Pages

வாழ்த்தலாம் வாருங்கள்
பற்றுடன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

வாசத்துடன்
ரம்ஜான் வாழ்த்துக்கள்

பாசத்துடன்
தீபாவளி வாழ்த்துக்கள்

உடன்வந்த
பக்ரீத் வாழ்த்துக்கள்

இடைவெளிவிட்டு
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

கூடவே
புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழரல்லோ,
பொங்கல் வாழ்த்துக்கள்

கையோடு
குடியரசுதின வாழ்த்துக்கள்

கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கலாம்னா
அதுக்குள்ள வந்திடுச்சு

காதலர் தினம்
வாருங்கள் வாழ்த்துவோம்

குட் ஃப்ரைடேக்கும், மே டேக்கும்
இன்னும் ரெண்டு மாசமிருக்கு நல்லவேளை.


Post Comment

37 comments:

கண்ணா.. said...

இன்னும் ரெண்டு மாசம்லாம் தாங்காது...அதுகுள்ள யாருக்காச்சும், பிறந்தநாள், திருமணநாள், புத்தக வெளியீடுநாள், விகடனில் வந்ததுக்குன்னு எவ்ளோ வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியிருக்கு...

நீங்க அதுகுள்ள கடையை ரெண்டுமாசம் மூட வைக்க பாக்குறீங்களே..........நியாயமா..?

சென்ஷி said...

KANNAVUKKU REPEATTTTUU :)

SUFFIX said...

சீனப் புத்தாண்டு (புலி ஆண்டாம் இந்த தடவை) வாழ்த்துக்களையும் சேர்த்து தெரிவிச்சுக்கிறேனுங்க...

சிநேகிதி said...

அனைத்து நாளும் இனிய நாள் ஆகட்டும்..

அன்புத்தோழன் said...

இதுவரைக்கும் கண்டுபுடிச்ச எல்லா தினத்துக்கும், இனி கண்டுபுடிக்க போற எல்லாத்துக்கும் சேத்து என் வாழ்த்துக்கள்....

//புலி ஆண்டாம் இந்த தடவை//

புதுசு புதுசா கண்டு புடிக்கிராய்ங்களே, ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

சுந்தரா said...

:) நல்லாருக்கு ஹுசைனம்மா :)

சுல்தான் said...

நினைவு வரும்போது
வாழ்த்துவம்
விட்டு வைப்பானேன்
காசா பணமா.
மறப்பதற்கு முன்
கடைசி இரண்டையும்
இப்போதே
சொல்லி வைப்போம் ஹுஸைனம்மா இருப்பில் வைக்க.

Chitra said...

HAPPY VALENTINE'S DAY!

By the way, we don't wish for Good Friday. Of course, the wishes are for Easter. :-)

ஹுஸைனம்மா said...

சித்ரா, நன்றிங்க. ஆமால்ல, ஈஸ்டருக்குத்தானே வாழ்த்து சொல்வாங்க. காலண்டர்ல அடுத்து இந்தத் தினம் இருந்ததினால, அத யோசிக்கல.

Madurai Saravanan said...

anaththu nalla thinangkalukkum inre vaalththukkal. ungkalukku en vaalththukal.

அபுஅஃப்ஸர் said...

பெற்றோர் தினம், ஆசிரியர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், இப்படி........ நிறைய‌

365 நாளும் வாழ்த்து சொல்லப்போகும் தினமாக மாறும் என்பதில் ஐயமில்லை

இருந்தாலும் வாழ்த்துக்கள் என்ற ஒற்ற வார்த்தையில் முடிக்க முடியாதல்லாவா

cheena (சீனா) said...

வாழ்த்து சொல்வதில் சலிப்பு வரலாமா - வாழ்த்துவதில் தயக்கமே கூடாது - தினந்தினம் வாழ்த்தினாலும் தவறில்லை - வாழ்த்தலாம் வாருங்கள் என்ற தலைப்பினைக் கடைப்பிடிப்போம்

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

தமிழ் பிரியன் said...

எல்லா நாட்களும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் said...

இன்னும், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து இருக்கு. அதையும் சேத்துக்குங்க :-)))

malar said...

நல்ல தான் யோசிக்கிரேங்க...

வாழ்துக்கள்.....

ஏன் நீங்க காதலர் தினம் கொண்டாட குடாதா......

☀நான் ஆதவன்☀ said...

கவுஜ கவுஜ! :)

ஹுஸைனம்மா said...

வாங்க சீனா ஐயா. தலைப்புதான் உங்களை என் பிளாக்குக்கு கொண்டுவந்தது என்பதில் மகிழ்ச்சி.

வாழ்த்துவதற்கு என்றும் தயங்கியதில்லை. இதுவரையிலும், இனியும் என் வாழ்த்துக்கள் என் மனமாரத்தான்.

எனினும், புதிதாக இட்டுக்கட்டி கொண்டாடப்படும் காதலர் தினம் போன்றவைகளில் நாட்டமில்லை. அதை மறைமுகமாகச் சுட்டுவதற்குத்தான் இந்த (நகைச்சுவை) கவிதை.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் ஒருவரை சந்தோஷப்படுத்துதே!!!அதனால் தினமும் கூட வாழ்த்தலாம் தப்பில்லை.........

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்தலாம் வாருங்கள் .. எப்பவுமே .
எல்லா நாளும் வளமோடு இருக்க வாழ்த்துக்கள் அப்படின்னுதானே வாழ்த்துவாங்க .

நாஞ்சில் பிரதாப் said...

வாழ்த்துக்களை நிறைய வேஸ்ட் பண்ணிறாதீங்க... இன்னும் நிறைய தேவையிருக்கு...
நாங்க மொக்கைக்கும் வாழ்த்துச் சொல்லுவோம்... வாழ்த்துக்கள்..

அ.மு.செய்யது said...

//SUFFIX said...
சீனப் புத்தாண்டு (புலி ஆண்டாம் இந்த தடவை) வாழ்த்துக்களையும் சேர்த்து தெரிவிச்சுக்கிறேனுங்க...
//

Repeattttugal !!!

எல் போர்ட் said...

அட.. இத வச்சு ஏதாச்சும் கிஃப்ட் தேத்தலாமே.. அதுக்காகவாவது இருந்துட்டு போவட்டும் :)))

எல் போர்ட் said...

சொல்ல மறந்துட்டேனே.. ஹாப்பி வாலண்டைன்ஸ் டே ஹூசைனம்மா.. :)

asiya omar said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.உங்கள் இடுகைகளை இப்பதான் ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன்.எல்லாமே வித்தியாசமாய் ரசிக்கும் படி உள்ளது.

Jaleela said...

//சீனப் புத்தாண்டு (புலி ஆண்டாம் இந்த தடவை)//

ஷபிக்கு தான் இப்படி புதுசா கண்டு பிடிப்பாரு போல.

//புதிதாக இட்டுக்கட்டி கொண்டாடப்படும் காதலர் தினம் போன்றவைகளில் நாட்டமில்லை. அதை மறைமுகமாகச் சுட்டுவதற்குத்தான் இந்த (நகைச்சுவை) கவிதை.// ரொம்ப‌ ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்

ஸாதிகா said...

அபாரம்.அப்படியே என் மனதினை பிரதிபலிக்கின்றது தங்கை ஹுசைனம்மா!

//எனினும், புதிதாக இட்டுக்கட்டி கொண்டாடப்படும் காதலர் தினம் போன்றவைகளில் நாட்டமில்லை.//

அப்படியே வழி மொழிகின்றேன்.

asiya omar said...

Valentine's Day is not just for Lovers - by Aatif Hussain,பாக்கிஸ்தான் டெய்லி டைம்ஸில் ஒரு ஆர்டிகிள் படித்தேன்.நல்ல விவரமாக செய்தி இருந்துச்சு.

Anonymous said...

ஸூ அப்பாடா , மூச்சு விட்டுக்கறேன்

புதுகைத் தென்றல் said...

என்ன கொடுமை ஹுசைனம்மா,

அடுத்தமாசம் சர்வதேச பெண்கள் தினம் இருக்கு. அதுக்குமுன்னே ஹோலி, அதுக்கப்புறம் யுகாதின்னு வாழ்த்த சான்சா இல்ல,

மனசு மட்டும் இருந்தா போதும்.

எல்லோருக்கும் எல்லாத்துக்கும் என் வாழ்த்துக்கள்

ஷாகுல் said...

சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அம்பிகா said...

நல்ல பதிவு. வாழ்த்த மனமிருந்தால் போதும்; காரணங்களா இல்லை.
வாழ்த்துக்கள் ஹூசைனம்மா.

எம்.எம்.அப்துல்லா said...

:)

டவுசர் பாண்டி said...

உங்க ஏரியா பக்கம் இப்ப தாம்பா !! வர்ரத்துக்கு வயி தெரிஞ்சிது ( நீங்க திட்டினது அப்பால , அட அந்த சொம்பு ,ஆலமரம் நாட்டாம கதை )

ரொம்ப ஜாலியா நெரியோ விசியம் எழ்தரீங்கோ !! இனி மெட்டு அடிக் ( கடி ) வரேன் !! பின்ன மெம்பர் சிப்பு அல்லாம் வாங்கி வெச்சிட்டேன்
இல்ல !! அதாம்பா !! சொன்னேன் ,

டவுசர் பாண்டி said...

//கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல.//

அட அப்பிடியா ? யாருப்பா அது , நம்ப ஹுசைனம்மாக்கு ரெண்டு ப்ளேட் .exe வைரஸ் , பார்சல் !!
(மெயில் பார்சல்)

டவுசர் பாண்டி said...

உங்க பிளாக் ஓபன் ஆக நேரம் ஆவுது , மொத பேஜில 7 - போஸ்ட்டிங் கீது !! அதனால தான் , ( வாரக் கணக்கா )
அத ரெடி பண்ணுங்க சகோதரி !! உதவிக்கி இதப் பாருங்க !!

http://athekangal.blogspot.com/2009/12/blog-post_29.html

( பார்சல் வந்துதா அதான் வைரசு பார்சல் )

ஹுஸைனம்மா said...

(அசல்) டவுசர் பாண்டியண்ணே,

வெல்கம் டு மை பிளாக்.

ஆல்ஸோ மெனி மெனி டாங்க்ஸ் ஃபார் யுவர் டிப்ஸ் டு ரெடியூஸ் தெ பேஜ் லோடிங் டைம். ஐ ஹேவ் டன் இட் இம்மீடியட்லி.

இன்னா முழிக்கிறீங்கோ, இத்தான் எங்க குப்பத்து பாஷை!!

ரொம்ப நன்றிண்ணே. (இது கலைஞ்ஜர் (தப்பா எழுதலை) பாஷை)

:-)))))

thenammailakshmanan said...

//இன்னும் ரெண்டு மாசம்லாம் தாங்காது...அதுகுள்ள யாருக்காச்சும், பிறந்தநாள், திருமணநாள், புத்தக வெளியீடுநாள், விகடனில் வந்ததுக்குன்னு எவ்ளோ வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியிருக்கு...

நீங்க அதுகுள்ள கடையை ரெண்டுமாசம் மூட வைக்க பாக்குறீங்களே..........நியாயமா..?//

ஹாஹாஹா ஹுசைனம்மா உங்க எண்டர் கவித அசத்தல்னா கண்ணாவோட இந்த கமெண்டும் அசத்தல்