Pages

வீட்டு வேலை





”ஏய் ரகுமத்து... என்னா செய்றே? இங்க வா.. வந்து இந்த துணியளக் கொண்டு போய் வாஷிங் மெஷின்ல போடு!!”

“என்னம்மா... இப்பத்தான் பரிச்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ள வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டியா... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க விடும்மா..”

“வயசுப் புள்ளைக்கு என்ன ரெஸ்ட் வேண்டிக் கிடக்கு? அப்படி என்ன வெட்டி முறிச்சுட்ட? சும்மாவே இருந்துகிட்டு ரெஸ்ட் வேற வேணுமாக்கும்? என்னவோ கையாலேயே துவைக்கப்பொற மாதிரிதான்...”

“ம்மா... சும்மா தொணதொணங்காதே... துணிய வாஷிங் மெஷின்லதான போடணும்.. அவளவ்தான? அப்புறமாப் போட்டுக்கிறேன்.. ஆள விடு...”

”ஆமாமா... நானெல்லாம் பேசினா உனக்கு அப்படித்தான் இருக்கும். என் பேச்சைக் கேட்டா, ஒனக்குத்தான் நல்லது. இல்லாட்டிப் போனா, நாள பின்ன நீயி போற வீட்டுல அம்புட்டுப் பேரு வாயிலயும் வுழுந்து எந்திக்கணும். அதுக்குத்தான் சொல்லுறேன்....”

அதைக் கண்டும் கொள்ளாமல், பதிலும் சொல்லாமல், கையில் மொபைலும், காதில் ஹெட் ஃபோனுமாய் ரஹமத் சோஃபாவில் புதைந்து கொள்ள, ஜன்னத் ஆயாசமாய் புலம்ப ஆரம்பித்தாள். சரியாய் அந்நேரம் ஜஃபருல்லா பாய் வீட்டினுள் நுழைய, பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டது போல பிராது கொடுக்கத் தொடங்கினாள்.

எல்லா வேலயும் நானேதான் பார்க்கணுமா? கொஞ்சம் கூட மாட ஒத்தாச செஞ்சா, அப்படியே எல்லா வீட்டுவேலையும் படிச்சுக்கலாம்ல? உங்க அருமந்த புள்ளைகிட்ட நீங்களாவது கேளுங்க... எம்பேச்சையெல்லாம் யாரு மதிக்கிறா இங்க..?”

”புள்ளைக்கு இப்பத்தானளா பரிச்சை முடிஞ்சிருக்கு. ஒரு வாரம் போவட்டும். அப்புறம் வேலையெல்லாம் டாண்டாண்னு செஞ்சுத் தருவாப்ல... நீயே அசந்துட மாட்டே”

“ஆமா... புஸ்தவத்தைப் படிச்சதுலயே களச்சு போயாச்சு உங்க வாரிசு... நா என்ன அம்மி அரைக்க, ஆட்டுரல ஆட்டவாச் சொல்லுறேன்... மாடு மாதிரி வளந்து நிக்கிது.. மிக்ஸில ஒரு தேங்கா அரக்கத்  தெரியுமா? அட கிரைண்டர் ஆன் பண்ண சுச்சு எங்கருக்கான்னாவது தெரியுமா உங்க புள்ளக்கி?”

“எளா... இதெல்லாம் பெரிய்ய விசியமா.. அதெல்லாம் தேவைன்னு வரும்போது தன்னால படிச்சிக்கிடும்... வுடுளா...”

“ஆமா... இப்படியே என்னயேச் சொல்லுங்கோ... நாள பின்ன, எட்டுப்பத்து பேரு இருக்க வூட்ல ஒருவேலையும் தெரியாம முழிச்சுகிட்டு நின்னா தகப்பனையா கொற சொல்லுவாங்க? அம்மக்காரி வளத்த லச்சணத்தப் பாருன்னு எந்தலயல்ல ஊர்ல உருட்டுவானுவோ?”

”அதெல்லாம் உருட்ட மாட்டாங்க. இத்தன வருசம் படிச்சிட்டிருந்த புள்ளக்கி வூட்டு வேல செஞ்சுபடிக்க நேரம் இருககாதுன்னு தெரியாதா என்னா அவுகளுக்கு? அந்த வூட்ல இருக்கவுகளும் ஆரம்பத்துல இப்படிச் சின்னஞ்சிறுசா அறியாம புரியாம வாழ வந்தவுகதானே? அதெல்லாம் அஜ்ஜஸ் பண்ணிப்பாவோ... நீ சும்மா இரு..”

”இப்படியே என் வாயை அடைக்கிறதிலியே குறியா இருங்கோ...  நானெல்லாம் இந்த வயசுல..”

“எளா... சும்மாயிருளா.. எல்லாரும் எல்லா வேலயும் படிச்சிகிட்டா பொறந்து வர்றோம். நானும் மொதல்ல ஹாஜியார் இரும்புக் கடைல வேலைக்கிச் சேந்தோடனே கல்லாவுலயா ஒக்காந்தேன்? டீ வாங்கியாறது... தண்ணி பிடிக்கது, கடயத் தூத்து வார்றதுன்னுதான் ஆரம்பிச்சேன்... இப்பம் நம்ம கடேலயும் அஞ்சாறு பேருக்கு டிரேனிங் கொடுக்கோம்ல? அத மாரி...”

“அட அதத்தான நானுஞ் சொல்றேன்... எல்லா வேலயும் படிச்சுகிட்டு போனோம்னா இந்த மாரி எடுபுடி வேலயெல்லாம் செய்ய வேணாம். நேரா மெயினான வேலைல ராசாவாட்டம் ஒக்காந்துக்கலாம்.  நம்ம ரகுமத்தும் அடுப்பு வேல எல்லாந்தெரிஞ்சுகிட்டுப் போனா, போற இடத்துல பகுமானமா அடுப்புல நின்னு தாளிச்சுக் கொட்டிட்டு நவுண்டுடலாம். இல்லயினா, வூடு தூத்து துடைக்கிறது, சாமாஞ்செட்டு கழுவுறது, அடுப்பங்கரையை கழுவிவுடுறதுன்னு கஸ்டமான வேலையெலாம் புதுசா வந்தவந்தலயில போட்டுடுவாஹ.. ”

“வாட் ரப்பிஷ்!! அம்மா!!  நான் எம்.எஸ். படிக்க ஸ்டேட்ஸ் போப்போறேன்!! அங்க ஆல்ரெடி  ஒரு வீட்டுல
ஷேர் பண்ணி ஒண்ணா சேந்து சமச்சு குடியிருக்கிற என் சீனியர் ஃப்ரண்ட்ஸ் கூட நானும் ஜாயின் பண்ணிக்கப் போறேன். ஏதோ வேலையில ஜாயின் பண்ணப்போற மாதிரி, இதுக்குமா ”எக்ஸ்பீரியன்ஸ்”  தேவை?” என்று கத்தினான் ரஹ்மத் என்கிற ரஹ்மத்துல்லா கான்.

Post Comment

35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்தம் இங்கே வரை கேட்கிறது...
tm2

ஸ்ரீராம். said...

ஆனால் இந்தக் கவலை எல்லாப் பெற்றோருக்கும் இருக்கிறது! :))

Avargal Unmaigal said...


///ரஹ்மத் என்கிற ரஹ்மத்துல்லா கான்./// ஹாஹாஹா

Thamiz Priyan said...

avvvv.. Final twist. :)

Thamiz Priyan said...

avvvv.. Final twist.:)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ட்விஸ்ட்... :)

suvanappiriyan said...

சிறந்த பகிர்வு.

அப்பாதுரை said...

ட்விஸ்ட் புரியவில்லையே? ரஹ்மத் என்பது பொதுப்பெயரா?

ஜன்னத் - எனக்கு மிகவும் பிடித்தப் பெயர்களில் ஒன்று.

ஹுஸைனம்மா said...

@ அப்பாதுரை:

/ட்விஸ்ட் புரியவில்லையே? ரஹ்மத் என்பது பொதுப்பெயரா?//

ஆமாம், ரஹ்மத் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொதுப் பெயர். அதனோடு வரும் இரண்டாம் பெயர்கள் (பீவி, பேகம், கான், அலி etc.) வேறுபடுத்திக் காட்டும்.

துளசி கோபால் said...

ஹாஹா:-))))

வீட்டு வீட்டுக்கு வாசப்படி:-))))

ஸ்ரீராம். said...

ஓ... நான் ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் என்பதை ஆண் பாலாகவே படித்து விட்டதால் ட்விஸ்ட் புரியவில்லை!

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா,. நல்லா விரட்டறாங்களே அம்மா. இத்தனையும் பையனுக்கு:)
நன்றி ஹுசைனம்மா. எங்க பேரனும் இப்போ டிஷ்வாஷர் அடுக்கறது, எடுத்துவைக்கிறது எல்லாம் பழாகிட்டான். பின்ன பெண்பிள்ளை இல்லாத வீட்டில் மகன் தான் உதவி செய்யணும்.
அருமை பா.எவ்வளவு நாளாச்சு இந்த மொழியைக் கேட்டு!!!

நிலாமகள் said...

அசந்துட்டேன் போங்க! நடைச்சித்திரம் வெகு ஜோர்! பீவியோ கானோ... வீட்டுக்கு வீடு இதே அம்மா அப்பா குழந்தை!(நானும் பீவி என்றுதான் முடிவு வரை எண்ணி படித்தேன்.) நல்ல ட்விஸ்ட். சுவாரஸ்ய, ஹேஸ்ய, நிதர்சன, சத்ய எழுத்து வளம்!

pudugaithendral said...

:)) காலம் மாறிப்போச்சு

ezhil said...

எனக்கு பெயர் வித்தியாசம் தெரியவில்லை ஆனால் வீட்டுவேலை என்றாலே பெண்களுக்குரியது என்று ஆழப் பதிந்த மூளைக்கு பரவாயில்லையே இந்தக் கால அப்பாக்கள் பரிந்து வருகிறார்களே என சந்தோசப்பட்டேன் ட்விஸ்ட்டும் நல்லாத்தானிருந்தது. பசங்களும் கத்துக்கிடட்டும்...

Roomil said...

unkal Pechu nadai arumaiyaka ullathu nanri
roomil

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஹுஸைனம்மா :-))))))

இராஜராஜேஸ்வரி said...

ட்விஸ்ட் ரொம்ப டேஸ்ட்டி ...

கோமதி அரசு said...

நான் முதலிலேயே நினைத்தேன் ஆண் பெயர் போல் உள்ளதே என்று.
நல்ல திருப்பம்.
ஆண், பெண் பேதம் இல்லையே வெளி நாடு போனால் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டி உள்ளது பெற்றவளின் கவலை மகன் மேல் உள்ள பாசத்தால் தான் ஏற்படுகிறது. சமையல் என்றால் எளிது, மற்றவேலை கடினம் உண்மைதான்.
நல்ல கதை.

Sangeetha said...

கரெக்டா சொன்னிங்க வர போற காலம் இப்படிதான் இருக்கும். பசங்களும் சமைக்கணும்.

Anonymous said...

ada ada ada ada ada. besh besh romba nanna irundhadhu

சமீரா said...

ஆஹா!! ஜன்னத் சூப்பர் அம்மா!! பெண்பிள்ள மட்டும் இல்ல ஆண்பிள்ளையும் சமைக்க தெரிஞ்சிக்கணும்னு அழகா சொல்லிடாங்க!!

ஆனாலும் ரஹ்மத் - ஏமாந்துதான் போய்டேன்...

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம் சொல்லியிருப்பது சரி:)!

வட்டாரவழக்கு அருமை.

அப்பாதுரை said...

ஹிஹி.. இப்போ புரியுது.

ADHI VENKAT said...

நான் ஆரம்பத்திலிருந்தே வேலைகள் என்றதும் பெண் தான் என்று நினைத்தேன்....

இறுதியில் ட்விஸ்ட் எதிர்பாராதது...

இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியணும்.

vanathy said...

வெளிநாட்டுக்கு போய் குப்பை கொட்டுறதுக்கு ட்ரெயின்னிங்கா பையனுக்கு. சூப்பர்.

enrenrum16 said...

ஓ...நீங்க ட்விஸ்ட்டை அங்கயா வச்சீங்க :).... உங்க வீட்டு நிகழ்வுகளைத் தானே சொல்றீங்க?!
(குறிச்சுக்கறேன்... எனக்கும் உதவும்..;))

Kanchana Radhakrishnan said...


சிறந்த பகிர்வு.

ஹுஸைனம்மா said...

திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.

ஸ்ரீராம் சார் - //இந்தக் கவலை எல்லாப் பெற்றோருக்கும் இருக்கிறது//
ஆமாம், வெளிநாடுகளில் படிக்கப் போகும் மகன்கள் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படக்கூடாதே என்கிற கவலை, மகளைக் கல்யாணம் செய்து அனுப்பும்போது இருக்கும் கவலையை விடப் பெரிது!! :-)))

அவர்கள் உண்மைகள் - புரிஞ்சிடுச்சா...

ஹுஸைனம்மா said...

தமிழ்ப்பிரியன் - ட்விஸ்ட் அழவச்சிடுச்சா... பின்னே எம்புட்டு நாள்தான் நாங்களே சமைக்கிறதாம்... கதையிலயாவது ஆண்கள் ‘படட்டும்’!! :-))

வெங்கட் - நன்றிங்க

சுவனப்பிரியன் - நன்றிங்க.

அப்பாத்துரை - ‘ஜன்னத்’ - பேர் பிடிக்குமா? எனக்கு அந்த ‘இடம்’ பிடிக்கும். ஜன்னத் என்றால் ‘சுவர்க்கம்’!! :-))

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - அதே, அதே.

வல்லிமா - பேரன் சமத்து!! இப்போ பசங்களும் நல்லா உதவுறாங்க. எதிர்வீட்டு அம்மாவின் இரண்டு மகன்களும் மாஞ்சு மாஞ்சு அம்மாவுக்கு வேலை செஞ்சு கொடுக்கிறதப் பாத்து எங்கம்மா பெருமூச்சுவிட்டுச் சொல்வாங்க, நாலு பெண்ணா பிறந்ததுக்கு வீட்டு வேலையை எல்லாரும் சேந்து செஞ்சுடுவோம்னு சந்தோஷப்பட்டாங்களாம்... ஹி.. ஹி.. எங்கே...

நிலாமகள் - ரொம்ப நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

தென்றல் - ஆமாப்பா, இப்ப ஆண்களும் சமைக்கக் கத்துகிட்டு ஆக வேண்டியிருக்கிறது!!

எழில் - வாங்கப்பா. நன்றிங்க பாராட்டுக்கு.

ரூமில் பாய் - நன்றி.

அமைதிக்கா - நன்றிக்கா

ஹுஸைனம்மா said...

இராஜராஜேஸ்வரி மேடம் - நல்லா ‘ருசிச்சு’ வாசிச்சிருக்கீங்க போல!! நன்றிங்க.

கோமதிக்கா - ஆமாக்கா, சமைக்கீறது ஒரு மணி நேரம்னா, சுத்தம் செய்து ஒதுக்குவதுதான் பயங்கர கடி!!

சங்கீதா - ஆமாப்பா, நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

நாஸியா - என்ன, காஃபி குடிச்சிட்டே பின்னூட்டம் எழுதுறீங்களா? :-)

சமீரா - வாங்கப்பா. நன்றி.

ராமலக்ஷ்மிக்கா - ஆமாக்கா, பெண்ணோ, பையனோ படிப்பு/வேலைக்காக வேற்றிடங்களுக்குப் போகும்போது எப்படி சமாளிப்பார்களோ என்கிற கவலை எல்லாருக்குமே இருக்கு. நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - அதானே, வீட்டு வேலைன்னாலே பெண் என்று எல்லாரும் நினைப்பதை மாற்றிக் காட்டிட்டோம்ல!! :-))

வானதி - நன்றிப்பா. நீங்க எழுதுற கதைகள்தான் எப்பவுமே சூப்பர்.

என்றென்றும் 16 - என்ன செய்ய? அப்பாக்களைத்தான் திருத்த முடியல, பிள்ளைகளையாவது வளைக்க முயற்சிப்போம்னு ஒரு அல்ப ஆசை!!

காஞ்சனா - நன்றிங்க.