Pages

எனக்கென்ன? எனக்கென்ன?






இப்ப சிலகாலமா பெண்களின் சுதந்திரம் குறித்து பல ஆண்பதிவர்கள் புரட்சிகரமாக எழுதிட்டு வர்றாங்க. அவங்களோட அக்கறையை நினைச்சு அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.


இந்த பெண் ஈயம் பேசுறவங்க கூட பெண்களுக்காக இந்தளவு வாதாடுனதுமில்லை; போராடுனதுமில்லை.  ஆண்கள் பெண்களுக்காகப் பேசினாத்தான் எடுபடுமோ?


அப்படின்னா, பெண்கள் ஆண்களுக்காகப் போராடணுமோ? எது எப்படியோ, நமக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வர்ற ஆண்களுக்கு நானும் கைம்மாறு செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன செய்யலாம்னுதான் ஒரே யோசனையா இருக்கு.


சரி, நம்ம சமூக ஆண்களுக்கு ஆதரவா குரல் எழுப்புவோமா? இல்ல, இல்ல, நாம சார்ந்த சமூகத்துக்கே குரல் கொடுத்தா நமக்கு “குறுகிய மனப்பான்மை கொண்டவர்” இல்லன்னா “சாதி/மதப் பற்றுடையவர்” இப்படி ஏதாவது பட்டம் கொடுத்துடுவாங்க. அதுவுமில்லாம நம்ம சமூகத்து ஆண்கள்தானே நம்மளை அடக்கி வைக்கிறாங்கன்னு நல்லவங்கள்லாம் எடுத்துச் சொல்றாங்க, அப்புறம் அவங்களுக்காக நாம ஏன் வாதாடணும்? எப்படியும் தொலயட்டும் அதுங்க.


வேற யாருக்காக குரல் கொடுக்கலாம்? (என்னவோ டப்பிங் பேசப்போறன்னு நினைக்காதீங்க,  இது உரிமைக்குரல்!!) பொதுவா எல்லா தமிழ் ஆண்களுக்கும்னு குரல் கொடுக்கலாமா? சரி, அவங்களுக்கு என்ன குறைன்னு கண்டுபிடிப்போம்.


டிரஸ் - அதெல்லாம் அவரவர் இஷ்டப்படிதானே போட்டுட்டு அலையுறாங்க. அதுவும் நல்ல வசதியானவுங்க, பணக்காரவுங்கதான் அங்கங்கே கிழிஞ்சு தொங்கற டவுசர், அதுவும் முக்காவா அரையான்னு தெரியாத அளவுக்கு ஒண்ணைப் போட்டுக்குறாங்க. படத்துலயெல்லாம் கூடப் பாத்தோம்னா, ஆறு பை, எட்டு பை வச்சு அதக் காமிக்கிறதுக்காகவே டாப்லெஸ்லயெல்லாம் வர்ற அளவுக்கு அவங்களுக்கு சொதந்தரம் இருக்கத்தானே செய்யுது.


அதுலயும் ஹேர் இஷ்டைலப் பாத்தீங்கன்னா - பாக்காதீங்க, சகிக்காது. கரண்ட் ஷாக் அடிச்சு நட்டுகிட்ட மாதிரி, முள்ளுமுள்ளா நிக்க வக்கிறதுதான் இப்ப ஃபேஷனாம். இருங்க, இருங்க, ஹேர் ஸ்டைல் பத்திப் பேசுனவுடனேதான் ஞாபகம் வருது... சர்தார்ஜி!! யெஸ், யாருக்காகப் போராடணும்னு தெளிவு வந்துடுச்சு!!


இந்த சர்தார்ஜிங்கல்லாம் ஏன் தலையில டர்பன் போட்டுருக்காங்க? அது கட்டாயமாமே? அதெப்படி கட்டாயமாக்கலாம்? யாரைக் கேட்டு கட்டாயமாக்குனாங்க? அவிங்க (யாரந்த அவிங்க?) கட்டாயமாக்குனாங்கன்னா, இவங்களாவது ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா?  காலத்துக்கேத்தபடி மாறவேண்டாமா? இப்படியா அடங்கி இருப்பது?


எவ்வளவு புதுப்புது ஹேர்ஸ்டைல் வந்துருக்கு? பிறந்ததுலருந்து முடியே வெட்டக்கூடாதாமே? அட, பொம்பளைங்க நாங்களே இப்ப முடி வளக்குறதில்லை, இவங்க ஏன் இன்னும் இப்படி...


வெயிட், வெயிட்,  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களுக்காகக் குரல் (மறுபடி மறுபடி டப்பிங்தான் நினைவுக்கு வருது) எழுப்புறேனே, அவங்க எல்லாரும் வந்து என் பதிவப் படிச்சு, ஹிட்ஸ் எகிற வச்சு, பின்னூட்டக் கும்மியும்  அடிப்பாங்கதானே? என்னாது, அவங்களுக்கு தமிழ் தெரியாதா? இந்த வெட்டி வேலைக்கெல்லாம் வரமாட்டாங்களா? அடப் போங்கய்யா, அவங்க முடி வெட்டினா எனக்கென்ன, வெட்டாட்டி எனக்கென்ன? டர்பன் வெச்சா எனக்கென்ன, வெக்காட்டி எனக்கென்ன?




Post Comment

42 comments:

ஜீவன்பென்னி said...

(-:)))))

sultangulam@blogspot.com said...

அவுங்க டர்பன கழட்டித்தானே நாங்க கிண்டலடிக்க இன்னும் வசதியா இருக்கும்.

Prathap Kumar S. said...

நீங்க சர்தாரை கிண்டல் பண்றிங்களா? இல்ல அவங்களுக்காக சப்போர்ட் பண்றீங்களா?
இப்படி சர்தாரை கிண்டல் பண்ணிட்டே இருங்க அவங்க பிரதமரா ஆகிடுவாங்க. நாம அப்படியேத்தான் இருப்போம்.

சார்தார் டர்பன் அணிவது சர்தார்களின் புனிதநூலான குருகிரந்த் ல் குறிப்பிடப்பட்டுள்ள விசயம். அதைஅவர்கள் பின்பற்றுகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுவதும், அதைபின்பற்றுவதும் அவரவர் தனிப்பட்ட விசயமாகவே தோன்றுகிறது. சர்தார்கள் படிக்காவிட்டாலும் இதுபோன்ற மதஉணர்வு விசயங்களை விவாதிக்காமல் இருப்பதே நல்லது.

ஜெய்லானி said...

///எப்படியும் தொலயட்டும் அதுங்க.///
அம்மா ஹுஸைனம்மா நீங்க பேசாம இருந்தாலே போதும். ஏன் சாபம் எல்லாம் தறீங்க. படிக்கும்போதே வயத்தை கலக்குதே!!!!!!!

Chitra said...

சர்தார்ஜி மூளைக்காக வாதாடி கேட்டுருக்கேன். அவங்க டர்பன், முடி ஸ்டைல் எல்லாத்துக்கும் "குரல்" கொடுத்து - கண் கலங்க வச்சிட்டீங்க..... அடுத்து, எந்த போராட்டம் னு சொல்லுங்க. நானும் கொடி பிடிக்க வாரேன். ஹா, ஹா,ஹா,..... நல்லா இருக்குங்க, இந்த பதிவு.

ஜெய்லானி said...

///வேற யாருக்காக குரல் கொடுக்கலாம்?///
ஏன் இந்த கொலவெறி!!!

இராகவன் நைஜிரியா said...

அம்மா தாயே நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே எங்களை காப்பாத்த... ரொம்ப நன்றிம்மா.. (சிவாஜி பாணியில் படிக்கவும்)..

நைஜிரியாவில், நான் இருக்கும் இடத்தில் பிரச்சனை ஒன்றுமில்லை. தங்கள் பின்னூட்டத்திற்கு, அன்புக்கும் நன்றிகள் பல.

நட்புடன் ஜமால் said...

நானும் கைம்மாறு செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்.]]

கைம்மாவா

அல்லது மாறு கையா

நல்லா கிளப்புறாங்கப்ப பீதிய ...

நட்புடன் ஜமால் said...

யெஸ், யாருக்காகப் போராடணும்னு தெளிவு வந்துடுச்சு!!]]

எப்படியோ தெளிவா இருந்தா சரிதான்

நாஸியா said...

அட்ரா சக்க அட்ரா சக்க‌

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நீங்களும் பிரபலம் தான்

ஒரு - யாரோ போட்டு இருக்காங்க ...

கண்ணா.. said...

//வேற யாருக்காக குரல் கொடுக்கலாம்? (என்னவோ டப்பிங் பேசப்போறன்னு நினைக்காதீங்க, இது உரிமைக்குரல்!!) //

ஹா..ஹா ..உரிமை குரல் சூப்பருங்கோ...

:)

☀நான் ஆதவன்☀ said...

குத்துங்க எசமான் குத்துங்க.... இந்த சர்தார்ஜிங்களே இப்படி தான் எசமான், தமிழ் தெரியாதுங்க.... குத்துங்க.

முதல்ல அவங்களுக்கு ஏன் தமிழ் தெரியல?ன்னு பிரச்சனை செஞ்சு தமிழ் கத்து கொடுத்து அதுக்கப்புறமா அவங்களுக்காக உரிமைக்குரல் என்ன திருக்குறள் கூட சொல்லி கொடுக்கலாம். ஹிட்ஸ் பயங்கரமா எகிறும் ஹூஸைனம்மா :))

தராசு said...

நல்லாத்தான இருந்தீங்க ஹுஸைனம்மா!!!!

என்ன ஆச்சு? ஏன் இந்த மர்டர் வெறி?

சிம்ம‌பார‌தி said...

யெப்போ.. என்னமோ சொல்றீங்கனு தெரியுது.. ஆனா என்னான்னு தான் புரியல... எதாயிருந்தாலும் எங்களுக்காக குரல்(டப்பிங் இல்லீங்கோ) கொடுக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுல்ல அதுக்கு ஒரு பெரிய நன்றி...

-சிம்மபாரதி

அகமது சுபைர் said...

நான் இன்னா சொல்ல?? என் ரூம் மேட்டும் சிங் தான்..

எங்க வீட்டுல வெப்கேம் வழியா பேசிக்கினு இருந்தேன். அம்மா திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. எப்பேர்ப்பட்ட குடும்பம் இப்படி ஆயிடுச்சேன்னு... என்ன ஏதுன்னு விசாரிக்கும் முன்ன அப்பா திட்ட ஆரம்பிச்சிட்டாரு..அப்புறம் தான் புரிஞ்சது, சிங் டர்பனைக் கழட்டிட்டு தூங்கும்போது அம்மா அவனை பொண்ணுன்னு நினைச்சிட்டாங்க.. உடனே அவனை எழுப்பி அம்மா அப்பா கிட்ட காட்டி அவன் ஆம்பிளை தான்னு சொன்னப்புறம் தான் ஏத்துக்கிட்டாங்க :(

அகமது சுபைர் said...

நான் இன்னா சொல்ல?? என் ரூம் மேட்டும் சிங் தான்..

எங்க வீட்டுல வெப்கேம் வழியா பேசிக்கினு இருந்தேன். அம்மா திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. எப்பேர்ப்பட்ட குடும்பம் இப்படி ஆயிடுச்சேன்னு... என்ன ஏதுன்னு விசாரிக்கும் முன்ன அப்பா திட்ட ஆரம்பிச்சிட்டாரு..அப்புறம் தான் புரிஞ்சது, சிங் டர்பனைக் கழட்டிட்டு தூங்கும்போது அம்மா அவனை பொண்ணுன்னு நினைச்சிட்டாங்க.. உடனே அவனை எழுப்பி அம்மா அப்பா கிட்ட காட்டி அவன் ஆம்பிளை தான்னு சொன்னப்புறம் தான் ஏத்துக்கிட்டாங்க :(

S.A. நவாஸுதீன் said...

நல்லா (ஆண்)ஈயம் காய்ச்சி ஊத்தியிருக்கீங்க. சூடு தாங்கலை.

ஸாதிகா said...

யம்மாடி..ஹுசைனம்மா..நான் இந்த கேமுக்கு வரலே.ஏன்னா..எங்கள் வீட்டுக்கு பக்கத்திலே டர்பன் கட்டிய சிங் நிறைய இருக்காங்க.சிலர் கொஞ்சாம் கொஞ்சாம் டாமிளும் பேசுவாங்க.

S.A. நவாஸுதீன் said...

///நமக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வர்ற ஆண்களுக்கு நானும் கைம்மாறு செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்.///

ஆகா, பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்ங்க்ற மாதிரி எனக்கு ஒரு அசரீரி ஏன் கேட்க்குது.

SUFFIX said...

ஆண்களுக்காக வாதாடனும்னு உங்களுக்காவது தோணுச்சே, ரெம்ப சந்தோஷம். இப்படி யோசிக்க வச்ச ச்ர்தார்ஜிக்களை பாராட்டணும். நானும் தான் பாப், பங்க் ஸ்டைல்ல முடி வளர்க்கலாம்னு பார்த்தா, முடி வெட்டுபவர் அது முடியவே முடியாதுன்னு சொல்லிடுறாரு. என்னத்த சொல்ல.

ஷாகுல் said...

ஆண்களுக்காக போராட வந்த மாதர் குல மாணிக்கம் எங்கள் பூச்சித் தலைவி ச்சீ புரட்சி தலைவி வாழ்க!

Jazeela said...

உங்கள தான் மன்மோகன் சிங் தேடிக்கிட்டு இருக்காராம். :-)

malar said...

என்ன நீங்களும் பிரதாபு மாதிரி மொக்க பொட தொடங்கியாசா?

நாஸியா said...

அப்படியே வேகாத வெயில்ல கழுத்த நெறிக்குற டைய போட்டுட்டு லோலோன்னு அலையுறாங்களே மெடிகல் ரெப், அவங்களுக்காகவும் கொரல் கொடுங்க சகோதரி..

வாங்க புறப்படுவோம், நாமளும் ஆணீயம் சாரி ஆணியம் பேசலாம், ஒடுக்கப்பட்ட ஆண்களுக்காக கொரல் கொடுப்போம்

கண்ணா.. said...

//ஜெஸிலா Says:

உங்கள தான் மன்மோகன் சிங் தேடிக்கிட்டு இருக்காராம். :-) //

ஹா...ஹா... பிரதமரையே தாக்கி பதிவு போடுற அளவுக்கு பிரபலமாயாச்சா.....

எனக்கு முதல்ல இந்த உள்குத்து புரியாம போச்சே.....

pudugaithendral said...

ஆண்கள் போடுற லோஹிப் பேண்ட், ஷார்ட் சர்டை விட்டுட்டீங்க ஹுசைனம்மா??

அபியும் நானும் பாத்ததுலேர்ந்து சர்தார்ஜி மேல ஒரு மதிப்பே வந்திடிச்சு. நானும் கொடி பிடிக்க ரெடி??

கொடி காத்த குமாரின்னு பட்டம்லாம் வேணாம், ப்ளீஸ்

S said...

சில உரிமைக்குரல் ஐடியாக்கள்

கழகக் கண்மணிகள் கரை வேட்டி அணியும்படிக் கட்டாயப்படுத்தப் படுவதை எதிர்த்து..
தோழர்கள் சிவப்புத் துண்டு போட்டுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்தப் படுவதை எதிர்த்து..
பகுத்தறிவுவாதிகள் கறுப்புச் சட்டை அணியும்படிக் கட்டாயப்படுத்தப் படுவதை எதிர்த்து...

செ.சரவணக்குமார் said...

ஆண்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப தானாக முன்வந்த தானைத்தலைவி ஹுஸைனம்மா வாழ்க. ஆனாலும் எவ்வளவு கொலவெறியோட யோசிச்சு பதிவு போடுறீங்க.
தொடர்ந்து குரல் கொடுங்க சிஸ்டர். நல்லாயிருக்கு இந்த வாய்ஸ்.

அம்பிகா said...

///எப்படியும் தொலயட்டும் அதுங்க.///

ஜெஸிலா said...
உங்கள தான் மன்மோகன் சிங் தேடிக்கிட்டு இருக்காராம். :-)

சூப்பர்.

அப்துல்மாலிக் said...

இன்னாச்சி சர்தார்கள் மேலே இவ்வளவு கரிசனம்.. சரிதான் தமிழ் கத்துக்கொடுத்து உங்களையும் பிரபல பதிவராக்கிடலாம‌

SUMAZLA/சுமஜ்லா said...

என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது! சர்தார்ஜி என்பது இங்கு ஒரு சங்கேத வார்த்தை போல!

அப்புறம், பெண்களாகிய நாம் ஆண்கள் கிட்ட இருந்து சுதந்திரம் பெறனும் நினைக்கிறாங்க போல... ஆனா, யார்கிட்ட இருந்தும் பெற வேண்டிய அவசியம் இல்லை அது நமக்குள்ளேயே இருக்குங்கறது எப்போ சில வக்கிரர்களுக்குப் புரியும்?

அ.மு.செய்யது said...

ஹிட்ஸ்,பின்னூட்டம்,சூடான இடுகை இதுலலாம் ஆசை இருந்தா டைட்டில் இப்படி வைக்கக்கூடாதுங்க..!!!

கண்டனம்,பர்தா,எதிர்வினை,எதிர்கவுஜை இப்படி போட்டு தாக்கணும்..அட்லீஸ்ட் நமீதானு ஒரு வார்த்தையாவது இருக்கணும்.

எக்கச்சக்கமா எதிர்பார்க்கிறோம் உங்க கிட்ட இருந்து....!

அன்புடன் மலிக்கா said...

தலைவியே! வாழ்க
கோசம் கேட்குதா ஹுசைனம்மா

goma said...

அடுத்தவங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கே குரல் கொடுக்க ஹுஸைனம்மா ஆஜரம்மா...

பாத்திமா ஜொஹ்ரா said...

இந்த சர்தார்ஜிங்கல்லாம் ஏன் தலையில டர்பன் போட்டுருக்காங்க? //அது கட்டாயமாமே? அதெப்படி கட்டாயமாக்கலாம்? யாரைக் கேட்டு கட்டாயமாக்குனாங்க? அவிங்க (யாரந்த அவிங்க?) கட்டாயமாக்குனாங்கன்னா, இவங்களாவது ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா? காலத்துக்கேத்தபடி மாறவேண்டாமா? இப்படியா அடங்கி இருப்பது?//

மற்றவர் மத உள் விவகாரங்களில் நாம் தலைஇடுவது முறை அல்ல.அக்கா

நிஜாம் கான் said...

ஒரு குரூப்பா கெளம்பிட்டீங்க போல ஹூசைனம்மா! .இதுக்கும் யாராவது எதிர் பதிவு போடுவாங்களா பாக்கலாம். நாங்க சொல்றத விட நீங்களெல்லாம் சொன்னா தான் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்..,

ஹுஸைனம்மா said...

ஜீவன்பென்னி - நன்றி.

சுல்தான் பாய் - நன்றி.

பிரதாப் - நன்றி. //அதைஅவர்கள் பின்பற்றுகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுவதும், அதைபின்பற்றுவதும் அவரவர் தனிப்பட்ட விசயமாகவே தோன்றுகிறது. //

இது, இதத்தான் நானும் சொல்கிறேன். இப்பத் தெரியுதா ஏன் எழுதுனேன்னு? யாருடைய மத உணர்வுகளையும் நான் ஒருபோதும் புண்படுத்தியதுமில்லை; படுத்தவும் மாட்டேன். என் வலி பிறர்க்கு வேண்டாம்.

ஜெய்லானி - நன்றி.

சித்ரா- ஆதரவுக்கு நன்றி.

இராகவன் சார் - நன்றி.

ஜமால் - நன்றி. நான் தெளிவாத்தான் இருக்கேன். :-) மைனஸ் வாங்குறதெல்லாம் எனக்கு புதுசில்ல இப்ப. (ஏற்கனவே பிரபலமாயிட்டோம்ல)

நாஸியா- நன்றி.

கண்ணா - நன்றி. உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தா சொல்லுங்க, கொடல எடுத்திடலாம், சாரி, கொரல் கொடுத்திடலாம்.

ஆதவன் - நன்றி. தமிழ் கத்துக் கொடுக்கலாமே - நல்ல ஐடியாவா இருக்கே!!

தராசு - எனக்கென்ன, இப்பவும் நல்லாவேத்தான் இருக்கேன். நன்றி.

சிம்மபாரதி - வாங்க, முதல் வருகைக்கு நன்றி. என்னது, என்ன சொல்றேன்னு புரியலையா?

சுபைர் - நன்றி. நல்ல காமெடிதான்!!

நவாஸ் - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!!

ஸாதிகாக்கா - சர்தார்கள் நல்லவங்கதான்க்கா.

ஷஃபி - //நானும் தான் பாப், பங்க் ஸ்டைல்ல முடி வளர்க்கலாம்னு பார்த்தா, முடி வெட்டுபவர் அது முடியவே முடியாதுன்னு சொல்லிடுறாரு// உங்க மகனுக்கா உங்களுக்கா?

ஷாஹுல் - கோஷத்துக்கு நன்றி. மைண்ட்ல வச்சுக்கிறேன். இளைஞர் அணிக்குத் தேவைப்படலாம்.

ஜெஸிலா - எங்க ஆளையே காணோம்? என் அட்ரஸ் சொல்லிடுங்க நம்ம பிரதமர்ட்ட!!

மலர் - என்னது இது மொக்கையா? அவ்வ்வ்வ்.. பிரதாப் பிளாக் படிச்சு படிச்சு எதப்பாத்தாலும் மொக்கையாத் தெரியுதா இப்ப?

நாஸியா - ஆண்கள் உரிமைக்காக ஒரு இயக்கமே ஆரம்பிச்சுடலாம்னு நினைக்கீறேன். நிறைய ஆதரவுக்குரலும், அபயக்குரலும் வருது!!

தென்றல் - பட்டத்துக்கெல்லாம் நீங்க ஆசைப்பட மாட்டீங்கன்னு தெரியும். லோஹிப் பேண்ட்டும், ஷர்ட்டும் - என்னத்த சொல்ல!!

S - நன்றி; நல்ல ஐடியாக்கள் - மைண்ட்ல வச்சுக்கறேன்!!

Jaleela Kamal said...

ஹா ஹா ஹுஸைனாமா பதிவயும் படிச்சிட்டு , பின்னூட்டத்தையும் படிச்சிட்டு , வயிறு ரொம்ப நிறைந்து போச்சு. இதுக்கு மேலே என்ன செய்ய.. சர்தார்ஜி க்கும் சேர்த்து குரல் கொடுத்துட்டீங்க,
///நமக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வர்ற ஆண்களுக்கு நானும் கைம்மாறு செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்//
உங்களோடு என்னையும் சேர்த்துக்கங்க சித்ரா வோடு சேர்ந்து நானும் வரேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சர்தார்ஜி ஜோக் படித்த மாதிரி உள்ளது ராத்தா

ஹுஸைனம்மா said...

சரவணக்குமார் - நன்றி.

அம்பிகா - நன்றி.

அபுஅஃப்ஸர் - நன்றி.

சுமஜ்லா - நன்றி. ஆமா சங்கேத வார்த்தைதான்..

செய்யது - சீக்கிரமே அப்படி தலைப்போட ஒரு பதிவு போட்டுருவோம்!! நன்றி.

மலிக்கா - நன்றி கோஷத்துக்கு.

ஹென்றி - என் பிளாக்கை வச்சு சம்பாதிச்சிருக்கீங்க. அப்ப என் பங்கு எங்க?

கோமாக்கா - நன்றி.

ஃபாத்திமா - ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!! நான் தலையிடவில்லை ;-)

நிஜாம் - நன்றி.

ஜலீலாக்கா - நன்றி.

பேனாமுனை - நன்றி. நான் சீரியஸா எழுதிருக்கது சிரிப்பா இருக்கா?

Nasar said...

பொதுவா நான் "கிச்சன் கேபினெட்" பிளாக்கு பக்கம் வர்றதில்லே,நண்பர் ஆஷிக் அஹமது சொல்றாரேன்னு முதல் ரெண்டு வரிய படித்தவுடன் சகோ ஹுசைனம்மா புர்காவை பத்திதான் சொல்லப்போராங்கனு நினைச்சேன்
மூணாவது வரியிலேருந்து ஜெட் வேகத்துல சீரியசான மேட்டர ரொம்ப ஜாலியா
ஆண்களை கலாய்ச்சி இருக்கீங்க....மெய்யாலுமே ரொம்ப நல்லா கீது ....
சகோ ஆஷிக் & CO சிரியஸ் பதிவுகள தொடர்ந்து படிச்சு படிச்சு, நீங்க சொன்னமாதிரி
" கரண்ட் ஷாக் அடிச்சு நட்டுகிட்ட மாதிரி, ஆயிட்டேன் ....இப்பதா நார்மல் கண்டிஷன்ல இருக்கேன் .....சும்மா சொல்லக்கூடாது கடைசி பாராவ அன்பேவா
தலைவர் படம் மாதிரி (என் காலத்துல அது ரொமாண்டிக் படமூங்கோ) ரொம்பவும் சிலாகித்து எத்தனமுற படிச்சேன்னு எனக்கே நியாபகமில்லிங்க ....
ஆண்கள ரொம்பவும் கலாய்ச்சி இருப்பதால உங்களுக்கு
" கலாய்ச்சி தலைவி " பட்டம் கொடுக்க பஞ்சாப் பல்கலை கழகத்துக்கு
சிபாரிசு செய்றேன் .....