Pages

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?




அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே? உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே?” என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

“என்னது, பாஸ்போர்ட்டா, இப்பவேவா? கிழிஞ்சுது போ!! பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க.  அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்” என்றாள்!! ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ??!!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.


 

Post Comment

10 comments:

CS. Mohan Kumar said...

அருமையான பதிவு ஹுசைனம்மா. முழு பதிவையும் இங்கேயும் பகிர்ந்திருக்கலாமே?

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
கூழோ, கஞ்சியே இருவரும் சேர்ந்து குடித்தால் நன்றாக இருக்கும்.

திருமணம் எதற்கு செய்து வைப்பது!

தவிர்க்க முடியாத காரணமாய் இருந்தால் பரவாயில்லை.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வர வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

உங்கள் வலைத்தலத்தில் இட்ட பகுதி சிரிக்க வைத்தது மீதி பகுதி வெகு சிரியாஸகவும் மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமாகவும் போய்விட்டது...

ஸ்ரீராம். said...

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்படி நடந்து கொல்லும் அந்தத் தாய்களும் இப்படி ஒரு நிலையை முன்னர் அனுபவித்தவர்களாக இருந்திருந்தால் இப்படிச் செய்வார்களா? இந்தக் கொடுமயை அனுபவிக்கும் இன்றைய பெண்கள் நாளை தங்கள் வீட்டில் இந்நிலை நடக்காதிருக்க இன்று உறுதி பூண வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் நல்ல பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது....

Seeni said...

ennathai solla !

neenga solvathu unmaithaan!!

ellorudanum sernthu vaazhanum..

shabi said...

இந்த லிங்கை எனது முகநூலில் பதிந்துள்ளேன்.......

சாந்தி மாரியப்பன் said...

வெளிநாடென்னங்க?.. இந்தியாவுக்குள்ளயே மகன் வெளிமாநிலத்துல வேலை பார்த்தாக்கூட மருமகளை அனுப்ப மனசு வராத மாமியார்களைக் கண்டிருக்கிறேன்.

காசு காசுன்னு அலைஞ்சு கடைசியில் என்னத்தைத்தான் கொண்டு போகப்போறாங்களோ :-(

அருமையான கட்டுரை.

காட்டான் said...

இது எல்லா மதத்தவர்களிடையேயும் இருக்கும் பிரச்சனைதான்.. அருமையான பதிவு..!

ஹுஸைனம்மா said...

மோகன் - நன்றிங்க.

கோமதிக்கா - நன்றி.

அவர்கள் உண்மைகள் - //நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமாகவும்//

என்ன செய்ய? சொல்றதை முழுசா சொல்லிடணுமில்லியா?

ஸ்ரீராம் சார் - நன்றி.

வெங்கட் - நன்றிங்க.

சீனி - ம்ம்.. என்னத்த சொல்ல!

ஷபி -நன்றிங்க.

அமைதிக்கா - ம், அதுவும் உண்டு. மெட்ராஸ், பெங்களூர்னு வேலை பாத்தாக்கூட விட மனசு வராது. கட்டுனவன், அதான மகன், வாராவாரம் பஸ்ஸுல சென்னைக்கும் சொந்த ஊருக்கும் அலைஞ்சு திரிஞ்சு ஓடாப் போனாலும் பரவால்லைன்னு இருப்பாங்க சிலர்.

காட்டான் - தகவலுக்கு நன்றிங்க.