Pages

மீண்டும் வரலாறு!!
http://www.secretwomenssociety.com/
1 & 2) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் - காரணம்?

இணையத்தில் வலம்வந்தபோது, சில இடங்களில் கருத்து தெரிவிக்க/ சந்தேகம் கேட்க வேண்டியது வந்தபோது, ”முன் ஜாக்கிரதை முத்தம்மா”வான நான் மிஸஸ்.ஹுஸைன் என்ற பெயரில் “பாதுகாப்பாக” வலம் வந்தேன்.  அது டைப்ப கஷ்டமாக இருந்ததால், “ஹுஸைனம்மா”வாக அவதாரம் எடுத்தேன். அப்படியே வலைப்பூவிலும்!!

மிஸஸ். ஹுஸைன் எப்படி ஹுஸைனம்மா ஆக முடியும் என்று கேட்டால்: சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்!!

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

அது பதிவுலகம் பெற்ற பேறு!!

(ஏற்கனவே அந்த மொக்கையை இங்க போட்டாச்சு: வரலாறும், பொறியலும் ... தில் இருந்தா போய்ப் படிச்சுக்கோங்க!!)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படின்னா நான் பிரபலமாகிட்டேனா?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?  இல்லை என்றால் ஏன்?

ஒன்லி சொந்த விஷயம், சொந்தக் கதை, சொந்தக் கருத்து, சொந்தப் பார்வைதான் இங்கே!! ஏன்னா, கதை விடற அளவுக்கு கற்பனை வளம் இல்லை!!

விளைவென்னா பெரிய விளைவு, பல விஷயங்களின் மாறுபட்ட கோணங்களும், பல மனிதர்களின் முரண்பட்ட குணங்களும் கண்டுகொள்ள முடிகிறது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

பதிவெழுதி என்னாத்த பெரிசா சம்பாதிச்சுட முடியும் - ஒரு பத்தாயிரம், இருவதாயிரம்? நான் அவ்வளவு சீப்பாவெல்லாம் ஓசிக்கிறதில்ல.

பதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது???

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுத்துக்கே என்னைப் புடி உன்னைப் புடின்னு இருக்குது, இதில எங்கே இன்னொன்னு?

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

சில சமயம் கோவம் வரும். ஆனாலும் உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி நடக்கும்னு கண்டுக்கிறதில்ல.

ஆனா, ஒரு விஷயம் பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுவேன்: எதாச்சும் ஒரு சண்டை வரும்; உடனே குரூப் குரூப்பாப் பிரிஞ்சு அடிச்சுக்குவாங்க. அப்புறம், கொஞ்ச நா கழிச்சு இன்னொரு சண்டை வரும்; அதுல பாத்திங்கன்னா, முன்னாடி அடிச்சுகிட்டவங்க ஒண்ணா சேந்துகிட்டு இன்னொரு குரூப்பை துவைப்பாங்க. இதுல அவங்க முன்னாடி அடிச்சுகிட்டது, திட்டிகிட்டதெல்லாம் மறந்து, தேனே மானேன்னு ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்குவாங்க!! மக்களை ஒத்துமையா வக்கிறதுக்குப் பதிவுலகப் பிரச்னைகளும் ஒதவுது போல!!

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

”தொடர்புகொண்டு பாராட்டிய” ன்னா - தொலைபேசி அல்லது மெயிலிலா? அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை;  ஆனால், ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை, மேலும் இனியும் என் பதிவுகளைப் படித்து/ பின்னூட்டமிட்டு/ ஓட்டளித்துச் செல்லும் ஒவ்வொருவருமே எனக்கு அவ்வாறான மகிழ்ச்சியளிப்பவரே!!

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தனியா வேற சொல்லணுமாக்கும்??!!
 
 

Post Comment

34 comments:

ஸாதிகா said...

//பதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது???
// இங்கே..இங்கே..இங்கே..இங்கேதான் ஹுசைனம்மா நிக்கறீங்க.

Mrs.Menagasathia said...

interesting answers..nice to know abt u..

NIZAMUDEEN said...

எல்லாக் கேள்விகளுக்கும் உங்களைப் பற்றி,
தெளிவாக, விளக்கமாகக் குறிப்பிட்டீருந்தீர்கள்.

தமிழ் பிரியன் said...

;-))

Chitra said...

தூள் கிளப்பிட்டீங்க!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

லொள்ளு :))

Anonymous said...

நல்லா இருக்கு ஹுசைனம்மா. காமெடியாவே விஷயங்களை சொல்லியிருக்கீங்க :)

kavisiva said...

நீங்க அஜிஸ்டெண்டானவுடனே சொல்லுங்க நான் உங்களுக்கு அஜீஸ்டெண்டா ஆயிடறேன். நீங்க கேடி....கோடிகள்ல பார்த்தா அதே கோடியை(தெருக்கோடி இல்லீங்கோ) நாங்களும் அள்ளிட மாட்டோம் :)

தமிழ் உதயம் said...

நல்லா சொல்லி இருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

எள்ளலும் துள்ளலுமாய் பதில்கள் அசத்துகின்றன:)!

GEETHA ACHAL said...

அருமையான பதில்கள்...

நாடோடி said...

நீங்க‌ இப்ப‌தான் இந்த‌ப் ப‌திவை எழுதுறீங்க‌ளா?.. ரைட்டு. :)

enrum said...

ஆத்தா...நான் ஓட்டு போட்டுருக்கேன்....

உங்கள் வரலாறு மாதிரி பாடப்புத்தகத்துல வர்ற அரசர்கள்,சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறும் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா படிச்சு பாஸ் பண்ணியிருப்போம்...ஹ்ம்ம்ம்..

சிநேகிதன் அக்பர் said...

அத்தலான பதில்கள்

அன்னு said...

//பதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது???//

ஆஹா...எல்லாம் ப்ளான் பண்ணிதேன் உள்ள எறங்கியிருக்கீங்க போலவே? நம்மாளுக்கு தமிழே வராதே...பேசாம பீஹார் பாஷைய கத்துகிட்டு ஒரு பிளாக் ஆரம்பிச்ஷிடவேண்டியதுதேன்...லல்லு வாழ்க, லல்லுவின் லொள்ளு வாழ்கன்னு சொன்னாக்க ஒரு நாள் பாஸு காதுல விழாமலா போகும்? (ஹை ஐடியா!!)

ஆனந்தி.. said...

நல்லா நகைச்சுவையா இருந்தது...நீங்க ஜெ தோழியா ஆகும்போது குமுதம் பயோடேட்டா கடைசி பக்கத்தில் இதையே போடுற மாதிரி கொடுத்துருங்க..கனிமொழிக்கு கொஞ்சம் டப் குடுக்குற மாதிரி இருக்கும்..:-)) (நாங்களும் அரசியல் சாணக்கி யாக்கும்)

அப்பாவி தங்கமணி said...

கவுண்டரம்மா / ஹுஸைனம்மா விளக்கம் சூப்பர்ங்க... (முடியல... முடியல... )

//அது பதிவுலகம் பெற்ற பேறு!!//
எதெது... என்னமோ பேறுனு ஏதோ... சரி உடுங்க... நான் சொல்றப்ப நீங்களும் இப்படி கண்டுகிடாம உட்றோனும் சரிதானா... ஹா ஹா அஹ

//அப்படின்னா நான் பிரபலமாகிட்டேனா?//
நோ மோர் கொஸ்டின்ஸ் யுவர் ஆனர்... கேள்வி கேட்ட பதில் சொல்லணும்... எங்க ஊட்டுக்காரர் மாதிரி திருப்பி கேள்வி கேட்டு டென்ஷன் பண்ண கூடாது... ஆமா சொல்லிட்டேன்...

Muniappan Pakkangal said...

Intgeresting Hussainamma-chinaa Goundar comparison nice.

நாஞ்சில் பிரதாப் said...

//சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்!!//

அட அட எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா....:)

டிரங்குப்பொட்டியை பத்தி சொல்லாம வுட்டீங்களே...:)

ஜெயந்தி said...

நான் உங்க பையன் பேர வைச்சு உங்க பேர ஹூசைனம்மான்னு வச்சிருக்கீங்கன்னு நெனச்சேன்.

ஹுஸைனம்மா said...

Jeyanthikkaa, Both my husband's and my elder son's second name is Hussain!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

SUFFIX said...

’’உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி’’ என்னமோ சொல்லுங்க...

மனோ சாமிநாதன் said...

வழக்கத்தைவிட அசத்தலான எழுத்து! தமிழ்ப் பத்திரிக்கை உலகம் ரொம்ப நாளாக ஒரு நல்ல காதாசிரியையை இழந்து நிற்கிறது என்றே தோன்றுகின்றது!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லா கேள்விகளுக்கும் யதார்த்தமான பதில்கள் அருமை. வாழ்த்துகள் ஹூசைனம்மா...

மாதேவி said...

சூப்பர் பதில்கள்.:)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//நான் உங்க பையன் பேர வைச்சு உங்க பேர ஹூசைனம்மான்னு வச்சிருக்கீங்கன்னு நெனச்சேன்.//

எனக்கும் same thinking. நான் என் நண்பர்களிடம் உங்களையும் உங்கள் பிளாக்கையும் பற்றி சொல்லும்போது, ஹுஸைனுடைய அம்மா என்று தான் சொல்லுவேன்.

//Jeyanthikkaa, Both my husband's and my elder son's second name is Hussain!!//

அப்ப சார திட்டனும்னு ஆசை இருந்தா, உங்க இளைய பையன பெயர் சொல்லி கூப்பிட்டு திட்டுனாலே போதும். ஹி.ஹி

//அது பதிவுலகம் பெற்ற பேறு!//

வேவ்று வழியில்லை என்பதால் இந்த பதிலை ஏற்றுக் கொள்கிறேன்.

நல்ல பதிவு சகோதரி ஹுஸைனம்மா. நன்றி

ஜிஜி said...

நல்லா சொல்லி இருக்கீங்க.சூப்பர்

ஹுஸைனம்மா said...

ஸாதிகா அக்கா - இன்னும் அங்கியேவா நிக்கிறேன்? ;-))

மேனகா - நன்றி.

நிஜாம் அண்ணா - நன்றி.

தமிழ்ப்பிரியன் - நன்றி.

சித்ரா - நன்றி.

எல் போர்ட் - நன்றி.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணிக்கா - நன்றி.

கவிசிவா - அல்லோ, அதுக்கெல்லாம் எங்க குடும்பத்து ஆட்கள் மட்டும்தான் சேத்துப்போம் தெரியுமா?

உதயம் - நன்றி.

ராமலக்‌ஷ்மிக்கா - நன்றி.

கீதா - நன்றி.

நாடோடி - என்ன செய்ய, நான் அவ்ளோ ஃபாஸ்ட்டு!!

ஹுஸைனம்மா said...

என்றும் - என்னது ஓட்டு போட்டீங்களா??!! நான் இன்னும் எலெக்‌ஷன்ல நிக்கவே இல்லியே? :-)))

அக்பர் - நன்றி.

அன்னு - நீங்க பீஹார்ல ஆரம்பிச்சீங்கன்னா, நாம தேசிய லெவல்ல கூட்டணி வச்சிக்கிடுவோம், சரியா?

ஆனந்தி - குமுதம் பயோடேட்டாவா!! அவ்வ்வ்...

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - என்னது, உங்க வீட்டுக்காரர் எதிர்க்கேள்வி கேட்பாரா? அப்ப நீங்க நெசமாவே அப்பாவியா? அப்படியெல்லாம் விடலாமா? சரியில்லியே...

டாக்டர் சார் - நன்றி.

பிரதாப் - நன்றி. அதிசயமா பாராட்டீங்க!!

ஜெயந்திக்கா - டவுட்டு கிளியரா இப்ப?

முத்தக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

ஷஃபி - ரொம்ப நாளா ஆளக்காணோம்? நலம்தானே?

மனோ அக்கா - பெரியவங்க உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷம் தருதுக்கா.

ஸ்டார்ஜன் - நன்றி.

மாதேவி - நன்றி.

அபுநிஹான் - அதுக்குத்தானே ரெண்டுபேருக்கும் ஒரே பேர் வச்சது?

ஜிஜி - வாங்க. முதல் வருகை தொடருங்க.

Jaleela Kamal said...

ரசிக்க வைக்கும் பதிவுகள்.

மீண்டும் வரலாறு என்றாலும் ம்ம்ம் அருமை படிக்க படிக்க தெகட்டல