Pages

கல் வைத்த அட்டிகை







கல் வைத்த அட்டிகை
கல்யாணத்தில் போட ஆசை
கல்லுக்கும் தங்கத்தின் விலையாமே
கணக்குப்போட்ட தந்தையின்
கவலையான முகத்தைக் கண்டு
கைவிட்டாள் ஆசையை
கன்னியவள்


கண்ணே பொன்னே மணியே
கொஞ்சி என்ன வேண்டும் கேளெனக்
கேட்டவனிடம் சொன்னாள்
கல்லென்ன வைரமே வாங்கலாமெனக்
கண்ணானவன் சொல்ல கண்மயங்கினாள்
கடைக்குப்போய் விசாரித்த
கொண்டவனின் மெலிதான தயக்கம்
கண்டு சினந்து ஆசையைக்
கலைத்தாள் மீண்டும்

காலங்கள் கழிய
கையிருப்பாய் சுயசேமிப்பு இருக்க
கனவு மீண்டும் தலையெடுக்க
கண்கவர் கல்நகை பார்த்தெடுத்து
கல்லாவுக்கு வந்து காசுகொடுக்கையில்
கைவிடப்பட்டோருக்கு உதவுங்கள்
கருணைப் பெட்டி கண்டு
கைகழுவினாள் ஆசையை
காலத்திற்கும்!!



Flash picture: http://www.beitalkhair.com/

Post Comment

42 comments:

SUFFIX said...

//கல்லுக்கும் தங்கத்தின் விலையாமே//

குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பாயின்ட், கல் வைத்த நகை வாங்குவது உண்மையில் நஷ்டமே, அம்மனீஸ் கவனிச்சுக்குங்க.

SUFFIX said...

//கல்லாவுக்கு வந்து காசுகொடுக்கையில்
கைவிடப்பட்டோருக்கு உதவுங்கள்//

கல்லாவுக்கு வருகையில், கல் நினைவு வந்தது அருமை!!

SUFFIX said...

ஹூசைனம்மா நல்லா எழுதியிருக்கீங்க!! வாழ்த்துக்கள்.

பீர் | Peer said...

இது வேற ஆரம்பிச்சாச்சா? நடக்கட்டும்...

க 'னவுக்கு க 'ன மடக்கி மடக்கி எழுதியிருக்கீங்க :)

வாழ்த்துக்கள்.

எல்லா நகை கடையிலும் இந்த பொட்டி வைக்க ஏற்பாடு பண்ணனும். ஆமா.. இப்டி எல்லாரும் திரும்ப போய்டா??

பீர் | Peer said...

//கல் வைத்த நகை வாங்குவது உண்மையில் நஷ்டமே, அம்மனீஸ் கவனிச்சுக்குங்க.//

ஷஃபி, 'கல் வைத்த' இதை மட்டும் தூக்கிடுங்களேன். :)

பீர் | Peer said...

//கல்லாவுக்கு வருகையில், கல் நினைவு வந்தது அருமை!!//

ரோட்ல கெடக்குற கல்ல தூக்கி கல்லாகாரன் தலைல போடாம வந்தாங்களே.. அதுவே பெரிய விஷயம்.

அது யாரு நீங்களா அம்மிணி?

பீர் | Peer said...

சொல்ல வந்ததை மறந்துட்டேன்.

ஹூசைனம்மா, நல்லா எழுதியிருக்கீங்க. :)


ஷஃபி, நான் (4) தான் லீடிங் :)

SUFFIX said...

//பீர் | Peer Says:
11/01/2010 10:57
//கல் வைத்த நகை வாங்குவது உண்மையில் நஷ்டமே, அம்மனீஸ் கவனிச்சுக்குங்க.//

ஷஃபி, 'கல் வைத்த' இதை மட்டும் தூக்கிடுங்களேன். :)//

அக்கா இங்கே கல் வைத்த அட்டிகை பத்தி தானே சொல்லியிருக்காங்க. நகைய பகைச்சுக்க முடியுமா?

தராசு said...

நீங்களும் அந்த என்டர் குரூப்புல சேர்ந்துட்டீங்களா???

அய்யோ, அய்யோ

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் கவிதை.

//குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பாயின்ட், கல் வைத்த நகை வாங்குவது உண்மையில் நஷ்டமே, அம்மனீஸ் கவனிச்சுக்குங்க.//

இதை ஆட்டோ பின்னாலயே எழுதலாமே.

கவிதையும் கருத்தும் அருமை.

S.A. நவாஸுதீன் said...

கல் வைத்த கவிதை நல்லாத்தான் இருக்கு

S.A. நவாஸுதீன் said...

/////கைவிடப்பட்டோருக்கு உதவுங்கள்
கருணைப் பெட்டி கண்டு
கைகழுவினாள் ஆசையை
காலத்திற்கும்!!/////

எல்லாக் கடையிலும் இந்தப் பெட்டியும் இருக்கனும். எல்லாரும் உங்களைமாதிரியேவும் இருக்கனும்.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு...

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு கவிஞர் :)

Prathap Kumar S. said...

சே... உங்ககிட்ட இவ்ளோ நல்ல விசயங்கல்லாம் இருக்கா... கும்மி அடிக்கலாம்னு வந்தேன்..அழவச்சிட்டீங்க... கிரேட் எஸ்கேப்பு...நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

பை தி வே ...கவிதை ரொம்ப நல்லாருக்கு...:-)

ஹுஸைனம்மா said...

ஷஃபி - கும்மிக்கும் (!!, பாராட்டுக்கும் நன்றி. (ஆனாலும், நான் உங்களுக்குப் போட்டியா வந்துடுவேனோங்கிற உங்க பயம் தெரியுது).

பீர் - எல்லா கடையிலும் இந்தப் பெட்டி வச்சாலும் எல்லாரும் என்னை மாதிரி நல்லவளா இருக்க மாட்டாங்க பாத்துக்கோங்க!!

நன்றி பாராட்டுக்கு.

//ரோட்ல கெடக்குற கல்ல தூக்கி கல்லாகாரன் தலைல//
நம்ம கோவத்துக்கு கல்லாகாரன் தலை எதுக்கு? அதுக்குத்தான் ஒருத்தர் இருக்காரே!!

//தராசு Says:
நீங்களும் அந்த என்டர் குரூப்புல சேர்ந்துட்டீங்களா??? அய்யோ, அய்யோ//

என்னா பொறாமை தராசுக்கு!! வீட்ல போய் சுத்திப் போடணும் எனக்கு!!

//அக்பர் Says:
கலக்கல் கவிதை.
//குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பாயின்ட், கல் வைத்த நகை வாங்குவது உண்மையில் நஷ்டமே, அம்மனீஸ் கவனிச்சுக்குங்க.//
இதை ஆட்டோ பின்னாலயே எழுதலாமே.//

ஊர்ல எல்லா ஆம்பிளைங்களுக்கும் கல் வச்ச நகைன்னா கஷ்டமாத்தான் இருக்கு!! சாதா நகைக்கே அழுவாங்க, அப்புறம் எங்கே...

நன்றி அக்பர்!!

நவாஸ் - நன்றி. அதான் சொன்னேனே, எல்லாரும் என்ன மாதிரி கிடையாதுன்னு.

அண்ணாமலை சார் - நன்றி.

அப்துல்லாஹ் - அப்ப என்னையும் கவிஞர்னு ஒத்துக்கிறீங்களா இல்லை தலையில அடிச்சிக்கிறீங்களா? தெளிவாச் சொல்லுங்க?

பிரதாப் - நான் நல்லவதான்னு யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க!!

Jaleela Kamal said...

ஹுஸைம்மா எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பித்தீங்க..

முன்று விஷியங்களை எடுத்து சொல்லிட்டீங்க... நல்ல இருக்கு பா.

கிளியனூர் இஸ்மத் said...

ஏம்மா...!
கல் நகைமேலே இவ்வளவு கோபம்...?

கல்லுக்கு பவுனு விலைன்னாலும்
உங்க தோழிகளின் சொல்லுக்கு ஈடாகுமா விலை?
ரொம்ப நல்லாருக்குடி ன்னு

கல்லு நகையை விட
உங்க கவிதை சொல் நடை
நல்லாருக்கு....
வாழ்த்துக்கள் !

mush said...

//தராசு Says:
நீங்களும் அந்த என்டர் குரூப்புல சேர்ந்துட்டீங்களா??? அய்யோ, அய்யோ//

என்னா பொறாமை தராசுக்கு!! வீட்ல போய் சுத்திப் போடணும் எனக்கு!!

//

அப்ப ஆபீசுல இருந்தா எழுதுதிருங்க

ஜெய்லானி said...

\\\கடைக்குப்போய் விசாரித்த
கொண்டவனின் மெலிதான தயக்கம்\\\
புன்னகை இருக்க பொன்(கல்)நகை எதற்கு என்ற தயக்கமே

கவிதை அருமை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹூசைனம்மா நல்லா எழுதியிருக்கீங்க!! வாழ்த்துக்கள்

நாஸியா said...

ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து...

அட பார்த்தா கவிதை எல்லாம் இருக்கே!! :) கலக்குறீங்க போங்க‌

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

pudugaithendral said...

கலக்கல்
கல்லுக்கும் தங்கத்தின் விலையாமே//
உள்ளே கொசுவத்தி சுத்துது.
வீடியோ சூப்பர் ஹுசைனம்மா//

enrenrum16 said...

கவிதை நன்றாக இருக்கிறது. தன் மனைவியின் இந்த குணத்திற்காகவாவது அந்த கணவன் கல்நகை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

R.Gopi said...

கஷ்டப்படும் அடுத்தவர்களின் நிலை கண்டு, கலங்கி, நகை வாங்கும் ஆசையை துறந்து, அந்த ஆசையை அடுத்தவர் துயர் துடைக்க விழைந்தமைக்கும், அதை இங்கே கவிதையாய் வடித்தமைக்கும் பாராட்டுக்கள்.....

எடுத்துக்கொண்ட விஷயமும், அதை சொன்ன விதமும் அருமை...

வாழ்த்துக்கள் ஹூசைனம்மா....

ம்ம்ம்.... நம்மளுக்கு போட்டியா எவ்ளோ பேரு கவிதை எழுத வந்துட்டாங்கப்பா.... (இதை நான் சொல்லவில்லை.... ஏதாவது கவிஞர்கள் சொல்லலாம்....)

malar said...

ஹுஸைன்ம்மா என்க்கும் இந்த நினைப்பு கல் நகை வாங்கும் போது வரும் கல் நகை விற்கும் போது கல்லை கழித்து தான் எடை போடுவகள் .

கவிதை ரொம்ப சூப்பர் .

நீங்களே எழுதியதா ?இல்...லா சும்ம தமாசுக்கு கேட்டேன் .

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, ரொம்ப அழகாக் கவிதை கொடுத்திருக்கீங்க.
இவ்வளவு நாட்கள் ஆசைப் பட்டதைத் தானம் செய்வது பெரிய விஷயம்.
எத்தனையோ விதத்திலும் இது உதவியாக இருக்கும். வாழ்த்துகள்.

அம்பிகா said...

\\R.Gopi said...
எடுத்துக்கொண்ட விஷயமும், அதை சொன்ன விதமும் அருமை...

வாழ்த்துக்கள் ஹூசைனம்மா....\\

வழிமொழிகிறேன்

☀நான் ஆதவன்☀ said...

அட!

நல்லாயிருக்குங்க :)

Thenammai Lakshmanan said...

கல்லாவுக்கு வருகையில் கல் வைத்த நகையை விட கருணையைக் கைக் கொண்டது அருமை ஹுசைனம்மா

நட்புடன் ஜமால் said...

கடைசியல் அருமை பன்ச்

நல்ல எண்ணம் ...

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா
கவிதை புரியல
கவிதை புரியல என்று
சொல்லிவிட்டு இப்படி
சொல்லெடுத்து கவிபடைத்த மாயமென்னவோ

அழகான கவிதை
அதுசரி நகைன்னா அதுவும் கல்நகைன்னா என்ன ஹுசைன்னம்மா

[மலிக்கா ஓடிடு இல்லைன்னா ஹுசைன்னம்மாமாஆஆஆஆஆஆஅ]

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இன்னும் இந்த மாதிரி எத்தன படைக்க போறீங்க? :))கீ போர்டின் எண்டர் பட்டன் வாழ்க :)

நான் சமைக்கற சாப்பாடு மாதிரி இருக்கு ஹூசைனம்மா :) சும்மா சொன்னேன்.. நல்ல கருத்து..

Beski said...

வாழ்த்துக்கள்.

புகழன் said...

கவிதை நல்லாயிருக்கு...
//
கருணைப் பெட்டி கண்டு
கைகழுவினாள் ஆசையை
காலத்திற்கும்!!
//

இப்படி கைகழுவ வேண்டிய ஆசைகள் ஏராளம் உள்ளன.

இன்னும் அதிக கவிதைகள் எழுத வாழ்த்துகள்

ஸாதிகா said...

அடடா..கவிதையில் கலக்குகின்றீர்கள் ஹுசைனம்மா

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Unknown said...

"எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்)"

இன்ஷா அல்லாஹ்

இறையவன் உங்களுக்கு தந்தருளிருக்கும் இந்த திறமையை வெறும் அலங்காரத்திற்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தாமல், இறை பெருமை எடுத்துரைத்திட பயன்படுத்திடவேண்டும் என்பது என் போன்றவர்களின் விருப்பம். தங்களின் கடமையை உணர்ந்து இறைபணியில் இனி உங்களை ஆழ்த்திக்கொள்வதற்கே அல்லா உங்களுக்கு வழி வகைகள் செய்து கொடுத்துள்ளார். முறைப்படி அதை செய்து இறைப்பணி ஆற்றுங்கள்.


- ஹமீதுல்லா

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நன்றி.

இஸ்மத் அண்ணே - நீங்க ஒருத்தர்தான் வாங்கியிருக்கலாம்னு சொல்றீங்க. சந்தோஷம்!! பாராட்டுக்கும் நன்றி.

முஹம்மது - வந்த இடத்துல கவிதையைப் பத்தி ஒண்ணும் சொல்லாம, இதெல்லாம் நோண்டிகிட்டு!!

ஜெய்லானி - நன்றி. புன்னகை சிறக்கவும் பொன்னகை உதவும் சில சமயம்!!

செந்தில் - நன்றி.

நாஸியா - நன்றி; எங்க ஆளக் காணோம்? ரெஸ்ட் எடுக்கிறீங்களா?

ஃபாத்திமா - நன்றி.

தென்றல் - நன்றி தென்றல்.

என்றும் - அதானே? சரியாச் சொன்னீங்க. நன்றி.

கோபி - ரொம்ப நன்றி விரிவான பாராட்டுக்கு. நானெல்லாம் மத்தவங்களோட போட்டிக்கு வர இன்னும் ரொம்ம்ம்ம்ம்ப நாளாகும்!!

ஹுஸைனம்மா said...

மலர் - ஆமா, நிறைய நஷ்டம்தான் கல்நகையில். நானேதான் எழுதினேன் மலர். நம்பமுடியலை இல்ல? எனக்கே முடியல!!

வல்லியம்மா - நன்றி.

அம்பிகா - நன்றி.

ஆதவன் - நன்றி.

தேனக்கா - நன்றி.

ஜமால் - நன்றி.

மலிக்கா - இருந்தாலும் உங்க ரேஞ்சுக்கு வருமா? கவிதைநயத்தால் மனம் நகையுறச் செய்யும் உங்களுக்கு கல்நகை தெரியாததில் ஆச்சர்யமில்லை!!

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - இன்னும் நிறைய கவிபடைக்கும் எண்ணம் உள்ளது, எண்டர் பட்டன் தேயும் வரை!! நீங்க சமைச்ச சாப்பாடுன்னாலும், தப்பித்தவறியாவது ஒருசிலமுறையேனும் நல்ல ருசியா இருக்குமில்லியா? ;-)

அதிபிரதாபன் - நன்றி.

புகழன் - நன்றி.

ஸாதிகாக்கா - நன்றி

சக்தியின் மனம் - நன்றி.

ஷாஹுல் - நன்றி இறைவசனம் ஞாபகப்படுத்தியமைக்கு.