒரு பிட்டு போடலாம் என்று அடிக்கடி சொல்லுவேன். ஏன்டி இப்படி கோக்குமாக்கா பேசறேன்னு நண்பர்கள் முறைப்பார்கள். அம்மா பாடில கைல எடுத்துட்டா என்று சொன்னவ கிட்ட உனக்கும் ஒரு பாட்டில் கொடுக்க சொல்லு ஏன்டி கேட்கலன்னு கேட்டு டென்ஷன் படுத்தி இருக்கேன்.

எனக்கு ஒரே ஒரு கொள்கை தான். மனசு திடம் இல்லாவிட்டால் காதலிக்க கூடாது.

காதலித்தால் பிறகு வீட்டிற்காக ட்ரொப் பண்ண கூடாது. அதே நேரம் வீட்டை விட்டு ஓடவும் கூடாது. இது என்னோட கருத்து. இன்ட காஸ்ட், இன்ட(ர்) ரிலிஜன் மரேஜ் பத்தி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அஸ் ஃபார் அஸ் ஒரு மதம் மத்த மத ஆளை டோமினேட் பண்ணாவிட்டால், எனக்கு ஓக்கே.

அது எப்படீங்க, நீங்க தான் நிஜ சுனாமி, ஆனால் என்னை எல்லாரும் சுனாமின்னு திட்டறாங்க. அப்படியே கொஞ்சம் ரோஸிக்கு என்ன சொன்னீங்க என்கிறதை எனக்கு மட்டும் சொல்லுங்களேன். எதுக்கா, அதைக் கேட்டப்புறம், நீ ரொம்ப சாது அனாமின்னு என்னை நானே தேத்திக்கறதுக்குத் தேன். உங்கள கற்பனை பண்ணி பார்க்கறேன். எப்படி பொங்கி இருப்பீங்கன்னு. ஆனாலும், மாம்ஸ் பாவம் தான். இதுக்கு தான் நான் ரங்க்ஸ் கட்சி. ஹி ஹி. (சைட்ல உங்கள வாராட்டி எனக்கு தூக்கம் வராதே. ஒக்கே இன்னும் இரண்டு நாள்ல சரியா அப்பாவி புளொக் வாங்க. தக்குடுவை நாங்க எங்க குழுவில இருந்து டிஸ்மிஸ் பண்ணறோம். சோ இன்டவியூ வைச்சு ஒரு பெண்பதிவரை எடுக்கற ஐடியா இருக்கு. உங்களுக்கு சான்சஸ் அதிகம். ஹி ஹி)

ஸ்ரீராம். said...

மனத்தால் மிகவும் பாதிக்கப் பட்டு எழுதியிருக்கிறீர்கள் போலும். பழைய சம்பவமாக இருந்தாலும் இன்னும் காரம் குறையாமல் இருக்கிறது. நியாயங்களும் தர்மங்களும் சரிதான். உணர்ச்சிப் புயலில் இவை அடி பட்டுப் போகின்றனவே...

நட்புடன் ஜமால் said...

ஆண்களின் பாதிப்பை உணர முடிவதில்லை பெண்களால்

அவனால் சுதந்திரமாக சொல்ல முடிவதுமில்லை பெண்களை போல்,

“பொம்ளையாடா நீ”ன்னு வரும் கேள்விகளுக்கு பயந்து.

நீங்க சொல்லியிருக்கும் விடயங்களும் உண்மைதான் பற்பல இடங்களில்

Jaleela Kamal said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

, இதுக்கெல்லாம் இதுபோல பேச சொல்ல சான்ஸே
இல்ல
படிச்சது எல்லாமே லேடீஸ் , லேடீஸ், லேடீஸ் ஒன்லி,
ஆனாலும் காதல் கண்ணில்லை என்பாங்க அதான் போல,

எங்கே விட்டேன் ந்னு சொன்னீஙக்
முதல் விட்ட லிங்க கொடுங்க.
அப்பதானே புரியும்

அபப்டியே என்பக்கமும் வந்து எட்டி பாருங்கள் எட்டி பார்த்துட்டு போய்ட வேண்டாம், அவார்டு காத்து கொண்டு இருக்கு அதையும் பெற்று கொள்ளுஙக்ள்

Avargal Unmaigal said...

நீங்கள் எழுதிய காதல் எல்லாம் பருவக் கோளாறினால் ஏற்ப்பட்ட காதல். அது ஒரு முழுமையான முதிர்ச்சி அடைந்த காதல் அல்ல.காதலிப்பவர்கள் காதலை வெளிப் படுத்தும் முன்பு தமது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து நம்மால் வாழ முடியும் என்று கருதினால் மட்டுமே தமது காதலை வெளிப்படுத்த வேண்டும். அந்த அளவு நீண்டகால விளைவுகளைப் பற்றி சிந்திக்க முடியாதவர்கள் காதலிக்க தகுதியில்லாதவர்கள். என்னுடைய திருமணம் காதல் திருமணம் தான் ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் பிராமின் எங்களுக்கு 9 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இன்றளவும் எங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. மதங்கள் எங்களது வாழ்க்கைக்கு குறுக்கே வந்தது இல்லை.

அஸ்மா said...

முந்திய பாகத்தையும் சேர்த்துப் படித்துவிட்டு பிறகு வருகிறேன் ஹுஸைனம்மா.

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
இந்த லிங்க்கைப் பாருங்கள்.

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...ஹுஸைனம்மா..

இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க...எனக்கும் தெரிந்து..ஆனால் ஒன்று இரண்டு பேர் தான் கலயாணம் செய்து கொண்டு இருக்காங்க..

மற்றவங்க எல்லாம் இதே மாதிரி தான் கதை...என்னத சொல்ல...

பாச மலர் / Paasa Malar said...

ஆண் பெண் பேதமின்றி இது போல் உறவுச் சங்கிலிகளின் துண்டிப்பு சமமாகவே பாதிக்கும்...பாதிக்க வேண்டும்...இளமையில் பல நிகழ்வுகள் இது போல் இருக்கத்தான் செய்கிறது இன்றளவும்..

அமுதா கிருஷ்ணா said...

ம்ம்ம்...

நாடோடி said...

இந்த‌ மாதிரி காத‌ல் எல்லாம் நிறையா பார்த்தாச்சி.. அந்த‌ நேர‌த்தில் அட்வைஸ் யாருக்கும் பிடிக்காது.. :)

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

முதல் பதிவுல இருந்து,அதனுடை தொடரில் பெரிய திருப்புமுனை..காதல்கள்..மதம் மாறி???

அதிலும் அந்த பெண் உங்களை இந்த அளவுக்கு திட்டுகிறார் என்றால்,அவரது ஈமான் எத்தனை பட்டுப்போன ஒன்றாக இருந்திருக்கும்..நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது..

அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்,

அன்புடன்
ரஜின்

சிநேகிதன் அக்பர் said...

மனதை கஷ்டமாக்கி விட்டது. அதிலும் ஆசிரியர்களாக இருந்த அக்பர் அலியும், ரோசியும் திருமணத்திற்கு பின்பும் நடந்து கொண்ட விதம் வெட்க கேடானது.

தக்குடு said...

அக்கா, நானும் உங்க கட்சிதான். அப்பா அம்மாவுக்கு துரோகம் பண்ணும் எந்த காதலும் உருப்படாது.....

@ சுனாமி - அடப்பாவி மக்கா! சம்பந்தமே இல்லாம தக்குடு தலையை இங்க உருட்டிண்டு இருக்கையே சுனாமி! இது நியாயமா?? அவ்வ்வ்வ்வ்.....:)

அன்புடன் மலிக்கா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. நடந்தது நடந்தபடி.அப்படின்னு. அருமையாக எழுதியுள்ளீர்கள்

Anonymous said...

@ தக்குடு,
அடப்பாவி, வரிக்கு வரி பின்னூட்டம் கூட படிப்பியா? ஹா ஹா. இட்லி மாமிய சப்போட் பண்ணறதால உங்கள டிஸ்மிஸ் பண்ண நிலையில் இருக்கோம். இன்னைக்கு மரியாதையா ஒரு 10 பின்னூட்டம் அடப்பாவிக்கு எதிராகப் போட்டால், உங்களுக்காக என்னா எங்கள் தலைவலியிடம் sorry தலையிடம்
பேசமுடியும் ஹி ஹி.

Aashiq Ahamed said...

சகோதரி ஹுசைனம்மா,

மற்றும்

அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
என்னுடைய திருமணம் காதல் திருமணம் தான் ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் பிராமின்
-----

கவனமாக வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கின்றார்.

பார்வைகளை தாழ்த்தி கொள்ள சொல்கின்றது இஸ்லாம். பள்ளி/கல்லூரி பருவத்தில் குறிப்பிடத்தக்க முஸ்லிம்களுக்கு (குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு) இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அரபியில் குரானை படிக்க வைப்பதுடன் விட்டு விடுகின்றனர். அதன் பொருளை அவர்களுக்கு தெரிவிப்பதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இது போன்ற திருமணங்கள் இயல்பாக நடக்ககூடியவை தான்.

அரபி பெயர் தாங்கிய அந்த நபர் இஸ்லாமை புரிந்து கொண்டவுடன் திருமணத்தில் பிரச்சனை வர தொடங்குகின்றது. முஸ்லிமல்லாத துணையுடன் எப்படி வாழ்வது? நாம் மட்டும் சுவர்க்கத்துக்கு போக தன் துணை மட்டும் நரகத்திற்கு போவதா என்று உள்ளுக்குள் போராட்டம் ஆரம்பிக்கும். தன் துணையை முஸ்லிமாக மாற்ற அரும்பாடுபடுவார்கள். பெயர் மாற்றுவதா முஸ்லிமென்பது? உள்ளத்தில் அல்லவா மாற்றம் நிகழவேண்டும்?. தன் துணையின் மாற்றத்தை/நடவடிக்கையை காணும் முஸ்லிமல்லாத துணை குழம்பி போவார்.

நான் மேல சொன்னவை நான் நேரில் பார்த்தவை. முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர், சிலபல ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்றாமல் இருந்து, பின்னர் இஸ்லாமை புரிந்து கொண்டு இஸ்லாத்திற்குள் நுழைவாரேயானால் அவருடைய வீரியம் அதிகமாக இருக்கும். அதிலும் அவருடைய துணை முஸ்லிமல்லாதவராக இருப்பாரேயானால் அவர்கள் அனுபவிக்கும் உள்ளப்போராட்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இன்ஷா அல்லாஹ். இந்த பின்னூட்டம் இட்ட இந்த சகோதரர்/சகோதரி (அவர்கள் உண்மைகள் )யின் உள்ளத்திலும் இறைவன் அருளால் மாற்றம் ஏற்பட்டு இருவரும் இஸ்லாத்தை தழுவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

சாந்தி மாரியப்பன் said...

உறுதி இல்லாத காதல்களால வரும் பிரச்சினைகள் எக்கச்சக்கம், அதில் பெண்களின் பாதிப்பை எடுத்துச்சொன்னவிதம் அழகு.

சாகம்பரி said...

இது போல் எத்தனை சொன்னாலும் செவிடன் காது சங்கு போலாகிறது. என்ன செய்வது மான் கறி சுவையானதை புலிகள் அறியும்போது.

Thenammai Lakshmanan said...

முடிவுரை அற்புதம் ஹுசைனம்மா..

Ayesha said...

thalaippu nethi adi!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கல்யாணத்துலருந்து வெளியே வந்து ரோஸியோடக் கல்யாணமாம். //

இதிலே இன்னொருவரது வாழ்க்கை பலிகடா ஆக்கப்படுவது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இருந்திருக்காதே? உங்க கண் முன்னாடியே நடந்திருக்குன்னும் போது பாத்துக்கொண்டு கடந்து செல்வது ரொம்பவே கஷ்டமா இருந்திருக்கும்..

எனது நண்பரின் கொலீக்ஸ் இடையே இப்படி ஒரு சம்பவம் நடக்கவிருப்பதாக அவர் மனம் வருந்திச் சொன்னார் (இதுல மதக் கலப்பு இல்ல). பெற்றோருக்காக ஒருவரைத் திருமணம் செய்து பின் காதலியுடனும் வாழ்க்கை.. அந்தப் பெண்ணுக்கு தெரிய வரும் போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்??

ஆனா கலப்பு மதத் திருமணம் (இந்து இஸ்லாமியர்) செய்து கொண்ட ஒரு ஜோடியை அறிவேன், எங்க சீனியர்ஸ்.. வீட்டை விட்டு வந்து தான் செய்துகிட்டாங்க.. பிள்ளைகள் உறுதியாயிருந்தும் சம்மதிக்காத பெற்றோர் அப்படியான அவர்களது சூழ்நிலை இந்த ரெண்டு மேலயும் வருத்தம் இருக்கு.. நல்ல தம்பதியர்.. எப்பவாச்சும் எழுதறேன்..

//கல்லூரிப் பருவம் என்பது, விடலை விளையாட்டுப் பருவம் போலல்லாது, கொஞ்சமாவது வாழ்வின் எதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கும் வயது. அப்பா, அம்மாவின் அருமைகள், குடும்பச் சூழ்நிலைகள் புரிந்து, காதல் செய்வது சரிவருமா, வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்பது கண்டிப்பாகத் தெரியும் வயது. அதைவிட, தன் நிலையைப் பெற்றோருக்கு உணர்த்தி, அதைப் புரிந்துகொள்ள வைக்கும் பக்குவம், ஏற்றுக்கொள்ளவைக்கும் திறன், ஏற்றுக்கொள்ளும்வரை மாறாமல் உறுதியாக இருக்கும் திடம் இருக்கிறதா என்று தன்னைப்பற்றிக்கூடவாத் தெரியாமல் இருக்கும்?//

இல்ல ஹூசைனம்மா, கல்லூரி காலத்துல நிறைய பேரு இவ்வளவு யோசிச்செல்லாம் காதல் செய்வதில்லை.. சட்டுன்னு மலர்ந்துடுது.. அதுலயும் சிலர் அனுபவப்பட்டு அப்புறம் தெளிவாகறாங்க.. சிலர் ஆவறதில்ல.. ரெண்டு பேருமே மனப்பூர்வமா பிரிஞ்சிட்டா பிரச்சனை இல்ல.. ஆனா தன்னைப் பற்றிய தன்னுடைய தேவை பற்றிய சரியான புரிதல் இல்லாம இன்னொருத்தர் வாழ்க்கைய பலிகடா ஆக்கும் போது தான் கடியா இருக்கு..
பிள்ளைகள் தெளிவா உறுதியா இருந்தாலும் முடியவே முடியாதுன்னு அடம் புடிக்கும் அப்பா அம்மா எல்லாம் இருக்காங்க, அதுலயும் சில பேரு பிளாக்மெயில் பண்ணுவாங்க - கால்ல விழுந்து.. தற்கொலை செய்துப்போம்ன்னு சொல்லி..

எல்லா பசங்களும் புலிகள் இல்ல, புள்ளிமான் பசங்களும் இருக்காங்க, அதே மாதிரி புலிப் பெண்களும்..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//புலிகள் ஒருபோதும் சைவமாவதில்லை என்பது புள்ளிமான்களுக்குத் தெரியும், காட்டில்//

என்னவோ எழுதியிருக்கீங்கன்னு தெரியுது, ஆனா என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியல.

அபு நிஹான்

தளிகா said...

chancese illa hussainamma.kalakkitteengka..edhaiyo solla pora maadhiri kondu poi solla vendiyadhai correctaa puriya vachutteenga..hmm aanaal puriya vendiya vayasil ellaam makkugalaa irukkudhe

Thalika

vanathy said...

மன உறுதி இல்லாதவங்க காதல் ஜெயிப்பதில்லை. ஒருவரை பெற்றோரின் விருப்பத்திற்காக மணந்து கொண்ட பின்னர் அவரை விவாகரத்து செய்து, மீண்டும் பழைய காதலியிடம் போவது டூ மச். ஊரில் அப்படி ஒரு ஜோடியை நான் பார்த்திருக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

நல்லா இருக்கு.

Muniappan Pakkangal said...

Nice topic,but don't blame the gents.Itz natural one,i've seen 1 week love ending in marriage

Muniappan Pakkangal said...

Nalla post Hussainamma.There are women betrayers also.I've seen 1 week love ending in marriage.At the same time 4 years love getting broken.

Unknown said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா ரொம்ப அருமை.ரொம்ப நாளாச்சு.எப்படி இருக்கீங்க

கோமதி அரசு said...

// இருபாலருமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடிவில் அதிக பாதிப்பென்பது பெண்களுக்கே என்பது உலக வாழ்வில் மாறாத நியதியாகிப் போனது.//
உலக நியதியை சரியாக சொல்லி விட்டீர்கள்.

நல்ல விழிப்புணர்வு பதிவு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்...நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_04.html

அமைதி அப்பா said...

இரண்டு பதிவுகளையும் காலம் கடந்து படித்து. அதன் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின்பு எழுதுகிறேன்.

//ஆண்கள் விரிக்கும் வலையைக் கண்டு அதில் வீழாமல் எச்சரிக்கையாகத் தாண்டிப் போகும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. எவ்வயதினரானாலும். //

நன்றாக எழுதியிருக்கீங்க மேடம்.
பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் பாய் - ஸலாம். //புலிவேட்டை ஆடும் மான்கள்// எப்பவுமே இயறகைக்கு மாறா ஒண்ணுரெண்டு இருக்கத்தானே செய்யும்!!

அனாமிகா - உங்க கருத்துகளோட உடன்படுறேன். நன்றி. தற்கொலை செய்றவங்களை நான் பார்த்திருந்தா இப்படித்தான் நானும் கேட்டிருப்பேன்.

ஸ்ரீராம் சார் - நன்றி

ஜமால் - ஆண்களுக்கு நிறைய விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறதென்பது உண்மைதான். ஆனால், அது ஒரு பெண்ணை ஏமாற்றுவதற்குரிய நியாயமாகிவிடாதுதானே.

ஜலீலாக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

அஸ்மாக்கா - நன்றி.

கீதா ஆச்சல் - நன்றி.

பாச மலர் - ஆமா, இப்போ அதிகமாத்தான் இருக்கு. நன்றி.

அமுதாக்கா - நன்றி.

நாடோடி - நன்றி.

ஹுஸைனம்மா said...

ரஜின் - நன்றி. பெற்றோரையே தூக்கியெறிய நினைக்கும் பெண்ணிடம் என்ன ஈமான் இருக்கும்?

அக்பர் - நன்றி.

தக்குடு - முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க. உங்க முதல் பின்னூட்டத்திலேயே, என் கட்சிக்கு வந்ததாச் சொன்னத்க்கு நன்றி. (ஆமா, டிஸ்மிஸ் என்னாச்சு? வக்கீல் யாராவது பாத்தீங்களா?)

மலிக்கா - நன்றி.

ஆஷிக் - நன்றி.

அமைதிக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

சாகம்பரி - நன்றி.

தேனக்கா - நன்றி.

ஆயிஷா - நன்றி.

எல் போர்ட் - //கல்லூரி காலத்துல நிறைய பேரு இவ்வளவு யோசிச்செல்லாம்// இருக்கலாம். ஆனா, நிலைமை சீரியஸாகும்போது, எதாவது ஒருபக்கம் உறுதியா இருக்கணும். அதே சமயம், காதலிக்க ஆரம்பிக்கும்போதே பெற்றோர் சம்மதிக்கலைன்னா, வெளியேறுவதுங்கிற முடிவுல ஒருபோது உடன்பாடில்லை எனக்கு. அதுவே, பின்னாளில் பிரச்னையா மாறி இருக்குதே நிறய பேருக்கு?

ஹுஸைனம்மா said...

அபுநிஹான் - நன்றி.

தளிகா - நன்றி.

வானதி - நன்றி.

லக்‌ஷ்மி மேடம் - நன்றி.

ஹுஸைனம்மா said...

டாக்டர் சார் - ஆண்களை மட்டுமே குறை சொல்லவில்லை சார். பெண்கள்தான் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். நன்றி சார்.

சிநேகிதி - நன்றிப்பா.

ஃபாத்திமா - நன்றி. அல்ஹம்துலில்லாஹ், நல்லாருக்கேம்ப்பா.

கோமதிக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - நன்றி கருத்துக்கு. உங்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
//ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் பிராமின்// நானாக இருந்தால், //ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் இந்து// என்றுதான் சொல்லியிருப்பேன். :-))))

சரி, நீங்கள் இருவருமே உங்களிருவரின் தினப்படி மார்க்கக் கடமைகளை (ஐவேளை தொழுகை/பூஜைகள்) போன்றவற்றை எத்தடையுமில்லாமல் நித்தமும் நிறைவேற்றி வருகிறீர்கள் எனும் பட்சத்தில்தான் உங்களின் கலப்புத் திருமணத்தில் மதங்கள் குறுக்கே வரவில்லை என்று சொல்லலாம் என்பது என் கருத்து.

ஹுஸைனம்மா said...

அமைதி அப்பா - நன்றி.

அப்பாவி தங்ஸ் - நன்றிப்பா.