Pages

பாத்துக்கோ.. நானும் ரவுடிதாம்லேய்....!!




 
  
1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா!!”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு,  பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது.  தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை!! இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்பட்டது  அவளது எழுத்துக் கோலத்திற்கு!!

ஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம்  வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.

ஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.

இப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா? மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு!! பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது!!

அப்புறமென்ன, ருசி கண்டாச்சு!! ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி,  அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.

இலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை? உடம்பு சரியில்லியா?” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு!! இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு!!” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்?). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு  நடையைக் கட்டிட்டாருன்னா? அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)

எல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கே?ன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது.  அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை  ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க? பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))

அது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily?" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).

மற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு!! போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு  என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி!! என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!! பேட்டி இங்கே கேளுங்க:



போன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.

இப்ப சொல்லுங்க, நானும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா? என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம்!! சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்!!
 
   

Post Comment

81 comments:

Thamiz Priyan said...

;-)

Rajakamal said...

யாரையோ பற்றி எழுதுவது போல் எழுதிவிட்டு கடைசியில் பார்த்தால்....., இருந்தாலும் சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது. விசயம் சந்தோசமாக இருந்தது. இதையெல்லாம் நீங்க சொன்னா தானே தெரியும் மேன் மேலும் பிரபலமடைய வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

பிரபல பதிவர் ஹுஸைனம்மா வாழ்க...

Unknown said...

oothukuroom...

ராஜ நடராஜன் said...

பேட்டியின் தமிழ்க்குரல் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

Radhakrishnan said...

//இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. //

ஹா ஹா!

எல்லா விஷயங்களுமே நடந்து முடிந்தவுடன் பொய் வேடம் தரித்து கொள்கின்றன.


வாழ்த்துகள்.

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

Chitra said...

அப்படி போடு அருவாளை!!! தொடர்ந்து கலக்குங்க!!!!! வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் said...

ஹுஸைனம்மா//
எழுதுவதில் இன்பம். எழுதிய விஷயத்தை பகிருவதில் பேரானந்தம்.

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உங்க கட்டுரை முழுதும் நகைச்சுவை வெடி(வேலு)தான்.
ஜீப்பில ஏறிட்டீங்கள்ல? அப்புறம் என்ன போய்ட்டேயிருங்க.
அதுக்கு என் வாழ்த்துக்கள்.

//பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது //

'படம்'னு போட்டுருக்கீங்க... என்ன படம்? விளக்கம் ப்ளீஸ்...

ஸ்ரீராம். said...

வாசகர் கடிதம் எழுதறது சாதாரணமான விஷயம் இல்லையே...அயன்புரம் த. சத்தியநாராயணன், அத்திப்பட்டு வாசு போன்றவர்கள் இந்த மாதிரியே பிரபலமானவர்கள்தானே..ஒலிப்பதிவு தான் எனக்கு வேலை செய்யவில்லை. ஏதோ கோளாறு.
வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

சாதரணமாய் ஆரம்பித்து, தெளிவாய் - விளக்கமாய் - எப்படி ஹுசைனம்மா ...!! :)) (எழுதி வைத்து பேசியிருந்தால் கூட இவ்வளவு தெளிவாக பேச முடியாது - அதுக்கும் கூட டங் tie ஆகாம பேச தைரியம் வேணும்!!) நீங்க பேசியது மிக அருமை!!

சென்ற வருஷமே பெண் பதிவர்கள் சந்திப்பில் (அணைத்து பெண் பதிவர்களும்) உங்களைத்தான் எல்லாமும் (எல்லோரையும்) தெரிந்து வைத்திருக்கும் பிரபல பதிவர் என்று தத்தம் பதிவில் குறிப்பிட்டார்கள். அதெல்லாம் உங்கள் பேச்சில் புரிகிறது!! :)) பிரபல பதிவருக்கு வாழ்த்துகள்...!!

எல் கே said...

பிரபலப் பதிவர் வாழ்க வாழ்க ...

இதற்க்கு எதிர்வினை வேணும்மா?? போட்டுடலாம் ?? நீங்க கேட்டுட்டீங்க மாட்டோம்னு சொல்லுவமா ??

எல் கே said...

@ஸ்ரீராம்

அண்ணா எனக்கு சரியாய் வருதே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்ப இந்த எம் பி த்ரிய போட்டதுக்கு காரணம் போட்டீங்க பாருங்க..யம்மாடி .. எங்கயோ போயிட்டீங்க ..:) எனக்கு கேக்கமுடியல பேட்டி ..:(

அமுதா கிருஷ்ணா said...

ஓ, நீங்க தான் அந்த அபுதாபி ரவுடியா??BBC-சொன்னாங்க...வாழ்க..

Mahi said...

ஹூசைனம்மா,வாழ்த்துக்கள்! உங்கள் ஊடகப்பயணம் சிகரங்களை எட்டட்டும்.

பேட்டிய கேட்டுட்டேன்..உங்க குரல் நன்றாக இருக்கு. :)
நோன்பு தகவல்களும் தெளிவா சொல்லிருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள்ளாம் எப்பவோ ரவுடிங்க இப்ப புதுசா என்ன சவுண்ட் விடறீங்க..
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்:))

Prathap Kumar S. said...

//ஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது//

அப்பவே ஒரு நல்ல ஸ்கின் டாக்டரா பார்த்துருந்தருக்கலாம்..:))

வாழ்த்துக்கள்...அடுத்தது CNN, NDTV என்று தொடர்ந்து பேட்டி வரட்டும...:))

Prathap Kumar S. said...

பேட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி...
ரொம்ப பதட்டப்பட்டு பேசறீங்க...:)

Thamiz Priyan said...

டவுன்லோட் செய்ய

ஜெய்லானி said...

ஆஹா.. ரேடியோ பேட்டி இப்ப சொல்லிதான் தெரியும் ..சூப்பர் பேட்டி அதுவும் இலங்கை தமிழில் சும்மா அசத்துரேள் போங்கோ..!! :-))

ஜெய்லானி said...

//எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க? பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))//

சுறா மாதிரி படமா இருந்தா நான் அனுப்பி வைக்கவா.. ஹா..ஹா..!!:-))))))))))))))))))))))))

Anisha Yunus said...

//இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.//

ஹெ ஹெ ஹெ...ஒத்துக்கிடறோம். ஆக மொத்தம் பதிவுலகத்துக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிச்சிருக்கீங்க போலவே...”எலேய்...எல்லாம் சரியா இருங்க...இல்லைன்னா எழுதியே கிழிச்சிருவேன்!!”னு. ஹி ஹி நல்லவேளை இங்க நிர்வாகம்னு யாரும் இல்லை...போயும் போயும் தெரு நாயைக் கூட விட்டு வெக்க மாட்டேண்ட்டீங்களே..!!

இத்தனை பெருமையெல்லாம் பெற்ற உங்களை இனிமேல் இந்த வலையுலகம் “வாசகர் கடித வீராங்கனை” என அன்போடு அழைக்கும். யாருப்பா அங்க...ஒரு banner ready பண்ணுங்க சீக்கிரம் சீக்கிரம்...அதை வேற அப்புறம் எழுதிட போறாங்க :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

///அமைதிச்சாரல் said...

பிரபல பதிவர் ஹுஸைனம்மா வாழ்க...///

Big repeateeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee........

'பரிவை' சே.குமார் said...

சுவாரஸ்யமாக இருந்தது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க குரல் இளமையா இருக்கு :) நான் வேற மாதிரி (கொஞ்சம் லொள்ளும் நக்கலும் கலந்து) கற்பனை பண்ணி வச்சிருந்தேன். பேட்டி நன்று. தெளிவாகப் பேசியிருக்கீங்க.

அப்புறம் ஹிஹி.. தலைப்பைப் பாத்து நாங்கெல்லாம் பயந்தே போயிட்டோம்ல!!

Anonymous said...

ஸ்டாப் ஸ்டாப். என்ன தான் உங்க மனசில நெனச்சிட்டிருக்கீங்க. திடீரென (Youtubeல மேஞ்சிட்டு இருக்கும் போது) "I am She" என்ற விடியோ தட்டுப்பட்டுது. முதலே பார்த்தது என்றாலும் (புளொக் எழுத முதல்) இப்ப (புளொக் எழுத ஆரம்பித்த பிறகு) அந்த தலைப்பை வச்சு நம்மள பத்தி ஒரு பதிவு போடலாம்ன்னா, அதே மாதிரி எழுதி வச்சிருக்கீங்க. ஐயாம் ஆப்ஜெக்டிங் இட்.

இதில வேற நிஜ அப்பாவி தங்கஸ் நான் தான்னு அப்பப்ப சொல்லிக்கறது. இதுக்கு எங்க இட்லி மாமியே பரவாயில்லை. அவங்க ரங்க்ஸயும் எங்களையும் மட்டும் தான் படத்தறா. நீங்க அரசாங்கத்தையே படுத்தறீங்க.

இவ்ளோ பெரிய ரவுடின்னா பயந்திடுவோமா? பெரிய அந்திராஸ் பொட்டலமே அனுப்பறேன்னா இல்லையான்னு பாருங்க. ஹா ஹா ஹா.

ஹுஸைனம்மா said...

எல்லாருக்கும் நன்றி. கொஞ்சம் நிறையவே பிஸி. (வீடு மாற்றுதல், பெருநாள் வேலைகள்) ஒரு வாரம் லீவு வேணும். வந்து பதில் எழுதுறேன்.

ஹுஸைனம்மா said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
உங்க குரல் இளமையா இருக்கு :) நான் வேற மாதிரி ... கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.//

எப்படி, லதா மங்கேஷ்கர் மாதிரியா? ;-)))))

ஹுஸைனம்மா said...

//NIZAMUDEEN said...
'படம்'னு போட்டுருக்கீங்க... என்ன படம்? //

நான் குறும்படம்லாம் இன்னும் இயக்க ஆரம்பிக்கலை! :-))))) என் ஃபோட்டோவைத்தான் படம்னு சொன்னேன். சுத்தத்தமிழ்ல பேசினா இப்படித்தான் குழம்பிடுறாங்க!! ;-)))))))))))))

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
ரொம்ப பதட்டப்பட்டு பேசறீங்க..//

கன்னிப்பேச்சு இல்லையா, அதான்!! அடுத்த பேட்டில அசத்திடுவோம்!!

காலேஜ் படிக்கும்போது ஆல் இண்டியா ரேடியோ அறிவிப்பாளராவதற்கு குரல் தேர்வுக்குப் போனப்பவும் இதே காரணத்தாலத்தான் ரிஜக்ட் ஆகிட்டேன். ரிகார்டிங் நடந்தது ஏஸி ரூம் - ஏஸியில் முதல் அனுபவம் - கடுங்குளிர் - குரலில் காட்டிவிட்டது. ஹூம்... தமிழ்நாடு தப்பித்துவிட்டது!! :-))))))

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்..

CS. Mohan Kumar said...

தங்கள் பேட்டி கேட்க முடிந்தது. மகிழ்ச்சி நன்றி

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா,உங்களுக்கு நகைச்சுவையும் நன்கு வருகிறது.

உங்கள் திறமைகளை தெரிந்து கொண்டேன்.

பேட்டி அருமை.நல்ல கேள்விகள் அருமையான பதில்கள்.
நோன்பு கஞ்சிப் பற்றிய விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

;)

ஆயில்யன் said...

வாழ்த்துகள் :)

//தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு//


என்கூட சேர்ந்த காலத்திலேர்ந்து இப்படித்தான் டக்குன்னு சேஞ்சு ஆகிட்டாருங்க நல்ல காரியங்கள் செய்யிறதுக்கு நிறைய பிரயாசை பட்டு & செஞ்சுக்கிட்டும் இருக்காரு! நல்ல மனுசன் !

கானா பிரபா பத்தியும் ஒரு வார்த்தை சொல்லணும் ஹம்ம்ம் என்ன சொல்றது பெரிய பாண்டி பெரியபாண்டிதான் :))))))

ஜெயந்தி said...

//"பாத்துக்கோ.. நானும் ரவுடிதாம்லேய்....!!"//

அதுதான் ஏற்கெனவே தெரியுமே இப்ப என்ன புதுசு மாதிரி சொல்லிக்கிட்டிருக்கீங்க.

ப்ளாக்கைத் தாண்டி வந்த படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்!

vanathy said...

ஹூசைனம்மா, சூப்பர் ரவுடி கதை.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் அம்மினி.

முகுந்த்; Amma said...

வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா. நன்றாக இருக்கிறது உங்கள் பேட்டி. இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அட்டகாசம். என்கவுண்டர் வரை போயிட்டீங்களே:))? அதெல்லாம் வேண்டாம். ஜீப் ஜோரா உலகைச் சுத்தி வரட்டும். வழியெங்கும் நாங்க நின்னு கை காமிப்போம்ல..

எனக்கும் பேட்டி கேட்க முடியவில்லை
:(! [முன்னரே லிங்க் கிடைத்தும் கூட. courtesy:T P :)!]

ஸாதிகா said...

ஹுசைனம்மா,உங்கள் குரலும்,கருத்துக்களும் கேட்க மிக்க மகிழ்ச்சியாக இருந்த்து.எனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.அடுத்து ஈடுல் அல்ஹாவுக்கு ஏதும் உண்டா?

அரபுத்தமிழன் said...

'ACCESS DENIED' why why ?
How can I here.

நஜி said...

தடங்களற்ற எழுத்துக்கள்...பெருமையும், பொறாமையும் சேர்ந்து பெறாமை யா இருக்கு...

//பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))//

இது யாரைச் சொல்கிறீர்கள்?? சாரு வையா? ஆமாம் என்றார் உங்களுக்கு இலக்கியத் தொடர்பு உண்டா? மிக்க மகிழ்ச்சி...

R.Gopi said...

ஆஹா....

இவ்ளோ நாள் இல்லாம இருந்ததேன்னு பார்த்தேன்... இப்போ நீங்களும் ஜீப்ல ஏறியாச்சா...

வாழ்த்துக்கள்....

தாங்கள் மென்மேலும் புகழடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

நேரம் கிடைக்கும் போது, இதையும் பாருங்கள்...

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம் http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html

Abdulcader said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

வழக்கமான சரளமான நடையில் பகிர்வும் கருத்துக்களும் அருமை!

Jaleela Kamal said...

வாழ்த்துகள் அருமையான பேட்டி, க ரொம்ப நல்ல இருக்கு,
ரவுடி பதிவும் நல்ல இருக்கு.

எம் அப்துல் காதர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!

ஹுசைனம்மா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவர் களுக்கும், இதை வாசிக்கும் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

உங்கள் எல்லோருடைய நாட்டமும் வேண்டுதலும் பிரார்த்தனையும் நிறைவேறி, இன்ஷா அல்லாஹ், அடுத்த வருட ஹஜ்ஜில் தாங்களும்
தங்கள் குடும்பத்தாரும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்ற (ஆமீன்!!),
துஆ இறைஞ்சிய வண்ணம், அன்புடன் இங்கே நாங்கள்....

pudugaithendral said...

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். பதிவு இப்படில்லாம் எழுதலாம்னு நிறைய்ய ஐடியா கிடைக்குது.

pudugaithendral said...

பிரபல பதிவர் ஹுஸைனம்மா வாழ்க...//

வாழ்க!! வாழ்க!! (அடுத்த வாட்டி இந்தியா வந்தாங்கன்னா கட் அவுட்டுக்கு ஏற்பாடு செய்யணும்)

kavisiva said...

ஹையா விஐபி யோட ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்ல :).

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் ஹுசைனம்மா!

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

சித்ரா சொன்னதை அப்படியே ரீபிட். அப்படி போடு அருவாளை.

குடல் சூப்பரப்.

kavisiva said...

ஏய் யார்லே அது அக்காவுக்கு நான் போட்ட கமெண்டை திருடிக்கிட்டு போனது? அக்கா யாரு தெரியும்ல? மருவாதியா திருப்பி கொடுத்துடு :)

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா! நானும் விஐபி யோட ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்ல :)

Ahamed irshad said...

:)

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

ஹுஸைனம்மா said...

வாங்க தமிழ்ப்பிரியன் - நன்றி, புன்னகைக்கும், லிங்குக்கும், வாய்ப்புக்கும்!!

தொப்பிx2 - இது என்ன சிரிப்பு? ஏன்?

ராஜாகமால் - வாங்க. ரொம்ப நன்றி, வருகைக்கும், பாராட்டுக்கும்.

அமைதிச்சாரல் - வாங்க. என்ன ஒரே ஒருக்காத்தான் வாழ்க சொல்லிருக்கீங்க? பேசிகிட்டது மறந்துபோச்சா? ;-)))) நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

சிநேகிதி - ஹப்பாடா, இப்பவாவது ஒத்துகிட்டீங்களே!!

ராஜ நடராஜன் - வாங்க சார். மிக்க நன்றி.

ராதாகிருஷ்ணன் சார்- வாங்க. ஹி.. ஹி.. அது ஒரு சமாளிப்ஸ் - எழுத வராதுன்னு சொல்றதை இப்படியும் சொல்லலாமேன்னுதான்.. நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

யாதவன் - நன்றி.

சித்ரா - நன்றி.

தமிழ் உதயம் - நன்றிஙக்.

சதீஷ் - நன்றி.

நிஸாமுதீன் - ரொம்ப நன்றி. என் புகைப்படம்தான் வெளியாகியுள்ளது. இதோ இந்த வாரம்கூட, என் கருத்துடன்! :-))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - ஆமா, வாசகர் கடிதம் எழுதுறது சாதாரண விஷயம் இல்லைதான். ஆனா, நான் ஒரு கத்துகுட்டி. என் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயங்களுக்காகத்தான் எழுதுகிறேன். அரசியலோ, சர்வதேச பிரச்னைகள் குறித்தோ எழுதுமளவு அறிவோ, தெளிவோ, புலமையோ இல்லை. எனினும் எழுதுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டவர்கள் குறித்து அறிந்ததில்லை; இந்தியாவில் பிரபலமானவர்கள் போல. அங்கு வந்து செட்டிலானபின் என்னையும் உதாரனம் சொல்லுமளவு எழுதிட்டாப் போச்சு!! :-))) எனக்கு தற்போதைய பிடித்தமானவர் - டிராஃபிக் ராமசாமி!!

எல்.கே. - எதிர்ப்பதிவு நீங்க எழுதினா எனக்கு ஆட்சேபணையே இல்லை. நன்றி.

ஹுஸைனம்மா said...

முத்தக்கா - ஹி..ஹி.. எனக்கு நீங்களும் மான்சீகக் குருதான்!! ;-)))

அமுதாக்கா - சொல்லிட்டாங்களா பிபிஸில? விளம்பரம் வேண்டாம்னு சொல்லிருந்தேன், இருந்தும் சொல்லிட்டாங்களா? ;-))) நன்றிக்கா.

மஹி - ரொம்ப நன்றிப்பா.

வித்யா - நன்றிப்பா.

பிரதாப் -நன்றி. :-))))

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - அவ்வ்வ்.. நானா... இலங்கைத் தமிழா..? நான் பேசுறது அப்படியா இருக்கு? இதுக்குத்தான் சுத்தத் தமிழ்லயே பேசக்கூடாதுங்கிறது!! :-))) சுறாவா? நான் படம் பாக்கறதையே விட்டுடறேன் :-(

அப்துல் காதர் - ரொம்ப நன்றி காதர். கொஞ்சம் பதற்றமாத்தான் இருந்துது. முதல் நிகழ்ச்சி இல்லியா? அதுவும் ரமலான் குறித்து என்பதால், குறிப்புகள் முன்னரே வாசித்திருந்தேன். தவறாகச் சொல்லி விடக்கூடாதில்லையா?

போன பதிவர் சந்திப்பு - எல்லாமும் தெரியும் என்றில்லை; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை; எனக்கு எல்லாரையும் ஒருங்கிணைக்கும் பணி. அவ்வளவுதான். பாராட்டுக்கு மிக்க நன்றி காதர்.

ஹுஸைனம்மா said...

அன்னு - அதேதான், எல்லாத்துக்கும் ஒரு பயம் வேணும்ல, தப்பு பண்ணா கிழிச்சிருவாங்கன்ன்னு!

தெருநாய் - இல்லப்பா, எங்க ஏரியாவுல நாலஞ்சு பள்ளிகள் இருக்கு; சின்னப்பசங்க நடந்து போவாங்க, வருவாங்க. தனியா வரும்போது சின்னப் பிள்ளைகளை எதுவும் செஞ்சிடுமோன்னு ஒரு பயம். அத்தோட, ஒண்ணுரெண்டு பசங்க ஒரு நாயை, சாப்பாடும் போட்டு, பாடாப் படுத்தவும் செஞ்சாங்க. அதுக்கும்தான்.

அப்புறம், பட்டத்துக்கு நன்றி!

ஸ்டார்ஜன் - நன்றி. அக்பர் வரலையா இன்னும்?

சே.குமார் - நன்றிங்க.

கோபி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - தலைப்பு - என்னா நினைச்சீங்க என்னைப் பத்தி?

அனாமிகா - ஏன் ஏன் கோவம்? நாமெல்லாம் ஒரே இனம் - ரவுடியினம்! (நீங்க எதை நினைச்சீங்க?) வேணும்னா ஏரியா பிரிச்சுப்போம், சரியா? நீங்க ஆஸி/நியூஸி, நான் மிடில் ஈஸ்ட் சரியா? ;-)))

வெறும்பய - நன்றிங்க. (பேரை மாத்துங்க, அதைச் சொன்னா உங்களைத் திட்டுற மாதிரியிருக்கு)

மோகன் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - ரொம்ப நன்றி அக்கா. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கும் நன்றி.

கானா பிரபா - ரொம்ப நன்றி, வருகைக்கும், ஸ்மைலிக்கும். அப்புறம், அடுத்த பேட்டி வாய்ப்பு எப்போ? ;-)))))

ஆயில்யன் - நன்றிங்க. உங்ககூடச் சேந்துதான் இப்படியாகிட்டாரா? சந்தோஷம். அப்ப பிளாக் பக்கமே வராம இருக்காரே, அதுக்கும் நீங்கதான் காரணமா? ;-)))))

நீங்கதான் இதுக்குக் காரணம்னு தெரிஞ்சிருந்தா முதல்லயே உங்களையும் ஒரு வார்த்தை சொல்லிருப்பேன். இப்போ சொல்லிக்கிறேன். அடுத்த வாய்ப்பு எப்போ வாங்கித் தருவீங்க? (இது உங்க (உண்மையான) செல்வாக்கைத் நிரூபிக்க ஒரு வாய்ப்பு!) :-)))))))))))))

ஹுஸைனம்மா said...

ஜெயந்திக்கா - //அதுதான் ஏற்கெனவே தெரியுமே// ஹி.. ஹி.. உங்க ஃப்ரண்டுன்னு சொன்னாலே தெரியுமே, இல்லியா? :-)))))

வானதி - ரொம்ப நன்றிப்பா.

முகுந்த் அம்மா - பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா.

ராமலக்‌ஷ்மி அக்கா - என்கவுண்டர் - அதெல்லாம் சும்மா. நீங்கள்லாம் ரொம்ப முன்னாடியே ஏறிட்டீங்க. நான் இப்பத்தானே.. அதான் கொஞ்சம் சவுண்ட் விட்டுகிட்டே வந்தாத்தானே கவனிப்பாங்க.. நன்றிக்கா.

லிங்க் என்ன பிரச்னைன்னு தெரியலையே. சிலருக்கு மட்டும்தான் கேட்கலை. தமிழ்ப்பிரியன்கிட்டதான்
கேட்கணும்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - ரொம்ப நன்றி அக்கா.

அரபுத் தமிழன் - ஏன்னு தெரியலையே. சரியாச்சா இல்லியா?

நஜி - நன்றிங்க. என்னது இலக்கியத் தொடர்பா? அவ்வ்வ்.. என் வலைப்பூக்கு புதுசு நீங்க.. அதான் இப்படிக் கேட்டுட்டீங்க... :-))))

ஆர். கோபி - ரொம்ப நன்றிங்க. எனக்கொரு சந்தேகம், நீங்களும், கோபி ராமமூர்த்தியும் ஒரே ஆளா இல்லை வேறயா? ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகுது எனக்கு. :-)))

காயலாங்கடை காதர் - ரொம்ப நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - மிக்க நன்றி அக்கா.

ஜலீலாக்கா - நலமா? என் பக்கம் பாத்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப நன்றீக்கா.

புதுகைத் தென்றல் - நன்றி வாழ்த்துகளுக்கு. //பதிவு இப்படில்லாம் எழுதலாம்னு நிறைய்ய ஐடியா// ஹலோ, சீனியர்கள் உங்ககிட்ட இருந்து ஜூனியர்ஸ் நாங்கதான் கத்துகிட்டோம்!!

கட்-அவுட் நல்லா பெரிசா இருக்கணும். மறக்காம ஃப்ளெக்ஸ் பேனரும்!! ;-))))

ஹுஸைனம்மா said...

கவிசிவா - நன்றி கவி. கண்டிப்பா ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கோங்க. அதேபோல எனக்கொரு பிரச்னைன்னாலும் ஓடிவந்துடணும் (காப்பாத்த!! ) :-))) கமெண்டை யாரும் தூக்கிட்டுப் போகல (நம்ம ஏரியாவுல திருட்டா?), நாந்தான் லேட்டா பப்ளிஷ் பண்ணேன்.

விஜி கிச்சன் - நன்றிப்பா. (கொஞ்சம் நகர்ந்துக்கோங்க. அருவாவைக் கீழேப் போடச் சொன்னீங்கள்ல, கால்ல பட்டுடடப் போவுது! ;-)))))) )

இர்ஷாத் - ரொம்ப நன்றிங்க.

க.பாலாசி said...

சமுதாயத்தின் மீதான உங்களின் அக்கறையில் மகிழ்கிறேன். (எந்த ஊராயிருந்தா என்ன?) எல்லாருக்கும் இந்த எண்ணங்களும் செயலும் வந்திடுறதில்லையே. நமக்கு கண்ணுக்கு தெரிஞ்சி எத்தனையோ தப்புகள் நடந்தாலும் கம்முன்னு கண்ண மூடிகிட்டு போகிற நிலைமையிலத்தான் நான்கூட இருக்கேன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வெட்கமாத்தான் இருக்கு..

நீங்களும் ரவுடின்னு ஒத்துக்கறதவிட ஹீரோ(யின்) என்றே அறிகிறேன்.

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, உங்கள் ஒலிபரப்பு அருமையாக இருந்தது.
அடுத்த தடவை உங்களைக் கட்டாயம் பார்க்கணும். இறைவனையும் இஸ்லாத்தையும் அருமையாக எங்களுக்குப் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. மனம் நிறைந்த வாழ்த்துகள்

தளிகா said...

ஹுசேனம்மா

எவ்வளவு அழகா எழுதுறீங்க...அப்பப்பா அந்த எழுத்துநடை இருக்கே ஒவ்வொரு வரியிலும் சுவாரசியம்..நகைச்சுவையாக எழுதும் விதம் அருமை..நான் அதிகம் படித்ததில்லை உங்கள் ப்லாகில் ஆனால் மிஸ் பன்னாமல் படிச்சுடனும்னு நினைக்கிறேன்..

மனோ சாமிநாதன் said...

உங்களின் எழுத்துத்திறமையும் புகழும் மேலும் மேலும் வளர என் இத‌யங்கனிந்த வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!

Thenammai Lakshmanan said...

பேட்டி அருமை.. குரலும் அருமை.. ஹுஸைனம்மா..:))

பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))
// ஹாஹாஹா சூப்பர்..

ஆனா நேத்து சென்னையில் உள்ள எல்லா பதிவர்களும் கரு பழனியப்பன் அழைப்பின் பேரில் மந்திரப் புன்னகை ராஜேஸ்வரி ப்ரிவியூ தியாட்டரில் பார்த்தார்கள்.. எனக்கும் அழைப்பு வந்தது.. நான் என் கணவருடன் முன்பே பார்த்து விமர்சனமும் போட்டு விட்டதால் செல்லவில்லை..:))

நானானி said...

ஹூஸைன்னம்மா!
கலக்கிப்புட்டீங்க...!
வாழ்த்துக்கள்!

கைகளில் விலங்கில்லமல் ஏறிய ஜீப்பில் உலகம் சுற்றிய வாலிபி?யாக வலம் வர வாழ்த்துகிறேன்.
பெருநாள் வாழ்த்துக்கள்!!!

enrenrum16 said...

அதாவது வேலு நாயக்கர் மாதிரி ஊருக்கு நல்லது மட்டுமே செய்ற ரவுடின்னு சொல்றீங்க...வாழ்க..வளர்க...மென்மேலும் நல்ல வாய்ப்புகள் பல கிடைக்க வாழ்த்துக்கள்.

என்றென்றும்16

ரிஷபன் said...

பேட்டி அருமை. பிரபல பதிவருக்கு நல்வாழ்த்துகள்..

ஹுஸைனம்மா said...

தாமதாமான நன்றியுரைத்தலுக்கு மன்னிக்கணும்.

க. பாலாசி - நன்றி பாலாசி. நிறைய தப்புகள் நடக்குது. இருந்தாலும், என்னைப் பாதிப்பதை மட்டும்தான் எழுதுகிறேன். அந்த வகையில் நானும் சுயநலக்காரிதான்.

வல்லிம்மா -மிக்க நன்றி வல்லிம்மா. நிச்சயம் சந்திக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.

தளிகா - மிக்க நன்றி தளிகா. தொடர்ந்து வாங்க. உங்களுக்கும் வலைப்பூ இருப்பதை இப்பத்தான் பார்த்தேன் தளிகா.

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - நன்றி அக்கா.

தேனக்கா - நன்றிக்கா. அந்த சினிமா டிக்கெட் - அதெல்லாம் சும்மா - ஒரு பந்தாவுக்காக... அதெல்லாமா சீரியஸா எடுத்துப்பீங்க? :-)))

நானானி மேடம் - வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி மேடம்!

என்றும் - நன்றி!! “நல்ல” ரவுடிங்கிறீங்க என்னை?? :-))

ரிஷபன் சார் - மிக்க நன்றி!!