Pages

நகர்வலம் - 2
  
 
இதோ நம்ம நகர்வலத்தோட இரண்டாம் பாகம்!! ( ஒரு வேலையை ஆரம்பிச்சா, முழுசா முடிக்கிற வரை விடமாட்டம்ல!!)


[#]    நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்து விட்டார்கள் என்றதும் சந்தோஷமாருந்தாலும், அதை நம்பிப் பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் என்னாகுமோ என்ற கவலையும் இருந்தது. இப்போது அழகாக, டிஷ்யூ பேப்பர் போன்ற மக்கக் கூடிய மெல்லிய துணியில் அழகான பைகள் வந்துவிட்டன். ஆனாலும் பல கடைகள் இதை இலவசமாகத் தருவதில்லை. (ஹி. ஹி.. அப்படியே பழகிடுச்சு..)

[#]    ஆனா, நாகர்கோவில்ல ஹெல்மெட் கட்டாயமாக்கப்படாததும்,  குப்பை சேகரிப்பது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததும் ஆதங்கமா இருக்கு. அதச் செஞ்ச கலெக்டர் இதுவும் செஞ்சா நல்லாருக்கும்.

[#]   நெல்லையிலும் பயங்கர போக்குவரத்து நெரிசல் எங்கப் பாத்தாலும். பாளை ஹிக்கின்பாதம்ஸ்லருந்து, வ.உ.சி. ஸ்டேடியம் எதிர்ல ஈகிள் புக் ஷாப் வரைக்கும் (அஞ்சு நிமிஷம்கூட ஆகாது) நடந்து போலாம்னு பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போயிட்டுத் திணறிட்டேன்.

[#]   நெல்லை ஆரெம்கேவியில செக்யூரிட்டி சோதனைகள். போத்தீஸில் சோதனைகள் எதுவும் இல்லை. ஏன்? 

[#]   பல நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: நெல்லை - நாகர்கோவில், மதுரை-திருச்சி, சென்னை-புதுவை - எல்லா சாலைகளுமே சூப்பர். MNC நிறுவனங்கள் மேற்பார்வையும் பங்களிப்பும் செய்து உருவாக்கிய சாலைகள். அதே சமயம், ஊருக்குள்ள காண்ட்ராக்டர்கள் போடுற சாலைகள் ஒரு மழைக்கே தாங்குறதில்லயே ஏன்னு கேள்வி வருது.

[#]  திருச்சி - மதுரை சாலையில் உள்ள பசுமையான சூழல் ஆச்சர்யம் தந்தது. முதல்முறை பகல்ல இந்த வழியே செல்வதால் மலைகளும், மரங்களும், தோப்புகளும் நிறைந்த சுற்றுப்புறம் வியப்பளித்தது. (இதுவரை ரயிலில்தான் (இரவில்) இந்த ஊர்களின் வழியேச் சென்றிருக்கிறேன்).

[#]   மதுரை அருகே இருக்கும் ஆனைமலை - அழகான காட்சி. ரொம்ப வியந்து பார்த்தேன். இந்த மலையைக் குடைந்து ஒரு “சிற்பப் பூங்கா” ("Sculpture Park") உருவாக்க அரசு திட்டமிட்டதாகவும், அது இந்த மலையிலுள்ள  கிரானைட்டைக் கவர்வதற்கான சதி என்று எழுந்த எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அறிந்தேன். 

ஆனைமலை
 இந்த மலை இப்படியே இருப்பதுதான் அழகு என்று தோன்றுகிறது. என்னா நீளமான மலை, ஒரு ஒற்றைக்கல் சிற்பம் போல!! ஆனை படுத்திருப்பதுபோல இருப்பதால் இந்தப் பெயராம்!! (எங்களுக்கே பாடமான்னு கேக்கக்கூடாது; ஒரு ஆர்வம்தான்!!)

[#]   மதுரை நாயக்கர் மஹால் போகத் திட்டமிட்டு, வழக்கம்போல பிள்ளைகளின் உடல்நிலையால் கேன்ஸல் ஆனது.  தமிழ்நாட்டுலயே இப்படி பாக்க வேண்டியது எவ்வளவு இருக்கு!!

[#] திருச்சி ஒரளவு சுத்தமாகத் தெரிகிறது, மற்ற ஊர்களை விட.  

[#]   இன்ஷ்யூரன்ஸில் வேலை பார்க்கும் நண்பர், மக்களிடையே மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் குறித்து நல்ல விழிப்புணர்வு இருப்பதாகச் சொன்னார்.  அவரது அலுவலக வாசலில் பான்கடை வைத்திருப்பவர், தனது குடும்பத்தின் மருத்துவக் காப்பீட்டுக்காக 17,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறாராம்!!

[#]  எல்லா ஊரிலும், வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதே இல்லை;  உறவினர் வீட்டில் வேலை பார்ப்பவர், தான் வேலை பார்க்கும் ஐந்து வீடுகளிலும் ரேஷன் கார்டை வாங்கி அதில் அரிசியை வாங்கி வெளியே விற்கிறார். அன்றாட உணவு வேலை செய்யும் வீடுகளில் (பழசில்லை; சூடானதுதான்) அதிகப் படியாகவே கிடைத்துவிடும். தவிர, அரசு தரும் ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்கள், காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு, தொலைக் காட்சி, வீட்டு வசதித் திட்டத்தில் வீடு,... ம்ம் ..

[#] நெருங்கிய உறவினரொருவர்,  இயற்கை விவசாயம் செய்ய விரும்பி நிலம் வாங்க முயற்சி எடுத்தார். பண்ணைக்காரர்கள் முதல் சிறு விவசாயிகள் வரை, ஏன் நில புரோக்கர் கூடச் சொன்ன அறிவுரை “வேண்டாம். வாங்காதீங்க!” காரணம், மழையோ, தண்ணீர் தட்டுப்பாடோ இல்லை; வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதே!!

[#] வீடு கட்டுபவர்களிடையேகூட இதே புலம்பல்தான், கட்டுமானப் பணியாளர், தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், பெயிண்டர் - எல்லாருக்குமே பயங்கர டிமாண்ட்; சம்பளமும் கொஞ்ச நஞ்சமில்லை!! அப்புறமும் வெளிநாட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுபவர்களும், ஏமாறுபவர்களும் குறைவதாக இல்லயே!!
  
 

Post Comment

36 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//[#] திருச்சி ஒரளவு சுத்தமாகத் தெரிகிறது, மற்ற ஊர்களை விட.

//

உண்மைதான். அப்படியே திருச்சிக்கு அருகில் இருக்கும் புதுக்கோட்டைக்கு வந்து பாருங்க.திருச்சியைவிட இன்னும் சுத்தமாக இருக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

நகர்வலம் நன்று.

இளம் தூயவன் said...

நகர்வலம் தொடரட்டும்.

Anonymous said...

நல்ல டீடெய்ல்ஸ் :)

ராஜவம்சம் said...

சிறப்பான பதிவு .

//எல்லா ஊரிலும், வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதே இல்லை; உறவினர் வீட்டில் வேலை பார்ப்பவர், தான் வேலை பார்க்கும் ஐந்து வீடுகளிலும் ரேஷன் கார்டை வாங்கி அதில் அரிசியை வாங்கி வெளியே விற்கிறார். அன்றாட உணவு வேலை செய்யும் வீடுகளில் (பழசில்லை; சூடானதுதான்) அதிகப் படியாகவே கிடைத்துவிடும். தவிர, அரசு தரும் ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்கள், காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு, தொலைக் காட்சி, வீட்டு வசதித் திட்டத்தில் வீடு,... ம்ம் .. //

சௌதியி குப்பகொட்ரதுக்கு ஊர்லயே வீட்டு வேலை செய்யலாம் போல!!!

வெறும்பய said...

நகர்வலம் நன்று...தொடரட்டும்

நாஞ்சில் பிரதாப் said...

//நாகர்கோவில்ல ஹெல்மெட் கட்டாயமாக்கப்படாததும், குப்பை சேகரிப்பது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததும் ஆதங்கமா இருக்கு. அதச் செஞ்ச கலெக்டர் இதுவும் செஞ்சா நல்லாருக்கும்.//

இதுக்கெல்லாம் ஏன் கலெக்டர் வரைக்கும் போய்கிட்டு என்கிட்ட ஒருவார்த்தை சொன்னாபோதுமே..:))

நாஞ்சில் பிரதாப் said...

//அரசு தரும் ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்கள், காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு, தொலைக் காட்சி, வீட்டு வசதித் திட்டத்தில் வீடு, ம்ம் //

இதில் நுண்ணரசியல் உள்ளது. நீங்க தாத்தாவுக்காக பிரச்சாரம் பண்றிங்க...

முகுந்த் அம்மா said...

நகர்வலம் நல்லா இருக்குங்க.
//மதுரை அருகே இருக்கும் ஆனைமலை - அழகான காட்சி. ரொம்ப வியந்து பார்த்தேன்.//

உன்மைங்க. ஆனைமலை ரொம்ப அழகு தான்.

// இந்த மலையைக் குடைந்து ஒரு “சிற்பப் பூங்கா” ("Sculpture Park") உருவாக்க அரசு திட்டமிட்டதாகவும், அது இந்த மலையிலுள்ள கிரானைட்டைக் கவர்வதற்கான சதி என்று எழுந்த எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அறிந்தேன். //

அப்படியா, அப்படியே இருந்தா தான் அழகு, அதை குடையவும் வேண்டாம், சிற்பமும் வேண்டாம்.

ஸாதிகா said...

இப்ப வசிக்கின்ற ஊரைப்பற்றி எழுதுறீங்களா மேடம்?

ஸ்ரீராம். said...

பிளாஸ்டிக் கவர்கள் இலவசமாகக் கொடுப்பதில்லை என்கிறீர்கள். அனால் இலவசமாகக் கொடுக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ஆனைமலை படம் அழகு.

அம்பிகா said...

நகர்வலம் அருமை!
கமெண்ட்கள் அதை விடவும் அருமை!

நாடோடி said...

//நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்து விட்டார்கள் என்றதும் சந்தோஷமாருந்தாலும், அதை நம்பிப் பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் என்னாகுமோ என்ற கவலையும் இருந்தது.//

ஆனால் இந்த‌ பேப்ப‌ரில் உள்ள‌ பைக‌ள் குடிசைத் தொழில்க‌ளாக‌ செய்வ‌தால் ப‌ல‌ பேர் ப‌ய‌ன‌டைகிறார்க‌ள்..

நட்புடன் ஜமால் said...

கடைசி பாய்ண்ட் நிறைய யோசிக்கனும் ( அப்படி போறவங்களை சொல்றேன் )

GEETHA ACHAL said...

சூபப்ர்ப் நகர்வலம்....நடத்துங்க...

Chitra said...

#] திருச்சி ஒரளவு சுத்தமாகத் தெரிகிறது, மற்ற ஊர்களை விட.

..... ஆஹா.... திருநெல்வேலி ?????? சீக்கிரம் சுத்தம் படுத்துங்கப்பா......

மின்மினி said...

நகர்வலத்தில் எத்தனை எத்தனை தகவல்கள்.. அறிந்து கொள்ள வசதியா இருந்தது...

நெல்லையில் இப்போ ட்ராபிக் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சி.. எங்கயும் போகமுடியல.. ரோடெல்லாம் குண்டும்குழியுமா.. உடம்பு வலிதான் மிச்சம்.

அமைதிச்சாரல் said...

நாகர்கோவில் வரவர எல்லாத்துலயும் பின்தங்கிக்கிட்டு இருக்கு. திருனேலில இன்னும் ரோட்டு வேலை தீரலியா!!!

avargal said...

என்ன அக்கா வரும் தேர்தலில் நிக்க உங்களுக்கு ரொம்ப தகுதி இருக்கிறது. கலைஞர் மாதிரி சிறிய காலத்தில் தமிழ் நாட்டையே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டிர்கள். & ஜெ மேடம் மாதிரி நிறை குறைய்யை கூறியுள்ளிர்கள். அசத்துங்கள். அப்படியே ஒரு பொடி நடைப் போட்டு அமெரிக்காவிற்கும் வந்துவிட்டு போங்ககள்.

நேரம் கிடைக்கும் போது என் வலைப்பக்கத்திற்கு வந்து நிறை குறையை கூறிவிட்டு செல்லுங்கள்.
http://avargal-unmaigal.blogspot.com/

மனோ சாமிநாதன் said...

ஏற்கனவே அடிக்கடி மதுரை பக்கம் போகும்போதெல்லாம் ரசிக்கும் ஆனைமலையை உங்களின் அருமையான வர்ணிப்பில் இன்னும் ரசித்தேன். இனி ஆனை மலையைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் ஞாபகமும் வந்து விடும்.

திருச்சி வரை போயிருக்கிறீர்கள். அப்படியே எங்கள் ஊரான தஞ்சை போகவில்லையா? அல்லது அடுத்த நகர்வலத்தில் வருமா? மொத்தத்தில் நகர் வலம் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் அதிகப்படியாக பார்த்தறிந்திராத ஊர்கள்..

செய்திகள்ல கேள்விப்பட்ட மாதிரி இருக்குது.. ஆனா ஆனைமலை இப்போதான் பாக்குறேன்..

நல்லா ஊர் சுத்தியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது :)

azeem basha said...

thank you for visiting trichy ( my native place ) You know trichy awarded 3rd or 4th cleanest corporation in india.

ஜெய்லானி said...

நான் போகாத ஊர்கள் ஓக்கே.... ஆனா கடைசி மேட்டர் ...சரியான சவால்தான் ...

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - நன்றி. புதுக்கோட்டை... இன்ஷா அல்லா, உங்க வீட்ல விசேஷம் வந்தா கூப்பிடுவீங்கள்ல, அப்போ பாக்கலாம்.

சைவக்கொத்ஸ் - நன்றி.

தூயவன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணிக்கா - நன்றி.

ராஜவம்சம் - அதேதாங்க.

வெறும்பய - நன்றி.

ஹுஸைனம்மா said...

பிரதாப் - //இதுக்கெல்லாம் ஏன் கலெக்டர் வரைக்கும் போய்கிட்டு என்கிட்ட ஒருவார்த்தை சொன்னாபோதுமே.//

அதுசரி, குப்பை வார்றதைப் பத்தி உங்ககிட்டச் சொல்லணுமா? துபாய்ல குப்பை கொட்டுறீங்கன்னுதான் நினைச்சேன், இதுதானா அது? :-)))

//நுண்ணரசியல் உள்ளது. நீங்க தாத்தாவுக்காக பிரச்சாரம் பண்றிங்க//

அட, இப்படியும் இருக்கோ? அப்ப சீட் கேட்டுப் பாக்கலாம் போல!!

ஹுஸைனம்மா said...

முகுந்த் அம்மா - நீங்க மதுரைக்காரங்க; ஆனைமலையைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? நன்றிங்க.

ஸாதிகாக்கா - அதான் நீங்க எழுதிட்டீங்களே?

ஸ்ரீராம் - பிளாஸ்டிக் கவர்களை இலவசமாகத்தான் தந்தார்கள்; இப்போதைய டிஷ்யூ போன்ற துணியில் செய்யப்பட்ட கவரைத்தான் இலவசமாகத் தருவதில்லை; ஆனால், அதனால்தான் மக்கள் துணிப்பைகளை வீட்டிலிருந்தே எடுத்துவருகின்றனர்.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - நன்றி.

நாடோடி - ஆமாங்க, சோர்ந்துபோகாம புதியதிற்கு மாறிவிட்டார்கள் போல!

ஜமால் - ஆமாம். தெரிந்த ஒரு எலெக்ட்ரீஷியன் குவைத் வந்து திரும்பி (திருந்தி) வந்துவிட்டார். இப்போது அவரின் அப்பாயின்மெண்ட் கிடைப்பது அவ்வளவு சிரமம்!!

கீதா - நன்றி.

ஹுஸைனம்மா said...

சித்ரா - திருநெல்வேலியைவிட திருச்சி சுத்தம். நம்ம ஊர் இன்னும் முன்னேற வேண்டும் இந்த விஷயத்தில்!!

மின்மினி - ஆமாம்பா, நெல்லை நெரிசல் நெல்லையாகிடுச்சு!!

அமைதிச்சாரல் - ரோடு வேலைகள் ஒண்ணும் பார்க்கல நான், ஆனா, வாகனப் பெருக்கம் அதிகம்!!

ஹுஸைனம்மா said...

அவர்கள் - ஆஹா, ஜெ.. எங்க நான் எங்க? ரேஞ்சையே மாத்திட்டீங்களே?

மனோக்கா - வாங்கக்கா. தஞ்சைக்குப் போனதில்லை இதுவரை. இனி சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்கலாம்!!

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - எனக்கும் ஆனைமலை புதுசு!! பள்ளியில் படிச்சிருப்போம்னு நினைக்கிறேன்!!

அஸீம் - நீங்க திருச்சியா? திருச்சி இந்தியாவின் 3வது (4வது) சுத்தமான நகராட்சி என்பது மகிழ்ச்சியானத் தகவல். நன்றி.

ஜெய்லானி - வாங்க; நன்றி.

கோமதி அரசு said...

நகர் வலம் நன்று.

வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை என்பது உண்மைதான்.

சுய உதவி குழுவால் வாழ்க்கை வசதிகள்
வந்து விட்டது.

அமைதிச்சாரல் said...

மதுரை ரோட்டுல பாலம் கட்டுறாங்கல்லா அதுக்காக வாகனங்களை வேற வேற வழிகள்ல திருப்பி உட்டுருக்காங்க. அதான் நெரிசல்..

ஆரெம்கேவிகிட்டயிருந்து நெரிசல் ஆரம்பிச்சு வ.உ.சி.வரைக்கும் இருக்குது.

Jaleela Kamal said...

நகர்வலம் அப்படியே உங்களுடன் ஒரு சுற்று சுற்றீ வந்தாச்சு

வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை எல்லா இடத்திலும் அபப்டி தான்

ஜெயந்தி said...

என்ஜாய் பண்ணதெல்லாம் வருதா? சொந்த ஊருக்கு வந்து போற சந்தோஷத்து ஈடு இருக்காதில்ல.

சிநேகிதன் அக்பர் said...

நகர்வலம் நல்லா இருக்கு.

அனைத்து ஊர்களையும் அலசியிருக்கிங்க.

நீங்கள் சொல்வது உண்மைதான். ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல சம்பளம் சரியில்லாமதான் இங்கே வந்தது.

இப்போ ஊர்ல இங்கையை விட சம்பளம் அதிகம். அதுவும் நல்லதுதான்.