Pages

ஹீரோ பேனா
பள்ளியின் ஆரம்பகால வகுப்புகளில பலப்பக்குச்சி வச்சு எழுதப் படிச்சுகிட்டு, அப்புறம் பென்சில் வச்சு நோட்டுப் புத்தகத்துல எழுதும்போது  ரொம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கும். பென்சிலால எழுதும்போது, சிலேட்டு மாதிரி நாம எழுதுறது அழிஞ்சு போகாதுங்கிறதுதான் அதீத சந்தோஷமான விஷயமாயிருக்கும். அதுவுமில்லாம, நாம எழுதினதுல, கோணலா உள்ள எழுத்துக்களை மட்டும் அழிரப்பர் வச்சு அழிச்சுட்டு, திரும்பி அழகா எழுதிக்கலாம். இதுவே சிலேட்டு என்றால், ஒரு எழுத்தை அழிக்கும்போதோ அல்லது சும்மா இருக்கும்போதோ, கைபட்டு, அந்த ஏரியாவே அழிஞ்சுபோறது கடுப்பாருக்கும். அதுவும், பென்சிலை, கத்தி அல்லது கத்திரி வச்சு  ஊசியா சீவிட்டு எழுதினா, எழுத்தெல்லாம் பாக்க அச்சடிச்சா மாதிரி அழகா இருக்கும்.  எழுத்து நல்லா இல்லைன்னாலும் கூட நோட்டு ரொம்ப  நீட்டா இருக்கும்.
ஐந்தாம் வகுப்பில்தான் முதன்முதலில் பேனாவால் எழுதுவோம். பிரைமரி ஸ்கூலில் பேனாவால் எழுத ஆரம்பித்தவுடன் “சீனியர்” என்ற கெத்து வந்துவிடும்!! அப்பத்தான் கொஞ்சம் திருந்தி வர ஆரம்பித்திருக்கும் எழுத்தும், பேனாபிடித்து எழுத ஆரம்பித்த மிதப்பிலும், அனுபவமின்மையாலும் தந்தியடிக்க ஆரம்பிக்கும்.  அதுவும் ஃபௌண்டன் பேனாதான் உப்யோகிக்க வேண்டும். ஸ்கூலில், பால்பாயிண்டெல்லாம் கண்டாலே, கை முழியில் மரஸ்கேலை நட்டகுத்தர வைத்து அடி விழும்.  இங்க் தீர்ந்து போதல், ஒழுகுதல், நிப் பிளந்து போதல் என்று அவ்வப்போது பேனாவை ரிப்பேர் பார்க்கும் முயற்சியில் கையில், நோட்டில் இங்க் கறைகளுக்காக டீச்சரிடமும், உடைகளின் கறைக்காக அம்மாவிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.


எண்பதுகளின் ஆரம்பத்தில், ஹீரோ பேனா என்பது, பேனாபிடித்து எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொரு சிறாரின் கனவு!! இன்றைய இளைஞர்களின் கனவான பென்ஸ், லெக்ஸஸ், பி.எம்.டபிள்யூ. போல அன்று எங்களுக்கு!! இரண்டாம் முறையாக எழுதப் பழக ஆரம்பித்திருக்கும் எங்களுக்கு ஒரு ரூபாய் பேனா கிடைத்தாலே அதிகம். இதில் எங்கே ஹீரோ பேனாவுக்கு ஆசைப்படுவது? ஹீரோ பேனாவின் பெருமையே நுனி மட்டும் தெரியும் நிப்பும், கையில் படாமல் இங்க் ஊற்றும் வசதியும்தான். மற்ற லோக்கல் பேனாக்களில் மை அடைக்கக் கஷ்டப்படுவதுபோல இதில் படவேண்டாம்.இந்தியப் பேனாக்களில், அதன் கழுத்தைத் திருகித் திறந்து, அதன் வயிற்றுப் பகுதியில் பிரில் இங்க் பாட்டிலைக் கவனமாகக் கவிழ்த்து மையை ஊற்ற வேண்டும். எவ்வளவு கவனமாக ஊற்றினாலும், அது நிரம்பி வழிந்தோடத்தான் செய்யும் அல்லது அலங்கி கீழே சிந்தும். அதற்கென்று கிடைக்கும் இங்க் ஃபில்லர்களையும் பயன்படுத்தலாம். அப்படியே கவனமாக ஊற்றி விட்டாலும், அதன் கழுத்தை மூடித் திருக்கும்போது பேனாவைக் கவிழ்த்து, இங்க் பாட்டிலின் நேரே பிடித்தால்தான் நிப்பின் வழி விழும் சொட்டுக்கள் கீழே சிந்தாமல் இருக்கும். இதையெல்லாம் எவ்வளவு கவனமாகக் கணக்குப் போட்டுத் துல்லியமாகச் செய்தாலும், எங்கயாவது சிந்தி, நோட்டில் மட்டுமல்லாமல் கையிலும் ஈஷும். அதைத் தன்னிச்சையாக உடையில் துடைக்க, உடையிலும் முத்திரை விழும். வீட்டிலும் அடி நிச்சயப்படும்!!

இதுவே பள்ளியில் வைத்து பேனாவில் இங்க் தீர்ந்துபோனால், அதோ கதிதான்!! யாரிடமாவது கெஞ்சிக் கேட்டு (இன்னைக்கும் நானும் இங்க் ஊத்தலைப்பா!!), கருணைப் பார்வை அருள்பவருக்கு நன்றி கூறி, இருவரின் பேனாக்களையும் திறந்து,  சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம். (இப்பவெல்லாம் டிரான்ஸ்ஃபர் என்றால் அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்தான் நினைவுக்கு வருகிறது!!).


என் வாப்பா சவூதியில் இருந்து வரும்போதெல்லாம் ஒரு பாக்ஸ் ஹீரோ பேனா (12 பேனாக்கள்) வாங்கி வந்தாலும், அவை அதன் அதீத மதிப்பு, அந்தஸ்து காரணமாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமே விநியோகிக்கப்பட்டன. கொடுத்ததுபோக மிச்சம்மீதி இருக்கும் ஒன்றிரண்டு பேனாக்களும் அம்மாவின் கஸ்டடியில் வந்துவிடும். அவை அடுத்த முறை வாப்பா வரும்போது ஒருவேளை பேனாக்களின் எண்ணிக்கை குறைந்தால், சப்ளை-டிமாண்ட் காம்பன்சேஷனுக்கு உதவும்!!.  எவ்வளவு கெஞ்சினாலும்  ”இந்த வயசுலயே..... “ என்று ஆரம்பித்து சில ஆசிகள்தான் எனக்கெல்லாம் கிடைத்தன.ஆசைக்கு வேண்டுமெனில் வாப்பா அல்லது மாமாவின் பேனா எடுத்து எழுதிப் பர்த்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

ஏழாம் வகுப்பு இறுதியில்தான் ஒரு செகண்ட் ஹாண்ட் ஹீரோ பேனா எனக்கே எனக்கென்று கிடைத்தது!!

 (ஹீரோ பேனாவுடன் எனக்கேற்பட்ட சிறுவயது அனுபவம் ஒன்றை எழுத ஆரம்பித்தப்பொழுது, “product introduction"-ஏ இவ்வளவு நீண்டுவிட்டதால், சம்பவம் அடுத்தடுத்த பதிவுகளில் - யெஸ்,  நீங்க தப்பிக்கவே முடியாது!!)

Post Comment

54 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் பதிவை வாசித்த பொழுது மீண்டும் பள்ளி பருவம் புதுப்பிக்கப்பட்ட ஒரு உணர்வு !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அபுஅஃப்ஸர் said...

//ஸ்கூலில், பால்பாயிண்டெல்லாம் கண்டாலே, கை முழியில் மரஸ்கேலை நட்டகுத்தர வைத்து அடி விழும். /


இதான் ஏன்னு இன்னிவரைக்கும் தெரியலே

அநன்யா மஹாதேவன் said...

//நன்றி கூறி, இருவரின் பேனாக்களையும் திறந்து, சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம்//

ஆஹா ஆஹா..அந்த லைஃப்.. மறுபடியும் வரவே வராது! சூப்பர் போங்க! இந்த இன்க் ஃபில்லிங் போஸ்டு நான் கூட ஒண்ணு எழுதி இருக்கேன்பா.. வெட்டித்தனமா பொழுது கழிச்ச நாட்கள் அவை!
http://ananyathinks.blogspot.com/2010/02/blog-post_16.html

புதுகைத் தென்றல் said...

ஸ்கூலில், பால்பாயிண்டெல்லாம் கண்டாலே, கை முழியில் மரஸ்கேலை நட்டகுத்தர வைத்து அடி விழும். /


இதான் ஏன்னு இன்னிவரைக்கும் தெரியலே//

பால்பாயிண் பேனாவில் எழுதினால் கை நரம்புகள் பாதிக்கப்படும். அதிக அழுத்தம் கொடுத்து எழுத வேண்டியிருக்கும். அதுக்கப்புறம் தானே ரெனால்ட்ஸ் பேனா, மைக்ரோ டிப் பேனால்லாம் வந்துச்சு.

புதுகைத் தென்றல் said...

சேம் ப்ளட் ஹுசைனம்மா,

இப்ப கூட என் பசங்களுக்கு ஹீரோ பேனா கொசுவத்தி சுத்துவேன். அயித்தானும் தன் பங்குக்கு தன் கதையைச் சொல்வார். ஹீரோ பேனா கையில வெச்சிருந்தாலே ஒரு தனி அந்தஸ்துவந்த மாதிரிதான்.

இன்னொரு சேம்ப்ளட் மேட்டர் சொல்லட்டா. அப்பா மொதோ தபா ஸ்ரீலங்கா போயிட்டு வந்த போது அழகு விசிறிமடிப்பா வர்ற மிடி ஸ்கர்ட் வாங்கி வந்திருந்தாரு. என் பிறந்தநாளுக்குத்தான்னு நினைச்சிருந்தேன். சொந்தக்காரங்க பொண்ணுக்கு அதை கொடுத்திட்டு இப்பவே என்னன்னு தான் ஆசி கிடைச்சிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தராசு said...

ஒரு பேனாவுக்கே இத்தனை பில்டப்பா????

புதுகைத் தென்றல் said...

ஆஹா என்ன தராசு ஒரு பேனான்னு சாதாரணமா சொல்லிட்டீங்க.

ஹீரோ பேனாங்க ஹீரோ பேனா அது வாங்க பட்ட கஷ்டமெல்லாம் கண்ணுமுன்னாடி வந்து போகுது. டார்கெட் அச்சீவ் செஞ்சா இன்சண்டீவ் கிடைக்கிறமாதிரி நல்லா படிச்சா ஹீரோ பேனா என்பது அப்ப அப்பாக்களின் டயலாக்

கண்ணா.. said...

//இங்க் தீர்ந்து போதல், ஒழுகுதல், நிப் பிளந்து போதல் என்று அவ்வப்போது பேனாவை ரிப்பேர் பார்க்கும் முயற்சியில் கையில், நோட்டில் இங்க் கறைகளுக்காக டீச்சரிடமும், உடைகளின் கறைக்காக அம்மாவிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.//

ஆஹஹா... இதை படிச்ச உடனேயே ப்ளாஷ்பேக் வர ஆரம்பிக்குதே..

நானெல்லாம் காலேஜ் போனதும்தான் ஹீரோ பேனாவை பயன்படுத்த ஆரம்பித்தேன் :(

அப்போது இங்க் நானே தயாரிப்பேன்... என் நண்பர்களும் அதை பயன்படுத்துவார்கள். காலியான பிரில் இங்க பாட்டிலை தேடி அதில் ஊற்றி ஓரிஜினலை போல டப்பாவோடு வைப்பதில் அவ்வளவு ஆர்வம். அதனால்தான் நான் இன்னும் கூட இங்க் பேனாதான் உபயோக்கிறேன்.

பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையிலான நல்ல பதிவு..

ராமலக்ஷ்மி said...

படத்தில் காட்டியிருக்கும் அதே அதே கருப்பு நிற ஹீரோ பேனா ஒருபடியா கிடைத்தது எனக்கும் அப்போது:)! மிக அருமையான பகிர்வு ஹுஸைனம்மா.

அடுத்த பதிவுக்கு நானும் காத்திருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

//ஆஹா என்ன தராசு ஒரு பேனான்னு சாதாரணமா சொல்லிட்டீங்க. //

அதானே!!

என் பையன்கிட்ட சொன்னாலும், இதே ரியாக்‌ஷன்தான் கொடுக்கிறான்!!

ஹுஸைனம்மா said...

//ஆஹா என்ன தராசு ஒரு பேனான்னு சாதாரணமா சொல்லிட்டீங்க. //

அதானே!!

என் பையன்கிட்ட சொன்னாலும், இதே ரியாக்‌ஷன்தான் கொடுக்கிறான்!!

புதுகைத் தென்றல் said...

என் பையன்கிட்ட சொன்னாலும், இதே ரியாக்‌ஷன்தான் கொடுக்கிறான்!!//

இப்ப கேட்டது உடனே எல்லா பசங்களுக்கும் கிடைச்சிடுது. அதனலாதான் அந்த மாதிரி சொல்றாங்க. ஹீரோ பேனா வாங்கிக்கொடுத்து என் பையனுக்கு பத்திரம்பா இது ஹீரோ பேனான்னு சொன்னப்ப அவரும் இதே மாதிரிதான் சொன்னாரு.

அப்புறம் அந்த ஹீரோ பேனா வாங்க நாங்க பட்ட கஷ்டத்தைச் சொல்ல அப்ப புரிஞ்சிச்சு.

தராசு said...

சரி, சரி, தென்றலக்காவுக்கும் சரி, ஹுஸைனம்மாவுக்கும் சரி,

சமாதானமா போயிக்கலாம், வன்முறை கூடாது. சும்மானாச்சுக்கும் ஒரு கேள்வி கேட்டா ரெண்டுதரம் பதில் போடறாய்ங்கப்பா.....

புதுகைத் தென்றல் said...

சரிங்க தராசு அண்ணே,

நலமா

கவிதன் said...

பள்ளிக்கூட நினைவுகள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவையே.... ரொம்ப அருமையான பதிவு ....

Geetha Achal said...

நீங்க சொல்வது, அப்படியே எல்லோர் வாழ்விலும் நடந்து இருக்கும்...நானும் சிறு வயதில் இந்த் ஹீரோ பேனாவிற்கு அம்மாகிட்ட திட்டு வாங்கியது நியபகம்...அதே போல இங்க் டிரன்ஸ்பர் எல்லாம் எனக்கும் நடந்து இருக்கின்றது...ஹா..ஹா...

அக்பர் said...

பேனாக்களின் ஹீரோ. ஹீரோ பேனா.

நானும் வைத்திருந்தேன்.

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா.

மங்கை said...

நல்ல நினைவாடல்....

இந்த ஹீரோ பேனா பற்றி எனக்கும் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் உண்டு..இபோதும் ஹீரோ பேனா பார்த்தா அதே உணர்வு தான் வருது... அந்த காலத்துல ஒரிஜினல் ஹீரோ பேனா னு திருச்சி போனப்போ அங்க வெளிநாட்டு சரக்குகள் விற்கும் கடையில இருந்து வாங்கீட்டு வந்தோம்... அதை வாங்கினதும் எப்படா ஸ்கூலுக்கு போவோம்னு இருந்துச்சு... அப்படி ஒரு பெருமிதம்...இப்ப பொண்ணு கிட்ட சொன்னா லூசாம்மா நீ னு சொல்றா...:) அந்த லூசுதனத்துலேயும் எவ்வளோ சொகம் னு நமக்கு தானே தெரியும்.. ம்ம்ம்

சைவகொத்துப்பரோட்டா said...

அடடே!!! என்னையும் சைக்கிள் பெடல
பின்னால சுத்த வச்சிட்டீங்களே!!
நல்ல மலரும் நினைவுகள்.

கோமதி அரசு said...

ஹீரோ பேனா மலரும் நினைவுகள் அருமை.

என் வாழ்வில் நடந்ததை திரும்பி பார்ப்பது போல் உள்ளது.

என்னிடம் நீல நிற ஹீரோ பேனா இருந்தது.

இக்கால குழந்தைகளூக்கு கேட்டதும் உடனே கிடைத்து விடுவதால் நம் விஷயம் சாதாரணமாய் உள்ளது.

Suresh S R said...

நானும் கடும் முயற்சிக்கு பிறகு 9-ம் வகுப்பில் ஹீரோ பேனா பெற்றேன்.
+1 படிக்கும் பொது என் வகுப்பில் 2 ஹீரோ பேனா வைத்திருந்த பெருமை எனக்கு உண்டு.

NIZAMUDEEN said...

//(ஹீரோ பேனாவுடன் எனக்கேற்பட்ட சிறுவயது அனுபவம் ஒன்றை எழுத ஆரம்பித்தப்பொழுது, “product introduction"-ஏ இவ்வளவு நீண்டுவிட்டதால், சம்பவம் அடுத்தடுத்த பதிவுகளில் - யெஸ், நீங்க தப்பிக்கவே முடியாது!!)//

ஹீரோ பேனாவைக் கையால பிடிச்ச கதையைச் சொல்றீங்க...
அப்படியே பாடங்கள் படிச்ச கதையையும் சொல்லிடுங்க...
எபிசோட் 1, அப்புறம் எபிசோட் 2.... தொடரும்னுலாம்
போடுவிங்களாஆஆஆ....வ்வ்வ்!
(ச்சும்மா! சுவாரஸ்யமாயிருக்குங்க!!!)

நானானி said...

//இருவரின் பேனாக்களையும் திறந்து, சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம்//

நல்ல கொசுவத்தி!!!
நான் எப்போதும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் பேனாவுக்கு மை ஊற்றுவேனாக்கும்.
என்னோட பேவரைட் கலர் கரும்பச்சை நிற ஹீரோ பேனா!

பள்ளி நினைவுகளை கிளறி விட்டுவிட்டீர்கள் ஹூஸைனம்மா!!

ஸ்ரீராம். said...

பேனாவை ஹீரோவா வச்சி ஒரு இடுகையா...பேனா அனுபவங்கள்...

LK said...

நன் கல்லூரில கூட பேனாதான். ஹீரோ பேனா எனக்கு அதிகம் விருப்பம் இல்லை. அதிகம் இங்க் ஊத்த முடியாது அதில. இருந்தாலும் ஒரு ஹீரோ பேனா எப்பவும் கைவசம் இருக்கும்

malar said...

நல்ல ப்ளாஷ்பேக் நேற்று என் மகனுக்கு இங் அடைக்கும் போது நினைவு வந்தது.அவ்ன் இபோது 5 ஆம் வகுப்பு எப்படி அடைபது என்று சொல்லி கொடுத்தேன் .

இன்று உங்கள் பதிவை படிக்கும் போது என் பள்ளி படிப்பு நினைவு வந்தது.

இங் தீர்ந்த்தும் டீச்சருக்கு தெரியாமல் தோழியிடம் இருந்து இங் வாங்குவது உண்டு.

நாடோடி said...

பேனாவை ரிப்பேர் ப‌ண்ணுற‌ வேலையே சூப்ப‌ரா இருக்கும்..... ப‌ழைய‌ நினைவுக‌ளை நினைவு ப‌டுத்துயுள்ளீர்க‌ள்...

Chitra said...

ஏழாம் வகுப்பு இறுதியில்தான் ஒரு செகண்ட் ஹாண்ட் ஹீரோ பேனா எனக்கே எனக்கென்று கிடைத்தது!!


....... இந்த வரிகளை படிக்கும் போது, நீங்கள் பெற்று இருந்த சந்தோஷம் என்னையும் தொற்றி கொள்ளும் விதமாக, சொல்லி இருக்கீங்க. தொடர்ந்து ஹீரோ வை பத்தி சொல்லுங்க......

முகுந்த் அம்மா said...

ஹீரோ பேனா! என்னுடைய பாவோரிட். அப்பா கிட்ட சண்டை போட்டு வாங்கினேன். என்னோட சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு. நல்ல இடுகை.

ராஜ நடராஜன் said...

ஹீரோ ஹீரோதான்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப சூப்பர்.. எல்லாம் சின்ன‌ வயசு ஞாபகங்கள், கொசுவத்திய நல்லா சுத்தவிட்டிருக்கீங்க ஹூசைனம்மா.. நானும் கொசுவத்திய சுத்தலாமுன்னு நினைக்கிறேன். இது தொடர்பதிவா?...

மின்மினி said...

ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு ஹூசைனம்மா. கொசுவத்தி நல்லாவே சுத்திருக்கு. அடிதூள்..பட்டைய கிளப்புங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முப்பது ரூப ஹீரோ பேனா தொலைச்சதுக்கு வீட்ல தொரத்தி தொரத்தி அடிச்சது நியாபகம் இருக்கு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கொசுவத்தி மணம் சுகமாயிருக்கு ஹூசைனம்மா! சீக்கிரமா தொடருங்க.. பேனாவை நோக்கின உங்களோட அதே அதே உணர்வுகள் எனக்கும் உண்டு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இருவரின் பேனாக்களையும் திறந்து, சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம். //

அசத்தல்ங்க.. அந்த காலத்துக்கே கூட்டிட்டுப்பொய்ட்டீங்க :)

Suddi said...

Hi,

I became nostalgic Husainamma.
Thanks.

I still remember very well.

1) During my school days, from 10th to 12th standard, I used only 1 hero pen, golden top & brown bottom.

2) It was my very favorite, I never
shared with any person.

3) My handwriting used to be the
best in school (now, lost the habit of writing itself in
computer world).

So, I used to write the names,
index entries of my friends in school in 10th & 12th standard.

Needless to say, same hero pen.

And after the exams are over, I
will wash the pen thoroughly, dry
them in sun light, put the parts
in 1 cover & keep it in my shelf.

Only before the next examination,
the parts will be assembled back,
filled with ink again.

Same bril ink bottle too :-)

Regards,
Sudharsan

நாஸியா said...

எனக்கே எனக்குன்னு ஹீரோ பேனா நான் ஏழாவது படிக்கும்போது தான் கிடைச்சுது.. அதுவும் வீட்டுல வேங்கி தரல.. என் ஃப்ரென்ட் ஒருத்தி பரிசா தந்தா.. ஆனா மேட்டர் என்னன்னா, சண்ட வந்து பேனாவை திருப்பி கொடுத்தாச்சு.. ஹாஹாஹா..

எனக்கு ஹீரோ பேனாவை விட பைலட் பேனா ரொம்ப புடிக்கும்.. கரைச்சல் இல்லாத வேலை..

நாங்க பத்தாவது எழுதும்போது ஜெல் பேனாக்கள் அறிமுகமாச்சு.. அதுல இருந்து கல்லூரி முடியும் வரை ஜெல் தான்

அமைதிச்சாரல் said...

ஹை!!.. ஹீரோ. எனக்கு அஞ்சாப்பு படிக்கையில் கிடைச்சது. நல்ல அழகான கரும்பச்சை நிறம்.என் தம்பிக்கு கறுப்பு நிறத்தில் கிடைச்சது.ரெண்டு பேனாக்களையும் மாத்திக்கலாம்ன்னு எக்ஸேஞ்ச் ஆஃபர் கொடுத்தான். முடியாதுன்னு சொன்னதுக்கு என்னுடைய பேனாவை ஒளிச்சு வெச்சு,எனக்கு நல்ல மண்டகப்படி வாங்கிக்கொடுத்தான். கடைசில கண்டுபிடிச்சிட்டேன்ல.

அச்..அச்.. கொசுவத்தி ரொம்ப ஓவரா போயிட்டுது :-)))))

ஜெய்லானி said...

ஹீரோ பேனா வில ரெண்டு மாடல் வரும் ,பேனாநிப் பக்கம் தங்க கலரில் ஏரோ மார்க் பாக்கவே அழகா .இதுதான் ஒரிஜினல் அது இல்லாட்டி இது டூப்ளிகேட்டுன்னு சண்டையே வரும். நல்ல மலரும் நினைவுகள்.

ஷாகுல் said...

//- யெஸ், நீங்க தப்பிக்கவே முடியாது!//

இன்னுமா? சரி நடத்துங்க.......

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான நினைவலைகள் ஹூசைனம்மா.

படிக்கிறவங்க எல்லாருக்குமே அவங்க பால்ய காலத்து பேனா ஞாபகம் வந்துடும்.

hamaragana said...

அன்பு சகோதரி ..
ஆட்டோபியாக்ராபி . 1969 வருடம் எனது அண்ணன் நான் 10th படிக்கும்போது
வங்கிதந்தார்கள் ரெம்ப பெரிய விஷயம் . ஆசிரியர் ஏலே ஹீரோ பேனா வச்சிருக்கே..??
ம்ம்ம் பேனாவுக்கு தகுந்த மாதிரி படி லே ஒரு average student... மலரும் நினைவுகள்
--

ஆயில்யன் said...

சூப்பரேய்ய்ய்ய்ய்! ஞானும் கூட ஹீரோ பேனா ரசிகன் இப்பவும் கூட ஊருக்கு போறச்ச கண்டிப்பா ஹீரோ பேனா இருக்கும் ஆனா முன்ன மாதிரியெல்லாம் இப்ப அதிகம் யாரும் விருப்பாத அளவுக்கு மத்த விலையுயர்ந்த பேனாக்கள் மற்றும் பால் பாயிண்ட்பேனாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது !

ஹுஸைனம்மா said...

கருத்துத் தெரிவிச்ச எல்லாருக்கும் பலப்பல நன்றிகள். ஆஃப்டர் ஆல் ஒரு பேனாவைப் பத்தி எழுதுறோமே, எல்லாரும் அலுத்துப்பீங்களோன்னு ஒரு சின்ன தயக்கம் இருந்துது. ஆனா எல்லாருமே சுகமான பழைய நினைவுகளை அசைபோடறதுக்கு இந்தப் பதிவு காரணமா இருப்பதில ரொம்ப மகிழ்ச்சி. நன்றி மீண்டும்!!

SUFFIX said...

நான் வைத்திருந்த மேரூன் கலர் ஹீரோ பேனாவை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். இப்பவெல்லாம் ஹீரோ பேனான்னு நம்பி வாங்க முடியல, அவ்ளோவும் டூப்ளிகேட்டு...

ஜீவன்பென்னி said...

pasumaiyaana ninaivugal.

niyabagapaduthiyatharku nandri.

ஜீவன்பென்னி said...

நிஜமாவே ஹீரோ பேனாவ நினைக்கும் போது என் உடம்பு சிலிர்த்தது.

ஜீவன்பென்னி said...

இங்க் தீர்ந்து போச்சுன்னா நண்பனை பேனாலேர்ந்து இங்க சிந்தச்சொல்லி அத தொட்டு தொட்டு எழுதியிருக்கேன். ஒவ்வொன்னா நினைவுக்கு வந்துக்கிட்டிருக்கு. இது மூனாவது பின்னூட்டம்.

"உழவன்" "Uzhavan" said...

ஒரு சாதாப் பேனாவுக்கு, ஹீரோ பேனாவின் மூடியைப் போட்டு, சட்டைப் பையில் வைத்துக்கொண்டால், பார்ப்பவர்களுக்கு ஹீரோ பேனா போலவே தெரியும். (இப்படியெல்லாம் சீன் போட்ட காலமும் உண்டு :-)))

நட்புடன் ஜமால் said...

சாதரண பேனாவா ஹீரோவாச்சே

(மீ ரொம்ப லேட் ...)

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா ஆளாளுக்கு இப்படி கொசுவத்தி ஏத்திக்கிட்டு இருக்கீங்க:(
மறக்க முடியாத நாட்கள் பள்ளி நாட்கள்.
அதுவும் பேனாவும் பரீட்சை கலமும். ஒழுகுகிற பேன ஒண்ணு. ஒழுகாத பேனா ஒண்ணு. கைதுடைச்சிக்க ஒரு குட்டித் துணி.
வைத்த ஜாமெட்ரி பாக்சில் இன்க் வழிஞ்சு மிஸ் கிட்டத் திட்டு வாங்கின காலம்.
தோழியின் சிங்கப்பூர் மாமா வாங்கிக் கொடுத்த ஹீரோ பேனா தடவிப் பார்த்த காலம்.
பிறகு ஒரு கல்யாண அனிவர்சரிக்கு ரங்க்ஸ் வாங்கிக் கொடுத்த ஹீரோதான் என் முதல் ஹீரோ:)
ஹுசைனம்மா பாராட்ட வார்த்தையில்லைப்பா.

அன்புத்தோழன் said...

நான் தான் இருக்குரதுலையே கடைசியோ...?? அழகான மலரும் நினைவுகள் ஹுஸைனம்மா...

அப்போ நான் ரொம்ப சின்ன புள்ள... ஏன் அக்கா தான் ஹீரோ பேனா use பண்வா... அவ பேனாக்கு நான் இன்க் போட்டு தரேன்னு கெஞ்சி கூத்தாடி போட்டதுலாம் ஞாபகம் வருது... தரவே மாட்டா... அதுக்கப்புறம் ரெனால்ட்ஸ், ஸடெட்ளர் , ரோடோமேக், பியூசன், பைலட், செல்லோ... இப்டி ஆய்டுச்சு ஏன் life..

இருந்தும் மெட்ராஸ்ல ஏழாவது படிக்கும்போது நூத்துகனக்கான ஹீரோ பேனா பாத்துருக்கேன்... என்னங்க இப்புடி பாக்குறீங்க.... எங்க பெரியப்பா கடைல வேலை பாத்துகிட்டே படிச்சப்போ,அது ஸ்டேசனரி கடை.... சோ அதுல சேல்ஸ்மேனு நாந்தான்... ;-)ஹ ஹ... புதுப்பேனா விக்கிரதுலேந்து பழைய பேனா ரிப்பேரு வரை... ஆல் இன் ஆல் நாமதேன்... ஹி ஹி....

Jaleela said...

ஹை ஹீரோ பேனாஎனக்கும் மறக்க முடியாது.

சாச்சாமார்கள் சவுதியில் இருந்து வந்து கொடுத்தாஙக். ரொமப் பத்திரமா அதை பாதுகாப்பேன்.

பேனே நிப்பு, தொலைந்து போனதும் குட்டி குட்டி இரு விரல் அளவுள்ள பென்சில் எல்லாம் தூக்கி போடாமல், இதில் சொருகிவைத்து எழுதுவேன்.


இங்க் கையில் எல்லாம் ஆக்கி கொள்ளும் பழக்கம்ம் எனக்கில்லை.

எல்லா தங்கைகலுக்கும் நான் தான் இங்க் ஊற்றி கொடுப்பேன். அதற்கென தனியா ஒரு துணி வைத்து அதால் தான் கழற்றுவது, எல்லாம்.

அந்த மெரூன் கலர் பேனா என்னுடையது ஹிஹி

Gopi Ramamoorthy said...

nice!

I like that ink transfer part very much!