Pages

காதலில் விழுந்தேன்







நானும் காதலில் விழுந்தேனோ
தகவல் அனுப்பிவிட்டு
பதிலுக்காக
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்
குறுஞ்செய்திகள் கண்டு 
எனக்குள் நகைக்கிறேன்
கூட்டத்தில் இருந்தாலும்
தனியே இருக்கிறேன்

அவர் சொன்னதை நினைத்து
எழுதியதை யோசித்து
வரும் புன்னகை மறைக்கிறேன்
இப்படி எழுதியிருக்கலாமோ
அப்படிச் சொல்லியிருக்கலாமோ
குழம்புகின்றேன்

கவிதை கிலோவென்ன விலைகேட்ட
நானும் கவிதை வடிக்கின்றேன்
சந்திக்கலாமா எனக் கேட்டதும்
பரவசப்படுகிறேன்
நாளை எண்ணி எண்ணியிருந்து
சந்திப்பில் பேச முடியாமல்
தவிக்கிறேன்

நான் ஏன் இப்படி?
எப்போது மாறினேன்?
நினைத்துப் பார்த்தேன்
பிளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்துதான்!!




Post Comment

33 comments:

Prathap Kumar S. said...

தமிழ்சினிமாவுல வர்ற காதல் பாட்டு ஒவ்வொண்ணுலேருந்தும் ஒருவரியை உருவிப்போட்டா அது கவிதைன்னு நாங்க ஒத்துக்கனுமா???


லேபிளை இப்படி மாத்திப்போடுங்க... நகைச்சுவை, கவிதை மாதிரி, கவுஜை கவுஜை

S.A. நவாஸுதீன் said...

ஆகா! கவிதை மேல் காதல் ரொம்ப ஜாஸ்தியால்ல இருக்கு. சரிதான். புரியும்படி எழுதியிருக்கியளே. அதுவே பெரிய சந்தோசம். நல்லாதான் இருக்கு. முயற்சி திருவினையாகட்டும்.

SUFFIX said...

கட்சி மாறியாச்சா? இப்படித்தானுங்கோ, யாரை விட்டுச்சு இந்த ஜூரம். இது ட்ராஃப்ட்டு மாதிரி இருந்தாலும் டாப்பை தொடுகிற மாதிரி இருக்கு. போட்டிக்கு நிறைய பேரு கிளம்பிட்டாங்க போலிருக்கு, இனி கவிதை பாடும், படும் பாட்டை...!!

ஸாதிகா said...

ஆஹா..ஹுசைனம்மா..ம்ம்..சாட் பண்ணும் பொழுது கேட்கிறேன்

அப்துல்மாலிக் said...

இது எப்பவுலேர்ந்து சொல்லவே இல்லை

இங்கேயும் ஜுரம் தொத்திக்கிச்சா

சரி ரைட்டு

கண்ணா.. said...

//கவிதை கிலோவென்ன விலைகேட்ட

நானும் கவிதை வடிக்கின்றேன்//


என்னங்க இது....சோறு வடிக்கற மாதிரி சொல்லுறீங்க....ம்..ரைட்டு

நானும் வடிச்சுற வேண்டியதுதான்....

கண்ணா.. said...

//நாஞ்சில் பிரதாப் said...

தமிழ்சினிமாவுல வர்ற காதல் பாட்டு ஒவ்வொண்ணுலேருந்தும் ஒருவரியை உருவிப்போட்டா அது கவிதைன்னு நாங்க ஒத்துக்கனுமா???//

உன்கிட்ட யாரு கேட்டா..?

இந்த நாஞ்சில் எக்ஸ்பிரஸை பஞ்சர் பண்ணி விட்டாதான் அடங்குவான் போல.....!!

பீர் | Peer said...

ம்.. நானும் ப்ளாக் பக்கம் வந்தப்புறம் மாறிப்போனேன்.

ஆனால் நான் வைஸ்வெர்ஸாவாக.. :(

கண்ணகி said...

புரியறமாதிரி கவிதக்கு முதல் பாராட்டு.பிளாக் என்னெல்லம் பண்ணுது...

அன்புடன் அருணா said...

அதுசரி!

sathishsangkavi.blogspot.com said...

//நான் ஏன் இப்படி?
எப்போது மாறினேன்?
நினைத்துப் பார்த்தேன்
பிளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்துதான்!!//

நீங்களுமா....

Thamiz Priyan said...

நல்ல வேளை நான் இந்த அளவு ஆகலை.. ;-)

செ.சரவணக்குமார் said...

ஹுஸைனம்மா நீங்களுமா????

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமை கவிதை

கலக்குறீங்க போங்க ...

malar said...

நான் என்னத்தா சொல்ல ....

ஏற்கனவே நான் திருநெல்வேலி பக்கம் கோல் போடுகிறேன் என்று கம்லைண்ட்.

என்னா பிரதாபு ...

malar said...

நான் என்னத்தா சொல்ல ....

ஏற்கனவே நான் திருநெல்வேலி பக்கம் கோல் போடுகிறேன் என்று கம்லைண்ட்.

என்னா பிரதாபு ...

Chitra said...

பதிவுலகம், நம் திறமைகளை அப்படியே வெளியே இழுத்துக்கிட்டு வருதுங்கோ...... நல்லா இருக்குங்க.

ஜெய்லானி said...

///கவிதை கிலோவென்ன விலைகேட்ட
நானும் கவிதை வடிக்கின்றேன்///

அதுசரி!!!! தூள் கிளப்புங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

அடுக்குதொடர் முயற்சி நல்லா வந்திருக்கு ஹுசைனம்மா...!

Anonymous said...

அப்படிப்போடுங்க :)

நட்புடன் ஜமால் said...

அட - இம்பூட்டு ஆயிப்போச்சா ப்லாக்ல

☀நான் ஆதவன்☀ said...

ஹூஸைனம்மா... முடியல :)))

எல்லாம் ”ப்ளாக்கோகோபியா” வியாதி பண்ற வேலை :)

Unknown said...

அண்ணாச்சியோட கவிமடத்தில சீட்டு போடுறீங்களாக்கும் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))

உண்மையிலேயே ரொம்ப சீரியஸா படிச்சுட்டு வந்தேங்க, கடைசி வரி செம ஜெர்க். நல்லா சிரிச்சிட்டேன்.

அம்பிகா said...

இந்த ப்லாக் என்னவெல்லாம் பண்ணுது.
ப்லாக் எழுத ஆரம்பிச்சதில இருந்து `முழியே’ மாறிடுச்சுன்னு வீட்லே ஒரே கேலி.
நல்லாஇருக்கு ஹுஸைனம்மா.

லெமூரியன்... said...

சமையல் குறிப்பை வைத்து ஒரு கவிதை....
குழந்தைகளை வைத்து ஒரு கவிதை...

இப்டி எதிர்பார்த்து வந்தவனுக்கு ......
இப்படி ஒரு லவ்வு கவிதையை படிச்சி அதிர்ந்துட்டேன்...!

கல்யாணம் ஆகி பன்னண்டு வருஷம் கழிச்சி இப்டிலாம் கற்பனை கூட செய்ய முடியாதேன்னு
யோசிச்சிகிட்டே கடைசி வரியை படிச்சி முடிச்ச பிறகுதான் மனசுல ஒரு நிம்மதி...!

ஆனாலும் ஒரு நிமிஷம் terror ஆகிட்டேன்!
:-) :-) :-) :-)

angel said...

நானும் காதலில் விழுந்தேனோ
.................
நினைத்துப் பார்த்தேன்


உங்கள் கவிதை படிக்க ஆரம்பித்ததிலிருந்து

அன்புத்தோழன் said...

ஆஹா... நீங்களும் அந்த க்ரூப்ப சேந்த ஆளா? சொல்லவே இல்ல.... ஒரு தினுசா தான் இருக்கு கவித... ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க...

All the bestngo...

ஹுஸைனம்மா said...

பிரதாப், //அது கவிதைன்னு நாங்க ஒத்துக்கனுமா???//

நீங்க என்ன கவிதைக்கு ISO ச்சர்டிபிகேட் கொடுக்கற ஆப்பிசரா?

நவாஸ், நன்றி.

ஷஃபி - நன்றி. பாராட்டுறீங்களா, திட்டுறீங்களான்னே தெரியல!

ஸாதிகா - நன்றி.

அபுஅஃப்ஸர்- நன்றி.

கண்ணா - நன்றி. சோறு நல்லா வடிப்பேன்; அதுபோதாதா கவித எழுத?
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே பஞ்சர் ஒட்டித்தான் ஓடிகிட்டிருக்கு. அதனாலத்தான் “லொடலொட” சவுண்டு.

பீர் - நன்றி. வைஸ்வெர்ஸான்னா - அப்ப திரில்லே இருந்திருக்காதே?

கண்னகி - நன்றி.

அருணா டீச்சர்- நன்றி.

சங்கவி - - நன்றி. நான் என்ன சமையல் குறிப்பா எழுதுனேன்? “நீங்களுமா”ன்னு கேக்குறீங்க!!

தமிழ்ப்பிரியன் - நன்றி.

சரவணக்குமார் - நன்றி. நீங்களுமா இப்படிக் கேக்கிறீங்க?

ஸ்டார்ஜன் - நன்றி.

மலரக்கா - - நன்றி. அப்பப்ப ஸேம் சைட் கோல் போடுவீங்க.

சித்ரா - நன்றி.

ஜெய்லானி - நன்றி.

சின்னம்மிணி - நன்றி. எதப் போட கீழ? ;-)

ஜமால் - நன்றி. ஆமா, மறுபடியும் வசந்தம்.

ஆதவன் - நன்றி. இந்த ஃபோபியாக்கு எதாவது மருந்து இருக்கா?

சுல்தான் பாய் - அய்யோ, அவ்ளோ பெரிய ஆள் இல்லைங்க நானு!!

அமித்தம்மா - நன்றி. உங்க ரேஞ்சுக்கு நினைச்சுட்டீங்களோ என்னை? நானெல்லாம் லோக்கல்தான்!!

அம்பிகா - அதேதான் இங்கயும். நன்றி.

லெமூரியன் - அதிர்ச்சியா? சரிதான். - நன்றி.

ஏஞ்சல்- நன்றி. என் பிளாக் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து பிளாக் படிக்கிறதையே நிறுத்திட்டாங்க சிலர்.

அன்புத் தோழன் - அட தமிழ்ல டைப்ப ஆரம்பிச்சுட்டீங்களே!!- நன்றி.

அமுதா said...

:-))

ஷாகுல் said...

என்னது இங்கயுமா?

சரி ரைட்டு.

//இந்த ஃபோபியாக்கு எதாவது மருந்து இருக்கா?//

மச்சான வீட்டு வேலை செய்ய சொல்லீட்டு நீங்க பிளாக் எழுதுறதாலதான் இது வருதாம்.
வீட்டு வேலையெல்லாம் நீங்களே பன்னிட்டீங்கனா இந்த நோய் சீக்கிரமா குணமாகிடுமாம். முயற்சி பன்னி பாருங்க.

கோமதி அரசு said...

வலை காதல் மிக மோசமானது.

அதில் சிக்கி தவிப்பவர்கள் ஏராளம்.

காதல் வயப்பட்டவர்கள் தன் துணையிடம்மிருந்து கடிதம் வந்து இருக்கிறதா என்றுப் பார்ப்பது போல் நாம் எழுதிய எழுத்துக்கு பாராட்டியோ, அல்லது கேலி செய்தோ வரும் மெயிலை பார்க்கும் தவிப்பு . நாம் மாறித்தான் போனோம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதான பாத்தன்.. முதல்ல நல்லாத் தான் இருந்தாங்க இப்போத்தான் என்னமோ ஆயிடுச்சுன்னு.. உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா? :))