Pages

அப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா?!!
 கமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்

இங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும்  எந்திரன் படம் பார்த்தோம்!!

ஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு  நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே? முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல!! (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்!!)

அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் (!!) போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..


சிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது!! மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம்  கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...

சரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு  முழுசும்கூட பத்தாது!! எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன?

ஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம்!! ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது!!

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...

இந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல!! இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!! இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ?! (பத்த வெச்சுட்டியே பரட்டை... )

4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ? எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது.  ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ? அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.


சன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும்  ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை,  வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம்!!  ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன!!

மொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை!!
 
 

Post Comment

39 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//சிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது!! //

ஹஹஹ..... மத்தவங்களாவது பரவால்ல ஷக்திமான் ரேன்சுக்கு ஆக்கிட்டுங்களே... இதைவிட கலாய்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்...:))

நாஞ்சில் பிரதாப் said...

//அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ//

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு ...அத்தேதான்.... உதாரணத்துக்கு இப்போ என்னை எடுத்துக்கோங்களேன்:)))

ஆக நீங்களும் எந்திரன் படம் பார்த்தாச்சுன்னு சொல்றீங்க...ஒரு பெரிய கடமையை முடிச்சுட்டிங்க போல...

☀நான் ஆதவன்☀ said...

:( சன்டிவி செய்வது ஆபாசம்.

படத்துல லாஜிக்கா வேணுமா? என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு :)

இப்படிக்கு
சார்ஜா கைப்புள்ளைகள்

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா.....என் கனவுகளை எல்லாம் கலச்சுட்டீங்களே:)
ரொம்ப நல்லா இருக்கும்னு எதிர்பார்த்தேன். சரி. காசை வீணாக்காம இருக்கேன்:)

முகுந்த் அம்மா said...

எந்திரன் பார்த்து பட உலகுக்கான உங்க கடமையை ஆற்றிட்டீங்க போல. நெத்தியடி விமர்சனம் வேற சூப்பெர்.

//அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் (!!) போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; //

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஒவரா தெரியல.

ஹுஸைனம்மா said...

வல்லிம்மா, வழக்கம்போல ஒரு தமிழ்ப்படம் எப்படிப் பார்ப்போமோ, அதேபோல லாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமப் பார்த்து சிரிக்கலாம்!! தாராளமாப் பாருங்க!!

அப்துல்மாலிக் said...

//நாஞ்சில் பிரதாப் said...

ஆக நீங்களும் எந்திரன் படம் பார்த்தாச்சுன்னு சொல்றீங்க...ஒரு பெரிய கடமையை முடிச்சுட்டிங்க போல..//

இது இதுதான் சன் டீவீ குழுமத்தின் வியாபார நுணுக்கம், இங்கேதான் அவன் ஜெயிக்கிறான்

vanathy said...

நல்ல விமர்சனம். நீங்கள் சொல்வது சரிதான். கமல் ரேஞ்சே வேற. அவரின் ரசிகர்களும் பல நல்ல விஷயங்களில் ஈடுபடுறாங்க. இப்படி பால், மோர், தயிரை ஊத்தி வீணடிக்காமல் கஷ்டப்படுகிற ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். இதைப்பற்றி யாராவது யோசிக்கிறாங்களா?

தமிழ் உதயம் said...

சன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். //


நாம் தான் விபரமாக இருக்க வேண்டும்.

அம்பிகா said...

\\இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!!\\ சொல்ல மாட்டார். சன்டிவி குழுமத்தைப் போல அவரும் ஒரு தந்திரமான வியாபாரி அவ்வளவே. நல்ல விமர்சனம் ஹூஸைனம்மா.

நட்புடன் ஜமால் said...

அட நீங்க நம்ம ஜாதியா ...

ஹுஸைனம்மா said...

//அப்துல்மாலிக் said...
இது இதுதான் சன் டீவீ குழுமத்தின் வியாபார நுணுக்கம், இங்கேதான் அவன் ஜெயிக்கிறான்//

எங்க வீட்டில சன் டி.வி. etc. கிடையாது!! ஸோ, அவங்க தந்திரம் எங்ககிட்ட பலிக்கலை!! ஆனா, பானஸோனிக் டி.வி. இருக்கு!! ;-)

ப்ரியமுடன் வசந்த் said...

//இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...//

ம்ம் ஷங்கரோட சமூக அக்கறைகள் சில இடங்களில் தலை காட்டுதே ( பிரசவம்)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும் எந்திரன் படம் பார்த்தோம்!!//

எனக்கெல்லாம் அப்பிடி பாத்திருந்தா ரஜினி படம் பாத்தா மாதிரியே இருந்திருக்காது :)

//அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... //

ம்ம்ம்.. அதையும் வித்து காசாக்கிருவாங்க.. பீப்ளி லைவ் பாருங்க முடிஞ்சா..

தலைப்பு சூப்பர்!

//4000 லிட்டர் பாலாபிஷேகம்//

:((

சைவகொத்துப்பரோட்டா said...

பார்த்தாச்சா!! ரைட்டு.

Jayadeva said...

நாடு நிலையான விமர்சனம், சூப்பர்!

நாடோடி said...

ஆஹா.. நீங்க‌ளும் ப‌ட‌ம் பார்த்தாச்சா?.. ந‌ல்ல‌து.

அமைதிச்சாரல் said...

க்ளைமாக்சில் கொஞ்சம் கத்திரி வெச்சிருந்தா இன்னும் விறுவிறுப்பா இருந்திருக்கும்.. ஏராளமான க்ராபிக்ஸ் கொஞ்சம் தொய்வைத்தருது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொசுவை எல்லாம் ஒழிக்கவே முடியாது ஹுசைனம்மா.. :)

மத்தபடங்களுக்கு கொடுக்கும் அதேவிலையில் நாங்களும் பாத்தம்..

\\இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...// உண்மையோ உண்மை..

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் கவலையே படாதீங்க.. அவரே ஒரு தொண்டர் தான் இப்ப.. மாட்டிக்கிட்ட தொண்டர்.. ;)

\\நமது தேவை, வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம்!! ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன!!//

எப்படிங்க இப்படில்ல்லாம்.. :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நீங்க சொல்றது சரிதான். ஆனா என்ன செய்ய.. அப்பாவியா இருக்கிற வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது.

நல்ல விமர்சனம்.

க.பாலாசி said...

//நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்!!//

ஏங்க.... அவங்க மறந்தாலும் நீங்க விடமாட்டீங்க போலருக்கே...

எம்.எம்.அப்துல்லா said...

:)

VIRALGAL said...

Endiran is the LAST NAIL on the Coffin. Once for all Rajini and his Fans ambition of coming to Politics has ended.

Bad Reviews from all the sides. I didn't like this movie and moreover saw that YOUTUBE video in which it is clearly shown how they picturised Stunt Scenes. Stunts are done by great ALEX MARTIN wearing Rajini's face mask. Link given below :

http://www.paginadeinicio.com.mx/youtube/viewvideo.php?id=zi0sfRQ9Bx0

So, Rajini has not done anything in this movie. Then why this useless hype by his fans?

Jaleela Kamal said...

ம்ம்ம்ம்ம்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சூப்பரா கலக்கிட்டீங்க ஹுஸைனம்மா..:))

karthik said...

//அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ//

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு ...அத்தேதான்.... உதாரணத்துக்கு இப்போ என்னை எடுத்துக்கோங்களேன்:)))
கொஞ்சம் இதப் பாருங்க கண்ணா -http://www.youtube.com/watch?v=roU0oalmLwE

R.Gopi said...

//இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் //

**********

ஹுஸைனம்மா....

நாஞ்சில் பிரதாப் இருக்கறத பார்த்துமா இந்த வார்த்தைய சொன்னீங்க... என்னமோ போங்க...

பதிவு ஓகே... படமும் டபுள் ஓகே... ஆனா, இந்த ரெண்டு வரிகள் மட்டும் “ம்ம்மே”..........

ரெம்ப ஓவர்..... இவ்ளோ அப்பாவியா நீங்க மேடம்!!!

R.Gopi said...

//vanathy said...
நல்ல விமர்சனம். நீங்கள் சொல்வது சரிதான். கமல் ரேஞ்சே வேற. அவரின் ரசிகர்களும் பல நல்ல விஷயங்களில் ஈடுபடுறாங்க//

*********

வானதி....

இந்த ரேஞ்சே வேற... பல நல்ல விஷயங்களில் ஈடுபடறாங்க... இதெல்லாம் கொஞ்சம் இல்லைங்க.. ரொம்ப ஓவர்... ஒருத்தர் விடாம எல்லாருமா காமெடி பண்ணுவீங்க.. இல்லை, அப்பாவியா இருப்பீங்க....

R.Gopi said...

//அம்பிகா said...
\\இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!!\\ சொல்ல மாட்டார். சன்டிவி குழுமத்தைப் போல அவரும் ஒரு தந்திரமான வியாபாரி அவ்வளவே.//

******

ஆஹா.... மன்மத அம்பு பட ரிலீஸ்க்காக வெயிட்டிங்.... அதுவும் அவிய்ங்க தயாரிச்சது தானே...

Geetha6 said...

நிதர்சனம் சுடுகிறது!!
correct.

mano said...

யோவ் எந்திரனை பார்த்துட்டு இருந்த என்னை என் மலையாளி நண்பன் பாதியிலேயே இழுத்துட்டு வந்த வயித்தெரிச்சல்ல இருக்கேன்!!! ஹய், இப்பதானே புரியுது அது ஏன்னு....

ஹுஸைனம்மா said...

பிரதாப் - ஆமா, பதிவுலகக் கடமை என்று ஒன்று இருக்கிறதே, அதிலிருந்து வழுவலாமா? அதான் பாத்துட்டேன்!!

ஆதவன் - வாங்க; அதானே!! ஆமா லாஜிக்னா என்னது? மேஜிக் மாதிரி எதுவுமா? :-)))

வல்லிம்மா - பாத்துட்டீங்களா இல்லியா?

முகுந்த் அம்மா - படத்தைவிடவா என் பதிவு ஓவர்? ;-))

ஹுஸைனம்மா said...

அப்துல் மாலிக் - வாங்க; அமீரகத்துல அவங்க அதிகாரமெல்லாம் செல்லாது!!

வானதி - ஆமா, உணவைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்தால், எத்தனை பேர் வாழ்த்தியிருப்பார்கள்?

தமிழ் உதயம் - ஆமாம், வஞ்சக உலகில் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.

அம்பிகா - ஆமாம், எளிமையானவர் என்ற வேஷம் போடும் வியாபாரி!!

ஹுஸைனம்மா said...

ஜமால் - நீங்க எந்த ஜாதின்னு சொன்னாத்தானே தெரியும்? ;-))

வசந்த் - ஆமா, ஷங்கரின் சமூக அக்கறை தெரிகிறது. அதேபோல, ரோபோவை வீழ்த்த ஆஃப்டர் ஆல் காதலை எடுத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

எல் போர்ட் - தலைப்பு தற்செயலாய் எழுதினது, ‘டபுள் மீனிங்’கா ஆகிடுச்சு!! ;-))))

சைவக்கொத்ஸ் - நன்றி!

ஹுஸைனம்மா said...

ஜயதேவா - நன்றி!

நாடோடி - நன்றி!

அமைதிசாரல் - ஆமா, கிளைமாக்ஸ் பயங்கர இழுவை!!

முத்துலெட்சுமி அக்கா - //எப்படிங்க இப்படில்ல்லாம்..//
ஹி..ஹி.. தானா வருது.. நன்றிக்கா!

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - யாரை அப்பாவிங்கிறீங்க - ரசிகர்களையா?!! அறியாமைன்னு வேணாச் சொல்லலாம். நன்றி.

பாலாசி - படம் ரிலீஸாகிட்ட தைரியத்துலதான் சொன்னேன்!! நன்றி.

அப்துல்லா - வாங்க. நன்றீ.

விரல்கள் - படம் சுவாரஸ்யம்தான். ஆனால் சிலரால் அடிக்கப்படும் கூத்துகள்தான் எரிச்சலைத் தருகீறது.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - வாங்க, நன்றி.

தேனக்கா - நன்றிக்கா. ரொம்பப் பிஸி போல இப்ப?

கார்த்திக் - மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இப்படித்தான் என்றாலும், இது ரொம்பவே ஓவராக இருக்கிறது கார்த்திக். இதே இடத்தில் கமல் இருந்திருந்தால், நிச்சயம் கண்டித்திருப்பார் என்பதுதான் என் கருத்து.

ஹுஸைனம்மா said...

கோபி - வாங்க. அது கொஞ்சம் நக்கல் கலந்து எழுதப்பட்ட வரிகள்தான்; ஆனாலும், கமல் ரசிகர்கள் இப்படி செய்ய முனைந்தால், கமல் கட்டுப்படுத்துவார் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. ஒருவேளை, சன் பிக்சர்ஸ் என்றால் அவரும் கையைக் கட்டிக்குவாரோ என்னவோ??!!

கீதா6 - வாங்க, நன்றி.

மனோ - ஹலோ, என்னாதிது யோவ்னு ரொம்ப மரியாதையா..

நட்புடன் ஜமால் said...

ஜமால் - நீங்க எந்த ஜாதின்னு சொன்னாத்தானே தெரியும்? ;-))]]

பரட்டைய சொன்னேன் ...