Pages

வீடு




 

நியூசிலாந்து நாட்டில் சென்ற 4-ம் தேதியன்று பூகம்பம் ஏற்பட்டது நினைவிருக்காது பலருக்கும். (சரியாத்தான் எழுதியிருக்கேன்).  நினைவிருக்காததற்குக் காரணம், அதில் உயிரிழப்பு எதுவுமில்லை!! அப்படின்னா ஏதோ சின்ன அளவிலதான் பூமி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தீர்களானால்...தவறு.. வந்தது, 7.1 ரிக்டர் அளவு!!

ஜனவரியில் ஹைட்டியில் (Haiti) 7.0 ரிக்டர் அளவுக்கு வந்த பூகம்பத்தில் இறந்தவர்கள் 2,30,000 - இரண்டு லட்சத்துக்கும் மேலே!!

எப்படி? ஏன்?ன்னு கேள்வி வருதில்லியா? வரணும். இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம் - கட்டிடங்கள்!! நியூசிலாந்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்கு, அங்குள்ள வீடுகள், அந்நாட்டின் கட்டிட விதிகளுக்குற்பட்டு கட்டப்பட்டிருப்பதுதான் காரணம். அந்நாடு பூகம்ப பகுதியில் அமைந்திருப்பதால், அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு கண்டிப்பாக இருப்பதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவது சாத்தியப்பட்டது.

ஆனால், ஏழை நாடான ஹைட்டியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்பதால்தான் இத்தனை மரணங்கள்.

பூகம்ப சமயத்தில் கட்டிடங்களின் கான்கிரீட் தளங்கள் இடிந்து மனிதர்கள் மேல் விழுவதுதான் மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.இதைத் தவிர்க்க, கட்டிடங்கள் பூகம்பத்தின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படி அமைய வேண்டும்; உடைந்து விழும் பகுதிகள், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை விதி.

www.nasa.gov

An earthquake-resistant building includes such structures as shear walls, a shear core, and cross-bracing. Base isolators act as shock absorbers. A moat allows the building to sway. (Image & text: www.nasa.gov)


வீடுகள் கட்டும் விதம் பற்றி பேசும்போது, கட்டுமானச் செலவை அதிகரிப்பவை பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான முறைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம்.  


இம்முறையில் கட்டப்பட்ட வீடுகளை இங்கு போய் பார்வையிடலாம். கேரளாவில் அதிகம் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கட்டப்பட்டனவா, எங்கே என்பதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்கள். 


இன்னுமொரு ஆச்சர்யத் தகவல் கிடைத்தது, இந்தத் தளத்தில்!! அதாவது, சிமெண்ட் கட்டிடங்கள் 60  - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது!! 




இதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம்.  ஏன், திருச்சியில் இதே முறையில் கரிகாலன் கட்டிய கல்லணை,  இதோ 1900 வருடங்களாக நிற்கிறதே!!


www.trekearth.com

 
ஊருக்குப் போயிருந்தப்போ, உறவினரின் “கட்டை குத்திய கூரை” வச்ச வீட்டுக்கு  (படத்தில் இருப்பது போல - கூரைப்பகுதியில் இடைவெளிவிட்டு மரக்கட்டை வைத்திருப்பார்கள் - இப்ப இதெல்லாம் பாக்கிறதே அபூர்வம்!!)  போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி!!  இப்ப சிமெண்ட், டைல்ஸ்னு போட்டுட்டு கூடவே ஏ.ஸி.யும் தேட வேண்டியிருக்கு!!


சென்னை ராயப்பேட்டையில் நண்பரின் சொந்த வீடு இருக்கிறது. பத்து வருடம் முன்னே அவர் அங்கே குடிபோனபோது, கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தண்ணீரில்லை. கார்ப்பரேஷன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அப்போது. சென்ற மாதம் அங்கு போயிருந்தபோது, போர் வாட்டர் தாராளம் என்றார்கள். எப்படி? மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை!!


அதே மாதம், கேரளாவில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். தோட்டத்தில் ஆழமில்லாத சிறு கிணறு போன்ற பள்ளம் வெட்டியிருந்தார்கள். மழைநீர் சேகரிப்புக்கா என்று கேட்டேன். “ஆமாம். ஆனால், சேகரிக்கப்பட்ட மழைநீரை டிரெயினேஜோடு சேர்த்து விடுவதற்காக.” என்றார்கள்!! ஏனாம்? அங்கே செம்மண் என்பதால், மழைநீர் எவ்வளவானாலும் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்; அது வீட்டின் அடித்தளத்துக்கு (ஃபவுண்டேஷன்) கேடு என்பதால் இப்படியாம்!! அவ்வ்வ்....னு அழத்தான் தோணுச்சு!!    


ஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா? ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! 

 
 

Post Comment

64 comments:

நட்புடன் ஜமால் said...

எங்க தொலைச்சீங்க வீட்ட :P

----------------

நல்ல தகவல்கள்.

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்... மொத கமெண்ட்டே இப்படி நக்கலாவா...???!!

தமிழ் உதயம் said...

சென்னை நகரம் பூகம்ப வளையத்திலுள்ள நகரம் என்கிறார்கள். வரும் முன் காப்பது நல்லது. அக்கறையுடன் கூடிய பதிவு.

Prathap Kumar S. said...

அபுதாபிலேயே வீட்டை விலைக்கு போறீங்களா?? ம்ம் பெரிய கைதான் போல...:)
==

ஆரம்பிச்ச ஸ்பீடுக்கு...பதிவு இப்படி ஆயிடுச்சே...
அதானே நாம என்னிக்கு உலகத்தரத்துல பதிவு போட்ருக்கோம்..:)

Chitra said...

நீங்க வீட்டை தேடி முடிக்கிறதுக்குள்ள..... நாங்க நிறைய விஷயங்கள் மேலும் தெரிந்து கொள்வோம் என்று நினைக்கிறேன்.... தொடர்ந்து தேடுங்க.... தொடர்ந்து எழுதுங்க.... :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அந்தகாலத்து வீடுகள் ரொம்ப பழசு, என்னஇது வீடு ஆதிகாலத்துல மாதிரி கட்டியிருக்காக உங்க தாத்தா.. அப்படி இப்படின்னு சொன்னவங்க எல்லாம் பழச திரும்பி பாக்கிற அளவுக்கு சூழ்நிலை மாறி வருகிறது.

நல்ல தகவல்கள்.. பகிர்வு அருமை ஹூசைனம்மா. நானும் வீட்டை தேடிக்கிட்டுதான் இருக்கேன்..

அம்பிகா said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

\\எங்க தொலைச்சீங்க வீட்ட ?\\
சபாஷ்! சரியான கேள்வி?

துளசி கோபால் said...

நியூஸி நிலநடுக்கத்தை நினைவூட்டாதீங்க. இதுவரை நானூருக்கும் மேல் ஆஃப்டர்ஷாக் வந்துருச்சு. எப்போ செட்டில் ஆகுமோ தெரியலை. இப்பெல்லாம் ஆட்டத்தினூடேயே வேலைகளைச் செய்யப் பழகிட்டாங்க மக்கள்.

வீடு கட்டும்போது ஒவ்வொரு ஸ்டேஜிலும் கவுன்ஸில் இன்ஸ்பெக்ஷன் இருக்கு. அவுங்க அதை பாஸ் செஞ்சால்தான் அடுத்த கட்ட வேலையைத் தொடரமுடியும்.


இங்கே இந்த நாட்டில் லஞ்சலாவண்யம் எதுவும் இல்லை . ஸ்ட்ரெய்ட் ஃபார்வேடு என்பதால் நியதிப்படியே எல்லாம்.

இதையெல்லாம் வீடு வா வாங்குது என்ற தொடரில் நம்ம வீடு கட்டத் திட்டம் போட்டதில் இருந்து முழுசாக் கட்டி முடிச்சதுவரை பதிவுகளாப் போட்டுருக்கேன். ஒரு அம்பது இருக்கும் என்பதால் படிச்சுப்பாருங்கன்னு சொல்லவும் தயக்கமா இருக்கு.

நிஜாம் கான் said...

ஹூசைனம்மா சிவில் எஞ்சினியரா? அப்பா எவ்வளவு தகவல்கள்.. எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டியவை..

Anisha Yunus said...

//ஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா? ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! //

அதானே அய்யர் குடுமி சும்மா ஆடாதுன்னு தெரியாமலா சொன்னாய்ங்க!

கோமதி அரசு said...

அன்பு சகோதரி,நல்ல வீடு அமைய வாழ்த்துக்கள்.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

இனி வரும் காலம் மழை காலம்.
மழை நீரை சேமித்து,எதிர்க் காலத்திற்கு நீர் வளத்தை பெருக்குவோம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நிறைய பயனுள்ள தகவல்களைத் தொகுத்துத் தந்தீர்கள்;
நகைச்சுவையோடு!

enrenrum16 said...

வீடு கட்டப்போறவங்களுக்கு நல்ல உபயோகமான தகவல்கள். வீடு தேடி தேடி நொந்து நூடுல்ஸ் ஆயிட்டீங்க போல...

//பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான முறைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம். //

இத பாலோ பண்றதுக்கு ஆர்வமாதான் இருக்கு. ஆனா டைல்ஸ்,மார்பிள்ஸ் ஆசை யாரை விட்டது?!

ஸாதிகா said...

நல்ல பகிர்வு!//ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! //ஏன்?என்ன ஆச்சு?

ப்ரியமுடன் வசந்த் said...

குட் போஸ்ட் நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்...

அதுசரி அமீரகம்தான் சுத்தமா காலியா கெடக்கே வீடு கிடைக்குறது அம்புட்டு கஷ்டமா?

velji said...

அருமையான,உபயோகமான தகவல்கள்!

எம் அப்துல் காதர் said...

சரி நீங்க எப்ப தொலச்ச வீட்டை கண்டு பிடிச்சி குடி புகுந்தாலும் எங்களுக்கு அவசியம் சொல்லிடனும். அப்ப தான் துபாய் வரும் போது சாப்பிட ஏதாவது கிடைக்கும். ஹா.. ஹா..

Unknown said...

அருமையான தொகுப்பு, எல்லா தகவலும் பயனுள்ளதாக இருக்கு..

சிநேகிதன் அக்பர் said...

ஜமால் கமெண்ட் நச்!

கண்ணா மீதி பாகங்களையும் எழுதினால் நன்றாக இருக்கும். நாஞ்சிலு மனசு வைக்கணும்.

வீடு கிடைச்சா பார்ட்டி வைங்க மேடம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல தகவல்கள்.. வீடு கிடைக்கும் வரைக்கும் தொடருவீங்கன்னு நம்பறோம் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல தகவல்கள்.. வீடு கிடைக்கும் வரைக்கும் தொடருவீங்கன்னு நம்பறோம் :)

எல் கே said...

நீங்களும் வீடு தேடறீங்களா ?? நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா நிறய தகவல்கள்!!

நானானி said...

வீடு தேடும் படலம் சுவாரஸ்யமாயிருக்கு. ஒரு சிவில் என்ஜினியர் லெவலுக்கு உபயோகமான தகவல்கள்.

துள்சி சொன்னா மாதிரி ஒவ்வொரு படியிலும் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும் என்று உறுதியாயிருந்தால், தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு பல இடங்களில் ஏனோதானோ என்று செய்திருக்க மாட்டார்கள்.

கடந்த சில வருடங்களாக பெய்து கொண்டிருக்கும் மழை நீரை முறையாக சேமித்திருந்தால் நிலத்தடி நீர் பொங்கிப் பெருகியிருக்கும்.

நல்ல பதிவு ஹூஸைன்னம்மா!
சீக்கிரமே நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்!

மாதேவி said...

வீடு பற்றிய நல்ல தகவல்கள்.

நல்ல வீடுகிடைக்க வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

நல்ல பதிவு...லிங்க கொடுத்தற்கு நன்றிகள்..

நாடோடி said...

வீடுக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் ந‌ல்லா இருந்த‌து.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

சுந்தரா said...

பயனுள்ள தகவல்கள் ஹுசைனம்மா.

சீக்கிரமே உங்களுக்குப் பிடிச்சமாதிரி வீடு அமையட்டும்.

thiyaa said...

அருமையான தரமான பகிர்வு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு ஹுஸைனம்மா..நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.

ஊருல வீடுகட்டும்போதாச்சும் இப்படி எல்லாம் பழய நல்ல பழக்கங்களை வச்சி கட்டனும்ன்னுஆசைனஙக..
இங்க தான் அடுக்கி அடுக்கிவச்சிட்டு மிரட்டிட்டே
இருக்கமே..

சாந்தி மாரியப்பன் said...

அடடா.. வீட்டை தொலைச்சிட்டீங்களா,.. சீக்கிரமே கண்டுபிடியுங்க :-))

Deepa said...

நல்ல தகவல்கள் ஹுஸைனம்மா.
விரைவில் வீடு கிடைக்க வாழ்த்துகள்.

கண்ணா.. said...

அட.. நம்ம பேரையும் குறிப்பிட்டு இருக்கீங்க.. ரொம்ப நன்றி :))

அக்பரும் அந்த தொடரை பற்றி நினைவூட்டி கொண்டே இருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் அக்பர் :))

இப்ப நேரம் காலம் பாக்காம கூகுள் பஸ்ஸுலயே கிடக்குறதால பதிவு பக்கம் வர தாமதம் ஆகுது. இதையே இவ்ளோ லேட்டா பாக்குறேன் :(

இந்தியாவிலும் கட்டிட விதிகள் கன்னா பின்னான்னு ஸ்ட்ரிக்டா இருக்கு. அதனாலேயே விதிமுறை மீறலும் அதிகமா இருக்கு. நியுசிலாந்து பூமி அதிர்ச்சி குறித்து நான் இப்போதான் கேள்வி படுகிறேன்.

சாதாரணமாக வீக்கர் காலம் ஸ்டாராங்கர் பீம் என்றுதான் கட்டிடம் கட்டுவார்கள். இது மாதிரியான பூமி அதிர்ச்சி அதிகம் வர வாய்ப்புள்ள பகுதிகளில் உல்டாவாக அதாவது வீக்கர் பீம் ஸ்டாராங்கர் காலம் என்று கட்டினால் பூமி அதிர்வு மிக அதிகமாக வந்தாலும் தப்பிக்க நேரம் சற்று அதிக நேரம் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன்.

கண்ணா.. said...

//சிமெண்ட் கட்டிடங்கள் 60 - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது!! //

தவறான தகவல். ஆர்சிசி கட்டிடங்களின் ஆயுள் 100 ஆண்டு. இதற்கு அர்த்தம் 100 ஆண்டுக்கு பின் அது இடிந்து விழும் என்று அர்த்தம் அல்ல. குறைந்தது 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதுதான்.

களிமண்ணால் கட்டப்பட்ட கட்டிடத்தின் ஆயுள் 50 - 75 வருடம். அதற்கு பின்னும் கட்டிடம் கட்டப்பட்ட தரத்தை பொறுத்து நீடிக்கும்.

களிமண் கட்டிடங்களின் பலம் கட்டுமான பொருள்கள் பெரும்பானவற்றை ரி யூஸ் செய்யலாம்

ஹுஸைனம்மா said...

/தவறான தகவல்.//

கண்ணா, திரு. பத்ரியின் பதிவிற்கான சுட்டி தந்திருக்கிறேன். அதில் அவரும் உதாரணங்களுடன் விளக்கியிருக்கீறார். பாருங்களேன்.

சிமெண்ட் கட்டிடம் இடிந்துவிடும் என்பது அர்த்தமல்ல, வலுவிழக்கும் என்பதே.

இன்னும் உங்கள் கருத்தையும் சொல்லுங்க.

கட்டிடக்கலை குறித்த உங்கள் பதிவையும் தொடர எனது வேண்டுகோளும்!!

கண்ணா.. said...

@ஹுசைனம்மா

அந்த சுட்டியில் பத்ரியின் பதிவையும் படித்தேன். :)

100 ஆண்டு ஆயுள் என்பது அதன் பிறகு வழுவிழக்கும் என்பது சரி

ஆதி மனிதன் தட்ப வெப்ப நிலையிலிருந்து தன்னை காக்கவே குகை/வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தினான். இப்போதோ அது தேவை என்பதை தாண்டி ஆடம்பரமாக மாற ஆரம்பிக்கிறது. அதுதான் பலசிக்கலுக்கும் காரணம்.

இது போன்ற தொழில் நுட்ப விஷயங்களில் உங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. நல்ல பகிர்வு.

நானும் தொடரை தொடரப் பார்க்கிறேன் :))

Thenammai Lakshmanan said...

இதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம். //

உண்மைதான் ஹுசைனம்மா,, எங்க்ள் ஊரில் வீடுகள் இதுபோல் மிக அழகா இருக்கின்றன இன்னும்..

அப்துல்மாலிக் said...

அடுத்த வெக்கேஷன் போகும் வரைக்கும் தகவல் கைவசம் இருக்குபோல‌

களிமண்ணை இப்போவெல்லாம் பாக்ககூட முடியலே இதுலே எங்கேர்ந்து வீடு கட்டுறது, அப்படியெ கட்ட முடிவெடுத்தாலும் இவ்வளவு லட்சம் போட்டு கட்டுறே ஏன் இது மாதிரி யோசனை என்று தடுத்துவிடுவாங்க‌

இதெல்லாம் எழுதுவதற்கும் சொல்வதற்கும் நல்லாயிருக்கும், செயல்படுத்துவது கடினம்

ஹுஸைனம்மா said...

ஜமால் - நன்றி கலகலப்பான ஆரம்பத்துக்கு!! ஒரு படத்துல கிணத்தைக் காணோம்னு தேடுவாங்களே, அது மாதிரி!!

தமிழ் உதயம் - நன்றி.

பிரதாப்பு!! அபுதாபில வீடு வாங்கவா??!! ஏன் ஏன்? அதெல்லாம் முடிஞ்சா நான் ஏன் இந்த ஊர்ல இருக்கேன்? உலகத்தரத்துல இருந்தாலும், கடைசில லோக்கல் டச் இருக்கணும்!!

வெறும்பய - நன்றி.

ஹுஸைனம்மா said...

சித்ரா - இன்னும் ஒரு மாசத்துக்குள்ள தேடியாகணும்!! கிடைச்சதும் அந்தப் படலத்தையும் ஒரு பதிவாப் போட்டுடறேன்!!

ஸ்டார்ஜன் - வீடு எங்க தேடறீங்க - சவூதிலயா இல்லை ஊர்லயா?

அம்பிகா - நன்றி.

துளசி டீச்சர் - இன்னும் முடியலையா ”பூமாவின் தாலாட்டுகள்”?? (நன்றி: கீதா மேடம்) ஆமாங்க, அந்த மாதிரி நாடுகளில் குடியேற இதுவும் முக்கிய காரணம். அப்புறம், அந்த 50 பதிவுகள், ஒரு புக்காப் போட்டுடுங்களேன், படுத்துக்கிட்டு, தோட்டத்துல உக்காந்துன்னு படிக்க வசதியா இருக்கும்!! :-)))

ஹுஸைனம்மா said...

நிஜாம் - சிவில் இஞ்சினியர் இல்லை; ஒரு ஆர்வம்தான்!! நன்றி.

அன்னு - நல்ல உதாரணம் சொன்னீங்க போங்க!! வீடு தேடுவதால் மட்டுமல்ல, பொதுவாகவே எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் உண்டு.

கோமதிக்கா - வாழ்த்துக்கு நன்றி!!

நிஜாம் அண்ணே - நன்றி.

என்றும் - ஆமாம், ஆசை யாரை விட்டது? எங்கள் வீடு கட்டும்போதும் சொல்லிப்பார்த்தேன், கேட்பாரில்லை!!

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - நன்றி.

ஸாதிகாக்கா - கொஞ்சம் பெரிய வீடாப் பாத்து போகலாம்னுதாங்க்கா!!

வசந்த் - அமீரகம் காலியா கிடப்பதால்தான் நாங்க பெரிய வீடாகத் தேடுகிறோம்; எங்களின் பட்ஜெட்டுக்குள் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கு, அதான்.

வேல்ஜி - நன்றி.

அப்துல்காதர் - எப்ப வந்தாலும் விருந்து உண்டு!! வாங்க!!

ஹுஸைனம்மா said...

சிநேகிதி - நன்றி.

அக்பர் - ஆமாங்க, கண்ணா இனியாவது மனசு வச்சு எழுதுவாரான்னு பாப்போம். எனக்கு ரொம்ப சுவாரசியமா இருந்துது. எப்ப வந்தாலும் பார்ட்டி உண்டு!!

எல் போர்ட் - நன்றி!!

எல்.கே. - நீங்களுமா? சென்னையில இன்னும் சிரமமாச்சே!!

சைவக்கொத்ஸ் - நன்றி.

ஹுஸைனம்மா said...

சிநேகிதி - நன்றி.

அக்பர் - ஆமாங்க, கண்ணா இனியாவது மனசு வச்சு எழுதுவாரான்னு பாப்போம். எனக்கு ரொம்ப சுவாரசியமா இருந்துது. எப்ப வந்தாலும் பார்ட்டி உண்டு!!

எல் போர்ட் - நன்றி!!

எல்.கே. - நீங்களுமா? சென்னையில இன்னும் சிரமமாச்சே!!

சைவக்கொத்ஸ் - நன்றி.

ஹுஸைனம்மா said...

நானானி மேடம் - ஆமாங்க; செல்வி. ஜெயலலிதா கொண்டுவந்த அதே உறுதியோட தொடர்ந்திருந்தா, இந்தத் திட்டத்தால தண்ணீர்ப்பஞ்சம் இல்லாம ஆகியிருக்கும். நன்றி!!

மாதேவி - நன்றி.

கீதா - லிங்க் பயனா இருந்தா சந்தோஷம்!! நன்றி.

நாடோடி - நன்றி.

சுந்தரா - நன்றி.

தியாவின் பேனா - நன்றி.

ஹுஸைனம்மா said...

முத்துலெட்சுமி அக்கா - எனக்கும் அப்படி வீடு கட்டணும்னு ஆசை; ம்ம்.. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு வேற எதுக்கோ..

அமைதிக்கா - சும்மாவே கிண்டலடிப்பீங்க; இப்பக் கேக்கணுமா? :-))

தீபா - நன்றி.

கண்ணா - உங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லணும். இப்படி ஒரு முறை இருக்கதே நீங்க எழுதப்போய்த்தான் தெரியும்.

தொடரை தொடருங்க ப்ளீஸ்!

ஹுஸைனம்மா said...

தேனக்கா - அப்படியா, அப்படி ஒரு வீட்டை வாங்கிடுங்க. :-)))

ஆமா மாலிக், இந்த மாதிரி ஐடியா சொன்னா மேலயும் கீழயும் பாக்குறாங்க! நானும் வேதாளமாட்டம் விடாம தொடர்ந்து சொல்லிகிட்டிருக்கேன்...

அஸ்மா said...

நல்ல நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள் மிஸஸ். ஹுஸைன்!

ஹேமா said...

சிரிக்கச் சிரிக்க அருமையான தகவல்கள்.நன்றி தோழி.

R.Gopi said...

ஹூஸைனம்மா....

படிக்க சுவாரசியமாக நிறைய தகவல்களுடன், புகைப்படங்களுடன் விரிவாக எழுதப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது....

//ஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா? ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! //

ஒண்ணரை மாசமா தேடியும் கிடைக்கலியா...!!?? தொலைச்ச இடத்திலதானே தேடறீங்க, இல்ல வேற எங்கியாவதா? சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகிறேன்...

அஜீம்பாஷா said...

amazing just now you begin to search for a house i will pray for you. then i am lucky i finished my home in trichy. when i bought this plot around 7 years ago, squre feet Rs.280 now in front of my house an empty plot available. owner asking rs.2500 per squre feet.

May Allah blesss you all give good home.

"உழவன்" "Uzhavan" said...

வீடு கிடைச்சதா? :-)

அன்புடன் மலிக்கா said...

இந்தபக்கம் வந்துடுங்க ஹுசைன்னமா. வீடு நெறைய கிடைக்குது. என்ன ஒன்னு நான். அடுத்து பெட்டியதூக்கலானு இருக்கேன் இங்கிருந்து..

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு..

thiyaa said...

நல்ல தகவல்

Unknown said...

நல்ல பதிவு .பகிர்வுக்கு நன்றி.
விரைவில் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.

SUFFIX said...

// மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை!! //

படிப்பதற்கு மகிழ்ச்சியா இருக்கு, வீடு கட்டும் அனைவரும் இது போல தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

SUFFIX said...

அபூதாபியில் வீடு கிடைக்கணும்னா ஹாரிசுக்கு ஒரு மாசம் வாடகையை சைடுல தள்ளணுமாமே? இதெல்லாம் ரொம்ப ஓவரு.

ஸ்ரீராம். said...

நீங்கள் வீடு தேடும் முயற்ச்சியில் பல விஷயங்கள் எங்களுக்குக் கிடைக்கின்றதே...பீரங்கி வைத்து சுட்டபோது கூட உடையாமல் இருக்க வெல்லம் வைத்து கட்டினார்கள் என்று படித்திருக்கிறோமே...

ரிஷபன் said...

மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை

இதை எங்கள் குடியிருப்பில் கண்கூடாகக் கண்டோம்.

Jaleela Kamal said...

வீடு பதிவு நல்ல இருக்கு என்ன வீடு மாற போறீஙக்ளா? ஊருல கட்ட போறீங்களா? சென்னையில வேனுமுன்னா என் கிட்ட சொல்லுங்க நான் பாத்து தாரேன்

ஹுஸைனம்மா said...

அஸ்மாக்கா - நன்றிக்கா!!

ஹேமா - நன்றிப்பா.

ஆர்.கோபி - அவ்வ்.. தொலைச்சுட்டுத் தேட இதென்ன சாவிக்கொத்தா? நன்றிங்க!! :-))

அஸீம் பாஷா - இல்லைங்க, நான் வீடு தேடுறது அபுதாபில வாடகைக்கு!! ஊர்ல இறையருளால் முன்னாடியே வீடு கட்டிட்டோம்ங்க!! இப்ப இருக்க விலைவாசில அதையெல்லாம் நினைச்சுப் பாக்க முடியுமா?? பிரார்த்தனைக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அஸ்மாக்கா - நன்றிக்கா!!

ஹேமா - நன்றிப்பா.

ஆர்.கோபி - அவ்வ்.. தொலைச்சுட்டுத் தேட இதென்ன சாவிக்கொத்தா? நன்றிங்க!! :-))

அஸீம் பாஷா - இல்லைங்க, நான் வீடு தேடுறது அபுதாபில வாடகைக்கு!! ஊர்ல இறையருளால் முன்னாடியே வீடு கட்டிட்டோம்ங்க!! இப்ப இருக்க விலைவாசில அதையெல்லாம் நினைச்சுப் பாக்க முடியுமா?? பிரார்த்தனைக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

உழவன் - தேடுறோம்.. தேடுறோம்.. தேடிகிட்டே இருக்கோம்!!

மலிக்கா - என்னது ஷார்ஜாவுக்கு வர்றதா? அதுசரி, அங்கிட்டிருந்து நெதமும் அபுதாபிக்கு ஆஃபீஸ்/ஸ்கூலுக்கு வந்துட்டுப் போறதா?

என்னாச்சு நீங்களும் வீடு தேடுறீங்களா?

தியாவின் பேனா - நன்றி.

ஜிஜி - நன்றிங்க. வாழ்த்துக்கும் நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஷஃபி - நன்றி. எங்கே ஆளையே காணோம்? அபுதாபில வீட்டு வாடகை ஓரளவுக்குக் குறைஞ்சிடுச்சுன்னாலும் (ரொம்ப இல்லை), புரோக்கர் கமிஷன்தான் கட்டுப்படியாக மாட்டேங்குது. 5% of rent!!

ஸ்ரீராம் - ஆமாங்க, எதையாவது தேடும்போது வேற ஏதாவது கிடைக்குமே அதுபோல!! அப்படியா, வெல்லம் வச்சு கட்டினா, பீரங்கியாலும் உடைக்க முடியாதா?

ரிஷபன் சார் - நல்ல விஷயம் சார் நீங்க சொல்லியிருக்கிறது.

ஜலீலாக்கா - இல்லக்கா, இங்கதான் வீடு மாறப்போறோம். அப்ப, சென்னையில் நீங்க பெரிய ஆள்தான் போல!!