Pages

பிள்ளைக்குப் பரிசு
 
 
மதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.

அவரிடம் நபியவர்கள்  வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்!” என்றார்.

 “என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!!” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று வினா எழுப்பினார்கள்.


www.dailymail.co.uk

ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது.  அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child"!! இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது.  பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.

மூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன்   --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை?

ஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்!!
  
 www.lifeskills4kids.com.au
   
  

Post Comment

36 comments:

நாஞ்சில் பிரதாப் said...

கடைசியா பொறந்தாலே பெரிய பிரச்சனைங்க தாங்க... சின்னப்பையன் சின்னப்பையன்னு சொல்லி சொல்லியே இம்சைபடுத்துவாங்க... எல்லாத்துலயுமே...கடைசி ஆப்ஷன் நாமதான் இருப்போம்... ம்ஹும் எம்பிரச்சனை எனக்கு...:))

LK said...

உண்மைதான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்பை ஒரேமாதிரிகொடுப்பதில் கூட
கொஞ்சம் முயற்சித்தால் முடியும்.
இருவருக்குமான ப்ரச்சனைகளில் நடுநிலையாக இருக்க முயல்வது ரொம்ப ரொம்ப கடினமாக இருக்கும். இருவரும் ஹர்ட் ஆகக்கூடாது..

DrPKandaswamyPhD said...

நல்ல நீதி.

அரபுத்தமிழன் said...

மக்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாதென்று பாரதத்தாயிடம் சொல்ற மாதிரியான
நல்ல பதிவு இது. புத்திமதின்னா அது இப்படித்தான் இருக்க வேணும் (பொம்பள) :)

ஸாதிகா said...

ஆஹா...அருமையான ஹதீஸ் விளக்கத்துடன் நல்லதொறு பகிர்வை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.

அன்பை காட்ட பாரபட்சம் காட்ட கூடாது பெற்றோர்.

நபிகள் சொல்வது உண்மைதான்.

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.

அன்பை காட்ட பாரபட்சம் காட்ட கூடாது பெற்றோர்.

நபிகள் சொல்வது உண்மைதான்.

kavisiva said...

எனக்குத் தெரிந்த வரை பெற்றோருக்கு தங்கள் எல்லா குழந்தைகளின் மீது இருக்கும் பாசம் ஒரே அளவுதான். அது வெளிப்படுத்தப்படும் விதத்தில்தான் பிரச்சினை ஆகி விடுகிறது. சவலைக் குழந்தையிடம் காண்பிக்கப்படும் கூடுதல் அக்கறையை மற்ற குழந்தைகளுக்கும் புரியச் செய்து விட்டால் பொறாமை அல்லது நாம் புறக்கணிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் வராது.

ஹேமா said...

நல்ல பதிவு.இப்படியான பிள்ளைகளுக்கூடான பேதங்கள் பிள்ளைகளின் மனநிலையையே பாதிக்கும்.பெற்றவர்கள் கூடப்பிறந்தவர்கள்மீது நிரந்தர வெறுப்புக்கூட வரலாம் !

Vijiskitchen said...

நல்ல பகிர்வு.
அன்பை காட்ட பாரபட்சம் காட்ட கூடாது பெற்றோர்.

thanks gomathy I did copied your msg.My Opinion also the same.

முகுந்த் அம்மா said...

நிறைய வீட்டில இந்த மாதிரி தான் செய்யிறாங்க.
correct ஆ சொல்லி இருக்கீங்க.

நபிகள் சொன்ன விளக்கத்துடன் சொன்னது இன்னும் அருமை.

ராமலக்ஷ்மி said...

சொன்னது போல இது மிகப் பெரிய சவால்தான். அதில் வெற்றி பெறுபவரும் உள்ளனரே. நல்ல பகிர்வு ஹுஸைனம்மா!

யாதவன் said...

நல்ல படைப்பு தொடருங்கள்
--

மாதேவி said...

பிள்ளைகளைச் சமனாக நடத்த வேண்டும்.
அதுவே அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும் சந்தோசமாக வாழவும் கைகொடுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, நல்ல எடுத்துக் காட்டுடன் நீதியைச் சொல்லி இருக்கிறீர்கள். சில சமயம் இது போல நடந்துவிடுகிறது. பெற்றோர்கள் சம்நிலையோடு பிள்ளைகளைப் பேணவேண்டும். நல்ல பகிர்வுக்கு நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பகிர்வு ஹூசைனம்மா. நம்மூர்ல கடக்குட்டிக்குதான் செல்லம் அதிகமாயிருக்கும். மூத்த பிள்ளைக்கு பொறுப்பு அதிகமாயிருக்கும்....

அமைதிச்சாரல் said...

ரொம்பவும் விலைமதிப்பில்லாத பரிசுதான் இது. தான் பாரபட்சமில்லாமல் நடத்தப்படுவதையே எல்லாக்குழந்தைகளும் விரும்பும்..

நாடோடி said...

உண்மைதான், குழ‌ந்தைக‌ளிட‌ம் இவ்வாறு பேத‌ம் காட்டும் போது அவ‌ர்க‌ளின் ம‌ன‌நிலை க‌ண்டிப்பாக‌ ப‌திக்க‌ப்ப‌டும்..

நானானி said...

// பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர்.//

நல்லாச் சொன்னீங்க!

நட்புடன் ஜமால் said...

Truely true ...

nice quoting from Hadis ...

ஸ்ரீராம். said...

உண்மைதான். ஆனால் அப்படிப் பட்ட பெற்றோர் கம்மியாகத்தான் இருப்பார்கள்...

vanathy said...

எங்க வீட்டில் எந்த வித பாகுபாடும் இருந்ததில்லை. நான் எப்போதும் என் பிள்ளைகளை சமமாகவே கருதுவேன். இருவருக்கும் ஒரே விதமான சலுகைகள். இதை எல்லோரும் பின்பற்றினால் குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

அருமை ஹுசைனம்மா.

புதுகைத் தென்றல் said...

கடைசியா பொறந்தாலே பெரிய பிரச்சனைங்க தாங்க... சின்னப்பையன் சின்னப்பையன்னு சொல்லி சொல்லியே இம்சைபடுத்துவாங்க... //

நாஞ்சிலாரே மூத்தபுள்ளையா இருந்தா மட்டும் என்ன எங்க கஷ்டம் எங்களுக்கு?? நீதானே பெரியவ பொறுத்துப்போ அப்படின்னு சொல்வாங்க. மூத்தது என்பதால பொறுப்பும் ரொம்ப அதிகம். எங்க கஷ்டம் எங்களுக்கு. :(

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

எளிய நடையில் அழகாக சொல்ல வந்த விஷயத்தை short & sweet ஆக சொல்வதற்கு ஹுஸைனம்மாவைத் தவிர ஆளில்லை என்பதைப் போல் எழுதுகிறீர்கள். அழகாக ஹதீஸை விளக்கிய சகோதரிக்கு ஒரு சல்யூட்

எம் அப்துல் காதர் said...

குழந்தைகளுக்கு எப்படி பகிர்ந்து கொடுக்கணும்னு, இந்த 'குழந்தைக்கு' புரிய வைத்தமைக்கு நன்றி!

GEETHA ACHAL said...

உண்மை தான் ஹுஸைனம்மா...

ஹுஸைனம்மா said...

பிரதாப் - கடைக்குட்டின்னா ஒருவித அலட்சியம் இருப்பதுபோல, மூத்தவங்களுக்குத்தான் நிறையப் பொறுப்புகள்!! எங்க வீட்டில நான் மூத்த பொண்ணு, என் ரங்ஸ் கடைக்குட்டி. ஸோ, ரெண்டும் அனுபவிக்கிறோம்!! :-))

எல்.கே - வாங்க.

முத்துலெட்சுமிக்கா - ஆமா, ரெண்டு பேரு சண்டையிலும் மத்தியஸ்தம் பண்றதுக்குள்ள பெரும்பாடுதான்...

டாக்டர் சார் - நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - கககபோ!!

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

கோமதியக்கா - நன்றி.

கவிசிவா - வாங்க. ஆமாம், பிள்ளைகளுக்கிடையில் சரியான புரிதலைக் கொண்டுவ்ரவேண்டும். இல்லையென்றால், ஒருவரே விட்டுக்கொடுத்துக் கொண்டே இருப்பது மாதிரி ஆகிவிடும்!! நன்றி.

ஹுஸைனம்மா said...

ஹேமா - சில பேர் இப்பவும் அப்பாகிட்ட அப்படி வெறுப்போட இருக்கிறதைப் பாத்திருக்கேன்!!

விஜி - வாங்க; நன்றி.

முகுந்த் அம்மா - வாங்க; நன்றி.

ராமல்க்‌ஷ்மிக்கா - வெற்றியாளர்கள் நிறைய!!

யாதவன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

மாதேவி - வாங்க. நன்றி கருத்துக்கு!

வல்லிம்மா - நன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும்.

ஸ்டார்ஜன் - ஆமாங்க. முத்த பிள்ளை தலையில் பாரத்தைப் போட்டுடுவாங்க!!

அமைதிசாரல் - ஆமாம்ப்பா, சரியாச் சொன்னீங்க. அதுதான் விலைமதிப்பில்லாத பரிசு!!

ஹுஸைனம்மா said...

நாடோடி - பாதிக்கப்படும் எல்லாரும் வளர்ந்தபிறகு அதை overcome பண்ணிவர முடிவதில்லை. அதனால் கவனம் தேவை!!

நானானி மேடம் - நன்றிங்க!!

ஜமால் - நன்றி.

ஸ்ரீராம் - குறைவுதான், ஆனால் தாக்கம் அதிகமாக இருக்குமே!! நன்றி!

ஹுஸைனம்மா said...

வானதி - ஆமாம் வனதி, இப்படீ எல்லோரும் இருக்க வேண்டும்.

புதுகைத் தென்றல் - வாங்கப்பா, நன்றி. நாஞ்சிலார்க்குச் சரியாச் சொன்னீங்க!!

அபுநிஹான் - நன்றி. ரொம்ம்ம்பப் புகழ்றீங்களே!! :-))

அப்துல்காதர் - அடேயப்பா, குழந்தையாமே!!

கீதா ஆச்சல் - வாங்கப்பா, நன்றி.

அப்பாவி தங்கமணி said...

நல்ல பகிர்வு

//மூத்தபுள்ளையா இருந்தா மட்டும் என்ன எங்க கஷ்டம் எங்களுக்கு?? நீதானே பெரியவ பொறுத்துப்போ அப்படின்னு சொல்வாங்க. மூத்தது என்பதால பொறுப்பும் ரொம்ப அதிகம். எங்க கஷ்டம் எங்களுக்கு. :(//

I can't agree more... super

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல இடுகை ஹூசைனம்மா.. எங்களுக்குள்ள வந்த சண்டைக்கு அம்மா தீர்வு சொன்னப்ப எல்லாம், உனக்கு அவன்/அவ மேல தான் பாசம்ன்னு ரெண்டுபேருமே அம்மா கூட சண்டை போட்டது நினைவுக்கு வருது.. :))