Pages

ஆறுமுகத்தாய் - 1
ங்க விட்டோம்?  ஆங்..  ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வாப்பாவின் உடல்நிலை காரணமாக, உம்மாவும் சவூதி சென்றுவிட, நானும் தங்கையும் மட்டும் உம்மாவின் வீட்டில். அதனால் ஏற்பட்ட பரிவினால், மாமூட்டுவாப்பாவின் ( தாத்தா)  ஹீரோ பேனாவால் ஹோம்வொர்க் மட்டும் எழுதும் சலுகை  எனக்கும் மட்டும் அவ்வப்போது கிட்டும்.

ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள நெல்லை காந்திமதி அம்பாள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அரசினர்ப் பள்ளி என்பதால், பெரும்பாலும் சுற்றியுள்ள கிராமங்களின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள்தான் அதிகம்; அதோடு, பக்கத்தில் எம்.ஓ.ஸி. (Muslim Orphanage Committee)யிலிருந்து வரும் ஆதரவற்ற பிள்ளைகளும், அங்கேயே பணம் கொடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதியானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் என,  நகரத்தின் மற்ற பள்ளிகள் போலல்லாமல், எல்லாருமே எளிமையானவர்கள்தான். பகட்டு, பணக்காரத்தனம் என்பதையே பார்க்க முடியாது. இது தெரியாமல் வந்து சேர்ந்த சில எக்ஸப்ஷனல்களும், ஒரு மாததிற்குள்ளாகவே வேறு பள்ளிக்குப் போய்விடுவார்கள்.

பள்ளியில் நான், பானு, லாரா ஆகிய மூவரும்தான் செட். முதல் மூன்று ரேங்குகளும் எப்பொழுதும் எங்கள் வசமே. லாரா கிறிஸ்டியனோ என்று நினைத்தேன்,  அவள் அப்பா கம்யூனிஸ்ட்டென்பதனால் வச்சப் பேராம்.  ஆறுமுகத்தாய்தான் எப்பவும் நான்காவது ரேங்க்  எடுப்பாள். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியின் பின்னால்  இருக்கும் சேரியில்தான் அவள் வீடு, இல்லையில்லை, குடிசை. நல்ல உயரம், ஒல்லி, களையான முகம், அதிர்ந்து பேசாத பேச்சு. பார்த்தாலே அவளுக்கு எல்லாரையும்விட வயது ஒன்றிரண்டு அதிகம் என்று தெரியும். யாரோடும் அதிகம் பேசமாட்டாள். ரொம்ப அமைதியாருப்பதைப் பாத்து எனக்கே ஆச்சர்யமாயிருக்கும். பாடத்தில் சந்தேகம் வந்தாலும் அல்லது வேறு என்னதென்றாலும்  என்னிடம்தான் கேட்பாள். அடிக்கடி லீவு போடுவதால், பாடங்கள் எழுத என் நோட்டுகளைத்தான் வாங்கிச் செல்வாள். ஏன் பானுவிடமோ, லாராவிடமோ கேட்பதில்லை என்று தோன்றியதில்லை அப்போ. அதற்காக என்னிடம் அவள் அதிகம் நெருங்கிப் பழகியதுமில்லை. நானும் ஒட்டாமலும், விலகாமலுமாக இருந்தேன். அவள் அங்குள்ளக் குடிசைப் பகுதியில் இருந்து வருகிறாள் என்பதைத் தவிர வேறு விவரங்கள் எதுவும் தெரியாது.

ரு நாள் காலை பள்ளி வந்தபோது, என் பென்ஸில் பாக்ஸில் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பதைப் பார்த்து அதிர்ந்துப் போனேன்!! இரவு எழுத வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன் போல!! அய்யோ, மாமுட்டுவாப்பா என்ன நினைப்பார்கள், கோவப்படுவாங்களோ, வீட்டுக்குப் போனா திட்டு விழுமோ, என்கிட்ட பேனாவைக் கொடுத்திட்டா, எழுத பேனாவுக்கு என்ன செய்வாங்க என்றெல்லாம் எண்ணங்கள் என்னைக் குழப்பின.  அந்தக்காலக் குடும்பங்களில் தாத்தாக்கள்தானே  பவர்ஃபுல்!! முணுக்கென்றால் கோவம் வரும், எல்லாரும் நடுங்கித்தானே நிற்பார்கள். ஆனால், அந்தக் காலம், இந்தக் காலம் எல்லாத்துலயும் பேரப்பிள்ளைங்கன்னா ஒரு தனி பாசம்தானே தாத்தாக்களிடம்!! அதுவும் பெற்றோரைப் பிரிந்து நிற்பதால், என்னிடம் அதுவரை கோவப்பட்டதேயில்லை.

இருந்தாலும், ஹீரோ பேனாவின் அரிய மதிப்பினால், தெரியாமல் மறந்துபோய் பள்ளிக்குத் தங்க வளையலோடு போன மனநிலையில் இருந்தேன் நான். இதைப் பத்திரமாக வைத்திருந்து, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என்பதோடு  திட்டும் வாங்கக் கூடாது என்ற கவலையும் இருந்தது. பத்திரமாக பாக்ஸை மூடி பையினுள் வைத்தேன். இன்று முழுவதும் வகுப்பைவிட்டு வெளியே போகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். கூரை வகுப்புக்கு கதவும் இல்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை.

ன்று மதியம் கடைசி பீரியட். அறிவியல் பாடம், தங்கப்பொண்ணு டீச்சர். விளையாட்டாகப் பேசுவதால் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் கேள்வி-பதில் சொல்லச் சொல்ல, நாங்கள் எழுதிக் கொள்ளத் தொடங்கினோம். அப்பத்தான் ஆறுமுகத்தாய் எழுந்து, தன் பேனா எழுத மாட்டேங்குது என்று சொன்னாள். டீச்சர் வேறு யாரிடமாவது ரெண்டு பேனா இருந்தா கொடுங்க என்று சொன்னார். என்னிடம் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பது ஞாபகம் வந்தாலும், வேறு யாராவது கொடுப்பார்கள் என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன். ஆனால் யாருமே கொடுக்கவில்லை. நான் அமைதியாக இருந்திருக்கலாம்; ஆனால், கேட்பது ஆறுமுகத்தாய் வேறு; எப்படி முடியாதென்று சொல்வது? பென்சில் டப்பாவைத் திறந்து ஹீரோ பேனாவை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அந்த வகுப்பு முடிந்து, பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடி வந்து, பாளையங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறிய பின்தான் ஞாபகம் வந்தது, ஹீரோ பேனா!!! ஆறுமுகத்தாயிடம் கொடுத்தது, பின் திருப்பி வாங்கவேயில்லை!! கண்ணெல்லாம் நிறைந்துவிட்டது எனக்கு. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியே இறங்கித் திரும்பிப் போலாமா, போனாலும் அவள் பள்ளியில் இருக்க மாட்டாளே, வீடும் தெரியாது. லேட்டானாலும் எனக்கும் வீட்டில் திட்டு விழும். எனக்குத்தான் மறந்துவிட்டது; இவளாவது கூப்பிட்டுத் தர வேண்டாமா என்று அவள்மேல் கோவம் கோவமாக வந்தது. என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஊர் ஸ்டாப்பிங் வந்துவிட்டது. வேறுவழியில்லாமல் இறங்கினேன்.

ரி, இன்றையப் பொழுதை எப்படியாவது சமாளிப்போம்; நாளைக் காலை முதல் வேலையா அவளிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன். தாத்தா, விவசாயம், வியாபாரம், தியேட்டர் ஆகியவற்றோடு கொஞ்சம் அரசியலும் செய்வதால், வீட்டிற்கு வரும்போகும் நேரங்கள் நிச்சயமில்லை. தெருவீட்டீல் (ஹாலில்) குழந்தைகள், சாச்சிகள், மாமாக்கள் என்று எல்லாரும் ஜமா நடத்திக் கொண்டிருந்ததால், மாமூட்டுவாப்பா தற்போது  வீட்டில் இல்லை என்பது தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மெதுவாக விசாரித்ததில், இப்பத்தான் காரில் கிளம்பிப் போனது தெரிந்தது. அப்பாடா, இப்பத்தான் போயிருக்காங்கன்னா, வர்றதுக்கு பத்து, பத்தரை ஆகும். இன்னிக்குச் சீக்கிரம் தூங்கிடணும், அப்பத்தான் லேட்டா வர்ற மாமூட்டுவாப்பா கண்ல படாம இருக்கலாம். காலையில் நான் சீக்கிரம் கிளம்பிவிடுவதால் அதிகம் கவலையில்லை.

யாரும் எதுவும் என்னிடம் கேட்காததிலிருந்து, தாத்தா யாரிடமும் எதுவும் சொல்லிவைக்கவில்லை என்பதும் ஊர்ஜிதமானது. நினைத்த மாதிரியே, இரவு சீக்கிரம் தூங்கி, காலை வழக்கத்தைவிடச் சற்று முன்னரே கிளம்பிவிட்டதால் தாத்தா கண்ணில் ஒருமுறை பட்டாலும், கேள்வி எதுவும் கேட்க நிற்காமல் ஓடி வந்துவிட முடிந்தது. பள்ளி வந்து, ஆறுமுகத்தாய் வரவை எதிர்பார்த்து வகுப்பு வாசலிலேயே நின்றேன். ஆனால், அவள் அன்று வரவில்லை!!

Post Comment

37 comments:

☀நான் ஆதவன்☀ said...

அட :) நல்ல சுவாரஸியமா இருக்குங்க. மறுநாள் நீங்க அவங்க வீட்டுக்கு போய் வாங்கிட்டீங்களா?

நாஸியா said...

ஹலோ என்ன இது? இப்படில்லாம் சஸ்பென்ஸ் வெச்சா நாங்கல்லாம் மண்டைய பிச்சுக்கனுமே.. அப்புறம் என்னாச்சு...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

Super narration. very intresting this article. That Hero pen is strongly place in my heart.

me the first?...

அஹமது இர்ஷாத் said...

ஹீரோ பென் உண்மையிலேயே உயர்வானதுதான். உங்க தாத்தாக்கு ரொம்ப ஞாபக மறதி போலும் அதான் நீங்க தப்பிச்சீங்க. ஆறுமுகதாய், தங்கப்பொண்ணு டீச்சர் பெயரும் ஆட்களும் வித்தியாசம்.. சுவராஸ்யமான பதிவு. அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

அடடா!!! சஸ்பென்ஸ் வச்சு
தொடரும் போட்டுட்டீங்களே!!!
சீக்கிரம் தொடருங்க.

நட்புடன் ஜமால் said...

ஒரு த்ரில்லர் எஃப்க்ட்ல படிக்க வச்சிட்டீங்க

சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க ...

ரிஷபன் said...

பேனா திரும்பக் கிடைச்சுதா.. தாத்தா என்ன பண்ணார்.. அய்யோ சஸ்பென்ஸ் தாங்கல..

அநன்யா மஹாதேவன் said...

என்னப்பா இது? பாதியிலேயே நிறுத்திட்டீங்களே? அடுத்த பகுதி சீக்கிரம் வரட்டும்.
ரொம்ப ரொம்ப அருமையான எழுத்து நடை. சரளமான ஃப்ளோ. காட்சிகள் கண் முன் விரிந்தன.

அம்பிகா said...

உங்கள் எழுத்து நடை நல்லா இருக்கு ஹூஸைனம்மா. தொடருக்காக காத்திருக்கிறோம்.

இமா said...

பிறகு என்ன ஆச்சு ஹுசேன்! கெதியா போடுங்க.

மாதேவி said...

ஆ...அப்புறம் என்ன செய்தீர்கள்.

ஜெய்லானி said...

இதெல்லாம் அநியாயம் இப்படியா சஸ்பென்ஸ் வைப்பது. படிக்கும் ஆர்வத்தை கிளப்பி விட்டுடீங்க!!சீக்கிரமா மீதியையும் எழுதுங்க.

நாடோடி said...

தொட‌ருமா இல்லை முடிந்த‌தா?......எதுவுமே போட‌வில்லை....

Anonymous said...

ஏன் இந்த சஸ்பென்ஸு

கண்ணா.. said...

ஓரு ஹீரோ பென்னுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் ஒளிஞ்சுருக்கா??!!

மிக அருமையான எழுத்து நடை...

ஆமா தொடரும்னே போடலையே....

படத்தோட டைட்டில் ஆறுமுகத்தாய்ன்னு வச்சுருக்கீங்க..ஸோ... தமிழ் சினிமா சம்பிரதாயப்படி அவங்க ஹீரோயினாத்தான் இருக்கணும்.

ஆறுமுகத்தாய் என்ன ஆனாள்?

ஹீரோ பென் திரும்ப கிடைத்ததா?

மாமூட்டுவாப்பாவின் எதிர் வினை என்ன?

என்பதை வெள்ளிதிரையில் காண்க...

:))

Chitra said...

உங்களுக்கு ஹீரோ பேனா ஞாபாகம். எனக்கு, பாளையங்கோட்டை ஏரியா ஞாபகம். ரெண்டையும் அருமையாக பிணைத்து சொல்லி இருக்கீங்க. :-)
very nice narrative style.

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா, இப்படி நிறுத்திட்டீங்க????????????????????????
சஸ்பென்ஸ் தாங்கலை.:)
எனக்கும் ஆறுமுகத்தாய் என்று எனக்கும் ஒரு உயிர்த்தோழி இருந்தாள். அவள்தான் ஹீரொ பேனா கொண்டு வருவாள்!!

அக்பர் said...

அப்புறம்?

Jaleela said...

ம்ம் ஹீரோ பேனா தொடர் சஸ்பன்ஸில் தொடருதா பேஷ் பேஷ்.

ஆ எனக்கு மண்டை உடையுது சீக்கிரம் சொல்லுங்கள் என்ன தான் ஆச்சு.

malar said...

இந்த ச்ஸ்பென்ஸ் ரொம்ப ஓவரா தெரியல்ல.....

ம்ம்ம் அப்புறம் என்ன ஆச்சு?

பிரதாபு இல்லாம கும்மிக்கு ஒரு கை குறையுது...

மின்மினி said...

ஹீரோ பேனா மட்டுமல்ல.. நீங்களும் எங்களை ஈர்த்து விட்டீர்கள்.. நல்ல சுவாரசியமிக்க ஒரு படைப்பு.

Rithu`s Dad said...

ஹீரோ பேனா தொடர் சஸ்பன்ஸில் தொடருதா பேஷ் பேஷ்... சீக்கிரம் சஸ்பென்ஸை முடிச்சு வைங்க.. :)

வித்யா said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்.

ஹேமா said...

இன்னும் தொடரும்தானே ! சீக்கிரம்.

ஹுஸைனம்மா said...

ஆதவன் - வாங்க; ஆஹா, நீங்களே முடிவு

பண்ணிட்டீங்களா?

நாஸியா - வாங்க. இன்னிக்கு அடுத்த பாகம் ரிலீஸ்!!

ஸ்டார்ஜன் - நன்றிங்க.

இர்ஷாத் - வாங்க; நன்றிங்க பாராட்டுக்கு. ஆமாம், அந்த

டீச்சரின் பெயர் ரொம்ப வித்தியாச இருந்ததாலேயே

மறக்கல எனக்கு!!

சைவக் கொத்ஸ் - நன்றிங்க. இதோ இன்னிக்கே அடுத்த

பாகம்!!

ஹுஸைனம்மா said...

ஜமால் - வாங்க; த்ரில்லரா?? உள்குத்தோ?? எதுவானாலும்,

நன்றி!! :-))

ரிஷபன் - வாங்க; நன்றி. இன்னிக்கு தெரிஞ்சுடும்.

அநன்யா - வாங்க; நன்றிப்பா.

அம்பிகா - வாங்க; பாராட்டுக்கு நன்றி.

இமா!! இமாதானா? வாங்க; நன்றி கருத்துரைக்கு.

மாதேவி - வாங்க, வாங்க. இன்னிக்குச் சொல்லிடுறேன்.

ஜெய்லானி - வாங்க. எல்லாரும் அடுத்து என்னன்னு

கேக்கிறதப் பாத்தா, கொஞ்சம் டென்ஷனாருக்கு.

ஹுஸைனம்மா said...

வல்லிம்மா - வாங்க; பெரிசா ஒண்ணுமில்ல; அந்த வயசுக்கு எனக்குள்ள இருந்த எண்ணங்களைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான். கருத்துக்கு நன்றி.

ஓ, உங்கத் தோழி பெரிய இடமோ? ;-)) அப்பவே ஹீரோ பேனா வச்சிருக்காங்க!!

அக்பர் - ம், அப்புறம், விழுப்புரம்!! நல்லா கத கேக்குறீங்களே!!

ஜலீலாக்கா - வாங்க; நன்றி. அச்சச்சோ, மண்டை உடையற அளவுக்கு விஷயமேயில்ல இதில!!

ஹுஸைனம்மா said...

எல்லாரும் ஆர்வமாக் கேக்கிறதப் பாத்தா, சப்புன்னு ஒரு முடிவச் சொல்லப்போற என் மண்டை உடையாமத் தப்பிக்கணுமேன்னு பயமா இருக்கு!!

மலரக்கா - வாங்க; நன்றிக்கா. ஏன் பிரதாப்பை விட நமக்கு நல்லா கும்மியடிக்க வருமேக்கா!!

மின்மினி - வாங்க. நன்றிப்பா.

ரீத்து அப்பா - வாங்க; நன்றி. இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில..

வித்யா - வாங்க ; நன்றி.

ஹேமா - வாங்க; நன்றி வருகைக்கும், கருத்துக்கும்!!

ஹுஸைனம்மா said...

நாடோடி - வாங்க; பகுதி-1ன்னு போட்டிருக்கேனே, அதான் தொடரும்னு போடலைப்பா.

சின்ன அம்மிணிக்கா - வாங்க. நன்றி.

கண்ணா - வாங்க; நன்றிங்க கருத்துக்கு. அந்த வயசுல அந்தப் பேனாதான் பொக்கிஷமாத் தெரிஞ்சுது.

நல்லா டிரைய்லர் ஓட்டிருக்கீங்க!!

சித்ரா - வாங்க; நன்றி. ம்ம், ஆமா, அந்த பாளை ஏரியா - நானும் அலைந்து திரிந்த இடம் என்பதால் எனக்கும் பிடிக்கும்.

ராமலக்ஷ்மி said...

அடுத்த பதிவு வரட்டும் சீக்கிரம். பேனா கிடைச்சுதா இல்லையா?

இமா said...

//இமா!! இமாதானா?// ??? ;)

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா,எல்லோருக்கும் அடுத்து நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்ற ஆவலை அதிகப் படுத்தி விட்டீர்கள்.

ஆறுமுகத்தாய் வாருங்கள் சீக்கீரம்.

நட்புடன் ஜமால் said...

ஜமால் - வாங்க; த்ரில்லரா?? உள்குத்தோ?? ]]

அட அதெல்லாம் இல்லீங்க

நெசமா அப்ப என்ன தோனுச்சோ அதை தட்டச்சினேன் ...

"உழவன்" "Uzhavan" said...

செமயா ஸ்கீரீன்பிளே பண்ணுறீங்களே :-)

புதுகைத் தென்றல் said...

சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்க. சீக்கிரம் அடுத்த் பாகம் வரட்டும்.

அப்பாவி தங்கமணி said...

//இருந்தாலும், ஹீரோ பேனாவின் அரிய மதிப்பினால், தெரியாமல் மறந்துபோய் பள்ளிக்குத் தங்க வளையலோடு போன மனநிலையில் இருந்தேன் நான்//

எனக்கே மறந்து போன ஒரு பழைய விசியத்த ஞாபகபடுத்திடீங்க. அப்போ 2nd standard னு நெனைக்கிறேன். ஒரு பேனாவ தொலைச்சுட்டு வந்து அம்மா கேக்கறதுக்கு முன்ன அழுது திட்டு வாங்கரதுல இருந்து தப்பிச்சேன்....உங்க narration ரெம்ப நல்ல இருக்குங்க

R.Gopi said...

ஆஹா...

சரியான இடத்துல தொடரும்னு போட்டு சஸ்பென்ஸ் ஏத்தி விட்டுட்டீங்க மேடம்...

அடுத்த பார்ட் எப்போ?