Pages

தேசிய நெடுஞ்சாலைகள்




 
 
(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில்  செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)

என்னே ஒரு பசுமை! அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்! 
சென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்!!

சாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் வாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான். 

திருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திருச்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.

இப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்!

முதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை! பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் "single carriage way" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.



ஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way)  இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு  குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்!!

திருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள்,  தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.

இந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை. 

காரணங்கள்...
 
இரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர். 

அதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்!!

நாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு "piaggio" எதிரே வந்து தடுமாற வைத்தது!! 

 www.team-bhp.com

அதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன!

கிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே!



மேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது.  தடம் மாற்றும்போது  முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் எப்படிக் களைவது?
 
சிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

மக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்!

மேலும், நெடுஞ்சாலைகளில்  நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு!
  
 

Post Comment

48 comments:

Anonymous said...

ஆஹா, வாழ்த்துக்காள் ஹுசைனம்மா

சாந்தி மாரியப்பன் said...

//இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன!//

ஆமாம்ப்பா.. நாங்க போயிருந்தப்பவும் இதை பார்த்தோம். தங்க நாற்கரச்சாலை என்னவோ நல்லாத்தான் இருக்குது.ஆனா, மக்கள் இன்னும் அதே பழைய ரோட்டில் போகும் மனநிலையில்தான் இருக்காங்க..

kavisiva said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா! ரோடு நல்லா வழுவழுன்னு போட்டிருந்தாலும் அறிவிப்பு பலகைகள் மற்றும் மக்களிடையே சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இருந்தால்தான் முழு பயன் கிடைக்கும். எப்படியோ முதல் அடி எடுத்து வைத்து விட்டோம். அடுத்தடுத்த அடிகளும் எடுத்து வைக்கப்படும்னு பாசிட்டிவாவே நினைப்போம்.

Prathap Kumar S. said...

என்னது மதுரை-நெல்ல ரோடு பச்சை பசேல்னு இருக்கா?? இது எப்பத்திலேருந்து...:)
ஆண்டவா மதுரை ஏர்போர்ட்டை திறக்கவே கூடாது...:)

Prathap Kumar S. said...

இந்த இருவழி தேசியநெடுஞ்சாலை போட்டதை பெரிய புண்ணியம்...அது ரூல்ஸ்யையும்
பின் பற்ற சொன்னா எப்படிங்க... பழக்கபம் இல்லாததை நாங்க பண்ணமாட்டோம்
மக்களை நீங்க கெடுக்க பார்க்கறிஙக...

ஹுஸைனம்மா said...

/என்னது மதுரை-நெல்ல ரோடு பச்சை//

பிரதாப்பு, உண்ட மயக்கமா? சரியாப் பாருங்க, அது திருச்சி-மதுரை!!

kavisiva said...

//என்னது மதுரை-நெல்ல ரோடு பச்சை பசேல்னு இருக்கா?? இது எப்பத்திலேருந்து...:)//

நாஞ்சில் அதெல்லாம் கிச்சன் பாலிட்டிக்சின் ஒரு அங்கம். நாகர்கோவில் திருவனந்தபுரம் ரோடு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா மாமியார் ஊருக்குல்ல பெருமை போயிடும். தின்னவேலி மதுரைன்னு சொல்லும் போது அவங்களுக்கு என்னா பெருமை பாருங்க. உங்களுக்கும் கல்யாணம் ஆனவுடனே உங்களுக்கும் இதெல்லாம் புரியும் :)

எனக்குத்தான் இந்த பாலிட்டிக்ஸ் செய்ய கொடுப்பினை இல்லாம போச்சு ரெண்டு வீடும் ஒரே ஊராப் போச்சு :(

சைவகொத்துப்பரோட்டா said...

ம்....நீங்கள் கூறியது எல்லாமே, எப்பொழுது நடைமுறைக்கு வருமோ...
வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

//நாஞ்சில் அதெல்லாம் கிச்சன் பாலிட்டிக்சின் ஒரு அங்கம். நாகர்கோவில் திருவனந்தபுரம் ரோடு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா மாமியார் ஊருக்குல்ல பெருமை போயிடும். தின்னவேலி மதுரைன்னு சொல்லும் போது அவங்களுக்கு என்னா பெருமை பாருங்க. உங்களுக்கும் கல்யாணம் ஆனவுடனே உங்களுக்கும் இதெல்லாம் புரியும் //

ஓகோ... இதான் மேட்டரா.
ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தியைன்னு சொல்றாங்களே அதெல்லாம் டூப்பா?? :)
பதிவுலேயே இந்த வாங்கு வாங்குறாங்களே...நம்ம சாரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
சார் பண்ண தியாகத்துக்கு மரியாதையே இல்லையா?? :)

கன்பார்ம்ட் எனக்கு லோக்கல்லதான் பொண்ணு ....:)

கண்ணா.. said...

//நாஞ்சில் பிரதாப் said...

கன்பார்ம்ட் எனக்கு லோக்கல்லதான் பொண்ணு ....:)
//

நினைப்புதான்.... உனக்கு யாருலே உள்ளூர்ல பொண்ணு கொடுப்பா???!!!

நட்புடன் ஜமால் said...

பாஸிடிவ் நியூஸ்-க்கு வாழ்த்துகள்


[[அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்!!]]

அதிர்ச்சியும் ஒரு இன்பம்தானோ, நிறைய பேர் அடிக்கடி அதிர்ச்சியாவுறாங்களே #டவுட்டுதான்

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்... எவ்வளவு சீரியஸா, சமூகப் பொறுப்போட, ஒரு தொலைநோக்குப் பார்வையோட, சீரிய கண்ணோட்டத்தோட (இதேல்லாம் நானே சொல்லிகிட்டாதான் உண்டுபோல :-( ) ஒரு கட்டுரை எழுதிருக்கேன்? அதப் பத்தி சொல்றத வுட்டுட்டு, எதெயெல்லாமோ பேசிக்கிறீங்களே எல்லாரும்?

Prathap Kumar S. said...

//நினைப்புதான்.... உனக்கு யாருலே உள்ளூர்ல பொண்ணு கொடுப்பா???!//

யோவ் கொத்தனாரு...அங்கப்போய் சாந்து குழைக்கச்சொன்னா இங்குவந்து கம்பி கட்டுறீரா...அடிங்...:)

நட்புடன் ஜமால் said...

காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) ]]


செலவுக்கு தேரும் நல்லா ...

கண்ணா.. said...

நல்ல பகிர்வுங்க... எனக்கு தெரிந்த வரையில் இந்த சாலைகள் வந்தபிறகு ஆக்சிடெண்டின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.

ஏதாவது கருத்து சொல்லலாம்னு உள்ளாற வந்தா இந்த பிரதாப்பு கமெண்ட்டை பாத்ததும் காண்ட்டாயி மைண்ட் டைவர்ட் ஆயிட்டு :))

நியூஸ் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

படிக்கும் போதும் வேளை பார்க்கும் போதும் சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் போது எப்போதும் (லோக்கல்) ரயில் (லோக்கல்) பயணம் தான்.....கடந்த முறை ஊருக்கு செல்லும் போது இந்த ரோடுகளுக்கு பயந்தே திருவனந்தபுரம் செல்ல வேண்டியதாக போய் விட்டது... அடுத்த தடவை போகும் போது கண்டிப்பா சென்னை தான்...

நல்ல பதிவு...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா!!

மாதேவி said...

அழகிய நெடுஞ்சாலை. பதிவும் நன்று.

☀நான் ஆதவன்☀ said...

"விகடன் புகழ்" ஹூஸைனம்மா வாழ்த்துகள் :))

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

நாடோடி said...

நான் எப்போதுமே சென்னைக்கு பேருந்தில் செல்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம், உண்மையில் ந‌ன்றாக‌ போட்டிருக்கிறார்க‌ள்..

விக‌ட‌னில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

அம்பிகா said...

வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா.

ஸாதிகா said...

//ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தியைன்னு சொல்றாங்களே அதெல்லாம் டூப்பா?? :)
பதிவுலேயே இந்த வாங்கு வாங்குறாங்களே...நம்ம சாரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
சார் பண்ண தியாகத்துக்கு மரியாதையே இல்லையா?? :)
// இஃகி..இஃகி..இஃகி..

ஸாதிகா said...

//அவ்வ்வ்... எவ்வளவு சீரியஸா, சமூகப் பொறுப்போட, ஒரு தொலைநோக்குப் பார்வையோட, சீரிய கண்ணோட்டத்தோட (இதேல்லாம் நானே சொல்லிகிட்டாதான் உண்டுபோல :-( ) ஒரு கட்டுரை எழுதிருக்கேன்? அதப் பத்தி சொல்றத வுட்டுட்டு, எதெயெல்லாமோ பேசிக்கிறீங்களே எல்லாரும்?//அதற்கெல்லாம் ஒரு யோகம் வேணும் ஹுசைனம்மா!

தமிழ் உதயம் said...

நிச்சயம் சமுக சிந்தனையுடன் கூடிய பதிவு. வாழ்த்துகள்.

ஸாதிகா said...

ஹுசைனம்மா!தமிழ் நாட்டை என்னான்னு நினைச்சீங்க.சென்னை டு எங்கல் ஊர் போகும் நெடுஞ்சாலையைப்பார்க்கணுமே..காரில் போனாக்க சும்மா ஜிவ்வ்வ்...என்று பாயும்.பயணநேரமும் குறைந்து விட்டது.இருந்தாலும் எனக்கு ரயிலில் போகும் கம்ஃபோட் இந்த சாலை வழிபயணத்தில் கிடைப்பதில்லை>:-(

அப்துல்மாலிக் said...

//தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது//

இது மட்டும் இருந்தாலே அதிக பட்ச விபத்துகள் தவிர்களாம், ஆமா எப்போ ரோட் டிரான்ஸ்போர்ட் லே சேர்ந்தீங்க???#

ரிஷபன் said...

சென்னை டூ திருச்சி வேனில் வந்தபோது அலுப்பே தெரியவில்லை.. நிஜமாகவே வளர்ச்சிதான். ஆனால் இதில் சொன்னது போல மக்களீடம் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. தவறான போக்கினால் விபத்துக்களும் சங்கடங்களும் நேர்கின்றன. தவிர்த்தால் சாலைப் பயணம் இனிமை!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

Chitra said...

மக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்!


..... நல்ல யோசனைதான். மற்றும், நோ லஞ்சம்

Thamira said...

ரொம்ப வருஷங்களாகவே ட்ரெயினில்தான் ஊருக்குப்போகிறேன். நீங்கள் தரும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஹேமா said...

சமூக அக்கறையோடு எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள் தோழி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாச் சொன்னீங்க ஹுசைனம்மா..
எதிரில் குறுக்க வரும் வாகனம் தொல்லை எல்லா ஹைவேலயும் இருக்கு..

தாத்தா என்ன செய்வார் தினம் அவர் நடந்தாக்ல போற இடத்துக்கு நடுவில் நீங்க பெரிய ரோடு கட்டி சர் புர் ன்னு போனாலும் நான் நடந்த இடமய்யான்னு ராஜா மாதிரி போறார் போல...

velji said...

நல்ல பகிர்வு!

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

Nice info & concern Hussainamma.Previously in my student days it was 3 hrs 45 minutes to Nellai from Madurai.Now itz just less than 2 hrs from Madurai to Nellai.Itz bcz of the 4 lane.Likely itz time saving from Madurai to Chennai 6 hrs by 4 lane-previously it was around 10 hrs.Now also by train it is 8 hrs 30inutes from Madurai to Chennai.Another irritating factor in the 4 lane is is the number Toll Gates. You have exactly poited out the draw backs in this road usage & ways to correct it.Namma aatkal ithai keppaangannu ninaikireehalaakkum !

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

வாழுத்துக்கள் ஹுஸைனம்மா, ஒரு நல்ல பதிவு. வருங்கால விகடன் தலைமை நிருபர் ஹுஸைனம்மாவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் இது போல் அதிகமதிகம் நம் பதிவர்கள் விகடனில் மட்டுமல்ல, இன்னும் பல பத்திரைக்கைகளிலும் எழுத வேண்டும், எழுதுபவர்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவ்வளவு பொறுப்பா(?) நீங்க எழுதுவீங்கன்னு எனக்கு இப்பத்தான் தெரியும், ஒரு வேளை விகடனுக்கு அனுப்புவதால் இந்த பொறுப்பு(?) வந்து விட்டதோ

ஸ்ரீராம். said...

சமூகப் பொறுப்போட, ஒரு தொலைநோக்குப் பார்வையோட, சீரிய கண்ணோட்டத்தோட எழுதப் பட்ட நல்ல பதிவு... நியூஸ் விகடனில் வந்ததற்கு பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் ஹுசைனம்மா. வெகு நேர்த்தியா நெடுஞ்சாலைகளைப் பற்றி எழுதி தெற்கு வளர்வதை விளக்கி இருக்கிறீர்கள். விபத்துகள் லைசென்ஸ்கள் கொடுக்கும் கட்டத்திலியே ஆரம்பித்துவிடுகின்றன. ஒரு நல்ல டிரைவர் நல்லபடியா ஓட்டினாலும் எதிரில் வரும் 'தண்ணி' லாரியினால் பாதிக்கப் படுகிறார்.
நல்ல படியாக மாறும் என்று நம்புவோம்.

சுந்தரா said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.

கடந்துபோகையில் இதே எண்ணங்கள்தான் எனக்கும் எழுந்தது.

ஜெயந்தி said...

//(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)//
வாழ்த்துக்கள்!

Abdulcader said...

வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்!!//

உண்மை; பயங்கரம்!
சாலைகள் பற்றி நேர்த்தியாக விளக்கினீர்கள்!
வாழ்த்துக்கள் (நியூஸ் விகடன்-க்காக!)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உண்மையாலுமே பாசிட்டிவா இருக்கு ஹுசைனம்மா.. அடுத்த வாட்டி ஊருக்கு போவும் போது தெகிரியமா போக உதவும் :))

எங்கூரு க்குப் பக்கத்துலையே நீங்க சொல்லியிருக்கற மாதிரி ஒரு பைபாஸ் ரோடு இருக்கு.. ஆனா அதுல போனா ஆக்சிடென்ட் ஆகும்ன்னு குண்டும் குழியுமான தடத்துல தான் போவோம் :)அந்த ரோட்ட க்ராஸ் பண்றதுக்குள்ள மூச்சு முட்டிடும்..

இங்கயிருக்கற போக்குவரத்து சிஸ்டம் ரொம்ப நல்லாயிருக்கும். இதயப் பத்தி நிறைய எழுதனும்ன்னு தோணுது..

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் நல்ல சமுகபூர்வமான் பதிவு.

enrenrum16 said...

Congratulations for the selection in vikation and very best wishes to reach more heights in the future. Very nice article pointing out all the positives and negatives about the highway.

Enrenerum16

ஹுஸைனம்மா said...

கருத்துகள் தெரிவித்து, வாழ்த்தி, பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றியும், மகிழ்ச்சியும்.

ஒரு புது முறை அறிமுகமாகும்போது, அவற்றிற்கான சரியான பயன்பாட்டினையும், விதிகளையும் மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்கவேண்டியது அரசின் கடமை; சீக்கிரமே நடக்கும் என அதிர்பார்ப்போம். என்றாலும் மக்களும் சற்று முயற்சியெடுத்து தெரிந்துகொள்ள முயல்வது நல்லது.

Jaleela Kamal said...

வாழ்த்துக்க்ள் ஹுஸைனாம்மா