மதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.
அவரிடம் நபியவர்கள் வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்!” என்றார்.
“என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!!” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று வினா எழுப்பினார்கள்.
www.dailymail.co.uk
ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child"!! இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது. பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.
மூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன் --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை?
ஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்!!
www.lifeskills4kids.com.au
|
|
Tweet | |||


