வலைப்பதிவு எழுத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முதற்படியாக, எனது முகமலர் பக்கங்களின் பதிவுகளை இங்கே பதிந்து இற்றைப் படுத்திக் கொள்ள எண்ணியுள்ளேன்.
முழிக்காதீங்க, வேற எங்கயோ வழி மாறிப் போயிட்டோமோன்னு... என் பிளாக்கேதான்...
முகமலர் - முகப்புத்தகம் - அதாங்க, ஃபேஸ்புக்!!
இற்றைகள் - Updates!!
("இற்றைகள்" - வார்த்தை அறிமுகத்திற்கு நன்றி, முத்துலெட்சுமி)
பழைய பதிவுகளிலிருந்து ஆரம்பிக்கிறேன் - முதலில் 2012!! அதனால, பழைய செய்திகளாத் தெரியும். ஆனாலும், இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாகத்தான் இருக்கும். நானும் மாறவில்லை, நாடும் மாறவில்லை!!
வலைப்பதிவைப் போலவே, எல்லா சப்ஜெக்டும் கலந்துதான் எழுதி(கிட்டி)ருக்கேன். என்ன, அறிவியல்தான் மிஸ்ஸிங். எதுவுமே எழுதலை. அதுக்குப் பதிலா, கொஞ்சம் அரசியல் எழுதிருக்கேன். அதுவும், தேர்தல் சமயத்தில் நான் எழுதியதால் - தமிழில் எழுதியதால்- தமிழ்நாட்டில் நல்ல பலன் இருந்தது.
அடுத்த தேர்தலில், இந்தியா முழுதும் விழிப்புணர்வு ஏற்பட, ஹிந்தியிலும் எழுதலாமான்னு யோசிக்கிறேன். ஹிந்தி தெரியாதேன்னு கவலைப்பட்டபோதுதான், அரசே ஹிந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கியது. வாவ்!! அடுத்த வாட்டி பாருங்க... ஹிந்தி, தமிழ் இரண்டிலும் எழுதி தீவிர பிரச்சாரம்தான்... (நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்)
வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க.
தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

|
Tweet | |||
12 comments:
thanks for the tips n tricks :)
நம்ம வலைப்பூக்களும் கொஞ்சம் ஒட்டடை அடிச்சுக் கிடப்பதால் இது ஒரு நல்வழி.... அப்படியே ஃபாலோவர்ஸையும் ஜாஸ்தி செய்துக்கலாம்.... எப்படிக்கா இப்படில்லாம் :) :) :)
என்னவோ போங்க்க்கா :) :) :)
படிக்க தவறிய உங்கள் எழுத்துக்களை படிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள் (மைண்ட் வாய்ஸ் படிக்காம விட மாட்டாங்கள் போல இருக்குதே,,,,விட்ட பிரீண்ட் செய்து வீட்டிற்கே வந்து நாம் படிச்ச பின்னால்தான் போவாங்க போலிருக்கே,... எல்லாம் வல்ல ஆண்டவந்தான் நம்மை காப்த்தனும் ஹும்)
நாம எப்பவும் சேம் ப்ளட் ஹுசைனம்மா. நானும் இன்னைக்குத்தான் பதிவு போட்டேன். ஹைஃபை :)
எல்லாம் மேலோட்டமா ஒரு தடவை படிச்சாச்சு. இனித்தான் ஒவ்வொன்றாக பிரிச்சு மேயப் போறேன் ஹுஸைனம்மா.
நான் முடிக்கிறதுக்குள்ள அடுத்த செட் போட்டுராதீங்க. :-)
சேமித்து வைக்க நல்லொதொரு ஐடியா தான் ...
சேமித்து வைக்க நல்லொதொரு ஐடியா தான் ...
கலக்கல் எண்ட்ரி ஹுசைனம்மா :)
இந்த வாரம் ரொம்ப ராசியான வாரமோ.. நிறைய பேர் பதிவுலகம் பக்கம் திரும்பி வந்திருக்கோம்
முகமலர் இற்றைகள் தொடர வாழ்த்துக்கள்.
இற்றைகள் நன்றாக இருக்கிறது.
பதிவுலகம் உங்களை தேடியது ஹுஸைனம்மா ,இனி இனி அடிக்கடி பார்க்கலாம் தானே?
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அமீரகத்தில் இருந்தும் கூட உங்கள் தளத்தின் அறிமுகம் எனக்கு இல்லை.. (தளத்துக்கான விளம்பரம் குறைவா??? இல்ல நமக்கு அறிவு குறைவா??? கண்டிப்பா நமக்கா தான் இருக்கும், படிக்கும் போது தேர்வு நேரத்தில் எந்த தேர்வு என்பதை பற்றி எப்பவும் கவலைபட்டதில்லை,எனக்கு எதிரே யார் உட்கார போறானோ?, எந்த ஆசிரியர் உள்ள வரப்போறாறோ? இது தான் எனது கவலை)...
சமீபத்தில் தான் சில பதிவுகளை படித்து பார்த்தேன்.. மிகவும் அருமையாகவும், சிறப்பாகவும் இருந்தது.. குறிப்பாக நகைச்சுவையாகவும் இருந்தது.. தங்களின் எழுத்து இன்னும் மேன்மையுற பிராத்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்...
WELCOME BACK TO BLOG...... :)
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அமீரகத்தில் இருந்தும் கூட உங்கள் தளத்தின் அறிமுகம் எனக்கு இல்லை.. (தளத்துக்கான விளம்பரம் குறைவா??? இல்ல நமக்கு அறிவு குறைவா??? கண்டிப்பா நமக்கா தான் இருக்கும், படிக்கும் போது தேர்வு நேரத்தில் எந்த தேர்வு என்பதை பற்றி எப்பவும் கவலைபட்டதில்லை, எனக்கு எதிரே யார் உட்கார போறானோ, எந்த ஆசிரியர் உள்ள வரப்போறாறோ இது தான் எனது கவலை)...

Post a Comment