Pages

முளைச்சு மூணு இலை விட்டாச்சு






1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

    1. எங்கள் குடும்பம்
    2. நான் சமைக்காத சாப்பாடு
    3. இணைய இணைப்புடன் கூடிய ஒரு லேப்டாப்

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.  சிகரெட் நாற்றம்
2.  பிள்ளைகளிடம் கோபப்படும் என்னை
3.  சமைப்பது -  என்ன சமைக்க என முடிவு செய்யமுடியாத நாளில்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

1. மருத்துவமனை வாசம் செய்ய வேண்டிய நிலை
2. கேஸ் சிலிண்டர் மாற்றுவது (ஒவ்வொரு முறையும் பாம் ஸ்குவாட் போல திக் திக்தான்)
3. மரணம் மற்றும் மரணத்தின் பின்னான நிலைகுறித்து

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

1. குடிப் பழக்கத்தைப் பெருமையாகப் பறைசாற்றுபவர்கள்
2. உறவு வகைகளில் ‘முறுக்கு’ காட்டுவது
3. இந்திய அரசியல்வாதிகளின் அடங்காத பண ஆசை

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1. செல் ஃபோன், லேண்ட் லைன் கார்ட்லெஸ்
2. இன்றைய செய்தித்தாள்
3. பதிவு எழுதும் லேப்டாப்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

1. இடம், காலம், பொருள் பாராமல், ’புச் புச்’ என்று கிடைக்கும் முத்தங்கள் - என் சின்னவனிடமிருந்து
2. டாம் & ஜெர்ரி
3. நகைச்சுவைப் பதிவுகள்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1. இந்தப் பதிவின் 8வது கேள்விக்கு என்ன பதில்னு யோசிக்கிறேன்.
2. இந்தப் பதிவின் 9வது கேள்விக்கு என்ன பதில்னு மூளையைக் கசக்கிகிட்டிருக்கேன்..
3. ஹப்பாடா, இந்தக் கேள்விக்கு மூணு பாயிண்ட் கண்டுபிடிச்சுட்டோம்னு  சந்தோஷப்படுறேன்!!

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)
1. என் பிள்ளைகளுக்கு இஸ்லாம் கூறும் இறைநம்பிக்கையை முழுதாக ஊட்டிவிடவேண்டும்.
2. ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் - பண்ணைவீடு உட்பட
3. என் உறவுகளின் ஸகாத் (நோன்பு மாதத்தில் சொத்தின்மீது கணக்கிடப்படும் இஸ்லாமிய வரி) அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வழிகள் நோக்கல்.
   
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

(அல்ஹம்துலில்லாஹ் - புகழனைத்தும் இறைவனுக்கே)
1. நானே சமைப்பேன்
2. நானே மூச்சு விடுறேன், நடக்கிறேன், நிக்கிறேன், படுக்கிறேன் - இப்படியே என்றும் தொடர இறைவன் அருள் நாடுகிறேன்.
3. இந்தப் பதிவை முடிச்சுடுவேன் - எப்படியாவது. (கேள்வி கேக்கிறது ரொம்ப ஈஸி..)
   

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

1. ஃபயர் இஞ்சின்/ ஆம்புலன்ஸ் சைரன்
2. என்னிடம் யாராவது என் வீட்டிற்கு வழி கேட்பது. (ஹி.. ஹி.. வர்றது பிடிக்காம இல்லை; எனக்கு வழி சொல்லத் தெரியாது.. ஆனா, எங்க தெருமுனைக்கு எப்படியாவது வந்துட்டீங்கன்னா,  அதுக்கப்புறம் கரெக்டாச் சொல்லிடுவேன்.)
3.  ”எனக்கு லேப்-டாப்பில் வேலை இருக்கு. இப்பத் தரமுடியாது” என்ற என்னவரின் கூற்று!!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. பொறுமை
2. நீச்சல்
3. ஸ்கேட்டிங்
   
12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிடிக்காததுன்னு கேட்டிருந்தா கடகடன்னு சொல்லிருப்பேன். ஸோ, இந்தக் கேள்வியைச் சாய்ஸில் விடுறேன்!!


13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

முணுமுணுப்பதுலாம் இல்லை; அடிக்கடி விரும்பிக் கேட்கிறதுன்னு வேணா வச்சிக்கலாம்.

1. இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

2. ‘நஷீத்’ எனப்படும் இசையில்லாப் பாடல்களில், தற்போது “Give thanks to Allah"

3. 'நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்

   
14) பிடித்த மூன்று படங்கள்?

1. சதிலீலாவதி
2. காதலிக்க நேரமில்லை
3. பாமா விஜயம்

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

     1. உயிர், மூச்சு, சுய நினைவு (எல்லாமே ஒண்ணு மாதிரிதானே?)
     2. என் குடும்பம்
     3. தினமும் செய்தித்தாள்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

1. ஜெய்ஹிந்த்புரம் பீர் - பாஸ், உங்க ரேஞ்சுக்கு இந்தத் தொடர்பதிவுகளெல்லாம், ஷங்கருக்கு லோ-பட்ஜெட் படம்போலன்னு தெரியும். இருந்தாலும், ’தீவிர அரசியலிலிருந்து’ ஒதுங்கி இருக்கும் உங்களை ஃபீல்டுக்குள்ள மறுபடி கொண்டுவர ஏதோ என்னாலான ஒருவழி. :-))))

2. ஸாதிகா அக்கா - எத்தனை தரம் என்னை மாட்டி விட்டிருப்பீங்க?

3. அப்பாவி தங்கமணி - எங்கே ஆளைக் காணோம்? தொடர்கதைய முடிக்கக்கூடாதுன்னு யாரும் கடத்தி வச்சிருக்காங்களா? :-)))))




Post Comment

53 comments:

இமா க்றிஸ் said...

எல்லாப் பதிலும் நல்லா இருக்கு ஹுஸைனம்மா. அங்கங்க குட்டிக் குட்டியா சிரிப்ஸ் தூவிக் கிடக்கு. ;)

கடைசில ஒரு டிப் குடுத்து இருக்கீங்களே, சூ..ப்பர். ;)))

ஸ்ரீராம். said...

கேஸ் சிலிண்டர் வரிகள் சிரிப்பைக் கொடுத்தன. மரணத்துக்குப் பின்னால் என்ன ஆனால் என்ன? நமக்குதான் தெரியாதே....!
ஏழாவது கேள்வியை பிரமாதமா சமாளிச்சிட்டீங்க... !
பன்னிரெண்டாவது கேள்விக்கான பதில் சுவை இல்லாமல் போய் விட்டதே...!
அப்பாவி தங்கமணி....ஹா..ஹா..

ஸாதிகா said...

///என்னிடம் யாராவது என் வீட்டிற்கு வழி கேட்பது. (ஹி.. ஹி.. வர்றது பிடிக்காம இல்லை; எனக்கு வழி சொல்லத் தெரியாது.. ஆனா, எங்க தெருமுனைக்கு
எப்படியாவது வந்துட்டீங்கன்னா, அதுக்கப்புறம் கரெக்டாச் சொல்லிடுவேன்.)///
/// ”எனக்கு லேப்-டாப்பில் வேலை இருக்கு. இப்பத் தரமுடியாது” என்ற என்னவரின் கூற்று!!
///
/// நான் சமைக்காத சாப்பாடு///

ஹுசைனம்மா,திரும்ப திரும்ப நிரூபிக்கறீங்க.நீங்க பலே ஆள் என்று.

தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கீங்க.உங்களை மாதி நானெல்லாம் தொடர்பதிவுன்னா அலற மாட்டேன்.ஸோ..அடுத்த பதிவு தொடர் பதிவுதான்.

ஜெய்லானி said...

நழுவாமல் உண்மையான பதில்கள்..!! :-))

ஆமினா said...

சிரிப்பை வர வச்ச நச் பதில்கள்

ஆமினா said...

//என் பாட்டுக்கு எசப்பாட்டு இங்க...

கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல..//

ஏன் இப்படி???

வெங்கட் நாகராஜ் said...

சுவையான பதில்கள்... இந்த மூன்று தொடர்பதிவு சுவாரசியமாக தொடர்கிறது... தொடரட்டும்...

ராமலக்ஷ்மி said...

ஏழாவது கேள்விக்கான பதில்கள் உங்க அக்மார்க் அசத்தல்:))!

மற்ற யாவுமே ரசிக்கும்படி, சில நெகிழ்வாய், சில சபாஷ் சொல்ல வைப்பதாய்.

CS. Mohan Kumar said...

நல்ல பதில்கள்

தொடர்ந்து பேப்பர் படிப்பீர்கள் என்பது ஆச்சரியமா இருக்கு (என்னால் முடிவதில்லை)

பிடித்த படங்கள் அனைத்தும் நகைச்சுவை படமா இருக்கு

ஸாதிகா said...

சகோ ஸ்ரீராம், //மரணத்துக்குப் பின்னால் என்ன ஆனால் என்ன? நமக்குதான் தெரியாதே....!//

மரணத்திற்கு பின்னர் கண்டிப்பாக மறுமை வாழ்வு உண்டு.இதனை நம்புவன்தான் இஸ்லாமியன்.

சாந்தி மாரியப்பன் said...

சிரியஸான பதிவு :-)))))))))))

அமைதி அப்பா said...

சிறப்பான பதில்கள்!

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா உள்ளார்த்தமான பதில்கல். சிரிப்பைத்தான் அடக்க முடியவில்லை.
அதெப்படி என்னொட மூணு படங்களை நீங்களே போட்டுவிட்டீர்கள்:)

எனக்கும் வீட்டுக்கு வழி சொல்லத்தெரியாது.
இந்தத் தடவை துபாய் வரும்பொதாவது உங்கலுக்குச் சரியாகச் சொல்லுகிறேனோ என்று பார்க்கிறேன்.

RAMA RAVI (RAMVI) said...

பதில்கள் அருமை, நானும் விரும்பாத விஷயம் சமையல்தான்,நானும் என் பதிவில் அதைதான் குறிப்பிட்டுள்ளேன்.நீங்களாவது பரவாயில்லை என்ன சமைப்பது என்று தெரியாத போதுதான் ஆனால் எனக்கு எப்பொதுமே சமைப்பது என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

ஹுஸைனம்மா said...

இமா - வாங்கப்பா. //கடைசில ஒரு டிப் குடுத்து இருக்கீங்க// என்னதுன்னு புரியலையே??

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - அது என்னவோ, கேஸ் சிலிண்டர்னாலே டென்ஷனாகும், அதுவும் பசங்க வேற வந்து வேடிக்கை பாப்பாங்களா, கூட கொஞ்சம் டெஞ்சனாகும்.

//மரணத்துக்குப் பின்னால்// - இஸ்லாம்படி, மரணத்திற்குப் பின் சுவர்க்கம், நரகம் உண்டு. அதை நான் நம்புவதால்தான், கொஞ்சமேனும் நியாயமாக நடக்க முயற்சி செய்கிறேன் என்று சொல்லலாம்.

//பன்னிரெண்டாவது கேள்விக்கான பதில்// - (ஹராமானது தவிர) சாப்பாட்டுல எதையும் விட்டுவைக்கிறதில்ல சார். அதான் அப்ப எதுவும் ஞாபகம் வரல. அப்புறம் தோணுச்சு, இந்த ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, கோதுமை ரவை, பார்லினு சத்தான/ உடல் எடையைக் குறைக்க உதவும்/நார்ச் சத்து நிறைந்த உணவுவகைகளை நான் எப்படி சமைத்தாலும் சகிக்கபிளா இருக்க மாட்டேங்குது. அதை யாராவது டேஸ்டியா செய்து தரமாட்டாங்களான்னு தோணும். அதைச் சொல்லிருக்கலாம்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //நீங்க பலே ஆள்// உங்க ஃப்ரெண்டா இருந்துட்டு, இந்தளவுக்குக் கூட இல்லைன்னா எப்படி? ;-)))

ஜெய்லானி - நன்றி. பொய் சொல்லத் தெரியாது எனக்கு, அதான்!! ;-)))))

ஆமினா - வாங்கப்பா. //ஏன் இப்படி???// அது ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நாளுக்கு முன்னாடி, சில கமெண்டுகளால வைரஸ் வந்து, சிலருக்கு பிளாகே காணாமப் போச்சு. அப்ப உஷாரானது, இன்னும் உஷாராவே இருக்கேன்!! ;-)))))

ஹுஸைனம்மா said...

வெங்கட் - நன்றிங்க.

ராமலக்‌ஷ்மிக்கா - ரொம்ப நன்றிக்கா.

மோகன் - வாங்க வக்கீல் சார். எனக்கு அன்னன்னிக்கு (தூங்கறதுக்குள்ளயாவது) செய்திகள் தெரிஞ்சேயாகணும் -பேப்பர்/டிவி/ரேடியோ/இணையம்/வாய்மொழி எப்படியாவது!! காலை காஃபி + பேப்பர் ரொம்பப் பிடிக்கும்!!

அதேபோல, சென்ஸிடிவ் அல்லது டிராஜிக் படங்கள் பார்த்தால், பாதிப்பு நீங்க நேரமாகுது. அதான், காமெடிப் படங்கள்தான் அதிகம் விரும்பிப் பார்ப்பது.

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - நன்றிக்கா.

அமைதி அப்பா - நன்றி சார்.

வல்லிம்மா - //என்னொட மூணு படங்களை நீங்களே// - நீங்க தயாரிச்சதா? சொல்லவேயில்லை??!! (ச்சும்மா... ;-))))) ) துபாய்ல உங்க வீடு எங்கன்னு எனக்கு நம்ம அநன்யா சொல்லிட்டாங்க. ஈஸி லேண்ட்மார்க்!!

ராம்வி - எனக்குத் தினமுமே சமைக்கிறது பிடிக்காதுதான். ஆனா, பசங்களுக்காக செஞ்சுதானே ஆகணும். அதுவும், பசங்களுக்கு சத்து வேணும்னு காய்கறிகள் விதவிதமாச் செஞ்சு கொடுத்தா தின்ற அளவைவிட, தயிர்/ஊறுகாய்/அப்பளம் கொடுத்தா, நாலுகரண்டி கூட வச்சு சாப்பிடறாங்க. அப்ப எதுக்கு சமைக்கணும்னு கோவமா வரும்!! ஆனாலும், சமைக்கணும்!! ;-))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தோட்ட்டக்காரங்கன்னு நிரூபிக்கிறீங்க தலைப்பிலேயே..
தேங்க்ஸ்டு அல்லா பாட்டு நல்லா இருக்கு..ஹுசைனம்மா..

புச் புச் சூப்பர்..:)

Riyas said...

//எனக்கு லேப்-டாப்பில் வேலை இருக்கு. இப்பத் தரமுடியாது” என்ற என்னவரின் கூற்று!!//

வேறொன்று வாங்கிட்டாப்போச்சு,,

Riyas said...

//பிடித்த மூன்று படங்கள்?

1. சதிலீலாவதி
2. காதலிக்க நேரமில்லை
3. பாமா விஜயம்//

எங்க பாட்டிக்கும் இந்தப்படங்கள் பிடிக்கும்..

Riyas said...

இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் என்னையும் மிகக்கவர்ந்தது,,

மற்றப்படி எல்லாமே நறுக் பதில்கள்

நம்ம கடப்பக்கம் வழி மறந்திட்டிங்க போல

ஹுஸைனம்மா said...

ரியாஸ், இன்னொரு லேப்டாப் வாங்கலாம்தான். ஆனா, அப்புறம் வீட்டிலேயே எல்லாரும் தனித்தனி தீவா ஆகிடுவோமோன்னு ஒரு பயம். அதான், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இதிலயே வாழ்க்கையை ஓட்டறோம்!! ;-)))

//எங்க பாட்டிக்கும் இந்தப்படங்கள் பிடிக்கும்.//
அப்படியா? என்னையும் உங்க பாட்டி மாதிரி நினைச்சிக்கோங்க. தப்பா நினைக்க மாட்டேன்!! ;-))))

//நம்ம கடப்பக்கம் வழி மறந்திட்டிங்க போல//
இல்லைப்பா, ரெகுலரா பாக்கிறேன்; ஆனா, கவிதைக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தம். அதான், உங்களைப் போல ‘இலக்கியவாதிகளைப்’ பாத்தும் பாக்காத மாதிரி போயிடுறது!! ;-))))

ஹுஸைனம்மா said...

முத்தக்கா, “மூணு” வர்ற மாதிரி படப்பேர்கள், phrases எல்லாமே எல்லாரும் பயன்படுத்திட்டாங்க. மிச்சம் இருந்தது இந்த ஒண்ணுதான். அது நம்ம ‘தொழிலுக்கும்’ பொருந்திப் போனது ரொம்பத் தற்செயல்!! அதுவும் நீங்க சொன்னதுக்கப்புறந்தான் தெரியுது!! ‘தமிழார்வலர்’னு நிரூபிக்கிறீங்க மறுபடியும்!! ;-))))))

கோமதி அரசு said...

இறைவனிடம் கையேந்துங்கள் என்றபாடல் எனக்கும் நிரம்ப பிடிக்கும்.

உங்கள் பதில்கள் எல்லாம் நல்லாஇருக்கிறது.

உங்களுக்கு பிடித்த சினிமா எனக்கும் மிகவும் பிடிக்கும்.

mohamedali jinnah said...

எங்களுக்கு முழுமையாக இக்கட்டுரை பிடிச்சிருக்கு.
"நான் சமைக்காத சாப்பாடு" நீங்கள் சமைக்கும் போதே உப்பு ,காரம் எல்லாம் சரியாக உள்ளதா! என்று சரி (டேஸ்ட் ) பார்ப்பதிலேயே பல் வகை உணவும் சாப்பிட்டு விடுவதால், நீங்கள் சமைத்த உணவை சாப்பிட ஆர்வம் குறைந்து விடுகிறது ,வயரும்,மனமும் நிறைந்து விடுகிறது . அதனால் தான் நீங்கள் சமைக்காத சாப்பாட்டில் உங்களுக்கு விரும்பும் அதிகமாக உள்ளது.

நட்புடன் ஜமால் said...

அடுத்தவங்க சமைச்சி அதை சாப்பிடுவதில் ...

அட அட அடா என்னா அலாதி ப்ரியம் (இ.ம.எ.வா)

நட்புடன் ஜமால் said...

ஸ்கேட்டிங் - haiyaa me 3

மனோ சாமிநாதன் said...

'நான் சமைக்காத சாப்பாடு' பதில் அசத்தல்! இந்த நினைப்பு எல்லா பெண்களுக்கும் இருக்கிறது!!

சில பதிகள் நெகிழ்வாய், சில பதில்கள் நகைச்சுவையாய், நிறைய பதில்கள் நேர்மையாய்.. .. ..வழக்கம்போல சிற‌ப்பான பதிவு

pudugaithendral said...

என் பதிவுல நீங்க சொல்லியிருப்பது சரிதான். பல இடத்துல நான் சொல்லி நீங்க எழுதினா மாதிரிதான் இருக்கு. இந்த டெலிபதி சூப்பர்

:))

அப்பாவி தங்கமணி தொடர்கதைக்கு முற்றும் போட்டுட்டாங்களே

நாடோடி said...

இதுவும் தொடர்பதிவா?...

எல்லா பதில்களும் கமெடியாய், உண்மையாய் எழுதியிருக்கீங்க.....

:))

ADHI VENKAT said...

கேஸ் சிலிண்டர் எனக்கும் பயம் தான். இப்போது பைப் லைன்.....

நல்ல பதில்கள். 7 கேள்விக்கு விடைகள் சூப்பர்..

என் பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே. மூன்று தொடர்பதிவு போட்டிருக்கேன்....சமயம் கிடைக்கும் போது பாருங்கள்.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

Jaleela Kamal said...

அப்பப்பா இது பெரிய தேர்வு போல இருக்கே.

எல்லாம் விருப்பங்களும் சூப்பர், இதுல என் விருப்பங்களும் சிலது இருக்கு,
கேஸ் சிலிண்டர் என்றதும், சிரிப்பு தாங்கல,


இப்ப ஊருக்கு போயிருக்கும் போது

மேல் வீட்டில் கேஸ் காலியாகி விட்டது
என் தங்கைய அத மாத்த கூப்பிட்டாங்களாம்
இவளும் போய் மாட்ட போனாள்,\

அங்கு பாட்டி மக பேத்தி எல்லா ம் குடும்பத்தோடு வெளியில் வந்து நிற்கிறாங்களாம்.

கீழ வந்து என்கிட்ட சொன்னாள் அப்ப எனக்கு இருந்த பிசியில் அப்படியான்னு கேட்டேன், ஆனால்; இப்ப இங்க பார்த்ததும் அத நினைத்து ஒரே சிரிப்பு தான் வருது என் தங்கைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையாம் அவர்கள் குடும்பத்தோடு வெளியில் ஒடுறாங்க்...

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருந்தது..தலைப்பும் சூபப்ர்ப்...

அதிலும் 7வது கேள்வியின் பதில் அருமை...

Muniappan Pakkangal said...

Ithu thodar pathivaa

தராசு said...

இது என்ன தலைப்பு????

அடுத்த மூணு பேரோட பெயர் மட்டும் தான கேட்டாங்க, அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு.....

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - ரொம்ப நன்றிக்கா.

நீடுர் அலி பாய் அவர்கள் - ரொம்ப நாள் கழிச்சு என் பதிவுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்க சொல்லிருக்கது உண்மைதான். ஊரில் சில சமயம், விசேஷங்கள்க்குச் சமைக்கும் பண்டாரிகள் எனப்படும் சமையல்காரர்கள், தாம் சமைத்ததை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தம் வீட்டில் சென்றுதான் உண்ணுவார்கள். கேட்டால் தான் சமைத்ததையே சாப்பிட்டால் ‘முகத்திலடித்தது போல இருக்கும்’ என்பார்கள்.

ஹுஸைனம்மா said...

ஜமால் - நாம் சொன்னதில, இந்தப் பாயிண்டுதான் எல்லார்க்கும் ரொம்ப பிடிச்சிருக்குபோல. அதை எழுதும்போது, எழுதவா வேணாமான்னு யோசிச்சுகிட்டேதான் எழுதினேன்!!


மனோ அக்கா - வழக்கமா செய்ற வேலைகள் விரைவில் அலுப்பைத் தந்துவிடுமல்லவா? அதனால்தான்னு நினக்கிறேன்க்கா.

ஹுஸைனம்மா said...

தென்றல் - ‘டெலிபதி’ - கரெக்ட்!! ரொம்ப சந்தோஷம்ப்பா!!

நாடோடி - ஆமாங்க, தொடர்பதிவுதான். பதிவுலகுக்கு கொஞ்ச நாள் வராததினாலத் தெர்யலபோல.

கோவை2தில்லி - இங்கேயும், பெரிய பில்டிங்ல மட்டும்தான் கேஸ் பைப் லைன்ல வரும். உங்க பதிவுக்கு வர்றேம்ப்பா. எனக்கு ரீடர்ல அப்டேட் ஆகலை. ஏன்னு தெரியலை.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நானும் அப்படித்தான்க்கா, சிலிண்டர் மாத்தும்போது, யாரையும் கூட விடுறதில்லை.

கீதா - வாங்கப்பா. ரொம்ப நன்றி.

டாக்டர் சார் - ஆமாங்க, இது தொடர் பதிவுதான் ரொம்ப பிஸியா? ஆளையேக் காணோமே?

ஹுஸைனம்மா said...

தராசு - வாங்க பாஸ்.
// இது என்ன தலைப்பு????
....எதுக்கு இந்த பில்டப்பு..//

ஏன் இத்தனை கடுப்பு?? :-)))))))

Thenammai Lakshmanan said...

1. இந்தப் பதிவின் 8வது கேள்விக்கு என்ன பதில்னு யோசிக்கிறேன்.
2. இந்தப் பதிவின் 9வது கேள்விக்கு என்ன பதில்னு மூளையைக் கசக்கிகிட்டிருக்கேன்..
3. ஹப்பாடா, இந்தக் கேள்விக்கு மூணு பாயிண்ட் கண்டுபிடிச்சுட்டோம்னு சந்தோஷப்படுறேன்!!

// ஹாஹாஹா சூப்பர்..:))இதுதான் ஹுசைனம்மா டச்.:)

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

சகோதரி ஹுசைன்னம்மா,

மிக அழகான பதிவு....இப்பதான் பாக்குறேன்...அதான் லேட் கமெண்ட்...

/// என் பிள்ளைகளுக்கு இஸ்லாம் கூறும் இறைநம்பிக்கையை முழுதாக ஊட்டிவிடவேண்டும்.///

அல்லாஹ் போதுமானவன்...நானும் துவா செய்கின்றேன்...

//என் உறவுகளின் ஸகாத் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வழிகள் நோக்கல்///

அருமை...உங்களின் இந்த அற்புத முயற்சி வெற்றி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்...

பகிர்விற்கு ஜஜாக்கல்லாஹு க்ஹைர்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அஸ்மா said...

சலாம் ஹுஸைனம்மா! கேஸ் சிலிண்டர் விஷயத்தில் நீங்களும் அப்படிதானா?:) மாற்றும்போது தைரியமா (?) சென்று காலியானதை கழற்றிவிடுவேன். ஆனா ஃபுல் கேஸுடன் உள்ள சிலிண்டரை பார்த்தாலே பயம்தான் :( என்ன செய்வது, மாற்றிதானே ஆகணும்.. ஆனா இங்கு அந்த பிரச்சனை இல்லபா!

16 கேள்விகளும், கஷ்ஷ்ஷ்...டப்பட்டு :) 45 பதில்களும் எழுதியதால் மெயில் பார்க்க உங்களுக்கு நேரமில்லை என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது என் மெயில் பாருங்கள்.

ஹுஸைனம்மா said...

தேனக்கா... வாங்க. 7வதுக்குப் பதில்: உருப்படியா எதாவது செஞ்சா, அதச் சொல்லலாம்.. வீ.ஓ. வா இருக்க நான் வேறென்ன சொல்ல? ;-))))

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். துஆ செய்ங்க.

அஸ்மாக்கா - ஸலாம். வாங்கக்கா. உங்க 2 மெயிலுக்கும் சேத்து, ஒரே பதிலா எழுதி அன்னிக்கே அனுப்பிட்டேனேக்கா? நீங்க பாக்கலையா இல்லை மெயில் கிடைக்கலையா?

ஆதி மனிதன் said...

//அன்னன்னிக்கு (தூங்கறதுக்குள்ளயாவது) செய்திகள் தெரிஞ்சேயாகணும் -பேப்பர்/டிவி/ரேடியோ/இணையம்/வாய்மொழி எப்படியாவது!! காலை காஃபி + பேப்பர் ரொம்பப் பிடிக்கும்!! //

Repeatu...

நாகூர் அனிபா அவர்களின் பாடல் நீண்ட நாட்களுக்கு பின் கேட்டது இனிமையாக இருந்தது. நன்றி.

ஹுஸைனம்மா said...

ஆதிமனிதன் - நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஹுஸைனம்மா!

உங்களை 'நட்பென்னும்' தொடர்பதிவில் பங்கேற்க என் வலைத்தளத்தில் அழைத்துள்ளேன்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

ரமலான் வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

நகைச்சுவை உணர்வோடு ரசிக்கத்தகுந்த பதில்களை..

உங்க மெயின் பிரச்சனை சாப்பாடுதான்னு நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான். நானே சமைச்சி, அத நானே சாப்பிட்டு, பெறவு தட்டையும் நானே கழுவி.. ஸ்ஸப்பா.. கற்றுக்கொள்ள வேண்டியதுல 2 பாயிண்ட் நானும் கத்துக்கணும்.. பாப்போம்..

ஷர்புதீன் said...

:-)

goma said...

கேஸ் சிலிண்டர் மாற்றுவது (ஒவ்வொரு முறையும் பாம் ஸ்குவாட் போல திக் திக்தான்)

சேம் ரத்தம்