அவளோட ரெண்டு நாள் அபுதாபி, அல்-அய்ன், துபாய்னு ஒரே ஊர்சுத்தல்தான். ஊர்சுத்திட்டு, படங்களோட பதிவு போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரான்னு பதிவுலகம் பல்லுமேல நாக்கைப் போட்டுக் கேட்டுடாது? அதனால, எடுத்த படங்களோட, சுட்ட படங்களையும் வச்சு ஒரு பயணக்கட்டுரை இதோ!!
இதுதான் தலைநகர வாசல் (Capital Gate) - உலகின் மனிதனால் கட்டப்பட்டமுதல் சாய்ந்த கட்டிடம் (கட்டுமானம் முடியலை இன்னும்.(ameinfo.com)
அல்-அய்ன்ல வழக்கம்போல ஜபல் ஹஃபீட் மலையேறிட்டு, அதன் அடிவாரத்துல உள்ள கொதிநீர் ஊற்றுகளையும் பாத்துட்டு (மட்டும்தான், கொளுத்துற வெயிலுக்கு சாதா தண்ணியே கொதிக்குது!!) மறக்காம மினி ட்ரெயின்லயும் ஒரு த்ரில் சவாரி போய்ட்டு வந்தோம்.
நிறைய பேருக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின் இருக்கிறதே தெரியாது. இதுல போனா சூப்பரா இருக்கும். இருவர் இருக்ககூடிய இதில், மேனுவல் கண்ட்ரோல் பயன்படுத்தி, மலையடிவாரச் சரிவுகளில் அமைக்கப்பட்ட பாதையில் சறுக்கி வந்தா ஒரு சின்ன ரோலர்-கோஸ்டர் அனுபவம் கிடைக்கும்.
அப்புறம், மிருகக் காட்சி சாலையில இரவுப் பறவைகள் காட்சிகள் பாத்துட்டு, டைனசர் Animatrons பாத்துட்டு மறுநாள் துபாய் வலம்!! இந்த டைனசர் Animatrons-ஐ இரவு நேரத்துல பாத்தா நல்லாருக்கும். சிறுவர்களுக்கான இவற்றைப் பெரியவங்க போய்ப் பாத்துட்டு “இத நாங்க ஜுராஸிக் பார்க்லயே பாத்துட்டமே”ன்னு கமெண்டக் கூடாது!!
துபாய்ல வழக்கம்போல க்ரீக் பார்க, மால்கள்னு வலம் வந்திருப்போம்னு நீங்க நினைச்சா, ஸாரி, நாங்க “மாகி கெட்ச்-அப்” (அதாங்க, “Its' different boss!!").
penthouses.com beborealestate.com
penthouses.com beborealestate.com
முதல்ல போனது, Palm Jumeirah - ஈச்ச மரம்போல கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு நகர். இதன் கிளைகள் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் பின்வாசலிலும் கடற்கரை!! ம்ம்.. சுனாமி வரும்னு பயமா இருக்காதா இங்க இருக்கவங்களுக்கு??
panoramio.com 2daydubai.com
அப்புறம், மோனோரெயில் - ஒற்றைப் பாலத்தில் போகிறது. கடல் மேல் போகும்போது கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருக்கிறது. அட்லாண்டிஸ் ஹோட்டல் பக்கத்தில், ரெயில் வரும் திசையைப் பொறுத்து ரெயில் பாதையில் ட்ராக் மாறுவது கவனித்துப் பார்த்தால்தான் தெரியும்.
வலது படத்துல இருக்கதுதான் பிரமாண்ட அட்லாண்டிஸ் ஹோட்டல். ட்ரெயின்ல இருந்து இறங்கி உள்ளே போய், நம்ம தகுதிக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுட்டு, திரும்பி அதே ரயிலைப் பிடிச்சு, பட்டணத்துக்கு வந்துட்டோம்.
wikipaedia.com
அப்புறம், மோனோரெயில் - ஒற்றைப் பாலத்தில் போகிறது. கடல் மேல் போகும்போது கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருக்கிறது. அட்லாண்டிஸ் ஹோட்டல் பக்கத்தில், ரெயில் வரும் திசையைப் பொறுத்து ரெயில் பாதையில் ட்ராக் மாறுவது கவனித்துப் பார்த்தால்தான் தெரியும்.
வலது படத்துல இருக்கதுதான் பிரமாண்ட அட்லாண்டிஸ் ஹோட்டல். ட்ரெயின்ல இருந்து இறங்கி உள்ளே போய், நம்ம தகுதிக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுட்டு, திரும்பி அதே ரயிலைப் பிடிச்சு, பட்டணத்துக்கு வந்துட்டோம்.
wikipaedia.com
அடுத்து, துபாயின் தற்போதைய பெருமையான உலகின் உயர்ந்த கட்டிடமான “புர்ஜ் கலீஃபா”விற்குச் சென்றோம். ஏறக்குறைய 160 மாடிகள் உள்ள கட்டிடத்தின், 124வது மாடியின் பால்கனியில் நின்று நகரைக் கண்டு ரசிக்கலாம். இதில என்ன பெரிசா இருக்கப்போகுதுன்னு நினைச்சுதான் இதுவரை போகலை. தோழிக்காகப் போனது. ஆனா, ஒரு மிக நல்ல அனுபவம்.
முதலில் இதன் லிஃப்ட்! தரைத்தளத்திலிருந்து, சரியாக ஒரே நிமிடத்தில் 124வது மாடிக்குச் சென்றுவிடுகிறது. லிஃப்ட் கருப்பு கலரில், வெளிச்சமே இல்லாமல், ஒரு நைட் லேம்ப் மாதிரியான சூழலில் இருப்பது கொஞ்சம் பயம் தருகிறது. ஆனால், லேசான காது அடைப்பு தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஏன், லிஃப்ட் போகிறதா, நிற்கிறதா என்றுகூடத் தெரியவில்லை!! போய்க்கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும்போது நின்று, கதவு திறக்கிறது.
இந்த லிஃப்டில்தான், சில மாதங்கள்முன் பத்து பேர் ஒரு மணிநேரம்போல மாட்டிக்கொண்டார்களாம். ஒரு டார்க் ரூம் போல இருக்கும், நிக்குதா, போகுதா என்றே தெரியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் மாட்டிக்கொண்டால் பயமாத்தானே இருக்கும்? நல்லவேளை அதற்கப்புறம் அப்படி எதுவும் நடக்காதமாதிரி சரி செய்து கொண்டார்கள்!!
அதிலே ஏறி மேலே போனா, வாவ்!! ரொம்ப அழகா இருக்கு!! அங்கிருந்து ஊரைப் பார்ப்பது ஒரு தனி அழகு!! போறவங்க, பகல்ல , வானம் தெளிவா இருக்கும்போது போனா, பார்க்க வசதியா இருக்கும்.
படங்கள் ரெண்டும் மகன் எடுத்தது; வலது படத்துல புர்ஜ் கலீஃபாவின் நிழல் தெரியுதா?
இன்னும் தெளிவாப் பார்க்கணும்னா, அங்கே டெலஸ்கோப்புகள் வச்சிருக்காங்க. அதுல விபரங்களோடு பாத்துக்கலாம். அங்கிருந்து பார்க்கும்போது, பாம் ஜுமைரா போலவே, கடலில் உருவாக்கத் திட்டமிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தி வேர்ல்ட்” - உலக வரைபடம் போன்ற தீவுகள் - மணல் திட்டுகள் மட்டும் தெரிகின்றன.
gulfnews.com flashydubai.com
மேலிருந்து, அடுத்துள்ள துபாய் மாலில் நடக்கும் "Dancing Water fountain show" பார்க்கத் தவறாதீர்கள்!! அற்புதமாக இருக்கும்!! இங்கிருந்து பார்த்துவிட்டு, கீழே வந்து மறுபடியும் பார்க்கும்போது, ஒரு புதிய “பரிமாணம்” நிச்சயம் கிடைக்கும்!! இந்த நீர் நடனம்தான் உலகிலேயே மிகப் பெரியதாம். இரவு வரை அரைமணி நேரத்திற்கொருமுறை நடக்கும் இந்த நடனத்திற்கு ஒவ்வொரு முறையும் இசைக்கப்படும் வெவ்வேறு அரபி பாடல்கள் உங்களை ரசித்துத் தாளம் போட வைக்கும். இதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்க்கலாம் இந்நடனத்தை!!
சொல்ல மறந்துட்டேனே, கீழே இறங்கி, வெளியே வரும்வழியில், புர்ஜ் கலீஃபா உருவான விதம், வடிவமைக்கப்ட்டது, உயரத்தில் காற்றழுத்தம் தடுக்கும் நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டம், முக்கியப் பங்காற்றியவர்களின் விபரங்களுடன் கூடிய படங்கள் என்று ஒரு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். கட்டிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்குத் தகவல்கள் கிடைக்கும்.
தோழியைப் பார்த்தது மட்டுமல்ல, அவள் காரணமாக, இதுவரை பார்க்காத பல இடங்களைப் பார்த்தது என்று, மொத்தத்தில் ஒரு நிறைவான ஊர்சுற்றல்!!
டிக்கெட்டக் காமிச்சாத்தான் நம்புவாங்களாம்!!
|
Tweet | |||
56 comments:
புர்ஜ் கலீஃபா போய் வந்தாச்சா, வாவ் சூப்பர், மகன் எடுத்ததினால் படங்கள் நல்லா வந்திருக்கு:)
ஹுசைனம்மா இது அநியாயம்..ரசித்து,ஆழ்ந்து அனுபவித்து நிதானமா பார்த்து பகிரவேண்டிய இடங்களை இப்படியா உங்களுக்கே உரித்தான பாணியில் படபடப்பாக பார்த்துட்டு அதே படபடப்போடு சொல்லி முடிக்கறது?
ம்ம்..நீங்களும் கேமராவை தூக்கியாச்சா?
ரொம்ப அருமையான படமும் , விளக்கமும்.
சில இடஙக்ள் பார்த்து இருந்தாலும்.
மீதி போக முடியதா இடத்தை இங்கேயே பார்த்து விபரத்தை தெரிந்து கொண்டேன்.
இனி மெதுவா போய் பார்த்து கொள்ளலாம்.
நானும் அல் அயினில் இருந்து ஒரு முறை உங்களிடம் பேசிய போது அங்கு எடுத்த படங்கள். அபுதாபி மாஸ்க் எல்லாம் இன்னும் பதிவு போடாமல் தூங்குது,
அல் அயின் மலை அடிவார டிரெயின் இனி எப்பவாவது போனா, அதில் போகனும்.
அருமையான அனுபவப் பதிவு. சூப்பர் படங்களுடன்.
நட்புகளோடு எஞ்சாய் செஞ்சிருக்கீங்க. படங்கள் அருமை.
பர்ஜ் கலீபா போன ரிசிப்ட் ஸ்கேன் பண்ணிப் போட்டாத் தான் நம்புவோம்... ;-))
அடடா எல்லாம் அருமையான சுற்றுலா தளங்கள்..
இது எல்லாம் பாத்துட்டுதான் நாட்டுக்கு கிளம்பனும்.. நன்றி பகிர்வுக்கு
படங்களும் கட்டுரையும் மிக அருமை. நேரில் பார்த்த உணர்வுவைத்தருகிரது அக்கா.
நல்ல ப்ரமாண்டம்.. என்ன கலையுணர்வு! செயற்கை விடயங்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை என்றாலும், தொழில்நுட்பம் வெகுவாக வியக்க வைக்கிறது! ஏற்கனவே ”அடேங்கப்பா துபாய்” என்று இவைகளைப் பற்றி படித்ததாக நியாபகம்..
படங்களுடன் கூடிய விளக்கத்துக்கு நன்றி.. சுட்ட புகைப்படங்கள் அழகு தான் என்றாலும், மத்த இடங்களுக்கும் நீங்கள் எடுத்த புகைப்படங்களையே போட்டிருக்கலாம்.. உங்க பார்வையில நாங்களும் பாத்திருப்பம்ல..
அப்புறம் ஹி ஹி.. நாங்களும் ஊருக்கு போறப்ப, உங்க வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு போலாமா?
படங்கள் அத்தனையும் அழ்கு.
அதுவும் பழைய தோழியுடன் ஊர்சுற்றும் சந்தோஷமே தனிதான்.
உங்களின் சுற்றுலா அனுபவம் அருமை... படங்களும் சூப்பர்...
//! ம்ம்.. சுனாமி வரும்னு பயமா இருக்காதா இங்க இருக்கவங்களுக்கு??//
பணம் இருக்கற இடத்துல சுனாமி வராது...பாவங்கள் இருக்கற இடத்துலதான் வரும்... இந்த விசயம் அங்க இருக்கறவங்களுக்கு நல்லாத்தெரியும்...
நீங்களும் அங்க ஒரு பிளாட் வாங்கபோறதா கேள்விப்பட்டேன் உண்மையா-???:))
// என் நெருங்கிய கல்லூரித் தோழி கலிஃபோர்னியாவிலருந்து//
பார்த்திங்களா உங்க தோழி கல்லுரில நல்லாப்படிச்சாங்க கலிபோரினயாவுக்கு போய்ட்டாங்க... இதான் படிக்கிற வயசுல நல்லாப்படிக்கனும்கறது...
அருமையான படங்கள்..
அழகாகச் சொல்லி படங்களையும் காட்டி டுபாய்க்கு வரணும்போல வச்சிட்டீங்க.வரணும் !
நல்லா ரசனையா சொல்லி இருக்கீங்க. பார்காதவங்களையும் பார்க்க தூண்டும் வர்னனை அழகு..!!
எங்களுக்கெல்லாம் நல்லா சுத்திக்காண்பிச்சிருக்கீங்க..
தமிழ்ப்பிரியன், டிக்கட்டயும் படம்புடிச்சி போட்டுட்டேன், பாருங்க!!
இப்பவாவது நம்புவீங்களா?
படங்களும் கட்டுரையும் அருமையா இருக்கு :). நான் இது வரை அந்த பக்கம் வந்ததில்லை.
super photos and super post!
Lovely!
கட்டுரையும் படங்களும் மிக அருமை ஹுஸைனம்மா.
அழகா இருக்கு இடம் எல்லாம். வந்தா என்னையும் சுத்திக் காட்டுவீங்கல்ல!
ஃப்ரெண்டை பாத்து ஊர் சுத்தினதுல ஒரு புத்துணர்ச்சியா இருக்குமே. சந்தோஷோம். உங்க கூட நாங்களும் பாத்தா மாதிரி இருந்துச்சு
சூப்பர் சுற்றுலா. சுற்றிக் காட்டியதற்கு மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்.
நல்லா enjoy பண்ணிருக்கீங்க!
அருமையாக உள்ளது. படங்கள் நேரில் சுற்றி பார்த்தது போன்ற திருப்தி இருந்தது.
ஒத்துக்கறேன், நீங்களும் பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சாச்சுன்னு ஒத்துக்கறேன்.
ஆனா, இதுல ஹுஸைனப்பா எங்கயுமே வர்லயே,,,, அதுசரி, அந்த பச்சமண்ணு தனியா வீட்டுல என்ன பாடு பட்டுச்சோ!!!!!!!
பயணக்கட்டுரை போட்டதனாலா நீங்க ப்ரபல பதிவர்னு ஒத்துக்கறோம் :)
//ஒரு நிறைவான ஊர்சுற்றல்//
நிறைவான பதிவும். சுட்ட படங்களுடன் எடுத்த படங்களும் அருமை:)!
படங்கள் நன்றாக இருக்கு.
டிக்கெட்டக் காமிச்சாத்தான் நம்புவாங்களாம்!! //// ஐய்ய்ய்ய் எங்களை இப்பூடியெல்லாம் ஏமாத்த முடியாதூஊஊ.... பெயரைக் காணவில்லையே.... அதிராவோ கொக்கோ....:).
/// ஐய்ய்ய்ய் எங்களை இப்பூடியெல்லாம் ஏமாத்த முடியாதூஊஊ.... பெயரைக் காணவில்லையே.... //
அதிரா...டிக்கெட்டுல ஒரிஜினல் பேரை போட்டிருந்தா மட்டும் அது உசைனம்மான்னு உங்களுக்கு தெரிஞ்சிடுமாக்கும்...:))
இனிமே நானும் சுவிட்சர்லாந்து போட்டோவ கூகுள்லேருந்து சுட்டு... ஓரு சுவிட்சலாந்து ட்ரிப் பதிவு போடலாம்னு இருக்கேன்...
அதானே பார்த்தேன், நல்லவேளை
டிக்கெட்டை காட்டுனீங்கள். (ஒன்னே
ஒன்னுதான் இருக்கு???)
லிஃப்ட் மின் தடையால் நின்ற அனுபவம்
எனக்கும்கூட 3 / 4 தடவைகள் ஏற்பட்டதுண்டு.
ஆனால், 15 நிமிட அளவே! ஆனால், கடும்
இருட்டில் 1 மணி நேரம். படபடப்பான
அனுபவம்தான் அதில் மாட்டிக் கொண்டவர்களுக்கு.
அப்புறம், நிறைய படங்களுடன் மன நிறைவான
பயணக் கட்டுரை.
ஹூஸைனம்மா
எல்லாரும் வெளியூர் போய்ட்டு வந்து பயணக்கட்டுரை... நீங்க உள்ளூர்ல போனதே பயணக்கட்டுரையா?
ஆனாலும், நீங்கள் அதை மிக மிக அழகாக, விரிவாக, தகவல்களுடன், படங்களுடன் நல்ல வர்ணனையுடன் சொன்னது ரசிக்கத்தக்கதாக இருந்தது...
இன்னொரு விஷயத்தையும் ரசிச்சேன்.. அதாவது தமிழ்ப்ரியன் ரிசீப்ட் கேட்டதும், நீங்கள் அதை ஸ்கேன் செய்து அப்லோட் செய்தது.. நிஜமாவே சிரிப்பை வரவழைத்தது..
அடுத்த ட்ரிப் எங்க?
ஹுஸைனம்மா! வர்ணனைகளிலும் அதை அருமையாகச் சொல்லிய பாங்கிலும் தேர்ந்த எழுத்தாளரையும் ஒரு professional tourist guide-ஐயும் மிஞ்சி விட்டீர்கள்!!
சிறுவர்களுக்கான இவற்றைப் பெரியவங்க போய்ப் பாத்துட்டு “இத நாங்க ஜுராஸிக் பார்க்லயே பாத்துட்டமே”ன்னு கமெண்டக் கூடாது!!//
எப்புடி ஹுசைனம்மா இப்பிடி.. கரெக்டா அடிகிறீங்க.. ஹிஹிஹி
124 வது மாடி வரைக்கும்தான் விடுறாங்களா... அந்த துபாய் மாலின் மேல் நிழல் விழும் படங்கள் அருமை.
அந்த லிப்ட்டின் வேகம் 0.6 m/s அதிவேகமென்றும் உலகின் அதிவேகமானதென்றும் பேச்சுக்கள் உலவுகின்றன. எந்தளவு உண்மை எனத்தெரியவில்லை.
இரண்டு மாதம் முன்பு ஓரு மணி நேரம் லிப்டில் யாரும் அடைபடவில்லை. லிப்ட் திடிரென் மிக வேகமாக கீழே இறங்கியது. சில பேருக்கு காயம் .
ஷஃபி - நன்றி!!
ஸாதிகாக்கா - நாங்க 2 நாளா பாத்த இடங்கள் இதெல்லாம். பாத்தத விட பேசுனதுதான் அதிகம்!
ஜலீலாக்கா - கண்டிப்பா ட்ரெயின்ல போங்கக்கா.
டாக்டர் - நன்றி.
வித்யா - நன்றிப்பா.
தமிழ்ப்பிரியன் - பதிவுல டிக்கெட்டையும் போடணும்னே வச்சிருந்தேன்; ஆனா மறந்துட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.
முன்பதிவு செஞ்சா நூறு திர்ஹம். இல்லைன்னாலும் நூறுதான் போல!! :-))
ரியாஸ் - கண்டிப்பா பாருங்க. நன்றி.
அக்பர் - நன்றி.
எல் போர்ட் - நன்றிப்பா. நான் புகைப்படம் எடுக்கிற பொறுப்பைப் பெரியவன்கிட்ட கொடுத்திருந்தேன்; ஆனா, அவன் வீடியோவாச் சுட்டுத் தள்ளிட்டான்!! தேறுனதுலயும் எல்லாத்துலயும் யாராவது இருக்கோம். அதான், சுட வேண்டியதாச்சு!!
தாராளமா வாங்க; தங்கிட்டுப் போங்க!!
(இது மாதிரி எத்தன பேர் கிளம்புவாங்கன்னு தெரியலையே? ;-))) )
அம்பிகா - நன்றி.
நாடோடி - நன்றி.
பிரதாப் - வாங்க. நான் ஒரு பாவப்பட்ட ஜீவன், அங்கலாம் ஃப்ளாட் வாங்க முடியுமா?
கலிஃபோர்னியா போகாட்டியும் பரவால்ல!! துபாய்ல குப்பை கொட்டுற அளவு மோசமாப் போகலையே, அது போதும்!! ;-))
இர்ஷாத் - நன்றி.
ஹேமா - கண்டிப்பா வாங்க ஹேமா!
ஜெய்லானி - இங்கதானே இருக்கீங்க, பாத்துடுங்க!!
ஸ்டார்ஜன் - நன்றி.
கார்த்திக் - இங்கயும் வந்து சுத்தி பாருங்க!!
சித்ரா - நன்றி.
சரவணக்குமார் - நன்றி.
இமா - கண்டிப்பா!! ஆனா, இங்கு வந்த பின், கத்தி போன்ற “ஆயுதங்கள்” எதுவும் தொடக்கூடாது (ஆர்ட் வொர்க் செய்ய!!)
ஹைஷ் சார் - அட, இது யாரு!! பெரியவங்க முதமுதல்ல நம்ம பிளாக்குக்கு வந்திருக்கீங்க, ரொம்ப சந்தோஷம்!! நன்றி சார்!!
அருணா டீச்சர் - மிக நன்றி.
இளம் தூயவன் - நன்றி.
தராசு - வாங்க. ஹுஸைனப்பாவை தூண்டி விடலன்னா, உங்களுக்கு நிம்மதியா இருக்காதே? அவரை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன் தெரியுமா?
ஏன்னா, அவர்தான் எனக்கு சாரதி!! ;-)))
சின்ன அம்மிணி - நன்றி. பிரபல பதிவர்னா பிரச்னையில்ல; பிரபாள பதிவர்னு பேர் வாங்கிறக்கூடாது!
ராமலக்ஷ்மி அக்கா - நன்றிக்கா.
அதிரா - டிக்கட்ல பேர்லாம் போடமாட்டாங்க அதிரா!! இன்னும் நம்பலன்னா நான் என்ன செய்வேன்??!!
பிரதாப் - அல்லோ!! அப்ப இவ்வளவு நாளா நீங்க எழுதுற சினிமா விமர்சனம்லாம் இப்படித்தான் எழுதுனீங்களோ?
நிஜாம் - அண்ணே, நாங்க இருவது பேர் போனோம். இருவது டிக்கட்டையுமா போடமுடியும்? நன்றிண்ணே!!
ஆர்.கோபி - ஹி..ஹி.. உள்ளூர்ல போனாலும் பயணம்தானே? இப்படியா குட்டை உடைப்பது? அதுவும் சபையில? ;-))
அடுத்த ட்ரிப் இந்தியாதான்!! ஒரு தொடரே எழுதிடலாம்!! நன்றி.
மனோக்கா - நன்றி. //ஒரு professional tourist guide-ஐயும் மிஞ்சி விட்டீர்கள்!// அப்ப கைவசம் ஒரு தொழில் இருக்குன்னு சொல்றீங்க!! :-))
தேனக்கா - வாங்கக்கா. அக்கா, அடிவாங்கி, வாங்கி, எப்படி அடிப்பாங்கன்னு தெரிஞ்சிடுச்சு, அதான் முன்னாடியே ரெடியாகிடுறது!! நன்றிக்கா.
கண்ணா - வாங்க. அந்தக் கடைசி கண்காட்சியில நிறைய பேர் ஃபோட்டோ வச்சிருந்தாங்க; அதுல நீங்களும் இருப்பீங்களோன்னு தேடினேன்!! :-))
124வது மாடியிலதான் ”AT THE TOP" என்ற இந்த பார்வைத் தளம் வைத்திருக்கிறார்கள். அதனால் அதற்கு மட்டும்தான் போக முடியும். அதில் தங்கியிருப்பவர்கள் மட்டும்தான் மற்ற தளங்களுக்கும் போகலாம் என்று நினைக்கிறேன்.
அப்புறம், இந்த ”AT THE TOP" ஆரம்பித்த புதிதில் லிஃப்டில் சிலர் மாட்டிக்கொண்டதால்தான், 1-2 மாதம் இந்தச் சேவையை நிறுத்தி வைத்திருந்தார்கள். பரப்ரப்பாகச் செய்தி வெளியானதே அப்போது!! அது லிஃப்ட் வேகமாக வந்ததால்தானா?
நன்றி கண்ணா!!
வாவ்... சூப்பர் பயண பதிவு... நான் பாத்ததுக்கு இந்த ஏழு வருசத்துல துபாய் ரெம்பத்தான் மாறி போச்சுங்க.... அடுத்த வாட்டி ஊருக்கு போறப்ப முடிஞ்சா வர்றது தான்... இருங்க இருங்க ஓடாதீங்க... இப்படி பயந்தா எப்படிங்க்கா....
பதிவுடன் படங்களும் அருமை.
காரணமான தோழிக்கு நன்றி...!
//அப்புறம் ஹி ஹி.. நாங்களும் ஊருக்கு போறப்ப, உங்க வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு போலாமா?//
//(இது மாதிரி எத்தன பேர் கிளம்புவாங்கன்னு தெரியலையே?))//
அப்படி எல்லாம் நாங்க சொல்லாம கொள்ளாம வந்துட மாட்டோம் ஹுஸைனம்மா.
நல்லவேளை யாருமே போய் வந்த செலவு கணக்கை கேட்கலை. அப்படி கேட்டிருந்தால் நீங்க குஷியாகி இருப்பீங்களோ??
ஆஹா...அருமையாக எங்களுக்கும் ஊரினை சுற்றி காட்டிவிட்டிங்க ...இவ்வளவு இருக்கின்றது...நானும் இந்தியா செல்லும் வழியில் உங்க வீட்டிற்கு வரலாமா...எல்லாம் சுற்றி காட்டுவிங்க என்று நம்பிக்கையுடன் தான்...
அப்பாவி தங்க்ஸ் - நன்றி. ஏழு வருஷத்துல கொஞ்சநஞ்சம் இல்ல, பயங்கரமான வேகத்துல மாறிவிட்டது துபாய்!!
அப்துல்காதர் - அதெல்லாம் சும்மா. எவ்வளவு பேர் வேணாலும் வாங்க. அந்த சந்தோஷத்துக்கு முன்னே செலவு ஒரு விஷயமா? விரலுக்கேத்த வீக்கமா இஅங்களைப் பாப்போம்.
கீதா - கண்டிப்பா, மகிழ்ச்சியோடு சுற்றீப் பார்க்கலாம்ப்பா!!!
துபாய் வரதா இருந்தேன் ,படம் போட்டு காண்பித்து விட்டீர்கள்...சூப்பர்
அந்த கேபிடல் கேட் பார்த்தால் ,ஷூ மாதிரி இருக்கிறது
பிரமாதம்.... உங்களைலாம் நினைச்சா லைட்டா பொறாமையா இருக்கு... ஏனா இங்க இந்த மாதுரி ஒண்ணுமே இல்லையே... :-(((
பட் எனிவே... உங்க சந்தோஷம் எங்க சந்தோஷம் வேறையா... நீங்க சந்தோசமா இருந்ததே நாங்களும் ஒரு விசிட் அடிச்ச பீலிங்கு....
(எப்புடியெல்லாம் சமாதானம் சொல்லிக்க வேண்டி இருக்கு)
dubai sudrula...kankadchi...padangal...varnanai arumai madam!-meerapriyan
பயணக் கட்டுரை மிகவும் அருமை.
படங்கள் அழகு.
"A picture is worth a thousand words" படத்துடன் விளக்கங்கள் சிறப்பு .
டுபாய்’ல இவ்வளவு காலமா இருக்கேன். இதுவரை வராத ஆசை உங்க பதிவ படிச்சதும் வந்துசுச்சு. போய் ஒரு முறை எல்லாவற்றையும் பார்த்துடனும்
Post a Comment