Pages

முத முதலா வரும் பாட்டு...
நானும் வந்துட்டேன்! நானும் வந்துட்டேன்!! எல்லாரும் பாத்துக்கோங்க! எல்லாரும் பாத்துக்கோங்க!!! நானும் ப்ளாக்கர்தான்.. நானும் ப்ளாக்கர்தான்..

ஒரு ஆறேழு மாசமா பலரும் எழுதின ப்ளாக்குகளை படிச்சு, ஆராஞ்சு பாத்ததன் விளைவா, யோசிச்சு பாத்து, நானும் ப்ளாக்கர் ஆகிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!! தமிழ் ப்ளாக்குலகம் பெற்ற பேறு!! தமிழ் ப்ளாக்கர்களின் பாக்கியம்!! (அதாரது பாக்கியம்னு கேக்கப்படாது)

ஆனா யாரும் கவலப்படாதீங்கோ, அங்க ஓட்டு போடு, இங்க ஒரு குத்து குத்துன்னெல்லாம் யாரையும் இப்ப‌த்திக்கு கேக்க மாட்டேன்!! ஏன்னா நானே இதுவரைக்கும் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்ல!! யாரையும் குத்துனதில்ல!!

அதனால மக்களே, வாங்கோ, வாசிங்கோ, முடிஞ்சா கருத்து (மட்டும்) சொல்லுங்கோ! இப்போதைக்கு நான் க்ளாஸுக்கு வந்த புதுப்புள்ளங்கறதால, ராகிங் பண்ணாம, எப்படி என் ப்ளாக், இன்னும் என்னென்ன பண்னலாம்னு மட்டும் சொல்லுங்கோ!!

என்னப்பத்தி சின்ன அறிமுகம்: நான் இப்பத்திக்கு குடும்பத்தோட அபுதாபியில இருக்கேன். குடும்பம்னா புருசன், பொண்டாட்டி, புள்ளக்குட்டிதான்னு உங்களுக்கெல்லாம் தெரியும். அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சியெல்லாம் "எக்ஸ்டன்டட் ஃபேமிலி"யிலதானே வரும்!! சரிதானே? நான் என் வூட்டுக்கார், 2 புள்ளங்களோட இருக்கேன். என் மூத்த புள்ள பேரு ஹுஸைன்; அதனால நான் ஹுஸைனம்மா. பேர்க்காரணம் புரிஞ்சுதா?

மத்ததெல்லாம் அப்புறமா...

இப்படிக்கு,
ஹுஸைனம்மா

Post Comment

14 comments:

Hussainamma said...

கமெண்ட் வருதான்னு பாத்தேன்...

வால்பையன் said...

தமிழ் வலையுலகம் உங்களை வருக வருக என வரவேற்கிறது!

உங்களவர் என்ன செய்யுறார், அவரை ப்ளாக்குள்ள இழுத்து விடலாமே!

பீர் | Peer said...

வருக... வருக...

எங்கள் தல.. வால்பையனே நேரடியா வந்து வரவேற்பு சொல்லிட்டாரே.. நிச்சயமா பிரபல பதிவரா வருவீங்க...

வாழ்த்துக்கள்.

Hussainamma said...

வால்பையன் & பீர்: வரவேற்புக்கு நன்றி!!

முதல் வரவேற்பே கொஞ்சம் வில்லங்கமான ஆள்ட்ட இருந்து!!

பீர், நீங்க சொன்ன மாதிரி பதிவுலகத்துல எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம்தான் இனி!!

Hussainamma said...

//உங்களவர் என்ன செய்யுறார், அவரை ப்ளாக்குள்ள இழுத்து விடலாமே!//

ஏன், நம்ம பீர், அ.மு.செய்யது, அப்துல்லா இவங்கல்லாம் உங்ககிட்ட மல்லுகட்டறது போதாதா?

வால்பையன் said...

//ஏன், நம்ம பீர், அ.மு.செய்யது, அப்துல்லா இவங்கல்லாம் உங்ககிட்ட மல்லுகட்டறது போதாதா?//

அப்துல்லா இதில் சேரமாட்டார்!

மல்லுகட்டுவது எப்போதாவது தான்!
மற்ற பதிவுகளில் கொன்சி குலாவி கொள்வோம்!
அதே போல் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னால் நான் தான் நிற்பேன்!
என்னிடம் பேசி ஜெயித்து விட்டு தான் நண்பர்களை தொட முடியும்!

செய்யதும், பீரும் தனிபட்ட முறையில் எனது சிறந்த நண்பர்கள்!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

அடடே அல்ரெடி பிரபல பதிவரா ஆயிட்டிங்க போலிருக்கே!! வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

வாங்க வாங்க ஹுசைன் அம்மா எப்படி இருக்கீங்க
அசத்துங்க

Hussainamma said...

//வால்பையன் said...
செய்யதும், பீரும் தனிபட்ட முறையில் எனது சிறந்த நண்பர்கள்!//

சந்தோஷம்!!


ஷ‌ஃபிக்ஸ்: நனறி. ஆமாம், நானும் இப்ப பிரபலம் ஆயிட்டேன். (ஆனா, அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு தெரியல!!)

மலிக்கா: நலமா? உங்கள் திறமைகளை முன்பே "தமிழ்மணம்" தளத்தில் கண்டு வியந்திருக்கிறேன். இப்ப பிளாக்கும் ஆரம்பிச்சுட்டீங்க இல்லையா? உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//நானும் இப்ப பிரபலம் ஆயிட்டேன். (ஆனா, அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு தெரியல!!)//

யாரையாவது வம்பிழுக்கணும்!

புள்ளபூச்சிங்க ப்ளாக் அட்ரஸ் தரட்டுமா!?

Hussainamma said...

//வால்பையன் said...
யாரையாவது வம்பிழுக்கணும்!//

எப்படி, நீங்க இப்ப செஞ்சுட்டிருக்கீங்களே, அதே மாதிரியா? ரைட்டு, நடத்திருவோம்!!

//புள்ளபூச்சிங்க ப்ளாக் அட்ரஸ் தரட்டுமா!?//

உங்க ப்ளாக் அட்ரஸ் ஏற்கனவே இருக்கு. நன்றி!!

நாஞ்சில் பிரதாப் said...

//கமெண்ட் வருதான்னு பாத்தேன்...//
ஹஹஹ சொந்த பதிவுக்கே கமெண்டு போட்ட முதல் பதிவர்.. நீங்கதான்.

நான் எப்பவுமே லேட்டாத்தான் வருவேன்...கலக்குங்க..

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
14/11/09 19:57

ஹஹஹ சொந்த பதிவுக்கே கமெண்டு போட்ட முதல் பதிவர்.. நீங்கதான்.//

முத போணி நாமளே பண்ணிருவோம்னு..ஹி..ஹி..

//நான் எப்பவுமே லேட்டாத்தான் வருவேன்...கலக்குங்க.//

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான்னு டயலாக் விடலையா??

cheena (சீனா) said...

ஆகா ஆகா

சுய அறிமுகம் அருமை

வாலோட வம்புக்குப் போகாதீங்க - அம்புட்டுத்தான் சொல்லுவேன்

ஆமா மூத்த புள்ள பேரு ஹுஸைனு - அடுத்த புள்ள பேரு ?

வூட்டுக்காரர் பேரு சொல்ல மாட்டீங்களாக்கும்

ம்ம்ம்ம் நல்லாருங்க நல்வாழ்த்துகள்