Pages

மீளவியலாக் குழி





ப்போ ஒரு எம்.ஆர்.ஐ. எடுத்துப் பாத்துடுவோமா?” – டாக்டர்.
ஆயாசமாயிருந்தது எனக்கு. இதுதான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், ஏதாவது அதிசயம் நடந்து, இது நடந்துவிடாமல் இருக்கக்கூடாதா என்ற எதிர்பார்ப்பு-நப்பாசை எதிர்பார்த்ததுபோலவே பொய்த்தது.  “அது… வந்து… எம்.ஆர்.ஐ.யேதான் எடுக்கணுமா டாக்டர்?” என்ற என்னை, ‘பெட்ரோமாக்ஸேதான் வேண்டுமா’ என்று கேட்டதுபோல டாக்டர் முறைத்தார். நான் மௌனமாகத் தலைகுனிந்து, இன்ஷ்யூரன்ஸ் ஃபார்மை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

எம்.ஆர்.ஐ.யின் அதிகக் கட்டணத்திற்காகப் புலம்புகிறேன் என்று நினைத்தால், இல்லை, பணமல்ல பிரச்னை. பயம்!! எம்.ஆர்.ஐ. என்பது என்னவென்றே தெரிந்திராத அதிர்ஷ்டக்காரர்கள் நீங்கள், அதுதான் உங்கள் உதட்டில் எள்ளல் புன்னகை வருகிறது. விளக்கியபின் சிரிக்கிறீர்களா பார்ப்போம்.


 
 
வீராணம் குழாய் தெரியுமல்லவா?  அதில் ஒரு காலேகால்வாசி அளவில் விட்டமுள்ள ஒரு எட்டடி அடி நீளத்துண்டை வெட்டி எடுத்ததுபோல ஒரு குழாய் இருக்கும். ஒருபுறம் மட்டும் திறந்திருக்கும்; மறுபுறம் மூடியிருக்குமோ இல்லை சுவற்றை ஒட்டி இருப்பதால் மூடியதுபோலத் தோன்றுமோ என்னவோ. குழாய் மிகச்சிறிதாய், ஒரே ஒருவர் மட்டும் உள்ளே படுக்க முடியும் என்பதாகத்தான் இருக்கும். அந்த வளையத்தினுள் போய் வரும்படி ஒரு தானியங்கி படுக்கை இருக்கும். உடலில் ஸ்கேன் எடுக்க வேண்டிய பகுதி அந்த வளையப் பகுதியினுள் இருக்குமாறு நோயாளி படுக்க வைக்கப்படுவார். உடலின் உட்பகுதிகளைப் படம்பிடிக்க காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால் சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே போல கதிர்வீச்சு அபாயம் சிறிதும் இல்லை.

அந்தப் படுக்கையில் படுக்க வைத்து, ஆளை ‘உள்ளே’ அனுப்பி விடுவார்கள். படம் பிடிக்கும்போது கடகடா, குடுகுடுவென்று ஏதோ ஹைதர்காலத்து மோட்டார் ஓடுவதுபோல நாராசமாய்ச் சத்தங்கள் கேட்கும். அதுவும் சுமார் 20 முதல் 40 நிமிடங்களுக்கு!! முடியும்வரை ஆடாமல், அசையாமல் படுத்திருக்க வேண்டும் – மூச்சுகூட மெதுவாத்தான் விடணும். அசைஞ்சா போச்!! மறுபடியும் ’முதல்லேர்ந்து’ ஆரம்பிக்கணும்.

ப்படியான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துவரத்தான் நானும் இன்று வந்திருக்கிறேன். வழக்கம்போல முதலில் ஏஸியை ஆஃப் பண்ணச் சொல்லிவிட்டேன். சும்மாவே பயம். இதிலே ஏஸியும் சேர்ந்து, உள்ளே இருக்கும்போது, ஏதோ ‘ஃப்ரீஸர் பாக்ஸ்ல’ இருக்கிற எஃபெக்ட் தரும்!! வழக்கம்போலவே கம்பளிப் போர்வையையும் கேட்டுவாங்கி கழுத்துவரை போர்த்திக் கொண்டேன்.  மூஞ்சிமேலே  ப்ளாஸ்டிக்கில் கிளிக்கூண்டு மாதிரி ஒண்ணைப் போட்டுவிடுவாங்க. அதுதான் உடலின் படங்களைக் சேகரிப்பதால், அது இல்லாம முடியாதாம்.

                           

வழக்கம்போல, கையில் ஒரு பஸ்ஸரைத் தந்து, ஏதாவது பிரச்னைன்னா அழுத்தணும்னு சொன்னாங்க. இப்பவே அழுத்தி, நான் போமாட்டேன்னு சொல்லலாமான்னு இருந்துது. வழக்கம்போல “எவ்ரிதிங் ஓக்கே?”ன்னு அவங்களே கேள்வியும் கேட்டுகிட்டு, அவங்களே “ஓக்கே”ன்னு பதிலும் சொல்லிகிட்டு, கையாட்டி ‘உள்ளே’ அனுப்பிவச்சாங்க. நான் படுத்திருக்கும் படுக்கை உள்ளே செல்லச் செல்ல, ரேடியாலஜிஸ்ட்டும், நர்ஸும் தூரத்தில் சென்று, பின் போயே விட்டார்கள்.  இனி நான் மட்டுமே இங்கு.

மிஷின் ஓட ஆரம்பித்தது. ‘கடகடா, குடுகுடு’ டமாரம் போலச் சத்தம். இதுக்குத்தான் முதல்லயே காதில ஹெட்ஃபோன் மாட்டிக்கிறியான்னு கேட்டாங்க, நாந்தான் மாட்டேனுட்டேன். எப்பப் பாத்தாலும் காதுல செவிட்டு மிஷின் மாதிரி ஹெட்போன் மாட்டி பாட்டு கேக்கிறவங்களைப் பாத்தாலே பத்திகிட்டு வரும். ரோட்ல நடக்கும்போதுகூட காதுல பாட்டு அல்லது ஃபோன்!! சுற்றியுள்ள உலகமும், அதன் ஓசைகளும் இதைவிட சுவாரசியமானது என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லையோ?

அப்ப நீயும் இந்த ‘கடமுடா’ சவுண்டை ரசிக்கத்தான் ஹெட்ஃபோனை வேண்டாமுன்னு சொல்லிட்டியான்னு கேட்பீங்க. இல்லை, ‘உள்ளே’ இருக்கும்போது வெளியே என்ன நடக்குது என்பதற்கு ‘காது’ ஒன்றுதான் ஒரே தொடர்பு சாதனம்.  ஹெட்ஃபோன் மாட்டினால், வெளியே ஏதாவது நடந்துதுன்னா எனக்கு எப்படிச் சத்தம் கேட்கும்? ஒருவேளை கரண்ட் கட்டானால் என்ன செய்வார்கள்? ச்சே… இது என்ன தமிழ்நாடா? இங்கே துபாயிலெல்லாம் கரண்ட் கட்டே கிடையாது. அப்படியே டெக்னிக்கல் ஃபால்ட் என்றாலும், உடனே தானியங்கி ஜெனரேட்டர்கள் இயங்கத் தொடங்கும்.

ள்ளே’ பேச்சுத் துணைக்கு யாருமில்லை என்பதால், என் மனதோடே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். கரண்ட் கட் கூடப் பிரச்னையில்லை. நான் படுத்திருக்கும் படுக்கையை, ஒருவேளை கையாலேயே இழுத்து என்னை ’வெளியே’ எடுத்துவிடுவார்கள் என நம்பலாம். ஒருவேளை பூகம்பம் வந்தால்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவார்களா, என்னைப் பார்ப்பார்களா?  மனமே அடங்கு! மற்றவங்களை விடு, வெளியே கவலையோடு நிற்கும் என்னவர் மீது கூடவா நம்பிக்கையில்லை? அது.. அப்படியில்லை, இருந்தாலும்…

பேசாதே.. அமைதியாய் இறைவனை நினை.  ஆமாம்.. ஆமாம், அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.  சின்னக் குழாய் என்றாலும், இந்தக் குழாய்க்குள் பளிச்சென வெளிச்சமாய் இருக்கிறது. இதேபோல மரணத்துக்குப்பின் அடக்கம் செய்வார்களே, அந்தக் குழியில்? கடும் இருட்டாக இருக்குமே? உடல் மரணித்திருந்தாலும், உயிர் – ஆத்மா, ’உயிர்ப்போடு’ இருக்குமே.  இப்போ துணைக்கு ஆள் வெளியே நிற்கும்போதே பதறுகிறேனே, அப்போ என்னைமட்டும் தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் – என்னவர் உட்பட- போய்விடுவார்களே, அப்போ என்ன செய்வேன்? நல்லவர்கள் என்றால், அந்தக் குழி விசாலமாய் இருக்குமாம். அதுவே கெட்டவர்கள் என்றால், குழி குறுகிப் போய் உடலை நெருக்குவதில் எலும்புகளே உடைந்துவிடுமாமே? நான் நல்லவளா, கெட்டவளா? செய்த தவறுகள் அத்தனையும் இப்போ நினைவுக்கு வருகிறதே… அய்யோ… துடிக்கும் துடிப்பில் இதயம் வெளியே தெறித்துவிடும் போல இருக்கிறதே!!

இறைவசனங்களைச் சொல்லிக் கொண்டேன். ’ஆல் இஸ் வெல்’லாக ஒரு ஆசுவாசம் கிட்டியது. கையில் இருக்கும் ‘பஸ்ஸரை’ அழுத்திவிடாதபடிக்கு ஒருமுறை இறுகப் பிடித்து, என் கையில் அது இருப்பதை உறுதி செய்துகொண்டேன். அது இருப்பது ஒரு தைரியம்.  பஸ்ஸர் அல்லது பெல் என்று பேர் வைத்திருந்தாலும், பார்ப்பதற்கு இரத்த அழுத்த மானியில், கைப்பட்டையில் காற்றடித்து ஏற்றுவதற்கு ஒரு பச்சை பல்பு போல இருக்குமே அதுபோலவே இருக்கும் ரப்பரால் செய்யப்பட்ட கையடக்கக் குமிழ். அதன் ஒரு முனையிலிருந்து நீண்ட ஒரு வயர் இணைக்கப்பட்டிருக்கும். அதுதான் மின் இணைப்பாக இருக்கும்போல.

தற்குமுன் பல முறை எம்.ஆர்.ஐ. எடுத்திருந்தாலும், இந்த முறை கொஞ்சம் அதிகமாகவேப் படபடவென்றிருக்கிறது. கடைசியாக எடுத்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது என்பதால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிதான் காரணமோ என்னவோ.  கண்களை மட்டும்தான் அசைக்கலாம். அப்படிச் சுற்றிச் சுழற்றிப் பார்க்க அந்தக் குழாய்க்குள்  என்ன இருக்கிறது? முன்பு வழமையாக ஸ்கேன் எடுத்துவந்த ஸ்கேன் சென்டரின் எம்.ஆர்.ஐ. மெஷினுள், நோயாளியின் மேல்பக்கம் ஒரு கண்ணாடி இருக்கும். அதில் தெரியும் நோயாளியின் முகம், ஸ்கேன் மெஷினை இயக்குபவருக்கும் முன் திரையில் தெரியும். இதில் அப்படியொன்றையும் காணோம். அந்தக் கண்ணாடி இருந்தாலாவது அதில் நம் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அது இல்லாததும் ஒரு ஆசுவாசம்தான். இல்லைன்னா, என் முகத்தில் அப்பியிருக்கும் பயத்தை ரேடியாலஜிஸ்டும் பார்ப்பாரே!!

கொஞ்சம் அசைந்தாலும் எல்லாமே ”ரிப்பீட்டு” என்பதால் அப்போது யாரேனும் கிச்சுகிச்சு காட்டியிருந்தால்கூட அசைந்திருக்க மாட்டேன். முதல்முதலாய் எம்.ஆர்.ஐ. எடுக்கும்போது ஸ்கேனின் நடுவில் ‘கான்ட்ராஸ்ட்’ ஊசி போடும்போது, ரேடியாலஜிஸ்டிடம் ‘கொஞ்சம் எழுந்து உக்காந்துக்கிறேனே, வலி தாங்க முடியவில்லை’ என்று சொன்னபோது,  “இல்லைம்மா, இப்ப நீங்க அசைஞ்சா முதல்லருந்து மறுபடி ஆரம்பிக்கணும்’ அவர் சொன்னப்ப “அய்யோ, வேண்டாம்”ன்னு அலறினது ஞாபகம் வந்தது.

அசையாமல் இருப்பது என்றதும் சின்னம்மா சொன்னது நினைவு வந்தது.  உறவினர் ஒருவரின் திடீர் மரணம் குறித்துப் பேசியபோது, ’ஒருநாளும் படுக்கையில் கிடந்துவிடக்கூடாது. கடைசி வரை கைகால் சுகத்தோடே இருந்துட்டுப் போய்டணும்’ என்று நான் சொல்ல, சாச்சி அந்த எண்ணம் கூடாதென்றார். அதாவது ‘நேற்றிருந்தான் இன்றில்லை’ என்று போவதைவிட, உடல்நலமில்லாமலோ அல்லது மூப்படைந்தோ மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணிப்பதுதான் சிறந்ததாம். ஏனென்றால், இனி மரணம்தான் விடுதலை தரும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் மனிதனுக்கு அதுவரைத் தான்  வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. பரிட்சை எழுதிமுடித்ததும், மாணவன் தன் விடைத்தாளைச் சரிபார்ப்பது போல, தன் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, வருந்தி தவறிழைக்கப்பட்டவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வானாயின், மரணத்தைப் பயமின்றி எதிர்கொள்ள முடியலாம். இதுவே அகால மரணம் என்றால், அந்த மனிதனுக்குத் தன் தவறுகளை முழுமையாக உணரக் கிடைக்காமலே போய்விடுகிறது.

அது சரிதான், ஆனாலும்… என்று இழுத்தபோது சொன்னார். எது நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நடக்கும். ஒருவேளை படுக்கையில் இருக்கும் நிலை வாய்த்தால் அதிலும் நன்மையை எதிர்பார்த்து ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர, இப்படியாகிவிட்டதே என்று மருகக் கூடாது. ’இருந்தாலும், மத்தவங்களுக்குச் சிரமம்தானே…’ என்றதும் சின்னம்மா சொன்னார், ‘எப்படி இருந்தவர் இப்படிக் கிடந்துவிட்டார் என்று எண்ணிப் பார்த்து, இருப்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கும் இதுபோல எதுவும் நேர்ந்தால், தன்னை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குப் பாடம் எடுப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கானப் பணிவிடைகளின் சிரமங்களால், தாமும் இந்நிலை அடையாதிருக்க உணவு, வாழ்க்கைமுறைகளைக் கட்டுப்படுத்தி உடல்நிலை பேண வேண்டும் என்கிற அக்கறை வரும்’. தாத்தா இறந்ததும், அவர் உணவுண்ட அலுமினியத் தட்டை, பேரன் தன் தந்தைக்கெனப் பத்திரப்படுத்திய கதை ஞாபகம் வந்தது.

ண்ணவோட்டங்களில் முங்கிப் போயிருந்த ‘கடமுடா’ சத்தம், மீண்டும் காதுகளைத் துளைத்தது. கையில் இருந்த பஸ்ஸரை தடவிக் கொண்டேன்.  சமீப காலமாக யாரும் வீட்டில் வைத்து இறந்ததாகக் கேள்விப்பட்ட நினைவில்லை. அந்த ஆஸ்பத்திரி ஐஸியூவில், இந்த ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டரில்.. இப்படித்தான் கேள்விப்படுகிறேன். முன்காலங்களில், ஆஸ்பத்திரிகளில் ஒரு கட்டம் வரை சிகிச்சை செய்து முயன்றுபார்த்துவிட்டு, ‘இன்னும் ஒரு வாரம்தான் தாங்கும். வீட்டுக்குக் கொண்டுபோயிடுங்க’ என்று சொல்வார்கள். இப்போ எந்த மருத்துவமனையில் அப்படிச் சொல்கிறார்கள்?

முன்பெல்லாம், அப்படி இறுதி நிமிடங்களில் இருப்பவர்களே ‘என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க’ என்பார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதேபோல வீட்டில் வைத்து, இறைவசனங்களைப் படித்துக் காட்டுவதும், புனித நீரை வாயில் ஊற்றுவதும் என அமைதியானச் சூழல் இருக்கும். இந்துமதத்தினர், இத்தருணத்தில் உறவினர்களைக் கொண்டு அவரது வாயில் பால் ஊற்றச் சொல்வார்களாம். கிறிஸ்தவர்களும் பைபிள் வசனங்களைப் படிப்பார்களாயிருக்கும். பள்ளியில் உடன் படித்த ரோஸி ஷரோன் தன் அண்ணன் விபத்தில் உயிரிழந்தபோது, இறுதிச் சடங்குகளின் ஃபோட்டோ ஆல்பம் என்று கொண்டுவந்து பள்ளியில் காண்பித்தபோது, இதையெல்லாமா படம்பிடிப்பார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.  பிறகு சில திரைப்படங்களிலும் அப்படியானக் காட்சிகளைப் பார்த்தபிறகு இது இறந்தவர்களின் நினைவாகப் பலரால் பின்பற்றப்படும் வழக்கம் என்று புரிந்தது.

மருத்துவ முன்னேற்றங்கள் மனிதர்களின் ஆயுளைக் கூட்டியிருந்தாலும்,  அவனின் இறுதி நிமிடங்களை அமைதியாகக் கடக்க உதவுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எப்படியாவது உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையை உறவினர்களுக்கு ஊட்டி, நோயாளியைப் பல பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று செய்வதைப் பார்க்கும்போது, ஏற்கனவே பரிதவித்துக் கொண்டிருக்கும் நோயாளியை மேலும்மேலும் துன்பங்களுக்கு உள்ளாக்குகின்றோமோ என்ற குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. அதேசமயம், மீண்டுவிடவும் வாய்ப்பிருப்பதால், இச்சிகிச்சைகளை வேண்டாமெனச் சொல்லவும் மனது துணிவதில்லை.  இருதலைக்கொள்ளி எறும்பாய் அலைபாயும் உறவுகள். மருத்துவரே வேண்டாமெனச் சொல்லிவிட்டால் நம் மனம் ஏற்கலாம். அப்படிச் சொல்லாவிட்டால், பணம் பிடுங்கும் உத்தி என்று அவருக்கும் பழிச்சொல். ஒருவேளைச் சொல்லிவிட்டாலோ, வேற நல்ல டாக்டராப் பாக்கலாம்பா என்று தூண்டிவிடவும் சிலர்.

எப்படியோ, பிறக்கும்போதும் போராடிப் பிறக்கும் மனிதன், இறக்கும்போது போராடித்தான் போகவேண்டியிருக்கிறது. அப்படிப் போனபிறகாவது உடனே அனுப்பி வைக்கிறார்களா? அதற்கும் இப்போது ஃப்ரீஸர் பாக்ஸ்!! அமெரிக்காவிலிருந்து மகன், லண்டனிலிருந்து மகள், துபாயிலிருந்து பேரன், ஆஸ்திரேலியாவிலிருந்து தம்பி என்று பிணமான பின்னும் ஒவ்வொருக்காய்க் காத்திருப்பு!!

சரி, நான் இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வேன்? இறந்தவுடன் இறுதிச் சடங்குகள் செய்துவிடுங்கள், யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்று முன்பே சொல்லிவிடுவேனா? இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இறுதி நிமிடங்களில் என்னைக் காப்பாற்றும் முயற்சிகள் வேண்டாம் என்று சொல்வேனா? வாழும் ஆசை அப்போதும் விட்டுவிடுமா என்னை? ப்ச்.. இதெல்லாம் இப்போ எதுக்குத் தேவையில்லாம யோசிச்சுகிட்டு… பேசாம இறைதியானத்தில் மனதைச் செலுத்து…

மீண்டும் ஒருமுறை கையிலிருக்கும் பஸ்ஸரைத் வருடிப் பார்த்துவிட்டு, அப்படியே அதன் இணைப்பு வயரையும் தொட… ஆ… வயரைக் காணோமே… எனில் வயர் அறுந்துவிட்டது போலவே??!! அப்படின்னா, நான் பஸ்ஸரை அழுத்தினாலும், அது ஒலியெழுப்பப்போவதில்லை!! அப்படியானால் எனக்கு ஏதாவது நேர்ந்தால், என்னை எப்படிக் காப்பாற்றுவார்கள்? எப்படி, என்ன செய்வேன் நான்… நாக்கு உலர்ந்து போனது…

பஸ்ஸர் ஒலிக்கவில்லையென்றால் என்ன இப்போ? நான் நல்லாத்தானே இருக்கேன். இதோ சற்று நேரத்தில் ஸ்கேன் முடிந்துவிடும். பின்னர் வெளியே வந்துவிடலாம் என்று அறிவு சொன்னாலும், மனம் அமைதியடையவில்லை. எப்படியேனும் இங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதாகவே எண்ணங்கள் அலைபாய்ந்தன. எப்படி, எப்படி என யோசித்து…. பதற்றத்தில், பயத்தில் என் முகம் மூடியிருந்த பிளாஸ்டிக் கூண்டைப் பிடுங்கி எறிய முயற்சித்தில், மெஷினின் அலாரம் அடிக்க… வெளியே இருப்பவர்கள் என்னவோ ஏதோ என்று பயந்து உள்ளே வந்து, என்னை வெளியே எடுத்து…

இந்தக் குழியிலிருந்து ஒருவழியாய் மீண்டுவிட்டேன்……



பண்புடன்” குழுமத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.  

Post Comment

45 comments:

ராஜி said...

ஐயோ! அந்த எம்.ஐ.ஆர் இம்சையை நானும் அனுபவிச்சிருக்கேன். தூங்கும்போதுகூட உருளும் ஆள் நான்.., என்னை போய் 45நிமிசம்....,
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச் அப்பாடான்னு ஆகிட்டு..,

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பர்..

முதல் பரிசு வென்றதுக்கும் வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்.

நேற்று தான் நண்பர் ஒருவர் இப்படி ஸ்கேன் எடுக்க போய் டெக்னீஷியர்களிடம் செம திட்டு வாங்கி வந்தார். சின்ன குழந்தைகள் கூட சொன்னதை கேட்டு ஒழுங்காய் ஒத்துழைப்பு தராங்க நீங்க ஏன் இப்படி படுத்தி வைக்கிறீங்கன்னு....

கோமதி அரசு said...

’ பண்புடன் ’ இணைய இதழுக்காக நீங்கள் எழுதிய இந்த கதையை முன்பே படித்து விட்டேன்.
மிக அருமையாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பற்றியும் அப்போது அதன் அனுபவங்களையும் , சொல்லி சென்றவிதம் அருமை.

//பேசாதே.. அமைதியாய் இறைவனை நினை. ஆமாம்.. ஆமாம், அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.//

ஆம் ,உண்மை அவனன்றி வேறு யார் துணை!
மரணத்தைப்பற்றி உங்கள் சின்னம்மா சொன்னது மிக அருமை.

குழுமத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நினைத்தாலே பயமாகத்தான் இருக்கு... உங்களின் "வர்ணனை" மேலும் அதிகமாக்கி விட்டது... உள்ளே சென்றவுடன் என்னென்ன எண்ணங்கள்... யம்மாடி...! முடிவில் எப்படியோ தப்பியாகி விட்டது தானே...? மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா...?

இராஜராஜேஸ்வரி said...

"மீளவியலாக் குழி" அவஸ்தையான நினைவுகள் பரிதாபப்பட வைக்கின்றன..


பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..!

ஸ்ரீராம். said...

ஸ்கேனிங் மெஷினுக்குள் இவளவு எண்ண ஓட்டமா?

உடனே மரணம் வரக்கூடாது, நடந்ததை நினைத்து மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வரவேண்டும் என்ற எண்ணம் யோசிக்க வைத்தது. முன்னரே எதற்கும் இருக்கட்டும் என்று மன்னிப்பு கேட்டு வைத்துக் கொண்டால் உடனே போய் விடலாம் இல்லை?!!


போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.

இறுதி நிமிடங்கள் 'என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க'னு சம்பந்தப் பட்டவங்களே சொல்வாங்களாம்' - எங்கம்மா சொன்னாங்க.

Peer Mohamed said...

Thatha,

What a wonderful narration. Those who read will literally go inside those giant MRI machines and come out as they go thru the course of the story. Linking death and thoughts related to that was a clever plot. Well done !!!

Hearty congratulations on winning !!!

நிலாமகள் said...

எனது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அனுபவத்தை நினைவு படுத்திவிட்ட பதிவு.

இதை வச்சி ஒரு கதையே எழுதி முதல் பரிசும் பெற்று... அசத்தறீங்க தோழி!

'பொட்'டுன்னு போறவங்களை இனி 'நல்ல சாவு'ன்னு சொல்லக் கூடாது போலிருக்கு.

இந்துக்களில் இறுதி நிமிடங்களில் துளசி இலைகள் போட்ட நீரை வாயில் விடுவதுண்டு.

அந்த இணைப்பு வயர் என்னாயிற்றாம்? மறுபடி கேட்டீங்களா?
:)

கீதமஞ்சரி said...

மீளவியலாக் குழி - அர்த்தமுள்ள தலைப்பு. பரிசோதனைக் கூடத்திலிருக்கும் ஒரு நோயாளியின் இடத்திலிருந்து தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அசத்தல். ஒரு தியானநிலைக்குரிய மனநிலையைக் கொண்டுவந்து அதை வாசிப்பவரும் உணரச்செய்த எழுத்து. அருமையானதொரு கதைக்கும், பண்புடன் குழுமம் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கும் இனிய வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா.

ஸாதிகா said...

எம்.ஆர்.ஐ ஸ்கேனில் இத்தனையா?படிக்கும் பொழுதே ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் நுழைந்தால் ஏற்படும் பயங்கர சில் உணர்ச்சி...:(

உறவினர் ஒருவரின் திடீர் மரணம் குறித்துப் பேசியபோது, ’ஒருநாளும் படுக்கையில் கிடந்துவிடக்கூடாது. கடைசி வரை கைகால் சுகத்தோடே இருந்துட்டுப் போய்டணும்’ என்று நான் சொல்ல, சாச்சி அந்த எண்ணம் கூடாதென்றார். அதாவது ‘நேற்றிருந்தான் இன்றில்லை’ என்று போவதைவிட, உடல்நலமில்லாமலோ அல்லது மூப்படைந்தோ மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணிப்பதுதான் சிறந்ததாம். ஏனென்றால், இனி மரணம்தான் விடுதலை தரும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் மனிதனுக்கு அதுவரைத் தான் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ////மிகவுன் யோசிக்க வைத்த வரிகள்.

கெட்டதுகளை உணர்ந்து, வருந்தி தவறிழைக்கப்பட்டவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. // ஏன் இதனை மனிதன் ஆரம்பத்தில் இருந்தே இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாமே?

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கதை. சாதாரணமாகவே இந்த பரிசோதனைகள் என்றாலே ஒரு வித பயம் தான் எல்லோருடைய மனதிலும்.

தலைப்பும் அருமை.

போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.....

அப்பாதுரை said...

எழுதியது ஹூஸைனம்மாவா சித்தரா?
தத்துவ சிந்தனை பிரமாதம்.

டிபிஆர்.ஜோசப் said...

எனக்கும் இந்த அனுபவம் உள்ளது. வலது தோள்பட்டையில் வலி என்று போனதற்கு MRI செஞ்சிட்டு வாங்க என்ற மருத்துவருடைய ப்ரிக்ஸ்க்ரிப்ஷன் இருந்தும் இதுக்கு எதுக்கு MRI செய்யச் சொன்னார்னு கேட்டாங்க MRI மையத்துல இருந்தவங்க. இருந்தாலும் நாந்தான் செஞ்சிக்கறேன் இல்லன்னா அந்த டாக்டர் ஒத்துக்கமாட்டார்னு சொல்லி செஞ்சிக்கிட்டேன். நீங்க சொன்னா மாதிரி அந்த கடமுடா சவுன்டுதான் சகிக்க முடியாம இருந்துது. அதுக்கப்புறம் ஒருவழியா ரிசல்ட் வந்து எடுத்துக்கிட்டு போனா அத ஒரு சில நொடிகள் மட்டுமே பார்த்துவிட்டு நா நினைச்சா மாதிரி ப்ராப்ளம் இல்லன்னு சொன்னார் என்னோட எலும்பு டாக்டர். அவர் எத நினைச்சார், எது இல்லேன்னு இன்னைக்கி வரைக்கும் தெரியல. ஆனா தோள்பட்டை வலி இன்னமும் போகவே இல்லை என்பதுதான் அதைவிட கொடுமை.

raja said...

masha allah.. Brilliant narration sister...you have a very good writing skill... do write more...insha allah

புதுகை.அப்துல்லா said...

எழுத்தாளருக்கு வாழ்த்துகள் :)

புதுகை.அப்துல்லா said...

எழுத்தாளருக்கு வாழ்த்துகள் :)

”தளிர் சுரேஷ்” said...

நேரடி அனுபவமாய் இருந்தது கதை! சிறப்பான படைப்பு! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன் சீசன்ஸ் said...

தகுதியான கட்டுரைக்கு பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..!
ஓர் ஸ்கேன் 500 க்கு மேல் X ray எடுத்த கதிர் வீச்சுகளை தாக்கும் ஆற்றல் கொண்டவை

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ ஹுஸைனம்மா...

மரணத்தை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்...

நல்ல எழுத்து நடை.... கதாப்பாத்திரத்தோடு பயணிப்பது போல் இருந்தது...

அன்புடன்
ரஜின்

Jaleela Kamal said...

நானும் மீளவியலாக் குழி , உள்ள இரண்டு முன்று முறை போய் வந்தாச்சு.

முதல் முறை ரொம்ப பயந்தேன், யாருமே இல்லையே தனியாக விட்டு விட்டு போய் விட்டார்களே என்று அப்பறம் பழக்கமாகி விட்டது..
மிக அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

ஸ்கேன் எடுக்கும் அனுபவத்தில் உங்களை நீங்கள் உணர்ந்தது அட்டகாசம்.

Ranjani Narayanan said...

கதையா இது? எல்லோரையும் அவரவர்களின் கடைசிக் காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!
மரணத்தைப் பற்றி உங்கள் சின்னம்மா சொன்னது மறக்கவே மறக்காது!

ரொம்பவும் வலிமையான எழுத்துக்கள். நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்கள்; இதைபோல மிகவும் சீரியஸ் எழுத்தும் நன்றாக வருகிறது உங்களுக்கு.

உங்கள் பன்முகத் திறமைக்குப் பாராட்டுக்கள்!

வல்லிசிம்ஹன் said...

பரிசு கொடுக்கவேண்டிய கட்டுரைதான். விலாவாரியாக நீங்கள் எழுதி இருப்பது மீண்டும் என் எமார் அ யை நினைவு படுத்திவிட்டது.
பயமில்லை. சத்தத்தைக் கேட்டு அலறும் இதயம்.:(
அருமையான சித்தி உங்களுக்கு. என் அம்மாவும் என்னை அழைத்துச் சென்றுவிடு என்று சொல்லி அதற்கப்புறம் ஒரு வருடம் இருந்தார்கள். சந்தோஷமாகவே இருந்தார்கள் . அருமை ஹுசைனம்மா வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் அடுத்த பகிர்வு : http://engalblog.blogspot.in/2013/07/2.html

தொடர வாழ்த்துக்கள்...

Sangeetha said...

ஹுசைன்னம்மா........

அந்த இடத்திலும் இவளவு யோசனைகளா? அதுவும் அதை கடைசி நேர குழியாக? ஆனான் சொன்ன விஷயங்கள் வெகு எதார்த்தம்.

நானும் கடந்த மாதம் spinal cord problemகாக MRI எடுக்க வேண்டி வந்தது.

முதலில் பயமாக இருந்தது, இங்கு நீங்கள் சொன்ன மாதிரி எந்த பெல்லும் கொடுக்கவில்லை உள்ளே சென்றவுடன் கண்ணை திறந்து பார்த்தேன் ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சப்தத்தில் ரிதம் ட்ரை பண்ணினேன். ஐயோ தலையில் இருக்கும் கிளிப் கூட கழட்டி வைக்க சொன்னாங்களே "பல்" லில் இருக்கும் கிளிப் சொல்லவில்லையே.......... கரண்ட் பாஸ் ஆய்டுமோ என்று பயமாக இருந்தது அப்புறம் ஐயோ result என்னவாக இருக்கும் அட்மிட் பண்ணி பார்ப்பங்களா? இல்லேன்னா இன்சூரன்ஸ் வராதே........ லீவ் எடுத்தா லாஸ் of pay வருமே என்று ஒவ்வொன்றாய் யோசிப்பதற்குள். முடிந்த விட்டது.

ஹுஸைனம்மா said...

ராஜி - //தூங்கும்போதுகூட உருளும் ஆள் நான்.., என்னை போய் 45நிமிசம்...., //
அப்படின்னா, உருளமுடியாததுதான் பிரச்னையா உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்...

//தூங்கும்போதுகூட உருளும் ஆள் நான்//
அப்படின்னா, முழிச்சிகிட்டிருக்கும்போதும் உருளுவீங்களா? #டவுட்டு!! :-))))))

ஹுஸைனம்மா said...

மைதிக்கா - நன்றிக்கா.

அமுதா - //டெக்னீஷியர்களிடம் செம திட்டு வாங்கி //
அடடே, நம்ம செட்டு!! :-(( :-))

கோமதிக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

தி. தனபாலன் - //முடிவில் எப்படியோ தப்பியாகி விட்டது தானே...?//

எங்கே..? பாதியில் ஓடி வந்ததால், மறுபடியும்ல எடுக்க வேண்டியதாப் போச்சு!! :-)))

இராஜி மேடம் - நன்றி மேடம்.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //முன்னரே எதற்கும் இருக்கட்டும் என்று மன்னிப்பு கேட்டு வைத்துக் கொண்டால் உடனே போய் விடலாம் இல்லை?//

முன்னாடியே மன்னிப்பு கேட்டு வச்சிக்கிறது ஓகே, ஆனா ஏன் சார் இப்படி -//உடனே போய் விடலாம் இல்லை//??!! அவ்வ்வ்வ்.... போறதுக்கு அவ்ளோ சீக்கிரம் மனசு வருமா என்ன?

//எங்கம்மா சொன்னாங்க//
முன்காலத்தில் நிறைய கேள்விபட்டிருக்கேன். ஆனா, இப்ப அப்படி எதுவுமே இல்லை. இறுதி நிலையில் இருப்பவர்கள் சுய நினைவோடு இல்லாதிருப்பதுமொரு காரணம்னு சொல்லலாம்.

ஹுஸைனம்மா said...

பீர் முஹம்மது - அந்த மெஷினுக்குள்ள தனியா.. தன்னந்தனியா இருக்கும்போது வேறென்னங்க ஞாபகம் வரும்? மனிதனுக்கு தனிமைதானே மரணத்தை நினைவுபடுத்தும். சுற்றம்சூழ இருக்கும்போது சந்தோஷமாத்தானே இருக்கத் தோணும். நன்றிங்க.

நிலாமகள் - //'பொட்'டுன்னு போறவங்களை இனி 'நல்ல சாவு'ன்னு//
எனக்கும் இப்பத்தான் இது புரிஞ்சுது.

//துளசி இலைகள் போட்ட நீரை// - ஓ, அப்படியா? கதைகளில்/படங்களில் பால் ஊற்றுவதுதான் படிச்சிருக்கேன்.

நன்றிங்க.

கீத மஞ்சரி - நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //ன் இதனை மனிதன் ஆரம்பத்தில் இருந்தே இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாமே?//

மனிதன் இத்தனை நல்லவனாக இருந்துவிட்டால், மன்னிப்பு கேட்கும் அவசியமே இருக்காதே? :-))

வெங்கட் நாகராஜ் - ரொமப் நன்றி.

அப்பாதுரைஜி - நன்றிங்க. (ரொம்ப சிம்பிளா முடிச்சுட்டீங்க கமெண்டை?) :-)))

ஹுஸைனம்மா said...

ஜோஸஃப் - சில சமயம் அப்படித்தான் செய்றாங்க. கால்வலின்னு போனப்ப எம்.ஆர்.ஐ. எடுக்கச்சொன்ன டாக்டர், அந்த ரிஸல்ட்டைக் கூட பார்க்காமலேயே மருந்து எழுதிக் கொடுத்தார்!! :-(((

ராஜா - நன்றிங்க.

அப்துல்லா - ரெண்டு வாட்டி வாழ்த்து ஏன்? ஓ.. கட்சிகூட்ட எஃபெக்டோ? :-))))) ரொம்ப நன்றிங்க.

ஆமா, தம்பியின் டைரியை ஃபேஸ்புக்கிலயும் காணோமே இப்பல்லாம்?

ஹுஸைனம்மா said...

சுரேஷ் - நன்றீங்க.

முஹம்மதலி அப்துல்காதர் - நன்றிங்க. எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் எக்ஸ்-ரே கதிர்கள் வராது. பாதுகாப்பானது.

ரஜின் - ஸலாம். நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - // அப்பறம் பழக்கமாகி விட்டது..//
என்னாது... பழக்கமாகிடுச்சா..??!! அவ்வ்வ்வ்.. எனக்கு இன்னும் பயம்ந்தான்!!

கோவை2தில்லி - நன்றிப்பா.

ரஞ்சனி மேடம் - பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மேடம்.

//நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்கள்; இதைபோல மிகவும் சீரியஸ் எழுத்தும் நன்றாக வருகிறது உங்களுக்கு.//

எல்லாருமே அம்பியும்-அந்நியனும் கல்ந்த கலவைதானே மேடம்!! :-)))

ஹுஸைனம்மா said...

வல்லிமா - ஆமாம்மா, அந்த சத்தம்தான்.. ரொம்ப கொடூரமா இருக்கும்! ரொம்ப நன்றி மேடம்.

கீதா - நலமா?

//ஏற்பட்ட சப்தத்தில் ரிதம் ட்ரை பண்ணினேன்.//
இதெல்லாம் ரொம்ப ஓவரு.... :-)))

//என்று ஒவ்வொன்றாய் யோசிப்பதற்குள். முடிந்த விட்டது.//
அவ்வளவு சீக்கிரமாவா? இங்கெல்லாம் ஒரு யுகம் போல இருக்கும்...

ரொம்ப நன்றிப்பா...

மாதேவி said...

அனுபவத்தை சிறப்பாக தந்துள்ளீர்கள்.

பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்.

kaleel rahman said...

நானும் ஏதோ ஒரு பதிவுன்னு படிக்க ஆரம்பித்தேன். திக் திக் நிமிடங்கள். இந்தப் பரிசோதனை எதற்க்காக?. இருந்தாலும் நீங்கள் நலமுடன் வாழ துவா செய்கிறேன் சகோ.

ஹேமா said...

ஆகா....எதிலும் ரசனைதான்.பயமும் நகைச்சுவையுமாய்.வாழ்த்துகள் !

Yasmin Riazdheen said...

மாஷா அல்லாஹ் மிக அருமையா தெளிவா விளக்கி இருக்கீங்க.. இது வரை எம். ஆர்.ஐ, எம். ஆர்.ஐ னு கேள்வி பட்டு இருக்கேன்.. இப்போ தான் விலாவரியா படிக்கிறேன்.. ஒரு இரண்டு மூணு மாசம் முன்ன கூட என் தோழியின் பிள்ளை எட்டு மாதம் ப்ரைன்ல இன்பெக்க்ஷன் சொல்லி எம்.ஆர்.ஐ எடுக்க ஊருக்கு போனாங்க.. பச்ச புள்ள.. எப்படி மேனேஜ் பண்ணுவாங்க.. நினைச்சாலே கதி கலங்குது... :((((((((

பட் அவன் நாடிய அனைத்தையும் அனுபவிச்சு தானே ஆகணும்..

அப்பா உங்க விளக்கமும், எண்ண அலைகளும் மரணத்தை நல்லாவே நினைவு படுத்துது... பயமும் வருது..

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிஸ்...



Unknown said...

ஹுஸைனம்மா... ரொம்ப அருமையா இருந்தது உங்களுடைய இந்த எதார்த்தம்.. ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது மனதில் ஏதோ ஒரு பயம்.. ஆமாம்..//மரணத்துக்குப்பின் அடக்கம் செய்வார்களே, அந்தக் குழியில்? கடும் இருட்டாக இருக்குமே? உடல் மரணித்திருந்தாலும், உயிர் – ஆத்மா, ’உயிர்ப்போடு’ இருக்குமே. இப்போ துணைக்கு ஆள் வெளியே நிற்கும்போதே பதறுகிறேனே, அப்போ என்னைமட்டும் தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் – என்னவர் உட்பட- போய்விடுவார்களே, அப்போ என்ன செய்வேன்? நல்லவர்கள் என்றால், அந்தக் குழி விசாலமாய் இருக்குமாம். அதுவே கெட்டவர்கள் என்றால், குழி குறுகிப் போய் உடலை நெருக்குவதில் எலும்புகளே உடைந்துவிடுமாமே? நான் நல்லவளா, கெட்டவளா? செய்த தவறுகள் அத்தனையும் இப்போ நினைவுக்கு வருகிறதே… அய்யோ… துடிக்கும் துடிப்பில் இதயம் வெளியே தெறித்துவிடும் போல இருக்கிறதே!!// மரண பயமே தான்.. ஏனோ தெரியவில்லை.. எனது மாமியாரின் மரணத்தை நேரில் கண்டதிலிருந்து இப்படித் தான் நானும் யோசிக்கிறேன், இன்று இருக்கும் நாம் என்றோ ஒரு நாள் இறைவனிடம் போகத்தான் போகிறோம்.. ஆதலால், முடிந்த அளவுக்கு தன்னால் இயன்ற உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து, இறைவனுக்கு அஞ்சி, அவனது வழியில் செல்வது தான் உத்தமமாக இருக்கும்,,

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா, உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் ரமஜான் வாழ்த்துக்கள்.

Rafik said...

பயங்கர விறு விருப்பு. ஏதோ படம் பாக்கிற மாதிரி. அசால்டா.. இப்படி ஒரு பதிவைப் போடறீங்க. :)

சின்னமா சொன்ன விஷயம் புதிய விஷயம், புதிய கோணல். வெரி குட்.

முதல் பரிசுக்கும் வாழ்த்துக்கள்.. :)

சுசி said...

எனக்கும் வலது தோள் பட்டை வலிக்கு எக்ஸ்ரே கூட எடுக்க சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே எம்.ஆர்.ஐ எடுக்க சொன்னார் அந்த டாக்டர், நான் எடுக்காமல் ஓடி வந்துட்டேன். பின்னர், சித்த வைத்தியம் பார்த்து இப்போ தேவலை.

இப்போது நீங்கள் நகைசுவையோடு விவரித்தாலும், அனுபவிக்கும் போது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.

அது சரி எம்.ஆர்.ஐ எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கவலை ஏற்படுகிறது. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பூரண குணமாக பிராத்திக்கிறேன்.

கவிதா | Kavitha said...

உங்க கைய கட்டி போடலையா... ??