Pages

ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்
மூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில், என்கூட  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘நேலியஸ்’ என்ற இளைஞன் வேலைபாத்தான். அவனுக்கு அந்த வேலையில இஷ்டமேயில்லை (நாங்கல்லாம் மட்டும் என்ன பிடிச்சாச் செய்துகிட்டிருந்தோம்? ;-) ) சேந்தாப்ல 15 நிமிஷம் அவன் சீட்டில் இருந்தான்னா, அவன் யூ-ட்யூப்ல காமெடி சீன் அல்லது ஃபுட்பால் பாத்துகிட்டிருக்கான்னு அர்த்தம்.

அவனுக்கு பைலட்-ஆகணும்னு ஆசை;  நான்கூடக் கிண்டலாச் சொல்வேன், நீ பைலட் ஆனதும் எந்த ஏர்லைன்ஸ்ல வேலைபாக்கிறேன்னு எனக்குச் சொல்லிடு; அதுல நான் ஏறவே மாட்டேன். ஃப்ளைட் ஒட்டும்போது, இப்படி எழுஞ்சு எழுஞ்சு போய்ட்டியானா என்ன செய்றது?ன்னு. அதுக்கவன், “தட்ஸ் மை ட்ரீம் ஜாப். But this is a job which I dont want to do even in my dreams!!”னு சொல்வான்.

ஆனா, மேற்கத்திய கலாச்சாரப்படி, படிப்புக்கான செலவை அவனே பாத்துக்க வேண்டிய சூழல். அதனால், அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டிருந்தான். இது அவனோட கேரியர்ல N-நம்பராவது வேலை!! மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும்? அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு!! அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது.  (தென்னாப்பிரிக்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு!)

ஒரு கட்டத்துல, அலுவலக உள்ளரசியலில் மாட்டி, (வழக்கம்போல்) வேலையை ரிஸைன் செய்தான். அடுத்து, தான் தென்னாப்பிரிக்கா சென்று, படித்து பைலட் ஆகப்போவதாகவும், படிப்பதற்கு தன் கேர்ள் ஃப்ரண்ட் ஸ்பான்ஸர் செய்யப்போவதாகவும், வேலை கிடைத்த பின் அவளின் கடனை அடைக்கப் போவதாகவும் சொன்னான்.

அதே சமயத்தில், எங்களின் காண்ட்ராக்டரின் பிராஜக்ட் மேனேஜர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மகன் பைலட் ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பதாகவும், மகன் அடுத்த செமெஸ்டரிலிருந்து ஃபீஸ் கூடப்போவதாக வருத்தப்பட்டதாகவும், தான் மகனை அதுகுறித்து கவலைப்படவேண்டாம், படிப்பை மட்டும் பார் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் நேலியஸை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரும் பேசியபோது, அவர் கேட்டார், “உன் தந்தை ரிடயர்மெட் ப்ளானில் பணம் போட்டுள்ளாரா?” என்று கேட்க, அவன் ஆமென, அவர், “உன் தந்தை இன்ஷ்யுரன்ஸை நம்புகிறார்; நானோ எனது மகனின் பாசத்தில் இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.”

சிலகாலம்முன் (இப்போதும் இருக்கலாம்), ஒரு விளம்பரம் வரும். பேரன் தாத்தாவிடம் பிறந்தநாள் பரிசாக, சைக்கிள் வாங்கிக் கேட்க, அவரது தர்மசங்கர்டத்தைத் தவிர்க்க, மகன் பணம் தரமுன்வர, பேரனோ ஏற்கனவே தாத்தா வாங்கித் தந்த சைக்கிளில் சுற்றிவருவான். ரிடையர்மெண்ட்  பிளான் ஸ்கீம் விளம்பரம்!!

இந்தியக் கலாச்சாரப்படி, வயதான காலத்தில் பெற்றோரைப் பாதுகாப்பதென்பது (மூத்த) மகனின் கடமை. ”My time", "Time-out", தனித்தனி செல்ஃபோன்கள்,  என்று இக்காலம் போல எதுவும் இல்லாமல், குடும்பத்துக்காகவே மட்டும் உழைத்த பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதைவிட, பிள்ளைகள் அதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். (செயல்படுத்தமுடியவில்லையென்றாலும்கூட). எனினும், இந்திய சமுதாயத்தில் இது மகனுக்கு மட்டுமே உரித்தான கடமையாகப் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் உடைய பெண்கள், தம்மோடு பெற்றோரை வைத்துக் கொள்வதென்பது, மகன் வெளிநாட்டில் இருக்கிறார்; அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே. மகள்கள் மட்டுமே உள்ள பெற்றோரெனில், மகள்கள் இதைச் செய்யத் தயங்குவதில்லை. எனினும், இவ்வாறு மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள்.

காலங்கள் மாறி வருகிறது. மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் இப்படியொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிற அதே சமயத்தில், சென்ற தலைமுறை பெற்றோர்கள் இன்னமும், மகன்களோடு இருப்பதே பாரம்பரியம் என்று எண்ணிக்கொண்டிருக்க, இத்தலைமுறை பெற்றோர்களிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது - அது ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீமில் மறக்காமல் இன்வெஸ்ட் செய்வது!! மகனோ, மகளோ - யாரோடு வசித்தாலும் ஒன்றுதான்  என்பதாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம், மகனோ, மகளோ நம் வயசுகாலத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  லைஃப் இன்ஷ்யூரன்ஸ், மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்க்கு இணையாக ரிடையர்மெண்ட் வாழ்க்கைக்கும் பிறரைத் தொந்தரவு செய்யாமல் வாழ இளமையிலேயே திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

விண்ணைத்தாண்டிப் போகும் விலைவாசி, பெருகிவரும் செலவினங்கள், பயமுறுத்தும் புதிய புதிய நோய்கள், முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்களால் கூடியிருக்கும் ஆயுட்காலம், பெற்றொரைப் பார்த்துக்கொள்ள ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்த காலம்போய், ’நாமிருவர், நமக்கேன் ஒருவர்’என்று மாறிவரும் ஸ்லோகன்கள் எல்லாம்சேர்ந்து இந்த ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்களை பிரபலப்படுத்தி வருகின்றன!!

முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.

   
 

Post Comment

38 comments:

நாஞ்சில் பிரதாப் said...

வயசானாலே ரிட்டையர்ன்மன்ட் பத்தின கவலை எல்லாருக்கும் வந்துடுமோ:))


//மூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில்//

அந்த கம்பெனி இன்னும் இருக்கா??? ஒரு கம்பெனியைவே திவாலாக்கிட்டீங்களே...

சைவகொத்துப்பரோட்டா said...

எழுதிய விதமும், சொல்லப்பட்ட கருத்தும் நல்லா இருக்கு.

அரபுத்தமிழன் said...

//வயசானாலே ரிட்டையர்ன்மன்ட் பத்தின கவலை எல்லாருக்கும் வந்துடுமோ//

:)))

நானும் பைலட் ஆக ஆசைப்பட்டதுண்டு. 'உன்னோட உயரத்துக்கு அதுலாம் சரிப்பட்டு வராதுடான்னு சொன்ன நண்பர்களின் கேலிச் சிரிப்புக்களால் ஆசை தடைபட்டாலும், அதெல்லாம் இப்ப பெருசா தெரிவதில்லை. வாழ்க்கையில்
எத்தனையோ சுவாரசியங்கள் இருக்கும் போது இதுதான் வேண்டுமென்ற பிடிவாதம் விரக்தியாய்ப் போகும் அபாயம் உண்டு.

தமிழ் உதயம் said...

தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.///

இப்பவே வந்தாச்சேங்க விளம்பரங்கள்.

Chitra said...

முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.


.......முதியோர்கள் - ஒதுக்கப்படாமல் நல்லபடியாக கவனிக்கப்பட்டால் சரிதான் என்று ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமோ. நல்லா எழுதி இருக்கீங்க.
(P.S.: I think, it is already been advertised in few areas in India.)

ராமலக்ஷ்மி said...

ரிடையர்மெண்டுக்கு திட்டமிட வேண்டியதன் அவசியத்தை அருமையாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.

கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது போன்றதான விளம்பரங்கள் ஏற்கனவே வர ஆரம்பித்து விட்டுள்ளன.

வெறும்பய said...

இது போன்ற நிலை வந்தாலும் வரலாம்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இங்கெல்லாம் இது எல்லாருக்கும் இருக்கறது.. எங்க கம்பெனில இப்பவே கேட்கறாங்க, சேரச் சொல்லி.. புள்ளைக பசங்க முன்ன மாதிரி அப்பா அம்மா கூடவே இருக்கறதில்ல.. விட்டுட்டு ஓடி வந்துடறோம் :) நல்ல விஷயம் தான்..

ravikumar said...

It is a good post keep writing

அமைதிச்சாரல் said...

உங்க ரிடையர்மெண்டுக்கப்புறம் என்ன பண்ணலாம்ன்னு ஸ்கீம் வெச்சிருக்கீங்க :-))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

ரொம்பவே வருத்தமான விஷயம்!

நேலியஸ பாதியிலயே கழட்டி விட்டுட்டீங்களே!

எம் அப்துல் காதர் said...

// எனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள். //

இங்க எங்க சைடில் மட்டும் என்ன வாழுது??. ஆனாலும் பெற்றோர் களை 'அம்போ' வென்று விட்டுவிடுவதில்லை. அந்தந்த ஆண்களின் கூட பிறந்த சகோதரி களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவகையில் இருவருக்குமே சப்போர்ட் மாதிரி தானே. இருந்தாலும் மாசம் இவர் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றோருக்கென்று செலவுக்கு கொடுத்து விட வேண்டும். முதியோர்கள் இப்படி ஒதுக்கப்படாமல் நல்லபடியாக கவனிக்கப்பட்டால் சரிதான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்பல்லாம் சிலர் ரிட்டர்ய்மெண்ட் பணத்துல வீடு புக் செய்யும்போது ஒரே இடத்தில் நண்பர்களுடனோ அல்லது சொந்தங்களோடோ சேர்ந்து சேர்ந்து புக் செய்வதையும் பார்க்கிறேன்..தில்லியிலிருந்து இதுபோல பல வயதானவர்கள் இங்கிருக்கும் நண்பர்கள் கூடவே அப்படியே ஒன்றாக ஒரே அபார்ட்மெண்ட்டில் புக் செய்து பாலக்காடு , கோவை ன்னு செட்டில் ஆகறாங்க.. முன்னபின்ன சில வருடங்களில் ரிட்டய்ர் ஆகரவங்களும் அவர்களோடே இணைந்து கொள்கிறார்கள்..

santhanakrishnan said...

கடைசி வரி மனசை ரொம்ப
சங்கடப் படுத்துகிறது.
குழந்தைகளின் மீதான பயம் அல்லது
நம்பிக்கை இன்மையே
ஓய்வு கால பணத் திட்டங்களின் வெற்றிக்குக் காரணம் என்பது
கொஞ்சம் கசப்பான உண்மைதான்.

நானானி said...

நல்ல பதிவு. ஓய்வுக்குப் பிறகு என்பதையே சிந்திக்காமல் விட்ட பெற்றோர்க்கு தாங்கும் பிள்ளைகள் இருந்தால் கவலையில்லை.
இந்த ப்ளானுக்கான பணத்தை தனியே பிடித்துக் கொண்டு சம்பளத்தை கொடுத்தால்....நடுத்தர வர்க்கம் நன்றி சொல்லும்.

யாரையும் தொந்தரவு செய்யாமல், சகல சௌகர்யங்களுடன் வாழ, சம வயதினருடன் கலந்து உரையாட, தன் விருப்பப்படி பொழுதை செலவிட....
நிறைய சீனியர் சிட்டிசன் ஹோம்கள் வந்துவிட்டன. அவர்களே விரும்பிப் போகும் வகையில் அமைந்துள்ளன.
இதுவும் ஒரு நல்ல முன்னேற்றம்தான்.

ஜெய்லானி said...

எது எப்படியோ தனியா சேமிப்புன்னு இன்னு இருந்தா சரிதானே..!!

Deepa said...

சிந்திக்க வேண்டிய நிறைய விஷயங்கள். நல்ல பதிவு.

ஸாதிகா said...

// மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர்// எங்களூரில் இது நூற்றுகு நூறு உண்மை.திருமணத்திற்கு பிறகு மருமகன் ,மறுமகனாக மாறிவிடுகின்றனர் என்பதுதான் உண்மை.இதை எல்லாம் வைத்துப்பார்க்க்க்கும் பொழுது பெண்ணைப்பெற்றவர்களதான் பாக்கியசாலிகள்.//முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.
// ஆனாலும் ரொம்ப பயங்கரமாக யோசிக்கறீங்க ஹுசைனம்மா.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் எழுதியிருப்பது சரிதான் ஹுஸைனம்மா! இளம் வயதினர் இன்றைய உலகில் ப்ராக்டிக்கலாக இருக்கிற மாதிரி முதியவர்களும் மாறத்தொடங்கி விட்டார்கள்! ஆனால் பல விதமாக முதியோர் இல்லங்களின் விளம்பரங்கள் வரத் தொடங்கி நாளாகி விட்டதே?

நட்புடன் ஜமால் said...

சொல்லப்பட்டிருக்கும் விடயம் தேவையாக மாறிக்கொண்டிருப்பதென்னவோ நிஜம் தான்

ஆரோக்கியமற்றது :(

Jaleela Kamal said...

ரிடையர் மெண்ட் ப்ளான் ஸ்கீம்.
ம்ம் வித்தியசமான யோசனை பதிவு.

இதுக்கு விளம்பரம் வேறு வ்ர ஆரம்பித்துவவிட்டது என்பது உங்கள் பதிவின் கடைசியிலும் ,கீழே பின்னூட்டத்திலும் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.

Rithu`s Dad said...

ஹுஸைனம்மாட்ட இருந்து இன்னும் ஒரு அருமையான பதிவு..

ஹுஸைனம்மா இந்த பதிவுன் முதல் பகுதி.. முல்லையின் X X & X Y in IT பதிவுக்கு பதில் மாதிரி இருக்கு..:)

ஹுஸைனம்மா said...

//ஹுஸைனம்மா இந்த பதிவுன் முதல் பகுதி.. முல்லையின் X X & X Y in IT பதிவுக்கு பதில் மாதிரி இருக்கு.//

இல்லை, ரீத்து அப்பா. அதுக்கு தனியா பதிவு எழுதணும்னு இருக்கேன். இது பெற்றோர்-பிள்ளைகள் உறவு குறித்து எழுதியது.

புதுகைத் தென்றல் said...

சம்பாரிச்சதையெல்லாம் பிள்ளைங்களுக்கென்னே செலவழிச்சிட்டு இப்ப கைல காசில்லாம திண்டாடுற முதியவர்களை பார்க்கும்போது பாவமா இருக்கும். தனக்குன்னு சேமிச்சு வெச்சுக்கணுங்கற எண்ணம் அப்ப பெற்றோர்களுக்கு இருந்ததில்லை. எதிர்கால தேவைக்கு பணம் சேத்து வைப்பது அவசியம்னு நச்சுன்னு சொல்லியிருக்கீங்க

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் இருப்பதையே விரும்ப வேண்டும் என்றும் பெற்றோர்களை பேணிக் காக்க வேண்டும் என்றும் இந்த பதிவு எடுத்துரைக்கிறது.

முன்பு நான் எங்கோ படித்தது, பெற்றோர்களை சொந்த ஊரில் கூட போய் பார்க்க விரும்பாமல் சிட்டியில் ஹோட்டலில் அறை எடுத்து அவர்களுக்கும் அறை எடுத்து தங்க வைத்து சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் பறந்து விடுகின்றனர் சில பிள்ளைகள், கேட்டால் தங்களுடைய குழந்தைகள் வசதிகள் குறைவாக இருக்கும் தங்களின் கிராமத்தில் தங்குவதை விரும்பமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். பெற்றொர்களிடம் நீங்க தங்குவதற்கும், வந்து போவதற்கும் நான் காசு தருகிறேன் என்று பிஸினஸ் மேனிடம் டீல் பேசுவதை போன்று கூறுகிறார்கள்.

Muniappan Pakkangal said...

Nice post Hussaianamma.Fretiement plan scheme is nice.Anna Vasthu ,have you heard of ?It was a retirement plan like thing practiced in villages.The family head when giving his lands to his sons during partition,will keep some land for meeting his Food & dress & expenses.It is called Annam-Vasthiram.That land will b shared by his sons after the family head's death.Keeping ourself non dependent in the retired life is a must.

அதிரை எக்ஸ்பிரஸ் said...

It is a good post keep writing

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

குழந்தைகள் வந்து கூட இருக்க முடியாத சூழ்நிலை,பெற்றவர்களில் தாய் எங்கு வேண்டும் என்றாலும் இருந்து விடுவார்கள். ஆனால் தகப்பன் தன் வீடு தன் வீட்டை விட்டு என்று எங்கும் நகலாத போது என்னசெயவது?

உடல் நலமாக இருக்கும் வரை தனியாக இருக்கலாம்,பின் என்ன செயவது?

முத்துலெட்சுமி சொல்வது போல் நண்பர்களுடனோ,அல்லது சொந்தங்களுடனோ தான் இருக்க வேண்டும்.

அதுவும் முடியவில்லை என்றால் எல்லா வசதிகள் உள்ள முதியோர் இல்லங்கள் தான் ஒரே வழி.

முதுமைக்கு ஆரோக்கியமும்,திட்டமிடலும் அவசியம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

enrum said...

முதியோர் இல்லங்கள் வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்த காலம் போய் இப்போது அவற்றை மேலும் வளரச்செய்யகூடிய செய்திகளையோ/விளம்பரங்களையோ பார்க்கும்போது மனது முதலில் அதிர்ச்சியடைவதை தடுக்கமுடியவில்லை. நகரங்களில் இருக்கும் சில பெற்றோர் ப்ராக்டிகலாக எடுத்துக் கொண்டாலும் / கொள்ள முயற்சித்தாலும் கிராமங்களில் வாழும் வயது முதிர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகள்/பேரப்பிளைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கவே எதிர்பார்க்கிறார்கள். ஹ்..ம்..நமக்கு யோசிக்க சில காலம் இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் ரிடையர்மென்டுக்கென இப்போதே சேமிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Enrenrum16

ஜிஜி said...

கடைசி வரி மனசை ரொம்ப
சங்கடப் படுத்துகிறது.நல்லா எழுதி இருக்கீங்க.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மைதான் ஹுஸைனம்மா. ரிடயர்மெண்ட் ப்ளான் பற்றியும் ஓல்ட் ஏஜ் ஹோம் பற்றீயும் சரியாதான் சொல்லி இருக்கீங்க..

ஜெயந்தி said...

இப்பவே முதியோர் இல்லங்கள் பெருகித்தான் இருக்கு. இன்னும் வரும் காலங்களில் ஏறக்குறைய அனைவரும் முதியோர் இல்லங்களில்தான் இருப்பார்கள் போல.

ஸ்ரீராம். said...

//எனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும்//

அப்படியா....

முதியோர் இல்லங்களில் விரும்பிச் சேருவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். சேமிப்பு பணத்தில் இல்லாமல் மனத்திலும் உறவுகளிலும் இருந்தால் நலம்.

அப்பாவி தங்கமணி said...

//மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்//
நூத்துக்கு நூறு உண்மை... இந்த நிலை மாறும் ஒரு நாள்னு நம்பறேன்

//திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும்//
வாவ்... சூப்பர்... எனக்கு இந்த டீல் ரெம்ப புடிச்சுருக்கு...

அருமையான பதிவு அக்கா

சுந்தரா said...

சரியான திட்டமிடல் அவசியம்தான் ஹுசைனம்மா.

இப்பவே பல பெற்றோர்கள்,வேண்டாமென்று யரும் ஒதுக்குவதற்கு முன்பாக, தாங்களாகவே முதியோர் இல்லங்களுக்கு முன்பதிவுசெய்துகொள்ளத் தயாராயிருக்கிறார்கள்.

மாதேவி said...

//திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும்//

எங்கள் ஊர் வழக்கம் இதுதான் :)

கருத்துக்கள் தற்காலத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையே.

Vijiskitchen said...

It is very useful post. Keep Rocking.