Pages

பசியும், தானமும்
நோன்பு காலமான புனித ரமலான் மாதம் இப்பத்தான் ஆரம்பித்தது போல இருந்தது; இதோ இன்னும் 2,3 நாள்ல முடியப் போகுது.  நோன்பு மட்டுமல்ல இம்மாதத்தின் சிறப்பு, இரவு நேர ‘தராவீஹ்’ என்ற தொழுகையும்தான்.


நோன்பு திறந்ததும், வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, தராவீஹ் தொழுகையைப் பள்ளியில் கூட்டாகத் தொழுவதற்காக, நேரத்தில் இணைந்து கொள்ளவேண்டி விரைந்துச் செல்வதும் ஒரு சுகம். கூட்டுத் தொழுகையில் என்னைக் கவர்ந்தது, தொழுகைக்கு நிற்கும் அனைவரும் ஒத்திசைந்து, ராணுவ ஒழுங்கோடு, தொழுகையை முன்னின்று நடத்துபவரைப் பின்பற்றி ஒரே நேரத்தில் குனிந்து நிமிர்ந்து இறைவனைத் தொழுவது!


மக்காவில் நடக்கும் கூட்டுத் தொழுகைகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, எந்நாட்டினராயிருந்தாலும், வரிசையில் எறும்புபோல ஒழுங்குடன் நிற்பதும், இமாமின் குரலைப் பின்பற்றி, ஒரு சீராகக் கைகட்டி, குனிந்து நிமிர்ந்து, அமர்ந்து பிரார்த்தனை செய்யும் அழகு மெய்சிலிர்க்க வைக்கும்.  கூடி நிற்பவர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டினர்; வெவ்வேறு கலாச்சாரங்கள்; வெவ்வேறு பழக்க வழக்கங்கள். எனினும், அவர்களை இணைப்பது ஒரே இறைவன். இதுதான் “வேற்றுமையில் ஒற்றுமை”யோ? ஹஜ் காலத்தைவிட, ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து தினங்களில்தான் மக்காவில் அதிகக் கூட்டம் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது.ஒரு சமயம் தொழும் விதம் (சரியான/தவறான முறைகள்) குறித்து என் தந்தையிடம் விவாதித்த உறவினரிடம், தந்தை கூறியது, “ஹரத்தில் (மக்காவில் உள்ள கஃபா வளாகம்) வந்து பாருங்கள். எத்தனையெத்தனை நாட்டினர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தக்பீர் சொல்வதே (கைகளை நெஞ்சில் கட்டி தொழுகையை ஆரம்பிப்பது) ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவர் நெஞ்சின்மேல் வைப்பார்; ஒருவர் வயிற்றில் வைப்பார்; ஒருவர் கழுத்துக்குக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் வைப்பார். எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்.”

அமீரகம் வந்து இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்ட போதும், மக்கா சென்று வந்த போதும் எனக்கும் அதை உணரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் பலதரப்பட்ட மக்களைக் காணும்பொழுதில் நாம் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கும் செருக்கு உதிர்ந்து விடும் என்பதே உண்மை; பலவித உடல் உபாதைகளைக் கொண்டிருந்தாலும் தவறாமல் தொழுகைக்கு வந்துவிடுபவர்கள், நடக்கவே முடியாத வயோதிகமாக இருந்தாலும் நமக்கு முன்பே வந்து நிற்பவர்கள், “அதிகம் அறிந்த” என்னைவிட பயபக்தியுடன் தொழும் சிறுவயதினர் என்று என்னை  வெட்கப்படவைக்கும் தருணங்கள் அதிகம். கூட்டுத் தொழுகையின் பலன்கள் இவை.


நோன்பு காலங்களில் அமீரகத்தில் இருப்பதே தற்போது என் விருப்பமாக இருக்கிறது.  பல காரணங்கள்:  நோன்பு காலங்களில் நாடு முழுவதுமே அதற்குரிய எண்ணங்களோடு காணப்படுவது, வீட்டு அருகாமையிலேயே அதிக வழிபாட்டுத் தலங்கள் (பள்ளிவாசல்கள்), வேலை/பள்ளி நேரம் குறைப்பது - இவ்வருடம் பள்ளியின் கோடை விடுமுறை நோன்பினால் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு வசதிகள் இருப்பதால் இருக்கலாம். எனினும், இச்சலுகைகள் எதுவுமல்லாத இந்தியாவிலும் நான் பல வருடங்கள் இருந்தபோது, இறையருளால் நோன்புகால சிறப்பு வணக்கங்களில் குறைபடாமல் ஈடுபட முடிந்தது. மனமிருந்தால் மார்க்கம்!!

மேலும் நோன்பு காலங்களில் நான் இங்கு மிகவும் வியப்பது, ஈகை!! இந்நாட்டின் பள்ளிவாசல்கள் எல்லாவற்றிலுமே இலவசமாக இஃப்தார் உணவு வழங்கப் படுகிறது; பல தனியார்களின் வீடுகளிலும் தினமும் மாலை நேரம் உணவு வழங்கப் படுகிறது.  இந்த ஈகை, நிறைய பேச்சிலர்களுக்கும், Skilled labourersகளுக்கும்  உதவியாக இருக்கிறது. சில நாட்களில் என்னைப் போன்ற குடும்பத்தினர்களுக்கும்கூட!! முன்பெல்லாம் பள்ளிகளில் தரும் உணவை அங்கேயே உண்ணும்படி தட்டுகளில் விளம்பி வைத்திருப்பார்கள்; ஆனால் அம்முறையில் உணவு அதிகம் வீணாகியதால், சென்ற வருடத்திலிருந்து,  மிஞ்சியதை வீட்டிற்கு எடுத்துவர வசதியாக ஃபாயில் பாக்கெட்டுகளில் உணவைத் தருகிறார்கள்.

ரமலான் மாதத்தின் இன்னுமிரு சிறப்புகள் “ஸகாத்” மற்றும் “ஃபித்ரா”  வழங்குவது. அதாவது நம் அன்றாடத் தேவைக்குப் போக, சேமிப்பாக நம்மிடம் இருக்கும் சொத்து/நகைகளின் அளவுகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட  தொகையைக் கணக்கிட்டு, தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது “ஸகாத்”. நோன்பினால் உணரவைக்கப்படும் பசியின் தாக்கம்,  நம்மைத்  தாராளமாகவே ஈகையளிக்க வைக்கும். இதுவும் வல்லோனின் கணக்கு!!

பெருநாள் தினத்தன்று, யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில்,  ஒன்று அல்லது சில குடும்பங்களுக்கு அரிசி/கோதுமை வழங்குவது “ஃபித்ரா”.

மொத்தத்தில், நமது உறுதியை, மனவலிமையை, நம் எண்ணங்களை, நம்மை (வசதியில் குறைந்த) மற்றவர்களோடு ஒப்பிட்டு நம் நிலையை நமக்கு உணர்த்தி, நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ள உதவுவது இந்த நோன்பு காலம்!!


   

Post Comment

46 comments:

நட்புடன் ஜமால் said...

ஈத் வாழ்த்துகள் - இப்பவே சொல்லிகிடறேன்

இதை படித்தவுடன் அங்கு இருந்த காலங்களை நினைவு கூற இயன்றது

அப்துல்மாலிக் said...

//ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து தினங்களில்தான் மக்காவில் அதிகக் கூட்டம் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது. //

sometime rush is exceeded then haj

good to share

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹுசைனம்மா நம்மை நாமே எடைபோடுவது என்று அழகா சொல்லி இருக்கீங்க.. ஒரு ரிப்ரஷிங் மாசம் இல்லையா.. வாழ்த்துக்கள்.

சின்ன அம்மிணி said...

கூட்டு வழிபாடு செய்யும்போது மனசு ஒன்றி ப்ரார்த்தனை பண்ணுவேன் நான்.

நாஞ்சில் பிரதாப் said...

அட்வான்ஸ் ஈத் முபாரக்

வெறும்பய said...

அட்வான்ஸ் ஈத் முபாரக்

Riyas said...

//நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ள உதவுவது இந்த நோன்பு காலம்!!//

உண்மைதான்.. நல்ல பதிவு

அம்பிகா said...

\\ எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்.”\\
வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

Happy Ramzan!!

ராஜவம்சம் said...

சிறந்தப்பதிவு வாழ்த்துக்கள்

கண்ணகி said...

இறைவனிடம் கையேந்தி நிற்கும்பொழுது நாம் எல்லோரும் ஒன்று....

ரம்ஜான் வாழ்த்துக்கள்...உங்கள் நோன்புக்கஞ்சி எனக்குப் பிடித்தமான ஒன்று...

ஜெய்லானி said...

என்னுடைய அட்வான்ஸ் ஈத் முபாரக்

பீர் | Peer said...

இப்பவாவது எழுதினீங்களே...

Chitra said...

ரமலான் காலத்து சிறப்புகளை அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்//

பிடிச்சிருக்கு...

புகைப்படம் பிரமிக்க வைத்தது!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அல்ஹம்துலில்லாஹ்....நல்ல பதிவு. இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உலக மக்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்.

Eid Mubaarak...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

சிநேகிதன் அக்பர் said...

//நோன்பு காலங்களில் அமீரகத்தில் இருப்பதே தற்போது என் விருப்பமாக இருக்கிறது. பல காரணங்கள்: நோன்பு காலங்களில் நாடு முழுவதுமே அதற்குரிய எண்ணங்களோடு காணப்படுவது,//

இதே போலதான் சவுதியிலும் அந்த ஒரு மாதமும் மொத்த சிஸ்டமும் அழகாக மாறிவிடும்.

அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

பின்னர் அவரவர் பிஸியில் சொல்ல மறந்திடும் இப்பவே சொல்லிடுறேன்
"ஈத் வாழ்த்துகள். ."

இப்படிக்கு நிஜாம் ..., said...

சூப்பர்ப் ஹூசைனம்மா...! எனக்கு போன வருட ரமலான் மாதம் சவூதியில் அமைந்தது. அதற்கு முன் மலேசியா! இந்த வருட ரமலான் இந்தியாவிலே.. என்ன தான் சவூதியில் இருந்தாலும் இங்கிருப்பதைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு அங்கே கிடைக்கவில்லை. சொந்த ஊர் என்பதாலா தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இறைவன் என்னை எந்த நாட்டில் தள்ளிவிட நாடியிருக்கிறானோ தெரியவில்லை! அவன் மிகைத்தவன்..ஞானம் மிக்கவன்.. மறைவானவற்றின் அதிபதி.. நோன்புப் பெருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். எல்லாரும் எல்லாரும் பெற ஏகனைப் பிரார்த்திக்கிறேன்.

ஸாதிகா said...

//இப்பவாவது எழுதினீங்களே.// ரீபிட்

ஸாதிகா said...

நன்றாக அலசி இருக்கின்றீர்கள் ஹுசைனம்மா.இக்கட்டுரை படிக்க மகிழ்வாக உள்ளது.

R.Gopi said...

பசியும் தானமும்....

தலைப்பே பல கதைகளை சொல்கிறதே ஹூஸைனம்மா....

எனக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவிய பதிவு இது..

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலையுலக இஸ்லாமிய தோழமைகள், குடும்பங்கள் அனைவர்க்க்கும் என் மனம் கனிந்த அட்வான்ஸ் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்...

இறைவனின் முன் நாம் அனைவரும் சமமே என்ற உயரிய தத்துவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று....

Rithu`s Dad said...

ஈகைப்பெரு நாள் நல்வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்றும் நன் நடாத்துவாராக.. பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

ரமதானில் ஹுஸைனம்மாவின் இதுகுறித்த பதிவு இல்லையென்றால் தான் ஆச்சரியப்படனும்.. பதிவுகள் மென்மேலும் செறிவும் சிறப்புமாக வருகிறது வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு ரமதான் என்றாலே, எனது கீழக்கரை கல்லூரி அறைத் தோழர்கள் “பசலுல்லாவும், சபியுல்லாவும் ” தான் என்றும் முதலில் நினைவிற்கு வருபவர்கள்.. இந்த ஒரு மாதமும் எனக்கும் சேர்த்து அதிகாலை உனைவாய் வாழைப்பழங்களையும் முட்டைகளையும் நாள் தவறாமல் எடுத்துவந்து என்னையும் 5 மணிக்கே எழுப்பி.. சாப்பிட வைத்து.. !!

இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள் நண்பர்களே ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் ஈகைப்பெரு நாள் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

அருமையான நோன்புக் காலம்.

//நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ள உதவுவது இந்த நோன்புக் காலம்//

அருமையான விளக்கம்.


புனித ரமலான் நோன்புப் பற்றி தெரிந்து கொண்டோம் நன்றி ஹீசைனம்மா.
வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்.

அப்பாவி தங்கமணி said...

நெறைய புது வார்த்தைகள் விளக்கங்கள் கத்துகிட்டேன்... நன்றிங்க...

//எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்//

very well said

அமைதிச்சாரல் said...

அட்வான்ஸ் ஈத் முபாரக் ஹுஸைனம்மா..

அன்னு said...

a much needed one. Glad that you wrote about it. May Allah accept all your good deeds and those of us. Aameen. Allahumma Aameen.

ஹுஸைனம்மா said...

ஜமால் - நன்றி. ஈத் முபாரக்.

மாலிக் - நன்றி.

முத்துலெட்சுமிக்கா - ஆமாக்கா; நன்றி.

சின்ன அம்மிணிக்கா - ஆமா, அந்தச் சூழ்நிலையே மனசை லேசாக்கிடும்.

ஹுஸைனம்மா said...

பிரதாப் - நன்றி

ரியாஸ் - நன்றி.

அம்பிகா - நன்றி

மேனகா - நன்றி

ராஜவம்சம் - நன்றி

ஹுஸைனம்மா said...

கண்ணகி - நன்றி; நோன்புக்கஞ்சி செய்றது ரொம்ப ஈஸி; செஞ்சு சாப்பிடுங்க. பக்கத்துல பள்ளிவாசல்கள் இருந்தா கிடைக்கும்.

ஜெய்லானி - நன்றி

பீர் - எழுதாம இருக்க நீங்க என்னைப்பாத்து இதச் சொல்றதுதான் ஓவராத் தெரியுது!!

சித்ரா - நன்றி

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - - நன்றி; புகைப்படம் - ஆமாம், பிரமிப்பு!!

ஆஷிக் அஹமத் - வ அலைக்கும் ஸலாம். நன்றி.

அக்பர் - - நன்றி

அப்துல்காதர் - நன்றி

ஸாதிகாக்கா - ம்ம்ம்.. நீங்களுமா? நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

நிஜாம் - ஒவ்வொரு ஊரின் நோன்பு அனுபவமும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி.

கோபி - புதிய விஷ்யங்கள் தெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி; மிக்க நன்றி.

ரீத்து அப்பா - மிக்க நன்றி. தினமும் விடியற்காலை உணவு வாழையும், முட்டையும் மட்டும்தானா? கீழக்கரையில் நல்ல உணவு கிடைக்குமே?

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - நன்றி அக்கா.

அப்பாவி தங்ஸ் - மகிழ்ச்சி தங்க்ஸ். நன்றி.

அமைதிச்சாரல் - நன்றி.

அன்னு - நலமா? மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

எல்லா நண்பர்களுக்கும் நன்றிகளும், பெருநாள் வாழ்த்துகளும்.

vanathy said...

பெருநாள் வாழ்த்துக்கள். புகைப்படங்கள் அழகா இருக்கு.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஹுஸைனம்மா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!

kavisiva said...

ஹுசைனம்மாவிற்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும், மிஸஸ் ஹூஸைன்! நலமா? என்ன என்னை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். இன்னும் நினைவிருந்தா இந்தப் பக்கம் வந்து எட்டிப் பாருங்க! :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய‌ ஈத் முபாரக்!

அன்னு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

இமா said...

அருமையான கட்டுரை ஹுசேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

ஈத் முபாரக் ஹோ ஹூஸைனம்மா.

ஸ்ரீராம். said...

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்... என் நண்பர் எனக்கு தினமும் நோன்புக் கஞ்சி கொண்டு தருவார். அதன் சுவை நாவிலே நிற்கிறது. பதிவின் மூலம் விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

பித்தனின் வாக்கு said...

iniya ramallan valthukkal.
May the lord Inshahh Allahh will fullfill all your dreams and give all wealth & health.

Mahi said...

ஈத் முபாரக் ஹூஸைனம்மா!

ஒரு தோழியிடமிருந்து சமீபத்தில்தான் இந்த விவரங்கள் தெரிந்துகொண்டேன்.

நல்ல பதிவு!

ஹுஸைனம்மா said...

வானதி - நன்றி.

மனோக்கா - நன்றி.

கவிசிவா - நன்றிப்பா.

அஸ்மாக்கா - மறக்க முடியுமா உங்களை? பட்டிமன்றங்களில் உங்கள் தெளிவான வாதங்களைக் கண்டு அசந்திருக்கிறேன் நான். நிச்சயம் வருகிறேன் உங்கள் வலைப்பூவிற்கு!!

அன்னு - மீண்டும் நன்றி.

ஹுஸைனம்மா said...

இமா - மிக்க நன்றி.

விக்னேஷ்வரி - ரொம்ப நன்றி விக்கி!!

ஸ்ரீராம் - நன்றி.

பித்தனின் வாக்கு - நன்றிங்க.

மஹி - நன்றி!!