Pages

டிரங்குப் பொட்டி-17




 மறுபடியும் மும்பையில் தீவிரவாதம். மும்பைன்னா பாலிவுட்னு அடையாளம் இருந்ததுபோய், குண்டுவெடிப்புனு ஆகிடுமோன்னு பயம்மா இருக்கு. முந்தைய வழக்குகளில் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்காமல் வைத்திருப்பது, வழக்கு விசாரணையை இன்னும் முடிக்காமல் அல்லது ஆரம்பிக்காமலேயேகூட வைத்திருப்பது - இதெல்லாம்தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக அமைகிறது. இதுபோன்ற ’தீவிரமான’ வழக்குகளையாவது சீக்கிரம்  சரியா விசாரிச்சு முடிவுக்குக் கொண்டுவந்து, கடும்தண்டனைகள் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு நியாயமாவது கிடைத்ததுபோல் இருக்கும். இப்பவும், விசாரிக்கக் கூட்டிப் போன ஒருத்தர், மர்மமா மரணமடைஞ்சிருக்கார்.

செத்தா இத்தனை லட்சம், காயமடைஞ்சா இத்தனை ஆயிரம் (அது எந்த மூலைக்குக் காணும்?)னு அறிவிக்கிறதோட அரசின் பங்கு முடிஞ்சதாவே நினைச்சுடுறாங்க.

________________________

வழக்கம்போல, பாகிஸ்தானை நோக்கியும் விரல்கள் நீட்டப்படுகின்றன. தன் மண்ணில் ’தினம் தினம் தீபாவளி’யாக  வெடிக்கும் குண்டுகளையே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தானின் மீது இப்போதெல்லாம் பரிதாபம்தான் வருகிறது!! மேலும், பாகிஸ்தான் தொடர்பு தீவிரவாதிகள் என்று அவர்கள் மீதே கவனம் மையம் கொண்டிருப்பதால், உண்மையான குற்றவாளிகளை கோட்டை விட்டுவிடுகிறோமோ என்னவோ? (சீனாவும் நமக்கொன்னும் பெஸ்ட் ஃப்ரண்ட் இல்லியே?)

உதாரணமாக, சில நல்லவைகள் பாகிஸ்தானால் நடந்தாலும்கூட கண்டுகொள்வதில்லை. மீடியாக்களும் வெளிக்கொணர்வதில்லை. சமீபத்தில் MV SUEZ என்ற கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபோது, இந்தியா அதை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தக் கப்பலில் இருந்த 6 இந்தியர்களும் கூறியுள்ளனர். மாறாக, பாகிஸ்தானின் ஒரு தொண்டு நிறுவனம்தான் $2.1 மில்லியன் பணயத்தொகைக்கு ஏற்பாடு செய்துகொடுக்க, விடுவிக்கப்பட்டனர். மேலும் மூழ்கவிருந்த MV SUEZ கப்பலிலிருந்து பாக் கடற்படைதான் அனைவரையும் மீட்டது என்றும் கூறியுள்ளனர்.

_________


ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!

நம்ம ஊரப் போல இலவச மின்சாரம் எல்லா இடத்துலயும் இருக்குமா என்ன?
______________

சுற்றுலாவுக்கெனவே படைக்கப்பட்ட ஊராகிவிட்ட கோவாவில், கடல் தண்ணீர் குளிக்கும் தரம் கொண்டதில்லை என ஆய்வுகள் தெரிவிக்குமளவு மாசுபட்டு விட்டனவாம். இந்த அதிர்ச்சி செய்தி வெளிவந்த அதே சமயம், அங்கே உள்ள 450 வருட பாரம்பரியம் நிறைந்த மஹால்ஸ நாராயணன் கோவிலில் டூரிஸ்டுகள் முறையான ஆடை அணிந்து வராவிட்டால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள பிரபல ”The Basilica of Bom Jesus” சர்ச்சிலும், அரைகுறை ஆடை அணிந்து வருபவர்களுக்கு போர்வைகள் தரப்படும்; அதை அணிந்துதான் சர்ச்சினுள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"desigual" என்ற பிரபல ஸ்பானிஷ் ஆடை நிறுவனம், ஐரோப்பிய நகர்களில் தன் கடைகளில் ஒரு சிறப்பு திட்டத்தை ஒரு நாள் மட்டும் அறிவித்து நிறைவேற்றியது. அது, "Arrive Half-naked; Leave fully-dressed"  என்பதுதான்!! முதலில் வரும் 100 பேருக்கு இலவசமாம். ரிஸஷனால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்களும் உதவியா இருந்துச்சாம் இந்தத் திட்டம்.

______________________

அமீரகத்தில் தமிழ் ரேடியோ என்பது மலையாள ஏஷியா நெட் ரேடியோவில், தமிழர்கள்மீது பரிதாபப்பட்டு,  தினமும் இரவு அரைமணி நேரம் ஸ்லாட் கொடுத்து, பாடல்கள் ஒலிபரப்பாவது மட்டும்தான். இடையே ‘சக்தி எஃப்.எம்.’ என்ற பண்பலை தொடங்கப்பட்டு, சீக்கிரமே முடிந்தும்விட, பழையபடி ஏஷியாநெட்டே கதி என்று ஆனது. அதிலும், சமீபகாலமாக, அதிலே ஒரு நாளில் ஒலிபரப்பப்பட்ட பாடல்களே, ஓரிரு வாரமாக மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் ஒலிபரப்பாக, ஒருவேளை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆஸிஃப் மீரானும், பதிவர் என்பதால் “மீள் பதிவு” செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதுவும், வார வேலை நாட்களில் இரவில், நாளைக்கு மறுபடி ஆஃபிஸ்/ஸ்கூல் போகணுமேன்னு கவலையோடு இருக்கும் நேரத்தில், ”இந்த வார இறுதி நாளை மகிழ்ச்சியோடு கழிக்க வாழ்த்துகிறோம்’னு தொகுப்பாளர் (ரெக்கார்டட்) சொல்லும்போது ரேடியோவைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம்போல வரும்!!

நல்லவேளை, இப்போ ‘ஹலோ எஃப்.எம்.’ வந்துடுச்சு. (கார்ப் பயணங்களின்போது மட்டுமே கேட்க முடிகிறது). இதன் நிகழ்ச்சிகள் ஒரு வழக்கமான பண்பலை ரேடியோ போலத்தான் இருக்கு. நான் முழுநேரம் கேட்பதில்லை என்பதால், விசேஷமான நிகழ்ச்சிகள் என்னன்னு தெரியலை. ஆனா, பெரும்பாலும், இரவுப் பயணங்களின்போது ஒரு நிகழ்ச்சியை வழக்கமாகக் கேட்க நேருகிறது. அதன் விளம்பரம் என்ன தெரியுமா? “நல்ல நிகழ்ச்சிகளின் நடுவே ஒரு திருஷ்டிப் பொட்டு”!! நிகழ்ச்சியின் பெயர் “லாஸ்ட் பெஞ்ச்”. ஆமாம், அதுக்கேத்த மாதிரி நிகழ்ச்சியும் இருக்கும். ஜோக் சொல்கிறோம் என்ற பெயரில், நம் கழுத்தை ரேடியோவிலிருந்தே எட்டிப் பிடித்து இழுத்து அறுத்துவிடுகிறார்கள்.

இரவு நெடுநேரப் பயணங்களில் தூக்கம் வராமலிருக்க பெரிதும் உதவுகிறது   இந்த நிகழ்ச்சி.  அவங்க கடிக்கிற கடி கொசுக்கடியைவிட கொடுமை!!

Post Comment

34 comments:

பீர் | Peer said...

அப்போ ஃபிலிப்பைன்ஸிலும் மின்வெட்டு இருக்கு?.. மனசுக்கு எவ்ளோ ஆறுதலா இருக்கு.

89.5 ல ஒரு மொக்கை போடுற ப்ரோக்ராம் இருக்கே.. செம்ம.

வெங்கட் நாகராஜ் said...

பெட் பாட்டில் வழியா வெளிச்சம்.... நல்ல ஐடியாவா இருக்கே...

மற்ற விஷயங்களும் பகிர்ந்தமைக்கு நன்றி ஜி!

சாந்தி மாரியப்பன் said...

மும்பை மக்கள் நிம்மதியான வாழ்க்கையை எப்போதான் வாழப்போறாங்களோ.. தெரியலை.

அமுதா கிருஷ்ணா said...

பாட்டில் வெளிச்சம் தூள்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாமுன் அலைக்கும்.

சகோ.ஹுசைனம்மா...

///முந்தைய வழக்குகளில் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்காமல் வைத்திருப்பது, வழக்கு விசாரணையை இன்னும் முடிக்காமல் அல்லது ஆரம்பிக்காமலேயேகூட வைத்திருப்பது - இதெல்லாம்தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக அமைகிறது.///--சரியான, உறுதியான, தெளிவான கருத்து சகோ.ஹுசைனம்மா..!

//இதுபோன்ற ’தீவிரமான’ வழக்குகளையாவது சீக்கிரம் சரியா விசாரிச்சு முடிவுக்குக் கொண்டுவந்து, கடும்தண்டனைகள் வழங்கப்பட்டால்,....///

...குண்டு வெடிப்பது குறையலாம்..!


இதுவரை விரைந்து முடிக்கப்பட்ட 'தீவிரமான' வழக்குகள் இரண்டு... ஒன்று கோவை குண்டு வெடிப்பு.
மற்றொன்று மும்பை குண்டுவெடிப்பு.

அதற்கு முன்னர் மற்றும் அதற்குப்பின்னர் நடந்த கலவரங்கள், குண்டுவெடிப்புகள், உயிரோடு எரிப்பு, கூட்டுப்படுகொலைகள், பாலியல் வன்முறைகள் பற்றி எல்லாம் ஏகப்பட்ட ஆடியோ-வீடியோ ஆதாரங்கள், சாட்சிகள், குற்றவாளிகளின் வாக்குமூலங்கள், ஓய்வி பெற்ற நீதிபதிகளின் கமிஷன் அறிக்கைகள் என்று எத்தனையோ இருந்தும்.... //செத்தா இத்தனை லட்சம், காயமடைஞ்சா இத்தனை ஆயிரம் (அது எந்த மூலைக்குக் காணும்?)னு அறிவிக்கிறதோட அரசின் பங்கு முடிஞ்சதாவே நினைச்சுடுறாங்க.//

மற்ற செய்திகளும் அருமை சகோ..!

ஜெய்லானி said...

ஒரிஜினல் குற்றவாளி யாருன்னே கண்டுப்பிடிக்காம ஒரு சாரரை மட்டுமே குறை சொல்வதை மீடியா எப்போ நிறுத்தப்போகுதே தெரியல..!! சீக்கிரமே குற்றிவாளியை கண்டுப்பிடிச்சா அரசியல் பண்ன முடியாதே..!!!

இந்த ஐடியா நல்ல ஐடியா இருந்தாலும் பெரும்பாலும் நமக்கு வெளிச்சம் மாலை , இரவு நேரத்துலதானே தேவைப்படும் . :-)

இங்கு எத்தனையோ தமிழர்கள் இருந்தும் ஒரு தமிழ் எஃப் எம் ரேடியோ வைக்க முடியாதது துரதிஷ்டமே..!!

டிரங்குப் பொட்டி தொடரட்டும் :-)

இமா க்றிஸ் said...

வித்தியாசமான செய்திகள் எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க ட்ரங்குப் பெட்டிக்குத்தான் வரணும்.

அந்தப் பாட்டில் கதை... பகல்ல மட்டும்தானே சரிவரும்!!

ஸ்ரீராம். said...

மும்பை சம்பவம் பல கேள்விகளை எழுப்புவது உண்மைதான்.

பாட்டில் வெளிச்சம் ஆச்சர்யம். ஆனால் கான்க்ரீட் கூரையில் எங்கே ஓட்டை போட..!

ரேடியோ இன்னும் கேட்கிறீர்களா என்னா..."மீள் பதிவு செய்கிறாரோ..".:)) விளம்பரங்களுக்கும் பே.......ச்சுகளுக்கும் நடுவில் ஓரிரு பாடல்கள் போடுவார்களே...அதே போலத்தானே...

ஸாதிகா said...

2இந்த முறை டிரங்குப்போட்டி கனம் ஜாஸ்தி ஹுசைனம்மா.

தமிழ் உதயம் said...

டிரங்கு பெட்டி நிறைவான தகவலோடு.

நட்புடன் ஜமால் said...

ஒவ்வொரு பாராவின் முடிவிலும் செம பஞ்ச்

ஹுஸைனம்மா said...

பீர் - பிளாக் வேர்ல்டுக்கு (இது blogworld; blackworld அல்ல ;-)) ) ரீ-எண்ட்ரி செய்யும் தல - வருக, வருக!!

//ஃபிலிப்பைன்ஸிலும் மின்வெட்டு//
அட, மின் சப்ளையே இல்லை, அப்புறம் எங்கே வெட்டு?

வெங்கட் - நன்றிங்க.

அமைதிக்கா - என்னவோ சாபம் மாதிரியே ஆகிப்போச்சு மும்பைக்கு!! ;-)))

அமுதா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். விரிவான கருத்துக்கு நன்றி. அரசு, உளவுத் துறை, காவல்துறைகளின் மெத்தனத்தால், ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும், இந்திய முஸ்லிம்கள் தீக்குளிக்க வேண்டியிருக்கிறது. :-(((

ஜெய்லானி - இரவில்தான் அதிக வெளிச்சம் தேவைப்படும். ஆனால், பகலிலும் இப்பவெல்லாம் வெளிச்சம் இல்லாம முடியாதே? அதுவும், ஏழைகளின் ஆஸ்பெஸ்டாஸ்/ஓலை கூரை வைத்த வீடுகளில் ஜன்னல்கள் கிடையாதே? அதற்குத்தான் இது.

ஹுஸைனம்மா said...

இமா - நன்றிப்பா. ஆமாப்பா, பகலில் மட்டும்தான் பாட்டில் உதவும். ஆனா, அந்த நேரக் கட்டணத்தையாவது அவர்கள் மிச்சப்படுத்தலாம். மேலும், சூரிய ஒளியைப் பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் இல்லாத, சுற்றுச் சூழல் மாசடைவதில் இருந்து ஓரளவு பாதிப்பு குறைவு என்று சில நன்மைகள் இருக்குல்லியா?

ஸ்ரீராம் சார் - நன்றி. கான்க்ரீட் வீடு கட்டுமளவு வசதி உள்ளவர்கள், ஜன்னலும் வைத்துக் கொள்வார்களே சார். இது ஆஸ்பெஸ்டாஸ்/ஓலை/தென்னங்கீற்று கூரை உள்ளவர்களுக்காக. மேலும், கான்கிரீட் கூரையிலும், முன்பே திட்டமிட்டு துளைகள் இட்டுக் கொள்ளலாம்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

தமிழ் உதயம் - நன்றிங்க.

ஜமால் பாய் - எப்படி இருக்கீங்க? எல்லாம் நலமா?

RAMA RAVI (RAMVI) said...

“டிரங்குப் பொட்டி”யை திறந்தால் நிறைய தகவல்கள் கிடைக்கிறதே!! புதிய விவரங்கள் அறிந்து கொண்டேன் ஹுஸைனம்மா. பகிர்வுக்கு நன்றி..

அரபுத்தமிழன் said...

டிரங்குப் பொட்டியில் de'ரங்ஸ்'பற்றி
எதுவும் லொள்ளக் காணோமே.
மற்றபடி எல்லாம் அருமை :)

ஹுஸைனம்மா said...

ராம்வி - நன்றி!!

அரபுத் தமிழன் - ஆகாஹகாஹா!! ரங்ஸை கலாய்க்கலன்னு சந்தோஷமா இல்லை, நான் பல்பு வாங்கலையேன்னு வருத்தமா? இந்த முறை பொழச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்!!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

டிரங்கு பெட்டியில் எல்லாம் அருமை.

குற்றவாளியை சீக்கிரம் பிடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.(இனி இது போல் துயர சம்பவம் நடக்காமல் இருக்கவும்)

89.5 FM இப்போ நல்லா இருக்கு. காரில் மட்டுமல்ல, மொபைலிலும் FM கேட்க முடிகிறது. எல்லா புரோக்ராம்களும் நன்றாக இருக்கின்றன, லாஸ்ட் பெஞ்சை தவிர.

பாகிஸ்தானை பற்றிய மேட்டரும், பிலிப்பைன்ஸ் பற்றிய மேட்டரும் செம.

நன்றி சகோ.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விதவிதமான நியூஸ் குடுக்கிறீங்க :)
எங்கருந்து பிடிக்கிறீங்க..

பாக் லயும் வெடி பறக்குது.. எங்கயும் நிம்மதி இருக்கக்கூடாதுன்னு நினைக்கும் யாரோ எங்கேயோ இருந்து கொண்டு எல்லா இடத்துலயும் வைக்கிறாங்க..

RAZIN ABDUL RAHMAN said...

சலாம் சகோ ஹுசைனம்மா,
என்னவோ இந்த குண்டு வெடிப்பு என்னை அதிகம் பொருட்படுத்தியது.நான் எனது கண்டனத்தை பதிவிட்டேன்..
இந்திய அரசுக்கு ஒரு சூடு பூட்டு இருக்கீங்க...பட் நல்ல மாட்டுக்குத்தானே ஒரு சூடு...:))

அடுத்து,,ஐயய்யோ...பாகிஸ்தானப் பத்தி பேசீட்டிங்களே..போச்சு போங்க..இனி உங்கள தேச விரோத முஸ்லிம்ன்னு ஒரு கூட்டம் பதிவு எழுத ஆரம்பிச்சுரும்...யார் வேண்ணா பேசலாம் சகோ ஆனா முஸ்லிம்கள்,குறிப்பா இந்திய முஸ்லிம்கள் ம்ம்ம்ஹும் ...ஆனா உங்களுக்கு தைரியம்தா...:))
----------------------
அடுத்து அந்த பிலிப்பைன்ஸ் மேட்டர்...அது நா 2007 ல கேரளா ல இருந்தப்ப தற்செயலா கரண்ட் போய்டுச்சு..கைல ஒரு எல்இடி பல்பு உள்ள ஒரு லைட் இருந்துச்சு...அடடா என்ன பண்றதுன்னு நனச்சுட்டே தண்ணி குடிச்சுட்டு பாதி பாட்டால் இருக்கும் பொது...சும்மா அதுக்கு கீழ லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்...அப்போ இருந்து கரண்ட் போனா பாட்டால் தண்ணி,ஒரு லைட்..அவ்ளோதா...ரூம் ப்ரைட்...(இது நேசமாலே நடந்தது.)நைட் என்ன பண்றதுன்னு ஈமா கேட்டாஹள்ள..இப்டி ஒரு எல்இடி பல்பு உள்ள..ஒரு லைட் இருந்தா போதும்...செக் பண்ணி பாருங்க..it works...
இத எப்டியோ தெரிஞ்சுகிட்டு இந்த பூனைங்க..பாத்தீங்களா???
------------------------
அடுத்து டிரஸ் மேட்டர்...ஹ்ம்ம்,அவங்க என்ன செஞ்சாலும் நாடு பாராட்டும் சகோ,நாம அதயே பர்தான்னு சொன்னா தூற்றும்,..
---------------------
அடுத்து எப் ம்..ரைட்டு..பயலுக உங்க கழுத்துக்கும் கத்திய நீட்டிடானுவலா?..நானும் ஆர்வத்துல சிக்கீட்டு இப்போ ம்ம்ஹும்..அந்த பக்கமே போறதில்ல..மொக்கை..படு மொக்கையா இருக்கு நிகழ்ச்சி..
--------------------------------------
ஆமா இப்டில்லா பதிவு எழுதலாமா?பதிவர் சங்கத்துல அனுமதி குடுத்துட்டாங்களா??ஆமா நீங்க மெம்பரா இல்லையா??மெம்பர் ஆகணும்ன்னா எனக்கு உடனே 2000 திர்ஹம் அனுப்பிவச்சு ரிசர்வு பன்னிக்கோங்க...:))

அன்புடன்
ரஜின்

pudugaithendral said...

எங்கேயிருந்துதான் மேட்டர்கள் பிடிக்கறீங்களோ!!!

பகிர்வுக்கு நன்றி

நானானி said...

தண்ணீர் பாட்டில் லைட்!!!! ட்ரங்குப் பொட்டியின் ஹைலைட் இதுதான். தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனா ப்ளாட்டில் இருக்கும் நாங்க என்ன செய்வது?

Rabbani said...

நல்ல பதிவு

rajamelaiyur said...

//செத்தா இத்தனை லட்சம், காயமடைஞ்சா இத்தனை ஆயிரம் (அது எந்த மூலைக்குக் காணும்?)னு அறிவிக்கிறதோட அரசின் பங்கு முடிஞ்சதாவே நினைச்சுடுறாங்க.
//
விரைவில் அதான் நடக்க போகுது

rajamelaiyur said...

நல்ல தொகுப்பு

ஹுஸைனம்மா said...

அபு நிஹான் - வ அலைக்கும் ஸலாம். ஆமா, மொபைலிலும் கேக்க முடியுது, 89.5fm. நன்றிங்க.

முத்துலெட்சுமிக்கா - ஆமாக்கா, யாரோ இந்திய துணைக்கண்டம் பகுதியே நிம்மதியா இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி செய்ற மாதிரி இருக்குக்கா!!

ஹுஸைனம்மா said...

ரஜின் - ஸலாம். உங்க பதிவும் படிச்சேன்.

ஓ, இரவு நேரம்னா, ஒரு சின்ன எல்.இ.டி. லைட், ஒரு பாட்டில் தண்ணீர் போதுமா பளீர் வெளிச்சத்துக்கு? நானும் டிரை பண்றேன். (இமா& ஜெய்லானி - நோட் திஸ் பாயிண்ட்!!)

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - மேட்டர் பிடிக்கிறதுனு ஒண்ணும் பெரிசா இல்லை; செய்திகள் வாசிக்கும்போது, பிடித்த/பாதித்த நிகழ்வுகள் மனசுல பதிஞ்சிடுது. அவ்வளவுதான்.

நானானி மேடம் - ஃப்ளாட்ல ஜன்னல் இருக்கும்ல வெளிச்சத்துக்கு? ஒருவேளை பக்கவாட்டுச் சுவர்ல, துளை போட்டு சொருகிவக்கலாமோ?

ஹுஸைனம்மா said...

bat - (என்னங்க பேர் இது? தமிழ்ல ‘மட்டை’னு சொல்ல முடியலையே? ;-)))) ) நன்றிங்க.

ராஜபாட்டை ராஜா - (என்ன கம்பீரமான பேர்!!) நன்றிங்க.

ADHI VENKAT said...

பாட்டில் விஷயம் ரொம்ப நல்லா இருந்ததுங்க.

இந்த முறை டிரங்குப் பெட்டி ரொம்ப கனம் தான்....

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

நாஞ்சில் பிரதாப் said...

எஃப் எம்- சேம் பிளட். :))) எந்த நிகழ்ச்சியும் கிரியேட்டிவா இல்லை. அதன் சென்னை கிளையில் வேலைசெய்யும் எனது நண்பருகிட்டேய சொல்லிட்டேன். :))

ஃபிலிப்பைன்ஸ செயற்கை கரண்ட் மேட்டர் அற்புதம். ஆனால் மழைக்காலதில் வீடுஒழுகுமே...

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - நன்றிங்க

பிரதாப் - எஃப்.எம்.ல போய் கிரியேட்டிவிட்டியெல்லாம் எதிர்பார்த்தா அப்படித்தான் இருக்கும்!! ;-)))))

ஃபிலிப்பைன்ஸ்: இல்லைங்க, மழையில கூரை ஒழுகாது; அந்த வீடியோவைப் பாத்தாப் புரியும்.

goma said...

வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். .....என்ன ஒரு ஐடியா....