Pages

டிரங்குப்பெட்டி - 25




நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இங்கு அமீரகத்தில் வெயில்னா வெயில், இதுவரை ”வரலாறு காணாத” வெயில். வீட்டில், ஆஃபிஸில் ஏஸியில் இருப்பவர்களுக்குப் பரவாயில்லை. வெளியே வேலை செய்பவர்களுக்குத்தான் சிரமம்.

இவ்வளவு வெயிலில் நோன்பு ஏன் என்ற கேள்வி வரும். இஸ்லாமிய வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதால், காலநிலை ஒவ்வொரு மாதத்திற்கும் வருடாவருடம் வேறுபடும். அதாவது சூரியனை அடிப்படையாக கொண்ட ஆங்கில வருடத்தில் டிஸம்பர் என்றால் எல்லா வருடமும் (இந்தியா, வளைகுடா நாடுகளில்) குளிர்தான். ஆனால், சந்திர வருடத்தில் அப்படியல்ல.  சுழற்சி முறையில் எல்லா மாதங்களுமே வெயில், பனி, குளிர்  என்று எல்லா காலநிலைகளிலும் வரும். உதாரணமாக 1994-ல் ரமலான் மாதம் ஃபிப்ரவரியில் வந்தது. அடுத்தடுத்த வருடங்களில், அது அப்படியே ஜனவரி, டிஸம்பர் என்று பின்னோக்கி முன்னேறி இந்த வருடம் ஜூலையில். இனி 2027-ல் மறுபடியும் ஃபிப்ரவரிக்கு  வரும். அதாவது சராசரியாக 33 வருடங்கள் தொடர்ந்து நோன்பு வைக்கும் ஒருவர், கடுங்குளிரிலும் நோன்பு வைத்திருப்பார்; சுடும் வெயிலிலும் நோற்றிருப்பார்!!
-=-=-=-=-=-=-=-=-=-=-


17-ஜூலை-2012 தேதியிட்ட அவள் விகடனில் நெட்-டாக்ஸ் பகுதியில் ”வலைப்பூவரசி” யாக என் வலைப்பூ வந்தது இன்ப அதிர்ச்சி எனக்கு!! நண்பர்கள் பலரும் மெயிலிலும், பதிவிலும் வாழ்த்தியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. எனக்கும் இதைச் சாத்தியப்படுத்தித் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-

www.khaleejtimes.com
நடிகர் விவேக் ஒரு படத்தில் கையில், ஊதிய பலூன்களை உடம்பில் அங்கங்கு மறைத்துவைத்துக் கொண்டு “muscles” என்று ஊரை ஏமாற்றுவார். அதுபோல, “இண்ஸ்டண்ட் மஸில்ஸ்”  கிடைக்க ஒரு இலகு வழி இருக்கிறதாம். Macrolane என்ற ஒருவகை ஜெல்லை தேவையான இடங்களில் இஞ்ஜெக்‌ஷன் போட்டால் போதுமாம், ஒரு வருஷத்துக்கு 6-பேக், 8-பேக் வச்சு போஸ் கொடுக்கலாம்.  விலையும் ரொம்ப சீப்தான், ஒரு கோர்ஸ் ஒன்றரை லட்சத்திலிருந்து ஆரம்பிக்குது. இது இன்னும் நம்மூருக்கு வரலையோ?

-=-=-=-=-=-=-=-=-=-=-

புகைப்படக் கலை தொடங்கிய காலத்திய இந்தியாவைப் புகைப்படங்களில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். அவ்வப்போது எங்கேனும் ஓரிரண்டு  புகைப்படங்கள் காணக்கிடைக்கும். இப்போது இதற்கென்றே ஒரு தளம் பார்த்தேன், “http://www.indianmemoryproject.com”.  வாசகர்கள் தம்மிடம் இருக்கும் அரிய புகைப்படங்களை மட்டுமல்லாது, அதையொட்டிய சம்பவங்களையும் இதில் பகிர்வதுதான் இதன் சிறப்பு. அந்தக் கால அனுபவங்களை வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

-=-=-=-=-=-=-=-=-=-=-

சுவத்துக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; கல்லுக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; புல்லுக்குமா பெயிண்ட்??!!

இன்றைய க்ளோபல் வார்மிங் காலத்தில், ஆனானப்பட்ட அமெரிக்காவையும் வறட்சி விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் கோடைக்காலமான தற்போது, பெரும்பகுதி வரண்டுபோய், நல்ல நீர்வளம் உள்ள இடங்கள்கூட இப்போது தண்ணீரில்லாமல் காய்ந்து கிடக்கிறதாம். அமெரிக்காவின் அநேக அலுவலக வளாகம்,  வீடுகளிலும் உள்ள புல்வெளிகள் பாதிக்கப்பட்டு,   தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. அதனால் “aesthetic view" பாதிக்கப்படுவதாலும், புல்வெளியைக் கவனிக்காமல் விட்டால் அரசு அபராதம் விதிக்கும் என்பதாலும், அதன்மீது ஒருவித ஆர்கானிக் பச்சைநிற பெயிண்ட் அடித்துப் ‘பச்சைபசேலென்று’ காட்டுகிறார்கள்.

-=-=-=-=-=-=-=-=-=-=-

Before
Now

பெண்களின்மீதான ஆஸிட் அட்டாக்குகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு இந்தியாவும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இன்னுமொரு சம்பவம். சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் குற்றவாளிகள் பெயில் பெற்று சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஜார்கண்டைச் சேர்ந்த சோனாலி முகர்ஜி  இன்னும் தவித்துக் கொண்டிருப்பதால், தனக்கு அரசு உரிய சிகிச்சைக்கு ஆவண செய்யவேண்டும் அல்லது கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

1999 முதல் 2010 வரை 150 பேர் (ஆவணப்படுத்தாதது எத்தனையோ) வரை பாதிக்கப்பட்டுள்ள, இந்த ஆஸிட் வீச்சு சம்பவங்கள் தொடர ஒரு முக்கியக் காரணம், இக்குற்றம் சட்டரீதியாக இன்னும் ’படுகாயம் விளைவிப்பது’ (grevious hurt) என்ற சாதாரண நிலைக்குற்றமாகக் கருதப்படுவதே. சமூக ஆர்வலர்களின் முயற்சியால், இதை  தண்டனைக்குரிய பெருங்குற்றமாக வகைப்படுத்த,  தற்போது மந்திரிசபை நடவடிக்கை எடுத்துவருகிறது.  மேலும், சந்தையில் கறிகாய் வாங்குவதைப்போல, ஐம்பது ரூபாய்க்கு ஆஸிடும் வாங்க முடிகின்ற நிலையும் மாறவேண்டும்.

-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

31 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சுவாரசியமான தகவலோடு தான் டிரெங்குப்பொட்டிய திறந்திருக்கீங்க.

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Seeni said...

nalla thkavalkal!

aasit visayam !
kodumaiyaanathu!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//1994-ல் ரமலான் மாதம் ஃபிப்ரவரியில் வந்தது. அடுத்தடுத்த வருடங்களில், அது அப்படியே ஜனவரி, டிஸம்பர் என்று பின்னோக்கி முன்னேறி இந்த வருடம் ஜூலையில். இனி 2027-ல் மறுபடியும் ஃபிப்ரவரிக்கு வரும்//
இதுவரை இந்த விஷயத்தை கவனித்ததில்லை. ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை என்ற அளவில் மட்டுமே தெரிந்த எனக்கு இதில் உள்ள விஷ்யனகள் ஆச்சர்யம் ஏற்படுத்தியது. புதிய தகவலை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமான அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
தகவல்களுடன் கூடிய பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'வலைப்பூவரசி'க்கு வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@T.N.MURALIDHARAN...

இஸ்லாமிய ஆண்டில் 355 நாட்கள் மட்டுமே!

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நோன்பு வாழ்த்துகள்!

மேலும் பல விருதுகள் வந்தடைய வாழ்த்துகள்.

புகைப்படத் தளம் ரொம்பவும் சுவாரஸ்யம். அறிமுகத்துக்கு நன்றி. அதற்கு பங்களிக்க உள்ளேன். இன்னும் சில அரிய பழைய படங்களை குடும்பத்தினரிடமிருந்து சேகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருகிறது நாட்டில்:(. தனியே பயணித்த இளம்பெண் இரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார் 4 நாள் முன்னர யஷ்வந்த்பூர்-மைசூர் ரயிலிலிருந்து.

Unknown said...

நல்ல சுவாரசியமான தகவல் விகடனில் நெட்-டாக்ஸ் பகுதியில் ”வலைப்பூவரசி”பெற்றதற்க்குவாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள்... அருமை...
வலைப்பூவரசிக்கு பாராட்டுக்கள்...
நல்லதொரு தளத்தை (http://www.indianmemoryproject.com) அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

Avargal Unmaigal said...

கடந்த வருடம் இதே மாதத்தில் துபாய்க்கு விசிட் செய்த நாங்கள் வெப்பம் தாங்காமல் கஷ்டப்ப்பட்டோம். சரி இரவில் வெயில் தாழ்ந்த பின் வெளிவந்தாலும் அதே ஹீட் காற்றுதான் எப்படிதான் இங்கு பகல் நேரத்தில் வெளியிடத்தில் வேலை செய்கிறார்கள் என்று அதிசியப்பட்டுக்க் கொண்டோம்..

சாந்தி மாரியப்பன் said...

ட்ரங்குப்பெட்டியில் சுவாரஸ்யமான தகவல்கள்..

புல்லுக்குப் பெயிண்டா?.. வெளங்கிரும் :-)

CS. Mohan Kumar said...

வலைப்பூவரசிக்கு வாழ்த்துகள். நாங்க புக்குலேயே பாத்துட்டோமுள்ள

கடைசி செய்தி வருத்தம் தருகிறது

கோமதி அரசு said...

வலை பூவரசிக்கு முன்பே வாழ்த்து சொல்லி விட்டேன். மறுபடியும் வாழ்த்து சொல்கிறேன். மேலும்
எல்லா சிறப்புகளும், பெற வாழ்த்துக்கிறேன். வாழ்க வளமுடன் ஹுஸைனம்மா.


ரமலான் நோன்பு கடும் வெயிலிலும், கடும் பனியிலும் விடாமல் நோற்கப் படுவது இறைவனின் அருளாலும், நோற்பவரின் மன உறுதியும் தான் காரணம்.
நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு இறைவன் எல்லா நலத்தையும், வளத்தையும் தர பிராத்திக்கிறேன்.


//சமூக ஆர்வலர்களின் முயற்சியால், இதை தண்டனைக்குரிய பெருங்குற்றமாக வகைப்படுத்த, தற்போது மந்திரிசபை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், சந்தையில் கறிகாய் வாங்குவதைப்போல, ஐம்பது ரூபாய்க்கு ஆஸிடும் வாங்க முடிகின்ற நிலையும் மாறவேண்டும்.//

நிலை மாற வேண்டும். தனி மனிதன் மாற வேண்டும் இல்லையென்றால் சட்டம் மாற்றவேண்டும்.

வலையுகம் said...

நிறைய தகவல்களை அறிந்துக் கொண்டேன் நன்றி

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

பல தகவல்களுடன் டிரங்குப்பெட்டி நிறைந்து நிற்கின்றது.

இறுதித் தகவல் ரிவியிலும் பார்த்தேன். கவலை தருகின்றது.

suvanappiriyan said...

வலைப்பூவரசிக்கு வாழ்த்துக்கள். பல புதிய தகவல்கள்.

Naazar - Madukkur said...

வாழ்த்துக்கள், உங்களுக்கு இந்த அங்கீகாரம் மிகப்பொருத்தம்

ஸாதிகா said...

வலைப்பூவரசிக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல அங்கீஇகாரம் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.அவள் விகடனும் படிக்கிறேன்.ஊருக்கு போய் இருந்ததால் இது என் கண்ணில் படவே இல்லை ஹுசைனம்மா:(டிரங்கு ப்பெட்டிவழக்கம் போல் அருமை.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஹுஸைன்னாம்மா.

டிரெங்கு பெட்டியில் இருந்து அறிய த்கவல்கள் அறிந்து கொண்டோம்.

enrenrum16 said...

Congratulations to the Blog Queen ;)))


ஆஸிட் சம்பவம் ... நினைக்கவே பயங்கரமா இருக்கு.... before & now போட்டோவைப் பார்த்தால் நமக்கே வயித்தெரிச்சலாயிருக்கு..... ஹ்..ம்...

Thenammai Lakshmanan said...

வலைப்பூவரசிக்கு வாழ்த்துக்கள்.

33 வருஷம் நோன்பா.. பெரிய விஷயம்..:)

பெண்களுக்கெதிரான கொடுமைகளில் முக்கியமானது ஆசிட் வீச்சு.. இது பத்தியும் பெரிய அளவு எழுதப்படணும்.

சிக்ஸ் பேக் ரொம்ப ஈசி போல இருக்கே..:)

pudugaithendral said...

வழக்கம்போல டிரங்குபொட்டி செம சுவாரசியம் ஹுசைனம்மா.

(உங்க பேர் போட்ட இதழை அயித்தான் கிட்ட காட்டி என் ஃப்ரெண்டுப்பான்னு பெருமையா காட்டிகிட்டோம்ல) :))

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - நன்றிங்க.

சீனி -நன்றிங்க.

முரளிதரன் - புதிய தகவல் அறிந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி.

ரமணி சார் - கருத்துக்கும், ஓட்டுக்கும் மிகவும் நன்றி!!

ஹுஸைனம்மா said...

நிஜாம் பாய் - நன்றிங்க.

ராமல்க்ஷ்மிக்கா - வாழ்த்துகளுக்கு நன்றிக்கா.

அந்தப் புகைப்படத் தளத்தைப் பார்த்தபோதும், பகிர்ந்தபோதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். :-)))

asa asath - இந்தப் பேரை தமிழ்ல எப்படி எழுதுறது? :-)))
நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

திண்டுக்கல் தனபாலன் - மிகவும் நன்றிங்க கருத்துக்கு.

அவர்கள் உண்மைகள் - துபாய் வெயில் அதிகம்தான். இங்கு வந்துபோகும் வெளிநாட்டவர்களுக்கான நமக்காவது ஒரு சாய்ஸ் இருக்கீறது - பிடிக்கவில்லை என்றால் நம் நாட்டிற்குப் போய்விடலாம். ஆனால் இந்நாட்டு குடிமகன்கள்??

அமைதிக்கா - வாடின புல் மனரீதியாவும் வாட்டத்தை ஏற்படுத்தும்னு, ஆர்கானிக் பெயிட் அடிச்சுக்கிறாங்க போல.

ஹுஸைனம்மா said...

மோகன் - வலைப்பூவரசியை புக்கில் பாத்தீங்களா? புக்கைப் பத்திரமா வச்சுக்கோங்க. வரலாற்று ஆவணம்!! :-)))))

கோமதிக்கா - மீண்டும் மீண்டும் வாழ்த்தி, பிரார்த்திக்கும் உங்கள் அன்புக்கு நன்றி அக்கா.

சந்திர வருடத்தின் காரணமாக, ஒரு குறிப்பிட்ட நாட்டவர் வழக்கமாகக் குளிர்காலத்தில் சிரமமில்லாமலும், ஒருசிலர் வழக்கமாக கோடையில் நோன்பு வைத்து சிரமப்பட்டுக்கொண்டும் இருக்கும் நிலைமை இல்லை. எல்லாருக்குமே எல்லாம் - சிரமம், இலகு - சமமாக அமைகிறது.

ஹைதர் அலி - நன்றி.

ஹுஸைனம்மா said...

மாதேவி - நன்றி. பெண்களின்மீதான தாக்குதல்களை சுலபமாகக் கடந்துபோக முடிவது வருத்தம்தான்.

சுவனப்பிரியன் - நன்றி.

நாசர் மதுக்கூர் - நன்றிங்க.

ஸாதிகாக்கா - வாழ்த்துகளுக்கு நன்றிக்கா.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 -

//Blog Queen//

சட்டுனு பாக்கும்போது, “Bandit Queen" மாதிரி இருந்துது. பதறிட்டேன், எப்படித் தெரிஞ்சுதுன்னு!! :-)))))

ஹுஸைனம்மா said...

தேனக்கா - வாழ்த்துக்கு நன்றிக்கா. இதுக்கு (விகடன் வலைப்பூவரசி) மூலகாரணமே நீங்கதான். :-)))

//33 வருஷம் நோன்பா// - வருஷத்துக்கு ஒரு மாசம்தானே.

//ஆசிட் வீச்சு.. இது பத்தியும் பெரிய அளவு எழுதப்படணும். // - ஆமாக்கா, அவதூறுகள் மனரீதியான பாதிப்பு தரும். ஓரளவு சுதாரிச்சுகிட்டா, கட்ந்து வந்துடலாம்.

அடி, உடை போன்றவையும்கூட பாதிப்பு தரும்னாலும், ஆஸிட் போல கொடூரமானது கிடயாது. உடல், உள்ளம், ஆரோக்கியம், வாழ்க்கை, உறவுகள், பொருளாதாரம் எல்லாமே சிதைக்கபப்டுது. ஒரு அம்பது ரூபாயில் இதைச் செய்யமுடிவதுதான் காரணம்.

நினைச்சுப் பாத்தால் கொதிப்புதான் வருது.

ஹுஸைனம்மா said...

தென்றல் - நன்றிப்பா.

//என் ஃப்ரெண்டுப்பான்னு பெருமையா//
என் ஃப்ரெண்டப் போல யாரு..... :-))))