சிலசமயம், தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே ஒரே வார்த்தைக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். பயன்படுத்தும் முறைகளைப் பொறுத்து, அர்த்தம் வேறுபடும். உதாரணமாக, "drop" என்ற வார்த்தைக்கு ”கீழே போடுதல்”, “துளி”, ”விட்டுவிடுதல்” என்று அர்த்தங்கள் உண்டு. இதே போல, ஆங்கிலத்தில் இருப்பதிலேயே அதிக அர்த்தங்கள் கொண்ட வார்த்தை எதுவென்று தெரியுமா?
“SET" என்ற வார்த்தைதான். சரி, எத்தனை அர்த்தங்கள் இதற்கு உண்டு என்று யூகியுங்களேன் பார்ப்போம். என்னது அஞ்சு, ஆறா.. ம்ஹூம், 10, 20.. இல்லை.. 100? உங்ககிட்ட இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்... மொத்தம் 464!! ஆமாம், 464 அர்த்தங்கள் அந்த ஒரு வார்த்தைக்கு!!
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
”பிரிக்க முடியாதது எவை?”ங்கிற கேள்விக்குச் சொல்லக்கூடிய பதில்களின் எண்ணிக்கைக்கும் கேள்வி கேட்கலாம். ஆனா, அடிக்க வந்துடுவீங்க. அந்த லிஸ்ட்ல முதல் 10 இடங்களில் கட்டாயம் “போலீஸும், தொப்பையும்” என்ற பதிலும் இருக்கும். தமிழ்நாட்டுல மட்டும்தான் இது(தொப்பை) கொஞ்சம் அதிகமோ நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா, இது ஒரு உலகளாவிய பிரச்னைன்னு இந்த ரெண்டு நியூஸையும் பார்த்ததும் புரிஞ்சுது. (அமீரகத்தில் இதுவரை தொப்பை போலீஸ் பார்த்ததில்லை!!)
பாகிஸ்தானில் போலீஸார் தொப்பைகளை இந்த மாத இறுதிக்குள் கரைக்கலைன்னா தண்டனையாம்!! பிலிப்பைன்ஸில் வருடாந்திர உடல் தகுதி தேர்வில் தொப்பை குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்தால் ‘அலவன்ஸ்’ கட் என்பதால், தேர்வுக்குமுன் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்களாம்!!
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
அரசியல்வாதிகளின் வழக்கமான அலப்பறைகளுக்கு நடுவே, ஒண்ணுரெண்டு (கம்யூனிஸ்ட் கட்சி) எம்மெல்லேக்கள் மட்டும் பஸ்ஸில போய்ட்டு வந்துகிட்டிருக்காங்கங்கிறது ஆறுதலா இருந்துது. அதுலயும் இப்போ கண் விழுந்துடுச்சு.
போன வாரம் பஸ்ஸில போன பெரியகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பஸ்ஸில் வரும்போது கூட்டத்தின் காரணமா உட்கார இடம் கிடைக்கலையாம். தனக்கு கண்டக்டர் இடவசதி செஞ்சுத் தரலைன்னு மேலாளர்கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சிருக்கார். அரசு பேருந்துகளில் எம்.எல்.ஏ., எம்.பி.களுக்குன்னு சீட் ஒதுக்கப்பட்டிருக்குமாம் (பெண்கள், உடல் ஊனமுற்றோருக்கு ஒதுக்குவது போல). அதைக் காலி செஞ்சு கொடுக்கலையாம் கண்டக்டர்!!
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
இன்னிக்கு இந்தியர்களின் வாயில் அதிகமாக வறுபடுவது பிரதமர் மன்மோகன்சிங்தான்!! இவரைக் குறை சொல்லாதவர் இல்லை.அநாகரீகமாக ‘மண்ணுமோகன்’ என்றெல்லாம்கூட வசைபாடுவதைப் பார்த்தால், என்னவோ இதுவரை வந்த எல்லாப் பிரதமர்களுமே ஸ்ட்ராங்கா இருந்த மாதிரியும், இவர் மட்டும்தான் ‘கைப்புள்ள’ மாதிரியும் இருக்குது. பிரதமரா இருப்பவர் தன்னிச்சையா, உறுதியா முடிவெடுக்கணும்னா, அட்லீஸ்ட் தனிக்கட்சி ஆட்சியாவது இருக்கணும். கூட்டணி ஆட்சியின்னா, இதுதான் கதி. உறுதியான பிரதமர்ங்கிறதெல்லாம், இந்திரா காந்தி காலத்தோட போச்சு.
அவ்வளவு ஏன், தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி செய்த பிரதமர் வாஜ்பாய் அவர்களால் மட்டும் என்ன செய்ய முடிஞ்சுது? “பிரதமரா இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியலையே?”ன்னு கண்ணீரே விட்டாரே!! அவர் அரசில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா இருந்த திரு. பிரிஜேஷ் மிஷ்ராவின் சென்ற வாரப் பேட்டியும் அதைத்தானே உறுதிப்படுத்தியது?!
இருந்தாலும், (தமிழ்நாட்டைப் போல) கேள்விகேட்பாரில்லாமல், ‘வானளாவிய அதிகாரம்’ படைத்தவர்களைப் போல ஒருவர் பிரதமராக வந்துவிடுவதை நினைத்துப் பார்த்தாலே, பகீரென்றுதான் இருக்கிறது.
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
என் பெரியவன் ‘சுடோகு’ ஆர்வமாச் செய்வான். ஒருமுறை அவன் செய்துமுடித்தவுடன், ”நிஜமாவே முடிச்சுட்டியா?”ன்னு ஒரு ஆர்வக்கோளாறுல கேட்டுட்டேன். உடனே சாருக்கு ரொம்பக் கோபம் வந்து, “பாருங்க வாப்பா, உம்மாவுக்கு எனக்கு(ம்) அறிவு இருக்குன்னு நம்பவே முடியலை”ன்னான். ”நீ அவ பெத்த பிள்ளையாச்செ, அதான் உங்கம்மாவுக்கு டவுட்டு”ன்னு பல்பு கொடுத்தார்!!
உடனே ரோஷம் வந்து பொங்கி எழுந்து, நானும் சொடக்கு போட்டு, சுடோகு போட ஆரம்பிச்சுட்டேன். ஆனா, ஹி.. ஹி.. எப்பவாவதுதான் முழுசும் முடிப்பேன் ஹி.. ஹி... ஜாம் ஆகி பாதியில் நிக்கிற சுடோகு கட்டங்களைப் பெரியவன் வந்து கடகடன்னு போட்டு முடிக்கிறதைப் பாக்கும்போது, என்னதான் “ஸேம் ப்ளட்”ன்னாலும், லைட்டா புகை வரத்தான் செய்யுது!!
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
சமீபத்தில் அவள் விகடனில், விபத்தினால் படுக்கையில் இருக்கும் 32 வயது மகனைக் கவனிக்க முடியாத வயதான தகப்பன், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கியதைப் படித்தபோது மனம் கனத்துப் போனது. சில நாட்களுக்குமுன்புதான் வீட்டையும், கணவரையும், மகனையும் கவனித்து வந்த அவரின் மனைவி இறந்து போனாராம். அதுவரை வீட்டுவேலைகள் எதுவும் செய்து பழக்கமில்லாததால், தனியே தாக்குப் பிடிக்கமுடியாமல் சில நாட்களிலேயே இப்படிச் செய்திருக்கிறார்.
சில அம்மாக்கள் மகன்களை வீட்டு வேலைகள் எதுவும் செய்யச் சொல்வதில்லை. பல கணவர்களோ அடுப்படி பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. இதைப் பார்த்தாவது திருந்தட்டும்.
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v
|
Tweet | |||
26 comments:
டிரங்குப் பெட்டியின் ஒவ்வொரு விஷயமும் நன்று...
பகிர்வுக்கு நன்றி ஹுசைனம்மா.
பல்வேறு "ஆதாரத்துடன்" டிரங்கு பொட்டி எழுதி உள்ளீர்கள். பையன் நல்லா சுடோகு போட்டா சந்தோசம் தானே படனும்? ஒய் புகை?
ஆதாரம் = தேவையான லிங்க்
"set" is interesting
sodukku - hi he hi - pugaiyellam varuthaa
சொடக்கு - சுடோகு
சூப்பர்.
அனைத்தும் அருமை.
தொப்பையில்லாத போலீசா .. அப்ப மாறுவேஷம்ன்னு சொல்லுங்க :-)))
அவள் விகடன் கட்டுரையை நானும் படிச்சேன்ப்பா. பரிதாபம்தான்.
SET - லிங்க் போய் பார்த்தேன்.. தலை சுத்தி கீழ விழாத குறைதான். ;)
என்னாதூஊஊ..எம்.எல்.ஏ. பஸ்ஸில் போனாரா?!\\
சுடோகு..நானும் பலமுறை ஆரம்பித்து பொறுமை இல்லாமல் கால்வாசியிலயே இடத்தை காலிபண்ணியிருக்கேன்...;)).... அதனால் அந்த ப்ளட்டைப் பார்த்து புகையாமல் இந்த ப்ளட்டைப் பார்த்து ஆறுதல்பட்டுக்கங்க..ஹி..ஹி...
அந்த அம்மா தன்னோட கடைசிகாலத்திலயும் கஷ்டப்பட்டு குடும்பத்தைக் கவனித்தது இப்படி அர்த்தமற்று போய்விட்டதே!:((
'சுடோகு' போடும் மகனைப் பார்த்து புகை வரக் கூடாது. புன்னகைதான் வரணும்!
கடைசியாகச் சொல்லப் பட்டுள்ள செய்தியை நான் செய்தித் தாளில்தான் படித்த நினைவு. அவர் ஒரு போலீஸ்காரர் என்றும் நினைவு. நீங்கள் அந்தச் செய்திக்கு உங்கள் கருத்தாகச் சொல்லியிருப்பதற்கு ஆதரவாக இன்னொரு செய்தியும் உண்டு. 'எங்களி'ல் அதைப் பகிர்ந்திருந்தோம். பிரசவத்தைத் தொடர்ந்து கோமாவில் ஆழ்ந்து விட்ட மகளை பதின்மூன்று வருடங்களாகப் பராமரித்து வரும் தாய் பற்றிய செய்தி.
ஹுஸைனம்மா, டிரங்கு பெட்டியில் வந்த விஷயங்கள், அறிவுக்கு விருந்தாகவும், நகைச்சுவையாகவும், மனதை கலங்கவைப்பதாகவும் இருக்கிறது.
இன்னைக்கு பெட்டியில் நிறைய ஆதார செய்திகள். குட்..
”நீ அவ பெத்த பிள்ளையாச்செ, அதான் உங்கம்மாவுக்கு டவுட்டு”ன்னு பல்பு கொடுத்தார்!!/////ஹே ஹே ஹே..
/கேள்விகேட்பாரில்லாமல், ‘வானளாவிய அதிகாரம்’ படைத்தவர்களைப் போல ஒருவர் பிரதமராக வந்துவிடுவதை நினைத்துப் பார்த்தாலே, பகீரென்றுதான் இருக்கிறது./
ஆம், அதுக்கு இதுவே தேவலை:))!
வொய் புகை? நாம வளர்த்த வளர்ப்புன்னு பெருமிதப்பட்டுக்கலாம்:)!
உண்மை தான்! நானும் இங்கே இது வரை தொப்பை போலீஸ் பார்த்ததில்லை.
மன்மோகன் சிங் பற்றிய அலசல் சுவாரஸ்யம்!
அவள் விகடன் செய்தி மனதை கனக்க வைக்கிறது! பொறுப்பிலாத அந்த தந்தையை நினைத்து அல்ல! இப்படிப்பட்ட தந்தையால் உயிரிழந்த அந்த மகனை நினைத்துத்தான்!
உங்க தளத்துக்கு முதல் வருகை. டிரங்குப் பெட்டிக்குள்ளருந்து நீங்க வெளில எடுத்துப் போட்ட விஷயங்கள் ஒவ்வொண்ணையும் ரசிச்சேன். சூப்பர்ப்.
எனக்கு சுடோகு ரொம்பப் பிடிக்கும் ஹுஸைனம்மா :)
ஈஸி, மீடியம் போட்டுவிடுவேன். கஷ்டமானது போடுறப்போ கொஞ்சம் ததிங்கிணதோம் தான் :)
அவள் விகடன் கட்டுரை வலிக்கிறது தான்:(
வெங்கட் - நன்றிங்க.
மோகன் - வக்கீல்ங்கிறதை நிரூபிக்கிறீங்க, ‘ஆதாரத்தைக்’ கரெக்டாக் கவனிச்சதினால்!!
புகை - என்னை அவ்வப்போது ‘நீ நெசமாவே காலேஜ்ல படிச்சியான்னு சந்தேகம் வருது’ன்னு கலாய்ப்பான். அதுக்கு வாய்ப்பு கொடுக்கிற மாதிரி இப்படிச் சில சந்தர்ப்பங்கள் அவனுக்கு லட்டு மாதிரி கிடைக்குதேன்னுதான்... (Actulally, சுடோகு சீக்கிரமா முடிக்கிறதுக்கு எனக்குச் சில டிப்ஸ் தந்தது அவன்தான்!!) :-))))
ஜமால் - வாங்க, நலமா?
நிஜாம் பாய் - நன்றிங்க.
அமைதிக்கா - //தொப்பையில்லாத போலீசா .. அப்ப மாறுவேஷம்// ஹா.. ஹா.. ஹா..
ஸ்ரீராம் சார் - அதெல்லாம் நிஜமாவே புகை வராது. ச்சும்ம்மா.. (மேலே மோகனுக்குச் சொல்லிருக்கும் பதிலையும் பாருங்க)
அவள் விகடன் செய்தியில் வந்தவர் ரிடையர்ட் போலீஸ்காரர்தான். உங்கள் பதிவில் வந்த செய்திபோலவே, பெண்கள்தான் இவற்றையெல்லாம் கடமை என்று எடுத்துப் பொறுப்பாகச் செய்பவர்கள் என்றும் நம்பியிருந்தேன்(தோம்).
இந்த வார விகடனில், மனநலமில்லாத மகளைத் தீவைத்து கொளுத்திய தாய் பற்றி வாசித்துவிட்டு அதிர்ந்துதான் போனேன். அதுசரி, கருவில் பெண் என்றால் கலைக்க முற்படுவதும் தாய் என்ற பெண்தானே.
என்றென்றும் 16 -
//அந்த ப்ளட்டைப் பார்த்து புகையாமல் இந்த ப்ளட்டைப் பார்த்து ஆறுதல்பட்டுக்கங்க//
ஏதேது, என் மகனின் அறிவில் என் ஜீனின் பங்கு இல்லவே இல்லைன்னு நிரூபிக்காம விடமாட்டீங்க போல இருக்கே!! :-)))
கோமதிக்கா - நலமா? ஃப்ரீ ஆகிட்டீங்களா? :-))
ஸாதிகாக்கா - ///ஹே ஹே ஹே..//
அதுசரி, எனக்கு பல்பு கிடைச்சுதுன்னா, உங்களைப் போலச் சந்தோஷப்படுபவர் யார்!! :-))))
மனோ அக்கா - நானும் ரொம்ப யோசிச்சுப் பாத்தேன்க்கா. உயர் பொறுப்பிலுள்ள போலீஸ் அதிகாரிகள்கூட தொப்பை இல்லாமல்தான் இருக்காங்க இங்கே. ரகசியம் என்னன்னு விசாரிக்கணும்!!
நன்றி அக்கா.
கணேஷ் சார் - வாங்க. உங்கள் வருகையும், கருத்தும் ரொம்ப மகிழ்ச்சி தந்தன. அவசியம் தொடர்ந்து வாங்க.
மதுமிதா - இங்கே செய்தித்தாளில் தினம் சுடோகு ஒன்று வரும். ரொம்பக் கஷ்டமாக இராது. எப்போதாவதுதான் ட்ரிக்கியா இருக்கும். நன்றிங்க உங்க வருகைக்கும்.
ராமலக்ஷ்மிக்கா - //அதுக்கு இதுவே தேவலை// நம்ம அரசியல் அப்படி ஆகிவிட்டது!! கவுன்சிலர் வேட்பாளர் தொடங்கி ஜனாதிபதி வரை இப்படித்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. :-((
ஹுசைனம்மா முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.உங்க இணையதளத்தைப்பற்றி அவள்விகடனில்(17.7.2112)அறிமுகப்படுத்தி உங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.மேலும் உங்களுடைய பதிவுகள் தொடர்ந்துவரவேண்டும்,நிறைய பாராட்டுதல்களைப்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புள்ள ஜில்!!
பேரைப் போலவே ஜில்லுன்னு ஒரு தகவல் தந்திருக்கீங்க!!
நானும் இப்பத்தான் பாத்துட்டு, நம்பவா வேணாமான்னு திகைச்சு உக்காந்திருக்கேன்.
வாழ்த்துக்கள்!அவள் விகடனில் இந்த இதழின் வலைப்பூவரசியாக உங்கள் வலைபூவை தேர்ந்தெடுத்துள்ளது பார்த்தேன்..பாராட்டுக்கள்...!
சில அம்மாக்கள் மகன்களை வீட்டு வேலைகள் எதுவும் செய்யச் சொல்வதில்லை. பல கணவர்களோ அடுப்படி பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. இதைப் பார்த்தாவது திருந்தட்டும்.//
மனதை கனக்க வைத்த நிகழ்வில் நம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருப்பதை அருமையாக சொன்னீர்கள் சகோதரி..
Post a Comment