Pages

முகமலர் இற்றைகள் - 2
எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும்.  ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம்.  நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க.

தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். மும்பை பத்திரிகையாளர், மற்றும் டெல்லி சம்பவத்தில் பெண்கள் இருவரும் இரவு நேரத்தில் வெளியே சென்றதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவர், செவிலியர், காவலர் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் பணி செய்ய வேண்டியிருக்கும். இனி அவர்கள் இரவுப்பணி செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டுமா? எனில், முதலில் யாருக்கும் இரவு நேரத்தில் பிரசவ வலி வரக்கூடாது என்று சட்டம் இயற்றுவதே சாலச் சிறந்தது.
— feeling exhausted.
ஆதரிக்கிறேன்
மறுக்கிறேன்
பிடிச்சிருக்கு
நல்லாருக்கு
அடப்பாவிகளா!
வாவ்! சூப்பர்!
பாராட்டுகள்!
கண்டனங்கள
அதானே!
எதிர்க்கிறேன்
பார்த்துட்டேன்
அய்யய்யோ!
படிச்சுட்டேன்
யேன்.. யேன்... இப்படி?
கலக்கல்
கொடுமை!
அப்படியா?
சரியாச் சொன்னீங்க

LIKE!!
ஒரு வார்த்தை, பல அர்த்தங்கள்!!
— feeling amused.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

பிள்ளைகளுக்காக சமைத்தே ஆகவேண்டியிருப்பதால், அப்பாக்கும் வயிறு நனைகிறது.
feeling accomplished.மனிதன் நடப்பான்; மிருகங்கள் நடக்கும்; பறவைகள் நடக்கவும், பறக்கவும் செய்யும்; ஆனால், மீன்கள் நீந்த மட்டுமே செய்யும்.

ஹலோ, இருங்க.. இருங்க.. மீனும் நடக்குமாம்!!

http://www.youtube.com/watch?v=HXEfud1c-do


ஹோட்டல்களில் ஃபுல்மீல்ஐ வளைச்சு அடிச்சவர்கள்கூட, அதன்பின்பு ஒரு பெரீய்ய்ய டம்ளரில் ஜூஸ் குடிப்பதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இதுக்குன்னே தனியா வயிறு செஞ்சு வாங்கிட்டு வந்திருப்பாங்களோ?

#மினிமீல்ஸ்_ஏக்கங்கள்!!
feeling என்னாத்தச் சொல்ல.

முருங்கைக்காயில் சாம்பார் செய்யலாம்; பொறியல் செய்யலாம்; அவியல் செய்யலாம்; கூட்டு செய்யலாம்; குழம்பு செய்யலா; ஏன், சூப் கூட செய்வாங்க! ஆனா, ”முருங்கைக்காய் புலாவ்” கேள்விப்பட்டதுண்டா?

இதோ கீழே முருங்கைக்காய் புலாவ்!! ஆனா, அதுல ஒரு துண்டு முருங்கைக்காய்கூட இருக்காது என்பதால் சாப்பிடவும் ஈஸி!
Hussain Amma's photo.
 

September 7, 2013
“உங்க பிள்ளைக்குத்தானே செய்றீங்க” -கல்யாணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டாரால் அதிகம் சொல்லப்படும் இவ்வாக்கியம், திருமணத்திற்குப் பிறகு கணவனை நோக்கி மனைவியால் அதிகம் பிரயோகிக்கப்படும்! #பூமராங்
— feeling தத்துவமிங்கிங்!

September 7, 2013

இன்றைய கடைசி!! கோடை விடுமுறைக்குப் பின், நாளை முதல் பள்ளிகள் திறக்கின்றன! வாவ்.... என்னா சந்தோஷமா இருக்கு!! ஆனா, காலையில் ரொம்பநேரம் (மதியம்வரை) தூங்க முடியாதேன்னு ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும், “விடுதலை... விடுதலை...”!!!
— feeling excited.
முதல் நாள் தனியா இருக்கக் கஷ்டமா இருக்கு. எப்படா பசங்க வீட்டுக்கு வருவாங்கன்னு இருக்கு. 

நம்புங்கப்பா, ஹார்லிக்ஸ் அம்மா, ஹமாம் அம்மா மாதிரியெல்லாம் இல்லாட்டியும், நானும் கொஞ்சம் நல்ல அம்மாதான்!!
feeling bored.
”வலிச்சுப் பெத்திருந்தாத்தானே தெரியும்” - சிஸேரியன் வழி பிரசித்தவர்களை நோக்கி, அவர்களின் இரட்டை வலியை அறியா அலட்சியத்துடன், பிரயோகிக்கப்படும் வாக்கியம் இது.

இயற்கையான சுகப்பிரசவத்துக்கான வலியையும் மணிக்கணக்கில் அனுபவித்து, அதில் வழியில்லையென்றான கட்டத்திற்குப்பின், அனஸ்தீஷியாவின் ஆபத்தைத் தாண்டி, ஆபரேஷனும் செய்து, அந்தப் புண்ணின் வேதனையையும் அனுபவித்து, சமயத்தில் அதில் நோய்த்தொற்றும் ஆகி, அதன் விளைவுகள் வாழ்நாள்வரை உடன் வரும் சாத்தியங்களும் உண்டு. ஆக, சுகப்பிரசவம் மறுபிறப்பென்றால், அதையும் கடந்த சிஸேரியன் மூன்றாம் பிறப்பென்றே சொல்லலாம்.

நிற்க, ‘முன்பே தேதி குறித்து’ சிஸேரியன் செய்துகொள்கிறவர்களும் உண்டு - ஆனால், அதுவும் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, குழந்தையின் வளர்ச்சி போன்ற சிலபல கட்டாயத்தின் பேரிலே என்பதால் அவர்களும் பாவப்பட்டவர்களே.

நல்லநேரம்-காலம் பார்த்து சிஸேரியன் செய்யும் மிகச்சொற்பமானவர்கள் குறித்தோ, வலிந்து சிஸேரியன் செய்யும் சொற்ப மருத்துவர்களைக் குறித்தோ இங்கு பேசவில்லை.

Post Comment

12 comments:

அப்பாதுரை said...

முகமலர்னா facebookஆ? அந்தப் பக்கமே போறாதில்லை. நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்?

அப்பாதுரை said...

பிள்ளைகளுக்காக சமைக்க வேண்டியிருப்பதால் அப்பாவுக்கும்...
பாவங்க அப்பா. வேலைக்குப் போய்ட்டு வந்து சமையல் வேறே செய்யணுமா?

அப்பாதுரை said...

முருங்கைக்காயில் சாம்பார் செய்யலாம்.. குழம்பு செய்யலாம்..

வாட் இஸ் தி டிப்பரன்சு?

ஸ்ரீராம். said...

சிலவற்றை அங்கு படித்த நினைவு இருக்கிறது. 'லைக்'கும் பண்ணியிருப்பேன்!

, ஃபுல் மீல்சுக்கு அப்புறமும் ஜூஸ் குடிக்கும் இற்றை, முருங்கை புலாவ், (சாப்பாட்டு ராமனாசே) நடக்கும் மீன், போன்றவை சுவாரஸ்யங்கள்!

கோமதி அரசு said...

முகமலர் இற்றைகள் அருமை.


பிள்ளைகளுக்காக சமைத்தே ஆகவேண்டியிருப்பதால், அப்பாக்கும் வயிறு நனைகிறது. //
மிக நன்றாக இருக்கிறது.

கீத மஞ்சரி said...

கற்றை கற்றையாய் ரசிக்க வைக்கும் இற்றைகள். லைக் பட்டனைத் தேடித் தேடி ஓய்ந்தேன். அருமையான தொகுப்பு ஹூஸைனம்மா.

மனோ சாமிநாதன் said...

முக மலர் இற்றைகள் அனைத்தும் ரசித்தேன்! சிசேரியன் பற்றிய ஆராய்ச்சி அருமை!

மனோ சாமிநாதன் said...

உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் ஹுஸைனம்மா!

saamaaniyan saam said...

சில நேரங்களில் பல பக்கபதிவுகளைவிட சில வரி பின்னூட்டங்கள் மிக சுவாரஸ்யமாக அமைந்துவிடுகின்றன ! ரசிக்க வைக்கும் பதிவுகள் !

முத்துச்சிதறல் தளத்திலிருந்து வருகிறேன் அம்மா ! இனி தங்களின் வலைப்பூவினை தொடருவேன் !

எனது புதிய பதிவு : http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

தங்களுக்கு நேரமிருப்பின் படித்திவிட்டு கருத்திடுங்கள்.நன்றி

சாமானியன்
saamaaniyan.blogspot.fr

ஹுஸைனம்மா said...

@அப்பாத்துரைஜி: ஆமா, வெட்டியா இருக்கவுங்க ஃபேஸ் புக் போறாங்க. வெட்டி முறிச்சுகிட்டு இருக்கவுங்க, ப்ளாக் எழுதுறாங்க. :-)

ஹுஸைனம்மா said...

//பாவங்க அப்பா. வேலைக்குப் போய்ட்டு வந்து சமையல் வேறே செய்யணுமா? //

ம்க்கும்.. செஞ்சுட்டாலும்... ஆனா, அம்மாக்கள்லாம் ”வேலைக்குப் போய்ட்டு வந்து சமையல் வேறே செய்யணுமா?” கேட்க மாட்டாங்க!!

//முருங்கைக்காயில் சாம்பார் செய்யலாம்.. குழம்பு செய்யலாம்//

சாம்பார் பொடியும், புளியும் சேர்த்தால் - சாம்பார்.
குருமா மசாலாவும், தேங்காயும் சேத்தா - குழம்பு. :-)

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றி சார்.

கோமதிக்கா - ஆஹா.. சமைக்கிறது பற்றி நம்ம ரெண்டு பேருக்கும் ஒரெ மாதிரி இண்ட்ரஸ்ட்!!

கீதமஞ்சரி - ஆமாம், பழக்க தோஷத்தில் நானும் லைக் பட்டனைத் தேடுவதுண்டு!!

மனோ அக்கா - நன்றி அக்கா.

சாமானியன் சார் - நன்றி கருத்துக்கு. உங்களின் சில பதிவுகலும் படித்தேன். சுவாரசியம்.