Pages

டிரங்குப் பொட்டி - 20

பதிவுலகுக்கு லீவு போட்டிருந்த ஒரு மாசத்தில சுத்தமா வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்ததால, வந்ததும் உலகத்தில என்னென்ன நடந்திருக்குமோன்னு செய்திகளைப் பார்த்தா, ம்ஹும்.. ஒரு மாற்றமும்  இல்லை. எல்லாம் அப்படியே standstill ஆனமாதிரிதான் இருந்துச்சு!! அமெரிக்கா Occupy Wall Street போராட்டம்,  ஈரான்/ இஸ்ரேல் அணு அச்சுறுத்தல், சிரியா, லோக்பால், 2ஜி - கனிமொழி ஜாமீன், கூடங்குளம் போராட்டம்னு எல்லாமே நான் போகும்போது எப்படி இருந்ததோ அப்படியேதான் வரும்போதும்!! ஏன், அம்மாகூட, கரெக்டா நான் வந்த அன்னிக்குத்தான் பால்/பஸ் கட்டணங்களை ஏத்துனாங்கன்னா பாத்துக்கோங்க!! :-((((

#############%%%%%%%%%%%%%%%#############

சுப்ரமணியம் சுவாமி, இந்தியாவின் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும், அவர்களின் ஓட்டுரிமையைப் பறிப்பது குறித்தும் பேசிய பேச்சுக்கு இந்தியாவில் ஏதும் நடவடிக்கை இல்லை. ஆனால், அவர் “விஸிட்டிங் ப்ரொஃபஸராகப்” பணிபுரிந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் இந்தப் பேச்சைக் கண்டித்து, இவரின் சீட்டைக் கிழித்துவிட்டது!! இவரது கருத்து, யூத அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமையைப் பறிக்கக் கோருவதற்கு ஒப்பானது என்று சக பேராசிரியர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

#############%%%%%%%%%%%%%%%############# 

துபாயிலிருந்து திருமப சென்னைக்கு வரும்போது, துபாயில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளியின் (பேர் மறந்துடுச்சு) பிளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் சுமார் நூறுபேர் வரை விமானத்தில் வந்தார்கள். என்னன்னு கேட்டேன். அமெரிக்காவுக்கு டூர் போனாங்களாம்!! அப்படியே வர்ற வழில துபாய்ல ரெண்டு நாள் டூராம்!! நாமல்லாம் ஸ்கூல் படிக்கிற காலத்துல கன்னியாகுமரி, மிஞ்சிப் போனா திருவனந்தபுரம் போறதே பெரிய அட்வெஞ்சர் டிரிப்!! இப்பல்லாம் வேர்ல்ட் டூரே போறாங்கப்பா. டூர்  ஃபீஸும் அதிகமில்லை, ஜஸ்ட் ஒண்ணேமுக்கால் லட்சம் ருபீஸ்தான்!!

#############%%%%%%%%%%%%%%%############# 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசு-சார் “சமூக சேவகர்கள்” (Social workers) என்பவர்களின் பணிகளில் முக்கியமானது, குடும்பங்களில் குழந்தைகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறார்களா எனக் கண்காணிப்பது. இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், (திருந்த சில வாய்ப்புகள் கொடுத்தபின்) பிள்ளைகளைப் பெற்றோர்களிடமிருந்து நிரந்தரமாகப்  பிரித்துக் கொண்டுபோய் இதற்கென உள்ள அரசு காப்பகங்களில் வைத்து வளர்ப்பார்கள். இம்முறைக்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான, ஜான் லெம்மிங், “சமீபத்தில் நடந்த லண்டன் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் பெரும்பாலோனோர் இம்மாதிரி அரசு காப்பகங்களில் கண்டிப்பின்றி வளர்க்கப்பட்டவர்களே.  எனவே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே அரசு தலையிடக்கூடாது. மேலும், பெற்றவர்களுக்குப் பிள்ளைகளை அடிக்கும் உரிமையை மீளத் தர வேண்டும்.  சிறு அடிகள் தரும் பாதிப்பைவிட, கண்டிப்பேயில்லாது வளர்க்கப்படுவதே நிரந்தரமான பெரும் பாதிப்புகளையேற்படுத்தும். அதனால் பெற்றோருக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் (“Power to Parents")” என்று வாதிட்டிருக்கிறார்.


#############%%%%%%%%%%%%%%%#############


போன வாரம் கடையில வாங்கிட்டு வந்த காய்கறியில் பூச்சி அரித்திருந்ததால், பார்த்து வாங்கக்கூடாதான்னு கேட்டதுக்கு ரங்ஸின் பதில், “காய்ல பூச்சி இருக்குன்னா, ரசாயன பூச்சி மருந்து அடிக்காத அல்லது அதன் தாக்கம் இல்லாத, ஆரோக்கியமான காய்னு அர்த்தம். இதெல்லாம் புரிஞ்சிருந்தா, என்னைப் பாராட்டியிருப்பே!!”.  அவரைப் “பாராட்டிய” போதுதான் இது ஞாபகம் வந்துச்சு.


#############%%%%%%%%%%%%%%%############# 

அதாவது, சில மாதங்கள் முன்னாடி, ஐரோப்பாவில் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்வீடன், நாடுகளில் பரவிய இ-கோலி என்ற பூச்சித் தொற்று 50 பேரை பலிகொண்டது நினைவிருக்கும். இதுக்கு வெள்ளரிக்காய்தான் காரணம்னு முதல்ல சொன்னாங்க. கடைசியில் முளைவிட்ட வெந்தயம்தான் காரணம்னு கண்டுபிடிச்சாங்க. அடுத்து, அமெரிக்காவில் லிஸ்டீரியா என்ற பூச்சித் தொற்றால், 30 பேரும் இறந்தாங்க. இதுக்கும், கிர்ணிப்பழமே காரணமாம்.

பொதுவா, உணவினால் நோய்/இறப்பு என்றாலே அது அசைவமாலத்தான்  இருக்கும்கிறது எதிர்பார்ப்பு. ஆனா, இந்த முறை இந்த இரண்டு பூச்சித் தொற்றுகளும் காய்கறி மற்றும் பழங்களிலிருந்து  என்பது ஆச்சர்யம் + அதிர்ச்சியான செய்தி. உலகம் முழுதும், காய்கறிகள் - அதுவும் பச்சைக் காய்கள், பழங்கள் அதிகம் சாப்பிடணும்னு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்துகிட்டிருக்கு. அதில், அசைவம் என்றாலே ஆபத்துங்கிற மறைமுகப் பிரச்சாரமும் உண்டு.  எனில், இந்தச் சம்பவங்கள் கூறுவது என்ன?


Post Comment

29 comments:

மோகன் குமார் said...

//துபாயிலிருந்து திருமப சென்னைக்கு வரும்போது,//

Did you come to Chennai? We did not know that !!

ஹுஸைனம்மா said...

வக்கீல் சார், சென்னை வந்து, உடனே அடுத்த ஃப்ளைட் துபாய்க்கு. அதனாலத்தான் சொல்லல. :-)))))

RAMVI said...

டிரங்குப் பெட்டியில் சுவாரசியமான தகவல்கள்.

பிள்ளை வளர்ப்பதில் இந்திய முறைதான் சிறந்தது என நான் நினைக்கிறேன்.ஒரு குறிப்பிட்ட வயது வரையில் அதிக சுதந்திரம் கொடுக்கக்கூடாது.

வித்யா said...

அமெரிக்காவுக்கு டூரா??? ரைட்டு:)

அப்புறம் ரங்ஸ் காயெல்லாம் வாங்கி கொடுக்கிறாரா? பரவால்லையே:))))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஸ்கூல் டூரில் நாங்கள் மகாபலிபுரத்தைத் தாண்டியதில்லை.

என் பெண் ஒரு முறை பிரபல புகைப்படக்காரர் அல்போன்ஸ் ராயை (காடுகளிலேயே தன வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுபவர்) சந்தித்த போது பூச்சி அரித்த காய் கறிகளே வாங்கச் சிறந்தவை என்று சொன்னதாகக் கூறினாள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஸ்கூல் டூரில் நாங்கள் மகாபலிபுரத்தைத் தாண்டியதில்லை.

என் பெண் ஒரு முறை பிரபல புகைப்படக்காரர் அல்போன்ஸ் ராயை (காடுகளிலேயே தன வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுபவர்) சந்தித்த போது பூச்சி அரித்த காய் கறிகளே வாங்கச் சிறந்தவை என்று சொன்னதாகக் கூறினாள்

அரபுத்தமிழன் said...

//எல்லாமே நான் போகும்போது எப்படி இருந்ததோ அப்படியேதான் வரும்போதும்!!//

'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே' என்ற‌
திருவிளையாடல் பாட்டுதான் ஞாபகம் வருது. பேசாம‌
நீங்க லீவுலேயே இருந்துருக்கலாம் :))

அரபுத்தமிழன் said...

//சிறு அடிகள் தரும் பாதிப்பைவிட, கண்டிப்பேயில்லாது வளர்க்கப்படுவதே நிரந்தரமான பெரும் பாதிப்புகளையேற்படுத்தும்.//

'தந்தையின் அடி வயலுக்கு நீர் பாய்ச்சுவது போன்றாகும்' என்ற‌
நபிமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

கோவை2தில்லி said...

டிரங்குப் பொட்டி கனமாத் தான் இருக்கு.

//நாமல்லாம் ஸ்கூல் படிக்கிற காலத்துல கன்னியாகுமரி, மிஞ்சிப் போனா திருவனந்தபுரம் போறதே பெரிய அட்வெஞ்சர் டிரிப்!! இப்பல்லாம் வேர்ல்ட் டூரே போறாங்கப்பா.//

பக்கத்துல இருக்கற இடத்துக்கு போறதுக்கே விட மாட்டாங்க..

நாஞ்சில் பிரதாப்™ said...

//Did you come to Chennai? We did not know that !!//

பாதுகாப்பு நலன் கருதியும்,சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்திய உளவுத்துறை இந்த தகவலை வெளியிடவில்லை.

கீதா said...

பிள்ளைகளை பெற்றோர் கண்டித்து வளர்ப்பதுபோல் மற்றவர்களால் வளர்க்க இயலாது. ஆனால் அடித்துதான் வளர்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முறையான கண்டிப்பும் அரவணைப்பும் இருந்தாலே போதுமானது.

காய்கறிகள் விஷயத்தில் வெகு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பதிவு. நன்றி ஹூஸைனம்மா.

ஸாதிகா said...

ஹுஸைனம்மா சமைக்கத்தான் சோம்பல்.சூப்பர் மார்கெட் போய் காய் வாங்கக்கூடவா?

ஸாதிகா said...

வருட பீஸ் லட்சக்கணக்கில் வாங்கும் இண்டர்நேஷனல் பள்ளிகளில்தான் இப்படி டூர் அழைத்துச்செல்வார்கள்.இப்ப்ப்ழுது மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலுமாரம்பித்துவிட்டார்கள்.

VANJOOR said...

click and read

>>>>
தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!! தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.
<<<<


.

அமைதிச்சாரல் said...

செம கனம் ட்ரங்குப் பொட்டி..

பாச மலர் / Paasa Malar said...

பெற்றோர் சுதந்திரம் கேட்டுப் போராடும் நிலைமை...நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்...

இப்போ அமெரிக்கா NASA போறது, ஐரோப்பா பயணம் போறது எல்லாம் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுத்து வைத்துள்ளது...

NIZAMUDEEN said...

வாசம் வீசும் ட்ரங்குப் பெட்டி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ட்ரெங்குப்பொட்டிய திறந்தாச்சா.. :))

அப்பாதுரை said...

ரங்க்ஸைப் பாராட்டியதாகச் சொல்லுங்கள். (ஆமாம், ecoli காய்கறியில் இருப்பதை அடுத்த paraவில் வெளியிட்ட உங்கள் தந்திரத்தை ரங்க்ஸ் பாராட்டினாரா சீராட்டினாரா என்பதை அடுத்தப் பதிவில் எழுதுங்க)
உணவுக்கிருமிகள் எல்லா வகை உணவிலும் உண்டு. அசைவம் சைவம் எல்லாம் சும்மா நாமே சொல்லிக்கிறது. கைச்சுத்தம் பொருட்சுத்தம் கடைபிடித்தால் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருக்கலாம்.

இமா said...

ட்ரிப் முடிந்து வந்தாயிற்றா! ;)

ட்ரங்குப் பெட்டி தகவல்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

சென்னை வந்தீங்களா. எங்கேருந்து?இப்பதானெ புனித யாத்திரை போய்வந்தீங்க. நான் எதையோ மிஸ் செய்யறேன்:)

நம் ஊர்ப் பிள்ளைகள் தான் நல்லா வளருகிறார்கள் என்று நம்புகிறேன்.

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு டிரங்கு பெட்டியைத் திறந்திருப்பதாலோ என்னவோ, எல்லா விபரங்களும் சிறப்பாகவே இருக்கின்றன!!

ஹுஸைனம்மா said...

ராம்வி - ஆமாக்கா, எனக்கும் நம்ம முறைதான் சிறந்ததுனு தோணும். அதுவும், 18 வயசில தனிக்குடித்தனம் போறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை.

வித்யா - என்னது, ரங்ஸ் காய் வாங்கிக் கொடுக்கிறதை இவ்வளவு ஆச்சர்யமாக் கேக்குறீங்க? அப்படின்னா... நோ.. நோ.. தப்பு!! நாம பெண்கள் கடைக்குப் போறோம்னா அது லேப்டாப், ஏஸி, கார் அல்லது அட்லீஸ்ட் நகை, புடவை, சுடிதார் இதெல்லாம் வாங்குறதுக்காகத்தான் இருக்கணும். நமக்குன்னு ஒரு ரேஞ்ச் இருக்குல்ல!! ;-)))))

ஹுஸைனம்மா said...

வித்யா மேடம் - ஆமா மேடம், ஸ்கூல் டூருன்னா காலையில போய்ட்டு ராத்திரிக்குள்ள வர்ற இடமாத்தான் இருக்கும் அப்பல்லாம்.

பூச்சி அரித்த காய்கள் - கரெக்ட்தான். ஊர்ல வண்டு குடைஞ்ச மாம்பழம்தான் ருசின்னு சொல்வாங்க.

அரபுத்தமிழன் - //பேசாம‌ நீங்க லீவுலேயே இருந்துருக்கலாம்// வொய் திஸ் கொலவெறி?

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - ஆமாங்க, டூர்னாலே கடுப்பாகும் அம்மாவுக்கு.

பிரதாப் - //இந்திய உளவுத்துறை இந்த தகவலை வெளியிடவில்லை// நீங்க ஒரு ஆள்தான் என் மதிப்பு, தராதரம், தகுதி, அந்தஸ்து, ரேஞ்ச் எல்லாம் புரிஞ்சு வச்சிருக்கீங்க. கீப் இட் அப்!! மைண்ட்ல வச்சுக்கறேன்!! ;-))))

ஹுஸைனம்மா said...

கீதா - பெற்றவர்களின் கண்டிப்பு பிள்ளைவளர்ப்பில் மிகவும் அவசியம். அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. நன்றிங்க.

ஸாதிகாக்கா - //இண்டர்நேஷனல் பள்ளிகளில்தான் இப்படி டூர் // இல்லக்கா, அது இண்டர்நேஷனல் பள்ளியில்லை; சென்னையிலுமில்லை. பேரும் ஊரும் கேட்டேன் மறந்துடுச்சு. பிரைவேட் பள்ளிதான். ஆனாலும் ஆச்சர்யத்தில் வாய்பிளந்துட்டேன்னுதான் சொல்லணும்.

மேற்கொண்டு விவரங்கள் கேட்க ஆசைப்பட்டு, மாணவர்களைத் தேடினால், அந்த ஏரியாவில் காணவில்லை. பெரிய ஃப்ளைட் (ஏ380) அதனால் தேட முடியவில்லை.

//சமைக்கத்தான் சோம்பல்// அவ்வ்வ்வ்... சமைக்கிறது என் வேலை; காய் வாங்கித் தர்றது அவர் வேலை - சமத்துவம்!! :-))))

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - //செம கனம் ட்ரங்குப் பொட்டி// தூக்கிப் பாத்து முதுகு பிடிச்சுகிச்சா? இத்தோட சைலண்டாகிட்டீங்க? ;-))))))

பாச மலர் - இப்பல்லாம் பிள்ளை வளர்ப்பது எப்படினு எத்தனை புத்தகங்கள், அறிவுரைகள், கவுன்ஸலிங்குகள்!! ஒரு அளவு வரை பயன்படுகிறது. ஆனால், ரொம்பப் பயமுறுத்தும்போது கடுப்பாகிறது.

நிஜாமுதீன் பாய் - நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - //ட்ரெங்குப்பொட்டிய திறந்தாச்சா// ஏன் இப்படி சலிச்சுக்குறீங்க? ;-)))))

அப்பாதுரை - //ரங்க்ஸ் பாராட்டினாரா சீராட்டினாரா// ரங்க்ஸ் என் பதிவை தவறாது படித்தாலும் கமெண்ட்ஸ் நேரடியாக வருவது அபூர்வம். அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தால், அங்கே இது அவரால் “மேற்கோள்” காட்டப்படும்!! :-))))

நீங்க சொல்றது கரெக்ட். அசைவம், சைவம் இரண்டிலுமே பாதிப்பு உள்ளதுதான். அசைவத்திலாவது, சரியாகச் சமைத்துவிட்டால் பாதிப்பு குறைவு. ஆனால், பச்சைக் காய்கறீகள், பழங்களில் உள்ள இந்த வகைக் கிருமிகள் எவ்வளவு கழுவினாலும் போகாதே!!

ஹுஸைனம்மா said...

இமா - எப்படி இருக்கீங்க?

வல்லிமா - நீங்க எதையும் மிஸ் பண்ணலை. என் ஹஜ் பயணத்திட்டப்படி சென்னையில் ஒரு நாள் மட்டுமே டிரான்ஸிட்!! அதனால், சென்னை வந்தேன் - ஆனா வரலை!!

கரெக்ட், நம்ம வளர்ப்பு முறைதான் சிறந்தது.

மனோக்கா - எப்படி இருக்கீங்க? நன்றி கமெண்டுக்கு.