Pages

கொண்டாட்டங்கள்
எல்லாரும் போடறாங்களே, நம்மளும் போடுவோம் இந்த தொடர்பதிவை. யார் இதப்போய் படிக்கபோறாங்க, பதிவு எண்ணிக்கையில ஒண்ணு கூட, அவ்வளவுதான் அப்படின்னு நினைச்சு எழுதினேன். அடேயப்பா, என்னா ஆதரவு அதுக்கு!! எத்தனையோ சமூகக் கருத்துக்கள் நிறைஞ்ச (சரி..சரி.. டென்ஷன் ஆவாதீங்க..) பதிவுகள்லாம் போட்டேன், அதெல்லாம் படிக்க ஆளக் காணோம், இதப் படிச்சு எனக்கு ஆதரவு தெரிவிச்ச என் அன்பு நண்பர்கள் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

முதமுதலா எனக்கு அனானி பின்னூட்டமெல்லாம் வந்தது இந்தப் பதிவுலதாங்க!! அதிலயும் ஒரு அனானி, நல்ல அனானி. எனக்கு ஆதரவா (ஆனாலும் கொஞ்ச உள்குத்தோடதான்) பின்னூட்டம் போட்டிருந்தார். அப்புறம் நிறைய பேர் வந்து ரொம்ப “அன்பா” பாராட்டிட்டு போயிருந்தாங்க. பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு மாசத்திலேயே இப்படி பாராட்டு வாங்குறதுன்னா சும்மாவா? எவ்வளவு பெரிய விஷயம்!!

எனக்குப் பிடித்த தலைவர்களை ஏன் எனக்குப் பிடித்தது என்று ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன். ஆனா இப்ப உடனே இல்லை. என்னைப் பாராட்டினவங்கல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், அப்புறம் பார்க்கலாம். ஆனா ஒரு விஷயம் பார்த்தீங்களா, ராமதஸையுந்தான் பிடிக்கலன்னு சொன்னேன். அதுக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை!!

சரி, அப்படி இப்படி நானும் கன்ஃபர்மா பிரபல பதிவர் ஆகிட்டேன். மனசு சந்தோஷத்துல றெக்கை கெட்டி பறக்க ஆரம்பிச்சிடுச்சு. அதக் கொண்டாட வேண்டாமா? அதனால நேத்து சாயங்காலம் வீட்டிலயே கே செஞ்சு கொண்டாடி மகிழ்ந்தோம். கேக்குன்னா சாதாரண கேக் இல்லீங்க, மஃபின்ஸ்ன்னு சொல்வாங்களே அந்த கப் கேக். வெனிலா கப் கேக், சாக்லேட் கப் கேக், கேரட் மஃபின்ஸ்னு வெரைட்டியா செஞ்சு அசத்திட்டோம்ல.

சாப்பிடும்போது என்னை பிரபலம் ஆக்கிய புண்ணியவான்களைத்தான் நினைச்சுகிட்டேன். அப்படியே கண்ணெல்லாம் நெறஞ்சு, தொண்டையெல்லாம் அடைச்சு, சாப்பிடவே முடியலைங்க. அதனால கொஞ்சம் தண்ணி (H2o தான்) குடிச்சுட்டு அப்புறம் சாப்பிட்டேங்க.

புள்ளைங்களுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். ரொம்ப நாளா கேக் செய்யச்சொல்லிட்டே இருந்தாங்க. இப்பத்தான் அவங்க ஆசை நிறைவேறியிருக்கு.

கேக் செய்யுறதில வெண்ணெய், முட்டை, சீனியைப் போட்டு கைகொண்டு (manual egg beater) நல்லா நுரை வர அடிக்கணும். அதுதான் முக்கியம். எனக்கு கைவலிக்கும்கிறதால எங்க வீட்டு ரங்ஸ்தான் ஹெல்ப் பண்ணுவார். எப்பவாவதுதானே கேக் செய்யுறோம்னு எலெக்ட்ரிக் பீட்டர் வாங்கவில்லை. அதோடு, நான் செய்வதில்லையே, ரங்ஸ்தானே செய்கிறார் என்ற அலட்சியம் வேறு. இந்த முறை வாங்கிவிட்டேன். அதனால் வேலை ரொம்ப ஈஸியாக முடிந்ததென்று ரங்ஸுக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வளவு நாளா ஏன் வாங்கலைன்னு கோவம் வேற.

இவ்வளவு நாளா அப்பாதான் கேக் செஞ்சாருன்னு எல்லார்ட்டயும் சொல்லிட்டிருந்த பிள்ளைங்க நேத்துதான் அம்மா கேக் செஞ்சதா ஃபோனில் உறவினரிடம் சொன்னார்கள்.

கேக் மட்டுமல்ல, கரும்பும் சாப்பிட்டோம். பொங்கலுக்கு இன்னும் நாளிருக்கேன்னு யோசிக்கிறீங்களா? எங்க ரங்ஸ் நேத்து இங்க இருக்க ஷேக் பேலஸில் இருக்கும் பம்பிங் ஸ்டேஷன் பார்க்கிறதுக்காகப் போனாராம். அங்க கரும்புத் தோட்டம் இருந்துதாம்!! அங்கு வேலை செய்பவர் இரண்டு கரும்பை வெட்டிக் கொடுத்தாராம். அதையும் வெட்டி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதியை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்று வைத்திருக்கிறேன். வீட்டில் கரும்பு ஜூஸ் போடுவது எப்படின்னு அறுசுவை.காம்-ல் போய்த் தேடிப்பார்க்கணும். சமையல் டிப்ஸுக்கு அங்கேதான் போவேன் எப்பவும்.

அடுத்த முறை ஆப்பிள் கேக் செய்யணும் என்று பேசிக்கொண்டிருந்தபோது சின்னவன் திடீரென்று ஞாபகம் வந்து சொன்னான், அவன் வகுப்பில் ஒரு பையன் ஆப்பிள் கொண்டுவந்ததாகவும், அதை ட்ரஸ்ஸைக் கழட்டாமல் சாப்பிட்டான் என்று சொல்லவும், எல்லாரும் கொஞ்சம் குழம்பிப் போக, ஆப்பிள் சாப்பிட ஏண்டா டிரஸ்ஸைக் கழட்டணும் என்று பெரியவன் கேட்கவும் ஆப்பிளின் டிரஸ்ஸைக் கழட்ட வேண்டாமா என்று கேட்டான் அந்த அறிவாளிப் பிள்ளை.

வேறோரு சம்பவமும் ஞாபகம் வந்தது. எண்பதுகளில் என் அப்பா என் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ஆப்பிள் போன்ற பழங்கள் வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னவர், என்னிடம் “தோலோடு சேர்த்துச் சாப்பிடணும், சரியா? தோலில்தான் நிறைய சத்து இருக்கு” என்றார். சில வருடங்களுக்கு முன், என் மகனை (வேறு) மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அதேபோல பழங்கள் கொடுக்கச் சொன்னவர், இதையும் சொன்னார் “மறக்காமல் தோலை எடுத்துவிட்டுக் கொடுங்கள். தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் (traces) இருக்கலாம். இப்ப மெழுகு வேறு தடவுகிறார்களாம்”!!

Post Comment

21 comments:

சந்தனமுல்லை said...

நல்லா ஃபுலோ!
எவ்வளவு மாற்றங்கள்...ஒருதலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும்!! :-)

இப்படிக்கு நிஜாம்.., said...

//அதை ட்ரஸ்ஸைக் கழட்டாமல் சாப்பிட்டான் என்று சொல்லவும், எல்லாரும் கொஞ்சம் குழம்பிப் போக, ஆப்பிள் சாப்பிட ஏண்டா டிரஸ்ஸைக் கழட்டணும் என்று பெரியவன் கேட்கவும் ஆப்பிளின் டிரஸ்ஸைக் கழட்ட வேண்டாமா என்று கேட்டான் அந்த அறிவாளிப் பிள்ளை. //

ஹா..ஹா..,ஹா..,தொடரட்டும்

ஸாதிகா said...

வீட்டிலேயே கரும்பு ஜூஸ் செய்யும் குறிப்பு கிடைத்தால் அவசியம் எனக்கும் சொல்லுங்கள் ஹுசைனம்மா.:-)

பீர் | Peer said...

அந்த மஃபின்ஸ்... :))) சார்லீஸ் ஏஞ்சல்ஸ் ஞாபகம் வந்துச்சு..

தராசு said...

ஹுஸைனம்மா,

செம ஃபார்ம்ல இருக்கீங்க போல.

நடத்துங்க நடத்துங்க.

நாஸியா said...

I am not able to type in Tamil. some problem.. :(

konjam andha muffins a inga anupi uduringala?

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

இந்த நாளை சர்வதேச அனானி நாளாக அறிவிச்சுட்டு கேக்கு வெட்டி இருக்கலாம்.

அ.மு.செய்யது said...

கெஸட்டில் இனிமேல் உங்கள் பெயரை பிரபல பதிவர் ஹூசைனம்மா என்று மாற்றி கொள்ளவும்.

உங்க பக்கம் வரவே பயமாயிருக்கு..!!!! இதுல கேக் வேறயா ??? அவ்வ்வ் !!

Barari said...

apple pazaththai ilam soodana thanneeril kazukinaal athilulla wax veliyaaki vidum.thudaiththu vittu piraku saappidalaam.neengal nandrakave pirabalam aki vitteerkal.

ஹுஸைனம்மா said...

//சந்தனமுல்லை Says:
06/11/09 17:34

நல்லா ஃபுலோ!
எவ்வளவு மாற்றங்கள்...ஒருதலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும்!! :-)//

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை. ஆமாம், எவ்வளவு மாற்றங்கள்!!

ஹுஸைனம்மா said...

//இப்படிக்கு நிஜாம்.., Says:
06/11/09 17:44

ஹா..ஹா..,ஹா..,தொடரட்டும் //

நன்றி நிஜாம்; தினம் தினம் வீட்டில் இது தொடர்கிறது.

ஹுஸைனம்மா said...

//ஸாதிகா Says:
06/11/09 20:23

வீட்டிலேயே கரும்பு ஜூஸ் செய்யும் குறிப்பு கிடைத்தால் அவசியம் எனக்கும் சொல்லுங்கள் ஹுசைனம்மா.:-)//

கிடைச்சு, செய்திட்டேன் அக்கா. சாதாரணமா ஜூஸ் செய்வது போலத்தான் இதுவும் செய்தேன்.

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
06/11/09 23:07

அந்த மஃபின்ஸ்... :))) சார்லீஸ் ஏஞ்சல்ஸ் ஞாபகம் வந்துச்சு..//

யாருங்க அது சார்லீஸ் ஏஞ்சல்ஸ்? உங்க ஹோட்டல் செஃபா? ;-))

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
07/11/09 08:22

ஹுஸைனம்மா,

செம ஃபார்ம்ல இருக்கீங்க போல.

நடத்துங்க நடத்துங்க.//

எல்லாம் உங்க ஆதரவாலயும்தான்...

ஹுஸைனம்மா said...

//நாஸியா Says:
07/11/09 08:57

konjam andha muffins a inga anupi uduringala?//


அதுக்கென்ன அனுப்பிட்டா போச்சு; ஃபோன் நம்பர் மெயிலுக்கு அனுப்புங்க பேசலாம்.

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
07/11/09 12:33

இந்த நாளை சர்வதேச அனானி நாளாக அறிவிச்சுட்டு கேக்கு வெட்டி இருக்கலாம்.//


ஆமால்ல, செஞ்சுருக்கலாம்...
எங்க போன பதிவுல ஆளக் காணோம்? அனானியப் பாத்து பயந்துட்டீங்களா?

ஹுஸைனம்மா said...

//அ.மு.செய்யது Says:
07/11/09 15:14

உங்க பக்கம் வரவே பயமாயிருக்கு..!!!! இதுல கேக் வேறயா ??? அவ்வ்வ் !!//

இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? உங்களுக்கு பயமாருந்தா சொல்லுங்க, பாதுகாப்புக்கு ஆள் அனுப்பிடலாம்.

ஹுஸைனம்மா said...

//Barari Says:
07/11/09 15:58

apple pazaththai ilam soodana thanneeril kazukinaal athilulla wax veliyaaki vidum.thudaiththu vittu piraku saappidalaam.neengal nandrakave pirabalam aki vitteerkal.//

ஆமாம், சாப்பிடலாம்தான். ஆனாலும் வேண்டாமென்று விட்டுவிடுவேன்.

நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.

S.A. நவாஸுதீன் said...

மூச்சு விடாம பேசுவாங்களே சிலபேர். அதுமாதிரி மூச்சுவிடாம எழுதி இருக்கீங்க. நானும் மூச்சுவிடாம படிச்சிமுடிச்சிட்டேன். நல்ல ஃப்லோ

ஹுஸைனம்மா said...

//S.A. நவாஸுதீன் Says:
08/11/09 16:04

மூச்சு விடாம பேசுவாங்களே சிலபேர். அதுமாதிரி மூச்சுவிடாம எழுதி இருக்கீங்க. //

வாயாடின்னு சொல்ல வர்றீங்க, அப்படித்தானே?

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

ஆப்பிள் தோல் வேண்டுமா வேண்டாமா - அப்பப்ப நிலைமைய அனுசரிச்சுப் போகணும்

கேக் செஞ்சீங்களா - நம்ப முடியவில்லை

நலலருக்கு இடுகை

நல்வாழ்த்துகள்