இந்த வருடத்தின் நோன்புக்கான ரமலான் மாதம் ஆரம்பித்து, இதோ நான்கு நோன்புகள் ஆகிவிட்டது.
இஸ்லாமியக் கடமைகளான ஸகாத்(தானம்) மற்றும் ஹஜ் பயணம் ஆகியவை, அதற்கான வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கடமையாக இஸ்லாம் கூறுகிறது. இதுவரை, மறுமைக்கான பலன்களோடு, நோன்பு நோற்பது பசியின் தாக்கத்தை உணர்ந்து, அடுத்தக் கடமையான ஸகாத்தைச் சிறப்புற நிறைவேற்றவும் ஊக்கமளிக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனா, நோன்புங்கிறது ஸகாத் செலுத்துறவங்களுக்கு மட்டும் கடமையில்லையே? ஐவேளைத் தொழுகையைப் போல, இதுவும் ஆண்-பெண், ஏழை-பணக்காரர் பேதமில்லாமல் எல்லாருக்குமேதானே.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)
நோன்பு, நம்மை தூய்மையடையச் செய்யும் வணக்கச் செயல் என இறைவன் திருமறையில் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்..... அறிவிப்பாளர்: முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா (ரழி) நூல் அஹ்மத், முஸ்லிம், திர்மிதி
நம் எல்லாச் செயல்களின் விளைவுகளும் நமக்கே என்று சொல்லும் இறைவன், நோன்பை மட்டும் தனக்கானது என்று சொல்லுவதிலிருந்தே நோன்பின் மாண்பை உணரலாம். இன்னும்,
ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்கக்கூடியதாகும். ஒரு ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமலானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். ஆதாரம்: முஸ்லிம்
பொதுவாவே ‘பசி வந்தா, பத்தும் பறக்கும்’னு சொல்லுமளவு பசிதான் மிகவும் கொடுமையான விஷயமா உலகத்தில் சொல்லப்படுவது. ’தானத்தில் சிறந்தது அன்னதானம்’னு பசிக்கு உணவளிப்பதைச் சிறப்பித்திருப்பதிலிருந்தும் பசியின் பாதிப்பு எப்படிப்பட்டதுன்னு புரியும். இன்னும், ‘எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’, 'சோறுகண்ட இடம் சொர்க்கம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’, "If you want to enter into a man's heart, enter through his stomach' - இப்படி வழங்கப்படும் பல சொல்லாடல்கள் உணவின் அத்தியாவசியத்தைச் சொல்லும்.
ஆனா, நோன்பு சமயத்தில், உணவு நம்முன்னே இருந்தாலும், நம்மருகில் யாரும் இல்லைன்னாலும், இறைவனுக்காக, மிகுந்த மனக் கட்டுப்பாட்டோடு, உண்ணாமல், தண்ணீர்கூட நாவில் படாமல் இருக்கிறோம். இப்படியொரு சுய கட்டுப்பாட்டைக் கொண்டு (self-control) நம்மை மேலும் உறுதிபடுத்திக் தருவது இந்த ஒரு மாத ஆன்மீகப் பயிற்சிதான்.
வருஷத்துக்கொரு முறை வரும் பரீட்சைபோல வரும் இந்த நோன்புகாலத்தில் நம் புலன்களை அடக்கி, வெற்றி பெறுவது, அடுத்த நோன்புகாலம் வரை நம்மைப் பண்படுத்திக் கொள்வதற்கான ஒரு “rigorous training" போல!! ஆனானப்பட்ட பசியையே அடக்கியாண்டுட்டா, மத்த உணர்வுகள் எம்மாத்திரம்? பசியைக் காரணம் காட்டித்தானே இந்த உலகத்துல பல தவறுகள் நடக்குது அல்லது நடத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ‘ஒரு மாதப் பயிற்சி முகாம்’ உதவுகிறது.
மேலும், நோன்பு காலத்தில், உணவில் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதனால, எப்பேர்ப்பட்டவரும், இந்த ஒரு மாசம் மட்டுமாவது ’திருந்தி’யே ஆகணும். உதாரணமா, சிகரெட், பொய் பேசுதல், கோபம் கொள்ளுதல், தீய எண்ணங்கள் - எல்லாமே புனித மாதமாக முன்னிறுத்தப்படும் இந்த மாதத்தில் கண்டிப்பாகத் தவிர்க்கப் படவேண்டி இருப்பதனால், மற்ற காலங்களிலும் அவற்றை முழுமையாகத் தவிர்க்கவும் நோன்பு காலத்தில் பயிற்சி கிடைக்கிறது.
ஆக, நோன்பு மாதம் என்பது, இறைவன் கட்டளைப்படி நோன்பிருந்து மறுமைக்கான நன்மைகள் பெற்றுத்தரும் பயிற்சிக் களமாய் மட்டுமல்லாமல், பசியை மட்டுமல்லாது, ஒருவரின் எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் திறனை அதிகரிக்கச் செய்து, இவ்வுலக வாழ்வையும் நேர்வழியில் வாழ இறைவன் தந்த அருட்கொடையாகவும் காண்கிறேன்.
நோன்பாளிகளுக்குப் பல சிறப்புகளை மறுமையில் வாக்களித்திருக்கும் இறைவன், இம்மையில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகளையும் மறுக்காமல் நிறைவேற்றித் தருவதாக நபிமொழி கூறுகிறது. விட்டுவிடலாமா இந்த அழகிய சந்தர்ப்பத்தை?
Ref: http://www.ottrumai.net/TArticles/10-FastingIsObligation.htm
|
Tweet | |||
24 comments:
// நம்மை மேலும் உறுதிபடுத்திக் தருவது இந்த ஒரு மாத ஆன்மீகப் பயிற்சிதான்.// அழகிய முறையில் கூறி இருக்கின்றீர்கள் ஹுசைனம்மா.
மட்டுமின்றி வறியோரின் பசி எத்தகையது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளக்கூடியாதாகவும் உள்ளது.
அழகிய பகிர்வு ஹுஸைனம்மா.. ரமலான் வாழ்த்துகள்.
good post ...congrates..
ramathan wishes...:-)
உடலுக்கும் மனதுக்கும் நல்ல பயிற்சி தரும் நோன்பு. ரமலான் வாழ்த்துகள்.
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
---------
ஆனானப்பட்ட பசியையே அடக்கியாண்டுட்டா, மத்த உணர்வுகள் எம்மாத்திரம்? பசியைக் காரணம் காட்டித்தானே இந்த உலகத்துல பல தவறுகள் நடக்குது அல்லது நடத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ‘ஒரு மாதப் பயிற்சி முகாம்’ உதவுகிறது.
---------
Perfect....
எப்படி ரமலான் மாதத்தில் மட்டுமே ஜகாத் கடமை இல்லையோ, அது போலவே நன்மைகள் செய்வதும்..
சில மெயில்கள் வருகின்றன..இந்த மாதத்தில் இதை செய்யாதீர்கள், அதை செய்யாதீர்கள் என்று....இது எனக்கு புரியவில்லை. இந்த மாதத்தில் இது தவறென்றால் மற்ற மாதங்களில் மட்டும் அது சரியாகி விடுமா? இல்லை அட்லீஸ்ட் இந்த மாதத்திற்காவது ஒழுங்கோடு இருங்கள் என்று சொல்லுகின்றோமா?? அப்படி சொல்வோமானால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகின்றது. Because, Islamic principles doesn't work in that way...
நான் மேலே கூறியது போன்ற எண்ண ஓட்டத்தில் அந்த மெயில்களை நிச்சயம் கம்போஸ் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்...இருப்பினும் படிக்கும் ஒருசிலர் அப்படி எண்ண வாய்ப்புண்டு என்பதால் ஒரு ரிமைன்டர்... :)
நாம் எப்போதும் போல நன்மைகளை (முதல் குர்ஆன் வசனம் இறங்கப்பெற்ற மாதம் என்பதால் இன்னும் அதிகமதிகமாக செய்வோம்) செய்து கொண்டிருப்போம். இந்த மாதத்தில் அதற்கான கூலி அதிகம் கிடைக்கப்பெருவோம் (இன்ஷா அல்லாஹ்). அவ்வளவே.
நல்லதொரு பகிர்தலுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நோன்பு கால பயன்கள் குறித்த விளக்கமான பதிவு.
தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.
தொழுகை
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.
அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?
உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.
தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.
தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
.
//நோன்பாளிகளுக்குப் பல சிறப்புகளை மறுமையில் வாக்களித்திருக்கும் இறைவன், இம்மையில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகளையும் மறுக்காமல் நிறைவேற்றித் தருவதாக நபிமொழி கூறுகிறது. விட்டுவிடலாமா இந்த அழகிய சந்தர்ப்பத்தை?//
தலைப்பை பார்த்து விட்டு பயந்து போய் வந்தேன் .இந்த ஒரு வரி பல அர்தத்தை தருதே..!!
அழகிய பகிர்வு ஜஸாக்கல்லஹ் க்கைர் :-)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//நோன்பு நோற்பது பசியின் தாக்கத்தை உணர்ந்து, அடுத்தக் கடமையான ஸகாத்தைச் சிறப்புற நிறைவேற்றவும் ஊக்கமளிக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனா, நோன்புங்கிறது ஸகாத் செலுத்துறவங்களுக்கு மட்டும் கடமையில்லையே? ஐவேளைத் தொழுகையைப் போல, இதுவும் ஆண்-பெண், ஏழை-பணக்காரர் பேதமில்லாமல் எல்லாருக்குமேதானே.//
---ஆம்..! அருமையான விளக்கம் சகோ.ஹுசைனம்மா. அவசியம் சொல்ல வேண்டிய சரியான கருத்து.
தங்களின் இந்த இந்த நல்ல பகிர்வில் நீங்கள் குறிப்பிட்ட முக்கிய விஷயங்களுடன் நானும், ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே பகிரலாம் என்று எண்ணுகிறேன்.
ரமளான் கரீம்..!
(Ramaldaan is generous...!)
எப்படியாம்...?
//..."எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!"... //(என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)தெரிவிப்பதை "நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில்... புஹாரி-1894'இல் பார்க்கலாம்.
ஆக, மற்ற மாதங்கள் போலில்லாமல் இம்மாதத்தில்தான் எந்த ஒரு நற்செயலுக்கும் ஒன்றுக்கு பத்துமடங்கு நன்மைகள் என வாரி வழங்கி பதியப்படுகின்றன.
"கடமையல்லாத தர்மமான சதகா"வை அளிப்பதற்கும், "கடமையல்லாத தஹஜ்ஜத் எனும் இரவுத்தொழுகை" தொழவும் இந்த மாதத்தில் மட்டும் அதிக முனைப்பு காட்டப்படுவது இதனால்தான் சகோ.ஹுசைனம்மா.
பகிர்வுக்கு நன்றி சகோ.
சிறப்பான பதிவு. வாழ்த்துகள்....!
//நோன்பாளிகளுக்குப் பல சிறப்புகளை மறுமையில் வாக்களித்திருக்கும் இறைவன், இம்மையில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகளையும் மறுக்காமல் நிறைவேற்றித் தருவதாக நபிமொழி கூறுகிறது. விட்டுவிடலாமா இந்த அழகிய சந்தர்ப்பத்தை?//
உண்ணாநோன்பின் போது உள்ளொலி பெருகும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.
வயிற்றுக்குச் சோறிட வேணும் இங்கு வாழும் மனிதருக்கொல்லாம்” என்ற மகாகவியின் வார்த்தையை ,பசியின் கொடுமையால் மக்கள் படும் துன்பத்தை நாம் உணரும் காலம. உணர்ந்து எளியோருக்கு முடிந்த வரை உதவ மனம் முன் வரும் காலம், இந்த நோன்பு காலம், அதைப் பற்றி மிகவும் அழகாய் பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள். வாய்ப்பை விட்டு விடலாமா விட கூடாது. எப்போது கடைபிடிப்போம் என்ற உறுதிபாடு வளர வாழ்த்துக்கள்.
நோன்பு கால பயன்கள் குறித்த விளக்கமான பதிவு.//
வழிமொழிகிறேன்
நல்ல பகிர்வு. நோன்பு பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டோம். ரமலான் வாழ்த்துக்கள்.
சகோ ஜெய்லானி சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் ...
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைகளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமளான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
''சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் சிறந்தது.
அருமையான பதிவு
நல்லதொரு பகிர்வு.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.//
திரு வாஞ்சூர் அவர்கள் தெரியவில்லை குறிப்பிட்ட ஆசனத்தின் பெயர் வஜ்ராசனம்.
இது சிறந்த ஆசனம், வஜ்ரம் போல் நம் உடம்பை வைத்துக் கொள்ள உதவும்.
கால்கள் பலமடைகின்றன, வயிற்றின் எல்லாப் பகுதிகயிலும் இரத்தஓட்டம் சீரடைகிறது.
கீல்வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்புவலி இவை குணமடையும், வராமல் தவிர்க்கலாம்.
உடலின் முக்கியமான உட்பகுதிகளான இருதயம், சுவாச்ப்பைகல், குடல், மூளை, சுரப்பிகள்போனறவற்றுடன் (நரம்புகள் மூலம்) பாதங்களுக்குத் தொடர்புள்ளது. பாதங்கள், மற்றும் கால் விரல்கள் அழுத்தப்ப்டுவதால்(அவற்றின் இயக்கம் நரம்புகள் மூலம் ஊக்கிவிடபபட்டு), நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யப்படுகிறது.
ஓவ்வொரு உணவு வேளைக்கும் பின் இதை செய்தால் நன்கு உணட உணவு ஜீரணம் ஆகும். இந்த ஆசனத்தைபற்றி தனி பதிவு போடலாம்.
நீங்கள் ஐந்து வேலை இந்த ஆசனத்தில் தொழுகை செய்வது இறைவன் கொடுத்தவரம்.
ரம்ஜான் நோன்பு பற்றிய அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்,தகவல் தெரிந்து கொண்டேன்,நன்றி ஹூஸைனம்மா. ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ரமலான் பற்றிய பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..
அருமையான பதிவு, தலைப்பு அருமை!!
ஆனானப்பட்ட பசியையே அடக்கியாண்டுட்டா, மத்த உணர்வுகள் எம்மாத்திரம்? பசியைக் காரணம் காட்டித்தானே இந்த உலகத்துல பல தவறுகள் நடக்குது அல்லது நடத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ‘ஒரு மாதப் பயிற்சி முகாம்’ உதவுகிறது.
Makes a lot of sense! masha Allah
நோன்புக்காலம்..ஒரு பயிற்சிக்காலம்...நல்லா இருக்கு.ஹுசைனம்மா..
நோன்புக்காலம்..ஒரு பயிற்சிக்காலம்...நல்லா இருக்கு.ஹுசைனம்மா..
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளும், ரமலான் வாழ்த்துக்களும்.
கோமதி அக்கா, உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் - யோகாசனம் பத்தின தகவலுக்கு.
ஜனாப். வாஞ்சூர் அவர்களே- தொழுகை குறித்த அருமையான விளக்கத்திற்கு, ஜஸாக்கல்லாஹ். ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் சொன்னதாக ஒரு பதிவில் படித்தது ஞாபகம் வருகிறது: ”முஹம்மது(ஸல்) ஒரு நயவஞ்சகன். (இறைவன் மன்னிக்க) அவன்(ர்) தனது சமுதாயத்தினரை, ராணுவ வீரர்களை ஒத்த விழிப்புணர்வுடன் எப்போதும் வைத்திருக்க ஒரு பயிற்சியைச் சொல்லித் தந்துள்ளான்(ர்). அதுதான் ஐவேளைத் தொழுகை”என்று.
Post a Comment