Pages

நானும் இங்கதான் இருக்கேன், இருக்கேன்...






முதல்ல 2ஜி, அப்புறம் தேர்தல், கணிப்புகள்னு பிஸியா இருந்த பதிவுலகம் இப்போ ரொம்ப டல்லா இருக்க மாதிரி இல்ல? கோடை விடுமுறை வேற, அதான் பதிவர்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க போல!! “தலைவி எவ்வழி, குடிமக்கள் அவ்வழி” போல!! சரி, நானும் அப்படியே போயிட்டேன்னு நீங்க நினைச்சிடக்கூடாது பாருங்க, அதான் வந்துட்டேன். நோ, நோ, பேச்சு பேச்சா இருக்கணும். கல்லெல்லாம் எடுக்கப்படாது.

இப்படியெல்லாம் நமக்கு பேச்சு சொல்லிக் கொடுத்த தலைவர் வடிவேலு, இப்ப, தானே தன் பேச்சுக்கு உதாரணமா  ஒளிஞ்சு விளையாடிகிட்டு இருக்கார். விவேக் மார்க்கெட் போனது பத்திரிகையாலன்னா, இவருக்கு அரசியலால. ரெண்டுமே டேஞ்சரஸ் ஏரியாக்கள்!!

பக்கத்து நாடான கேரளாவிலும் நம்ம தமிழ்நாட்டைப் போல சுழற்சி முறையில முதல்வர்களை மாற்றிகிட்டே இருக்காங்க. ஆனா, யார் வந்தாலும் எளிமையாத்தான் இருக்காங்க. இப்ப முதல்வரா இருக்கும் உம்மன் சாண்டியைப் பற்றி அவரின் போன ஆட்சிக் காலத்துல, தொலைக்காட்சியில் பார்த்த செய்தி: அவரின் வீட்டு முன் கிடக்கும் அவரின் செருப்பைக் காட்டினார்கள்; அதில் சில தையல்கள்!! அதாவது, கிழிந்த செருப்பைத் தைத்து, போட்டுக் கொண்டிருக்கிறார்!! உங்களுக்கு என்ன ஞாபகம் வருது? சே, சே, எனக்கு ஃபிலிப்பைன்ஸின் திருமதி. இமெல்டா மார்க்கோஸின் செருப்பு அலமாரிதான் ஞாபகம் வருது. வேற எதுவுமே இல்லை, இல்லை, இல்லை!!

அப்படியே, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியையும் நினைத்துப் பார்க்கிறேன். பருத்திச் சேலையும், ரப்பர் செருப்பும்தானாமே, இப்பவும், எப்பவும்? தற்போதைய சட்டமன்றக் கட்டிடமான “ரைட்டர்ஸ் பில்டிங்” மிகவும் அழுக்காக, அடிப்படைக் கட்டமைப்புகள் பாழ்பட்டு இருப்பதாகவும், அதை முதலில் சீர்படுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கார்.  ஆனா, அவருக்கும் சென்னைக் காத்து அடிச்சுடுச்சு போலன்னு சந்தேகப்பட்டுடாதீங்க. ஜெயிச்ச அன்னிக்கு, பேட்டியாளர், "இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடப்போறீங்க?”னு கேட்டதுக்கு, “கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்? எதுக்கு?”னு படபடன்னு கேட்ட அழகைப் பாத்தா, அப்படியே தமிழ்நாட்டுக்குக் கடத்திட்டு வந்திடலாம் போல இருந்துது!! ஹூம்!!

சென்னையில, 1000 கோடி செலவில்  புது சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டதில் ஊழல் இருக்குனு சிலர் சொல்றாங்க. கோவமா வருது. ஒரு பெரியவரை அவமானப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? அவருக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குல்ல? 1,76,000,00,00,000 எங்கே,  1000,00,00,000 எங்கே? (சைபர் கரெக்டா?)

ஊழல், ஊழல்னு நம்ம அரசியலைப் பிடிச்ச கரையானைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கோமே, நிஜமாவே காசைக் கரையான் அரிச்சுதாம் தெரியுமா? அதுவும், நோட்டு அச்சடிக்கிற நாசிக்லயே!! ஆனாலும், ஆறுதல்பட்டுக்கோங்க, அரிச்ச தொகை ஆஃப்டர் ஆல், ஒரே ஒரு கோடிதானாம்!!  ஒருவேளை நீதிமன்றம் தலையிட்டு, காசைக் கரையான் அரித்து அழிப்பதைவிட, தேவைப்படும் மக்களுக்குக் கொடுக்கலாமேன்னு சொன்னா எப்படியிருக்கும், இல்ல?

ஐரோப்பாவில ஒரு நாட்டோட பாராளுமன்றம் முன்னாடி மூணு சிலைகள் இருக்காம். மூணும், தலைவலி, வயிற்றுவலி, கைவலியைக் குறிப்பதாம். அதாவது, அரசியலுக்கு வந்தா, இதெல்லாம் வரும்னு சிம்பாலிக்காச் சொல்றாங்களாமாம்!! நம்மூருக்குன்னா, ஒரேயொரு சிலை போதும்ல?



Post Comment

28 comments:

எல் கே said...

இங்க எளிமை மக்களிடமே இல்லை தலைவர்களிடம் எப்படி எதிர் பார்க்க முடியும் ??

HajasreeN said...

parawalaye irukurathayum nabahapaduthittu nalla thagawalum thanthutingale

Unknown said...

ஆஹா... இங்கு அரசியல் பேச்கூடாதுனு சொல்லி பல மாநில கதைகளை... ஷார்ட் அண்டு ஸ்வீட்டா சொல்லியிருக்கிங்க.. இருப்பினும் அரசியல் பற்றி பேசுவதுக்கில்லை... (அப்பறம் நாங்க நாளைக்கு.. ஊருக்கு போறோங்க...)

Angel said...

//1,76,000,00,00,000 எங்கே, 1000,00,00,000 எங்கே? (சைபர் கரெக்டா?) //

எனக்கு முட்டை முட்டையா தெரியுது
//செருப்பு அலமாரிதான் ஞாபகம் வருது. வேற எதுவுமே இல்லை, இல்லை, இல்லை!!//
நான் இங்கே இல்லவே இல்லை ...
enjoyed reading your post .very nice.

Avargal Unmaigal said...

/முதல்ல 2ஜி, அப்புறம் தேர்தல், கணிப்புகள்னு பிஸியா இருந்த பதிவுலகம் இப்போ ரொம்ப டல்லா இருக்க மாதிரி இல்ல//
அப்படி எல்லாம் இல்லிங்க அரசியல் வாதிகள் இருக்கும் வரை பதிவுலக காமடி ரொம்ப ஜோராக இருக்கும், உதாரணத்திற்கு இந்த பதிவை ( http://avargal-unmaigal.blogspot.com/2011/05/blog-post_23.html கலைஞரின் டில்லி விஜயத்தின் சாணக்கியதனம். ) சொல்லலாம். இந்த பதிவை போட்ட அன்று எனக்கு 3000 க்கு மேலான ஹிட்ஸ் நானே ஆச்சிரியப்பட்டு போனேன் நம்ம வீணா போன பதிவிற்கு இவ்வள்வு ஹிட்ஸா என்று. மனதுகுள் சொல்லி கொண்டேன் வாழ்க தமிழர்கள் என்று

சிநேகிதன் அக்பர் said...

நீங்க சொன்ன கேரளா, மேற்கு வங்க முதல்வர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களும் ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக வாழ்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

அப்புறம் தைச்ச செருப்பு ரப்பர் செருப்பு இதெல்லாம் கொஞ்சம் ஓவரோன்னு தோணுது :)

எம் அப்துல் காதர் said...

// உம்மன் சாண்டியைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்த செய்தி: அவரின் வீட்டு முன் கிடக்கும் அவரின் செருப்பைக் காட்டினார்கள்; அதில் சில தையல்கள்!! அதாவது, கிழிந்த செருப்பைத் தைத்து, போட்டுக் கொண்டிருக்கிறார்! அப்படியே, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியையும் நினைத்துப் பார்க்கிறேன். //

அடாடா நீங்க பொய்யா சொல்லப் போறீங்க. பார்த்தததானே சொல்றீங்க!! மம்தா பானர்ஜியை ப்பற்றியும், உம்மன் சாண்டியைப் பற்றியும் படித்து + பார்த்தாவது சந்தோசப் பட்டுக் கொள்வோமே!! இங்கே தமிழ் நாட்டில் .... (இருங்க யாரோ கூப்பிடுறாங்க, ஆட்டோ சத்தாமா வேற கேட்குது நான் பிறகு வாரேன்) :-)))

ஸ்ரீராம். said...

புதுவை முதல்வர் கூட மக்களோடு மக்களாக டூ வீலரில் வலம் வருகிறார். அது ஒருபுறம் இருக்கட்டும்...சென்னையில் முதல்வர் தனக்காக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டு மக்கள் வாகனங்களுக்கு நடுவே கோட்டை நோக்கிச் செல்வதை செய்தித் தாளில் படம் போட்டிருந்தார்களே பார்த்தீர்களோ...?

அமைதி அப்பா said...

நல்ல பதிவு.

//கோடை விடுமுறை வேற, அதான் பதிவர்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க போல!!//

அட, இதான் காரணமா?
பல பேரக் காணோமேன்னு தேடிக்கிட்டிருந்தேன்:-)))))!

Mahi_Granny said...

இங்க தான் இருக்கீங்க என்பதை ஓங்கி உரக்க ரசனையாவும் சொல்லி இருக்கீங்க . அடிக்கடி வந்து சொல்லுங்க

Yoga.s.FR said...

யாரோடது,"மன்மோகன் சிங்" கோடதா?இல்ல,டெல்லி மேடத்தோடதா?இல்ல தமிழ் நாட்டு மேடத்தோடதா?

ஸாதிகா said...

எல்லாம் சரிதான்.இப்ப என்னதான் சொல்லவர்ரீங்க?

Chitra said...

ஊழல், ஊழல்னு நம்ம அரசியலைப் பிடிச்ச கரையானைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கோமே, நிஜமாவே காசைக் கரையான் அரிச்சுதாம் தெரியுமா? அதுவும், நோட்டு அச்சடிக்கிற நாசிக்லயே!! ஆனாலும், ஆறுதல்பட்டுக்கோங்க, அரிச்ச தொகை ஆஃப்டர் ஆல், ஒரே ஒரு கோடிதானாம்!! ஒருவேளை நீதிமன்றம் தலையிட்டு, காசைக் கரையான் அரித்து அழிப்பதைவிட, தேவைப்படும் மக்களுக்குக் கொடுக்கலாமேன்னு சொன்னா எப்படியிருக்கும், இல்ல?


.... let us keep dreaming.... he,he,he,he,he....

நானானி said...

நான் அரசியலெல்லாம் பேச மாட்டேன். எதுக்கு?
பதிவு சுவாரஸ்யமாயிருந்தது. மொத்தத்தில் கோடிகளுக்கு எத்தனை பூஜ்யம் என்று(சரியாயிருக்கும் பட்சத்தில்)தெரிந்து கொண்டேன்.

நொந்த தமிழனுக்கு இம்மாதிரி நகைச்சுவை பதிவுகள்தான் இதம் தருது.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அப்படியே டிரங்கு பெட்டிய திறந்தா மாதிரியே இருக்கு சகோ.

நோட்ட கரையான் அரிச்சது புதுசால்ல இருக்கும்.

அப்புறம் நமக்கு அரசியல் தெரியாது (பொய் சொல்லியாவது பொழைச்சிக்குவோம்). என்ன பண்றது இப்பல்லாம் சைபர் கிரைம்ல புடிக்கிறாய்ங்களாம்.

நட்புடன் ஜமால் said...

செருப்பு மேட்டர் நெசமாலுமே தெர்லீங்க‌

யார்ன்னா மின்மடல் அனுப்பி சொல்லுங்கப்பா ...

CS. Mohan Kumar said...

31 votes in Indli & 9 votes in Tamilmanam. Kalakkunga madam.

பாச மலர் / Paasa Malar said...

பெருமூச்சு விட்டுட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்..

நாடோடி said...

//சென்னையில, 1000 கோடி செலவில் புது சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டதில் ஊழல் இருக்குனு சிலர் சொல்றாங்க.//

அடுத்து இந்த‌ டாபிக்குதான் ஓடும் என்று நினைக்கிறேன்.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா நலமா. நான் மனசில நினைக்கறதை நீங்க எழுதரதுனாலத் தான் நான் நிறைய எழுதறதில்லை:)

வெயிலை எப்படிச் சமாளிக்கறீங்க.வீட்டுத் தோட்டம் நல்லா இருக்கா.

அன்புடன் மலிக்கா said...

சென்னையில, 1000 கோடி செலவில் புது சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டதில் ஊழல் இருக்குனு சிலர் சொல்றாங்க. கோவமா வருது. ஒரு பெரியவரை அவமானப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? அவருக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குல்ல? 1,76,000,00,00,000 எங்கே, 1000,00,00,000 எங்கே? (சைபர் கரெக்டா?) //

பாவம் நான் பாவமுன்னு சொன்னது யாரை யாரையோஓஓஓ.
அதுக்காக இப்புடியா பாடுபடுத்துறது. அச்சோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா. அதுசரிம்மா அரசியல் அரசியலுன்னு சொல்லுராகளே. அதுன்னா யின்னாம்மா. நல்லவேளை நமக்கு இதப்பத்தி ஒன்னும் தெரியாதுபோச்சே.அப்படாஆஆஅ

சிக்கித் தவிக்கும் சனநாயகம்.
http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html

தூயவனின் அடிமை said...

எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது, திருடனே திருடன் திருடன் என்று கத்தி தப்பித்தது அந்த காலம், இப்போ அதுகெல்லாம் வாய்ப்பே இல்லை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா...செம கலாய்ப்பு... வடிவேலுக்கும் விவேக்கும் எது எதுலயோ கண்டம்னு சொல்லி, பாத்துங்க உங்களுக்கு ப்ளாக்ல கண்டம் வந்துற போகுது... ஹி ஹி ஹி... செம ரவுண்டு அப்

மனோ சாமிநாதன் said...

பதிவு நன்றாக இருக்கிறது ஹுஸைனம்மா! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அங்கங்கே சில சாடல்களும் அழகு!

Ahamed irshad said...

அர‌சிய‌ல் ப‌ன்ற‌தும் ஒன்னுதான்,அர‌சிய‌லை ப‌ற்றி பேசுற‌தும் ஒன்னுதான்.. முன்ன‌து ச‌ப்பை'ன்னா, பின்ன‌து குப்பை..

பிகு: தெரியாம‌ இங்கு அர‌சிய‌லை ப‌ற்றி பேசிவிட்டேன்..அவ்வ்

pudugaithendral said...

ஹா ஹா ஹா...செம கலாய்ப்பு... வடிவேலுக்கும் விவேக்கும் எது எதுலயோ கண்டம்னு சொல்லி, பாத்துங்க உங்களுக்கு ப்ளாக்ல கண்டம் வந்துற போகுது... ஹி ஹி ஹி... செம ரவுண்டு அப்பு///

கன்னா பின்னு ரிப்பீட்டு.

ஸாதிகா said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///ஐரோப்பாவில ஒரு நாட்டோட பாராளுமன்றம் முன்னாடி மூணு சிலைகள் இருக்காம். மூணும், தலைவலி, வயிற்றுவலி, கைவலியைக் குறிப்பதாம். அதாவது, அரசியலுக்கு வந்தா, இதெல்லாம் வரும்னு சிம்பாலிக்காச் சொல்றாங்களாமாம்!! நம்மூருக்குன்னா, ஒரேயொரு சிலை போதும்ல?///

நல்ல தகவல்கள். அந்த ஒரு சிலையும் காணாமல் போகாமல் இருந்தால் சரிதான்.