Pages

டிரங்குப் பொட்டி - 18





ஹாய், ஹலோ, எல்லாரும் நல்லாருக்கீங்களா? திடீர் புரட்சி மழையில் நனைஞ்சு, ஜலதோஷம் பிடிச்சு, மெழுவத்தி சூட்டில ஆவிபிடிச்சு, இப்ப ‘எல்லாம்’ சரியாயிருக்கும்னு நம்புறேன். புரட்சி மழை பெய்ஞ்சுகிட்டிருக்கும்போதே, இடையில ஒரு இன்கம்டாக்ஸ் ஆப்பிசர் கையும் களவுமா பிடிபட்டது, ஒரு நீதிபதி இம்பீச்மெண்ட், தன் மாநிலத்தில் லோக்யுக்தாவை நடைமுறைத்தப்படுத்த முயன்ற கவர்னரைத் திரும்பப் பெறக் கோரும் முதல்வர்னு சில சம்பவங்களும் கேள்விப்பட்டோமே? சரி, அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!!   ஆனா மக்கள் எந்த அளவுக்கு லஞ்சம், ஊழல்களால் பாதிக்கப்பட்டு, வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதற்கு நாடுமுழுதும் கூடிய கூட்டங்கள் சாட்சி.

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

கொஞ்ச நாள் முன்னாடி ஒபாமா, தன் குடும்பத்தினருக்காக பீட்ஸா ஆர்டர் பண்றதுக்கு, தவறுதலா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு ஃபோன் பண்ணிட்டார்னு ஒரே கூத்தா இருந்துதே? அதப் படிச்சு என்ன தோணுச்சு உங்களுக்கு? பீட்ஸா கடைக்கும், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷனா அமெரிக்க அதிபர்னு தோணுச்சா? எனக்கு அப்படியில்ல... பீட்ஸா வேணும்னா, ஒரு அல்லக்கையை... ஸாரி ஸாரி... தன்னோட பி.ஏ., செகரெட்டரி, டிரைவர் அட ஏன் ஒரு அமைச்சரைக் கூடக் கூப்பிட்டுச் சொல்லாம இவுரே ஏன் ஃபோன் பண்ணாருன்னுதான்!! நம்மூர்ல இப்பிடியா நடக்கும்? ச்சே.. ஷேம் ஆன் அமெரிக்கா!! ஆனானப்பட்ட அமெரிக்க அதிபரையே இப்படிக் கஷ்டப்படுத்துறாங்களே?!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சரி, அதை விடுங்க. நம்ம இந்தியர்களுக்குத்தான் இந்த விஷயம் பெரிசாத் தெரியுதுன்னு பாத்தா- பக்கத்தூருல பாருங்க.  சீனாவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதர், டூட்டிக்கு ஜாயின் பண்ண சீனா வரும்போது, தன்னோட கைப்பையைத் தானே தூக்கிட்டு வந்திருக்கார். அதுமட்டுமில்ல, அவருக்கு காஃபி வேணும்னு தானே கடைக்குப் போய் வாங்கிக் குடிச்சிருக்கார். அதப் பாத்து சீன மக்களுக்கு ஒரே அதிர்ச்சியாம்!! ஏன் ஏன்? ”எல்லாரும் ஒரே தரம்’னு சொல்லிக்கிற கம்யூனிசம் ஆட்சி செய்யும் நாட்டிலயா இப்படி அதிர்ச்சியாகிறாங்கன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

“பினாமி” என்பது இந்தியாவில் அதிகம் புழங்கப்படும் வார்த்தை.  தமிழ் வார்த்தை இல்லைன்னாலும், இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவங்க இருக்கமுடியாது. BENAMI என்ற இந்த ஆங்கில வார்த்தையின் மூலம்  - origin - எது தெரியுமா? ‘பேநாமி’ (பெயரிலி) என்ற ஹிந்தி வார்த்தையாம்!! இப்பப் புரியுதா?

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

 சென்னையில், அமெரிக்க துணைத் தூதர் மௌரீன் தனது பேச்சில் ”தமிழர்கள் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்”னு சொல்லிட்டதா பரபரப்பா இருந்துது. அவர் சொன்னது (அல்லது சொல்ல முனைந்தது) “தன் தோல்  அழுக்கானதால், தமிழர்களைப் போல கறுப்பாகிவிட்டேன்” என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ("skin became dirty and dark like the Tamilians") இதை மீடியாக்கள் அப்படி மாத்திட்டாங்க போல!! ஒருபுறம் “ஃபேர் & லவ்லி” விளம்பரங்களைச் சாடிக்கொண்டே, மறுபுறம் நம்மைக் கறுப்பு என்று யாரும் சொன்னாலும் கோபப்படுகிறோம்!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சே... எல்லாமே அமெரிக்கா நியூஸா இருக்கே!! ஒரு யூ.கே. நியூஸ் பாப்போம். லண்டனில் பல பள்ளிகளில், பள்ளி மாணவிகளின் சீருடை ஸ்கர்ட்-ஷர்ட் என்பதிலிருந்து பேண்ட்-ஷர்ட் ஆக மாற்றிவிட்டார்களாம். ஏனாம்? சில சமயம் பெல்ட்டா, ஸ்கர்ட்டா என்று சந்தேகம் வருமளவுக்கு, ஸ்கர்ட்டின் லெவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறதாம். மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பின் கவனமும் சிதறாமல் இருக்கவும், ஆசிரியர்கள் தம் கடமையில் அதிகக் கவனம் செலுத்தவும் வேண்டி,  ஸ்கர்ட் அணியத் தடை விதிக்கிறார்களாம்.

ம்ம்... இதத்தான் மாமியா உடைச்சா மண்குடம், மருமவ உடைச்சா பொன்குடம்னு சொல்லுவாய்ங்களோ??

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

போன வாரம், அமீரகத்தில் இன்னும் ஒரு இந்தியக் குடும்பம் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்கள்.  ஐந்து நாட்களுக்குமுன் இறந்தது, நேற்றுதான் தெரிய வந்திருக்கிறது -  துர்நாற்றத்தால்!! 8 வயது சிறுமியின் முகத்தைத் துணியால் மூடி தூக்கில் தொங்கவிட்டிருக்கின்றனர். தாய் ஆறுமாத கர்ப்பம்!!

தற்கொலைகளின் காரணம் எதுவாகிலும், ஜீரணிக்க முடிவதில்லை. 

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

Post Comment

44 comments:

ஹுஸைனம்மா said...

இண்ட்லி பட்டனைக் காணோம். துப்பு தருபவர்களுக்கு ஒரு ஓட்டு இலவசம்!!

அமுதா கிருஷ்ணா said...

இந்த தற்கொலை நியூஸ்.ரொம்ப பாவம்.அவ்வளோ கடன் ஆகும் வரை என்ன செய்வார்கள்.

RAMA RAVI (RAMVI) said...

நாட்டு நடப்பு, உலக நடப்பு எல்லாம் தெரிஞ்சுகொள்ள முடிஞ்சது உங்க டிரங்கு பொட்டியில..

,// மறுபுறம் நம்மைக் கறுப்பு என்று யாரும் சொன்னாலும் கோபப்படுகிறோம்!! //

கருப்பே அழகு, காந்தலே ருசி என்று சொல்லுவார்களே கேள்விபட்டதில்லையா.??
அதனால் நம்மை கருப்புன்னு சொன்னாக்க கவலை பட வேண்டாம்.

ஸ்ரீராம். said...

//மக்கள் எந்த அளவுக்கு லஞ்சம், ஊழல்களால் பாதிக்கப்பட்டு, வெறுப்படைந்//

மக்கள் இன்றுதான் புதிதாக பாதிக்கப் படுகிறார்களா என்ன...மீடியா செய்யும் மாயமும், வேடிக்கை பார்க்கும் ஆர்வமும்!

ஓபாமாவுக்குக் கடைசியில் பீட்சா வந்ததா இல்லையா...என் கவலை அதுதான்!

மொழியையும் மதத்தையும் வைத்து அரசியல் நல்லாவே பண்றாங்க...

//இண்ட்லி பட்டனைக் காணோம். //

'எங்களுக்கு' ரொம்ப நாளாவே இந்த 'தேடல்' இருக்கிறது!!

தமிழ் உதயம் said...

பினாமிங்கிற வார்த்தை தமிழா, ஆங்கிலமா என்பதா முக்கியம். அரசியல்வாதிகளுக்கு அது செய்கிற சேவை தானே முக்கியம்.

CS. Mohan Kumar said...

//இண்ட்லி பட்டனைக் காணோம். துப்பு தருபவர்களுக்கு ஒரு ஓட்டு இலவசம்!! //

நமக்கும் இதே கதை தான். என் ப்ளாகிலும் இன்ட்லி பட்டன் காணாம போச்சு. ஆனாலும் நேரே இண்ட்லி போய் அங்கே மேலே இருக்கும் "இணைக்க" என்கிற பட்டனை க்ளிக் செய்து நமது பதிவின் லிங்கை தந்து இணைத்து ஜனநாயக கடமை ஆற்றி வருகிறேன். நீங்களும் விடாதீங்க.அப்படியே செய்யுங்க.

பின்னே நாமல்லாம் பதிவு எழுதுவதே எப்பவோ தான். அதிலும் அந்த பதிவை இணைக்க முடியாம, மத்தவங்க படிக்க முடியாம போனா என்ன பண்றது? :))

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

குறுஞ்செய்தி...விறு..விறுப்பு...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

ஹுஸைனம்மா said...

மோகன்குமார், நன்றிங்க ஐடியாவுக்கு. செஞ்சிட்டேன்!!

பனித்துளி சங்கர் said...

பினாமி தகவல் புதுமை

ஸாதிகா said...

// பீட்ஸா வேணும்னா, ஒரு அல்லக்கையை... ஸாரி ஸாரி... தன்னோட பி.ஏ., செகரெட்டரி, டிரைவர் அட ஏன் ஒரு அமைச்சரைக் கூடக் கூப்பிட்டுச் சொல்லாம இவுரே ஏன் ஃபோன் பண்ணாருன்னுதான்!!//

ஏனுங்க ஹுசைனம்மா நம்மூர் பெருந்தலைகள் அல்லக்கைகளை வைத்துத்தான் ஆர்டர் போடுவார்கள்.அவர்களாக போட மாட்டார்கள் என்று எப்படி அவ்வளவு கான்பிடண்ட் ஆக சொல்லலாம்?

ஸாதிகா said...

//“தன் தோல் அழுக்கானதால், தமிழர்களைப் போல கறுப்பாகிவிட்டேன்” என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. // ஹ்ம்ம்ம்ம்ம்..ஹுசைனம்மாவுக்கு பொறுமை ஜாஸ்திதான்.

தராசு said...

ரைட்டு,

ரம்ஜான் நல்லபடியா முடிஞ்சுதா????

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்கர்டா பெல்டா ..? அவ்..:)

அதுக்கு நல்ல பழமொழிங்க..ஹுசைனைம்மா..

அந்த இந்தியக் குடும்பம் :((

CS. Mohan Kumar said...

//மோகன்குமார், நன்றிங்க ஐடியாவுக்கு. செஞ்சிட்டேன்!!//

Appa , ottu enakku thaan!

Thenammai Lakshmanan said...

வெளிநாட்டில் சம்பாதித்தும் கடனா.. அட பாவமே.. என்ன ஆச்சு..

ஜெய்லானி said...

நான் தினதந்திய விட்டு வேற எங்கையும் போறதில்லை ....!! :-)

அதுல இந்த மாதிரி எதையும் போட மாட்டேங்கிரானுங்களே :-)


நம்ம ஊர் வட்ட செயலாளர் செய்யும் அலப்பரையில இதெல்லாம் ஆச்சிரியமாதானே தோனும்

டிரங்குப் பொட்டி இன்னும் நிறைய தொடரட்டும் :-)


கடைசி செய்தி :-(

ஜெய்லானி said...

//இண்ட்லி பட்டனைக் காணோம். துப்பு தருபவர்களுக்கு ஒரு ஓட்டு இலவசம்!!//

இண்ட்லி இருக்கு ஆனா நிறைய தொல்லைகள் தருது .நிரை தடவை அதில் இனைக்க வில்லைன்னே சொல்லுது.


பழைய கோடிங் சில சமயம் வேலை செய்வதில்லை . புது கோடிங்க் டிரை செய்யவும்

ஜெய்லானி said...

//கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல..//

ஹா..ஹா.. சூப்பர் :-)

வெங்கட் நாகராஜ் said...

தற்கொலை.... மிகவும் சோகமான விஷயம்....

ஸ்கர்ட் - ஒன்றும் சொல்வதற்கில்லை... தில்லியில் கூட அப்படித் தான் இருக்கிறது நிறைய பள்ளிகளில்.....

பெட்டி நிறைய விஷயங்கள்....

நாஞ்சில் பிரதாப் said...

//மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பின் கவனமும் சிதறாமல் இருக்கவும்//

உண்மையிலேயே கஷ்டம்தான்...:)))

Anisha Yunus said...

இனிமேல் நான் இந்த ட்ரெயின் பொட்டிய படிக்கவே போறதில்லை.... 8 பகுதி நிய்யுஸ்ல எங்க ஊரு நூஸு, 7 பகுதியில் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகுது.... அதனால் அடுத்த போஸ்ட்டு வர்ற வரை வெளிநடப்பு செய்கிறேன்.... என்னை யாரும் தடுக்காதீங்க ப்ளீஸ்...........ப்ளீஸ்...

//இண்ட்லி பட்டனைக் காணோம். துப்பு தருபவர்களுக்கு ஒரு ஓட்டு இலவசம்!!//

இதுல இது வேற....!!!!!!!!!
GRrrrrrrrrr........... :))

சாந்தி மாரியப்பன் said...

சுவையான செய்திகள்..

சாந்தி மாரியப்பன் said...

'பேமானி' என்ற தூய சென்னைத் தமிழுக்கும் 'பே இமான்' ( நேர்மையில்லாதவன்) என்ற சொல்லே ஆதாரம் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் :-)

முகுந்த்; Amma said...

nice collection of Truckupetti.

ராமலக்ஷ்மி said...

// இவுரே ஏன் ஃபோன் பண்ணாரு//

//”எல்லாரும் ஒரே தரம்’னு சொல்லிக்கிற கம்யூனிசம் ஆட்சி செய்யும் நாட்டிலயா இப்படி அதிர்ச்சியாகிறாங்கன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி!! //

டிரங்குப் பொட்டி சும்மா அதிருதுல்ல:)!

//தற்கொலைகளின் காரணம் எதுவாகிலும், ஜீரணிக்க முடிவதில்லை.//

உண்மை:((!

ஹுஸைனம்மா said...

அமுதாக்கா, அவங்க செஞ்ச ட்ரெயிலர் லாரி பிஸினஸில் ஏற்பட்ட விபத்தால் பெருநஷ்டமாம். யாரிடமும் பகிராததால், சரியான வழிகாட்டுதல் இல்லாததே அவங்க முடிவுக்குக் காரணம்னு சொல்லலாம்.

Passports of wife and child with moneylender
இதிலிருக்கும் செய்திகள் அதிர வைக்கின்றன.

ஹுஸைனம்மா said...

ராம்வி - நன்றிக்கா.

ஸ்ரீராம் சார் - ஆமா, மீடியாவின் கைவண்ணம்தான். பீட்ஸா வந்துருக்கும்.. இல்லைனா அடுத்தாப்ல அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் பண்ணார்னு நியூஸ் வ்ந்திருக்குமே!! :-))))

தமிழ் உதயம் - ஆமா, அத்தோட நம்ம கலாச்சார வார்த்தை ஒண்ணையும் உலக மொழிக்குத் தந்திருக்கோம், எவ்ளோ பெருமை இது!!

ஹுஸைனம்மா said...

வக்கீல் சார் - நன்றிங்க. வாக்கைக் காப்பாத்திட்டேன்.

தீரன்சாமி - நன்றிங்க.

பனித்துளி சங்கர் - நன்றிங்க. நலமா?

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - ஓ நீங்க அப்படி வர்றீங்களா? ஸ்டேஷனுக்கு மாசாமாசம் கப்பம் கட்டுற மாதிரி, பிட்ஸா கதைக்காரங்களும் வாராவாரம் மாமூலா பிட்ஸா கொடுத்துடுவாங்கன்னு சொல்றீங்க அப்படித்தானே?

//ஹுசைனம்மாவுக்கு பொறுமை ஜாஸ்தி// இல்லைக்கா, எப்பவுமே சொல்ல வர்றதைச் சரியாப் புரிஞ்சிக்காம, புது அர்த்தம் கற்பிச்சா வருத்தம் வருமில்லியா? எத்தனையோ பதிவர்களை அப்படிக் குற்றப்படுத்துவதையும் பாக்கிறோமே? ஏன் நானும் அதுக்குப் பயந்துதான் அதிஜாக்கிரதையா எழுத வேண்டிருக்கு!! :-(((

ஹுஸைனம்மா said...

தராசு - வாங்க. ஆமாங்க. நல்லபடியா போச்சு.

முத்தக்கா - ஆமாக்கா, வாசிச்சப்போ எனக்கே பக்குனு இருந்துச்சு. ஆமா உங்கூர்லயும் சிலசம்யம் அப்படித்தான் உங்கூர்க்காரர் ஒருத்தர் சொல்லிருக்காரு, நீங்க கவனிச்சதில்லியா? ;-)))))

தேனக்கா - எங்கே சம்பாதித்தாலும், சரியான திட்டமிடலும், ஆடம்பரம்/அநாவசியச் செலவுகள் தவிர்ப்பதும் வேண்டும். இதெல்லாம் செய்தும், எதிர்பாராமல் நம் கைமீறி தவறு நேருமெனில், நம் நலன்விரும்பிகளிடம் சரியான ஆலோசனை பெறுதல் வேண்டும், இல்லியாக்கா?

சொல்வன யாவர்க்கும் எளியவாம்; நமக்கு அந்நிலை வாராது இறைகாக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - ////கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல..//
ஹா..ஹா.. சூப்பர் :-)//

இதிலருந்தே தெரியுது, நீங்க இன்னும் அந்தக் காலத்துலர்ந்து இன்னும் வெளிய வரலைன்னு. அது ரொம்பரொம்பப் பழசுங்க!! :-))))

நீங்க அனுப்பின இண்ட்லி கோடிங்குக்கு நன்றி. முயற்சிக்கிறேன், இ.அ. செட்டிங்க்ஸ் பக்கம் போய் கைவைக்கவே பயமாருக்கு. ஒண்ண மாத்தினா, அதைத்தவிர வேற எதெல்லாமோ மாறுது. கமெண்ட் பாக்ஸ் கமெண்ட்டைப் பாத்தாலே புரியும், கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷம் முன்னாடி மாத்தினது. (டிரங்குப் பொட்டி - பழங்காலப் பொருள்!! பேருக்கேத்த மாதிரி என் பிளாக் டிஸைன் ஐட்டங்களும்கூட!!)

ஹுஸைனம்மா said...

வெங்கட் சார் - நன்றிங்க.

பிரதாப் - //உண்மையிலேயே கஷ்டம்தான்// புரிஞ்சாச் சரிதான்!!

அன்னு - ஹலோ, ஹலோ!! இது ட்ரங்குப் பொட்டி, ட்ரெயின் பொட்டி இல்லை!! அது உங்க பிளாக்குலதான் ட்ரெயின் ஓட்டறதெல்லாம்!!

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - //பேமானி' என்ற தூய சென்னைத் தமிழுக்கும்//
அட, அட, உங்க மொழியாராச்சி என்னை புல்லரிக்க வைக்குது!! ;-))))
நன்றிக்கா.

முகுந்த் அம்மா - அவ்வ்வ்வ்... இது ட்ரக் இல்லை; ட்ரங்க் பெட்டி!! :-)))))

ராமலக்‌ஷ்மிக்கா - நன்றிக்கா.

Jaleela Kamal said...

ரொம்ப நாள் கழித்து டிரெங்கு பெட்டி திறந்தாச்சா>

கடைசி ரொம்ப மனகழ்டம், இதுபோல் கடன் தொல்லையால் இன்னும் எத்தனை குடும்பங்கள் இருக்கோ.

Jaleela Kamal said...

இண்ட்லி எனக்கும் அப்படி இருந்தத்து
ஒரு க்கா அந்த கோட ரிமூ ப்ண்ணிட்டு மறுகா இனையுங்கோ
செட்டிங் அதேல்லாம் ஒன்றும் ஆகாது. கொஞ்சம் பொறுமைஆ பாருங்கள் சரியாகிடும்/

இலவச ஓட்டு உண்டா?

Jaleela Kamal said...

ஸ்கர்டா? பெல்டா ?

//மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பின் கவனமும் சிதறாமல் இருக்கவும்//
சரி தான்

Jaleela Kamal said...

தேனக்கா வெளி நாட்டில் சம்பாதித்தாலும் கடனா? இல்லை
உள்ளூரிலாவது பரவாயில்லை

வெளிநாட்டில் சம்பாத்திப்பது முழுவதுமே கடனே தான்

ADHI VENKAT said...

பெட்டி நல்ல கனமா இருக்கு.

தற்கொலை விஷயம் மனதை கலங்க வைக்குது.

ஸ்கர்ட் இங்க மோசமா போயிட்டிருக்கு.

இண்ட்லியில் பிரச்சனை எல்லா இடத்திலயும். ஓட்டு போடவே முடிவதில்லை.

கீதமஞ்சரி said...

ஆஸ்திரேலியாவில் நான் பார்த்த ஒரு நிகழ்வும் வியப்பைத் தந்தது. தேர்தல் சமயம், எங்கள் வீட்டுக்கதவைத் தட்டி ஓட்டுக் கேட்டவர் அப்போதைய எம்.பி. உதவிக்கு ஒருவரும் இல்லை. வீடு வீடாய் தனியே சென்று தன்னைப் பற்றியும் தன் கொள்கைகள் பற்றியும் சொல்லி ஓட்டுக் கேட்டார். நம்மூர் என்றால் ஒருவர் எம்.பி. ஆவதற்கு முன்னாலேயே தொண்டர்படை குழுமிவிடும்.

நிறைய விஷயம் இருக்கு உங்கள் டிரங்குப் பெட்டிக்குள். பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி said...

ஸ்வாரஸ்யம்மான டிரங்குப் பெட்டி!ரசித்தேன் மிகவும்...

prenitha said...

eppadi intha news ellam collect pandringalo!!!!!!!!!!!!!!!!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

ஸார் ஃபார் லேட் அட்டண்டன்ஸ்..

உண்மையிலேயே இது ட்ரங்கு பொட்டிதான் சகோ..பாக்க சின்னதா இருந்தாலும்...உள்ள எவ்ளோ மேட்டர் வச்சுருக்கீங்க...

அமீரக தற்கொலை..மிகுந்த வருத்ததிற்குரிய செய்தி...குடும்பமே இல்லாமல் போய்விட்டதே!!..அல்லாஹ்..

அன்புடன்
ரஜின்

ஆதி மனிதன் said...

சுவாரசியமாக இருந்தது டிரங்குப்பெட்டி தகவல்கள்.

//எனக்கு அப்படியில்ல... பீட்ஸா வேணும்னா, ஒரு அல்லக்கையை... ஸாரி ஸாரி... தன்னோட பி.ஏ., செகரெட்டரி, டிரைவர் அட ஏன் ஒரு அமைச்சரைக் கூடக் கூப்பிட்டுச் சொல்லாம இவுரே ஏன் ஃபோன் பண்ணாருன்னுதான்//

அதுமட்டுமில்லை, இங்கு ஒபமா பிள்ளைகளை கூட அவரின் மனைவியே டிரைவ் செய்து பள்ளியில் சென்று விடுவதும், அவ்வப்போது ஒபாமா சிறிய நகரங்களில் உள்ள ரோடு சைடு ரெஸ்டாரன்டுகளில் வண்டியை நிறுத்தி சான்ட்விச் கேட்டு வாங்கி சாப்பிடுவதும் நடப்பதுண்டு. வேளையில் எளிமை, கடைமைக்கு அவர்களை மிஞ்ச முடியாது.

ரிஷபன் said...

BENAMI என்ற இந்த ஆங்கில வார்த்தையின் மூலம் - origin - எது தெரியுமா? ‘பேநாமி’ (பெயரிலி) என்ற ஹிந்தி வார்த்தையாம்!! இப்பப் புரியுதா?

இப்பல்லாம் நிறைய விஷயம் இங்கேர்ந்துதான் போவுது போல.

டிரங்குப் பெட்டியில் விஷய கனம்!