Pages

டிரங்குப் பொட்டி - 11
இம்முறை ஊருக்குப் போகும்போது (இன்னும்ம்மா ஊர்ப்புராணம் முடியலைன்னு கேக்கிறது கேக்குது!) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் போனோம். இருக்கையில் இருக்க டி.வி.யில், ஃப்ளைட் கிளம்பும்போதும், இறங்கும்போதும் வெளியே இரண்டு கேமராக்கள் வைத்து லைவ்வாகக் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அழகான காட்சிகள்!! அதுவும், லேண்ட் ஆகும்போது ஓடுதளம் தொட்டு சரசரவென ஓடி நிற்கும்போது ஆங்கிலப் படம் பார்ப்பதுபோலத் திரில்லா இருந்துது!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இத்திஹாத் இரண்டிலும் சிலர் அளவுக்கதிகமா குடிச்சுட்டு சலம்பல் பண்ணிகிட்டிருப்பாங்க. அவங்ககிட்ட ஏர்ஹோஸ்டஸ் அக்காக்கள் கெஞ்சிகிட்டு இருப்பாங்க, ப்ளீஸ், ப்ளீஸ்னு. ஆனா ஒரு பலனும் இருக்காது; இறங்கற வரை அவங்க பிரசங்கங்களைக் கேட்டுத் தொலையணும். இப்பவும் அதே மாதிரி ஒரு சேட்டன் ஆரம்பிச்சார். அக்கா கெஞ்சியும் அடங்கலை; அப்புறம் கோ-பைலட் வந்தார்; அவர்கிட்ட குனிஞ்சு ஒரு ரெண்டு நிமிஷம் பேசினார் (மிரட்டினார்??); அதுக்கப்புறம் மூச்!!

**********^^^^^^^^^^^^^************

பதிவுகளைப் பற்றி பதிவுலகில் அல்லாமல், ட்விட்டர், ஃபேஸ்புக், குழும மடல்கள் எல்லாத்துலயும் டிஸ்கஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் சொல்லப் போனா, சர்ச்சையான சமயங்களில், பதிவுகளில் பே(ஏ)சப்படுவதைவிட, மேற்சொன்ன இடங்களில்தான் அதிகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன, விமர்சிக்கப் படுகின்றன என்றும் அறிகிறேன். இது எந்தளவு சரி என்பது ஒருபுறமிருக்க,  இவை எதனிலும் இல்லாத (நம்புங்கள், நிஜம்தான்) என்னைப் போலப் பதிவர்களின் பதிவுகள் குறித்து கருத்துரையாடல் நடந்தால் நான் எப்படித் தெரிந்துகொள்வது, பதிலளிப்பது? (ரொம்ப ஓவர் ஸீனா இருக்கோ?)

உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது. இருந்தாலும், எல்லாரும் அதைப் பற்றிப் பேசும்போது, நாம் அப்டேட்டாக இல்லியோ என்ற தாழ்வு மனப்பான்மை வருவது போலிருந்தாலும், பிடிவாதமாக விலகி இருக்கிறேன்!!


**********^^^^^^^^^^^^^************

பாகிஸ்தானின் வெள்ளப்போக்கும், அதனால் ஏற்பட்ட/ படவிருக்கும் இழப்புகள் சுனாமியால் உலகுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாம். இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியவில்லை; 1947 பிரிவினையின்போது இருந்ததை விட மோசமான நிலை,  நாட்டின் முன்னேற்றம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். 20 மில்லியன் மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள். இன்னும்  பாதிப்புகள் தொடர்கின்றன. பகை நாடாக இருந்த போதிலும், இப்படி பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறபதைக் கண்டு மனம் கலங்கத்தான் செய்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குச் சண்டை போடும் படங்களைக் கண்டால்.....

இன்னும் கொடுமையாக, வழங்கப்பட்ட நிவாரண உணவுப் பொருட்கள், சமூக விரோதிகளால் சந்தையில் விற்கப்படுவதாக வந்தத் தகவல்கள் தமிழகத்தில் சுனாமி நிவாரண நிதியை நினைவுபடுத்தியது. பாதிக்கப்பட்ட மாகாணங்களிலிருந்து உயிர்தப்ப அண்டை நகரங்களில் நுழைபவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் சில விஷமிகள் விஷப் பிரச்சாரம் செய்கிறார்களாம்!!


**********^^^^^^^^^^^^^************

பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற ஆண்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, வந்த முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைவால் அவதிப்படுவார்கள். கேட்டால், “தண்ணி மாறுச்சுல்ல,  அதான்” என்பார்கள். சிலர் நாட்டு வைத்தியமாக, ஊருக்கு வந்தவுடன் முதலில் சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு விட்டு பின் தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள்.

இப்பவும் பல நோய்களுக்கு நீர்தான் ஆதாரம் எனும்போது, சில வாரங்கள் மட்டும் விடுமுறைக்கு வருபவர்கள், வெளியே தண்ணீர், ஜூஸ் போன்றவை  அருந்தாமல் கவனமாக இருப்பதில் தவறில்லையே? மினரல் வாட்டர் கேன்கள், வாட்டர் ப்யூரிஃபையர்கள் எங்கள் ஊரில் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை; தண்ணீரைக் கொதிக்க வைத்துதான் பயன்படுத்துகிறோம். ஆனால், எத்தனை பேருக்கு 15 - 20 நிமிடங்களாவது கொதிக்க வைத்தால்தான், கிருமிகள் முழுதும் அழியும் என்பது தெரியும்? ஓரளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, கேஸ் விலை அப்படி!!


உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, நான் எதையும் மறுப்பதில்லை; ஆனால் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் கவனமாகவே இருப்பேன். அவர்களுக்கு உடல்நலக் குறைவு என்றால் எதுவும் ஓடாது அல்லவா? உறவினர்களும் அதைப் புரிந்து கொள்கிறார்கள்; குற்றம் பிடிப்பதில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.

**********^^^^^^^^^^^^^************

சென்ற வாரம் ஒரு இஃப்தார் விருந்துக்குச் சென்றிருந்தோம். இரவு உணவாக இடியாப்பம் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து பந்தியில் சிலர் பேசிக்கொண்டார்கள்:
“இடியாப்ப அச்சு சரியில்ல போல; அதோட மாவுல தண்ணியும் கூடிப்போச்சு போல, அதான் திரிதிரியா இருக்கு”
“ஆமா, மாவு கிண்டறதுலதான் இருக்கு இடியாப்பத்தின் டேஸ்ட். என்னச் சொல்றீங்க?”
“இல்ல, நான் பிழிய மட்டும்தான் செய்வேன். மாவு கிண்டித் தந்துடுவாங்க. அதனால தெரியல.”
“அப்படியா, பரவாயில்லையே. நீங்க என்ன ஒண்ணுமே சொல்லல?”
“இதுவரை இடியாப்பம் செஞ்சதில்ல வீட்டில. நீங்கல்லாம் பேசிக்கிறதைப் பாத்தா இது ரொம்ப கஷ்டம் போல! இனி கேட்டா செய்யமுடியாதுன்னு சொல்லிடணும்!”

இதுல என்ன மெஸேஜ்னு கேக்கிறீங்களா? இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!!
  
 

Post Comment

29 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அஞ்சறை பொட்டி போல வாசனை!!

ஸாதிகா said...

//உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது// உண்மைதான்.அடிக்ட் ஆகிடாதீங்க.நாங்க ஆகிட்டு தவித்துக்கொண்டு இருக்கின்றோம்.

வல்லிசிம்ஹன் said...

நானும் ட்ரன்க் பொட்டி போட்டிருக்கேன்:)
ஹுசைனம்மா எமிரெட்ஸ்ல இந்தப் பிரச்சினையை நான் பார்க்கவில்லை. காதில இயர்போன் மாட்டிக்கிட்டாப் படம் ஓடினாலும் ஓடாட்டாலும் ஒரு குட்டித்தூக்கம் போட்டுடுவேன்.:) ஏர்பாக்கெட் இல்லாம வந்தீங்களா. ? அது பயங்கர அனுபவமா இருக்குப்பா. பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிச்சதுதான். அத்தோட பந்தாவை நிறுத்திக் கொண்டேன்:)
என்னவெல்லாமோ காதில விழுந்ததால.
இருக்கவே இருக்கு இமெயில். எதுக்குப்பா வம்பு!

நாஞ்சில் பிரதாப் said...

ஏர் இநதியாவுல(துபாய்-டு-திருவனந்தபுரம்) இந்த சேட்டனுங்க பண்ற அலம்பல் தாங்காது. தண்ணி அடிச்சட்டு இங்கிலிஷ் பேசற அழக இருக்கே... )இங்கிலிஷ்னா என்னன்ன புரியும்னு நினைக்கிறேன்.)
ஃப்ளை ஒன்லி எமிரேட்ஸ்...
====
பேஸ்புக், ட்விட்டர்லயும் வந்துடாதீங்க...பிளாக்கையே...:))
எல்லாமே நேரத்தைக்கொல்லுகிறது... கண்டிப்பாக அடிக்ட் ஆகி விடுவோம்...
===
//இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!! //

இதுல நம்ம சாரும் ஒருத்தர்னு நம்புவோமாக...:))

நட்புடன் ஜமால் said...

தூசி கம்மி தான் போல

கடைசி மேட்டர் படிச்சிட்டு மேலே உள்ளதெல்லாம் மறந்துடுச்சி

அடிக்ட் ஆகாம இருப்பதே நல்லது

நாடோடி said...

பேஸ் புக், டுவிட்ட‌ர் ப‌க்க‌ம் போனால் ரெம்ப‌ க‌ஷ்ட‌ம் தான்.. :)

சுந்தரா said...

//இப்பவும் அதே மாதிரி ஒரு சேட்டன் ஆரம்பிச்சார். அக்கா கெஞ்சியும் அடங்கலை; அப்புறம் கோ-பைலட் வந்தார்; அவர்கிட்ட குனிஞ்சு ஒரு ரெண்டு நிமிஷம் பேசினார் (மிரட்டினார்??); அதுக்கப்புறம் மூச்!!//

நாங்க போனப்பவும் ஒரு அண்ணன்,சரக்கு உள்ள போச்சுன்னா உக்காரமாட்டோம்லன்னு நின்னே அடம்புடிச்சிட்டிருந்தார். அவரையும் இப்புடிதான் மிரட்டி அடக்கினாங்க.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!! //

இதுல நம்ம சாரும் ஒருத்தர்னு நம்புவோமாக...:)

அமோதிக்கிறென், இதில் ஹுசைனம்மாவின் அவரும் இருந்திருக்கிறார் என்று நம்புவோமாக.

அருமையான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

//உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை//

யாராவது போட்டோவுக்கு கமெண்ட் போட்டிருக்கிறார்களா? புது நண்பர்களின் ரிக்வஸ்ட் ஏதும் வந்திருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்ய வேண்டி இருக்கிறது. தவிர சில நல்ல விஷயங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

Chitra said...

பொட்டியை திரும்ப திறந்ததில் மகிழ்ச்சி.

Riyas said...

ம்ம்ம் நல்லாயிருந்தது டிரங்குப் பெட்டி

பாகிஸ்தானிய வெள்ளபெருக்கு கவலையான விஷயம்தான்

ஸ்ரீராம். said...

கடைசி மேட்டர்தான் டாப்...!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹாஹாஹா நிஜமா சில ஆண்கள் சமைக்கிறாங்களாப்பா..:))

☀நான் ஆதவன்☀ said...

:)))))))) ரங்கமணீஸ் :)))

உங்களது எந்த கட்டுப்பாடு எமிரேட்ஸ்ல பிடிச்சிருக்கோ அந்த கட்டுப்பாடு சில பேருக்கு கடியா இருக்குதே :) (நான் பிரதாப்ப சொல்லல)

இளம் தூயவன் said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
ஹாஹாஹா நிஜமா சில ஆண்கள் சமைக்கிறாங்களாப்பா..:))

சகோதரி உங்களுக்கு விசயமே தெரியாதா, என்ன போங்க தமிழ்நாடு எங்கேயோ போய்கிட்டு இருக்கு. சகோதரிகள் எல்லாம் என்னக்கி வேலைக்கு போக ஆரம்பித்தார்களோ அன்றே ஆரம்ப விழா தான்.

அப்துல்மாலிக் said...

//தண்ணீரைக் கொதிக்க வைத்துதான் பயன்படுத்துகிறோம். ஆனால், எத்தனை பேருக்கு 15 - 20 நிமிடங்களாவது கொதிக்க வைத்தால்தான், கிருமிகள் முழுதும் அழியும் என்பது தெரியும்? //

டாக்டர் அட்வைஸ்படி கிருமி மட்டும்தான் அழியுமாம, அதைவிட கொடுமை சில வேதிப்பொருளும், அயன்களும் அப்படியே இருக்குமாம, அதனால்தான் வாட்டர் பியூரிஃபிகேசன் அட்வைஸ் பண்ணுறாங்க, இது கொதிக்க வைத்த நீரைவிட நல்லது, நான் முயற்சி செய்தேன் நிறைய பலன் கிட்டியது

ஜெய்லானி said...

டிரங்குப் பொட்டி இன்னைக்கி கனம் ஜாஸ்தி...

////உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது//


அடப்பாவமே..!!!ஃநாங்க தூங்கி முழிக்கிறதே அதுலதானே...!!!


//உண்மைதான்.அடிக்ட் ஆகிடாதீங்க.நாங்க ஆகிட்டு தவித்துக்கொண்டு இருக்கின்றோம்.//


வரவங்க சொல்லலாம் .. வராதவங்க சொல்லலாமா..அவ்வ்வ்வ்வ்

vanathy said...

நல்ல பதிவு. ரங்கமணிகள் இடியாப்பம் பற்றி பேசும் போது( குறை சொல்லும் போது ) இந்த தங்கமணிகள் என்னா செஞ்சுட்டு இருந்தாங்க????

கோமதி அரசு said...

டிரங்குப் பெட்டியிலியிருந்து வந்த விஷயங்கள் எல்லாம் சிந்திக்க வைக்க கூடியது.

நல்ல பதிவு.

Rithu`s Dad said...

//உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது. இருந்தாலும், எல்லாரும் அதைப் பற்றிப் பேசும்போது, நாம் அப்டேட்டாக இல்லியோ என்ற தாழ்வு மனப்பான்மை வருவது போலிருந்தாலும், பிடிவாதமாக விலகி இருக்கிறேன்!!//

டிவிட்டர் பேஸ்புக் - சீக்கிரம் அக்கவுண்டை ஆக்டிவ்வாக்குங்க.. அடிக்சன் எல்லாம் ஆகுறதுக்கு வாய்ப்பே இல்லை..


எல்லாமே ஆரம்பத்தில் கொஞ்சம் அடிக்சன் போல இருக்கும்.. போக போக..எல்லாம் சரி ஆகிடும்..

இப்ப விட்டீங்கன்னா அப்புறம் வேற ஒரு வலை சேவை வந்திருக்கும்..
இமெயில்
யாகு சாட்
வாய்ஸ் சாட்
வெப் கேம் சாட்
ஆர்கூட்
ப்லாக்
ஜி மெயில்..
இப்போ
பேஸ்புக் / டிவிட்டர்..

இன்னும் அடுத்த ஆண்டு.. வேற ஒன்னு.. கண்டிப்பா இப்பவே ஆக்டிவாகுங்க.. :)


//பகை நாடாக இருந்த போதிலும், இப்படி பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறபதைக் கண்டு மனம் கலங்கத்தான் செய்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குச் சண்டை போடும் படங்களைக் கண்டால்.....//

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கும் அதனால் மக்களின் வேதனைகளும் மிக வேதனைக்குறியவையே..

ஆமம் இந்த அரசியல்வாதிகள் தான் இப்படி பகை நாடு நட்பு நாடுன்னு வரிசை பிரிக்கிறாங்கன்னா.. நாமளுமா??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லைவா காமிக்கிறாங்களா..யம்மாடி நான் திகிலில் உறைஞ்சுடுவேன்..

தாழ்வுமனப்பான்மையே வேணாம் அப்பறம் நீங்க திகிலாகிடுவீங்க.. ;)

என்ன உலகம் பூரா மக்கள் இப்படித்தான் தேவைன்னு அதும் இப்படி பஞ்சக்காலத்துல தேவைன்னு வரும்போது அடிச்சுக்கொள்வதோ உயிரைக் காப்பாத்திக்க் அவசியமாகுது..அண்டை மாநிலத்துக்காரனுக்கு எங்க தன்னோட சுகவாழ்வும் பரிபோயிடுமோன்னு அவங்க பயம்.. :( வேதனையான விசயம் தான்.

தண்ணி நீங்க சொன்னமாதிரி அட்லீஸ்ட் குழந்தைகளையாவது நாம் ஊரு மாத்தி ஊரு போகும் போது கவனிச்சுத்தான் ஆகனும் சிலருக்கு அது பந்தாவா தெரிந்தா அது நம் தவறு இல்லை ..

ரங்கமணீஸ் .. ஆகா சூப்பரு..
( நானும் இடியாப்பம் செய்வதில்லை ஹிஹி)

ஜெயந்தி said...

டிவிட்டர், பஸ்சுக்கு ஏன் போறீங்க. இன்னொரு ப்ளாக் நம்ம படிக்காத ப்ளாக்ல போட்டுருந்தாக்கூட நமக்குத் தெரியாது.

ட்ரங்குப் பெட்டி எல்லாமே நல்லாயிருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. ட்விட்டர் face புக் இதுல எல்லாம் சேரச் சொல்லி ஆரம்பத்துல கொஞ்சம் பேரு ஈமெயில் அனுப்பிப் பாத்தாங்க.. அப்புறம் இது தேறாத கேஸ் ன்னு தெரிஞ்சு விட்டுட்டாங்க போல :)

technology said...

சகோதரி ஹுசைன் அம்மா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தங்களுடைய ட்ரங்க் பெட்டி பதிவுகள் எழுத்தாளர் சுஜாதாவின் 'சீரங்கத்து தேவதைகளை' முன்னிறுத்துகிறது.

ராஜவம்சம் said...

ரைட்டு.
பாகிஸ்தான் மேட்டர் கஸ்டமானதுதான்.

ஹுஸைனம்மா said...

சைவக்கொத்ஸ் - நன்றி.

ஸாதிகா அக்கா - நன்றிக்கா அட்வைஸுக்கு.

வல்லியம்மா - நல்லவேளை ஏர்பாக்கெட் இல்லை;

பிரதாப் - கண்டிப்பா என் ரங்ஸை இதில நீங்க இழுப்பீங்கன்னு தெரியும்!!

நாடோடி - அப்படியா? நல்லவேளை.

ஹுஸைனம்மா said...

சுந்தரா - ஏந்தான் இப்படி குடிச்சு அழியுறாங்களோ?

அபு நிஹான் - நீங்களுமா?

சித்ரா - நன்றி.

ரியாஸ் - நன்றி.

தேனக்கா - ஆமாக்கா, இப்பல்லாம் நல்லா உதவி செய்றாங்க!! (அங்க இல்லியா?)

ஹுஸைனம்மா said...

ஆதவன் - அப்ப உங்களுக்கு கடியா இல்லியா?

தூயவன் - அதானே;

மாலிக் - நல்ல தகவல்; நன்றி!!

ஜெய்லானி - தூங்க முடியுதா ஃபேஸ்புக்குல இருக்கவங்களால?

வானதி - அவங்க குறை சொல்லலியே, கஷ்டத்தைத்தானே சொல்லிகிட்டிருந்தாங்க!!

கோமதிக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

ரீத்து அப்பா - அரசியல்வாதிகள் அப்படியே பகை நாடுன்னே நம்மளையும் பிரெயின் வாஷ் பண்ணிட்டாங்க போல!!

தொழில்நுட்பங்கள் புதிதுபுதிதாக மாறலாம்; நிச்சயம் மாறும். அது இன்னும் குழப்பத்தைத்தான் தரும் என்பது என் எண்ணம். எதுவுமே (தேவையான) அளவோடு இருத்தல் நல்ம என்பதே என் கருத்து!!

முத்தக்கா - இல்லை, அது ஒண்ணும் பயமாயில்லை; நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, ஜன்னலோரம் இருந்து பார்ப்பதுபோலத்தான் இருந்தது.
கண்டிப்பா குழந்தைகளின் உடல்நலம் பேணுவதற்காகச் சிலரின் கருத்துக்களைப் புறக்கணித்துத்தான ஆகவேண்டியிருக்கிறது.

ஜெயந்திக்கா - அதானே, நமக்குத் தெரியாத பிளாக்குல சொல்லிருந்தா தெரியாது; ஆனா லிங்க் கொடுத்தா, நம்ம பதிவுல வரும்.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - ஹை!! ஸேம் பிளட்டா? என் அமெரிக்கத் தோழியும் சொல்லி ஓய்ந்து விட்டாள்.

டெக்னாலஜி - சுஜாதாவா? அவ்வ்வ்..

ராஜவம்சம் - நன்றி.

அனைவருக்கும் நன்றி.