Pages

தானாகவே வலையில் விழும் மீன்




  
மாலை மணிக்கு ஏழரை, சே.. மணி ஏழரை.  கிச்சனில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நேரம்.  கிச்சன் கேபினட்டிலாவது நிறைய பேர் கூட்டாகச் சேர்ந்து இருப்பார்கள். அங்கு வேலை ஒன்றும் நடக்காது என்பது வேறு விஷயம்!  இந்தக் கிச்சனில் தன்னந்தனியாக ஒருத்தியின் ராஜ்யம்தான்!!

கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மிஷின், மைக்ரோ ஓவன், எக்ஸாஸ்ட் ஃபேன் ஆகியவ்ற்றோடு தாளிக்கும் ஓசையும், குக்கர் விசிலும் கூட என்று ஒரு ஆலையிலிருந்து வெளிப்படும் சத்தத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தக் கிச்சனிலும் ‘ஒலி மாசு’!!   இவ்வளவு சத்தங்களுக்கு நடுவில் அமிழ்ந்து கிடக்கும்போது வெளியே என்ன நடந்தாலும் தெரியாது!! அதிலே, ஹாலில், ரூமில் இருப்பவர்கள் ஃபோன் பேசும்போது இந்தச் சத்தங்களால் தடை ஏற்படக்கூடாதென்று அவ்வப்போது கிச்சன் கதவும் சாத்தப்படும்!! அப்ப என்னவோ தனியா ராக்கெட்ல பறந்துகிட்டிருக்காப்ல ஒரு உணர்வு கூட வரும்!!

இந்த வேலைகளுக்கும், சத்தங்களுக்கும்  நடுவிலும், ”சின்னவனே ஹோம்வொர்க் எழுதியாச்சா?”, ”பெரியவனே, துணி மடிச்சு வச்சியா?”, “என்னாங்க, பால் வாங்கச் சொன்னேனே?” என்று அதட்டல்களும் எழுப்பி தன் ‘இருப்பை’ உணர்த்திக் கொள்ளவும் மறப்பதில்லை. பதில் சொல்லவோ, அல்லது ஏதாவது கேட்க வேண்டுமென்றாலோ அங்கிருந்தே சொல்லக்கூடாது, இவ்வளவு சத்தத்தில் கேக்காது (காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); என்ன சொல்லணும்னாலும் இங்கே கிச்சனுக்கு வந்து சொல்லணுன்னு சட்டமே போட்டாலும் ’பெரியவர்கள்’ மட்டுமே மீறுவார்கள்!!

இன்றும் மீறப்பட்டது!! வீட்டுத் தலைவர் ஹாலில் மடிக்கணிணியை மேய்ந்துகொண்டே என்னவோ சொல்ல, ஏதோ பேசுகிறார் என்று தெரிந்தது, ஆனால் முழுசாக் கேட்கவில்லை; இங்கிருந்தே கத்தல், “எத்தனை தரம் சொல்லியாச்சு நான் கிச்சன்ல நிக்கும்போது அங்கருந்து பேசாதீங்கன்னு?”

இதற்குள் அங்கே அப்பா, பிள்ளைகளிடம், “டேய், உங்கம்மாவுக்கு நெசமாவே காது கேக்கலியான்னு இப்ப டெஸ்ட் பண்ணுவோமா?”ன்னு கேட்டுட்டு மறுபடியும் கிச்சனுக்கு கேள்விக்கணை அனுப்புறார்.

இதற்குள் கிச்சனில், ‘இந்த மனுசன் என்னிக்கு சொன்னாக் கேட்டிருக்காரு; என்னத்தையாவது சொல்லிட்டு, நான் கேக்கலன்னு சொல்லிட்டு சும்மா இருக்க,  அப்புறம் இவர் ‘நான் அன்னிக்கே உங்கிட்டச் சொல்லிட்டேனேனேனு’ பிளேட்டைத் திருப்பி போடறது மட்டுமில்லாம, பசங்களையும் “சொன்னேன்லடா?”ன்னு சாட்சிக்குக் கூப்பிட, அவனுங்களும், ‘மரபு’ப்படி, எனக்கு கேட்டுச்சா இல்லியான்னு யோசிக்காம, அப்பா சொன்னதை மட்டுமே கணக்கில் எடுத்துகிட்டு “ஆமாஞ்சாமி’ போடுவானுங்க!! இப்படி எத்தனை முறை பட்டு அனுபவிச்சாச்சுன்னு நொந்துகிட்டே, கிச்சன் வாசல்ல வந்து நிக்கவும், கேள்வி வரவும் சரியாயிருக்கு, “அது.. அந்த ஐநூறு திர்ஹம் இருக்குல்ல.....”

கிச்சனை விட்டு வெளியே வந்ததால, கேள்வி தெளிவா காதுல விழுந்ததால, “ஆமா, அந்த ஐநூறு திர்ஹத்துக்கு என்ன இப்போ?”ன்னு பதில் சொல்ல..... “டேய், பாத்துக்கோங்கடா!! இவ்வளவு நேரம் நான் கரடியா கத்துனது கேக்கலியாம் உங்கம்மாவுக்கு; ஆனா, பணங்காசைப் பத்தி பேசுனா மட்டும் கரெக்டா ஸ்டேஷன் பிடிக்குது பாருங்கடா”

அவ்வ்வ்வ்வ்.... எப்பவுமே நானாத்தான் மாட்டிக்கிறேன்!! ஏங்க.. ஏன்?
  
   

Post Comment

59 comments:

அநன்யா மஹாதேவன் said...

ஹா ஹா.. பிகாஸ் யூ ஆர் லைக் மை நைனா!!! சூப்பர்!

புதுகைத் தென்றல் said...

காலை நேர பரபரப்புக்களை அனுபவிச்சு சொல்லியிருக்கீங்க.

ஏன்னு என்னத்த சொல்ல? நாம வாங்கி வந்த வரம்னு சொல்லிக்கலாம்.

ஜெய்லானி said...

//பணங்காசைப் பத்தி பேசுனா மட்டும் கரெக்டா ஸ்டேஷன் பிடிக்குது பாருங்கடா”//

ஹி..ஹி...

நாஞ்சில் பிரதாப் said...

என் வாயாலா எப்படி நான் சொல்றது... லேபிள்ல மூணவாதுதான் :))))

LK said...

//டேய், பாத்துக்கோங்கடா!! இவ்வளவு நேரம் நான் கரடியா கத்துனது கேக்கலியாம் உங்கம்மாவுக்கு; ஆனா, பணங்காசைப் பத்தி பேசுனா மட்டும் கரெக்டா ஸ்டேஷன் பிடிக்குது பாருங்கடா”//

hahaha super super .. enga veetla ithu nadaukkum

Anonymous said...

:) காலை அவசரத்தில காதில ஒண்ணும் விழாதே.

இமா said...

;D

தராசு said...

//கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மிஷின், மைக்ரோ ஓவன், எக்ஸாஸ்ட் ஃபேன் ஆகியவ்ற்றோடு தாளிக்கும் ஓசையும், குக்கர் விசிலும்//

இதெல்லாம் ஒரே சமயத்துல உங்க வீட்ல ஓடுமா ஹுஸைனம்மா, நெஜம்மாவா....

//பதில் சொல்லவோ, அல்லது ஏதாவது கேட்க வேண்டுமென்றாலோ அங்கிருந்தே சொல்லக்கூடாது, இவ்வளவு சத்தத்தில் கேக்காது (காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); என்ன சொல்லணும்னாலும் இங்கே கிச்சனுக்கு வந்து சொல்லணுன்னு சட்டமே போட்டாலும் ’பெரியவர்கள்’ மட்டுமே மீறுவார்கள்!!//

ஹலோ, சும்மா சொல்லாதீங்க,
எப்பவுமே இது அப்படியே தலைகீழாதான் நடக்கும். தங்ஸ்ங்க அவிங்க ராஜ்யத்துல நின்னுட்டு, அவுங்களுக்கே கேக்காத குரல்ல எதாவது சொல்லீட்டு, அப்புறமா ஒரு மாசம் கழிச்சு, அன்னைக்கே சொன்னேனேம்பாங்க.....ம்.. யாருகிட்ட..

தராசு said...

ஆமா, ஹுஸைனம்மா தான் தெளிவா மாலை ஏழரைன்னு தெளிவா எழுதியிருக்காங்களே, அப்புறம் ஏன் இங்க வந்தவங்கெல்லாம் காலை அவசரம்னு சொல்றாங்க,

மீ தி கன்ஃபூஸ்டு.

ஹுஸைனம்மா said...

// தராசு said...
தங்ஸ்ங்க அவிங்க ராஜ்யத்துல நின்னுட்டு, அவுங்களுக்கே கேக்காத குரல்ல எதாவது சொல்லீட்டு, அப்புறமா ஒரு மாசம் கழிச்சு, அன்னைக்கே சொன்னேனேம்பாங்க.....ம்.. யாருகிட்ட..//

அவங்க என்ன உங்களை, அவுங்க ராஜ்யத்துக்குள்ள நுழையக்கூடாதுன்னு தடையுத்தரவா போட்டிருக்காங்க? கூடமாட நிக்க வேண்டியதுதானே?

ஹுஸைனம்மா said...

// தராசு said...
ஆமா, ஹுஸைனம்மா தான் தெளிவா மாலை ஏழரைன்னு தெளிவா எழுதியிருக்காங்களே, அப்புறம் ஏன் இங்க வந்தவங்கெல்லாம் காலை அவசரம்னு சொல்றாங்க,
மீ தி கன்ஃபூஸ்டு.//

சில வீடுகள்ல காலைலதான் இந்தப் பரபரப்பு இருக்கும்; அதனால அப்படி சொல்றாங்க!!

இந்த சிம்பிள் லாஜிக் கூட புரியல...

என் வீட்டில மாலையிலதான் ரொம்பப் பரபரப்பா இருக்கும்.

அஹமது இர்ஷாத் said...

Nature...

தராசு said...

//வீட்டுத் தலைவர் ஹாலில் மடிக்கணிணியை மேய்ந்துகொண்டே//

அதான் நாங்க கடமைல மூழ்கி இருக்கம்ல, அப்புறம் எதுக்கு வந்து கூடமாட நின்னு அது வேற தனி வம்பு....

அமைதிச்சாரல் said...

//ஹாலில், ரூமில் இருப்பவர்கள் ஃபோன் பேசும்போது இந்தச் சத்தங்களால் தடை ஏற்படக்கூடாதென்று அவ்வப்போது கிச்சன் கதவும் சாத்தப்படும்!//

பரவாயில்லையே.. எங்க வீட்டுல அந்த நேரத்துல மட்டும் மிக்ஸி வேலை நிறுத்தம் செய்யணும்.

எங்கிருந்தோ கத்தறதையும் நாம இங்கிருந்தே கத்தினா நிறுத்திடலாம். நாம என்ன சொன்னோம்ன்னு கேக்கறதுக்காக அவங்க நம்ம ஸ்டேஷனுக்கு வந்துதானே ஆகணும் :-))))))

நட்புடன் ஜமால் said...

எப்படியெல்லாம் போஸ்ட் போடுறாங்கப்பா

:P

அன்புத்தோழன் said...

அழகான குடும்ப சூழலுக்குள் எங்களையும் மூழ்கடிச்சுட்டீங்க.... என்ன தான் இருந்தாலும் குடும்பத்தலைவிங்க இந்த பண மேட்டர்ல ரொம்ப தான் உஷார்.... ஹ ஹ... கேட்டா எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வைனு பிட்ட போடுவீங்க... :-) நீங்க ஏன் அப்புடின்னு கேட்டா என்னத்த சொல்றது சிஸ்டர்... தவளையும் தன் வாயால் கெடும் ஹி ஹி... இது பெண்களின் இயல்பு, இதான் பெண்ணுக்கே உண்டான அழகு... வாழ்க வளமுடன்...

GEETHA ACHAL said...

இப்படி தான் சில சமயம்......

அபுஅஃப்ஸர் said...

//எப்பவுமே நானாத்தான் மாட்டிக்கிறேன்!! ஏங்க.. ஏன்?//

அதானே ஒரு விசாரனைக்கமிஷன் அமைக்கனும் போலக்கீதே...

Riyas said...

AAHAAAAAA,

கோமதி அரசு said...

எங்கள் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான்.

தானாகவே வலையில் விழும் மீன் தான் நாம்.

ஹேமா said...

கலகல குடும்பம்.
சந்தோஷமாயிருங்க சகோதரி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசம் போங்க..

என்ன ஒரு தலைப்பு.. என்ன ஒரு பஞ்ச் நடுவில் \அதான் //(காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); //
என்ன ஒரு பதிவு..

அசத்தல்..

அம்பிகா said...

வருத்தப் படாதீங்க ஹூஸைனம்மா.
வீட்டுக்கு வீடு வாசப்படி.

அரசு said...

ஓ... இப்படியும் பதிவு போடலாமோ!
"அசத்துரீங்க மேடம் சூப்பர்"

வித்யா said...

பளிச்..பளிச்.

நாடோடி said...

அனுப‌வ‌ம் பேசுது... ஒண்ணும் சொல்லுற‌துக்கு இல்ல...

SUFFIX said...

படிக்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு :):):)

SUFFIX said...

பதுங்கவத பார்த்தா அடுத்த பதிவு எப்படி இருக்குமோன்னு பயமாவும் இருக்கு :(:(:(

ரிஷபன் said...

செம கலாட்டா.. ரசிச்சு படிச்சேன்..

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha..... அந்த விஷயங்களை, நீங்கள் சொல்லும் விதம் அழகு...... :-)

டிரங்கு பெட்டியை ரொம்ப நாளா காணோமே?

Anonymous said...

ஹா ஹா ஹா. இது எங்க வீட்டிலும் நடக்குமே. வீட்டுக்கு வீடு வாசல் படின்னு இதைத் தான் சொல்வாங்களா?

ராஜவம்சம் said...

எங்கவீட்ல அப்படியே உல்டா சிஸ்டர்.

அக்பர் said...

//அப்ப என்னவோ தனியா ராக்கெட்ல பறந்துகிட்டிருக்காப்ல ஒரு உணர்வு கூட வரும்!! //

அடுத்த முறை சேஃப்டி டிரெஸ் போட்டுக்குங்க.

//இவ்வளவு சத்தத்தில் கேக்காது (காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); //

அய்யோ கொல்லுறீங்களே. :)

//இங்கே கிச்சனுக்கு வந்து சொல்லணுன்னு சட்டமே போட்டாலும் ’பெரியவர்கள்’ மட்டுமே மீறுவார்கள்!!//

நாம எப்பவுமே பிள்ளைங்க பக்கம்தானே.

//அவனுங்களும், ‘மரபு’ப்படி, எனக்கு கேட்டுச்சா இல்லியான்னு யோசிக்காம, அப்பா சொன்னதை மட்டுமே கணக்கில் எடுத்துகிட்டு “ஆமாஞ்சாமி’ போடுவானுங்க!!//

இது முழுக்க அரசியல்.

//அவ்வ்வ்வ்வ்.... எப்பவுமே நானாத்தான் மாட்டிக்கிறேன்!! ஏங்க.. ஏன்?//

நோ ஃபீலிங் மேடம். அவங்க எப்பவுமே இப்படித்தான்.

நல்ல லைவ் டெலிகாஸ்ட் பார்த்த மாதிரி விவாரணை. வீட்டுக்குவீடு வாசப்படி.

thenammailakshmanan said...

சூப்பர் சூப்பர் ஐ லைக் இட் ஹுசைனம்மா.. எல்லாஇடத்திலேயும் இந்தக் கதைதானா..

தமிழ் பிரியன் said...

இதுதானாஆஆஆஆஆஆஆ?... ;-))

kavisiva said...

நானும் எங்கப்பாவும் சேர்ந்து எங்கம்மாவை கலாய்க்கற மாதிரியே இருக்கே :). எல்லா வீட்டுலயும் இப்படித்தானா?!

தமிழ் உதயம் said...

குடும்ப வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே.

athira said...

அவ்வ்வ்வ்வ்.... எப்பவுமே நானாத்தான் மாட்டிக்கிறேன்!! ஏங்க.. ஏன்?/// கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க.... பணமென்றால் பிணமும் வாய் திறக்குமாமே:)... அப்போ மனிஷன்....???:).

கிச்சினில, அதுவும், குக்கர் வென்ரலேற்றரையும் போட்டுவிட்டு நிற்கிற அந்தக் கொஞ்ச நேரம் ஒரு சொர்க்க நேரம்.... ஏன் தெரியுமோ.... யார் என்ன சண்டை பிடித்தாலும் எமக்குக் கேட்கப்போவதில்லை:).

NIZAMUDEEN said...

உங்க தனித் திறமை என்னவென்பதை
இந்த இடுக்கையில் தெளிவாய்
விளக்கிட்டீங்க.
பலே கில்'லேடி' நீங்க!

ப்ரியமுடன்...வசந்த் said...

வலை,மீன் ரெண்டுக்கும் எக்கச்சக்க வித்யாசமிருக்கே...

ராமலக்ஷ்மி said...

இப்படியா மாட்டுவீங்க வலையில:))??

ரசித்தேன் ஆனாலும் விழுந்து வைத்த மீனை!

நானானி said...

// “எத்தனை தரம் சொல்லியாச்சு நான் கிச்சன்ல நிக்கும்போது அங்கருந்து பேசாதீங்கன்னு?” //


அட! எங்க வீட்டு கத.....

ராஜ நடராஜன் said...

இப்ப சாப்பாட்டு தட்டு மேஜையில இருக்குது.ஒரு முறை சமையல் கட்டிலிருந்தே கூப்பிட்டாச்சு.அடுத்த சத்தம் வரப்போகுது.நான் அம்பேல்.

அப்பாவி தங்கமணி said...

//(காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); //

முடியலங்க...முடியல...

//நான் அன்னிக்கே உங்கிட்டச் சொல்லிட்டேனேனேனு’ //

இந்த விசியத்துல உலகத்துல இருக்கற எல்லா ரங்கமணிகளும் ஒரே மாதிரி தான் போங்க...

//“டேய், பாத்துக்கோங்கடா!! இவ்வளவு நேரம் நான் கரடியா கத்துனது கேக்கலியாம் உங்கம்மாவுக்கு; ஆனா, பணங்காசைப் பத்தி பேசுனா மட்டும் கரெக்டா ஸ்டேஷன் பிடிக்குது பாருங்கடா”//

உண்மைய சொல்லிடறேன்... நாங்களும் எங்க அப்பாவும் சேந்து இதே டயலாக் சொல்லி ஒரு முறை எங்க அம்மாவாய் கலாய்ச்சுருக்கோம் ... ஹும் ...பாவம் மம்மினு இப்போ தோணுது..

கண்ணா.. said...

//இந்த வேலைகளுக்கும், சத்தங்களுக்கும் நடுவிலும், ”சின்னவனே ஹோம்வொர்க் எழுதியாச்சா?”, ”பெரியவனே, துணி மடிச்சு வச்சியா?”, “என்னாங்க, பால் வாங்கச் சொன்னேனே?” என்று அதட்டல்களும் எழுப்பி தன் ‘இருப்பை’ உணர்த்திக் கொள்ளவும் மறப்பதில்லை. பதில் சொல்லவோ, அல்லது ஏதாவது கேட்க வேண்டுமென்றாலோ அங்கிருந்தே சொல்லக்கூடாது, இவ்வளவு சத்தத்தில் கேக்காது (காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); என்ன சொல்லணும்னாலும் இங்கே கிச்சனுக்கு வந்து சொல்லணுன்னு சட்டமே போட்டாலும் ’பெரியவர்கள்’ மட்டுமே மீறுவார்கள்!!
//

உங்க வீட்டுலயும் இதே சர்வாதிகாரம்தானா... எங்க வீட்டுலயும்தான்.... என்னங்க எங்களை கேக்காம நீங்களே சட்டம் போட்டுகிட்டு நாங்க மீறுறோம்னு சொன்னா என்னங்க அர்த்தம்?

இங்க நானு ஹுசைனப்பா கட்சி....

Mahi_Granny said...

நல்ல எழுதுறீங்க ஹுசைனம்மா

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ் ஹுஸைனம்மா!

Madumitha said...

சொந்த வலை தானே
வெளில வந்திடலாம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அப்பப்ப ரங்சும் உங்களக் கவுக்கறாரு போல :))

எம் அப்துல் காதர் said...

அல்லாவே இது நம்ம குடும்பத்த விட ரொம்ப கொடுமையவுல இருக்கு. எங்க வூட்டுக்கும் ஒரு தபா வந்து பார்த்துட்டு ஒரு அதட்டல் பார்வைய போட்டுட்டு போங்க!!

http://mabdulkhader.blogspot.com/

இப்படிக்கு நிஜாம் ..., said...

நல்ல மொக்கை..ஆனா சிந்திச்சி சிரிக்க வேண்டியது.. இந்த டெஸ்ட் இன்னுமா நடக்குது ஹூசைனம்மா???

ஜெய்லானி said...

விகடன் குட் பிளாக்கில வந்துள்ளதுக்கு வாழ்த்துக்கள் ...

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

ஹுஸைனம்மா said...

Thanks Jailani! Just now I noted after your info. Very happy!

அன்புடன் மலிக்கா said...

மாட்டிடுச்சா. போனாப்போகுது நம்ம வலைதானே. மெதுவா வெளியே வந்துக்கலாம்..

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா,
இந்த பதிவ நீங்க போட்டதும் படிச்சாச்சு படித்ததும் கமெண்ட் இடமுடியல்
ஒரே சிரிப்பு வாங்க நாம இரண்டு பேரும் புலம்பலாம்.

கிச்சனில் நின்று சாப்பாடு ரெடி பண்ணிட்டு கூப்பிட்டா, காட்டு கத்து கத்தினால் காதிலே விழாது

ஒரு பக்கம் டீவி, மறு பக்கம் மடி கனனியுடன் காதில் ஹெட் போன் எப்படி இருக்கும்

ஓடி போய் இவ்வள்வு நேரம் கத்தியது யார் காதிலும் விழலையான்னு கேட்டா காதில் உள்ள ஸ்பீக்கர எடுத்துட்டு என்ன சொன்னீங்க்

ம்ம்ம்ம் எனர்ஜி தான் வேஸ்ட் ,
அதான் ஒரு முடிவ்க்கு வந்து ரெடி பண்ணி வைத்து விட்டு , நானும் போய் என் கனனியில் உட்காருவேன்
எம்மாடி இவங்க இப்ப உட்கார்ந்தா அவ்வள்வு தான் இரண்டு மனி நேரம் ஆகும் வாங்க சாப்பிடலாம் எல்லோரும் தன்னாலா வந்து விடுவார்கள்

Jaleela Kamal said...

//மாட்டிடுச்சா. போனாப்போகுது நம்ம வலைதானே. மெதுவா வெளியே வந்துக்கலாம்//

அதான் சரி மலிக்கா

Karthick Chidambaram said...

Kalakkal Pathivu. Kalakkal Kudumbam. :-)

ஹுஸைனம்மா said...

எல்லாருக்க்கும் நன்றி!!

அநன்யா
புதுகைத்தென்றல்
ஜெய்லானி
பிரதாப்
எல்.கே.
சின்ன அம்மிணிக்கா
இமா
தராசு
இர்ஷாத்
அமைதிச் சாரல்
ஜமால் (ஹி..ஹி.. கண்டுபுடிச்சிட்டீங்களா?)
அன்புத்தோழன் - தவளையா... க்ர்ர்ர்ர்ர்.. பாக்கத்தானே போறோம் உங்க ஜம்பத்தை!!
கீதா ஆச்சல்
அபுஅஃப்ஸர்
ரியாஸ்
கோமதிக்கா
ஹேமா (இது கலகலவா... சமயத்துல இந்தியா-பாக் தோத்திரும்!!)
முத்தக்கா - ரொம்பப் பாராட்டுறீங்க, புரியுது!!
அம்பிகா
அரசு (சீக்ரெட்டை வெளிய சொல்லக்கூடாது)
வித்யா (பல்புங்கிறீங்க... சரி.. சரி..)
நாடோடி
ஷஃபி (இருக்கும்.. இருக்கும்..)
ரிஷபன் சார்
அனாமிகா (வீட்டுக்கு வீடு காலிங்பெல் இப்ப!!)
ராஜவம்சம் (கொடுத்துவச்சவங்க உங்க வீட்டம்மா!)
அக்பர் - பதிவை ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல!
தேனக்கா - சேம் பிளட்!!
தமிழ்ப்பிரியன் - ஆஆஆஆஆ... இங்கயுமா??
கவிசிவா
உதயம்
அதிரா - நமக்காவது இப்படி எல்லாம் ஓடுவதனால் காது கேக்காது;ஆனா நம் வீட்டு ஆணுக்கு, பக்கத்துலயே பசங்க அடிச்சுகிட்டாலும், ஏதோ மோன நிலையில இருக்க மாதிரி இருக்காங்களே, எப்படி?
நிஜாம் அண்ணே - ஹி.. ஹி..
வசந்த் - ஆறு வித்யாசம் சொல்லுங்க!!
ராமலக்‌ஷ்மி அக்கா
நானானி அக்கா
ராஜ நடராஜன் சார்
அப்பாவி தங்ஸ்
கண்ணா - வீட்டிலயாவது கொஞ்சம் எங்க சட்டம் இருக்கட்டுமே!
மாஹி-கிரானி
அருணா டீச்சர்
மதுமிதா
எல் போர்ட் - என்னது, அப்பப்பவா, முழுநேர ட்யூட்டியே அதான்!!
அப்துல்காதர்
நிஜாம் - ஏதாவது டெஸ்ட் நடந்துகிட்டேதான் இருக்குது!!
ஜெய்லானி - நன்றிங்க.
மலிக்கா
ஜலீலாக்கா - நல்ல ஐடியாவா இருக்கே இது!
கார்த்திக் சிதம்பரம் - பேரப் பாத்தா, பெரிய இடம் மாதிரி இருக்கு?

goma said...

மீனும் வாயால்தானே கெட்டுது....தூண்டில் முள் என்று அறியாமல் புழுவைப்பிடிப்பது போல்...