Pages

டிரங்குப் பொட்டி 2

அக்டோபர் 31 அன்னை இந்திரா காந்தியின் மறைவு நாள். நல்ல தலைவர். அதென்னவோ நல்ல தலைவர்கள் எல்லாம் அல்பாயுசில் போய்விடுகிறார்கள். இந்தியாவின் தலையெழுத்து அப்படித்தான் போல. இரும்பு மனுஷி. இருந்திருந்தால் இந்தியா சீக்கிரமே வல்லரசு ஆகியிருக்கும். பிரச்னைகளில் வழ, வழ, கொழ, கொழ என்று நழுவாமல் வெட்டொன்று, துண்டொன்று என்று முடிவெடுப்பவர். அதனாலேயே ரொம்பப் பிடிக்கும். அவரும், அவரின்  கூர்மையான பார்வையும், வேகமான நடையும்...எதிர்காலத்தில் ஒருவேளை நான் அரசியலில் நுழைந்தால் அவர்தான் என்  மானசீகக் குரு!! (யாருப்பா அது நக்கலா சிரிக்கிறது....)தற்போதைய தலைவர்களில் அவரின் சில சாயல்கள் இருப்பது ஜெயலலிதாவிடம். பல விஷயங்களில் அவரது நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றாலும், அவரது துணிச்சல், தன்னம்பிக்கை, சட்டென்று முடிவு எடுக்கும் விதம் இதெல்லாம் என்னைக் கவர்பவை. தற்போதைய சில நிகழ்வுகளில்  இதுக்கெல்லாம் இப்ப ஜெயலலிதா சி.எம்.மாக இருந்திருக்கணும் என்று தோன்றும்.  அவர் சி.எம்.மாக இருக்கும்போது (மத்திய, மாநில) அமைச்சர்கள் முதல் அதிகாரிகள்  வரை கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் அந்த அழகுக் காட்சிகளுக்காகவே அவர் மீண்டும் முதலமைச்சராக ஆசை!!

இப்ப விஷயத்துக்கு வருவோம், இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட தினம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என் கணவர், எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில் நடந்ததைக் கூறினார். அப்போ அவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு. வெளியே ரூம் எடுத்துத் தங்கியிருந்தாராம். அன்று அதிகாலை 5 மணிக்கு டீக்கடை வந்தபொழுது ஒரே போலீஸ்மயமாம். ஒரு போலீஸ்காரர் இவரை அழைத்து யார், என்னவென்று விசாரித்துவிட்டு, விஷயத்தைக் கூறி உடனே ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இவர் உடனே கிளம்பிவிட்டாலும்,  செய்தி கசிய ஆரம்பித்து விட்டதால் பேருந்து கிடைக்க சிறிது சிரமமாகவே இருந்திருக்கிறது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த என் பெரிய மகன், அவர் இறந்ததுக்கு நீங்க ஏன் அவசர அவசரமா வீட்டுக்கு வரணும்? என்று கேட்டான். கலவரம் வரலாம் என்று சொன்னதுக்கு, ஏன் அப்படி செய்யுறாங்க? இங்கே அபுதாபியில் அப்படியெல்லாம் ஏன் நடப்பதில்லை என்று அடுக்கடுக்காகக் கேள்விகள். பெரியவனுக்கு விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்கிறான். சின்னவனுக்குத்தான் எப்படி புரிய வைப்பதென்றே தெரியவில்லை. அடுத்து பெரியவன் கேட்டது, ஏம்மா இந்திரா காந்தி இருக்கும்போதே நான் பிறந்துட்டேனா? இல்லை என்றதும் முகத்தில் சிறு ஏமாற்றம்.  அது ஏன் அவன் எம்.ஜி.ஆர். இருக்கும்போது நான் பிறக்கலையா என்று கேட்கவில்லை?

 *^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

மக்கள் டி.வி.யில் “சின்னச் சின்ன ஆசை” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதிகம் வசதியில்லாத குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று உடை, விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் என்று வாங்கித் தருகிறார்கள். இது அவர்களை அந்நேரத்துக்கு மட்டும் மகிழ்ச்சிப்படுத்தலாம் என்றாலும் அது அவர்களுக்கு உண்மையான பயன் தருமா?  நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறார்களின் முகங்களில் ஒரு தர்மசங்கடம்தான் தெரிகிறது. மேலும் இவ்வாறு ஊரறிய இலவசமாகக் கொடுப்பது, தொலைக்காட்சியின் பப்ளிசிட்டிக்கு மட்டுமே உதவலாம். தினமும் ஒரு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் இல்லையா?

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

நேற்று காலை பேருந்தில் வரும்போது நான் மட்டும் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்ணின் அருகே இருந்த ஒரு ஆணை எழுப்பி விட்டு அமரும்படி இன்னொரு பெண் என்னிடம் கூறினார். எனக்கு அதில் உடன்பாடில்லை. “இட்ஸ் ஓ.கே. நோ பிராப்ளம்” என்று சொல்லிவிட்டு நின்றேன். பின்னாலிருந்து சிலர் அவரை எழுந்திருக்கும்படி கூற, எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அவரோ வயதில் மூத்தவர். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தேன். இன்னொருவர் பின்னால் இடமிருப்பதாகக் கூற, அவர் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றார். நானும் வேறு வழியில்லாமல் உட்கார்ந்தேன்.  உட்கார்ந்து வருவதும் நல்ல வசதியாகத்தான் இருக்கிறது.

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

மெகா டி.வி. அமுதகானத்தில் “விஸ்வநாதன் வேலை வேணும்” (காதலிக்க நேரமில்லை) பாட்டைக் கேட்டதிலிருந்து சின்ன மகன் அதன் விசிறி ஆகிவிட்டான். எப்பவும் அந்தப் பாட்டுதான் வாயில். அவன் பாடி கேட்பதும் நல்லாத்தான் இருக்கு.

இன்று காலை பத்மினி, சிவாஜி நடித்த “நூறாண்டு காலம் வாழ்க; நோய்நொடியில்லாமல் வாழ்க” என்ற பாடலில் ஒரு காட்சி:  பச்சிளங்குழந்தையையும் பத்மினியையும், அவரின் தந்தை அணைத்துக் கொள்ள, பூமழை தூவும். தூவப்பட்ட பூக்கள் குழந்தையின் முகத்தில் விழ, பத்மினி அனிச்சையாக அதன் முகத்தைக் கையால் மறைத்துக் கொள்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கும்போதே தெரிகிறது, அது சொல்லிகொடுத்து நடித்ததல்ல என்று.  தன் பாகத்தை மட்டும் கடமையே எனச் செய்யாமல், நடிக்க வந்த அந்த குழந்தையின் நலனையும் பேணும் அவரது குணம் சிறப்பு. தில்லானா மோகனாம்பாளில் நடிக்கும்போது அவரது மகனுக்கு ஏழு வயதாம்!!

கொசுறு: அமுதகானம் வழங்குவது, சமீபத்தில் “கோலங்களில்” கொல்லப்ப்ட்டாரே தோழர், அவர்தான்!! (நன்றி: நர்சிம்)

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
ஜெய்ப்பூரில் கடந்த வாரம் பெட்ரோல் கிடங்கில் பிடித்த தீ இன்னும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் பலவிதமான உடல்நிலைக் குறைவுகளுக்கு ஆளாகத் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் கவலைக்குரியன.


Post Comment

23 comments:

தராசு said...

டிரங்குப் பொட்டி செம ஸ்ட்ராங்.

வாழ்ழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

//தினமும் ஒரு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் இல்லையா?//

Valid point !!!

நல்லா எழுதறீங்க ஹூசைனம்மா....

இப்போ உங்க பதிவுகள தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

ஹுஸைனம்மா said...

/தராசு Says:
03/11/09 12:27

டிரங்குப் பொட்டி செம ஸ்ட்ராங்.//


முதப் பின்னூட்டத்தையே ஸ்ட்ராங்காகப் போட்டதுக்கு நன்றி தராசண்ணே!!

வருகைக்கும், அழுத்தமான வாழ்த்துக்களுக்கும் இன்னொரு நன்றி!!

ஹுஸைனம்மா said...

/அ.மு.செய்யது Says:
03/11/09 12:46

நல்லா எழுதறீங்க ஹூசைனம்மா....

இப்போ உங்க பதிவுகள தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.//

பாராட்டுக்கும், தொடர் வருகைக்கும் நன்றி செய்யது.

எம்.எம்.அப்துல்லா said...

தற்போதைய தலைவர்களில் அவரின் சில சாயல்கள் இருப்பது ஜெயலலிதாவிடம். //

ஜெயலலிதா அரசியலில் நுழைந்தவுடன் பெற்ற முதல் பதவி மாநிலங்களவை உறுப்பினர்.அப்போது இந்திராவை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதன் பாதிப்பு வந்து இருக்கலாம்.


//அவர் சி.எம்.மாக இருக்கும்போது (மத்திய, மாநில) அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் அந்த அழகுக் காட்சிகளுக்காகவே அவர் மீண்டும் முதலமைச்சராக ஆசை!!


//

சரி!சரி! :)

பீர் | Peer said...

மக்கள் டீவி நிகழ்ச்சி பார்த்த போது எனக்கும் இதேதான் தோன்றியது.

இந்திரா; மக்களாட்சியில் வெட்டொன்று துண்டு ரெண்டென முடிவுகள் எடுத்ததால் தான் அவரது முடிவும் அவ்வாறே அமைந்துவிட்டது.

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
இந்திரா; மக்களாட்சியில் வெட்டொன்று துண்டு ரெண்டென முடிவுகள் எடுத்ததால் தான் அவரது முடிவும் அவ்வாறே அமைந்துவிட்டது./

வாங்க பீர். அஹிம்ஸாவாதியான காந்திக்கு மட்டும் நல்ல சாவா கிடைச்சுது? தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உறுதியான முடிவெடுப்பவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் தினமும் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்?

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
இந்திராவை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதன் பாதிப்பு வந்து இருக்கலாம்.//

லாம். ஆனால், ஜெ.யின் இயற்கை சுபாவமே அப்படித்தான் இல்லையா?

வருகைக்கு நன்றி அப்துல்லா.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா, டிரங்குப் பெட்டி நல்லா வெயிட்டாத்தான் இருக்கு!!

அ.மு.செய்யது said...

தொடர்பதிவுக்கான அழைப்பு இருக்கிறது.ஏற்பீர்கள் என நம்புகிறேன் !!

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
04/11/09 10:12

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா, டிரங்குப் பெட்டி நல்லா வெயிட்டாத்தான் இருக்கு!!/

நன்றி ஷஃபிக்ஸ். வெயிட்டா இருக்குன்னு கம்ப்யூட்டர தூக்கிப்பாத்து தெரிஞ்சுகிட்டீங்களா? ;-)

ஹுஸைனம்மா said...

//அ.மு.செய்யது Says:
04/11/09 13:36

தொடர்பதிவுக்கான அழைப்பு இருக்கிறது.ஏற்பீர்கள் என நம்புகிறேன் !!//

என்னையும் கோத்துவிட்டுட்டீங்களா செய்யது? எனக்கு பிடிச்ச, பிடிக்காத லிஸ்டை ஃபில்டர் செஞ்சு எடுக்கறதுக்கே நாலு நாளாவுமே!!

Barari said...

indira ammaiyaaridam irunthathu unmaiyaana thairiyam.anal jeyavidam iruppathu asattu thairiyam+anavam.jeyavai pondra nadikaiyai oru pothum indira pondravarkaludan oppidatheerkal.trunk petti eppothum valuvakave irukkum.vazthukal sakothari.

ஸாதிகா said...

ஹுசைனம்மா,
தெளிவான சிந்தனை.வாழ்த்துக்களைப்பிடியுங்கள்.

ஹுஸைனம்மா said...

//Barari Says:
04/11/09 17:32

vazthukal sakothari.//

வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி பராரி (பெயர் சரிதானா?).

ஹுஸைனம்மா said...

//ஸாதிகா Says:
04/11/09 18:34

ஹுசைனம்மா,
தெளிவான சிந்தனை.வாழ்த்துக்களைப்பிடியுங்கள்.//

அக்கா,

பாராட்டுக்கு ரொம்ப நன்றி. பத்திரமா பிடிச்சு வச்சுகிட்டேன்.

S.A. நவாஸுதீன் said...

இப்பதான் முதன் முதலா வர்ரேன். உங்க டிரங்குப்பொட்டி பெரிய சைஸ் அஞ்சரைப்பெட்டின்னுதான் சொல்லனும். நிரைய விஷயம் இருக்கே. இனி இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

நாஸியா said...

ஜெய்ப்பூரில் கடந்த வாரம் பெட்ரோல் கிடங்கில் பிடித்த தீ இன்னும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் பலவிதமான உடல்நிலைக் குறைவுகளுக்கு ஆளாகத் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் கவலைக்குரியன.


ஹ்ம்ம்.. துவா செய்வோம்.. எப்படி இருக்கீங்க லாத்தா? ஒரு வழியா இங்க வந்து சேர்ந்தாச்சு! :)

ஹுஸைனம்மா said...

//S.A. நவாஸுதீன் Says:
05/11/09 09:42

நிரைய விஷயம் இருக்கே. இனி இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நவாஸ்.

ஹுஸைனம்மா said...

நாஸியா Says:
05/11/09 10:31

ஹ்ம்ம்.. துவா செய்வோம்.. எப்படி இருக்கீங்க லாத்தா? ஒரு வழியா இங்க வந்து சேர்ந்தாச்சு! :)

நல்லா இருக்கேன் நாஸியா. பதிவுகள் வராதேபோதே நினைத்தேன், ஏற்கனவே சொன்னபடி இங்கே வந்திருப்பீர்கள் என்று. என் மெயிலுக்கு உங்கள் தொடர்பு விவரங்கள் அனுப்புங்கள், பேசலாம்.

Anonymous said...

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தீர்கள். ஜூனியர் மானாட மயிலாட என்று நிகழ்ச்சிகளை நடத்தி சிறார்களின் சிந்தனையை சீரழிப்பதைவிட இது எவ்வளவோ மேல் அல்லவா?

ஹுஸைனம்மா said...

/Anonymous Says:
08/11/09 20:12

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தீர்கள். ஜூனியர் மானாட மயிலாட என்று நிகழ்ச்சிகளை நடத்தி சிறார்களின் சிந்தனையை சீரழிப்பதைவிட இது எவ்வளவோ மேல் அல்லவா?//

நிச்சயமாக!! அதனால்தான் என் வீட்டில் சன் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது.

cheena (சீனா) said...

டிரங்குப் பெட்டி சூப்பர்

இந்திரா - அவர் இருந்திருந்தால் இந்தியா எங்கோ போய் இருக்கும்
என்ன செய்வது ...

தலைவர்கள் இறக்கும் போதெல்லாம் தமிழ் நாட்டில் கலவரம் தான்

சின்னச் சின்ன ஆசை - பேருந்தில் நின்றது - ஆகா ஆகா அருமையான சிந்தனைகள்

அமுத கானம் ப்திம்னியை நினைவுறுத்தியதா - நன்று

நல்வாழ்த்துகள் ஹூஸைனம்மா